Jump to content

உயர் நாற்காலிக்கு செல்வதை தடுக்க குழிபறிக்கும் கூட்டம்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உயர் நாற்காலிக்கு செல்வதை தடுக்க குழிபறிக்கும் கூட்டம்.!

fb_img_15938386247981363745057.jpg

ஐ.சி.சி தலைவர் பதவிக்கு சங்கக்கார தகுதியற்றவர் என்ற திலங்க சுமதிபாலாவின் அண்மைய கூற்று , சங்கக்கார ஒரு உயர் நாற்காலிக்கு செல்வதை தடுக்க திலங்க சுமத்திபால மற்றும் மஹிந்தானந்த இருவரும் இணைந்து ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் குழிபறிப்பில் செயல்படுவதாக உணர வைக்கிறது.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மஹிந்தானந்தாவின் சர்ச்சைக்குரிய அறிக்கை, கோவிட் -19 ஐ விட அதிக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வதேச அளவில் இலங்கைக்கு பெரும் அவமானம்.

ICC தலைமை நாற்காலிக்கு இலங்கை கிரிக்கெட் சபை சங்காவை முன்மொழிய இருக்கும் தருணத்தில் 2011 உலகக் கோப்பை காட்டிக்கொடுப்பு என அப்போதைய துணை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த, பேசும் பேச்சுகள் சந்தேகத்திற்குரியதொன்றாக பலராலும் அவதானிக்கப்பட்டது. அதற்கு பின்னால் உள்ள சதி முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் கங்குலியை இலங்கை ஆதரிக்கும் என்ற கருத்துகள் வெளியானதும் அந்த சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் மந்தநிலைக்கு காரணம், புக்கி பந்தயக்காரர்கள் கிரிக்கெட் நிர்வாகத்தை கையகப்படுத்தியதேயாகும். இலங்கை கிரிக்கெட்டை புக்கிகாரர்களால் காப்பாற்ற முடியவில்லை.

மஹிந்தானந்தவின் கேம் மக்கள் உணரத் தொடங்கியதை அறிந்ததும், புக்கி திலங்க சுமத்திபால ஒரு செய்தியாளர் கூட்டத்தை கூட்டி சங்கக்கார ஐ.சி.சி தலைவர் பதவிக்கு போட்டியிட முடியாது என்று கூறியுள்ளார். இந்த அறிக்கையின் பின்னால் ஒரு சதி உள்ளது அப்பட்டமாக தெரிகிறது.

மொட்டு கட்சியின் அபேட்சகர் விஜேதாச அல்லது டீல் தாசாவும் ஊடகங்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார், திலங்க இப்படி சொல்வதை பார்க்கும் போது இதன் பின்னணியில் ஒரு சதி உள்ளது போல் உள்ளது என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த சதித்திட்டத்தின் சிறந்த பகுதி என்னவென்றால், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது, துணை அமைச்சராக இருந்த மஹிந்தானந்தாவின் அறிக்கைகளைப் பெற சிறப்பு பொலிஸ் பிரிவு அமைச்சர் வீட்டிற்கு அனுப்பப்பட்டதும், உலக புகழ் பெற்ற கிரிகெட் வீரர்களை வீசேட பொலிஸ் பிரிவுக்கு விசாரணைக்கு அழைத்தமையும் , தற்போதைய நிர்வாகத்தின் கீழ், ஒரு நாட்டில் இரண்டு சட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றனவா என்று கூறுமளவுக்கு மக்களை கொதித்தெழ வைத்துள்ளது.

அழுகிய அரசியலுக்கு உட்படுத்தப்பட்ட சில ராஜபக்ஷ தேச சார்புடைய அடிமைகள், இப்போது ஒரு குட்டி அரசியல் குடும்பத்தை பாதுகாப்பதற்காக உலகப் புகழ்பெற்ற இலங்கையின் பெயரை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் சென்ற வீரர்களை அவமதிக்கத் தொடங்கியுள்ளனர்.

இருப்பினும், ஒரு விசாரணை தொடங்கியுள்ளது. இப்போது மஹிந்தானந்த அவர் சொன்ன அனைத்தையும் நிரூபிக்க வேண்டும். இல்லையெனில், புதிய விளையாட்டுச் சட்டத்தின் கீழ், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அப்படி நடக்குமா எனத் தெரியவில்லை. இறுதியில் அரசியல்வாதிகள் காப்பாற்றப்படுவார்கள். அதுதான் ராஜபக்ஷ கோட்பாடு.

எல்லா வகையிலும் நாட்டை அழிக்கும் ஆட்சியாளர்கள் இருக்கும் நாட்டில், உலகத்தை மதிக்கும் வீரர்களால் இலங்கையில் செய்யப்பட்ட அவதூறுகளை சர்வதேச சமூகம் கூட கண்டிக்கும்.

http://puthusudar.lk/2020/07/04/உயர்-நாற்காலிக்கு-செல்வத/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.