Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வீட்டிற்குள் புகுந்த அயல் வீட்டு நாயை சுட்டுக் கொன்ற கிராம அலுவலகர்: வவுனியாவில் சம்பவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா செட்டிகுளம் பகுதியிலுள்ள கிராம அலுவலகர் ஒருவர் தனது வீட்டிற்குள் புகுந்த பக்கத்துவீட்டு உறவினரின் வளர்ப்பு நாய் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டபோது சம்பவ இடத்தில் நாய் துடிதுடித்து உயிரிழந்துவிட்டதாக வளர்ப்பு நாயின் உரிமையாளர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார் . 

vabuniya.jpg

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், 

இன்று பிற்பகல் வவுனியா செட்டிகுளம் கங்கன்குளம் 2 ஆம் பாம் வீதியிலுள்ள கிராம அலுவலகரின் வீட்டிற்குள் புகுந்த பக்கத்துவீட்டு உறவினரின் நாய் மீது குறிவைத்து குரங்குகள் சுடும் துப்பாக்கியைப்பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாகவும் இதனால் குறித்த நாய்க்கு வலிப்பு ஏற்பட்டு சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்துவிட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குறித்த கிராம அலுவலகரிடம் குரங்கு சுடும் துப்பாக்கி வைத்திருப்பதாகவும் அதனைப்பயன்படுத்தி நாய் மீது துப்பாக்கி  சூடு நடத்தியுள்ளதாக வளர்ப்பு நாயின் உரிமையாளர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

இவ்விடம் குறித்து செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/85070

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா செட்டிகுளம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வளப்பு நாய் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் கிராம அலுவலகர் ஒருவரை இன்று காலை கைது செய்த பொலிசார் அவரை மேலதிக விசாரணைகளின் பின்னர் பிற்பகல் வவுனியா நீதவான் நீதி மன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

IMG-0ece367e29add81146c5e3c9de91dad6-V.j

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

கடந்த வெள்ளிக்கிழமை மாலை செட்டிகுளம் பகுதியிலுள்ள குறித்த கிராம அலுவலகரின் வீட்டிற்குள் நுழைந்த பக்கத்துவீட்டு நாய் மீது அவர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதையடுத்து சம்பவ இடத்திலேயே வளர்ப்பு நாய் உயிரிழந்துள்ளது . 

IMG_20200707_155843.jpg

நேற்று முன்தினம் திங்கட்கிழமை கால்நடை வைத்திய அதிகாரியின் மருத்துவ சான்றிதழ் வளர்ப்பு நாய் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு இரத்தக்கசிவு ஏற்பட்டு வளர்ப்பு நாய் உயிரிழந்துள்ளதாக பொலிசாருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்து.

thota.jpg

இந்நிலையில் இன்று காலை இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகளை மேற்கொண்ட செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளின் பின்னர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் கிராம அலுவலகரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.

இதன் போது அவரை பிணையில் நீதிமன்றம் விடுவித்துள்ளதாகவும் குறித்த கிராம அலுவலரினால் துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்ட துப்பாக்கியை பொலிசார் நேற்று இரவு குறித்த கிராம அலுவலகரின் வீட்டிலிருந்து மீட்டுள்ளதாகவும் வளர்ப்பு நாயின் உரிமையாளர் மேலும் தெரிவித்துள்ளார் .

 

https://www.virakesari.lk/article/85425

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சமூக வலைத்தளங்களில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து நட்பு கொண்டாடும் எங்களுக்கு பக்கத்துவீட்டுகாரனுடன் சிநேகபூர்வமாய் வாழ முடியவில்லை. யதார்த்தம் சுடுகின்றது. 

  • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆகா .... நீங்கள் இலங்கை அரசியலில் பழைய அரசியலில் சொல்வதே, எனக்கு புது கதைகளாக இருக்கையில், பெரும் இந்திய தேசத்தின் அரசியலில் சொல்லும் கதைகள் நமபக்கூடிய வகையில் இல்லை. சரி... கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்கு தானே. நீங்கள் சொன்ன மாதிரியே சீமான் நடந்தால்..... தல, அப்புறம் நீங்கள் தல இல்லை.... தெய்வம்.... 
    • கோரோனோ மூக்கு, வாய் வழியாக உள்ளே நுழைய முற்படும்போது எமது உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் வாயுடேனேயே, தொண்டையுடேனேயே நின்றுவிடும். மிக அதிகளவு கிருமிகள் ஒரே நேரத்தில் நேருக்கு நேர் வந்தாலோ (அதிக கூட்டம் உள்ள இடங்களில் இது சாத்தியம்) அல்லது எதிர்ப்பு சக்தி அவ்வளவு போதாமல் இருந்தாலோ நுரையீரலுக்குள் போய்விடும். அங்குள்ள கலங்களில் தாம் இனம் பெருகி நுரையீரலை அழிக்கும்போது  மிகக்கூடிய எதிர்ப்பு சக்தி தேவைப்படுகிறது. இவ்வளவு செயல்களுக்கும் மருந்து ஒன்றுமே இல்லை. எமது உடல் மட்டுமே வெண்கலங்களை கொண்டு சண்டை போடமுடியும். அதற்கு விட்டமின் மட்டும் எடுத்தால் போதாது. பலவருடங்களாக நாம் வாழ்ந்த வாழ்க்கை முறையின், உணவு முறை, அறுவை சிகிச்சைகள், வயது, மது, சிகரெட், மரபணு கோளாறுகள், மன நிலைமை (அதிகம் கவலைப்பட்டு Stress ஆகியவர்களுக்கு தாக்கம் அதிகமாக இருக்கும்).  நான் இந்த கோரோனோ பிரச்சனை துடங்கின காலம் முதல் நிறய ஓர்கானிக் மஞ்சள், மிளகு, கீரை வகைகள், எல்லா பெரிகளும் சேர்ந்த தேன்  சேர்த்த ஸ்மூதி , மீன் இவைகளை அதிகம் உணவில் சேர்க்கிறேன். இப்பதான்  Ashwagandha என்று ஒரு பவுடர் வாங்கினேன். மற்றும்படி கண்டபாட்டுக்கு வைட்டமின் வகைகளை எடுப்பது தேவையற்றது சிலசமயம் ஆபத்தானது. இப்படி தாக்கப்பட்ட உடலில் ஆபத்தான பக்டீரியாக்கள் புகுந்து தமது வேலையை துடங்கும். இவற்றுக்குத்தான் மருத்துவ சிகிச்சை இருக்கிறது. எமது பாடகர்  இறந்தது போனதுக்கு அதிகப்படியான  காரணம் இந்த பக்க விளைவுகளால் தான். அவரது உடல் நிலை , வயது இந்த பக்க விளைவுகளின் தாக்கத்தையும் அதற்கு கொடுத்த மருத்துவ சிகிச்சைகளையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கவில்லை 
    • பாஸ் வாக்கு வங்கி அரசியலுக்கு மேலாக, தமிழர் தலைவர்களை நம்ப முடியாது என முஸ்லீம்களையும், முஸ்லிம் தலைவர்களை நம்ப முடியாது என தமிழர்களையும் எண்ண வைக்கும் உத்தி ஜே ஆருக்கு முதலே தொடங்கி விட்டது. சரி ஜேஆர் காலத்தில் தொடங்கியதோ, அதற்கு முதல் தொடங்கியதோ இப்படி ஒரு மறைமுக அரசியலை இலங்கை கொள்கை வகுபாளர் செய்தனர் என்பதை நீங்களும் ஏற்கிறீர்கள்தானே? 1. இதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லை தானே? 2. இப்படி ஒரு மறைமுக அரசியல் நகர்வை அமித்ஷா சீமானை வைத்து செய்கிறார் எனும் என்னிடம் மட்டும் எப்படி ஆதாரம் இருக்கும்?
    • உங்கள் தனிப்பட்ட கருத்தாயினும், பொதுவெளியில் பதியும் போது, வரும் கேள்விகளுக்கு பதில் தந்தால், நாமும் விவாதிக்கலாம் அல்லவா. சிலவேளை நாம் எமது கருத்துக்களை மாத்தவும் முடியும் அல்லவா.
    • இது என் தனிப்பட்ட கருத்து. அதை நான் குறிப்பிட்டும் இருந்தேன்.இதை நீங்கள் எற்க வேண்டும் என்ற தேவையும் கிடையாது.  ஒவ்வொருவருக்கும் ஒருவர் மீதான பார்வை வேறுபடலாம். அவர்கள் வாழ்ந்த சூழலும் அனுபவித்த வலிகளும் இதற்கான காரணமாக கூட இருக்கலாம். அரசியல் பற்றிய அறிவு எனக்கு கிடையாது. சாதாரண ஒரு பாமரனாய் இது என் கருத்து..
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.