• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
ஈழப்பிரியன்

சம்பந்தன் என்னுடைய நண்பர்.மட்டக்களப்பில் நேற்று நீதியரசர் விக்கினேஸ்வரன்இப்படித்தெரிவித்தார்.

Recommended Posts

சம்பந்தன் என்னுடைய நண்பர்.மட்டக்களப்பில் நேற்று நீதியரசர் விக்கினேஸ்வரன்இப்படித்தெரிவித்தார்.

July 3, 2020
0
19
 
 
 
 
DSCN2170-696x522.jpg

சம்பந்தன் என்னுடைய நண்பர். அவர்தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தார். ஆனால் அவருடைய பார்வை வித்தியாசமாக இருந்தது. அதனை நான் முன்பே கண்டுகொள்ளவில்லை. பின்னர்தான் கண்டுகொண்டேன் என்று முன்னாள் வடமாகாண முலமைச்சரும் ஓய்வு பெற்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னாள் வடமாகண முலமைச்சரும் ஓய்வு பெற்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் மட்டக்களப்பு கொம்மாதுறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
வட கிழக்கு மாகாணத்தின் ஏகோபித்த தலைவர் என்ற வகையில் சம்பந்தன் அவர்கள், கிழக்கு மாகாணத்தில் இருந்து வந்த ஒரு தலைவர் இவ்வாறானதொரு விடயம் நடைபெற இடம் கொடுத்துவிட்டார் என்பது மனதுக்கு பெரும் வேதனையாக உள்ளது.
சம்பந்தன் என்னுடைய நண்பர். அவர்தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தார். ஆனால் அவருடைய பார்வை வித்தியாசமாக இருந்தது. அதனை நான் முன்பே கண்டுகொள்ளவில்லை. பின்னர்தான் கண்டுகொண்டேன்.
நான் 2013ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்தேன். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய நல்லாட்சி அரசாங்கம் வந்தது. அப்பொழுது பெப்ரவரி 3ஆம் திகதி கொழும்பிலுள்ள என்னுடைய வீட்டிற்கு சம்பந்தன் அவர்களும் சுமந்திரன் அவர்களும் வந்தார்கள். கதைத்துவிட்டுச் செல்லும்போது தம்பி நாளைக்கு பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திரதின விழா. நான் அதிலே கலந்து கொள்கிறேன் நீங்களும் வருவீர்களா? என்று கேட்டார்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் சொன்னேன். நான் வரவில்லை. நீங்கள் போவதாக இருந்தால் செல்லுங்கள் என்றேன். இல்லை இல்லை. நாங்கள் இந்தக் காலகட்டத்தில் அவர்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டிய ஒரு அவசியம் இருக்கின்றது. ஆகவே இந்தச் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்கிறோம் என்று.
நான் அவர்களுக்குச் சொன்னேன். 1958ஆம் ஆண்டு கெடக் (சாரணர் ஆரம்ப நிலை) என்ற முறையிலே சுதந்திர தினவழாவில் பங்குபற்றினேன். அதற்குப்பின்னர் எந்தக் காலத்திலும் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் போது கூட நான் போகவில்லை. காரணம், எங்களுடைய சுதந்திரம் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று அன்றே சொன்னேன்.
இல்லை இல்லை. எங்களுக்கு இனி எல்லாம் கிடைக்கும். இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் எல்லாம் கிடைக்கும் என்று சொன்னார். அவருடைய மனதில் நம்பிக்கை இருந்தது, நான் அவரைக் குறை கூறவில்லை. அவருடைய பார்வையைச் சொன்னேன். தம்பிசுமந்திரனை வருவீர்களா என்று கேட்டவுடன் அவர் சரியென்றார். இரண்டுபேரும் மறுநாள் சென்றார்கள். நான் போகவில்லை.
இதனை எதற்காகக் கூறுகின்றேன். அவர்களுடைய பார்வை சற்று வித்தியாசம். அவர்களுடன் சேர்ந்து பயணித்தால் சிங்களத்தலைவர்கள் நாங்கள் கேட்பதைக் கொடுப்பார்கள் என்ற ஒரு எண்ணம் அவர்களிடமிருந்தது. அது ஒருபோதும் நடக்காது என்பது ஏற்கனவே நான் தெரிந்து கொண்டு வைத்திருந்த விடயம். ஏனென்றால் அவர்கள் கடந்த 100 வருடங்களாகத்திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி வந்த விடயங்களை அவர்கள் எவ்வாறு நாங்கள் நன்றாகப் பேசி பல் இழித்ததுடன் விட்டுக் கொடுக்கப்போகின்றார்கள். கொடுக்க மாட்டார்கள்.
ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனுடைய பார்வையினால், நோக்கினால், அவர்கள் என்ன விதமாகப் பிரச்சினையை அணுகியிருக்கிறார்கள் என்ற வழியிலேயே சென்று இதுவரை காலமும், கடந்த 5 வருடங்களாக எங்களுடைய மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்திவிட்டார்கள். வருங்காலப்பிரச்சினைகளை மிகைப்படுத்திவிட்டார்கள்.
ஆகவே அவர்களுக்கு நீங்கள் வாக்களிப்பதால் எந்த வித நன்மையையும்; கொண்டுவராது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட கட்சியை கடந்த 5 வருடங்களாக சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்.
கிழக்கு மாகாணத்தில் அதிகாரத்தினையும் கைவிட்டு 11 பேர் இருக்கும் போது 7பேர் இருந்த முஸ்லிம் காங்கிரசுக்கு அதிகாரத்தினைக் கொடுத்து அவர்கள் என்ன செய்தார்கள். தங்களுக்குத் தனிப்பட்ட வகையில் நன்மைகளைப் பெற்றுக் கொண்டு, தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிவதை செயற்படுவலதை மறந்துவிட்டார்கள். தங்களுக்கு நன்மைகள் கிடைத்தது என்றவுடன் அவர்களுக்கு வாக்களித்த மக்களை மறந்துவிட்டார்கள். எங்களுக்குக் கிடைக்கவேண்டியவைகள் தான் கிடைக்கப்போகின்றன என்ற அந்த எண்ணத்தில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.
ஆகவே கடந்த 5 வருடங்களில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் நிலை மிகவும் மோசமாக மாறிவிட்டது. நாங்கள் அதற்குரிய நடவடிக்கைகளை அப்போதே எடுத்திருக்க வேண்டும். ஆனால் காலம் தாழ்த்தி விட்டோம் என்றார்.

http://www.supeedsam.com/129897/

Share this post


Link to post
Share on other sites

அடேங்கப்பா.🤪🤪🤪

Share this post


Link to post
Share on other sites

உண்மை கடவுளையும் சுடும். தெரிந்துகொண்டேன். 🥴 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • அவர் மறைத்தார் என்பதனை நிரூபிக்க முடியுமா என்று தானே கேட்கிறோம். ஜோசப் விஜய் என்ற நடிகரின் ஆதார் கார்டினை தனது அதிகார தொடர்புகளை வைத்து எடுத்து இணையத்தில் வெளியிடட எச்ச ராஜா, தனது அரசியல் எதிரியான சீமானின் ஆதார் கார்டினை வெளியிட்டு இருக்கலாமே. கடந்த 2016 தேர்தலில் கடலூர் தொகுதியில் என்ன பெயரில் போட்டி இடுகிறார் என்று கண்கொத்தி பாம்பாக எதிரிகட்சிகள் கண்காணித்தன. கிறிஸ்தவ பெயரினால் வெளியிட்டு இருப்பார்களே.
    • நாளை மிக முக்கியமான இரண்டு சம்பவங்கள்  
    • தமிழகத்தில் இன்று 5,890 பேருக்குக் கரோனா: சென்னையில் 1,187 பேருக்குத் தொற்று   சென்னை தமிழகத்தில் இன்று மொத்தம் 5,890 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மீண்டும் தொற்று எண்ணிக்கை 1000-ஐ தாண்டியது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 3,26,245 -ல் சென்னையில் மட்டும் 1,14,260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,67,015 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 25 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 5,75,823. இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4703 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. * தற்போது 61 அரசு ஆய்வகங்கள், 73 தனியார் ஆய்வகங்கள் என 134 ஆய்வகங்கள் உள்ளன. இந்த நிலையில் பொது சுகாதாரத் துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு: * தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 53,716. * மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 35,69,453. * இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 70,153. * மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 3,26,245. * இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,890. * சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,187. * மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,96,744 பேர் பெண்கள் 1,29,472 பேர் மூன்றாம் பாலினத்தவர் 29 பேர் . * தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,518 பேர். பெண்கள் 2,372 பேர். * இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,556 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,67,015 பேர் . * இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 117 பேர் உயிரிழந்தனர். இதில் 34 பேர் தனியார் மருத்துவமனையிலும், 83 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 5,514 ஆக உள்ளது. இதில் சென்னையில் மட்டுமே 2,408 பேர் உயிரிழந்துள்ளனர். முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 105 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 12 பேர்''. இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. https://www.hindutamil.in/news/tamilnadu/569925-corona-bulletin-in-tamil-nadu-3.html  
    • நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப காவியமாம் காலத் திரையில் எழில் பொங்கும் கனக கருணை ஓவியமாம் நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப காவியமாம் காலத் திரையில் எழில் பொங்கும் கனக கருணை ஓவியமாம் தென்னை உயர பனை உயர செந்நெல் உயர்ந்து கதிர் பெருக மின்னும் தாழை மடல் விரியும் வேளாங்கண்ணி எனும் ஊராம் நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப காவியமாம் காலத் திரையில் எழில் பொங்கும் கனக கருணை ஓவியமாம் பூவின் மணமும் புதுவெயிலின் பொலிவும் சுமந்த இளம்தென்றல் ஆவும் கன்றும் அழைக்கின்ற அன்பு குரலில் விளையாடும் நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப காவியமாம் காலத் திரையில் எழில் பொங்கும் கனக கருணை ஓவியமாம் பொன்னேர் பிடித்த நல் உழவர் பூமித் தாயின் அருள் கொண்டார் தண்ணீர் இன்றி மீனவரும் தாவும் கடலின் நிதி கண்டார் நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப காவியமாம் காலத் திரையில் எழில் பொங்கும் கனக கருணை ஓவியமாம் தேனும் கலந்த தினைமாவும் தீரா இன்ப சுவை சேர மானின் விழியாம் மனைவேணி மாறா காதல் நெறி நின்றாள் நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப காவியமாம் காலத் திரையில் எழில் பொங்கும் கனக கருணை ஓவியமாம்    
    • இந்தத் தேர்தலில் சுமந்திரன் வென்று பாராளுமன்றம் போனார். கஜேந்திரன் தோற்றும் பாராளுமன்றம் போனார்!  இவைதான் வரலாறு.