Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Saturday, July 4, 2020

குற்றம் 1

----------+-++----

அன்று குடும்ப நீதிமன்றிற்கு காலை 10.20 மணிக்கு 74வது இலக்க அறைக்கு அழைக்கப்பட்டிருந்தேன்.
 
24.12.2015 என்மீது நிகழ்த்தபட்ட வன்முறைக்கு எதிராக காவல்துறையினரால் வழக்கு பதியப்பட்ட வழக்கு விசாரணை நாளது.
 
 திருமதி.ஆனந்தா அவர்கள் 24.12.2015 அன்று நள்ளிரவு ஈடார் ஓபஸ்ரைன் மலைக்கோட்டை தேவாலயத்திற்கு தனது காதலருடன் போய் வந்திருந்தார்.
 
அதனால் கோபமுற்ற அவரது கணவர் அவரை விசாரித்தார். அவர்கள் இருவரும் கோவிலுக்குப் போய் வந்ததை நானும் பார்த்தேன். அன்று கணவர் திருமதி.ஆனந்தா அவர்களை அடிக்கவில்லை. எதுவும் துன்புறுத்தவில்லை.
 
அன்று பிள்ளைகள் இருவரும் வீட்டில் இருக்கவில்லை. முற்கூட்டியே பிள்ளைகளின் நண்பர்கள் வீட்டுக்கு திருமதி.ஆனந்தா பிள்ளைகளை அனுப்பி விட்டிருந்தார்.
 
சாட்சியாளர்
பா.மோ.ராணி.
 
பா.மோ.ராணியின் கையெழுடுத்தோடு எதிர்த்தரப்பு வழக்கறிஞர் அச் சாட்சிக் கடதாசியை நீதிபதியிடம் கையளித்தார். 
 
பா.மோ.ராணியின் சாட்சிக் கடிதத்தை என்னிடம் தந்தார் எனது சட்டத்தரணி. 
 
எனது பதிலை நீதிபதி எதிர்பார்த்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.  கோபம் தான் வந்தது. இரண்டு சட்டத்தரணிகள் நீதிபதி நீதிபதியின் உதவியாளர் முன்னிலையில் அவமானத்தால் குறுகிப்போனேன்.
 
இல்லாத ஒரு காதலனை எனக்கு உருவாக்கி அவனும் அவனது காதலியும் என்னைப் பழிவாங்குவதை எப்படி மறுப்பதெனத் தெரியாமல் திண்டாடினேன்.
 
பா.மோ.ராணி யார் ? எனது சட்டத்தரணி கேள்வியெழுப்பினார். எதிரில் இருந்தவன் என்னைப் பார்த்ததை கவனித்தேன்.
மறுபடியும் எனது சட்டத்தரணி கேட்ட போது அவன் சொன்னான். 
அவ எனது தோழி.
தோழியென்றால் ?
 
அவன் அதற்கான பதிலை சரியாகச் சொல்ல மறுத்து தன் கதையை வேறுபக்கம் திருப்பினான்.
 
பிள்ளைகளுக்கு இவளைப் பற்றித் தெரியாது இவள் ஒரு நடத்தை கெட்டவள். பிள்ளைகளை கூப்பிடுங்கோ நீதிமன்றம். நான் இவளது உண்மையான குணத்தை பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டும்.
 
இவளுக்கு கனக்க கள்ளக்காதல்கள் இருக்கு. எனக்குத் தெரியும். நான் ஒரு ஊடகவியலாளன். 
 
யூரோப்பியன் நியூஸ் ஏஜென்சி நிறுவனத்திற்கு பணம் செலுத்தி பெற்ற ஊடகவியலாளர் அடையாள அட்டையை எடுத்து மேசையில் வைத்தான்.
 
ஐநா சபைக்கு போயிருந்த பலர் அந்த ஊடகவியலாளர் அடையாள அட்டையைக் கொழுவியிருந்ததை கண்டிருக்கிறேன். 
 
வெளியில் இருந்து பார்க்கும் சாதாரண மக்கள் அந்த அடையாள அட்டையை பெரும் தகுதியாகவும் அதை கொழுவியிருப்போரை தகுதி மிக்கவர்களாகவும் நினைப்பார்கள்.
 
யூரோப்பியன் நியூஸ் ஏஜென்சி நிறுவனத்தில் யாரும் ஊடகவியலாளர் என விண்ணப்ப படிவத்தை நிரப்பியனுப்பினால் அவர்களுக்கு அந்த நிறுவனம் அடையாள அட்டையை வழங்கும்.
 
அவர்கள் குறிப்பிடும் பணத்தை அனுப்பி வைத்தால் அழகான வடிவமைப்பில் ஊடகர் அடையாள அட்டை கிடைக்கும்.
 
ஊடகரா ? என்பதற்கான எந்த தகுதியையும் அந்த நிறுவனம் ஆராய்ந்ததை நான் அறியவில்லை.
 
அவன் எடுத்துக் காட்டிய அந்த அடையாள அட்டையை யாரும் கணக்கில் எடுக்கவில்லை.
 
அவன் தனது முறிந்த டொச்சில் சொல்லிக் கொண்டு வந்தான்.
நான் 8மணிநேரம் வேலை செய்கிறேன்.
 
6மணித்தியாலம் தான் வேலை செய்யிறாள். என்ர உழைப்பில தான் வாழ்ந்து கொண்டு எனக்கு பிரச்சனை தாறாள்.
 
நீதிபதி தனது குரலை உயர்த்தினார். பிள்ளைகளுக்கும் உங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கும் சம்பந்தம் இல்லை. உங்களிடம் கேட்ட கேள்விக்கு பதிலை தாருங்கள்.
 
பா.மோ.ராணி எனது தோழி. அது எனது தனிப்பட்ட விடயம். அதைத்தவிர அவன் எதையும் சொல்லவில்லை.
 
பா.மோ.ராணியும் அவரும் சேர்ந்து வாழ்கிறார்கள். 
ஒரே ஒரே அறையில் ஒரே கட்டிலில் தான் உறங்குவார்கள். தங்கள் பொழுதைக் கழிப்பார்கள். பயணங்கள் போவார்கள். 
 
21.12.2015 அன்று 130கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் தன் காதலியை அவரது வீட்டுக்குப் போய் கூட்டி வந்திருந்தார்.
 
எனக்கு காதலர்கள் யாரும் இல்லை. பிள்ளைகள் இருவரும் மட்டுமே என் உறவுகள். நான் எனது காதலருடன் மலைக்கோட்டை தேவாலயம் போய் வந்தேன் என்பது பொய்.
 
24.12.2015 அன்று மகன் வீட்டில் இருந்தான். மகள் வருடாவருடம் நத்தார் தினத்தை முன்னிட்டு அவளது தோழியின் வீட்டுக்குச் செல்வது வளமை. அன்று அவளை நானே கொண்டு போய் விட்டுவிட்டு வந்தேன். 
 
அன்று இரவு ஏழுமணி போல் குசினியில் மகனுக்காக சமைத்துக் கொண்டிருந்தேன். தனியே நிற்கும் போது வாசல் கதவைப் பூட்டிவிட்டு நிற்பேன். பிள்ளைகள் நின்றால் கதவைப் பூட்டுவதில்லை. அன்று நான் வாசல் கதவைப் பூட்டவில்லை.
 
அவன் என்றும் போல அன்றும் குடித்திருந்தான். திடீரென எனது வாசல் கதவு அடித்து சத்தம் கேட்டது. அதற்கிடையில் அவன் குசினிக்குள் வந்திருந்தான். பின்னால் அவரது காதலியும் நின்றிருந்தார். 
 
குசினிக்கதவை அவன் அடித்த சத்தம் என்னால் நிதானிக்க முதல் என்மீது அடிவிழுந்தது.
 
நான் அவனைத் திருப்பியடித்தேன். 
விடு வா வா... என அவனை அவனது காதலா அவர்களது வீட்டுக்கு அழைத்துப் போனாள்.
 
உவளை இண்டைக்கு கொல்லாமல் விடுறேல்ல. அவன் காதலியின் சமாதானத்தைக் கேட்காமல் என்னைத் தாக்க எத்தனித்துக் கொண்டு இருந்தான்.
 
மகன் பயந்து போய் நின்றான். ஓண்டுமில்லை செல்லம் நீங்க போய் படியுங்கோ. 
 
நீங்களும் வாங்கோ மேல. 
 
மகன் என்னையும் அழைத்தான். மகனோடு நானும் மேலே போய் கதவைப் பூட்டிக் கொண்டிருந்தோம்.
 
சற்று நேரத்தில் அவரது காதலியின் அழுகைச் சத்தம் கேட்டது. எனது பெயரைச் சொல்லி அவள் அழைத்தான். பொருட்கள் உடையும் சத்தம் கேட்டது. நான் கீழிறங்கிப் போனேன்.
 
அவனது வீட்டுக் கதவின் மேற்பகுதியின் கண்ணாடியின் ஒரு பகுதி உடைந்திருந்தது. அவனது கை காயமாகியிருந்தது. தானே தனது வீட்டு வாசல் கதவின் கண்ணாடியை உடைத்ததில் அக்காயம் ஏற்பட்டிருந்தது. அவன் என்னைத் தூசண வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தான்.
 
அவன் என்னைத் தாக்க உன்னிக் கொண்டு வந்தான். காவல்துறையை அழைத்து நானே தன்னைக் காயப்படுத்தியதாக சொல்லப் போவதாகக் கத்தினான். அவனது காதலி அவனது கையிலிருந்து இரத்தம் வழிவதை பார்த்து அழுது கொண்டிருந்தாள். அவளது அழுகை பாவமாயிருந்தது.
 
அவனது காயத்திற்கு துணியொன்றை எடுத்து அவளிடம் கொடுத்தேன்.
 
மருத்துவமனை அழைத்துப் போகிறேன் என அவனது காதலியிடம் கேட்டேன். அவன் வருமறுத்தான். என்னை கொன்று விடுகிறேன் என சத்தமிட்டான். அதற்கு மேல் நான் அவ்விடத்தைவிட்டு விலகி மேலேயுள்ள எனது வீட்டுக்குள் போயிருந்தேன்.
 
யாரின் முன்னாலும் அழாமல் இருக்கும் என்னால் அந்த நேரம் வந்த அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டேன். 
 
சட்டத்தரணி என் கைகளைப்  பிடித்தார். அழாதை. அதுதான் முதல்முதலாக அன்னியர்கள் முன்னால் நான் அழுத முதல் கண்ணீர்.
 
வீட்டுவேலைகள் செய்வது பிள்ளைகளை பராமரிப்பது எல்லாம் நீங்களா வீட்டில் செய்வீர்கள் ? 
நீதிபதி அவனைக் கேட்டார்.
 
அது என்ர வேலையில்லையே அது அவவின்ன கடமைதானே? நளினமாகச் சிரித்தான் அவன்.
 
அதுக்கு நீ சம்பளம் எவ்வளவு மாதம் குடுக்கின்றாய் ? எனது சட்டத்தரணி குறுக்கிட்டார்.
 
வீட்டுவேலைக்கு என்ன சம்பளம் ? எதிர்வாதி சட்டத்தரணி அவனை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
 
உனது பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் எத்தனையாம் வகுப்பு படிக்கிறார்கள் என்பது தெரியுமா ? 
 
எனது சட்டத்தரணி கேள்விகளைக் கேட்க அவன் பதில் சொல்ல முடியாது திணறத் தொடங்கினான்.
 
நீதிபதி மார்ச் மாதம் அடுத்த தவணையைக் குறித்துக் கொண்டார். எழுத்து மூலம் அடுத்த தவணைக்கான அறிவிப்பு வருமெனச் சொன்னதோடு அன்றைய விசாரணை முடிந்தது. 
 
எனது சட்டத்தரணி தன்னை சந்திக்க வருமாறு அடுத்து வந்த திங்கட்கிழமை நேரமொன்றைக் குறித்துத் தந்துவிட்டு விடைபெற்றுக் கொண்டு போனார்.
 
3வது மாடியிலிருந்து கீழிறங்கும் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தேன். அங்கங்கே படிகளில் பலர் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள். எல்லா முகங்களும் என்னையே பார்ப்பது போல அவமானத்தின் மனவுளைவை மென்றபடி இறங்கி வாசலுக்கு வந்தேன்.
 
வெளிச்செல்லும் கதவு திறக்கப்படாமல் இருந்தது. கண்ணாடி அறையில் இருந்த பாதுகாப்பு காவல்துறையிருக்கு சைகையால் கதவு திறக்குமாறு கேட்ட போது அவர்கள் கதவைத் திறக்கும் தானியங்கி பட்டினை அழுத்தினார்கள்.
 
வெளியில் வந்தேன். அவனும் அவனது சட்டத்தரணியும் காருக்குள்ளிருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள். எனது காருக்குள் ஏறியிருந்து அவர்களைப் பார்த்தேன் அவர்கள் என்னைப் பார்ப்பது தெரிந்தது.
 
வீட்டுக்கு போகப் பிடிக்கவில்லை. 5கிலோமீற்றர் தொலைவில் இருந்த மக்டொனால்ஸ் ஒன்றுக்குப் போனேன். கோப்பியொன்றை வாங்கிக் கொண்டு போய் இருவர் அமரும் இடத்தில் போயிருந்தேன். காலையுணவு நிறைவுக்கு வர 10 நிமிடங்கள் இருந்தது.
 
கோப்பியை ஒவ்வொரு மிடறாகக் குடித்தபடி என்மீது புனையப்பட்ட பொய் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். அவனது காதலிக்கு தொலைபேசியெடுத்தேன்.
 
எனக்கு காதலன் ஒருத்தன் இருக்கெண்டு சாட்சிக் கடிதம் குடுத்திருக்கிறாயெல்லோ ? அவன் யாரெண்டு சொல்றியா ?
 
உன்னோடை எனக்கு கதைக்க விருப்பமில்லை வையடி ரெலிபோனை. அவள் எனது அழைப்பை நிராகரித்துவிட்டாள்.
 
மீண்டும் அழைத்தேன். அவள் என் அழைப்பை ஏற்கவில்லை. இதுக்காக ஒருநாள் நீ அழுவாய். என குறுஞ்செய்தியனுப்பினேன்.
 
அடுத்து வந்த நாட்கள் ஒவ்வொன்றும் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. என்னைக் கடந்து போகின்ற போது அவன் திமிராக என்னை வென்ற மிதப்பில் கடந்து போவதைப் பார்க்கும் நேரமெல்லாம் காதைப்பொத்தி குடுக்க வேணும் போலிருந்தது.
 
காலம் என்னை ஏமாற்றிவிட்ட கோபம். ஒரு பொய்யை நீதிமன்றில் கொண்டு வந்து என்னை அவமதித்த அந்த அவமதிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத வெப்பியாரம்.
 
என் மீதான பொய்யை நிரூபிக்க ஆதாரங்கள் தேடிக் கொண்டிருந்தேன். நித்திரையிலும் அந்த விசாரணைகள் பற்றிய கேள்விகளே என்னைத் துரத்திக் கொண்டிருந்தது.
 
ஒரு இரவு மகளோடு கதைத்துக் கொண்டிருந்த போது மலைக்கோட்டை தேவாலயம் மற்றும் நிலக்கீழ் கண்காட்சிசாலை பற்றிய கதை வந்தது. 
 
2015ம் ஆண்டு கோடை காலத்தில் மகள் நிலக்கீழ் கண்காட்சி சாலையில் பகுதிநேர வழிகாட்டியாக வேலை செய்து கொண்டிருந்தாள்.
 
அப்போது தான் எனக்கும் பொறிதட்டியது. மலைக்கோட்டை தேவாயலயமும் நிலக்கீழ் அருங்காட்சியகமும் மார்ச்மாதம் இரண்டாம் வாரம் தொடக்கம் நவம்பர் மாதம் முதல்வாரம் வரையுமே திறக்கப்படும். 
 
நவம்பர் தொடக்கம் மார்ச்மாதம் வரை மலைக்கோட்டை தேவாலயத்துக்கோ நிலக்கீழ் அருங்காட்சியகத்திற்கோ போகமுடியாது. ஏனெனில் இவ்விரண்டு இடங்களையும் சுற்றுலாப்பயணிகள் வந்து பார்க்கும் மாதங்களை ஏற்கனவே பிள்ளை வேலை செய்யத் தொடங்கிய போதுதான் நானும் அறிந்திருந்தேன்.
 
மறுநாள் எனது சட்டத்தரணியை அழைத்து சந்திப்பு நேரம் கேட்டேன். அன்று பின்னேரமே வருமாறு பதில் வந்தது.
 
எப்பிடியிருக்கிறாய் ? பிள்ளையள் படிப்பெல்லாம் என்னமாதிரி போகுது ? மகன் என்னமாதிரி பரீட்சையெல்லாம் எழுதினார் ? நல விசாரிப்புகள் முடிய நான் சந்திக்க விரும்பிய காரணத்தை வினவினார் சட்டத்தரணி.
 
எனக்கு வேளைக்கு விவாகரத்து வேணும். அவர் தொடர்ந்து தவணைகளைத் தள்ளிப் போடுவது என்னை உலைப்பதாக நினைக்கிறார். எனக்கு அமைதி வேணும். 
 
இன்னும் இரண்டு தவணைகள் மட்டுமே தான் அவருக்கு நீதிமன்றம் கொடுக்கும் அதையும் தள்ளிப் போட முயன்றால் பிடியாணை மூலம் வழக்கை முடிவுக்கு கொண்டு வரும் நீதிமன்றம்.
 
உனக்கு யாரிலயும் காதல் இருக்கிறதோ அதெல்லாம் பிரச்சனையில்லை அது உனது சொந்த விருப்பம். அதையெல்லாம் சட்டம் கேள்வி கேட்காது. அது தனிமனித சுதந்திரம். 
 
என்னுடைய ஆலோசனை நீ இந்த நகரத்தைவிட்டு எங்காவது தூரப்போ. கொஞ்ச நாள் கரைச்சலா இருக்கும். புது இடம் புது மனிதர்கள் புது வாழ்வு உன்னைப் புதுப்பிக்கும். எனக்கும் ரெண்டு மகள்கள் இருக்கினம் எனக்கு அப்பாவாக பிள்ளைகளை எப்பிடி பாதிக்குமெண்டது தெரியும்.
 
என் அப்பாவின வயதில் இருந்த சட்டத்தரணி எனக்கான ஆலோசனைகளைக் கூறிக் கொண்டு வந்த இடையில் எனது விடயத்துக்கு வந்தேன்.
 
நீங்கள் பிறந்தது இங்க தானே ?
ஓம்.
போனமுறை என்னில அவரும் அவரது காதலியின்ரை சாட்சியோடை ஒரு குற்றச்சாட்டு வைச்சவை தானே. அதைப்பற்றி நீங்கள் அடுத்த விசாரணையில என்ன சொல்லப் போறீங்கள் ?
 
அதெல்லம் நீ யோசிக்காதை நான் உனக்கான நீதியைப் பெற்றுத் தருவேன் உறுதியாகச் சொன்னார் சட்டத்தரணி. 
 
அவனும் அவனது காதலியும் வாழும் வாழ்க்கை பற்றி அன்று தான் முதல் முதலாக ஒரு மூன்றாம் நபருக்குச் சொன்னேன்.
 
நீயென்ன ஒரு விசித்திரமான ஆளாயிருக்கிறாய் ? அவர் கேட்ட போது எனக்குச் சிரிப்பு வந்தது.
 
அவரவர் தனக்குப் பிடிச்ச வாழ்க்கையை வாழீனம் இதுக்கை நானென்ன போராடுறது ? நான் உண்மையா அவரை நேசிச்ச ஒரு காலமிருக்கு. 
 
சிலவேளை நினைக்கிறனான். நான் எவ்வளவு முட்டாளாயிருந்திருக்கிறேனெண்டு. எவ்வளவு பொய் எவ்வளவு நம்பிக்கைத் துரோகம். சொல்லிக் கொண்டிருந்தேன். கண்ணீர்ச் சுரப்பி ஊறுவதை உணர்கிறேன். அத்தோடு அந்த விடயங்களுக்கு முற்று வைத்துக் கொண்டேன்.
 
அன்றைக்கு அவை நான் காதலனோடை மலைக்கோட்டை தேவாலயம் போனதெண்டு சொன்ன பொய்யை நிரூபிக்க சாட்சியிருக்கு என்னட்டை. 
 
சட்டத்தரணி முன்னால் இருந்த தண்ணீர் கிளாசில் தண்ணீரை ஊற்றினார்.
 
மலைக்கோட்டை தேவாலயம் நவம்பர் தொடக்கம் மார்ச் மாதம் வரை திறக்கிறேல்ல. அப்ப நான் எப்பிடி அந்த நாள் இரவு அங்கை போயிருப்பேன்.
 
யா யா யா யா  நான் அதைப்பற்றி யோசிக்கேல்ல பாரன். சட்டத்தரணி எனது வாக்கு மூலத்தை தனது ஒலிவாங்கியில் பதிவு செய்து கொண்டார். நகரத்தின் விபரங்கள் தாங்கிய வெப்சைற்றில் போய் அந்தத் தரவுகளைப் பதிவெடுத்துக் கொண்டார்.
 
 நட்போடு விடைதந்து வாசல் வரை வந்து என்னை வழியனுப்பிவிட்டார். அங்கிருந்து வெளியேறி வெளியில் வந்த போது எனக்குள்ளே வெற்றியின் சங்கீதம் முன்னாலிருந்து சைனீஸ் உணவகத்திலிருந்து ஒலித்த பாடலில் கேட்பது போலிருந்தது.
 
  • Like 1
  • Thanks 1
  • Sad 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இன்று  முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது. இப்போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகளை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம். என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தெரிவித்தார்.  இன்றய  முழு அடைப்புப் போராட்டத்தின் நிறைவில் பின்னர்  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் தமிழர் தேசத்தின் தமிழின விடுதலை வரலாறு 70 ஆண்டுகளுக்கும் மேலானது. பல இலட்சம் தமிழ் மக்கள் இனக்கலவரங்களினாலும், போரிலும், போர்க்காலத்திலும், போராட்டங்களிலும் தம் உயிர்நீத்துள்ளனர். இன்னும் நாம் விடுதலை பெறவில்லை. இவ் வரலாற்றுக் காலத்திலும் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்தனை செய்தும் ஈமக்கடனியற்றியும் கண்ணீர்விட்டழுதும் ஆறுதல் பெறுவது தமிழ் உறவுகள், தமிழ் மக்களின் பாரம்பரியம் இவை தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகமாகும். உலகில் இத்தகைய மனிதாபிமானக் கடமைகள் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் கடப்பாடுகள் மனித குலத்தினாலும் ஐ.நா.சாசனத்தினாலும் உடன்படிக்கைகளினாலும் அங்கீகரிக்கப்பட்ட கடப்பாடாகும்.  உலகம் முழுவதும் இக்கடப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால் இலங்கையில் இறந்தவர்களை நினைவு கூரும் கடப்பாடுகள் அரசுகளினால் மறுக்கப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் வரும் நிலமை தான் இருக்கின்றது. மனித குலம், தமிழ் உறவுகள் தம் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து கண்ணீர் விட்டழுது சாந்தி பெறும் இயல் உணர்வுகளைக் கூட, மனிதாபிமானக் கடமைகளைக் கூட இன்றைய கோத்தாபய அரசு மறுத்து வருகிறது. இன்று  வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நீதிமன்றங்களில் எல்லாம் உறவுகளை நினைவு கூருவோருக்கு எமக்கும் பெயரிட்டு எதிராக முறையற்ற வழக்குகளைப் பதிவு செய்து தடையுத்தரவுகளை காவல்துறையினர் வழங்குகின்றனர்.  வடக்கு கிழக்கு முழுவதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகளின் தலைவர்கள், வழக்கறிஞர்களுட்பட நூற்றுக்கணக்கானவர்கள் தடையுத்தரவின் பேரில் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு வருகின்றனர். அரசின், இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயக அடிப்படையுரிமைகளுக்கும், மனித உரிமைகளுக்கும்,மனிதாபிமான கடமைகளுக்கும் ஒட்டுமொத்தமாக ஐ.நா. சாசன உடன்படிக்கைகளுக்கும் எதிரானதாகும்.  இதனை நாம் எதிர்க்க வேண்டும். எதிர்த்துப் போராட வேண்டும். மனிதகுலத்திற்குரித்தான, தமிழ் மக்;களுக்குரித்தான ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க நாம் ஒன்று திரண்டு ஜனநாயக வழிகளில் போராட வேண்டும்.  இந்த நிலமைகள் தான் 1987 செப்டம்பரில் காந்திய வழியில் உண்ணா நோன்பிருந்து 26ஆம் திகதி உயிரிழந்த திலீபனை நினைவு கூருவதிலும் இடம்பெற்றுள்ளது. அவர் தியாகம் மகத்தானது. 1987 செப்டம்பர் 26ல் உயிரிழந்த திலீபன் நினைவு கூருவதற்கு அப்பால் இலட்சக்கணக்கான உயிர்களை இழந்து அர்ப்பணித்த தமிழ் மக்களையும் நினைவு கூர நீதிமன்றத் தடைகளும் ஏற்படுத்தப்படுகின்றன. இதுவே தமிழின அழிவிலிருந்து எஞ்சியுள்ள எம் தமிழ்க் குலம் எதிர்காலத்திலும் எதிர்நோக்கியுள்ள பெரும் பிரச்சனையாகும். சவாலாகும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இப்பொழுது 20ஆவது திருத்தச்சட்டவரைவை பாராளுமன்றில் நிறைவேற்றும் தீவிரத்தில் உள்ளார். புதிய அரசியலமைப்பில் 20ஆம் திருத்தத்தை உட்படுத்த எண்ணுகிறார். 19ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் பாராளுமன்ற ஜனநாயகம் ஓரளவுக்கிருந்ததையும் அதனை நீக்கும் போது பாராளுமன்ற ஜனநாயகம் பலவீனப்படுத்தப்படும் சர்வாதிகார பலத்துடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் நாட்டில் இராணுவ மயமான பொலிஸ் அதிகாரமுமான ஆட்சி ஏற்படும்.  தமிழ்த் தேசத்து மக்களின் அரசியல் ஆளும் உரிமை, ஜனநாயக உரிமைகள், மனித உரிமைகள், மனிதாபிமானக் கடமைகளை இத்தகைய அரசொன்றில் எதிர்காலத்தில் நினைத்துப் பார்க்கமுடியாது. பெரும் அடக்குமுறைக்கும் ஒடுக்கு முறைக்கும் தமிழ்த் தேச மக்கள் மூச்சு விடவோ கண்ணீர் விடுவதற்கக் கூட உரிமையற்றவர்களாகி விடுவோம். தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகம், தமிழினம் அழிந்து விடும் அபாயத்தையே எடுத்துச் சொல்கிறோம். இந்த அபாயத்தை எதிர்கொண்டதால் தமிழ்த் தேசியத்தைக் கொண்டியங்கும் பத்து அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் கடந்த 18ஆம் திகதியன்று ஒன்று கூடி இழந்து போகும் ஜனநாயக அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்கும் படி ஒரு வேண்டுகோளில் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அனுப்பினோம். இதுவரை பதிலில்லை.  அரசின் பொலிஸார் வடக்குக் கிழக்கு முழுவதும் பல நீதிமன்றத் தடைகளையும், நடவடிக்கைகளையும் எடுத்த போது அவற்றைத் தாண்டி கடந்த 26ஆம் திகதி  காலை 8.00 மணியளவில் உணவு தவிர்ப்புப் போரட்டத்தை எங்கே நடத்துவது என்பதைத் தீர்மானித்தோம். நேற்றுமுன்தினம் சாவகச்சேரியில் கைது செய்யப்படுவோம் என்ற நிலையிலும் முழுநாளும் உணவு தவிர்ப்புப் போராட்டம் நடாத்தினோம். ஒற்றுமையினால் புதிய நம்பிக்கையைப் பெற்றோம். வெற்றியடைந்தோம். ஒரு குறுகிய இடைவேளையில் எல்லோரையும் அழைக்க முடியவில்லை. இருப்பினும் அந்த உத்வேகத்தோடு அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும் ஜனநாயக அடிப்படை உரிமைகளை, மனித உரிமைகள் மற்றும் இறந்தோரை நினைவுகூரும் உரிமையை சட்ட உரித்தை நிலை நாட்டவும் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் இன்று முழுக்கடையடைப்பு ஒன்றை அறிவித்தோம். அதற்கு வடக்குக் கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் பெரும் வெற்றியடைந்துள்ளது. பத்துத் தமிழ் அரசியல் கட்சிகள் கடந்த 19ஆம் திகதியன்று அரசிடம் எழுத்து மூலம் முன்வைத்த கோரிக்கைகளை, இப்போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை ஏற்க வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகளை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம். இலங்கை ஜனநாயக சக்திகளிடமும் மக்களும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமும் எங்கள் வேண்டுகோளை முன்வைக்கின்றோம். ஒரு குறுகியகால ஒழுங்கில் இடம்பெற்ற உணவு தவிர்ப்புப்  போராட்டத்தையும் முழுக் கடையடைப்பு நிகழ்வுகளையும் மக்களிடம், உலகம் முழுவதும் செய்திகளிலும், காணொளி மூலமும்  கொண்டு சென்ற பத்திரிகையாளர்,ஊடகத்துறையினருக்கு நிச்சயம் எங்கள் நன்றிகள் உண்டு. இந்தப் போராட்டங்களின் வெற்றிக்காக உழைத்த, பங்களித்த அத்தனை அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், தொழிற்சங்க அமைப்புக்கள், பல நீதிமன்றங்களில் வழக்குகளே இடம்பெறாதளவுக்கு வழக்கறிஞர்கள் பங்களிக்கவில்லை, ஆசிரியர்கள் குறிப்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தீர்க்கமான அறிவிப்பு, மேலாக பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் அறிவிப்பும் பங்களிப்பும்,  பலதுறைகளின் கல்விச் சமூகம், இன்னும் தென்னிலங்கை ஜனநாயக முற்போக்குச் சக்திகள், முஸ்லீம்,மலையக அரசியல் தலைவர்கள், முஸ்லீம் வர்த்தக சமூகத்தினர், வேளாண் துறையினர், கடற்தொழில்துறையினர், போக்குவரத்துத் துறையினர், தனியார் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள்  அனைவருக்கும் எம் நெஞ்சம் நிறைந்த நன்றியை சமர்ப்பித்து நிற்கின்றோம். இப் போராட்டங்களின் வெற்றி தமிழ் மக்களின் வெற்றியே. தமிழ் மக்கள் நிச்சயம் எழுச்சி கொள்வர் என நம்புகின்றோம் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/90966
    • பல விடயங்களிற்கு காரணம் இருப்பதில்லை. சிலரை பிடிப்பதற்கும் அல்லது பிடிக்காமல் போவதற்கும் பல நேரங்களில் காரணமே இருப்பதில்லை. நாம் கடந்து வந்த பாதையும் அது  தந்த கசப்பான அனுபவங்களும் , வலிகளும், ஏனோ அரசியல் வாதிகள் மீது எனக்கு ஒரு வெறுப்பை ஏற்படுத்திவிட்டது. இதை நீங்கள் ஏற்க வேண்டும் என்பதோ அல்லது உங்கள் கருத்தை மாற்ற வேண்டும் என்ற தேவையோ இல்லை.   
    • சீமான் தனிய ஈழ அரசியலுடன் மட்டும் நிற்கவில்லையே? தமிழ்நாட்டு அரசியலைத்தானே அதிகம் முன்னிறுத்துகின்றார். அது சரி தமிழ்நாட்டில் இருக்கும் ஏனைய கட்சிகள் ஈழப்பிரச்சனை பற்றி விவாதிக்கும் போது வராத கேள்வி ஏன் சீமான் மீது வருகின்றது? விஜயகாந்த்  இன்னும் கூடுதலாக மேடைப்பேச்சுக்களில் ஈழப்பிரச்சனை பற்றி கதைத்திருக்கின்றார் அல்லவா அப்போது வராத கேள்வி???????? 
    • இப்படியெல்லாம் அரசாங்கம் உங்களை கவனிக்கிறதா? அமெரிக்காவில் இப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அவரவர் தமது நலனை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.  குடல் வருத்தம் ஏதும் இருந்தாலேயன்றி பொதுவாக வைட்டமின் D குடலில் நன்றாக உறிஞ்சப்படும். வயதான பெண்களுக்குத்தான் அதிகப்படியான விட்டமின் D,  மக்னிசியும் தேவைப்படும். கொழுப்புள்ள மீன்கள், காளான், மஞ்சள் கரு போன்றவை நல்லது. சிலர்  Fortified உணவுகள் supplements போன்றவற்றை எடுக்கிறார்கள். UV லாம்ப் உம் நல்லம் என்று அறிந்தேன். 
    • சரி மருதர். கடந்து போவோம் 🙏🏾
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.