Jump to content

அமெரிக்க நீதித்துறையும், சிஸ்கோ நிறுவனத்தையும் கதற வைத்ததுள்ள இந்திய சாதித்துவம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமேரிக்காவின் சிஸ்கோ நிறுவனம். இந்த நிறுவனத்தில் இதுவரை, அமேரிக்க சட்டங்களுக்கு அமைய, மத வேறுபாடு, நிறவேறுபாடு இல்லாமல் இருப்பதனை உறுதி செய்திருக்கிறார்கள்.

ஆனால், இந்தியர்களின் சாதி பிரச்னை, நீதிமன்று வரை சென்றுள்ளதால், அமெரிக்க சட்டத்தில் அது குறித்த தெளிவில்லை என்பதால், அமெரிக்க நீதித்துறையும், சிஸ்கோ நிறுவனமும் கலங்கி நிற்கின்றன.

இந்த பிராமணியம் எங்கு போனாலும் இதே கதை தானோ?  

"ஜாதி" அமெரிக்கா போயும் இந்த சாக்கடை ஒழியலை.. 2 இந்தியர்கள் மீது புகார்.. சிஸ்கோ மீது அதிரடி வழக்கு

நியூயார்க்: அமெரிக்காவே போனாலும் நம் ஆட்கள் இந்த சாதியை விட மாட்டேங்கறாங்களே.. பட்டியலின நபரின், சாதியை குறிப்பிட்டு மனம் நோகும்படி பேசியதாக 2 பேர் மீது புகார் எழுந்துள்ளது. இந்தியாவை சேர்ந்த நபர் அவர்... 2015-ம் ஆண்டு முதல் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார் ஒருவர்.. சிஸ்கோ தலைமையகத்தில் சீஃப் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.. இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இதே நிறுவனத்தில் என்ஜினியரிங் மேனேஜராக வேலை பார்ர்ப்பவர் சுந்தர் ஐயர், மற்றும் ரமணா கொம்பெல்லா. இவர்கள் 2 பேரும் பட்டியலின ஊழியரை சாதியை காட்டி மோசமாக பேசியதாக கூறப்படுகிறது.. மன ரீதியாகவும் துன்புறுத்தி இருக்கிறார்கள்.. இதுதான் பிரச்சனையாக வெடித்து சான் ஜோஸில் உள்ள கோர்ட் வரை விவகாரம் சென்றிருக்கிறது. பாகுபாடு இல்லாத சூழலை உருவாக்கத் தவறியதற்காக சிஸ்கோ நிறுவனம் மீதும் இப்போது வழக்கு போடப்பட்டுள்ளது. இதைபற்றி சிஸ்கோ நிறுவன செய்தி தொடர்பாளர் சொல்லும்போது, "புகார் குறித்து விசாரித்து கொண்டிருக்கிறோம்.. ஆனால் சட்டத்தின்படி வேலை செய்யும் இடங்களில் எல்லாருமே ஒன்றாகவே, சரிசமமாகதான் நடத்தப்படுகிறார்கள்.. நிறுவனத்தின் கொள்கைகளும், சட்டத்துக்குட்பட்டும் செயல்பட்டு வருகிறோம்" என்றார்.

ஆனால் இவர் சொல்லிவிட்டாலும், உண்மை அது கிடையாது என்கிறார்கள்.. சிலிக்கன் வேல்வியூ என்ற இடத்தில் இந்தியர்கள் அதிகம் பேர் வசித்து வருகிறார்கள்.. இவர்களில் உயர்குடி மக்கள்தான் அதிகம்.. அதனால் அமெரிக்காவே போனாலும் அங்கும் சென்று இந்த சாதியை தூக்கி பிடித்து, தீண்டாமையை உயர்த்தி பிடிப்பதாக ஒரு குற்றச்சாட்டு ரொம்ப வருஷமாகவே உள்ளது என்பதும் நினைவுகூர தக்கது.

Read more at: https://tamil.oneindia.com/news/new-york/caste-based-discrimination-against-indian-american-employee-in-cisco-390000.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் வாழும் இந்த பார்ப்பனிய கூட்டங்கள் செய்யும் அட்டூழியத்திற்கு அளவில்லை. சங்கீதம், நடனம்... பிராமணர்களுக்கு மட்டும்தான் படிப்பிப்பார்களென, அங்கிருந்து வந்த ஒரு குடும்பம் சொன்னார்கள், இவர்களை தமிழர் ஒதுக்கி வைக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, உடையார் said:

அமெரிக்காவில் வாழும் இந்த பார்ப்பனிய கூட்டங்கள் செய்யும் அட்டூழியத்திற்கு அளவில்லை. சங்கீதம், நடனம்... பிராமணர்களுக்கு மட்டும்தான் படிப்பிப்பார்களென, அங்கிருந்து வந்த ஒரு குடும்பம் சொன்னார்கள், இவர்களை தமிழர் ஒதுக்கி வைக்க வேண்டும்

அதனை ஆதாரபூர்வமாக நிரூபித்தால், அவர்களது முழு வியாபாரமும் தடையாகும்.... தண்டமும் கட்டணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

அதனை ஆதாரபூர்வமாக நிரூபித்தால், அவர்களது முழு வியாபாரமும் தடையாகும்.... தண்டமும் கட்டணும்.

அதை நிருபிக்க அங்கு இருப்பவர்கள் தான் இனி முயற்ச்சி செய்யனும், அவர் இங்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது,

என் மனைவியிடம் சங்கீதம் படிக்க வந்த போது அவர்கள் மனைவிக்கு சொன்னதுதான் இவைகள், ஆதரமில்லை அவர்களிடம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

அதை நிருபிக்க அங்கு இருப்பவர்கள் தான் இனி முயற்ச்சி செய்யனும், அவர் இங்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது,

என் மனைவியிடம் சங்கீதம் படிக்க வந்த போது அவர்கள் மனைவிக்கு சொன்னதுதான் இவைகள், ஆதரமில்லை அவர்களிடம்

என்னுடைய அனுபவத்தில், நான் இருந்த மூன்று மானிலங்களில் இப்படியான நிலைமைகள் இருக்கவில்லை என்று சொல்ல முடியும்! என்னுடைய மகள் வாய்ப்பாட்டு ஒரு ஐயர் பெண்ணிடம் தான் படித்தார், பல கிறிஸ்தவர்களும் பிராமணரல்லாதோரும் வகுப்பில் இருந்தார்கள். மேலதிக வருமானத்திற்காக அவர்கள் படிப்பிக்கிறார்கள், பிராமணர்/ஐயர் மட்டும் தான் என்றால் அவர்கள் உழைப்பில் அல்லவா மண்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Justin said:

கூர்ந்து கவனியுங்கள் புரியும். 😏

சாதி பார்ப்பதில்லை என்று கூறினால் நம்பவா முடியும். 😂

அதிலும் இந்தியனிடம் 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kapithan said:

கூர்ந்து கவனியுங்கள் புரியும். 😏

சாதி பார்ப்பதில்லை என்று கூறினால் நம்பவா முடியும். 😂

அதிலும் இந்தியனிடம் 😏

கபிதான், மேலே சொல்லப் பட்டிருக்கும் சேவை மறுப்பு என்பது குறித்து மட்டுமே என் அனுபவம்! இதை விட அமெரிக்காவில் யாரையும் கூர்ந்து கவனிப்பது அநாகரீகமாக அல்லது அந்தரங்க மீறலாகக் கணிக்கப் படுகிறது! அவர்கள் தங்கள் வீட்டுக்குள் எதைப் பார்த்தாலும் மற்றவரை அது பாதிக்காத வரை சட்டரீதியில் எதுவும் செய்ய இயலாது! First amendment! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kapithan said:

கூர்ந்து கவனியுங்கள் புரியும். 😏

சாதி பார்ப்பதில்லை என்று கூறினால் நம்பவா முடியும். 😂

அதிலும் இந்தியனிடம் 😏

கூர்ந்த கவனியுங்கள் என்பது, எவ்வாறு வெட்டி விடுகிறார்கள் என்பதை.

முன்னர், இங்கிலாந்தில், வீடு வாடகைக்கு என்று போட்டு, கூடவே கறுப்பர்களுக்கும், நாய்களுக்கும் இல்லை என்று போட்டிருப்பார்கள்.

சட்டம் அதை தடுத்த பின், அரச மான்யத்தில் இருப்பவ்களுக்கு இல்லை என்று போடுவார்கள்.

இன்னொரு விதமாக சொல்வது.

வேலைக்கு எடுக்காமல் விட, ஓவர் குவாலிபைட் என்று குழையடித்து விடுவது போன்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

கபிதான், மேலே சொல்லப் பட்டிருக்கும் சேவை மறுப்பு என்பது குறித்து மட்டுமே என் அனுபவம்! இதை விட அமெரிக்காவில் யாரையும் கூர்ந்து கவனிப்பது அநாகரீகமாக அல்லது அந்தரங்க மீறலாகக் கணிக்கப் படுகிறது! அவர்கள் தங்கள் வீட்டுக்குள் எதைப் பார்த்தாலும் மற்றவரை அது பாதிக்காத வரை சட்டரீதியில் எதுவும் செய்ய இயலாது! First amendment! 

கூர்ந்து கவனியுங்கள் என்று கூறியது,  அவர்கள் மனு வை எவ்வாறு நுணுக்கமாக கடைப்பிடிக்கிறார்கள் என்பதை அறிவதற்காகவே. அவர்களின் தனிப்பட்ட விடயங்களில் மூக்கை நுழைப்பதற்காகவோ அல்லது அவர்களின் Privacy யில் கை வைப்பதற்காகவோ அல்ல. 😀

(நீங்கள் எழுதியதைப் பார்த்தால் நீங்கள் நுணுக்கமாக கவனிக்கவில்லை போலும். பின்ன்ர் எப்படி மூன்று மானிலங்களிலும் இப்படியான நிலைமை இருக்கவில்லை என்று கூற முடியும் 🤔)

3 minutes ago, Nathamuni said:

கூர்ந்த கவனியுங்கள் என்பது, எவ்வாறு வெட்டி விடுகிறார்கள் என்பதை.

முன்னர், இங்கிலாந்தில், வீடு வாடகைக்கு என்று போட்டு, கூடவே கறுப்பர்களுக்கும், நாய்களுக்கும் இல்லை என்று போட்டிருப்பார்கள்.

சட்டம் அதை தடுத்த பின், அரச மான்யத்தில் இருப்பவ்களுக்கு இல்லை என்று போடுவார்கள்.

இன்னொரு விதமாக சொல்வது.

வேலைக்கு எடுக்காமல் விட, ஓவர் குவாலிபைட் என்று குழையடித்து விடுவது போன்றது.

முன்னர் கனடாவில், யூதர்களுக்கும் நாய்களுக்கும் அனுமதி இல்லை என்று உணவகங்களில் எழுதுவது வழமையான ஒன்று என வாசித்திருக்கிறேன்.  ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

முன்னர் கனடாவில், யூதர்களுக்கும் நாய்களுக்கும் அனுமதி இல்லை என்று உணவகங்களில் எழுதுவது வழமையான ஒன்று என வாசித்திருக்கிறேன்.  ☹️

சிவிலியன் ரைட்ஸ் சட்டம் சொல்வது என்ன வென்றால், பொதுமக்களை நோக்கிய வியாபாரத்துக்கான லைசன்ஸின் அடிப்படையே, வியாபாரம் எல்லோருக்கும் பொதுவானது. இவர்களுக்கு மட்டுமே என்று வியாபாரம் செய்ய முடியாது.

சைவ உணவு மட்டும் என்பது வேறு. பிராமணருக்கு மட்டுமேயான சைவ உணவு என்பது வேறு. பின்னதுக்கு அனுமதி இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Kapithan said:

கூர்ந்து கவனியுங்கள் என்று கூறியது,  அவர்கள் மனு வை எவ்வாறு நுணுக்கமாக கடைப்பிடிக்கிறார்கள் என்பதை அறிவதற்காகவே. அவர்களின் தனிப்பட்ட விடயங்களில் மூக்கை நுழைப்பதற்காகவோ அல்லது அவர்களின் Privacy யில் கை வைப்பதற்காகவோ அல்ல. 😀

(நீங்கள் எழுதியதைப் பார்த்தால் நீங்கள் நுணுக்கமாக கவனிக்கவில்லை போலும். பின்ன்ர் எப்படி மூன்று மானிலங்களிலும் இப்படியான நிலைமை இருக்கவில்லை என்று கூற முடியும் 🤔)

முன்னர் கனடாவில், யூதர்களுக்கும் நாய்களுக்கும் அனுமதி இல்லை என்று உணவகங்களில் எழுதுவது வழமையான ஒன்று என வாசித்திருக்கிறேன்.  ☹️

கபிதான், நேர விரயம் செய்யாதீர்கள்! மனுவைப் பற்றி யார் இங்கே கவலைப்படுவது? சேவை மறுப்பு என்ற சட்ட மீறல் மனுவா எனத் தெரியாது! சட்டத்தை மீறாதவரை இது என் அனுபவத்தில் நடக்கவில்லை என்பதே என் கருத்து! 

இதை விளக்க நான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு எழுத வேண்டியிருக்கிறது! தமிழ் கிரகிப்பைக் கொஞ்சம் கூர்மைப் படுத்திக் கொள்ளுங்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

கூர்ந்து கவனியுங்கள் என்று கூறியது,  அவர்கள் மனு வை எவ்வாறு நுணுக்கமாக கடைப்பிடிக்கிறார்கள் என்பதை அறிவதற்காகவே. அவர்களின் தனிப்பட்ட விடயங்களில் மூக்கை நுழைப்பதற்காகவோ அல்லது அவர்களின் Privacy யில் கை வைப்பதற்காகவோ அல்ல. 😀

பின்ன, பண்ணிபாருங்கோவன் :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Justin said:

கபிதான், நேர விரயம் செய்யாதீர்கள்! மனுவைப் பற்றி யார் இங்கே கவலைப்படுவது? சேவை மறுப்பு என்ற சட்ட மீறல் மனுவா எனத் தெரியாது! சட்டத்தை மீறாதவரை இது என் அனுபவத்தில் நடக்கவில்லை என்பதே என் கருத்து! 

இதை விளக்க நான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு எழுத வேண்டியிருக்கிறது! தமிழ் கிரகிப்பைக் கொஞ்சம் கூர்மைப் படுத்திக் கொள்ளுங்கள்! 

""என்னுடைய அனுபவத்தில், நான் இருந்த மூன்று மானிலங்களில் இப்படியான நிலைமைகள் இருக்கவில்லை என்று சொல்ல முடியும்""

ஜஸ்ரின்,

உங்களுக்கு அந்த அனுபவம் இல்லை என்பது ஏற்கத் தக்கதே. 👍

ஆனால்உங்களுக்கு அந்த அனுபவம் இல்லை என்பதால்  நீங்கள் இருந்த மானிலங்களில் ""இப்படியான நிலமைகள் இல்லை"" என்பது ஏற்கத்தக்கதல்ல. ஆதலால்தான் கூர்ந்து கவனியுங்கள் என்று கூறினேன்.👍

எது எவ்வாறாக இருப்பினும், நான் கூறியவற்றை நீங்கள் ஏற்க வேண்டுமென்று நான் எதிர்பார்கமுடியாதுதானே. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

""என்னுடைய அனுபவத்தில், நான் இருந்த மூன்று மானிலங்களில் இப்படியான நிலைமைகள் இருக்கவில்லை என்று சொல்ல முடியும்""

ஜஸ்ரின்,

உங்களுக்கு அந்த அனுபவம் இல்லை என்பது ஏற்கத் தக்கதே. 👍

ஆனால்உங்களுக்கு அந்த அனுபவம் இல்லை என்பதால்  நீங்கள் இருந்த மானிலங்களில் ""இப்படியான நிலமைகள் இல்லை"" என்பது ஏற்கத்தக்கதல்ல. ஆதலால்தான் கூர்ந்து கவனியுங்கள் என்று கூறினேன்.👍

எது எவ்வாறாக இருப்பினும், நான் கூறியவற்றை நீங்கள் ஏற்க வேண்டுமென்று நான் எதிர்பார்கமுடியாதுதானே. 😀

இப்ப நான் தான் தமிழ் கிரகிப்பைக் கொஞ்சம் கூர்மைப் படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Nathamuni said:

அமேரிக்காவின் சிஸ்கோ நிறுவனம். இந்த நிறுவனத்தில் இதுவரை, அமேரிக்க சட்டங்களுக்கு அமைய, மத வேறுபாடு, நிறவேறுபாடு இல்லாமல் இருப்பதனை உறுதி செய்திருக்கிறார்கள்.

இந்த நிறுவனத்தில் எனது மருமகன் வேலை செய்தார்.
எனது கடைசி மகளும் 2017 கோடை விடுமுறையின் போது வேலை செய்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

இப்ப நான் தான் தமிழ் கிரகிப்பைக் கொஞ்சம் கூர்மைப் படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.

நீங்கள் தாராளமாக தமிழ் கிரகிப்பை கூர்மைப் படுத்திக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலிக்கான்வேலி வரை சென்ற சாதிய பாகுபாடு... சிஸ்கோ நிறுவனம் மீது வழக்கு!

சிஸ்கோ ( Flickr )

சிலிக்கான்வேலி என அழைக்கப்படும் சான் ஜோஸ் நகரில் இருக்கும் சிஸ்கோ நிறுவனத்தின் முக்கிய கிளை ஒன்றில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இந்தியர் ஒருவரைச் சாதிய பாகுபாடு காட்டி இரு உயர் அதிகாரிகள் வேண்டுமென்றே ஒடுக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

என்ன முன்னேற்றங்கள், வளர்ச்சிகள் கண்டாலும் இந்தியாவில் அழியாத கரையாக இருந்துவருகிறது சாதியமும் அதன் பெயரில் நடக்கும் ஒடுக்குமுறைகளும். இன்று உலகமே ஒற்றை 'குளோபல் வில்லேஜ்'தான் எனப் பெருமையாக மார்தட்டிக்கொள்கிறோம். மொழிகள், இனங்கள் கடந்து மனித இனத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்துக்கொண்டிருப்பதாக நம்மை நாமே நம்ப வைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை நிலவரம் வேறு மாதிரியாகத்தான் உள்ளது. சமீபத்தில் நிகழ்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட்டின் மரணம், பல வருடங்களாகக் கறுப்பின மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க மக்களை ஒன்றுதிரட்டியது. ஆனால், ’நிறத்தின் அடிப்படையில் மட்டும் ஒடுக்குமுறை நடக்காது... அதற்குப் பல வடிவங்கள் இருக்கின்றன’ என அமெரிக்காவுக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருக்கின்றனர் அங்கு வாழும் சில இந்தியர்கள்.

அமெரிக்கா
 
அமெரிக்கா

ஆம், சாதிய பாகுபாட்டுக்காகப் பிரபல டெக் நிறுவனமான சிஸ்கோ மீது வழக்கு தொடுத்துள்ளது கலிஃபோர்னியா அரசு அமைப்பு ஒன்று (California’s Department of Fair Employment and Housing). சிலிக்கான்வேலி என அழைக்கப்படும் சான் ஜோஸ் நகரில் இருக்கும் சிஸ்கோ நிறுவனத்தின் முக்கிய கிளை ஒன்றில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இந்தியர் ஒருவரைச் சாதிய பாகுபாடுகாட்டி இரு உயர் அதிகாரிகள் வேண்டுமென்றே ஒடுக்கியதாகவும், இந்தச் செயலுக்கு சிஸ்கோ நிறுவனம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக நடந்துகொண்டதாகவும் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த இரு அதிகாரிகளின் பெயர் சுந்தர் ஐயர், ரமண கொப்பல்லா எனத் தெரிவிக்கின்றன அமெரிக்க ஊடகங்கள். பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரின் பெயர் வெளியிடப்படவில்லை. ஆனால், அவர் சான் ஜோஸ் நகரத்தில் இருக்கும் சிஸ்கோ தலைமையகத்தில் 2015 முதல் பொறியாளராகப் பணிபுரிந்துவருகிறார் என்பது மட்டும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து தகவல் அளித்துள்ள Reuters ஊடகம், "பாதிக்கப்பட்டவர் ஏற்கெனவே சுந்தரின் மீது சிஸ்கோவின் மனித வள மேலாண்மை (HR) குழுவிடம் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதமே புகார் கொடுத்திருக்கிறார். பிற ஊழியர்களிடம் தன்னை ஒரு தலித் எனக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதாக அந்தப் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இப்படி ஒரு புகார் அளிக்கப்பட்டதை அறிந்த சுந்தர் இன்னும் அதிகமாக அவரை ஒடுக்க ஆரம்பித்திருக்கிறார், இடையூறுகள் கொடுத்திருக்கிறார். ஆனால், நேரடியாகச் சாதிய பாகுபாட்டைத் தடுக்கும் சட்டங்கள் அமெரிக்காவில் இல்லை என சிஸ்கோ இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது. இதனால் பிரச்னை தொடர்ந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவருக்கு ஊதிய மற்றும் பதவி உயர்வுகள் வேண்டுமென்றே மறுக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தது.

சிலிக்கான்வேலி சிஸ்கோ கேம்பஸ்
 
சிலிக்கான்வேலி சிஸ்கோ கேம்பஸ் Wikimedia | Picasa

’மத, இன பாகுபாடு போல சாதிய அமைப்பின் பெயரில் ஒடுக்குமுறை நடக்கிறது’ என வழக்கு தொடர்ந்துள்ள California’s Department of Fair Employment and Housing அமைப்பு குறிப்பிட்டிருக்கிறது. சிலிகான்வேலியில் உள்ள மற்ற டெக் நிறுவனங்களைப் போல சிஸ்கோவிலும் பல இந்தியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆதிக்க சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இப்படியான சாதிய பாகுபாடு அமெரிக்காவில் தொடர்ந்து நடந்துவருவதாகத் தெரிவிக்கிறது அமெரிக்க மக்கள் சம உரிமை அமைப்பான 'ஈக்வாலிடி லேப்ஸ்'.

இது குறித்து சிஸ்கோ கூறுவது என்ன?

சிஸ்கோ
 
சிஸ்கோ

சிஸ்கோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ராபின் ப்ளூம், “நாங்கள் எந்தச் சட்டத்தையும் மீறவில்லை. அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் பணிச்சூழலை உண்டாக்குவதில் சிஸ்கோ உறுதியாக இருக்கிறது” என்று தெரிவித்தார். இதுவரை இது தொடர்பாகச் சுந்தரும், ரமண கொப்பல்லாவும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்தக் சம்பவம் சமூக வலைதளங்களில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. அமெரிக்காவில் அதுவும் ஒரு மிக முக்கிய நிறுவனம் ஒன்றில் இப்படியான ஒடுக்குமுறை தொடர்வது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

https://www.vikatan.com/story-feed

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் தாராளமாக தமிழ் கிரகிப்பை கூர்மைப் படுத்திக் கொள்ளலாம்.

இதுக்குள்ள, எங்கை இருந்து லபக்கென்று பாய்ந்து வருகிறியள்? உங்களோட பேசிக்கொண்டிருந்த மாதிரி தெரியவில்லையே 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, உடையார் said:

உந்த அய்யர்மாருக்கு மோடி ஏதோ வெளிநாடுகளிலும் வெட்டிப் புடுங்குவார் என்ற நினைப்பு போலை கிடக்குது.

இப்படி தான், 7* செஃப் ஒருத்தர், துபையில, தன்னிடம் இன்டெர்வியூவுக்கு வந்த இன்னுமொரு முஸ்லீம் இந்தியருக்கு, இந்தியாவுக்கு திரும்பி போய், குடியுரிமை சட்டத்துக்கு போராட்டத்தில் ஈடுபடாமல், இங்கே ஏன் மினக்கெடுகிறாய் என்று கேட்க, அவர் முறைப்பாட்டு செய்ய, வேலையை விட்டு தூக்கி விட்டார்கள்.

அதுபோலவே தான், அமெரிக்காவில் நேரடி சட்டம் இல்லாததால் தப்பியவர்கள், நீதிமன்றால் தூக்கப்பட போகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

உந்த அய்யர்மாருக்கு மோடி ஏதோ வெளிநாடுகளிலும் வெட்டிப் புடுங்குவார் என்ற நினைப்பு போலை கிடக்குது.

இப்படி தான், 7* செஃப் ஒருத்தர், துபையில, தன்னிடம் இன்டெர்வியூவுக்கு வந்த இன்னுமொரு முஸ்லீம் இந்தியருக்கு, இந்தியாவுக்கு திரும்பி போய், குடியுரிமை சட்டத்துக்கு போராட்டத்தில் ஈடுபடாமல், இங்கே ஏன் மினக்கெடுகிறாய் என்று கேட்க, அவர் முறைப்பாட்டு செய்ய, வேலையை விட்டு தூக்கி விட்டார்கள்.

அதுபோலவே தான், அமெரிக்காவில் நேரடி சட்டம் இல்லாததால் தப்பியவர்கள், நீதிமன்றால் தூக்கப்பட போகிறார்கள்.

சங்கிகளுக்கு நல்ல ஆப்பு அரபு நாடுகளில் இப்ப. வேலைக்கு போனமா வந்தமா என்றில்லாமல், அவன் காசு கொடுக்க அவனையே இந்த சங்கிகள் கிழித்தால் சும்மா இருப்பார்களா, அரபியல் இதுவரை  வேறு பல நல்ல காரியங்கள் செய்து கொண்டிருந்தார்கள்😍🥰

இப்ப கொரோணா காலத்தில் சும்மா இருந்து பழையது எல்லாம் பார்த்து சங்கிகளுக்கு ஆப்பு இறுகுது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.