• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
புரட்சிகர தமிழ்தேசியன்

ஏன் எம்.ஏ.சுமந்திரன் இலவசமாக உதயன் நாளிதழ் வழங்கினார்.?

Recommended Posts

ஏன் எம்.ஏ.சுமந்திரன் இலவசமாக உதயன் நாளிதழ் வழங்கினார்..?

uthayan.jpg

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான எம்.ஏ. சுமந்திரன், உதயன் நாளிதழின் இன்றைய வெளியீட்டை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு இலவசமாக விநியோகித்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெறவுள்ளது.

FB_IMG_1593842095283.jpg

கூட்டத்துக்கு முன்னதாக அங்கு வந்திருந்தவர்களுக்கு வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன், உதயன் நாளிதழின் இன்றைய வெளியீட்டை இலவசமாக வழங்கி வைத்தார்.

"சுமந்திரனுக்கு வாக்களிக்கவேண்டாம்" என்று பிரதான தலைப்பிட்ட செய்தி உதயனில் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவர் இதனைச் செய்துள்ளார்.

https://www.vanakkamlondon.com/ஏன்-எம்-ஏ-சுமந்திரனின்-இல/

Share this post


Link to post
Share on other sites

நல்ல விளம்பரம் என்று நினைத்திருக்கலாம் 😀

Share this post


Link to post
Share on other sites
32 minutes ago, Kapithan said:

நல்ல விளம்பரம் என்று நினைத்திருக்கலாம் 😀

முன்னாள் போராளியின் வேண்டுகோள் சுமத்திரனுக்கு வாக்கு அளிக்க வேண்டாம் எனும் கோரிக்கை முதல்பக்கத்தில் வந்த காரணத்தினால் அந்த வேண்டுகோள்  பொதுமக்களிடம் போய்  சேர கூடாது எனும் நரித்தந்திரம் .

முதலே போடுவம்  என்று இருந்தன்  எதுக்கும் நீங்கள்  வழக்கம்போல் வந்து நையாண்டி பண்ணி ஒரு கருத்து இடுவீர்கள் என்று தெரியும் நன்றி கபிதான் .

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

"சுமந்திரனுக்கு வாக்களிக்கவேண்டாம்" என்று பிரதான தலைப்பிட்ட செய்தி உதயனில் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவர் இதனைச் செய்துள்ளார்.

ஏதாவது குறுக்கு வழியில் ஜெயிக்க முடியும் என நம்பிக்கை இருக்க வேணும் 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, பெருமாள் said:

முன்னாள் போராளியின் வேண்டுகோள் சுமத்திரனுக்கு வாக்கு அளிக்க வேண்டாம் எனும் கோரிக்கை முதல்பக்கத்தில் வந்த காரணத்தினால் அந்த வேண்டுகோள்  பொதுமக்களிடம் போய்  சேர கூடாது எனும் நரித்தந்திரம் .

முதலே போடுவம்  என்று இருந்தன்  எதுக்கும் நீங்கள்  வழக்கம்போல் வந்து நையாண்டி பண்ணி ஒரு கருத்து இடுவீர்கள் என்று தெரியும் நன்றி கபிதான் .

ஐயா பெருமாள்,

யாழ் களத்திலுள்ள எலோரையும் நான் நட்புடனேயே நோக்குகிறேன். ஒருவரியும் உயர்ந்தோர் என்றோ தாழ்ந்தோர் என்றோ நோக்குவதில்லை கொபமும்  பாராட்டுவதில்லை. இங்கே  எப்போதுமே சிறிய சகைச்சுவை உணர்வுடன்தான் கருத்துக்களைப் பதிவிடுவேன். எனவே எனது நகைச்சுவை உணர்வுடன் கூடிய பதிவுகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். 🙏

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

சுமந்திரன் உட்பட தமிழ் குட்டைமைப்பு  எங்கள் மககளுக்கு  ஒன்டும் பெற்று தரமாட்டினம்.இப்ப எமக்குதேவை பொருளாதர அபிவிருத்தியே.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • சீனாவுக்கே... திரும்ப கொரோனாவை,  ஏற்றுமதி செய்யும் பிரேசில்காரன்... கெட்டிக்காரன் தான். 😁
  • லெப். கேணல் நாகதேவன் பன்முகத் திறன்கள் கொண்ட லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தாக்குதல் தளபதி லெப். கேணல் நாகதேவன். “நவம்பர்” என்று போராளிகளால் அன்போடு அழைக்கப்பட்ட நாகதேவன், யாழ். மாவட்டம் மானிப்பாய், கட்டுடை கிராமத்தில் பிறந்தார். கெங்காரட்ணம் ரமேஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகதேவன் தனது ஆரம்பக் கல்வியை கட்டுடை சைவ வித்தியாலயத்தில் பயின்றார். தொடர்ந்து மானிப்பாய் இந்து கல்லூரியில் கல்வி கற்றார். பின்னர் தமிழீழ விடுதலைக்காகப் போராடும் உயரிய நோக்குடன் 1993ம் ஆண்டு ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். க.பொ.த. சாதாரண தர கல்வியை முடித்துக் கொண்டு இயக்கத்தில் இணைந்த கெங்காரட்ணம் ரமேஸ் படைய தொடக்கப் பள்ளியில் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்துக் கொண்டு நாகதேவன் என்ற இளம் போராளியாக கேணல் கிட்டு படையணியில் சேர்க்கப்பட்டார். பூநகரியை மீட்ட “தவளை” சமரில் தனது முதலாவது களப்பணியில் கால் பதித்தான் இளம் போராளி நாகதேவன். தொடர்ந்து யாழ். குடா நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடமையாற்றினான். பின்னர் மணலாற்றுக் காடுகளில் சிறிலங்கா இராணுவத்தினர் மீதான பல தாக்குதல்களில் தாக்குதலணியில் ஒரு போராளியாக நாகதேவன் களமாடினான். இவனுடைய கல்வியறிவு புதிய ஆயுதங்களை கையாளுவதில் இருந்த ஆர்வம் ஆகியவற்றால் பொறுப்பாளர்களால் பெரிதும் கவரப்பட்டு மோட்டார் அணியில் இவனை இணைத்தனர். 60 மி.மீ மோட்டார் சூட்டாளனாக திறம்பட செயல்பட நாகதேவன் விரைவிலேயே 81 மி.மீ. அணியில் இடம்பெற்றார். மோட்டாரை இயக்குவதில் தேர்ந்த சூட்டாளனாகவும் வரைபடக்காரனாகவும் விளங்கிய நாகதேவன் தனது களப்பணியைத் தொடர்ந்தார். 1995 ல் நாகதேவன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப படையணி யில் இணைக்கப்பட்டார். “ஓயாத அலைகள் – 01” முல்லைத்தீவு மீட்புச் சமரில் படையணியின் கனரக ஆயுத அணியில் சூட்டாளனாக செயற்பட்டார். இவருடைய கள அனுபவங்களும் போராளிகளை வழிநடத்தும் திறனும் இவரை செக்சன் லீடராக உயர்த்தின. 1997ல் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரில் செக்சன் லீடராக மிகத் தீவிரமாக நாகதேவன் களமாடினார். இச்சமரில் தனது இடுப்புப் பகுதியில் படுகாயமுற்ற நாகதேவன் இறக்குந்தறுவாயில் சக போராளிகளால் மீட்கப்பட்டு மருத்துவப் பிரிவு போராளிகளின் தீவிர சிகிச்சைகளால் காப்பாற்றப்பட்டார். சில மாதங்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் மோட்டார் அணியில் இணைந்து கொண்டார். “ஓயாத அலைகள் 02” கிளிநொச்சி மீட்புச் சமரில் 81 மி.மீ மோட்டார் சூட்டாளனாக அயராது களமாடிய நாகதேவன் படையணி போராளிகளிடையே பிரபலமான அணித்தலைவர்களில் ஒருவராக வளர்ந்தார். கிளிநொச்சி மீட்புச் சமருக்குப் பிறகு ஊரியான் பரந்தன் முன்னரங்கில் 81 மி.மீ மோட்டார் சூட்டாளனாக நாகதேவன் தொடர்ந்து கடமையாற்றினார். படையணியின் கனரக ஆயுதங்கள் ஒருங்கிணைப்பாளரும் இளம் தளபதியுமான மதன் அவர்களின் கட்டளையின் கீழ் எமது நீண்ட முன்னரண் வரிசையைப் பாதுகாப்பதில் நாகதேவன் மிகுந்த ஊக்கமுடன் செயற்பட்டார். படையினரின் புகழ்பூத்த கொம்பனிப் பொறுப்பாளர்கள் வீரமணி, நியூட்டன், இராசநாயகம், கோபித் முலானோருடன் சிறந்த ஒருங்கிணைப்பை பேணிய நாகதேவன் முன்னரண் இளம் அணித் தலைவர்களை திறமான ஓ.பி போராளிகளாக வளர்ப்பதில் பெரும் முயற்சி எடுத்தார். இந்நாட்களில் ஈழவாசன், தாவீதின், நிலான், மதி உள்ளிட்ட பல இளம் போராளிகளை மோட்டாரை இயக்குவதில் தேர்ந்தவர்களாக வளர்த்தெடுத்தார். 1999ம் ஆண்டு 8ம் மாதம் எதிரி பரந்தன் ஊரியான் பகுதியில் மேற்கொண்ட பாரிய படை நகர்வுக்கு எதிரான முறியடிப்புச் சமரில் தளபதி விமலன் அவர்களின் கட்டளையில் நாகதேவன் சிறப்புடன் செயற்பட்டு சிறப்புத் தளபதி ராகவன் அவர்களின் பாராட்டுக்களை பெற்றார். “ஓயாத அலைகள் 03” சமரில் ஒட்டுசுட்டான், மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம், பரந்தன் முதலான அனைத்து களமுனைகளிலும் மோட்டார் சூட்டாளனாக இடையறாது செயற்பட்டார். “ஓயாத அலைகள் 04” நடவடிக்கையில் “பாலா” மோட்டார் அணி லீடராக பொறுப்பேற்று கடமையாற்றினார். 2001ல் முகமாலை கிளாலி முன்னரங்கில் மோட்டார் அணி லீடராக கடமையைத் தொடர்ந்தார். இந்நாட்களில் படையணியில் 60 மி.மீ மோட்டார் அணிகளை உருவாக்கி பயிற்றுவித்ததில் நாகதேவன் பெரும் பங்காற்றினார். இளம் செக்சன் லீடர்களான சிலம்பரசன், வீரமறவன், இசைச்செல்வன், ஜெயசீலன், சாந்தீபன், யாழ்வேந்தன், கலைச்செல்வன், றமணன் முதலானோர் நாகதேவனுடன் இணைந்து சிறந்த சூட்டாளர்களாகவும் வரைபடக்காரர்களாகவும் “ஓ.பி.” போராளிகளாகவும் சிறப்புடன் செயற்பட்டனர். சக மோட்டார் அணிகளுடன் சிறந்த ஒருங்கிணைப்பை பேணுவதில் நாகதேவன் முக்கியத்துவம் அளித்தார். இவருடைய சக தோழன் வைத்தியை மோட்டாரில் பயிற்றுவித்து அவனை சூட்டாளனாகவும் வரைபடக்காரனாகவும் நாகதேவன் உருவாக்கினார். 2001 தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் இவருடைய” பாலா ” அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு தாக்குதலணி போராளிகளுக்கு பெரும் வெற்றியை ஈட்டித் தந்தது. இச்சமரில் மகளிர் போராளிகளின் மோட்டார் அணியொன்று எதிரியின் சுற்றிவளைப்புக்கு உள்ளான போது, நாகதேவன் உடனடியாக துணைத் தளபதி கோபித் அவர்களின் கட்டளையைப் பெற்று தனது மோட்டாரை பின்பக்கமாக திருப்பி மகளிர் போராளிகளுக்கு ஆதரவாக செறிவான சூடுகளை வழங்கினார். சிங்கள இராணுவத்தினரின் முற்றுகையை உடைத்து மகளிர் போராளிகளை பாதுகாப்பாக வெளியேற்றிய இம் முக்கிய சமரில் நாகதேவனின் செயற்பாடு அளப்பரியதாக இருந்தது. தொடர்ந்து நடந்த சண்டையில் இவருடைய சக தோழர்களான றமணனையும் வைத்தியையும் நாகதேவன் சிறப்பாக வழிநடத்தினார். இவருடைய அணியிலிருந்த பல போராளிகள் காயமடைந்த நிலையில் இவருக்கு உதவுவதற்காக வந்த மகளிர் போராளிகளை சிறப்பாக நெறிப்படுத்தி தொடர்ந்து களமாடி இச்சமரின் வெற்றிக்கு வழிகோலினார். இதற்காக தேசியத் தலைவரிடம் பாராட்டையும் சிறப்புச் சான்றிதழையும் வைத்தியும் நாகதேவனும் பெற்றுக் கொண்டனர். 2002ம் ஆணடு போர் நிறுத்த காலத்தில் நாகதேவன் பயிற்சித் தளங்களில் செயற்பட்டார். பல இளம் போராளிகளை மோட்டார் அணியில் பயிற்றுவித்த நாகதேவன், தொடர்ந்து தாக்குதல் அணியில் பிளாட்டூன் லீடராக கடமையேற்றுச் செயற்பட்டார். மட்டக்களப்பில் துரோகி கருணாவுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் தளபதி கோபித் அவர்களின் பொறுப்பின் கீழ் நாகதேவன் பிளாட்டூன் லீடராக தீரமுடன் களமாடினார். இவருடைய சக தோழர்களான செங்கோலன், தென்னரசன் ஆகியோரும் இந்நடவடிக்கையில் பிளாட்டூன் லீடர்களாக களமிறங்கி போராடினர். மட்டக்களப்பு நடவடிக்கைக்கு பிறகு வன்னிக்கு திரும்பிய நாகதேவன் மீண்டும் பயிற்சி தளங்களில் நின்று தாக்குதல் தளபதியாக பல்வேறு கடமைகளில் செயலாற்றினார். 2006ம் ஆணடு 8ம் மாதம் முகமாலை களமுனையில் எமக்கும் சிறிலங்கா இராணுவத்திற்கும் இடையே போர் மூண்ட போது நாகதேவன் தாக்குதல் தளபதியாக சிறப்புத் தளபதி கோபித்தின் கீழ் நின்றிருந்தது தாக்குதலணிகளுக்கு தளங்களை அமைப்பதிலும் கனரக ஆயுத போராளிகளை பயிற்றுவித்து ஒருங்கிணைப்பதிலும் ஈடுபட்டார். இச்சமரில் ஓகஸ்ட் மாதம் 13ம் நாள் எதிரியின் தொடர் காவலரண்களை தாக்கிக் கைப்பற்ற நாகதேவன் கடுமையாக சமராடினார். இவ் வீரம்மிக்க நடவடிக்கையில் எதிரியின் பகுதிக்குள் முன்னேறிய நாகதேவன் அங்கே படுகாயமுற்று வீரச்சாவைத தழுவிக் கொண்டார். தமிழீழ தாயக விடுதலைக்காக இறுதி மூச்சு வரை போராடிய லெப். கேணல் நாகதேவன் அமைதியான இயல்பும் தொலை நோக்கும் பொறுப்புணர்வும் மிக்க போராளியாக, தனது போராட்ட வாழ்க்கை முழுவதும் களமுனைகளிலேயே செயற்பட்ட ஒப்பற்ற போராளியாக திகழ்ந்தார். போராளிகளிடையே சகோதரத்துவ உறவைப் பேணி அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக விளங்கினார். இயக்கத்தில் பல்துறை சார்ந்த செயற்பாடுகளில் அவர் முன்னோடியாக ஊக்கமுடன் செயற்பட்டார். தனது சிறப்பான செயற்பாடுகளுக்காக தளபதிகளாலும் எமது தேசியத் தலைவராலும் பலமுறை பாராட்டுக்களைப் பெற்ற போராளியாக நாகதேவன் விளங்கினார். “நவம்பர்” என்று போராளி களால் அன்போடு அழைக்கப்பட்ட லெப். கேணல் நாகதேவன் அவர்களின் துணிவும் பொறுப்புணர்வும் வீரமும் தமிழீழ வரலாற்றில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” நினைவுப்பகிர்வு: பெ.தமிழின்பன். நன்றி: லெப்.சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி (முகபுத்தகம்).   https://thesakkatru.com/commander-lieutenant-colonel-nagathevan/
  • லெப். கேணல் தியாகன் தமிழீழ போரியல் வரலாற்றில் அதிகளவான கடற் சமர்களின் கதாநாயகனாக விளங்கிய ‘கடற்புலிகளின் சாள்ஸ் படையணி பொறுப்பாளன்’ லெப். கேணல் தியாகன். 1991ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடர்ச்சியாக மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்புக்கள் இராணுவத் தாக்குதல்கள் காரணமாக விடுதலைப் புலிகளமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட தியாகன். கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சி முகாமான மாவீரரான மேஜர் யப்பான் நினைவாக அவரது பெயரில் உருவான ‘யப்பான் 02’ல் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்து; மேலதிக பயிற்சிக்காக கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிக்கு செல்கிறான். அங்கு படிப்பிலும் விளையாட்டிலும் குறிப்பாக தொலைத்தொடர்பு சம்பந்தப்பட்ட வகுப்பிலும் சிறந்து விளங்கினான். அத்தோடு தொலைத்தொடர்பு சம்பந்தமான வகுப்பில் அதன் ஆசிரியர்மாரை கேள்விகள் கேட்டு தனது சந்தேகத்தை தீர்த்துக்கொள்வான். தொலைத்தொடர்பு சம்பந்தமாக இவனுக்குள்ள ஆர்வத்தை அறிந்த கடற்புலிகளின் துணைத் தளபதி பிருந்தன் மாஸ்ரர் இவனை சண்டையாகிலும் சரி, விநியோக நடவடிக்கையாகிலும் சரி கடற் கண்காணிப்புக்காகிலும் தொலைத்தொடர்பு நிலையத்திற்க்கு இவனையும் அழைத்துச் செல்வார். அங்கு ராடரில் படகுகளை எவ்வாறு துல்லியமாக இணங்கானுவது அதாவது எதிரியின் படகு எது கடற்புலிகளின் படகு எது என்பது போன்ற இப்படியாக தொலைத்தொடர்பு சம்பந்தமான அறிவைப் பெற்ற தியாகன் பின்னர் தொலைத்தொடர்பு நிலையத்தில் நின்று செயற்பட்டான். தொடர்ந்து விநியோக மற்றும் கடற்சண்டைகளில் தொலைத்தொடர்பாளனாக சென்று வந்துகொண்டிருந்தான். பின்னர் ஒரு சண்டைப்படகின் கட்டளை அதிகாரியானான். தொடர்ந்து மன்னார் மாவட்ட கடல் நடவடிக்கை மற்றும் கடல் சண்டைக்காக ஒரு தொகுதி படகுகள் அங்கே அனுப்பப்பட்டபோது இவனது படப்படியான வளர்ச்சிகளை நன்கு அவதானித்த சிறப்புத் தளபதி சூசை அவர்களால் சண்டைப் படகுகளின் தொகுதி கட்டளை அதிகாரியாக நியமிக்கப்படுகிறான். “ஒயாத அலைகள் 03” நடவடிக்கையில் யாழ். கிளாலி நீரேரியில் கடற்படையினருக்கெதிரான தாக்குதலில் பெரும்பங்காற்றி ஆனையிறவு மீட்புச் சமருக்கு பலம் சேர்த்தான். அத்தோடு நின்று விடாமல் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தை மீட்கும் சமருக்கு தரைத்தாக்குதலனிக்கு உதவியாக பெரும் பங்காற்றினான். அதன் பின்னர் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் 16.09.2001 அன்று இடம்பெற்ற வலிந்த தாக்குதலில் நிலமையை மாற்றி அமைத்த பெருமை தியாகனையே சாரும். கடலில் இடம் பெற்ற பெரும்பாலான விநியோகப் பாதுகாப்புச்மராகிலும் சரி வலிந்த கடற்சமராகிலும் சரி தொகுதிக் கட்டளை அதிகாரியாகச் செவ்வனவே பணியாற்றினான். ஈழப்போர் நான்கில் கடற்புலிகளின் கடற்தாக்குதல் தளபதியாக நியமிக்கப்படுகிறான். அதன் பின்னர் கடற்தாக்குதலில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர எண்ணியவன் சிறப்புத் தளபதி மற்றும் கடற்சண்டை அநுபவமுள்ள போராளிகளோடு ஆலோசித்து சிறிய படகுகளைக் கொண்ட தொகுதியை உருவாக்கி கடற்கரும்புலிகளையும் அழைத்துச் சென்று எதிரியை அவனது இடத்திற்கே பலநாட்களாகச் தேடிச்சென்று அவனது நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்தவன் . பலவெற்றிகரத் தாக்குதல்களை செவ்வனவே வழிநடாத்தியவன். பல இக்கட்டான கடற்சமரில் படகுகளைப் பிரியவிடாமல் அவர்களை தனது அநுபவங்களைக் கொண்டும் கடற்தாக்குதல் தளபதிகள் எவ்வாறு இக்கட்டான நேரங்களில் செயற்பட்டார்களோ அப்படிச் செயற்பட்டு அவ் இக்கட்டான நிலைகளிலிருந்து மீண்டு எதிரிக்கு எதிராக பழைய வேகத்துடன் படகுகளை ஒன்றாக்கி தாக்குதல் நடாத்திய ஒருதளபதி. மூத்த போராளிகளுக்கு மரியாதை கொடுத்து கதைக்கிற பன்பு அவர்களின் அநுபவங்களைக் கேட்டறிவதில் இருந்த ஆர்வம். போராளிகளுடன் பழகுகிற விதம்.இப்படியாக தியாகனைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். மூத்த தளபதி சொர்ணம் தலைமையிலான ஒரு தொகை போராளிகளை திருகோணமலையிலிருந்து வன்னிக்கு அழைத்து வருவதற்கான திட்டம் தலைவர் அவர்களால் கடற்புலிகளுக்கு வழங்கப்படுகிறது. அதனுடன் ஒரு அறிவித்தலும் வழங்கப்பட்டது அதாவது ஒரு பாரிய அணி திருகோணமலையிலிருந்து வன்னிக்கு செல்லப் போகிறது. என எதிரியானவன் தனது அதிகாரிகளுக்கு செய்தி அனுப்பியதை விடுதலைப் புலிகளின் ஒட்டுக் கேட்கும் அணியினரால் தெரிவிக்கப்பட்டது. அப்படியான சூழலில் தான் இவ்விநியோக நடவடிக்கை இடம்பெற்றது இவ் விநியோகப் பாதுகாப்புச் சமர் லெப். கேணல் தியாகன் தலைமையிலேயே இடம்பெற்றது விநியோகத்தில் வருபவர்களுக்கு எதுவும் நேரக்கூடாது என்ற தலைவர் அவர்களின் கருத்திற்கிணங்க விநியோக அணிகளுக்கு பாதுகாப்பு வழங்கி எதிரியின் பாரியதொரு கடற்கலங்களுக்கெதிரான கடற்சமரில் படகுகளைப் பிரியவிடாமல் கடற்படையின் கலங்களை விநியோபடகுகளிற்க்குச் செல்லவிடாமல் கட்டளைகளை தெளிவாக வழங்கி இறுதிவரை போராடி 13.08.2007 வீரச்சாவடைகிறான். கடற்புலிகளைப் பொறுத்தளவில் தியாகனின் இழப்பென்பது ஒரு பாரிய இழப்பாகுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை. தியாகனின் சகோதரியும் இவ்விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்திருந்தார். நீள்வானம் போன்று இவர்களது தியாகம் என்றும் எங்கள் மண்ணில் நிலைத்திருக்கும். என்றும் நினைவுகளுடன் அலையரசி. https://thesakkatru.com/sea-tigers-lieutenant-colonel-thiyakan/
  • நல்லூர் கந்த சுவாமி கோவில் வீடியோக்கள் 20ம் நாள் மாலைசந்தானகோபாலர் உற்சவம்  
  • 😂🤣; ஓ அப்படியா, என்னால முடியாதப்பா இப்படி படுத்து எழும்ப நல்ல குறட்டைவிட்டு 8 மணித்தியாலத்துக்கு மேல் படுத்திருப்பேன்