Jump to content

தேர்தல் கால வாக்குறுதிகள்; விரலுக்கேற்ற வீக்கமாக இருக்க வேண்டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் கால வாக்குறுதிகள்; விரலுக்கேற்ற வீக்கமாக இருக்க வேண்டும்

 -க. அகரன்

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்களின் வாக்குறுதிகளும் அதனூடாகத் தமது செயற்பாடுகளின் உறுதிமொழிகளும், தாராளமாகவே அள்ளிவீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இலங்கையில் தேர்தலொன்று, சுகாதாரப் பாதுகாப்பு முறைகளுக்கு மத்தியிலும் தொற்று நோயொன்றின் அச்சுறுத்தலுக்கு இடையிலும், முதன்முதலாக இடம்பெற்று வரும் நிலையில், தேர்தல் ஆணைக்குழுவானது, இந்தத் தேர்தலை நடத்திவிடவேண்டும் எனக் கங்கணம் கட்டி நிற்கின்றது.

தேர்தலுக்கான ஒத்திகையிலேயே நீண்ட நாள்களைச் செலவிட வேண்டிய தேவை, தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், மக்கள் மத்தியில் இந்தத் தேர்தலுக்கான முனைப்பு காணப்படுகின்றதா என்ற கேள்வி நிறைந்தேயுள்ளது.

வடபுலத்தை நோக்குகையில், நீண்டகால அரசியல் செயற்றிறனில் ஏற்பட்ட அதிருப்தி, மக்கள் பிரதிநிதிகளாக அனுப்பிப் பலரும் தமது முன்னேற்றத்தையும் பதவி இருப்பிலும் கொண்ட பற்று என்பன, மக்கள் மத்தியில் அரசியல் என்ற தளத்தை வெறுப்புணர்வோடு பார்க்கும் நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளது.

ஆயுதப் போராட்ட மௌனிப்பின் பின்னரான காலத்தில், மக்கள் மத்தியில் எஞ்சியிருந்த அபிலாசைகளைத் தீர்க்க முடியாத அரசியல் தலைமைகள், 11 ஆண்டுகள் கடந்தும் எவ்வித ஆக்கபூர்வமான அழுத்தங்களையும் பிரயோகிக்காமை, கடந்து வந்த நல்லாட்சி அரசாங்கத்துக்குத் தமிழ்ப் பிரதிநிதித்துவம் கொடுத்து வந்த ஆதரவும், அனூடாக எதனையும் சாதிக்க முடியாமல் போனமையும், அரசியல் வெறுமைக்கான காரணங்களாக உருவாகிக்கொண்டன.

தமிழர் தரப்பு அரசியல் என்பது, நிறைந்த தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டிய தேவைகளுடன் காணப்படும் நிலையில், மாகாண சபையில் ஒருவரை ஒருவர் குறைகூறுவதும் ஊழல் நிறைந்ததாகவும் காணப்பட்டிருந்தது. இச்சூழலில், தமிழ் அரசியலாளர்கள், ஆளுமைத் தன்மை அற்றவர்களா என்ற கேள்வியை எழுப்பியிருந்த நிலையிலேயே மீண்டும் நாடாளுமன்றத்துக்கான தேர்தல், மக்கள் முன் வந்துள்ளது.

எந்தக் கட்சியைத் தெரிவுசெய்வது என்பதற்கப்பால், எவர் மக்களுக்கான இன்றைய அத்தியாவசியத் தேவைகளைப் பூரணப்படுத்தக்கூடிய வல்லமையுடன் உள்ளார் என்ற கேள்வி நிறைந்தேயுள்ளது.

இவ்வாறான நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கிடையில் கடும் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் தமிழ் நாட்டு அரசியல் கலாசாரம் தலைதூக்க ஆரம்பித்துள்ள நிலையில், கட்சிகளுக்குள்ளேயும் ஒருவரையொருவர் வீழ்த்திவிட வேண்டும் என்ற சதுரங்க விளையாட்டும் ஆரம்பித்துள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள அதிகார மற்றும் ஆசனப் போட்டி என்பது, தமது கட்சிக்குள்ளேயே வேட்பாளர்களைக் குற்றஞ்சுமத்தியும் வெறுப்புணர்வை வெளிப்படுத்தியும் வாக்குச் சேகரிக்கும் நிலை உருவாகியுள்ளமை, தமிழர் அரசியலின் இருப்பு, கீழ் நோக்கிச் செல்வதன் வெளிப்பாடாகும். இதற்குமப்பால், நீண்ட காலமாக நாடாளுமன்ற ஆசனத்தை அலங்கரிப்பவர்கள், இன்று இளம் வேட்பாளர்களை ஓரங்கட்டி, மீண்டும் தமது நடாளுமன்றப் பிரவேசத்துக்கான முனைப்பை வெளிப்படுத்துவதானது, தமிழர்களின் பலம் எனக் கருதப்பட்டு வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீதான அதிருப்தியை, இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

வடபுலத்தில் களமிறங்கியுள்ள தென்பகுதியைச் சேர்ந்த கட்சிகளும் வேட்பாளர்களும், தமிழர்களின் வாக்குப் பலத்தை எவ்வகையிலும் உடைத்துவிட வேண்டும் எனக் கங்கணம் கட்டும் நிலையில், தமிழ்க் கட்சிகள், தமக்குள்ளேயே முட்டிக்கொள்ளும் செயற்பாடுகள், அவர்களுக்கு மேலும் வாக்குகளை உடைப்பதற்கு இலகுவாகிவிடும் என்பதே யதார்த்தம்.

இதற்குமப்பால், வடக்கில் களமிறங்கியுள்ள கட்சிகள் அனைத்துமே, மக்களுக்குச் சிறந்த செயற்பாட்டு வாக்குறுதிகளை வழங்குவதை விடுத்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது, அவர்களால் எதுவும் செய்ய முடியாது போய்விட்டது என்ற கருத்துகளையே கூறி வாக்குகளைப் பெற முயற்சிக்கின்றனரே தவிர, தாம் எதிர்வரும் 5 வருடங்களில் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் அபிலாசைகளுக்கு தீர்வாக எதனைச் சாதித்துக் காட்டப்போகிறோம் என்ற கருத்துகளை முன்வைக்கத் தவறி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், தேர்தல் களத்தைப் பார்க்கின்ற போது, தமிழ் மக்கள் மத்தியில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதிகப்படியான ஆதரவுடன் காணப்படுவதாகவும் அதை எவ்வாறு உடைத்தெறிவது என்ற சிந்தனா சக்தியையே முடுக்கி விட்டுள்ளதாக எண்ணத் தோன்றுகின்றது. 

குறிப்பாக, தமிழ் மக்களுக்குக் காணப்படும் பொது எதிரியான மத்தியில் உள்ள அரசாங்கம் மீதான அழுத்தங்களைக் கொடுப்பதை விடுத்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீதே பிரயோக்கிக்கப்பட்டு வருவதானது, தமிழ்க் கட்சிகளுக்கிடையில் காணப்படும் பலவீனமா அல்லது தாம் அழுத்தம் பிரயோகித்து தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெறும் விடயம் தொடர்பில் தெளிவின்மையா என்பதைச் சிந்திக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது.

தேர்தல் பிரசார யுக்தியில் அமைந்துள்ள வாக்களிப்பு வீதமானது, கூட்டமைப்புக்கு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் சரிவை ஏற்படுத்தினாலும் கூட, வடக்கு, கிழக்கில் கணிசமான வாக்கைப் பெறப்போவது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது உண்மை. எனினும், கூட்டமைப்புக் கட்சியானது, தான் கடந்த காலத்தில் விட்ட தவறுகளில் இருந்து நல்ல பாடங்களைக் கற்றுக்கொண்டு, எதிர்வரும் காலத்தில் மக்களின் அபிலாசைகளைத் தீர்க்கவில்லையாயின், தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமக்கான அடுத்த தலைமையை, பொதுத் தேர்தலில் அதிகப்படியான வாக்குகளால் தேர்ந்தெடுக்க எத்தனிப்பார்கள்.

 ஆகவே, தற்காலச் சூழலில், கூட்டமைப்புக்கு நிகரான மாற்றுத் தலைமை என்பது எதுவென்ற கேள்வி நிறைந்துள்ள நிலையில், விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் போட்டி நிலை உருவாகியுள்ளது. எது எவ்வாறாயினும், நடைபெறவுள்ள தேர்தலே, கூட்டமைப்பை வெறுக்கின்ற மக்கள் தமக்கான அடுத்த தலைமையின் உருவாக்கத்தை எங்கிருந்து விரும்புகின்றனர் என்ற செய்தியைச் சொல்லப்போகின்றது.

எவ்வாறாயினும், தமிழ் மக்களின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் அவர்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவல்ல களமொன்று உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியானது, மத்திய அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பரசியலால் சாதித்துக்கொள்ள முடியாது என்பதே யதார்த்தம். ஆகவே, பொருளாதார மேம்பாட்டுடனான சமூகமாகத் தமிழ் மக்களை மாற்றியமைக்க வேண்டிய தேவை, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளவர்களுக்கு முன்னுள்ள சவால் ஆகும்.

குறிப்பாக, தமிழ் மக்களையும் விட சிறுபான்மையினரான இஸ்லாமியர்களது பொருளாதார நிலையுடன், ஒப்பீட்டு ரீதியலான பொருளாதாரப் பெருக்கத்தைக் கொண்டுவர முயற்சிக்காது, வெறுமனே தேசியம் சார் கருத்துகளால் சாதித்துக் கொள்ளப்போவது என்னவென்ற கேள்வி, மக்கள் மத்தியில் மெல்ல வெளிக்கிளம்பத் தொடங்கியுள்ளது.

இறுதி யுத்தம் இடம்பெற்று 11 வருடங்களைக் கடந்துள்ள நிலையில், யுத்த பாதிப்புக்குள்ளான மக்களுக்கு, இதுவரை அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையிலும் முழுமை பெறாத வீட்டுத்திட்டங்களுமே எஞ்சியுள்ள போது, இம்மக்களின் வாக்குகள் யாருக்காக வழங்கப்பட வேண்டும் என்ற தேடலில் தற்போதும் உள்ளனர்.

இந்நிலையிலேயே, ஓகஸ்ட்டில் தேர்தல் களைகட்டியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எவர் சாலச்சிறந்தவர் என்பதை, மக்கள் தீர்க்கமாக முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மக்களும், அதற்கு ஏற்றாற்போல மிகத் தெளிவான மற்றும் தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் சக்தியாக மாறியுள்ளமையும் மறுக்க முடியாத சூழலிலேயே, வேட்பாளர்கள் சிந்தித்து, தமது வாக்குறுதிகளையும் இயலுமைகளையும் வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தேர்தல்-கால-வாக்குறுதிகள்-விரலுக்கேற்ற-வீக்கமாக-இருக்க-வேண்டும்/91-252769

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.