• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
உடையார்

எம் பின்னால் மோடி நிக்கிறார் – சம்பந்தன்

Recommended Posts

எம் பின்னால் மோடி நிக்கிறார் – சம்பந்தன்

Rajavarothayam-Sampanthan-Opposition-Leader.jpg?189db0&189db0

 

எமக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு உள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகாேணமலையில் இன்று (04) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும்,

“சர்வதேச சமூகம் எம் பின்னால் நிற்கின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் முழுமையாக பின்னால் நிற்கின்றார்.

கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு நாட்களில் இந்திய வௌிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நீதியான, சமத்துவமான, கௌரவத்துடன் கூடிய தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும் என கலந்துரையாடினார்.

அதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவிற்கு சென்றபோது இந்தச் செய்தி அவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது” – என்றார்.

https://newuthayan.com/எம்-பின்னால்-மோடி-நிக்கி/

 

Share this post


Link to post
Share on other sites
23 minutes ago, உடையார் said:

எமக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு உள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ரணிலை காட்டி தமிழ் மக்களை ஏமாற்றியாச்சு! 
இப்ப மோடியை காட்டி தமிழ் மக்களை ஏமாற்ற சம்பந்தன் முயற்சி செய்வது ஏன்? 
மோடி நாளைக்கு இல்லாம போய்ட்டா? 

அதுசரி மோடி எப்பயாவது சொன்னாரா தான் சம்பந்தனுக்கு பின்னால ஒளிச்சு நிக்கிறேன் என? 

Share this post


Link to post
Share on other sites
23 minutes ago, உடையார் said:

எமக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு உள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்தியா சொல்லுது 
எனக்கு பின்னால் அமெரிக்கா,அவுஸ்திரேலியா,ஜப்பான் நிக்குது என்று

சந்பந்தன் தனக்கு பின்னால் மோடி நிற்கிறார் என்றால்

எப்ப தான் இவங்கள் சொந்தக் காலில் நிற்கப் போறாங்கள்.
எப்ப அப்படி ஒரு எண்ணம் வருகுதோ அப்ப தான் எமக்கு வாழ்வு.

தனது காலில் நிற்க முதயாதவர்களை நம்பி எத்தனை லட்சம் மக்கள்.

6 minutes ago, Kali said:

அதுசரி மோடி எப்பயாவது சொன்னாரா தான் சம்பந்தனுக்கு பின்னால ஒளிச்சு நிக்கிறேன் என? 

மோடியே எத்தனையோ நாடுகளுக்கு பின்னால் நின்று நீ வாறியா அவன் வருவான் இவன் வருவான் என்று இந்திய மக்களை ஏமாற்றுகிறார்.
சம்பந்தன் மோடியை காட்டி ஏமாற்றல்.

  • Like 2
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, ஈழப்பிரியன் said:

எப்ப தான் இவங்கள் சொந்தக் காலில் நிற்கப் போறாங்கள்.

அங்க அங்க தொங்கிக் கொண்டிருக்கேக்க வேற வருமானம் கிடைக்குதெல்லோ?

Share this post


Link to post
Share on other sites

பின்னாலை வந்து மோடி நின்றது எதற்காக அதையும் விபரமா சொன்னாதானே எங்களுக்கும் புரியும். மோடி வந்து திடிதிப்பென்று இண்டைக்கே உங்கட பின்னாலை நிக்கிறார். தேர்தல் பிரசாரத்திலை போய் இப்படி சொல்லி வாக்கு கேட்கவேணும் என்பதற்காக இதுவரையும் சொல்லாமை இப்பதான் சொல்றிங்கள்.

மோடி வந்து நிண்டதுதான் நிண்டுட்டார் கொஞ்சம் விடுங்கோ நிண்டிட்டு போகட்டும். இதை கேள்விப்பட்டா தங்களுக்குபின்னாலை சீனாவின் அரச தலைவர் சி ஜிப்பிங் நிக்கிரார் என்றெல்லொ  ராஜபக்ச கோஷ்டி சொல்லபோகுது. இந்தியாவிட்டை இல்லாத வீட்டோ உரிமையும் சீனாவுக்கு இருக்குதெல்லோ. சம்பந்தன் ஐயா உங்கடை திருகு தாளத்தும் ஒரு அளவு வேணும்.

 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

நரேந்திர மோடியின் ஆதரவு தமக்கு இருப்பதாக சம்பந்தன் தெரிவிப்பு.

எழுத்தாளர் Staff Writer    04 Jul, 2020 | 7:15 

https://www.newsfirst.lk/tamil/2020/07/04/தமக்கு-நரேந்திர-மோடியின்/

 

Colombo (News 1st) தமக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சர்வதேச சமூகம் எம் பின்னால் நிற்கின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் முழுமையாக பின்னால் நிற்கின்றார். கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு நாட்களில் இந்திய வௌிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நீதியான, சமத்துவமான, கௌரவத்துடன் கூடிய தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும் என கலந்துரையாடினார். அதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவிற்கு சென்றபோது  இந்தச் செய்தி அவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது

என இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

திருகோணமலையில் நடைபெற்ற சந்திப்பொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 

Edited by nochchi

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, உடையார் said:

எம் பின்னால் மோடி நிக்கிறார் – சம்பந்தன்

சம்பந்தன் சார்! எவ்வளவு காலமாய் மோடி  பின்னாலை நிக்கிறார்?

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

சம்பந்தன் சார்! எவ்வளவு காலமாய் மோடி  பின்னாலை நிக்கிறார்?

சீனாக்காரன் வந்து நிக்கிறான். மோடியர் ஓடி வந்து சம்பந்தர் பின்னால ஒளிஞ்சு நிக்கிறார் போலை கிடக்குது. சீனாக்காரருக்கு சொல்லிப்போடாதீங்கோ 😎

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, குமாரசாமி said:

சம்பந்தன் சார்! எவ்வளவு காலமாய் மோடி  பின்னாலை நிக்கிறார்?

வயது போயிட்டுது அறளை பேர்ந்தா இப்படித்தான் மோடி என்ன ட்ரம் கூட நிப்பார் ஒரு பிழையான முடிவை தெரிந்தே எடுத்த பெருமைக்குரியவர் tna க்குள் வந்த சுமத்திரன் பேய் கடைசியில தமிழரசு கட்சியையும் அழித்துவிட்டுத்தான் அடங்கும் பாருங்க .

  • Like 1
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
2 hours ago, Nathamuni said:

சீனாக்காரன் வந்து நிக்கிறான். மோடியர் ஓடி வந்து சம்பந்தர் பின்னால ஒளிஞ்சு நிக்கிறார் போலை கிடக்குது. சீனாக்காரருக்கு சொல்லிப்போடாதீங்கோ 😎

சீனாக்காரன் மோடியை பிடிக்க வர அவன் போய் சம்பந்தருடைய வேட்டிக்குள் ஒளிந்தால் சீனாக்காரன் மோடியை பிடிக்க சம்பந்தரின்ட வேட்டியை உருவ மாட்டானா?

 

அதை விட அங்க மன்னாரில நடக்கிற கூத்தை பார்த்தால் மோடியும் அவரின் பரிவாரங்களும் முழு வீச்சுடன் இயங்குவது புலனாகிறது.

Edited by Dash

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, Dash said:

சீனாக்காரன் மோடியை பிடிக்க சம்பந்தரின்ட வேட்டியை உருவ மாட்டானா?

சம்பந்தருக்கு வெட்கத்தால் முகம் சிவக்கப்போகுது.  

Share this post


Link to post
Share on other sites
On 5/7/2020 at 07:21, உடையார் said:

சர்வதேச சமூகம் எம் பின்னால் நிற்கின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் முழுமையாக பின்னால் நிற்கின்றார்.

              =====( கேடி ஜி )=====

roflphotos-dot-com-photo-comments-201803

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this