Jump to content

சிவாஜிலிங்கம் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கம் கைது

image_a5f103d3b6.jpg

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், கைது செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (05) முற்பகல் 9.30 மணியளவில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பருத்தித்துறை நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்பதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/சவஜலஙகம-கத/175-252763

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை

spacer.png

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இல்லத்தில், பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு கேக் வெட்டியது தொடர்பாக பருத்தித்துறை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை 9.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் நீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.பருத்தித்துறை நீதவானின் இல்லத்தில் சற்று முன்னர் அவரை முன்னிலைப்படுத்தியபோதே, அவரை பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டார்.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/இன்று-காலை-கைது-செய்யப்ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ததேசியத்தை வலுவாக முன்னிறுத்துவோரை அச்சுறுத்த அரங்கேறும் நடவடிக்கைகளில் இதுகும் ஒன்று.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.