• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
Nathamuni

அமெரிக்க நீதித்துறையும், சிஸ்கோ நிறுவனத்தையும் கதற வைத்ததுள்ள இந்திய சாதித்துவம்

Recommended Posts

அமேரிக்காவின் சிஸ்கோ நிறுவனம். இந்த நிறுவனத்தில் இதுவரை, அமேரிக்க சட்டங்களுக்கு அமைய, மத வேறுபாடு, நிறவேறுபாடு இல்லாமல் இருப்பதனை உறுதி செய்திருக்கிறார்கள்.

ஆனால், இந்தியர்களின் சாதி பிரச்னை, நீதிமன்று வரை சென்றுள்ளதால், அமெரிக்க சட்டத்தில் அது குறித்த தெளிவில்லை என்பதால், அமெரிக்க நீதித்துறையும், சிஸ்கோ நிறுவனமும் கலங்கி நிற்கின்றன.

இந்த பிராமணியம் எங்கு போனாலும் இதே கதை தானோ?  

"ஜாதி" அமெரிக்கா போயும் இந்த சாக்கடை ஒழியலை.. 2 இந்தியர்கள் மீது புகார்.. சிஸ்கோ மீது அதிரடி வழக்கு

நியூயார்க்: அமெரிக்காவே போனாலும் நம் ஆட்கள் இந்த சாதியை விட மாட்டேங்கறாங்களே.. பட்டியலின நபரின், சாதியை குறிப்பிட்டு மனம் நோகும்படி பேசியதாக 2 பேர் மீது புகார் எழுந்துள்ளது. இந்தியாவை சேர்ந்த நபர் அவர்... 2015-ம் ஆண்டு முதல் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார் ஒருவர்.. சிஸ்கோ தலைமையகத்தில் சீஃப் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.. இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இதே நிறுவனத்தில் என்ஜினியரிங் மேனேஜராக வேலை பார்ர்ப்பவர் சுந்தர் ஐயர், மற்றும் ரமணா கொம்பெல்லா. இவர்கள் 2 பேரும் பட்டியலின ஊழியரை சாதியை காட்டி மோசமாக பேசியதாக கூறப்படுகிறது.. மன ரீதியாகவும் துன்புறுத்தி இருக்கிறார்கள்.. இதுதான் பிரச்சனையாக வெடித்து சான் ஜோஸில் உள்ள கோர்ட் வரை விவகாரம் சென்றிருக்கிறது. பாகுபாடு இல்லாத சூழலை உருவாக்கத் தவறியதற்காக சிஸ்கோ நிறுவனம் மீதும் இப்போது வழக்கு போடப்பட்டுள்ளது. இதைபற்றி சிஸ்கோ நிறுவன செய்தி தொடர்பாளர் சொல்லும்போது, "புகார் குறித்து விசாரித்து கொண்டிருக்கிறோம்.. ஆனால் சட்டத்தின்படி வேலை செய்யும் இடங்களில் எல்லாருமே ஒன்றாகவே, சரிசமமாகதான் நடத்தப்படுகிறார்கள்.. நிறுவனத்தின் கொள்கைகளும், சட்டத்துக்குட்பட்டும் செயல்பட்டு வருகிறோம்" என்றார்.

ஆனால் இவர் சொல்லிவிட்டாலும், உண்மை அது கிடையாது என்கிறார்கள்.. சிலிக்கன் வேல்வியூ என்ற இடத்தில் இந்தியர்கள் அதிகம் பேர் வசித்து வருகிறார்கள்.. இவர்களில் உயர்குடி மக்கள்தான் அதிகம்.. அதனால் அமெரிக்காவே போனாலும் அங்கும் சென்று இந்த சாதியை தூக்கி பிடித்து, தீண்டாமையை உயர்த்தி பிடிப்பதாக ஒரு குற்றச்சாட்டு ரொம்ப வருஷமாகவே உள்ளது என்பதும் நினைவுகூர தக்கது.

Read more at: https://tamil.oneindia.com/news/new-york/caste-based-discrimination-against-indian-american-employee-in-cisco-390000.html

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites

அமெரிக்காவில் வாழும் இந்த பார்ப்பனிய கூட்டங்கள் செய்யும் அட்டூழியத்திற்கு அளவில்லை. சங்கீதம், நடனம்... பிராமணர்களுக்கு மட்டும்தான் படிப்பிப்பார்களென, அங்கிருந்து வந்த ஒரு குடும்பம் சொன்னார்கள், இவர்களை தமிழர் ஒதுக்கி வைக்க வேண்டும்

Share this post

Link to post
Share on other sites
13 minutes ago, உடையார் said:

அமெரிக்காவில் வாழும் இந்த பார்ப்பனிய கூட்டங்கள் செய்யும் அட்டூழியத்திற்கு அளவில்லை. சங்கீதம், நடனம்... பிராமணர்களுக்கு மட்டும்தான் படிப்பிப்பார்களென, அங்கிருந்து வந்த ஒரு குடும்பம் சொன்னார்கள், இவர்களை தமிழர் ஒதுக்கி வைக்க வேண்டும்

அதனை ஆதாரபூர்வமாக நிரூபித்தால், அவர்களது முழு வியாபாரமும் தடையாகும்.... தண்டமும் கட்டணும்.

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, Nathamuni said:

அதனை ஆதாரபூர்வமாக நிரூபித்தால், அவர்களது முழு வியாபாரமும் தடையாகும்.... தண்டமும் கட்டணும்.

அதை நிருபிக்க அங்கு இருப்பவர்கள் தான் இனி முயற்ச்சி செய்யனும், அவர் இங்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது,

என் மனைவியிடம் சங்கீதம் படிக்க வந்த போது அவர்கள் மனைவிக்கு சொன்னதுதான் இவைகள், ஆதரமில்லை அவர்களிடம்

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, உடையார் said:

அதை நிருபிக்க அங்கு இருப்பவர்கள் தான் இனி முயற்ச்சி செய்யனும், அவர் இங்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது,

என் மனைவியிடம் சங்கீதம் படிக்க வந்த போது அவர்கள் மனைவிக்கு சொன்னதுதான் இவைகள், ஆதரமில்லை அவர்களிடம்

என்னுடைய அனுபவத்தில், நான் இருந்த மூன்று மானிலங்களில் இப்படியான நிலைமைகள் இருக்கவில்லை என்று சொல்ல முடியும்! என்னுடைய மகள் வாய்ப்பாட்டு ஒரு ஐயர் பெண்ணிடம் தான் படித்தார், பல கிறிஸ்தவர்களும் பிராமணரல்லாதோரும் வகுப்பில் இருந்தார்கள். மேலதிக வருமானத்திற்காக அவர்கள் படிப்பிக்கிறார்கள், பிராமணர்/ஐயர் மட்டும் தான் என்றால் அவர்கள் உழைப்பில் அல்லவா மண்?

Share this post

Link to post
Share on other sites
20 minutes ago, Justin said:

கூர்ந்து கவனியுங்கள் புரியும். 😏

சாதி பார்ப்பதில்லை என்று கூறினால் நம்பவா முடியும். 😂

அதிலும் இந்தியனிடம் 😏

Share this post

Link to post
Share on other sites
29 minutes ago, Kapithan said:

கூர்ந்து கவனியுங்கள் புரியும். 😏

சாதி பார்ப்பதில்லை என்று கூறினால் நம்பவா முடியும். 😂

அதிலும் இந்தியனிடம் 😏

கபிதான், மேலே சொல்லப் பட்டிருக்கும் சேவை மறுப்பு என்பது குறித்து மட்டுமே என் அனுபவம்! இதை விட அமெரிக்காவில் யாரையும் கூர்ந்து கவனிப்பது அநாகரீகமாக அல்லது அந்தரங்க மீறலாகக் கணிக்கப் படுகிறது! அவர்கள் தங்கள் வீட்டுக்குள் எதைப் பார்த்தாலும் மற்றவரை அது பாதிக்காத வரை சட்டரீதியில் எதுவும் செய்ய இயலாது! First amendment! 

Share this post

Link to post
Share on other sites
34 minutes ago, Kapithan said:

கூர்ந்து கவனியுங்கள் புரியும். 😏

சாதி பார்ப்பதில்லை என்று கூறினால் நம்பவா முடியும். 😂

அதிலும் இந்தியனிடம் 😏

கூர்ந்த கவனியுங்கள் என்பது, எவ்வாறு வெட்டி விடுகிறார்கள் என்பதை.

முன்னர், இங்கிலாந்தில், வீடு வாடகைக்கு என்று போட்டு, கூடவே கறுப்பர்களுக்கும், நாய்களுக்கும் இல்லை என்று போட்டிருப்பார்கள்.

சட்டம் அதை தடுத்த பின், அரச மான்யத்தில் இருப்பவ்களுக்கு இல்லை என்று போடுவார்கள்.

இன்னொரு விதமாக சொல்வது.

வேலைக்கு எடுக்காமல் விட, ஓவர் குவாலிபைட் என்று குழையடித்து விடுவது போன்றது.

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
Just now, Justin said:

கபிதான், மேலே சொல்லப் பட்டிருக்கும் சேவை மறுப்பு என்பது குறித்து மட்டுமே என் அனுபவம்! இதை விட அமெரிக்காவில் யாரையும் கூர்ந்து கவனிப்பது அநாகரீகமாக அல்லது அந்தரங்க மீறலாகக் கணிக்கப் படுகிறது! அவர்கள் தங்கள் வீட்டுக்குள் எதைப் பார்த்தாலும் மற்றவரை அது பாதிக்காத வரை சட்டரீதியில் எதுவும் செய்ய இயலாது! First amendment! 

கூர்ந்து கவனியுங்கள் என்று கூறியது,  அவர்கள் மனு வை எவ்வாறு நுணுக்கமாக கடைப்பிடிக்கிறார்கள் என்பதை அறிவதற்காகவே. அவர்களின் தனிப்பட்ட விடயங்களில் மூக்கை நுழைப்பதற்காகவோ அல்லது அவர்களின் Privacy யில் கை வைப்பதற்காகவோ அல்ல. 😀

(நீங்கள் எழுதியதைப் பார்த்தால் நீங்கள் நுணுக்கமாக கவனிக்கவில்லை போலும். பின்ன்ர் எப்படி மூன்று மானிலங்களிலும் இப்படியான நிலைமை இருக்கவில்லை என்று கூற முடியும் 🤔)

3 minutes ago, Nathamuni said:

கூர்ந்த கவனியுங்கள் என்பது, எவ்வாறு வெட்டி விடுகிறார்கள் என்பதை.

முன்னர், இங்கிலாந்தில், வீடு வாடகைக்கு என்று போட்டு, கூடவே கறுப்பர்களுக்கும், நாய்களுக்கும் இல்லை என்று போட்டிருப்பார்கள்.

சட்டம் அதை தடுத்த பின், அரச மான்யத்தில் இருப்பவ்களுக்கு இல்லை என்று போடுவார்கள்.

இன்னொரு விதமாக சொல்வது.

வேலைக்கு எடுக்காமல் விட, ஓவர் குவாலிபைட் என்று குழையடித்து விடுவது போன்றது.

முன்னர் கனடாவில், யூதர்களுக்கும் நாய்களுக்கும் அனுமதி இல்லை என்று உணவகங்களில் எழுதுவது வழமையான ஒன்று என வாசித்திருக்கிறேன்.  ☹️

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
13 minutes ago, Kapithan said:

முன்னர் கனடாவில், யூதர்களுக்கும் நாய்களுக்கும் அனுமதி இல்லை என்று உணவகங்களில் எழுதுவது வழமையான ஒன்று என வாசித்திருக்கிறேன்.  ☹️

சிவிலியன் ரைட்ஸ் சட்டம் சொல்வது என்ன வென்றால், பொதுமக்களை நோக்கிய வியாபாரத்துக்கான லைசன்ஸின் அடிப்படையே, வியாபாரம் எல்லோருக்கும் பொதுவானது. இவர்களுக்கு மட்டுமே என்று வியாபாரம் செய்ய முடியாது.

சைவ உணவு மட்டும் என்பது வேறு. பிராமணருக்கு மட்டுமேயான சைவ உணவு என்பது வேறு. பின்னதுக்கு அனுமதி இல்லை.

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites
54 minutes ago, Kapithan said:

கூர்ந்து கவனியுங்கள் என்று கூறியது,  அவர்கள் மனு வை எவ்வாறு நுணுக்கமாக கடைப்பிடிக்கிறார்கள் என்பதை அறிவதற்காகவே. அவர்களின் தனிப்பட்ட விடயங்களில் மூக்கை நுழைப்பதற்காகவோ அல்லது அவர்களின் Privacy யில் கை வைப்பதற்காகவோ அல்ல. 😀

(நீங்கள் எழுதியதைப் பார்த்தால் நீங்கள் நுணுக்கமாக கவனிக்கவில்லை போலும். பின்ன்ர் எப்படி மூன்று மானிலங்களிலும் இப்படியான நிலைமை இருக்கவில்லை என்று கூற முடியும் 🤔)

முன்னர் கனடாவில், யூதர்களுக்கும் நாய்களுக்கும் அனுமதி இல்லை என்று உணவகங்களில் எழுதுவது வழமையான ஒன்று என வாசித்திருக்கிறேன்.  ☹️

கபிதான், நேர விரயம் செய்யாதீர்கள்! மனுவைப் பற்றி யார் இங்கே கவலைப்படுவது? சேவை மறுப்பு என்ற சட்ட மீறல் மனுவா எனத் தெரியாது! சட்டத்தை மீறாதவரை இது என் அனுபவத்தில் நடக்கவில்லை என்பதே என் கருத்து! 

இதை விளக்க நான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு எழுத வேண்டியிருக்கிறது! தமிழ் கிரகிப்பைக் கொஞ்சம் கூர்மைப் படுத்திக் கொள்ளுங்கள்! 

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Kapithan said:

கூர்ந்து கவனியுங்கள் என்று கூறியது,  அவர்கள் மனு வை எவ்வாறு நுணுக்கமாக கடைப்பிடிக்கிறார்கள் என்பதை அறிவதற்காகவே. அவர்களின் தனிப்பட்ட விடயங்களில் மூக்கை நுழைப்பதற்காகவோ அல்லது அவர்களின் Privacy யில் கை வைப்பதற்காகவோ அல்ல. 😀

பின்ன, பண்ணிபாருங்கோவன் :grin:

Share this post

Link to post
Share on other sites
54 minutes ago, Justin said:

கபிதான், நேர விரயம் செய்யாதீர்கள்! மனுவைப் பற்றி யார் இங்கே கவலைப்படுவது? சேவை மறுப்பு என்ற சட்ட மீறல் மனுவா எனத் தெரியாது! சட்டத்தை மீறாதவரை இது என் அனுபவத்தில் நடக்கவில்லை என்பதே என் கருத்து! 

இதை விளக்க நான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு எழுத வேண்டியிருக்கிறது! தமிழ் கிரகிப்பைக் கொஞ்சம் கூர்மைப் படுத்திக் கொள்ளுங்கள்! 

""என்னுடைய அனுபவத்தில், நான் இருந்த மூன்று மானிலங்களில் இப்படியான நிலைமைகள் இருக்கவில்லை என்று சொல்ல முடியும்""

ஜஸ்ரின்,

உங்களுக்கு அந்த அனுபவம் இல்லை என்பது ஏற்கத் தக்கதே. 👍

ஆனால்உங்களுக்கு அந்த அனுபவம் இல்லை என்பதால்  நீங்கள் இருந்த மானிலங்களில் ""இப்படியான நிலமைகள் இல்லை"" என்பது ஏற்கத்தக்கதல்ல. ஆதலால்தான் கூர்ந்து கவனியுங்கள் என்று கூறினேன்.👍

எது எவ்வாறாக இருப்பினும், நான் கூறியவற்றை நீங்கள் ஏற்க வேண்டுமென்று நான் எதிர்பார்கமுடியாதுதானே. 😀

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Kapithan said:

""என்னுடைய அனுபவத்தில், நான் இருந்த மூன்று மானிலங்களில் இப்படியான நிலைமைகள் இருக்கவில்லை என்று சொல்ல முடியும்""

ஜஸ்ரின்,

உங்களுக்கு அந்த அனுபவம் இல்லை என்பது ஏற்கத் தக்கதே. 👍

ஆனால்உங்களுக்கு அந்த அனுபவம் இல்லை என்பதால்  நீங்கள் இருந்த மானிலங்களில் ""இப்படியான நிலமைகள் இல்லை"" என்பது ஏற்கத்தக்கதல்ல. ஆதலால்தான் கூர்ந்து கவனியுங்கள் என்று கூறினேன்.👍

எது எவ்வாறாக இருப்பினும், நான் கூறியவற்றை நீங்கள் ஏற்க வேண்டுமென்று நான் எதிர்பார்கமுடியாதுதானே. 😀

இப்ப நான் தான் தமிழ் கிரகிப்பைக் கொஞ்சம் கூர்மைப் படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
18 hours ago, Nathamuni said:

அமேரிக்காவின் சிஸ்கோ நிறுவனம். இந்த நிறுவனத்தில் இதுவரை, அமேரிக்க சட்டங்களுக்கு அமைய, மத வேறுபாடு, நிறவேறுபாடு இல்லாமல் இருப்பதனை உறுதி செய்திருக்கிறார்கள்.

இந்த நிறுவனத்தில் எனது மருமகன் வேலை செய்தார்.
எனது கடைசி மகளும் 2017 கோடை விடுமுறையின் போது வேலை செய்தார்.

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, Nathamuni said:

இப்ப நான் தான் தமிழ் கிரகிப்பைக் கொஞ்சம் கூர்மைப் படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.

நீங்கள் தாராளமாக தமிழ் கிரகிப்பை கூர்மைப் படுத்திக் கொள்ளலாம்.

Share this post

Link to post
Share on other sites

சிலிக்கான்வேலி வரை சென்ற சாதிய பாகுபாடு... சிஸ்கோ நிறுவனம் மீது வழக்கு!

சிஸ்கோ ( Flickr )

சிலிக்கான்வேலி என அழைக்கப்படும் சான் ஜோஸ் நகரில் இருக்கும் சிஸ்கோ நிறுவனத்தின் முக்கிய கிளை ஒன்றில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இந்தியர் ஒருவரைச் சாதிய பாகுபாடு காட்டி இரு உயர் அதிகாரிகள் வேண்டுமென்றே ஒடுக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

என்ன முன்னேற்றங்கள், வளர்ச்சிகள் கண்டாலும் இந்தியாவில் அழியாத கரையாக இருந்துவருகிறது சாதியமும் அதன் பெயரில் நடக்கும் ஒடுக்குமுறைகளும். இன்று உலகமே ஒற்றை 'குளோபல் வில்லேஜ்'தான் எனப் பெருமையாக மார்தட்டிக்கொள்கிறோம். மொழிகள், இனங்கள் கடந்து மனித இனத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்துக்கொண்டிருப்பதாக நம்மை நாமே நம்ப வைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை நிலவரம் வேறு மாதிரியாகத்தான் உள்ளது. சமீபத்தில் நிகழ்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட்டின் மரணம், பல வருடங்களாகக் கறுப்பின மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க மக்களை ஒன்றுதிரட்டியது. ஆனால், ’நிறத்தின் அடிப்படையில் மட்டும் ஒடுக்குமுறை நடக்காது... அதற்குப் பல வடிவங்கள் இருக்கின்றன’ என அமெரிக்காவுக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருக்கின்றனர் அங்கு வாழும் சில இந்தியர்கள்.

அமெரிக்கா
 
அமெரிக்கா

ஆம், சாதிய பாகுபாட்டுக்காகப் பிரபல டெக் நிறுவனமான சிஸ்கோ மீது வழக்கு தொடுத்துள்ளது கலிஃபோர்னியா அரசு அமைப்பு ஒன்று (California’s Department of Fair Employment and Housing). சிலிக்கான்வேலி என அழைக்கப்படும் சான் ஜோஸ் நகரில் இருக்கும் சிஸ்கோ நிறுவனத்தின் முக்கிய கிளை ஒன்றில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இந்தியர் ஒருவரைச் சாதிய பாகுபாடுகாட்டி இரு உயர் அதிகாரிகள் வேண்டுமென்றே ஒடுக்கியதாகவும், இந்தச் செயலுக்கு சிஸ்கோ நிறுவனம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக நடந்துகொண்டதாகவும் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த இரு அதிகாரிகளின் பெயர் சுந்தர் ஐயர், ரமண கொப்பல்லா எனத் தெரிவிக்கின்றன அமெரிக்க ஊடகங்கள். பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரின் பெயர் வெளியிடப்படவில்லை. ஆனால், அவர் சான் ஜோஸ் நகரத்தில் இருக்கும் சிஸ்கோ தலைமையகத்தில் 2015 முதல் பொறியாளராகப் பணிபுரிந்துவருகிறார் என்பது மட்டும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து தகவல் அளித்துள்ள Reuters ஊடகம், "பாதிக்கப்பட்டவர் ஏற்கெனவே சுந்தரின் மீது சிஸ்கோவின் மனித வள மேலாண்மை (HR) குழுவிடம் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதமே புகார் கொடுத்திருக்கிறார். பிற ஊழியர்களிடம் தன்னை ஒரு தலித் எனக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதாக அந்தப் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இப்படி ஒரு புகார் அளிக்கப்பட்டதை அறிந்த சுந்தர் இன்னும் அதிகமாக அவரை ஒடுக்க ஆரம்பித்திருக்கிறார், இடையூறுகள் கொடுத்திருக்கிறார். ஆனால், நேரடியாகச் சாதிய பாகுபாட்டைத் தடுக்கும் சட்டங்கள் அமெரிக்காவில் இல்லை என சிஸ்கோ இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது. இதனால் பிரச்னை தொடர்ந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவருக்கு ஊதிய மற்றும் பதவி உயர்வுகள் வேண்டுமென்றே மறுக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தது.

சிலிக்கான்வேலி சிஸ்கோ கேம்பஸ்
 
சிலிக்கான்வேலி சிஸ்கோ கேம்பஸ் Wikimedia | Picasa

’மத, இன பாகுபாடு போல சாதிய அமைப்பின் பெயரில் ஒடுக்குமுறை நடக்கிறது’ என வழக்கு தொடர்ந்துள்ள California’s Department of Fair Employment and Housing அமைப்பு குறிப்பிட்டிருக்கிறது. சிலிகான்வேலியில் உள்ள மற்ற டெக் நிறுவனங்களைப் போல சிஸ்கோவிலும் பல இந்தியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆதிக்க சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இப்படியான சாதிய பாகுபாடு அமெரிக்காவில் தொடர்ந்து நடந்துவருவதாகத் தெரிவிக்கிறது அமெரிக்க மக்கள் சம உரிமை அமைப்பான 'ஈக்வாலிடி லேப்ஸ்'.

இது குறித்து சிஸ்கோ கூறுவது என்ன?

சிஸ்கோ
 
சிஸ்கோ

சிஸ்கோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ராபின் ப்ளூம், “நாங்கள் எந்தச் சட்டத்தையும் மீறவில்லை. அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் பணிச்சூழலை உண்டாக்குவதில் சிஸ்கோ உறுதியாக இருக்கிறது” என்று தெரிவித்தார். இதுவரை இது தொடர்பாகச் சுந்தரும், ரமண கொப்பல்லாவும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்தக் சம்பவம் சமூக வலைதளங்களில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. அமெரிக்காவில் அதுவும் ஒரு மிக முக்கிய நிறுவனம் ஒன்றில் இப்படியான ஒடுக்குமுறை தொடர்வது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

https://www.vikatan.com/story-feed

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் தாராளமாக தமிழ் கிரகிப்பை கூர்மைப் படுத்திக் கொள்ளலாம்.

இதுக்குள்ள, எங்கை இருந்து லபக்கென்று பாய்ந்து வருகிறியள்? உங்களோட பேசிக்கொண்டிருந்த மாதிரி தெரியவில்லையே 🤔

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites
37 minutes ago, உடையார் said:

உந்த அய்யர்மாருக்கு மோடி ஏதோ வெளிநாடுகளிலும் வெட்டிப் புடுங்குவார் என்ற நினைப்பு போலை கிடக்குது.

இப்படி தான், 7* செஃப் ஒருத்தர், துபையில, தன்னிடம் இன்டெர்வியூவுக்கு வந்த இன்னுமொரு முஸ்லீம் இந்தியருக்கு, இந்தியாவுக்கு திரும்பி போய், குடியுரிமை சட்டத்துக்கு போராட்டத்தில் ஈடுபடாமல், இங்கே ஏன் மினக்கெடுகிறாய் என்று கேட்க, அவர் முறைப்பாட்டு செய்ய, வேலையை விட்டு தூக்கி விட்டார்கள்.

அதுபோலவே தான், அமெரிக்காவில் நேரடி சட்டம் இல்லாததால் தப்பியவர்கள், நீதிமன்றால் தூக்கப்பட போகிறார்கள்.

Share this post

Link to post
Share on other sites
16 minutes ago, Nathamuni said:

சங்கிகளுக்கு நல்ல ஆப்பு அரபு நாடுகளில் இப்ப. வேலைக்கு போனமா வந்தமா என்றில்லாமல், அவன் காசு கொடுக்க அவனையே இந்த சங்கிகள் கிழித்தால் சும்மா இருப்பார்களா, அரபியல் இதுவரை  வேறு பல நல்ல காரியங்கள் செய்து கொண்டிருந்தார்கள்😍🥰

இப்ப கொரோணா காலத்தில் சும்மா இருந்து பழையது எல்லாம் பார்த்து சங்கிகளுக்கு ஆப்பு இறுகுது

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • தேசிய பட்டியல்; சந்தர்ப்பவாதிகளை அடையாளம் காணும் தருணம் August 10, 2020   இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. மக்கள் தமது தீர்ப்பை வழங்கி தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து உள்ளார்கள். இப்போது தலைவர்கள் தமது தீர்ப்பின் மூலம் தமக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்ளும் சந்தர்ப்பம். அந்த சந்தர்ப்பம் எத்தனை சந்தர்ப்பவாத தலைவர்களை அம்பலப்படுத்தியுள்ளது என்பதே இந்தவார அவதானமாக உள்ளது. முதலாவது தேசிய பட்டியல் உறுப்பினர்களை வெளியிட்டு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தாங்கள்தான் ஆட்சியாளர்கள். அதற்கான தலைமை தங்களிடம் இருக்கிறது என்பதை நிரூபித்து உள்ளார்கள். ஆகஸ்ட் 6 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்ததும் ஆகஸ்ட் 7 பெரமுன கட்சி தமது பட்டியலை தமது கட்சி கடித தலைப்பில் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி உரிய முறையில் நடந்து கொண்டது. அவர்களின் தெரிவுகளின் பின்னர் பெரிய வசைபாடல்கள் எதுவும் இடம்பெற்றதாக தெரியவில்லை. மாறாக அவர்களின் எதிர் கட்சியினரே பாராட்டி பேசி இருந்ததை அவதானிக்க முடிந்திருந்தது. அதற்கு காரணமும் இருந்தது. பெரமுன கட்சி முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற மன நிலையில் பார்த்தவர்களை வாயை அடைக்கும் வகையிலான பட்டியல் அது. அலி சப்ரி, முஸம்மில், மர்ஜான் எனும் மூன்று முஸ்லிம் பெயர்களை இடம்பெறச் செய்துள்ளார்கள். கூடவே ஒரு தமிழரின் பெயரும். இதில் உள்ள சந்தர்ப்பவாதம் என்ன என்பதை பிரிதொரு நாளில் பார்க்கலாம். ஆனால் ஒரு ஏமாற்றத்தை இப்போதைக்கு பார்க்கலாம். அதுதான் தமது பங்காளி கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை அவர்கள் கைவிட்டமை. நுவரெலியா மாவட்டத்தில் குறைந்தது மூன்று இ.தொ.கா உறுப்பினர்கள் தெரிவாக கூடிய நிலையில் இருந்தும் அதனை சாதுரியமாக தட்டிப் பறித்தது தமது உறுப்பினர்கள் மூவரைப் பெற்றுக் கொண்டதுடன் தேசிய பட்டியலில் இருவரது பெயர்களை இடம்பெறச் செய்தும் அவர்களுக்கு ஒரு ஆசனத்தை பெற்றுக் கொடுக்காமை. பதுளை, கண்டி மாவட்டங்களில் இ.தொ.கா வேட்பாளர்களின் வாக்குளைப் பெற்றுக் கொண்டு இருப்பதுடன் மதியுகராஜா போன்ற ஆளுமை ஒருவரின் அவசியத்தை பாராளுமன்றில் உணர்ந்து இ.தொ.கா அதனைப் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டாது விட்டமை இ.தொ.கா வின் ஏதாவது சந்தர்ப்பவாதமா? என்பது மறுபக்கம். இப்போது சந்தர்ப்பவாத தலைமையாக முதல் அடையாளத்தை வெளிப்படுத்தி இருப்பவர் ஐக்கிய மக்கள் சக்தி யின் தலைவர் சஜித் பிரேமதாச. ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கத்துக்கு பக்கபலமாக இருந்த சிறு கட்சிகளான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக்க ஹெல உறுமய ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தேசிய பட்டியல் உறுப்புரிமை தருவதாக முன்னதாக உறுதி அளித்துவிட்டு இப்போது அந்த வாக்குறுதியில் இருந்து அந்தர்பல்டி அடித்துள்ளார். ரணில் இடம் இருந்து சஜித் தலைமை ஏற்றால் எல்லாம் சரியாகிவிடும் என எதிர்பார்த்த சிறுபான்மை கட்சிகளுக்கு சஜித் தான் யார் என்பதை தெளிவாக காட்டி உள்ளார். ஒரு பட்டியலைத் தயாரித்து ஒத்திகைப் பார்த்துவிட்டு இப்போது சமாளித்துக் கொண்டு பேச்சுவார்த்தை என இழுக்கும் சஜித் இனி எப்போதும் இழுவைதான். சஜித்தை ஒரு புறம் வைத்துவிட்டு சிறுபான்மை கட்சி தலைவர்களான ஹக்கீம், ரிஷாத், மனோ, திகா, இராதாவின் நிலை அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களைப் போன்றே பரிதாபகரமானது. சஜித் ஒரு பட்டியலை அனுப்பி அது ஊடகங்களில் செய்தியானதன் பின்னரே தூக்கத்தில் இருந்து எழும்பி உள்ளார்கள். ஏனெனில் அவர்கள் ஐவரும் தேர்தலில் தெரிவாகி விட்டார்கள். அதிலும் குறிப்பாக தேசிய பட்டியல் உறுப்புரிமையையும் பெற்றே தீருவோம் என வாய்கூசாமல் பேசி மக்களிடம் வாக்குகளை வாங்கி பெற்றுக் கொண்டுவிட்டு நிம்மதியாக தூங்கும் மனது அவர்களுக்கு தாராளமாக இருக்கிறது. சஜித்தின் தொலைபேசி சின்னத்துக்கு இந்த மூன்று கட்சிகளும் வழங்கிய பங்களிப்பு என்று பார்த்தால் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது தமிழ் முற்போக்கு கூட்டணி யின் பங்கு அதிகம். அது ஆசனங்களின் எண்ணிக்கையினால் மட்டும் எழும் நிலை அல்ல. மாறாக வாக்குகளினாலும். காரணம் முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பில் ‘மரம்’ சின்னத்திலும், மக்கள் காங்கிரஸ் திகாமடுல்ல (அம்பாறை) யில் ‘மயில்’ சின்னத்திலும் போட்டியிட்டதுடன் கூட்டாக இணைந்து ‘தராசு’ சின்னத்தில் கூட்டிணைந்து போட்டியிட்டு புத்தளம் மாவட்டத்தில் தமது ஆசனங்களை உறுதி செய்து கொண்டுள்ளனர். இந்த மூன்று ஆசனங்களுக்குமான தேசிய பட்டியல் பங்களிப்பு “தொலைபேசிக்கு” இல்லை. இப்படித்தான் முஸ்லிம் காங்கிரஸ் ( 4+1) 5 ஆசனங்களையும் மக்கள் காங்கிரஸ் ( 2+2) 4 ஆசனங்களையும் தனதாக்கிக் கொண்டுள்ளன. அதே நேரம் தமிழ் முற்போக்கு கூட்டணி தொலைபேசி சின்னத்தின் ஊடாக மாத்திரமே போட்டியிட்டு நுவரெலியா, பதுளை, கண்டி, கொழும்பு ஆகிய நான்கு மாவட்டங்களில் 6 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டு இருப்பதுடன் தங்கள் ஆசனங்களைப் பெறாத இரத்தினபுரி, கம்பஹ, கேகாலை மாவட்டங்களில் சுமார் 36500, 25000, 22000 என எண்பதினாயிரம் மேலதிக வாக்குகளையும் தொலைபேசிக்கு பெற்றுக் கொடுத்து உள்ளனர். எனவே ஒன்று அல்ல இரண்டு தேசிய பட்டியல் உறுப்பிரிமைப் பெறும் வல்லமை தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு உண்டு. ஆனால் அதனை கேட்டுப் பெறுவதில் கூட்டணி தலைமைகளுக்கு அக்கறை இருப்பதாக தெரியவில்லை. இப்போது எழுந்திருக்கும் இழுபறி நிலை கூட முஸ்லிம் காங்கிரஸ் தாமதமாகவேனும் முன்வந்து பேசி இருப்பதால்தான் எழுந்துள்ளது என அவதானிக்க முடிகிறது. மேலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேசிய பட்டியலுக்கு பெயர் குறிப்பிடப்பட்ட திலகராஜ், லோரன்ஸ், குருசாமி ஆகிய மூவரில் திலகராஜ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். அவருக்குத் தேசிய பட்டியல் தருவதாக கூறியே தலைமைகள் போட்டியிடும் வாய்ப்பை வழங்கவில்லை. 52 நாள் ஆட்சி காலத்தில் அங்கும் இங்கும் பாய்ந்து புகழ்பெற்ற வடிவேல் சுரேஷ்க்கு மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் பாய்வதற்கு தயாராக மகிந்தவை சந்தித்து வந்த இராதாகிருஷ்ணன், அரவிந்தகுமார் ஆகியோருக்கு அங்கீகாரம் கொடுத்த மலையக மக்கள் அவ்வாறு பாய்ச்சல் எல்லாம் காட்டாது தனக்கு வழங்கப்பட்ட பணியை சிறப்பாக நிறைவேற்றி மக்கள் மனதையும் மாவட்டத்தில் முதலிடம் என்ற விருதையும் வென்ற திலகராஜை தெரிவு செய்யாமல் இருக்க வாய்ப்பில்லை. கூடவே நுவரெலியாவில் நாங்கள் மூவரும் வென்றுவிட்டால் திலகராஜ்க்கு தேசிய பட்டியல, ஊடாக பெற்றுக் கொடுப்போம் என மேடைக்கு மேடை முழங்கிய திகா – ராதா – உதயா இன்று கள்ளமௌனம் காப்பது சந்தர்ப்பவாத்த்தின் உச்சம். திலகரின் செயற்பாடுகளில் ஏதேனும் பலவீனம் இருக்கலாம் ஆனால் அவர் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் தெளிவாக ஊடகங்களில் பேசி வருகிறார். ஆனால், ஏற்கனவே ஊடகங்களில் திலகராஜுக்கு தேசிய பட்டியல் உறுதியாக வழங்கப்படும் என கூறிவந்த மனோ கணேசன் தேர்தல் முடிந்த பின்னரான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அத்தகைய உறுதியை வெளிப்படுத்துவதாக தெரியவில்லை. இப்போவது மூவரது பெயரையும் கூறுவது, கூடிப்பேசி தீர்மானிப்போம் என்பதெல்லாம் சந்தர்ப்பவாதம் அன்றி வேறில்லை. மறுபக்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் தெரிவை அதன் பங்காளி கட்சியான ‘டெலோ’ விமர்சித்து இருப்பது வழமையாக அந்த தலைமைகள் காட்டும் சந்தர்பவாதம். “நான் அடிக்கிற மாதிரி நடிக்கிறேன். நீ வலிக்கிறமாதிரி நடி” என்கிற உடன்பாடு அது. அத்தகைய உடன்பாடு ஒன்றுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமைகளும் வந்து இருக்கும் சந்தர்ப்பம் தெளிவாகிறது. இனி சந்தர்ப்பம் பற்றி வாதம் செய்யலாம்.   http://thinakkural.lk/article/61440
  • ராஜபக்‌ஷ எனும் ‘கோலியாத்’தும் தமிழ்த் தேசியம் எனும் ‘டேவிட்’டும் என்.கே. அஷோக்பரன்   / 2020 ஓகஸ்ட் 10 தேர்தல் முடிந்துவிட்டது; ராஜபக்‌ஷக்கள் பெரும்பான்மைப் பலத்தோடு நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியிருக்கிறார்கள். புதிய கட்சி தொடங்கி, நான்கு வருடங்களில், இலங்கையின் பாரம்பரிய தேசிய கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும், இருக்குமிடம் தெரியாமல் செய்து, ‘மொட்டுக் கட்சி’ என்று விளிக்கப்படும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைக் கைப்பற்றி இருக்கிறது.    இதற்கு, மஹிந்த ராஜபக்‌ஷ என்ற தனிமனித அடையாளமும் கோட்டாபய ராஜபக்‌ஷவின் ‘செயல்வீரர்’ என்ற முகமும் பசில் ராஜபக்‌ஷ என்ற மிகச்சிறந்த அமைப்பாளரின் தலைமைத்துவமும் முக்கியக் காரணங்கள்.    இலங்கையின் அரசியல் கட்சிகள், பொதுஜன பெரமுனவின் இந்த வளர்ச்சியிலிருந்து, கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக, கட்சி ஒழுங்கமைப்பு என்று பார்க்கும் போது, இன்று, பொதுஜன பெரமுன அளவுக்கு வினைதிறன் மிக்க ஒழுங்கமைப்பைக் கொண்ட கட்சிகள் எதுவும் இல்லை.    ஒரே இடத்தில் இருந்துகொண்டு, எல்லாத் தேர்தல் வட்டாரங்களையும் நேரடியாகக் கண்காணிக்கும் வினைதிறன் மிக்க கட்சியைக் கட்டமைப்பது, இலகுவானது அல்ல. அதுவும், பொதுஜன பெரமுன கட்சியானது, ராஜபக்‌ஷக்கள், ஆட்சி அதிகாரம் இழந்திருந்த போது உருவான கட்சி ஆகும்.    அண்மையில், கருத்துரைத்த பசில் ராஜபக்‌ஷ “பொதுஜன பெரமுன கட்சியை, சீன கொம்யூனிஸ்ட் கட்சியைப் போலவும் இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சியைப் போலவும் கட்டியெழுப்ப விரும்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.  இதன் அர்த்தம், சீன கொம்யூனிஸ்ட் கட்சிபோன்று கட்டுக்கோப்பும் கட்டமைப்பும் கொண்டமைந்ததாகவும் பாரதிய ஜனதாக் கட்சி போன்று தேசியவாதக் கொள்கையை முன்னிறுத்தும் கட்சியாகவும் பொதுஜன பெரமுன வளர விரும்புகிறது என்பதாகும்.    சர்வாதிகாரக் கட்டமைப்பைக் கொண்ட இனத்தேசிய-பெருந்திரள்வாதக் கட்சியாக பொதுஜன பெரமுன உருவாகி, இன்று, அதிகாரக் கட்டிலில் திடமாக உட்கார்ந்து கொண்டுள்ளது. இலங்கை அரசியலில், அசைக்க முடியாத சக்திகள் தாம் என்பதை, ராஜபக்‌ஷக்கள் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.   பொதுஜன பெரமுன என்ற கட்சி, கட்டியெழுப்பப்பட்ட விடயத்தைச் சுட்டிக்காட்டியதற்கு, இன்னொரு காரணமுண்டு. ராஜபக்‌ஷக்களின் வெற்றி என்பது, அதிர்ஷ்டம் சார்ந்ததோ, காலச்சூழலின் சாதகத்தால் கிடைத்த வெற்றி என்றோ, குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. மிகத் திறமையாகத் திட்டமிடப்பட்டு, அடையப்பெற்ற வெற்றியாகும். அதிர்ஷ்டமும் காலச்சூழலும் கைகொடுத்திருக்கலாம்; ஆனால், முயற்சி உள்ளவனுக்கு மட்டுமே, அதன் பயனை அறுவடை செய்ய முடியும்.    பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட 145 ஆசனங்களோடு, யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பெற்றுக்கொண்ட ஓர் ஆசனம், டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி பெற்றுக்கொண்ட இரண்டு ஆசனங்கள், தேசிய காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் தலா ஒவ்வோர் ஆசனங்களையும் சேர்த்தால் 150 ஆசனங்களைப் பெற்றுவிடலாம்.  எதிர்க்கட்சிக்காரர்களை விலைகொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லாமல், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மிக எளிதாகப் பெற்றுக்கொள்ளும் நிலையிலேயே, பொதுஜன பெரமுன இருக்கிறது. இந்தப் பெரும் பலத்துடன், ‘கோலியாத்’தைப் போல, பெரும் பலத்துடன் ராஜபக்‌ஷக்கள் நிற்கிறார்கள்.   தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசியத்தின் வீழ்ச்சியாக, சிலர் இந்தத் தேர்தல் முடிவுகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இது கவனமாக ஆராயப்பட வேண்டிய விடயம்.   யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஐந்து ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் தலா ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தன. இம்முறை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மூன்று ஆசனங்களையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தலா ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியிருக்கின்றன.    ஆகவே, தமிழ்த் தேசியம் சார்ந்த ஐந்து ஆசனங்களும் தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளுக்கே போயிருக்கின்றன. ஆயினும், ஐந்தில், இரண்டு ஆசனங்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைக் காட்டிலும் தீவிர தேசியம் பேசும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றுக்குக் கிடைத்திருக்கின்றன. இது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தாராளவாத சாய்வின் விளைவாக, ஏற்பட்ட ஆதரவு வீழ்ச்சியா என்றும், சிந்திக்க வேண்டியுள்ளது.    2015ஆம் ஆண்டு தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட ஆசனம், இம்முறை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்துள்ளது. வாக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் கூட, ஐ.தே.கக்கும் ஸ்ரீ ல.சு.கக்கும் 2015இல், 12.43% வாக்குகள் கிடைத்திருந்த அதேவேளை, 2020இல் 15.87% வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இது கணிசமான அதிகரிப்பு என்று கூறக்கூடியதொன்றல்ல. ஆயினும், தமிழ்த் தேசிய கட்சிகள் இந்தச் சமிக்ஞையை உதாசீனம் செய்துவிட முடியாது. அங்கஜன் இராமநாதனின் வெற்றியானது, வடமாகாணத் தமிழர்களுக்கு வாழ்வாதரத் தேவைகளும் இருக்கின்றன என்பதை, தமிழ்த் தேசிய கட்சிகள் மறந்துபோனதை இடித்துரைப்பதாகவே இருக்கின்றது.    கிழக்கைப் பொறுத்தவரையில், 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, திருகோணமலை மாவட்டத்தின் வாக்குவீதத்தில் சிறு வீழ்ச்சியை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சந்தித்திருந்தாலும் ஓர் ஆசனத்தைத் தக்கவைத்திருக்கிறது.   மட்டக்களப்பு, திகாமடுல்ல மாவட்டங்களில் தலா ஓர் ஆசனத்தை இழந்துள்ளது. தமிழ்த் தேசிய கட்சிகள், கிழக்கு வாழ் தமிழ் மக்களின் அவர்களுக்கே உரித்தான பிரச்சினைகள் தொடர்பில், அக்கறைகாட்டாததன் விளைவு இது எனலாம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு, 2018ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பின் போது, ராஜபக்‌ஷக்கள் தரப்புக்குச் சென்ற வியாழேந்திரன், தமிழ்த் தேசிய பரப்பில் ‘துரோகி’ என்று முத்திரை குத்தப்பட்டபோதும், ராஜபக்‌ஷக்களின் பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு, 22, 218 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றிபெற்றமை, தமிழ்த் தேசிய கட்சிகள், கிழக்கு மாகாணம் சார்ந்து ‘out of touch’ ஆக இருப்பதைச் சுட்டிக்காட்டி நிற்கிறது.    வன்னியை எடுத்துக்கொண்டால், 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஓர் ஆசனத்தை இழந்துள்ளது. கிட்டத்தட்ட 20,000 வாக்குகளை இழந்துள்ளது. அதில், கிட்டத்தட்ட 17,000 வாக்குகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கும் கிடைத்திருக்கின்றன. ஆயினும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இழந்த ஆசனத்தை, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி பெற்றுக்கொண்டுள்ளது. ஆகவே, அந்த ஆசனம் நேரடியாக, தமிழ்த் தேசிய கட்சிகளுக்குப் போகாவிட்டாலும், நடைமுறை யதார்த்தத்தில் அது ராஜபக்‌ஷக்களுக்கு ஆதரவான ஆசனம் என்பதுதான் நிதர்சனம்.   ஒட்டுமொத்தத்தில், இன்று தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் கட்சிகளாகக் கருதக்கூடிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் மொத்த நாடாளுமன்றப் பலம் 13 ஆசனங்கள் மட்டுமே. ராஜபக்‌ஷக்கள் என்ற மாபெரும் ‘கோலியாத்’துக்கு முன்னால், ‘சின்னப்பெடியனான’ ‘டேவிட்’டைப் போல, தமிழ்த் தேசியம் நின்று கொண்டிருக்கிறது.    இங்கு, ‘டேவிட்’டின் பிரச்சினை, கோலியாத்தைவிடச் சிறியதாகவும் பலமற்றும் இருப்பது மட்டுமல்ல; இருக்கும் பலத்தைக்கூட ஒன்றுபடுத்தி, ‘டேவிட்’டால் இயக்க முடியாமல் இருப்பதுதான். த.தே.கூ, த.தே.ம.மு, த.ம.தே.கூ என்று பிரிந்து நிற்கும் தமிழ்த் தேசிய கட்சிகளும் அவற்றின் நட்புசக்திகளாகக் கருதக் கூடிய கட்சிகளும் ஒரு தளத்தில் இயங்கினால் மட்டுமே, ‘கோலியாத்’தை எதிர்கொள்ள முடியும் என்பது பற்றி, ‘டேவிட்’ சிந்திக்க வேண்டும்.    அப்படியானால், இன்னொரு ‘கூட்டமைப்பை’ உருவாக்குவதா என்று கேட்கலாம். அது நடைமுறைச் சாத்தியமில்லாத விடயம். இந்தக் கட்சிகள் பிரிந்து நிற்பதே, அவர்களால் ஒரு கட்சியாகவோ, கூட்டணியாகவோ இயங்க முடியாது என்பதால்தான். ஆனால், தமிழ் மக்களின் பொதுப்பிரச்சினைகள் சார்ந்து, அவர்கள் ஒன்றுபடுவதற்கான தளமொன்று அவசியம். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களினுடைய ‘Parliamentary Caucus’ (நாடாளுமன்ற கோகஸ்) ஒன்றைக் கட்டியெழுப்புதல் நல்ல ஆரம்பமாகும்.    அது என்ன, நாடாளுமன்ற ‘கோகஸ்’?   அமெரிக்காவின் சட்டவாக்க சபையான அமெரிக்க காங்கிரஸில், சட்டமன்ற நோக்கங்களை முன்னிறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்கள் ‘congressional caucus (காங்கிரஸ் கோகஸ்) எனப்படுகிறது. இதில் கட்சி சார்ந்த குழுக்கள், சித்தாந்தம் சார்ந்த குழுக்கள் எனப் பல குழுக்களுண்டு.    அதுபோலவே, கட்சிகளைக் கடந்து, இனம் சார்ந்த காங்கிரஸ் உறுப்பினர்களின் குழுக்களும் உண்டு. இவை இனக்-கோகஸ்கள் எனப்படுகின்றன. அமெரிக்க காங்கிரஸில் உறுப்பினர்களாகக் கறுப்பினத்தவரை உள்ளடக்கிய கறுப்பின கோகஸ், ஹிஸ்பானிய இனத்தவர்களைக் கொண்டமைந்த ஜனநாயகக் கட்சியின் ஹிஸ்பாகிக் கோகஸ், ஆசிய-அமெரிக்கர்கள், பசுபிக் தீவுகளிலிருந்து வந்த அமெரிக்கர்களைக் கொண்ட ஆசிய பசுபிக்-அமெரிக்க கோகஸ் என்பவை, இங்கு குறிப்பிடத்தக்கது.  குறித்த, இன மக்களின் பிரச்சினைகள் தொடர்பில், சட்டவாக்க சபையில் ஒன்றிணைந்து இயங்க, இந்தக் கோகஸ்கள் வழிசமைக்கின்றன.    இதுபோலவேனும், தமிழ் மக்கள் சார்ந்த, தாம் ஒன்றுபடக்கூடிய அடிப்படை விடயங்களிலேனும் நாடாளுமன்றத்தில் ஒரு ‘கோகஸ்’ ஆகச் செயற்பட முடியுமானால், அது ‘கோலியாத்’தை எதிர்கொள்வதில் ‘டேவிட்’டின் முதல் வெற்றியாக அமையும். இந்த முதல் வெற்றியாவது, அடையப்பெறுமா என்பதுதான், தொக்கி நிற்கும் கேள்வியாகும்.     http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ராஜபக்-ஷ-எனும்-கோலியாத்-தும்-தமிழ்த்-தேசியம்-எனும்-டேவிட்-டும்/91-254111
  • பிரான்சிய மொழியிலும் ஜேர்மானிய மொழியிலும் இந்த ஆறாம் அறிவை எப்படி விளக்குகிறார்கள் என்றும் போடலாமே?  தமிழிலே நாங்கள் ஏழாம், எட்டாம் அறிவுடையவர்களை தான் நாகரிகம் அடைந்த மனிதர்கள் என்று கருதுகிறோம். ஆறாம் அறிவுடையவர்கள் சிவாஜிலிங்கம் தலைமையில் யாழ் மத்திய கல்லூரியில் சிங்கள படையிடம் அடிவாங்கி ஓடிய கூட்டம். 
  • சி.சி.என் இலங்கை வரலாற்றில் மலையக  சமூகத்தின்  மீது பல விதங்களிலும் தாக்கம் செலுத்திய பிரதான கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி விளங்குகிறது. இலங்கைக்கு சுதந்திரம் வாங்கித்தந்த தேச பிதா என்றும் சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் என்றும் போற்றப்படும் ஐ.தே.கவின் ஸ்தாபத் தலைவர் டி.எஸ்.சேனாநாயக்க சுதந்திரம் வாங்கிக்கொடுத்த உடனேயே இந்திய வம்சாவளி மலையக மக்களின் குடியுரிமையை பறித்தார்.  சுதந்திரம் கிடைத்த ஆண்டே நாடற்றவர்களானார்கள் இலட்சக்கணக்கான தமிழர்கள்.  தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அதிகரித்து  விடக்கூடாது என்ற அச்சமே அதற்குக் காரணம். இலங்கையை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் தாமாகவே வெளியேறினர். ஆனால் சனத்தொகையில் அதிகரித்திருந்த இந்திய வம்சாவளி மக்களை நாட்டை விட்டு வெளியேற்ற சிங்கள தேசியவாதிகள் பிரயத்தனம் எடுத்தனர். இதில்  மேட்டுக்குடி சிங்களத்தலைவர்கள் பிரதான பாத்திரம் வகித்தனர். அவர்கள் அனைவருமே ஐ.தே.கவில் அணிவகுத்து நின்றனர்.     1977 இற்குப்பிறகு ஐ.தே.க தலைவராகவும் ஜனாதிபதியாகவும் விளங்கிய ஜே.ஆர். ஜெயவர்தனவின் காலகட்டம் மிக முக்கியமானது. 1977 ஆம் ஆண்டு கலவரம் மற்றும்  83 இனக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டு பெருந்தொகையானோர் மீண்டும் தமிழகத்துக்கு படையெடுத்து அங்கேயே தங்கி விட்டனர். ஜுலை இனக்கலவரத்துக்கு பிரதான சூத்திரதாரிகள் பலரும் ஐ.தே.கவின் அதிகார மிக்க அமைச்சர்களாக இருந்தவர்கள்.   எனினும் 1988 ஆம் ஆண்டிற்குப்பிறகு ஐ.தே.கவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற அமரர் ரணசிங்க பிரேமதாச, ஆரம்ப கட்டத்தில்  மலையக சமூகத்துக்கு ஐ.தே.க செய்த துரோகச் செயல்களுக்கு பரிகாரம் பெற்றுத் தர விரும்பினார். தான் பிரதமராக இருந்த 1986 ஆம் ஆண்டிலேயே நாடற்றவர்களுக்கு குடியுரிமையைப் பெற்றுத்தருவதற்கான காரணங்களை முன்வைத்து பாராளுமன்றில் நீண்ட உரையொன்றை அவர் ஆற்றியிருந்தமை முக்கிய விடயம். தான் ஜனாதிபதியானவுடன்  அப்போதைய மலையக பிரதிநிதியான அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் அணுகுமுறைக்குப் பிறகு அதை அமுல்படுத்தினார்.   1988 ம் ஆண்டு 39 ம் இலக்கச் சத்தியக் கடதாசி மூலம் பிரஜாவுரிமை வழங்கும் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சம்பவமே  ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்துக்கு மலையக மக்கள் தொடர்ச்சியாக வாக்களிக்கத்தொடங்கியமைக்கு பிரதான காரணமாயிற்று. யானை சின்னம் மலையக மக்களின் மனதில் இடம்பிடித்ததற்குக் காரணமே அவர்களுக்கு பிரஜா உரிமை வழங்கப்பட்டதாகும்.  அமரர் பிரேமதாச மூலம் இந்த சமூகத்துக்கு இன்னும் பல வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று மலையக சமூகம் நினைத்துக்கொண்டிருந்த சமயம் அவர் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் கட்சி தலைமை சில காலம் டி.பி.விஜயதுங்கவிடமிருந்து ரணிலுக்கு மாறியது. டி.எஸ்.சேனாநாயக்க, ஜே.  ஆர். ஆகியோரின் குணங்களிலிருந்து சற்றும் மாறுபடாத ஒருவராக ரணில் விளங்கினார்.  யானைச்சின்னமும் அவருடனேயே தொடர்ந்தது. எனினும் தனது தந்தையின் குணாம்சங்களுடனும் கருத்துக்களுடனும் கட்சியில் அமைதியாக உருவான சஜித் தனக்கு அரசியல் எதிரியாக மாறுவார் என்பதை ஆரம்பத்தில் ரணில் உணரவில்லை. ஆனால் காலம் எல்லாவற்றையும் புரட்டிபோடும் வல்லமை கொண்டது என்பதை ஏனோ ரணில் ஏற்கவும் இல்லை.  கட்சியை மறுசீரமைப்பதை விடுத்து கட்சி சின்னத்தை மாற்றி  கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடும் உபாயத்தை ஆரம்பித்தார். தானே தலைவர் , தான் எடுப்பது மட்டுமே முடிவு என்ற பிடிவாதக்குணம் கொண்டவராக  மாறிப்போனார். இதற்கு கட்சியின்  மேட்டுக்குடி பண்புகளுடன் இருந்த ஏனைய அங்கத்தவர்கள்  கட்டுப்பட்டனர். ஆனால் ஜனநாயக பண்புகளை விரும்பும் சஜித், தயாசிரி  போன்ற இரண்டாம் கட்ட தலைமைத்துவ இளம் உறுப்பினர்கள் இதை எதிர்த்தனர்.  மேலும் யானைக்குப் பதிலாக அன்னத்தை கொண்டு வந்ததற்கும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் அதற்கும் மக்கள் ஆதரவு கிடைக்கவே தனது முடிவுக்கு மக்கள் ஆணை இருக்கின்றது என்று தவறாக விளங்கிக்கொண்டார் ரணில். இன்று அதன் விளைவை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார். இளம் தலைமைத்துவங்கள் அதிகரித்த தற்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் ராணித் தேனீ சஜித் என்பதை ரணில் விளங்கிக்கொண்டது  2020 ஆம் ஆண்டு  பாராளுமன்றத் தேர்தலுக்கு பிறகு தான் என்றால் அவரது அரசியல் முதிர்ச்சியை என்னவென்பது? தான் சொன்னால் யானைக்கும் அன்னத்துக்கும் மக்கள் ஆதரவளிப்பார்கள் என்ற எண்ணம் உடைந்து போய்விட்டது.  கட்சியின் தலைமையை விட்டுக்கொடுக்காத ரணிலின் பிடிவாதக்குணம் மட்டுமே ஐ.தே.கவின் வீழ்ச்சிக்கு காரணமாகாது. நல்லாட்சியில் கட்சி உறுப்பினர்களின் ஊழல்களை கண்டும் காணாதது போன்று இருந்தமையும் மெளனமும் பிரதான காரணங்களாகின. கட்சியின் 90 வீதமானோர் சஜித்துக்கு ஆதரவளிக்க முன் வந்தும் கூட யானையின் மீது நம்பிக்கை வைத்திருந்தார் ரணில். இன்று நாட்டின் வாக்காளர்களில் 2.15 வீதமானோரே கட்சிக்கு ஆதரவு எனும் போது நிலைமை விளங்குகிறது. யானைச்சின்னம் மொத்தமாக பெற்ற இரண்டரை இலட்சத்துக்கும் அண்மித்த வாக்குகளை ஒரு காலத்தில் கொழும்பு மாவட்டத்தில் ரணில் மாத்திரம் பெற்றவராக இருந்தார் என்பதை இங்கு பதிவு செய்யத்தானே வேண்டும்? சின்னத்துக்கு மட்டும் வாக்களித்து பழக்கப்பட்டவர்கள் இல்லை தமிழ் மக்கள் புதிய எண்ணங்களுக்கும் வாக்களிப்பவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். யானை அப்படியே இருக்கும் பாகனைத் தான் மாற்ற வேண்டும் என்ற விமர்சனங்கள் இன்னும் எழுந்தவண்ணமேயுள்ளது. பொதுத்தேர்தல் பெறுபேறுகள்  வெளிவந்து  கொண்டிருக்கும் போது சமூக ஊடகங்களில் வைரலான  கருத்து  இது.  ‘ ஒரு நாட்டை எவ்வாறு சீரழிப்பது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரியிடம் பாடம் கற்க வேண்டும் அதே போன்று ஒரு கட்சியை எவ்வாறு இல்லாமலாக்குவது என்பது பற்றி ரணிலிடம் பாடங்கற்க வேண்டும்’  ஐக்கிய தேசிய கட்சியிலேயே தனது அரசியலை ஆரம்பித்தவர் எஸ்.டபிள்யூ .ஆர். டி .பண்டாரநாயக்க. பின்னர் கொள்கை முரணால் அதிலிருந்து வெளியேறி சுதந்திர கட்சியை ஸ்தாபித்தார். இறுதியாக அதன் தலைவராகவும் நாட்டின்  ஜனாதிபதியாகவும் விளங்கிய மைத்ரி கட்சியை வளர்த்தெடுப்பதை விடுத்து ரணிலை விமர்சனம் செய்து இறுதியில் நாட்டின் மிகவும் பலகீனமான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற பெயருடன் விடை பெற்றார். தற்போது பொது ஜன பெரமுனவில் தஞ்சமடைந்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருக்கின்றார். ஆனால் சுதந்திர கட்சி இனி உயிர்க்கப்போவதில்லை. அதே நிலைமை தான் ஐ.தே.கவுக்கும்.    42 ஆண்டுகளாக தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து அதில் 5 தடவைகள் பிரதமராக  விளங்கி 2 ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்டு  25 வருடங்களுக்கு மேல் கட்சியின் தலைவராகவும் விளங்கிய ரணிலின் நிலைமை மிக மோசமானது.   1977 முதல் 2015 வரை நடைபெற்றுள்ள 8 பொதுத்தேர்தல்களிலும்  தொடர் வெற்றிகளைப் பெற்ற ரணிலை மட்டுமா மக்கள் நிராகரித்துள்ளனர்? இல்லை கட்சியையும் சேர்த்துத் தான்…! யானை தனது தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டதற்கு  இதை விட வேறு உதாரணங்கள் தேவை தானா?   https://www.virakesari.lk/article/87795