• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
பசுவூர்க்கோபி

அப்பு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்..!

Recommended Posts

large.WHDQ-512910944.jpg.9b18759bfc7a96b9d3ff42cfd2efff2f.jpg

அப்பு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்..!

சர்க்கரை வியாதியில்லை
சருமத்தில் தொந்தல் இல்லை
பக்கத்தில் வாதமில்லை
பாழ்பட்ட கொழுப்புமில்லை.

கண்கள் விழிக்கூர்மை
காதுரெண்டும் பழுதில்லை
பற்கள் எல்லாம் பத்திரமாய்
பயமற்ற நெஞ்சுரமாய்

கைத்தடி இல்லாமல்
கால் எழுந்து நடைபயிலும்
அப்புவென்று சொன்னால்
ஆச்சரியப் படுவீர்கள்

கிட்டப் போய் ஒருநாள்
கேட்டேன் அவர் வயதை
தொண்நூறு தாண்டி
தொடப் போறேன் நூறென்றார்.

அந்தக் காலத்து..
அதிசிறந்த உணவென்றார்
வரகரிசி சாமையுடன்
வாய்க்கினிய தினைச்சோறு
குரக்கன் மா றொட்டி-மீன்
கூழ் எங்கள் அமிர்தம்

பகல் முழுதும் உடல் உளைப்பு
பனாட்டொடியல் பழம்கஞ்சி
தூதுவளைச் சம்பல்
தும்பங்காய்ப் பிரட்டல்
கொவ்வை,குறிஞ்சா,முசிட்டை
கொடிக் கொழுந்து பிரண்டை
புற்றடிக் காளான்
பொன்னான வீணாலை-என்
ஆச்சி விளைவிக்கும்
அன்பான உணவென்றார்.

இந்தக்காலத்தில்..
எம் உணவை நாம் மறந்து
வெளிநாட்டு உணவுதேடி
விரும்பி அலைகின்றோம்

பீசா,வேர்கர்,கெபாக்,ட்றாகோ
சூசீ,மைக்,கேஎவ்சிக் கோழியென
விருந்தோடு விஷமும் 
விலைகொடுத்து உண்பதற்க்கு.

-பசுவூர்க்கோபி-

large.0-02-0a-be3cb92008ec10486bccbad4b0e192da10c6377be6ecaebc5ce622756ee3bf41_1c6d9e9589a1a2.jpg.88fc204ba34ce79aa078ad8c42541ed4.jpg

 • Like 10
 • Thanks 1
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites

அப்பு ஆச்சி என்று சொன்னாலே ஆச்சரியம் தான் எப்போதும்.......சிறப்பான கவிதை பசுவூர்க்கோபி.....!  👍

Share this post

Link to post
Share on other sites

தாயக நினைவுகளை மீட்டும் அழகான கவிதை ./ எல்லாம் மாறிவிட்டது

Share this post

Link to post
Share on other sites

உடையார் என்றுதான் நாங்கள் அவரை கூப்பிடுவோம். சிறுவர்களிடமும் சிரித்து விளையாடுவார் பழைய கதைகள் சொல்லி, அந்த தள்ளாத வயதிலும் கம்பீரமாக தோலில் கலப்பை வைத்துக்கொண்டு வயலுக்கு போய் உழுதுண்டு வாழ்ந்தார். ஒரு நாள் கூட நோய் வாய்ப்பட்டு படுத்ததை பார்க்கவில்லை. உடல் உழைப்பும் இயற்கையுடன் ஒன்றிய சாப்பாடே காரணம். அந்த அப்பு ஆச்சியின் வாழ்கைக்கு. 

அவருக்கு என தினம் ஒரு பனை கள்ளு எப்பவும் இறக்கி வைத்துவிட்டுதான், அடுத்த பனைக்கு போவார்கள். அவர் வீட்டுக்கு போன புழுக்கெடியல், பினாட்டு, பனங்கட்டி,...எப்பவுமிருக்கும் அவரிடம், ... அது ஒரு காலம்.  வாழ்ந்தால் அவரைபோல் சந்தோஷமாக இயற்கையுடன் வாழவேண்டும்

நன்றி பசுவூர்கோபி பகிர்வுக்கு

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, உடையார் said:

இட்  இஸ்  நாட்  டூ லேட்  உடையார்......என்ன ஒரு 30 வருடத்துக்கு பிறகு என்னுடைய வீட்டுக்கு வாருங்கள், நானும் அப்படித்தான் வாழுறன்.முன்பே சொல்லிவிட்டு வந்தால் லாச்சப்பலில் புழுக்கொடியல், பினாட்டு, பனங்கட்டி எல்லாம் வாங்கி வைக்க வசதியாய் இருக்கும்.......!   😎

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
22 hours ago, suvy said:

வந்தப்போச்சு, இப்படியொரு அன்பு அழைப்பை மறுக்கு முடியுமா 

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
On 1/7/2020 at 22:08, suvy said:

அப்பு ஆச்சி என்று சொன்னாலே ஆச்சரியம் தான் எப்போதும்.......சிறப்பான கவிதை பசுவூர்க்கோபி.....!  👍

நெஞ்சார்ந்த நன்றிகள் என்னை மென்மேலும் வளர்க்கும் உங்கள் பாராட்டுக்கள் 

On 2/7/2020 at 01:05, நிலாமதி said:

தாயக நினைவுகளை மீட்டும் அழகான கவிதை ./ எல்லாம் மாறிவிட்டது

நன்றிகள் அக்கா

Share this post

Link to post
Share on other sites
On 2/7/2020 at 02:21, உடையார் said:

உடையார் என்றுதான் நாங்கள் அவரை கூப்பிடுவோம். சிறுவர்களிடமும் சிரித்து விளையாடுவார் பழைய கதைகள் சொல்லி, அந்த தள்ளாத வயதிலும் கம்பீரமாக தோலில் கலப்பை வைத்துக்கொண்டு வயலுக்கு போய் உழுதுண்டு வாழ்ந்தார். ஒரு நாள் கூட நோய் வாய்ப்பட்டு படுத்ததை பார்க்கவில்லை. உடல் உழைப்பும் இயற்கையுடன் ஒன்றிய சாப்பாடே காரணம். அந்த அப்பு ஆச்சியின் வாழ்கைக்கு. 

அவருக்கு என தினம் ஒரு பனை கள்ளு எப்பவும் இறக்கி வைத்துவிட்டுதான், அடுத்த பனைக்கு போவார்கள். அவர் வீட்டுக்கு போன புழுக்கெடியல், பினாட்டு, பனங்கட்டி,...எப்பவுமிருக்கும் அவரிடம், ... அது ஒரு காலம்.  வாழ்ந்தால் அவரைபோல் சந்தோஷமாக இயற்கையுடன் வாழவேண்டும்

நன்றி பசுவூர்கோபி பகிர்வுக்கு

அருமை உங்களின் அந்தக்காலத்தின் நினைவுகள் எனது கவிதையுடன் சேர்ந்து இனிக்கிறது. உளமார்ந்த நன்றிகள்

Share this post

Link to post
Share on other sites

அப்பு, ஆச்சிமார் நவநாகரீக வேகமான உலகத்தில் வாழாமல் இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்தார்கள். ஆனாலும் எல்லாருக்கும் நீண்ட ஆயுள் வாய்த்துவிடவில்லை. திடகாத்திரமானவர்கள் நீண்ட ஆயுளுடன் இருந்தார்கள் என்பதும் உண்மை.

புலம்பெயர் நாடுகளில் இருந்தாலும் தரமான மரக்கறிகள், இறைச்சி வகைகள், சிறுதானியங்கள் உண்டு உடல்நலத்தைக் காக்கலாம். Processed food ஐ தவிர்த்தால் நல்லது.

 • Like 3

Share this post

Link to post
Share on other sites
30 minutes ago, கிருபன் said:

அப்பு, ஆச்சிமார் நவநாகரீக வேகமான உலகத்தில் வாழாமல் இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்தார்கள். ஆனாலும் எல்லாருக்கும் நீண்ட ஆயுள் வாய்த்துவிடவில்லை. திடகாத்திரமானவர்கள் நீண்ட ஆயுளுடன் இருந்தார்கள் என்பதும் உண்மை.

புலம்பெயர் நாடுகளில் இருந்தாலும் தரமான மரக்கறிகள், இறைச்சி வகைகள், சிறுதானியங்கள் உண்டு உடல்நலத்தைக் காக்கலாம். Processed food ஐ தவிர்த்தால் நல்லது.

நீங்கள் சொன்னது தான் ஜதார்ததம். ஆனால் கவிதைக்கு பொய் அழகு . எனவே கவிதை எழுதும் போது பல  பொய்கள் கலந்து எழுதுவது கவிஞரின் கவித்திறமை.  அதில் உள்ள இலக்கிய நயத்தை மட்டும் ரசிக்கவேண்டியது ரசிப்பவர் திறமை.  

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, கிருபன் said:

நன்றிகள் 

Share this post

Link to post
Share on other sites
57 minutes ago, tulpen said:

நீங்கள் சொன்னது தான் ஜதார்ததம். ஆனால் கவிதைக்கு பொய் அழகு . எனவே கவிதை எழுதும் போது பல  பொய்கள் கலந்து எழுதுவது கவிஞரின் கவித்திறமை.  அதில் உள்ள இலக்கிய நயத்தை மட்டும் ரசிக்கவேண்டியது ரசிப்பவர் திறமை.  

கவிதைக்கு பொய் அழகு..   

நன்றிகள்tulpen 

Share this post

Link to post
Share on other sites

இன்று தான் தும்பைக்காய் பற்றி அறிந்து கொண்டேன்.பகிர்வுக்கு நன்றி.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, யாயினி said:

இன்று தான் தும்பைக்காய் பற்றி அறிந்து கொண்டேன்.பகிர்வுக்கு நன்றி.

அன்புடன் நன்றிகள் யாயினி 

Share this post

Link to post
Share on other sites
On 1/7/2020 at 13:02, பசுவூர்க்கோபி said:

இந்தக்காலத்தில்..
எம் உணவை நாம் மறந்து
வெளிநாட்டு உணவுதேடி
விரும்பி அலைகின்றோம்

பீசா,வேர்கர்,கெபாக்,ட்றாகோ
சூசீ,மைக்,கேஎவ்சிக் கோழியென
விருந்தோடு விஷமும் 
விலைகொடுத்து உண்பதற்க்கு.

-பசுவூர்க்கோபி-

மிகவும் அருமையான கவிதை. நல்ல வசன நடை. எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று . மேலும் எழுதுங்கள், எம்முடன் பகிருங்கள். வாழ்த்துக்கள் 

Share this post

Link to post
Share on other sites

நாக்கில் கடிக்காமல்  பிரண்டை துவையல் செய்யும்முறை யாருக்கும் தெரியுமா ?

large.0-02-0a-be3cb92008ec10486bccbad4b0e192da10c6377be6ecaebc5ce622756ee3bf41_1c6d9e9589a1a2.jpg.88fc204ba34ce79aa078ad8c42541ed4.jpg

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, nilmini said:

மிகவும் அருமையான கவிதை. நல்ல வசன நடை. எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று . மேலும் எழுதுங்கள், எம்முடன் பகிருங்கள். வாழ்த்துக்கள் 

உங்கள் ஆதரவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் nilmini கட்டாயம் தொடருவேன்.

Share this post

Link to post
Share on other sites

கிராம வாழக்கை எப்பவும் அழகு தான் உடல் உள ரீதியாக.சந்தரப்ப வசத்தாலோ அல்லது விரும்பியோ நகர வாழ்க்கைக்கு மாறியவர்கள் கிராமத்தை கொஞ்சம் குறைத்து தாங்கள் திருப்த்திப்பட்டுக் கொள்வார்கள்.இரு கோட்டுத் தத்துவம் தான்.

Share this post

Link to post
Share on other sites
On 5/7/2020 at 17:22, பெருமாள் said:

நாக்கில் கடிக்காமல்  பிரண்டை துவையல் செய்யும்முறை யாருக்கும் தெரியுமா ?

large.0-02-0a-be3cb92008ec10486bccbad4b0e192da10c6377be6ecaebc5ce622756ee3bf41_1c6d9e9589a1a2.jpg.88fc204ba34ce79aa078ad8c42541ed4.jpg

எண்ணெயில் பொரித்து நாரை உரித்துவிட்டுச் செய்தால் கடிக்காது. அல்லது அடுப்பு நெருப்பில் வாட்டிவிட்டுச் செய்தாலும் கடிக்காதாம். நான் அப்படிச் செய்து பார்த்ததில்லை. வதக்கிவிட்டுச் செய்தேன் கடிக்கவில்லை.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
22 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எண்ணெயில் பொரித்து நாரை உரித்துவிட்டுச் செய்தால் கடிக்காது. அல்லது அடுப்பு நெருப்பில் வாட்டிவிட்டுச் செய்தாலும் கடிக்காதாம். நான் அப்படிச் செய்து பார்த்ததில்லை. வதக்கிவிட்டுச் செய்தேன் கடிக்கவில்லை.

இங்கு ஒரு வயதானவர் கேட்டு தெரிந்தவர்கள் மூலம் எடுத்து குடுக்க எனக்கும் ஒரு கொஞ்சம் தந்து அனுப்ப மனுசிக்கு பிலிம் காட்டப்போய் குசினிக்குள் நானே குத்து மதிப்பில் சமையல் போட  கடைசியில் வாயெல்லாம் கடியுடன் cetirizinee hydro எடுத்துத்தான் நிண்டது வாழ்க்கையில் இனி இந்த விளையாட்டு வேண்டாம். .

 • Haha 3

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, பெருமாள் said:

இங்கு ஒரு வயதானவர் கேட்டு தெரிந்தவர்கள் மூலம் எடுத்து குடுக்க எனக்கும் ஒரு கொஞ்சம் தந்து அனுப்ப மனுசிக்கு பிலிம் காட்டப்போய் குசினிக்குள் நானே குத்து மதிப்பில் சமையல் போட  கடைசியில் வாயெல்லாம் கடியுடன் cetirizinee hydro எடுத்துத்தான் நிண்டது வாழ்க்கையில் இனி இந்த விளையாட்டு வேண்டாம். .

சில தெரியாத விடயங்களை மற்றவர்களிடம் கேட்டுத்தான் செய்ய வேண்டும் 😂

உங்கள் கவிதையும் படங்களும் நன்றாய்த்தான் இருக்கு  பசுவூர் கோபி. வெளிநாட்டில் உள்ளவர்கள் தான் கிடைக்காத எம் நாட்டுப் பொருட்களுக்கு  அலைகிறோம். அங்குள்ளவர்களோ பக்கத்தில் இருப்பதைக்கூடப் பயன்படுத்துவதில்லை.

Share this post

Link to post
Share on other sites
On 1/7/2020 at 19:02, பசுவூர்க்கோபி said:

large.WHDQ-512910944.jpg.9b18759bfc7a96b9d3ff42cfd2efff2f.jpg

அப்பு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்..!

சர்க்கரை வியாதியில்லை
சருமத்தில் தொந்தல் இல்லை
பக்கத்தில் வாதமில்லை
பாழ்பட்ட கொழுப்புமில்லை.

கண்கள் விழிக்கூர்மை
காதுரெண்டும் பழுதில்லை
பற்கள் எல்லாம் பத்திரமாய்
பயமற்ற நெஞ்சுரமாய்

கைத்தடி இல்லாமல்
கால் எழுந்து நடைபயிலும்
அப்புவென்று சொன்னால்
ஆச்சரியப் படுவீர்கள்

கிட்டப் போய் ஒருநாள்
கேட்டேன் அவர் வயதை
தொண்நூறு தாண்டி
தொடப் போறேன் நூறென்றார்.

அந்தக் காலத்து..
அதிசிறந்த உணவென்றார்
வரகரிசி சாமையுடன்
வாய்க்கினிய தினைச்சோறு
குரக்கன் மா றொட்டி-மீன்
கூழ் எங்கள் அமிர்தம்

பகல் முழுதும் உடல் உளைப்பு
பனாட்டொடியல் பழம்கஞ்சி
தூதுவளைச் சம்பல்
தும்பங்காய்ப் பிரட்டல்
கொவ்வை,குறிஞ்சா,முசிட்டை
கொடிக் கொழுந்து பிரண்டை
புற்றடிக் காளான்
பொன்னான வீணாலை-என்
ஆச்சி விளைவிக்கும்
அன்பான உணவென்றார்.

இந்தக்காலத்தில்..
எம் உணவை நாம் மறந்து
வெளிநாட்டு உணவுதேடி
விரும்பி அலைகின்றோம்

பீசா,வேர்கர்,கெபாக்,ட்றாகோ
சூசீ,மைக்,கேஎவ்சிக் கோழியென
விருந்தோடு விஷமும் 
விலைகொடுத்து உண்பதற்க்கு.

-பசுவூர்க்கோபி-

large.0-02-0a-be3cb92008ec10486bccbad4b0e192da10c6377be6ecaebc5ce622756ee3bf41_1c6d9e9589a1a2.jpg.88fc204ba34ce79aa078ad8c42541ed4.jpg

எங்கள் பழைய காலத்து உணவுகளில் இருந்த இயற்கையான சத்துக்களும் அவற்றின் மருத்துவ குணாதிசயங்களும் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல ?  அருமையான கவிதையும் பொருளும் !
தொடர்ந்தும் எழுத வாழ்த்துக்கள்.

Share this post

Link to post
Share on other sites
18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சில தெரியாத விடயங்களை மற்றவர்களிடம் கேட்டுத்தான் செய்ய வேண்டும் 😂

உங்கள் கவிதையும் படங்களும் நன்றாய்த்தான் இருக்கு  பசுவூர் கோபி. வெளிநாட்டில் உள்ளவர்கள் தான் கிடைக்காத எம் நாட்டுப் பொருட்களுக்கு  அலைகிறோம். அங்குள்ளவர்களோ பக்கத்தில் இருப்பதைக்கூடப் பயன்படுத்துவதில்லை.

உண்மையாகச் சொன்னீர்கள்.

பாராட்டுக்கு நன்றிகள் சுமேரியர்.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • இவர்களின் கபடம் அப்பட்டமாகப் புரிகிறது. வங்காலையான், ரொபின்சன் குறூஸோ இப்படிப் பலபெயர்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், தலைவரின் பெயரையும், புலிகளின் கொடியினையும் பாவிக்கும் ஒருவர் எப்படி தலைவருக்கு எதிராகவும், புலிகளுக்கு எதிராகவும் இருக்க முடியும் என்பது. தமிழகத்திக் 50 ஆண்டுகள் ஆட்சிசெய்த தமிழரல்லாத வேற்றினத்தவர்களின் கைகளில் தமிழினம் அனுபவித்த இன்னல்கள் களையப்பட வேண்டுமென்பதில் உள்ள தவறென்ன? கருனாநிதியின் தனிப்பட்ட கோரிக்கைகூட புலிகளை அழிப்பதில் பங்களித்திருக்கின்றதென்பது இவர்கள் அறியாததல்ல (உபயம் : சிவ்ஷங்கர் மேனென் எழுதிய "தெரிவுகள்" - புலிகளின் தலைமை காப்பாற்றப்பட்டு, போராட்டம் தொடர்வதற்கான செயற்பாடுகளை மேற்குநாடுகள் முன்னெடுப்பதை கருனாநிதி உடபட்ட தமிழகத் தலைவர்கள் விரும்பவில்லையென்றும், அது தமது அரசியல் இருப்பிற்கு ஆபத்தாக முடியும் என்று அவர்கள் நம்பியதாகவும் சொல்லியிருக்கிறார்). கருனாநிதி எனும் தெலுங்கு இனத்தினைச் சேர்ந்த முதலமைச்சருக்குப் பதிலாக தமிழ் உணர்வுள்ள ஒரு முதலமைச்சர் இருந்திருந்தால் தமிழினக் கொலையினைத் தடுத்திருக்க முடியும் என்கிற நம்பிக்கை அவர்களுக்கிருக்கிறது. அதனால் தமிழர்கள் தமிழரை ஆளவேண்டும் என்று கேட்கின்றனர், இது தவறில்லையே? 
  • சுமந்திரன் மட்டுமல்ல,  கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன் போன்றோர் செய்யும் அரசியலும் ஆபத்தானது. தமிழ்த்தேசியம் என்ற குடைக்குள் ஒற்றுமையாக இயங்காமல் செய்யும்  உதிரி அரசியல் மிகவும் ஆபத்தானது. “ கூட்டமைப்பு அல்லது மக்களின் முன் எடுபடக்கூடிய பெரியதொரு சக்தி புலிகளின் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட அரசியலுக்கு எதிரான முகாமில் நிறுத்தப்பட்டது. சம்பந்தரும், அவரை தாங்கி நிற்கும் பிராந்திய சக்திகளுக்கும் இதுவொரு மிகச்சிறப்பான வாய்ப்பாகும். மெல்ல மெல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் அடிப்படையான கோரிக்கைளை கஜேந்திரகுமாரின் கோரிக்கைளாக்கிவிட்டு மலிவான, பலவீனமான நாளாந்தம் எதிர்வினையாற்றும் சொல்லாடல்களுக்குள் தன்னை தொலைத்தது. கஜேந்திரகுமார் தலைமையிலான அணியோ தமக்குத் தாமே சூடிக்கொண்ட தமிழ்தேசியத்தின் காவலர்கள் என்ற சொல்லாடலை நிஐத்தில், மண்ணில் நிலைநிறுத்த முடியாது தத்தளித்தனர். அவர்கள் முன்னெடுத்த தமிழ் தேசிய போராட்ட அரசியலை கட்டியெழுப்பவில்லை. மனிதாபிமான இடைவெளிகளுக்குள் சென்று செயற்பட்டது. சர்வதேச விசாரணைகளுக்காக ஜெனிவாவிற்கு வந்துசெல்லும் இவர்களால், தமிழ் மக்களின் மனங்களில் கொடுங்குற்றங்கள் பற்றிய பிரஞ்ஞையை ஏற்படுத்த முடியவில்லை. அவர்கள் வெறுமனே மறுமுனையில் நின்று எதிர் வினையாற்றும் வாய்ச்சவாடல்காரார்களாக தங்களை நிலைநிறுத்தினர். அவர்கள் நம்பியிருந்த புலம்பெயர்ந்த தமிழர்களின் அரசியல் எழுச்சியென்பது அவர்களது புலம்பெயர் நாட்டு அரசியல் சகாக்களின் கைகளில் சிக்குண்டு சின்னபின்னப்படுத்தப்பட்ட போது அவர்கள் தமது அரசியலை மீள்பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். இந்த இரு வகையான தமிழ்தேசிய அரசியல் வாய்ப் பேச்சுக்களிடையே சிங்கள அரசும், கட்சிகளும், பிராந்தி சக்தியும் காய்களை ‘சிறப்பாக’ நகர்த்தியது. நேற்றைய போரில் காட்டிக்கொடுப்பவர்கள், கொலையாளிகள், துரோகிகளாக பேசப்பட்டவர்களை இன்றைய அரசியலில் மக்களின் நாளாந்த பிரச்சனைகளுக்கான தீர்வு வழங்குபவர்களாக்கியது. இயற்கை தலைமுறைகளை உருவாக்குகின்றது. அவற்றிற்கு கல்வி, வேலைவாய்ப்பு, வசதிகள் தேவைப்படும் என்ற இயங்கியலை எதிர்த்தரப்பு சரியாகக் கையாண்டது. அதன் விளைவாக மெல்லமெல்ல மாற்று வழிகளும் ஏற்றுக்கொள்ளத் தக்க வழியாகிவிட்டது. அதன் விளைவே இன்று அங்கயன்களின் எழுச்சியாகும்”   மிச்சத்தைதும் படியுங்கள்.      
  • ரஞ்சித் இவர்களுடன் வீண் விவாதம் செய்ய வேண்டாம். இவர்கள் தமிழரை எப்படியாவது மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் குழப்பபுவதற்காகவே யாழ் களத்துக்கு வருகின்றனர், ஆனால் தமிழரை எப்பவும் மத ரீதியாக பிரிக்க முடியாது.  இவர்களது உள்நோக்கமே கிறிஸ்த்தவனை தமிழனுக்கு எதிரியாக காட்டுவது; இதற்கு நாங்கள் எமது நேரத்தை செலவளிக்காமல் விட்டால் தாமாகவே விலகி விடுவார்கள். மன்னார் மாவட்டத்தின் பிரபலமான ஊர் ஒன்றின் பெயரை உடையவர் இதே முயற்சியில் இறங்கி இப்ப வேறு ID இல் திரிகிரார்