Jump to content

கொண்டைக்கடலை சேர்த்த சில சலாட் வகைகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.051C63C3-8708-435C-A159-9DC5D6DC95B3.jpeg.12e06f123e1edf91b789d2f65341203a.jpeg

தேவையான பொருட்கள்:
1 & 1/2 கப் - கொண்டைக்கடலை(இரவில் ஊறவைத்த கடலையை மென்மையாகும் வரை வேகவைக்கவும்)
2 - சிறிய வேகவைத்த உருளைக்கிழங்கு, தோலை உரித்து சிறிய துண்டுகளாக வெட்டவும்
2 - சிறிய தக்காளி, நறுக்கியது
2 தேக்கரண்டி - கொத்தமல்லி இலை நறுக்கியது
1 - பச்சை மிளகாய், நறுக்கியது
2-3 தேக்கரண்டி - எலுமிச்சை சாறு
1/4 தேக்கரண்டி - ஹிமாலயன்/பிங்க உப்பு
2 தேக்கரண்டி - Chaat மசாலா

செய்முறை:
ஒரு பெரிய கிண்ணத்தில் வேகவைத்த கொண்டைக்கடலை, வேகவைத்த உருளைக்கிழங்கு துண்டுகள், நறுக்கிய தக்காளி, நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, கருப்பு உப்பு, மற்றும் சாட் மசாலாவை ஒன்றாக கலந்தால் சலாட் தயார்

சலாட்டை கலந்த உடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.

******postimage link மூலம் படத்தை இணைக்கமுடியதமையால் விம்பகத்தில் சேர்க்கவேண்டியதாயிற்று..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த salad செய்முறையை நான் இணைத்தபொழுது, இதைப்பற்றிய ஒரு அறிமுகத்தை எழுத மறந்துவிட்டேன்.. postimage linkம் வேலை செய்யவில்லை.

பொதுவாக, நாங்கள் வெங்காயம் சேர்க்காமல் கறியோ, அல்லது salad செய்வது குறைவாக இருக்கும். ஆனால் இந்த salad வெங்காயம் இல்லாத salad. வித்தியாசமாகவும், சுவையாகவும் இருந்தமையால் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த salad செய்முறையை நான் இணைத்தபொழுது, இதைப்பற்றிய ஒரு அறிமுகத்தை எழுத மறந்துவிட்டேன்.. postimage linkம் வேலை செய்யவில்லை.

பொதுவாக, நாங்கள் வெங்காயம் சேர்க்காமல் கறியோ, அல்லது salad செய்வது குறைவாக இருக்கும். இந்த saladம் அப்படியான ஒன்று. வித்தியாசமாகவும், சுவையாகவும் இருந்தமையால் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். 

பார்க்க நன்றாக இருக்கிறது.
இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபா சிதம்பரநாதன்,  அவர்களே....
வெள்ளிக் கிழமைகளில்....  எனக்கு, கொண்டல்  கடலை  தான் முக்கியம்.
அதற்காக...  வியாழக் கிழமையே...  அந்தக் கடலையை ஊற வைத்து,
பதமாக அவித்து.... சாப்பிடும்,  சுவையோ... சுவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

large.051C63C3-8708-435C-A159-9DC5D6DC95B3.jpeg.12e06f123e1edf91b789d2f65341203a.jpeg

தேவையான பொருட்கள்:
1 & 1/2 கப் - கொண்டைக்கடலை(இரவில் ஊறவைத்த கடலையை மென்மையாகும் வரை வேகவைக்கவும்)
2 - சிறிய வேகவைத்த உருளைக்கிழங்கு, தோலை உரித்து சிறிய துண்டுகளாக வெட்டவும்
2 - சிறிய தக்காளி, நறுக்கியது
2 தேக்கரண்டி - கொத்தமல்லி இலை நறுக்கியது
1 - பச்சை மிளகாய், நறுக்கியது
2-3 தேக்கரண்டி - எலுமிச்சை சாறு
1/4 தேக்கரண்டி - ஹிமாலயன்/பிங்க உப்பு
2 தேக்கரண்டி - Chaat மசாலா

செய்முறை:
ஒரு பெரிய கிண்ணத்தில் வேகவைத்த கொண்டைக்கடலை, வேகவைத்த உருளைக்கிழங்கு துண்டுகள், நறுக்கிய தக்காளி, நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, கருப்பு உப்பு, மற்றும் சாட் மசாலாவை ஒன்றாக கலந்தால் சலாட் தயார்

சலாட்டை கலந்த உடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.

******postimage link மூலம் படத்தை இணைக்கமுடியதமையால் விம்பகத்தில் சேர்க்கவேண்டியதாயிற்று..

புது சலாட்டுக்கும் செய்முறைக்கும் நன்றி.
ஒரு கேள்வி. 
கட்டாயம் ஹிமாலயன் பிங்க் உப்புத்தான்  பாவிக்க வேண்டுமா?😎

38 minutes ago, ஈழப்பிரியன் said:

பார்க்க நன்றாக இருக்கிறது.
இணைப்புக்கு நன்றி.

இனி இவருக்கு இருப்பு கொள்ளாது. செய்து சாப்பிடும் வரைக்கும் நித்திரையும் வராது. :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

புது சலாட்டுக்கும் செய்முறைக்கும் நன்றி.
ஒரு கேள்வி. 
கட்டாயம் ஹிமாலயன் பிங்க் உப்புத்தான்  பாவிக்க வேண்டுமா?😎

ம்ம்ம் 
அப்ப திண்ட மாதிரி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

புது சலாட்டுக்கும் செய்முறைக்கும் நன்றி.
ஒரு கேள்வி

கட்டாயம் ஹிமாலயன் பிங்க் உப்புத்தான்  பாவிக்க வேண்டுமா

நன்றி.

இல்லை, சாதாரன உப்பும் பாவிக்கலாம். ஆனால் கூடுதலாக ஹிமாலயன் பிங்க் உப்பைத்தான் salad வகைகளுக்கு பாவிப்பது வழமை என்பதால் அப்படியே எழுதிவிட்டேன்.

1 hour ago, ஈழப்பிரியன் said:

பார்க்க நன்றாக இருக்கிறது.
இணைப்புக்கு நன்றி.

.நன்றி.

கொஞ்சம் spicyயக் இருக்கும்.. ஆனால் இந்த salad பற்றி எனக்கு கூறியவர் என்னுடன் வேலை பார்க்கும் மராத்திய பெண். அவர்கள் வெங்காயம் சேர்ப்பதில்லை என்பதால் எல்லோருக்கும் பிடிக்குமோ தெரியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கடலை நல்ல சத்துள்ள உணவு, கிழமையில் இரு தடவை அவித்து கொடுப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

பிரபா சிதம்பரநாதன்,  அவர்களே....
வெள்ளிக் கிழமைகளில்....  எனக்கு, கொண்டல்  கடலை  தான் முக்கியம்.
அதற்காக...  வியாழக் கிழமையே...  அந்தக் கடலையை ஊற வைத்து,
பதமாக அவித்து.... சாப்பிடும்,  சுவையோ... சுவை.

உண்மைதான் தமிழ் சிறி அண்ணா.  

நாங்கள் இந்த கடலையை அவித்து, அதை வெங்காயம், செத்தல்மிளகாய், கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை எல்லாம் போட்டு தாளித்து சாப்பிடுவோம்.

எனது Fiji நண்பி, பச்சைமிளகாய், வெங்காயம், ஒரு உள்ளி பல், கரம் மசாலா போட்டு செய்வதாக கூறுவா. 

நான் இந்த 3 முறைகளிலும் செய்வது வழமை.

1 hour ago, உடையார் said:

இந்த கடலை நல்ல சத்துள்ள உணவு, கிழமையில் இரு தடவை அவித்து கொடுப்போம்

உங்கள் எல்லோரது கருத்துக்களுக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டல் கடலை (chick peas) உடன் சேர்த்து சாலட் செய்வதற்கு, பாவிக்க கூடிய மரக்கறிகளும், பொருட்களும்.

இவை எல்லாம் பாவிக்க வேண்டியதிலை. இதில் ஓர் முறை என்று இல்லை.

உங்களிடம் உள்ளவற்றை வைத்து, எது எவற்றுடன் ஒத்து வரும், மற்றும் கண்மட்ட அளவு என்று பார்த்து செய்வது.   இருப்பவற்றை வைத்து உடனடி salad இற்கு கொண்டல்  கடலை (tinned) உகந்தது. அவித்தும் செய்யலாம்.

இது சுவைக்கும், texture இற்குமான சாலட்.  ஒவொரு தரமும் வெவ்வேறு சுவையும், texture உம் தரும்.  

1) கொண்டல் கடலை 

 2) bell பேப்பர் (1 cm துண்டுகள்). நேரம் இருந்தால் முழுமையாக நெருப்பில் அல்லது grill இல் நேரடியாக சுட்டு, கருகிய தோலை நீக்கி விட்டு, ஓரளவு   நீளமான தூண்டுகைகளாக.   

3) தயிர் 

4) cheese ( விருப்புக்கு ஏற்ப) 

5) carrots, சிறு துண்டுகளாக  

6) தக்காளி (plum அல்லது baby tomato). Flame grill If big (beef) tomato. 

7) முள்ளங்கி (சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் பாக்கு அளவில் இருப்பது. சிலவேளைகளில் ஓர் சுனைப்பு தன்மை இருக்கும், கொதி நீரில்  .1 நிமிடம் போட்டு மூடி விட்டு பாவிக்கவும்)  

😎 பச்சை மிளகாய் அல்லது எந்த மிளகாயும் உறைப்புக்கு ஏற்ற படி 

9) Avacado 

10) tinned tuna அல்லது salmon (இதை பாவித்தால் cheese, தயிரை தவிர்க்கவும்), slightly spiced, grilled, ovened or shallow fried chicken pieces or even any other meat or fish as you wish 

11) salt, எலுமிச்சம் புளி, சாலட் ட்ரெஸ்ஸிங், ஒலிவ் ஆயில், மிளகு (dressing, தேவைக்கும், இருப்புக்கும் ஏற்றபடி)

12) வேறு எதாவது மரக்கறி- spring onion, salad onion 

13) சிறிதளவு மிகவும் மெலிதாக அரிந்த உள்ளி மெலிதாக அரிந்த carrot உடன், brown sugar, எலுமிச்சபுளியுடன் ம்  
   
14) chat மசாலா, மல்லி இலை அல்லது வேறு parsely, thyme, chives, oregano, காய்ந்தது என்றால் வேறு சுவை.   

15) 15) உங்களிடமுள்ள உடனடியாக, பச்சையாக சாப்பிடக் கூடிய மரக்கறி. உ.ம். courgets (small pieces), மிகவும் சிறிய,  இளமையான broccoli (விரல்களால் நுள்ளி எடுக்க கூடிய அளவு).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

23 minutes ago, Kadancha said:

கொண்டல் கடலை (chick peas) உடன் சேர்த்து சாலட் செய்வதற்கு, பாவிக்க கூடிய மரக்கறிகளும், பொருட்களும்.

இவை எல்லாம் பாவிக்க வேண்டியதிலை. இதில் ஓர் முறை என்று இல்லை.

உங்களிடம் உள்ளவற்றை வைத்து, எது எவற்றுடன் ஒத்து வரும், மற்றும் கண்மட்ட அளவு என்று பார்த்து செய்வது.   இருப்பவற்றை வைத்து உடனடி salad இற்கு கொண்டல்  கடலை (tinned) உகந்தது. அவித்தும் செய்யலாம்

மிக்க நன்றி. 

மிகவும் பயனுள்ள தகவல்.

நான் பொதுவாக, ஒரு சிறிய மர உரலில் உள்ளி மற்றும் மிளகை நன்றாக குற்றி பின் அதை சிறிதளவு ஓலிவ் ஓயிலில், ஊறவைத்து, அதை salad dressingஆக பாவிப்பது வழமை.அந்த உள்ளியின் வாசனை மிகவும் பிடிக்கும்.

Link to comment
Share on other sites

யூனியில் படிக்கும் போது ஒரு தடவை    சைடு டிஷ் க்கு  கொண்டல் கடலையுடன் நெத்தலி பொறித்து போட்டு மிளகாய் வெங்காயம் 
போன்றவற்றை அதிகம் போட்டு ஒரு விதமாக செய்து  இருந்தார்கள் சூப்பர் ஆக இருந்திச்சு  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அபராஜிதன் said:

யூனியில் படிக்கும் போது ஒரு தடவை    சைடு டிஷ் க்கு  கொண்டல் கடலையுடன் நெத்தலி பொறித்து போட்டு மிளகாய் வெங்காயம் 
போன்றவற்றை அதிகம் போட்டு ஒரு விதமாக செய்து  இருந்தார்கள் சூப்பர் ஆக இருந்திச்சு  

தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சத்தான கெத்தான சாலட் ......செய்து சாப்பிடத்தான் வேண்டும்......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2020 at 03:30, suvy said:

ஒரு சத்தான கெத்தான சாலட் ......செய்து சாப்பிடத்தான் வேண்டும்......!   👍

On 5/7/2020 at 05:19, Nathamuni said:

👍

மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 3/7/2020 at 12:28, பிரபா சிதம்பரநாதன் said:

 ஹிமாலயன்/பிங்க உப்பு

ஹிமாலயன் உப்பில் ஏதாவது வேறுபட்ட குணங்கள் இருக்கின்றதா? ஒவ்வொருத்தொரும் வெவ்வேறு காரணங்கள் சொல்கின்றனர். பெரும்பாலானோர் உப்பு என்றால் எல்லாம் உப்புத்தான் என் மொட்டையாக முடிக்கின்றனர்.
இந்த ஹிமாலயன் உப்பை பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஹிமாலயன் உப்பில் ஏதாவது வேறுபட்ட குணங்கள் இருக்கின்றதா? ஒவ்வொருத்தொரும் வெவ்வேறு காரணங்கள் சொல்கின்றனர். பெரும்பாலானோர் உப்பு என்றால் எல்லாம் உப்புத்தான் என் மொட்டையாக முடிக்கின்றனர்.
இந்த ஹிமாலயன் உப்பை பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

ஹிமாலயன் பிங்க உப்பு, கடல் உப்பு, போன்றவற்றில் ஓப்பீட்டளவில் அதிக minerals உள்ளதாக கூறுவார்கள்.. ஆனால் கடல் உப்பில் iodine குறைவு என கூறுவார்கள். அதற்காகத்தான் iodine கலந்த தூள் உப்பை அறிமுகப்படுத்தினர்கள்.இப்படி பல தகவல்கள். ஆனால் அதிகளவு மாற்றங்கள்/வேறுபட்ட குணங்கள் உள்ளதா என தெரியவில்லை. 

“ஹிமாலயன்” உப்பு, “கடல்” உப்பு என்பன அவை உருவாகும் இடங்கள் இயற்கையாக இருப்பதால், உங்களை அவை இயற்கையான ஒன்று என அதிகம் கவரலாம்.

ஹிமாலயன் உப்பு( pink and black) சலாட் போன்றவற்றிற்கு நன்றாக இருக்கும். விலையும் கொஞ்சம் அதிகம் என்பதால் அன்றாட சமையலுக்கு அதிகம் பாவிப்பார்களோ தெரியாது. 

ஆனால் என்னைப்பொறுத்தவரையில், உங்களது மனதிற்கும் உடல்நலத்திற்கும் எது நல்லது என நினைக்கிறீர்களோ அந்த உப்பை பாவியுங்கள். உப்பை அதிகம் பாவிக்காதுவிட்டால் இன்னமும் நல்லது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் Sumac என்று அழைக்கப்படும்  middle eastern spice ஐ அறிந்தேன். இது chick peas உடன் மிகவும் ருசியாகவும், fragrance ஆகவும் இருக்கும் என்றும் அறிந்தேன்.

Sumac roasted chick peas என்ற சமையல் முறையும் உள்ளதாக அறிந்தேன்.

Sumac  oven, grill, barbecue, shallow fry முறையில்  சமைக்கப்பட்ட  அசைவ உணவுகளுக்கும், பல சலாட் வகைகளுக்கும்  தூக்கி கொடுக்கும் என்றும்  அறிந்தேன்.   
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது போல Sumac தனியாக பாவித்தது இல்லை ஆனால் லெபனீஸின் Zaatar எனும் spice mixesல் dried sumac உள்ளது..

இந்த Zaatar வாசனையும் ருசியும் மிகவும் பிடிக்கும்.. புளிப்பு, உறைப்பு என நன்றாக இருக்கும்

4-FF58000-1-A56-4208-8-C11-951-C56-C9726

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/7/2020 at 13:17, பிரபா சிதம்பரநாதன் said:

Zaatar

புளிப்பு தன்மை,மற்றும் fragrance ஐ தருவது Sumac. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/7/2020 at 14:17, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் சொல்வது போல Sumac தனியாக பாவித்தது இல்லை ஆனால் லெபனீஸின் Zaatar எனும் spice mixesல் dried sumac உள்ளது..

இந்த Zaatar வாசனையும் ருசியும் மிகவும் பிடிக்கும்.. புளிப்பு, உறைப்பு என நன்றாக இருக்கும்

4-FF58000-1-A56-4208-8-C11-951-C56-C9726

12 minutes ago, Kadancha said:

புளிப்பு தன்மை,மற்றும் fragrance ஐ தருவது Sumac. 

புளிப்புக்கு... எமது, தேசிக்காய் ஊறுகாய் இருக்க,
லெபனான் புளிப்பு... நமக்கு எதற்கு?😜 :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

புளிப்புக்கு... எமது, தேசிக்காய் ஊறுகாய் இருக்க,
லெபனான் புளிப்பு... நமக்கு எதற்கு?

கயர்ப்பு தன்மையான புளிப்பு.  Zesty.

Sumac, நான் இன்னும் அதை பாவிக்கவில்லை. 

ஆனால் மிளகு பச்சையான நிறத்தில் இருக்கும் போது ஓர் புளிப்பு தன்மை மிகவும் சாடையான சாயலுடன்  இருக்கும். அப்படி sumac இல் கூடுதலாக இருக்கிறதோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

கயர்ப்பு தன்மையான புளிப்பு.  Zesty.

Sumac, நான் இன்னும் அதை பாவிக்கவில்லை. 

ஆனால் மிளகு பச்சையான நிறத்தில் இருக்கும் போது ஓர் புளிப்பு தன்மை மிகவும் சாடையான சாயலுடன்  இருக்கும். அப்படி sumac இல் கூடுதலாக இருக்கிறதோ தெரியவில்லை.

Marten Salami 1A mit grünem Pfeffer gefüllt ca. 1,7kg: Amazon.de ...

கடைஞ்சா.... நான்  50 % பகிடியாகவும்,  50 % வெற்றியாகவும் எழுதியதை...
நீங்கள்,  100 %   கருத்தில் கொண்டு...  எனக்கு, விளங்கும்படி  எழுதியமைக்கு நன்றி.

ஜேர்மனியில்  விற்கும், சில சலாமிகளில்... 
பச்சை மிளகு,  கலந்திருக்கும். 

வீட்டில் இருந்து, கட்டிக் கொண்டு போன  பாணுக்கு 
வேலைக் களைப்பிலும், பசி அவதியிலும்...
அந்தச் சலாமியில் உள்ள.. பச்சை  மிளகு கடிபடும் போது... 
வித்தியாசமான சுவை... டக்கென்று, மின்னலைப் போல் வந்து,
புத்துணர்ச் சியை தருவது போல்... 
மூளையில்..  ஒரு பிரகாசம் அடிப்பதை போல, இருப்பதை   உணர்ந்துள்ளேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MARTERN Salami ஐ தேடிப்பார்த்தேன், இங்கு UK இல் முன்பு விற்கப்பட்டது. நானும் உண்டதாக நினைவு.

ஆனால், இப்பொது இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2020 at 23:00, Kadancha said:

கொண்டல் கடலை (chick peas) உடன் சேர்த்து சாலட் செய்வதற்கு, பாவிக்க கூடிய மரக்கறிகளும், பொருட்களும்.

இவை எல்லாம் பாவிக்க வேண்டியதிலை. இதில் ஓர் முறை என்று இல்லை.

உங்களிடம் உள்ளவற்றை வைத்து, எது எவற்றுடன் ஒத்து வரும், மற்றும் கண்மட்ட அளவு என்று பார்த்து செய்வது.   இருப்பவற்றை வைத்து உடனடி salad இற்கு கொண்டல்  கடலை (tinned) உகந்தது. அவித்தும் செய்யலாம்

95118-B2-F-786-D-4378-A45-C-0-AC9-C98-C3

நான் மேலே நீங்கள் கூறியவற்றில், சிலவற்றை போட்டு இந்த saladஐ இன்று செய்திருந்தேன். எனக்கு நான் சேர்த்தவற்றின் கலப்பு பிடித்திருந்தது..

தேவையான பொருட்கள்:-
வேகவைத்த கொண்டைக்கடலை 1/2 cup
Zucchini -  1/2
Baby capsicum -1
Mini Roma tomatoes -1
Small Red radish -1
மிளகாய் -1
Cabanossi ( dry pork sausage) - 1/2 ( இதை சேர்ப்பது meaty textureக்காக)
Salad dressing - ஒலிவ் எண்ணெய்யில் ஊற வைத்த, உள்ளி(1), இஞ்சி(மிகவும் சிறிய துண்டு), மஞ்சள் கிழங்கு( மிக மிக சிறிய துண்டு) fresh mixed herbs. 

0653-B4-AB-3-FE4-40-A7-B2-B5-2-DF9-CCB7-

1- முதலில் salad dressing
உள்ளி(1), இஞ்சி(மிக மிக சிறிய துண்டு), மஞ்சள் கிழங்கு( மிக மிக மிக சிறிய துண்டு) ஆகிய மூன்றையும் உரலில் போட்டு நன்றாக குற்றி எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் போடவும். அதனுள் fresh mixed herbs, உப்பு, மிளகு போட்டு சிறதளவு(1/2 தேக்கரண்டி) ஒலிவ் எண்ணெயை ஊற்றி ஊற வைக்கவும். 

2- அடுத்ததாக Baby capsicum நீளவாக்கில் வெட்டவும்.

3- Zucchini மெல்லிய வட்டமாக வெட்டவும். 

4- வெட்டிய Zucchini, Capsicum வேண்டுமாயின் ovenல் போட்டு அதிக நேரம் வாட்டாமல் எடுத்து வைக்கவும். 

5- சிவப்பு முள்ளங்கியை மெல்லிய வட்டமாக வெட்டி ஒரு நிமிடம் கொதித்த நீரில் போட்டு எடுத்து வைக்கவும்.( அதிக நிமிடங்களுக்கு விட்டால் முள்ளங்கியின் சிவப்பு நிறம் போய்விடும்).

6- Cabanossi சிறிய வட்டங்களாக வெட்டி ovenல் போட்டு எடுத்து வைக்கவும் 

7- தக்காளியை சிறிய துண்டுகளாக வெட்டவும்.

8- மிளகாயை சிறிய துண்டுகளாக வெட்டவும்

9- பின்பு ஒரு கிண்ணத்தில், வேக வைத்த கொண்டைக்கடலை, Capsicum, Zucchini, முள்ளங்கி, Cabanossi, தக்காளி, மிளகாய் போட்டு கலந்தபின்பு, முன்பே ஊறவைத்த salad dressing இந்த saladன் மேல் ஊற்றவும்.

இது முதற்தடவை என்பதால் பொருட்களின் அளவை அண்ணளவாக பார்த்து பார்த்து போட்டேன். ஆனாலும் இந்த மரக்கறிகளின் இயல்பான தன்மை வித்தியாசமான சுவையை தந்தது. விரும்பினால் செய்து பாருங்கள்.

89-E915-B4-A40-E-4324-94-DE-DF685-B24109

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.