Jump to content

மக்கள் மன்ற நிகழ்வில் மஸ்தானுடன் முறுகல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் மன்ற நிகழ்வில் மஸ்தானுடன் முறுகல்

IMG_20200704_171539.png?189db0&189db0

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் குழப்பகரமான நிலை ஏற்பட்டது.

வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்கும் கட்சிகளின் வேட்பாளர்கள் சிவில் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஆரம்பத்தில் நெறியாள்கை செய்த வி.எஸ்.சிவகரன் சிவில் பிரதிநிதிகளாக கலந்துகொண்டுள்ள சின்மயா மிசன் சுவாமி தவத்திரு வேலன் சுவாமி, பல்கலைக்கழக மாணவன் வி.சாரங்கன், சமூக ஆர்வலர் செ.சுதாகரன் ஆகியோரும் வேட்பாளர்களாக கலந்துகொண்ட காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், ப.உதயராசா, சிவ.கஜேந்திரகுமார் ஆகியோர் மாத்திரமே கருத்துக்களை முன்வைப்பார்கள் என தெரிவித்திருந்தார்.

இதன்போது கருத்துக்களை முன்வைக்க அனுமதியளிக்கப்பட்டவர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தபோது சிவகரனால் இடையிடையே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அனைத்து தரப்பினரும் உரையாற்றி இறுதியில் காதர் மஸ்தான் உரையாற்றி முடிந்தபோது சிவகரனால் கேள்விகள் கேட்கப்பட்ட பின்னர் பார்வையாளர்களாக இருந்தவர்கள் மத்தியில் இருந்து தமிழ் மக்கள் கூட்டணியின் முன்னாள் வவுனியா மாவட்ட அமைப்பாளர் மஸ்தானை நோக்கி கேள்விகளை கேட்டார்.

மக்கள் கேள்வி கேட்பதற்கு அனுமதி இல்லை என தெரிவித்திருந்த நெறியாளர் இதன்போது அமைதியாக இருந்து அவருக்கு அனுமதி அளித்திருந்தார்.

குறித்த நபர் மஸ்தானை நோக்கி காணாமல் போனோர் விடயம் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக கேள்விகளை கேட்டபோது மஸ்தான் அதற்கு பதிலளித்திருந்தார்.

அடுத்து ஒரு முஸ்லிமாவது தமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் இனவாதம் பற்றி பேச்சே வராது என தெரிவித்து தனது கேள்வியை தொடர முட்பட்டபோது காதர் மஸ்தானுடன் வந்தவர்கள் இனவாத கருத்தை முன்வைக்கின்றனர் என நெறியாளரிடம் தமது முறைப்பாட்டை முன்வைத்தார்கள்.

இதன்போது மேலும் சிலர் மஸ்தானை நோக்கி கேள்வி எழுப்பியபோது நெறியாளர் அனைவரையும் அமைதி காக்குமாறு தெரிவித்தாலும் குழப்பம் அதிகரித்து எவரையும் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதன்போது காதர் மஸ்தானின் ஆதரவாளர்களுக்கும் சிறி டெலோ கட்சியின் ஆதரவாளர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்படும் நிலை உருவாகியதுடன் சிறி டெலோ கட்சியின் இளைஞரணி தலைவர் மஸ்தானின் ஆதரவாளர்களை நோக்கி கைகளை உயர்த்தியவாறு சென்றிருந்ததுடன் அங்கிருந்த மேலும் இருவருக்கிடையிலும் முரண்பாடு ஏற்பட்டபோது நெறியாளராக செயற்பட்ட சிவகரன் இருவரையும் கைகலப்பில் ஈடுபடாதவகையில் செயற்பட்டு பிரச்சனையை சுமூகமாக்கியிருந்தார்.

 

https://newuthayan.com/மக்கள்-மன்ற-நிகழ்வில்-மஸ/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.