• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

ஒழுக்கம், நேர்மை, தற்றுணிவு மற்றும் விலைபோகாத தமிழ் அரசியல் தலைமைக்கு வாக்களியுங்கள்: பேரவை வேண்டுகோள்

Recommended Posts

ஒழுக்கம், நேர்மை, தற்றுணிவு மற்றும் விலைபோகாத தமிழ் அரசியல் தலைமைக்கு வாக்களியுங்கள்: பேரவை வேண்டுகோள்

ஒழுக்கம், நேர்மை, தற்றுணிவு மற்றும் விலைபோகாத தமிழ் அரசியல் தலைமைக்கு வாக்களியுங்கள்: பேரவை வேண்டுகோள்

தனிமனித ஒழுக்கம், நேர்மை, லஞ்சத்துக்கும் சலுகைகளுக்கும் விலைபோகாத தைரியம், தமிழ் மக்களின் அடிப்படை நிலைப்பாடுகளை தெளிவாக வலியுறுத்துவதோடு அதை முன்னின்று செய்யும் தற்றுணிவு கொண்ட, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை அடைவதற்காக கொள்கைப்பற்றுடன் செயற்படக் கூடிய   அரசியல் பிரதிநிதிகளையே இம்முறை தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ்மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளும் பயணத்தில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பல இன்னல்களையும், இழப்புகளையும் சந்தித்தவர்கள் என்ற வகையிலும் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படாது தொடர்ந்து கொண்டிருக்கின்ற இந்த நிலையிலும் நமக்கென்று ஒரு தூய, ஒற்றுமையான அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றன. தேர்தல் அரசியலில் குதித்து நிற்பவர்களின் பிரிவுகள், முரண்பாடுகள், சுயநலப் போக்குகள், பேச்சுக்கள் தொடர்பில் மக்கள் சலிப்பும் விரக்தியும் அடைந்திருக்கின்றார்கள். இவை மக்களிடையே பகைமை உணர்வை வளர்த்து எமது பயணத்தை திசைமாற்றிவிடுமோ என்ற கவலையும் ஏற்பட்டிருக்கின்றது.

போதிய அளவு அரசியல் அனுபவமும் முதிர்ச்சியும் உள்ள ஒரு தேசிய இனமாகிய நாம் சில விடயங்கள் சம்பந்தமாக சிந்திக்க வேண்டிய கட்டாய நிலையில் இருக்கின்றோம். அரசியல்வாதிகளை விமர்சிக்கமுன் பொது மக்களாகிய நாம் எம்மை சீர்செய்துகொள்ள முடியுமா? என்று சிந்திப்பது பயனுடையதாக அமையும்.

வருமானத்திற்கும் சலுகைகளுக்குமாக நாம் ஒரு அரசியல்வாதிக்கு வாக்களிப்போமாக இருந்தால் அவரை இலஞ்சம் வாங்க வேண்டாம் என்றோ, சலுகைகளுக்கு விலை போகவேண்டாம் என்றோ கேட்டுக்கொள்ளும் தார்மீக உரிமை நமக்கு இல்லாமல் போய்விடும்.

பொருத்தமற்ற அரசியல் பிரதிநிதிகளை நாமே தெரிவு செய்துவிட்டு அல்லும் பகலும் அவர்களை விமர்சித்துக் கொண்டிருப்பதால் ஆகப்போவது எதுவுமில்லை. புனிதமான, கொள்கை அடிப்படையிலான அரசியல் பாதையை வடிவமைக்க வேண்டிய நொந்து போன ஒரு இனம் சாக்கடை அரசியலை வளர்த்துவிட்டு, பின் அதிலிருந்து தூர விலகி நின்று, இது சாக்கடை அரசியல் என்று கூச்சலிடுவது அர்த்தமற்றது.

பொருத்தமானவர்களை தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தை நழுவவிட்டு, வாக்களிக்காமல் இருந்துவிட்டு பின் தெரிவுசெய்யப்படும் அரசியல் பிரதிநிதிகளை விமர்சிப்பதும் ஒரு பொறுப்பற்ற செயற்பாடாகவே கருத வேண்டியிருக்கின்றது.

எனவே எமது அரசியலை தூய்மைப்படுத்த பொருத்தமானவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்ற பாரிய பொறுப்பு என் முன்னே எழுந்து நிற்கின்றது.

பலவகையான போராட்டங்களினூடும் படிப்பினைகளினூடும் பயணித்த எம் தமிழ் மக்களுக்கு பொருத்தமான பிரதிநிதிகளை நன்கு சிந்தித்து தெரிவு செய்வது கடினமாதொன்றாக இருக்காது. இம்முறை என்றுமில்லாதவாறு எம்முன்னே பல தெரிவுகள் விதைக்கப்பட்டிருக்கின்றன.

தூய அரசியலை வடிவமைக்க பொருத்தமானவர்களை எதனை வைத்து தெரிவு செய்வது? என்று ஒரு கேள்வி எழுகின்றது.

தனிமனித ஒழுக்கம், நேர்மை, லஞ்சத்துக்கும் சலுகைகளுக்கும் விலைபோகாத தைரியம், தமிழ் மக்களின் அடிப்படை நிலைப்பாடுகளை தெளிவாக வலியுறுத்துவதோடு அதை முன்னின்று செய்யும் தற்துணிவு, நேச சக்திகளை அரவணைத்து ஒற்றுமைப்படுத்தும் ஆளுமை, வெளிப்படைத்தன்மை, குற்றச்சாட்டுக்கள் எழும்பொழுது பொறுப்புக்கூறும் பெருந்தன்மை, தவறுகள் இருப்பின் அதனை ஏற்று திருத்திக் கொள்ள முயலும் மனப்பக்குவம், திறமை, எமது இலக்கு நோக்கிய நகர்வுகளை துறைசார் வல்லுநர்களையும் இணைத்து திட்டமிடும் ஆற்றல், சகோதர (சக தமிழ்த் தேசிய) கட்சிகளின் நல்ல முயற்சிகளை பாராட்டி ஊக்கப்படுத்தும் பெருந்தன்மை போன்ற நல்ல இயல்புகளோடு முக்கியமாக, முயலுவோம்.

எம்மிடையே பல சிந்தனை வேறுபாடுகளும் கருத்து வேறுபாடுகளும் இருக்கலாம். ஒருவரின் சிந்தனையும் தீர்மானமும் போன்று இன்னொருவரின் சிந்தனையும் முடிவும் இருக்காது, இது இயற்கை. இன்னொருவரின் சிந்தனையையும், முடிவுகளையும், அதற்கான அவர் சார்ந்த காரணங்களையும் விளங்கிக் கொள்ள முயல்வது பயன்தரும். எமது சிந்தனையை வலுக்கட்டாயமாக இன்னொருவரின் மீது திணிக்க முயல்வதோ, கோபம் கொள்வதோ அர்த்தமற்றது. ஆனால் எமது நீண்டகால அபிலாசைகளை அடைவதற்காக எமது அடிப்படைகளினின்று விலகாது, வேறுபாடுகளை மறந்து கைகோர்க்க வேண்டியதும் அவசியமாகின்றது.

எம்மிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எமது பொது நோக்கங்களுக்காக சகோதர (சக தமிழ்த் தேசிய) கட்சிகளுடன் கைகோர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.  எனவே எம்மிடையே பகை வளர்க்கும் வார்த்தைப் பிரயோகங்களையும், கருத்துக்களையும் தவிர்த்து பொருத்தமானவர்களை எமது பிரதிநிதிகள் ஆக்குவதில் எமது கவனத்தை குவிப்போம்.

 

http://www.samakalam.com/செய்திகள்/ஒழுக்கம்-நேர்மை-தற்றுணி/

Share this post


Link to post
Share on other sites

எமது வாக்குகள் விலைபோவதை தடுத்து நிறுத்துவோம்

TPC.jpg

ஒரு நியாயமான தீர்வுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தேர்தல் அரசியலினால் கட்சிகளுக்குள்ளேயும் கட்சிகளுக்கிடையேயும் எழுந்துள்ள ஒற்றுமைக்குலைவு ஒரு வேதனையான விடயமாக அமைந்திருக்கிறது. இன்றைய எமது நிலையில் குழுக்களாகப் பிரிந்து நின்று சுயநலத் தேர்தல் அரசியல் செய்வது ஆரோக்கியமான அணுகுமுறையாக அமையாது.

எமது வாக்குகள் அற்ப சலுகைகளுக்காக விலை பேசப்படும் இந்த நிலையிலே எமது தேசிய நலனில் அக்கறை கொண்டுள்ள நாம் பிரிந்து நின்று சண்டையிடுவதற்கான காரணங்களைத் தேடுவதிலும் பார்க்க ஒற்றுமைப்பட வேண்டியதற்கான அவசியத்தையும் அதன் அனுகூலங்களையும் ஆராய்வது ஆரோக்கியமானதாக அமையும்.

எமக்கு நியாயப்படியும் சட்டப்படியும் கிடைக்க வேண்டிய வாய்ப்புக்களையும் வசதிகளையும் ஒழுங்குவிதிக்கமைய தரமறுத்து அவற்றை தமது முகவர்களின் ஊடாக குழப்பமான முறையில் நடைமுறைப்படுத்த முயன்று அவற்றை எமக்கு வழங்கப்படும் சலுகைகளாக சித்திரிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. அதனைச் செய்யும் அந்த முகவர்கள் செயல் வீரர்கள் போல நம் மத்தியிலே உலா வருகின்றனர்.வறுமையையும் சமூக சிக்கல் நிலைகளையும் எம்மக்கள் மத்தியிலே திட்டமிட்டு ஏற்படுத்திவிட்டு அதை தீர்க்கவென தற்காலிக போலிச் சலுகைகளைக் காட்டி அவர்களின் வாக்குகளை விலைபேச முயல்வது மனிதத்துவம் ஆகாது.

தமது வறுமையைப் போக்கவென தமது வாக்குகளைச் சலுகைகளுக்காக விற்கும் எம்மவர்களை கோபித்துக் கொள்வதும் அர்த்தமற்றது. அந்தச் சூழ்நிலைக் கைதிகளின் நிலையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. பல்வேறு அழுத்தங்களால் தடம்மாறி நிற்கும் மக்கள், எம் மக்கள் அல்ல என்று ஆகிவிடாது அவர்களையும் தடம்மாற்றி சலுகைகளுக்காக எமது வாக்குகள் விலைபோகாது என்பதை சரியான முறையில் எமது வாக்குரிமையைப் பயன்படுத்தி நிரூபிப்போமாக இருந்தால் எதிர்காலத்தில் இவ்வாறு விலை பேசும் செயற்பாடுகளைக் குறைத்துக் கொள்ள முடியும். இது எமது விடியலை நோக்கிய பயணத்திற்கு உரம் சேர்க்கும். எலும்புத் துண்டையும் உணவுத் துண்டையும் காட்டி தமது ஆட்டத்திற்கு ஆட்டி வைக்கப்படும் வட்டரங்கு விலங்குகள் (Circus animals) போல நாம் இல்லை என்பதை தெளிவாக்கும்.பொது விடயங்கள் மற்றும் அடிப்படை பிரச்சினைகள் சம்பந்தமாகவேனும் நாம் ஒற்றுமைப்படாவிட்டால் நாம் பிரித்தாளப்பட்டு எமது அபிலாசைகள் சிதைக்கப்படுவதற்கான ஆபத்து நிலை இருக்கிறது. கோணேசர் கோயிலும் நல்லூர் ஆலயமும் கூட நம் பூர்வீகமல்ல என வாதிடுபவர்களுக்குக்கூட இது வரப்பிரசாதமாக அமைந்துவிடும். இந்த ஒற்றுமைக்காக தமிழ் மக்கள் பேரவையானது அனைத்துத் தமிழ் தலைவர்களுடனும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கிறது. இந்த முயற்சிகள் தொடரும்.

இந்த முயற்சி வெற்றி பெறுவதற்கு சரியான திசையில் சிந்திக்கும் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பெரும் பொறுப்பு தமிழ் மக்கள் முன் எழுந்து நிற்கிறது. அரசியல்வாதிகளின் குறுகிய சுயநல சிந்தனைப் போக்குகள் காரணமாகவும் மாறிவரும் நெருக்கடியான அரசியல் சூழ்நிலை காரணமாகவும் எம்மக்கள் மனமுடைந்து விரக்தியடைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதன் காரணமாக சரியாகச் சிந்தித்து வாக்களிக்கும் திறன் உடைய பலர் “வாக்களித்து என்ன பயன்” என்று எண்ணி வாக்களிக்காமல் இருந்து விடுவார்களோ? என்ற ஏக்கம் எம்மத்தியில் எழுகிறது. அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் விலைபோன வாக்குகளால் மட்டுமே எமது பிரதிநிதிகள் எனப்படுவோர் தெரிவாகும் ஒரு ஆபத்து நிலை இருக்கிறது. அவ்வாறு நடந்தால் அது ஒரு பிழையான செய்தியை உலகிற்கு தெரிவிப்பதாக அமைந்துவிடும்.

எனவே எத்தனையோ இடர்களைத் தாண்டி பயணித்த நாம் மனம் சோர்ந்து போகாது ஒரு தூய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்காக அனைவரும் அணிதிரண்டு சிந்தித்து வாக்களிப்போம். நாம் சந்திக்கும் ஒவ்வொருவரையும் தவறாமல் சிந்தித்து வாக்களிக்கத் தூண்டுவோம். எதிர்காலத்தின் மீது நம்பிக்கை கொள்வோம். #தேசியஇனம்  #தேர்தல்  #ஒற்றுமை #வறுமை  #வாக்கு  #தமிழ்மக்கள்பேரவை

தமிழ் மக்கள் பேரவை

http://globaltamilnews.net/2020/146701/

Share this post


Link to post
Share on other sites

நியாயமான கோரிக்கை!

Share this post


Link to post
Share on other sites

போட்டியிடுபவர்களில் பின்வருபவர்கள் சிறந்த பிரதிநிதிகளாக செயற்படுவார்கள் என 50% - 70% நம்பிக்கை உள்ளது.

கூட்டமைப்பில்
வடமாகாணம்: சார்ள்ஸ் நிர்மலநாதன், சசிகலா ரவிராஜ், ஆர்னால்ட்

கிழக்கு மாகாணம்: ---

 

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில்
கிழக்கு மாகாணம்: ஆத்மலிங்கம் ரவீந்திரன் (ரூபன்),   சோமசுந்தரம்,   கணேசமூர்த்தி

வடமாகாணம்: விக்னேஸ்வரன்,   அனந்தி சசிதரன்,    அருந்தவபாலன்,    மாலினி ஜெனிற்றன்,   சிவசக்தி ஆனந்தன்,   சிவாஜிலிங்கம்,  

 

தமிழ் தேசிய மக்கள் முன்னணி:
வடமாகாணம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,   மணிவண்ணன்,   சிவபாதம் கஜேந்திரகுமார்,   

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, போல் said:

போட்டியிடுபவர்களில் பின்வருபவர்கள் சிறந்த பிரதிநிதிகளாக செயற்படுவார்கள் என 50% - 70% நம்பிக்கை உள்ளது.

கூட்டமைப்பில்
வடமாகாணம்: சார்ள்ஸ் நிர்மலநாதன், சசிகலா ரவிராஜ், ஆர்னால்ட்

கிழக்கு மாகாணம்: ---

 

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில்
கிழக்கு மாகாணம்: ஆத்மலிங்கம் ரவீந்திரன் (ரூபன்),   சோமசுந்தரம்,   கணேசமூர்த்தி

வடமாகாணம்: விக்னேஸ்வரன்,   அனந்தி சசிதரன்,    அருந்தவபாலன்,    மாலினி ஜெனிற்றன்,   சிவசக்தி ஆனந்தன்,   சிவாஜிலிங்கம்,  

 

தமிழ் தேசிய மக்கள் முன்னணி:
வடமாகாணம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,   மணிவண்ணன்,   சிவபாதம் கஜேந்திரகுமார்,   

தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன முறை போன்று ஒரு ஆசனமும் எடுக்காது என்றே நினைக்கின்றேன்.

 

விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி யாழில் 1 அல்லது 2 ஆசனங்கள் எடுக்கலாம். வன்னியில் ஒன்று எடுக்கலாம்.

கூட்டமைப்பு 3 - 4 ஆசனங்களை யாழிலும், 3 - 4 ஆசனங்களை  வன்னியிலும் எடுக்கலாம். 

மட்டக்களப்பில் கூட்டமைப்புக்கு பாரிய சரிவு வரும். 2 பேர் வெல்லலாம். பிள்ளையான் ஒரு ஆசனம் எடுக்கலாம்.

திருகோணமலையில் சம்பந்தரைத் தவிர வேறு ஒரு தமிழரும் வெல்லமாட்டார்கள்.

அப்பாறையில் அம்மானுக்கும் கோடீஸ்வரனுக்கும் நடக்கும் இழுபறிப் போட்டியில் இரண்டு பேருமே வெல்லாமல் போகலாம் அல்லது மக்கள் tactical ஆக வாக்களித்தால் இருவரில் ஒருவர் வெல்லலாம்.

 

Share this post


Link to post
Share on other sites
23 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எமக்கு நியாயப்படியும் சட்டப்படியும் கிடைக்க வேண்டிய வாய்ப்புக்களையும் வசதிகளையும் ஒழுங்குவிதிக்கமைய தரமறுத்து அவற்றை தமது முகவர்களின் ஊடாக குழப்பமான முறையில் நடைமுறைப்படுத்த முயன்று அவற்றை எமக்கு வழங்கப்படும் சலுகைகளாக சித்திரிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.

இதுக்கு முழுத்துணையும் சம்பந்தன், சுமந்திரன் தானே!

Share this post


Link to post
Share on other sites
21 hours ago, கிருபன் said:

தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன முறை போன்று ஒரு ஆசனமும் எடுக்காது என்றே நினைக்கின்றேன்.

குறுகிய நலன்களுக்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழுவினர் செயற்பட்டு வந்தாலும்,  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பினரைப் போல தமிழினத்துக்கு விரோதமாக செயற்படாத நிலையில், கட்சிகள் சிதறியுள்ள நிலையில், அவர்களுக்கும் குறைந்தது ஓரிரு ஆசனங்கள் கிடைப்பது நல்லது என்றே நினைக்கிறன்! 

குறைந்தது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆவது பாராளுமன்றம் போனால் கிடைக்கும் அனுபவம் தமிழினத்துக்கு நல்லதாக மாறும் வாய்ப்புக்கள் இல்லாமலில்லை!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ஒரு வாரத்தில் எமது பூர்வீக காணிகளுக்கு தீர்வு வேண்டுமெனக் கோரி பிரதமர், ஜனாதிபதிக்கு மகஜர் முல்லைத்தீவு - கொக்கிளாய் பகுதியில் கனியவளத் திணைக்களம், கடற்படை மற்றும், தென்னிலங்கையிலிருந்து வருகைதந்துள்ள தொழிலாளர்கள் போன்ற தரப்பினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழர்களின் பூர்வீக காணிகளின் விடயங்கள் தொடர்பில் ஒருவாரத்தினுள் நல்ல தீர்வினைப் பெற்றுத் தரவேண்டுமென, அப்பகுதித் தமிழ் மக்களால் முல்லைத்தீவு மாவட்ட மாவட்ட செயலர் ஊடாக பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கான மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன. மேலும் குறித் மகஜரில் குறிப்படப்பட்டுள்ள விடயங்களாக, அத்துமீறி அபகரிக்கப்படும் எமது காணி விடயம் தொடர்பாக கொக்கிளாய் கிராமத்தில் வசிக்கும் மக்களாகிய நாங்கள் தங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவெனில் கொக்கிளாய் கிராமத்திலுள்ள விவசாயம் செய்யும் வயல் காணிகளையும் வாழ்வாதார குடியிருப்பு காணிகளையும் இலங்கை கனியவள நிறுவனம் அடாத்தாக அபகரிக்கிறது. அதுபோல் இலங்கை கடற்படை எமது குடியிருப்பு காணிகளையும் சுவீகரித்து படைமுகாம்களை அமைத்து வருகிறது. மேலும் தென்னிலங்கையிலிருந்து மீன்பிடி தொழிலுக்காக கொக்கிளாய் வந்த பெரும்பான்மையினர் எமது குடியிருப்பு காணிகளையும் வாழ்வாதார காணிகளையும் அனுமதியற்ற சட்டத்திற்கு புறம்பான வகையில் அடாத்தாக பிடித்து வீடுகளை அமைத்துகொண்டிருக்கிறார்கள். இதன் பின்னனியில் அரசாங்கமும் இராணுவமும் கடற்படையும் திரைமறைவில் எமக்கெதிராக செயற்படுகின்றனர். நாளர்ந்தம் எமது காணிகள் மென் மேலும் அபகரிப்புக்கு உள்ளாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நாம் ஊரை விட்டு அகதிகளாக வெளியேறிவிடும் பரிதாப நிலமை உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்தக்காணிகள் எமது முன்னோர்களை அடுத்து எமது பெற்றோர்கள் வயல் செய்து வந்தார்கள் இப்போது நாங்கள் அந்த காணியில் பயிர் செய்து வருகிறோம் மீழ்குடியேற்றத்தின் பின்பு அளந்து அடையாளப்படுத்தி தருவதாக மட்டும் கூறி எம்மில் சிலரிடம் கையொப்பம் பெற்றிருக்கின்றார்கள். கனியவள நிறுவனம் தொடர்ந்தும் அளவுக்கதிகமான எமது வாழ்வாதார நிலத்தையும் இன்னும் அத்துமீறி கையகப்படுத்துகிறார்கள். இதனால் ஊரைவிட்டு வெளியேறவேண்டிய பரிதாப நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். எமக்கு அந்தக்காணியைத் தவிர வேறு காணிகள் இல்லை. நாங்கள் இதில் நல்ல விளைச்சல்களைப் பெற்று எமது பிள்ளைகளை வளர்த்து வருகிறோம். எமக்கு வாழ்வாதாரம் தரும் காணிகள் ஏதும் இல்லை. இந்த வயல் காணியை மட்டும் நம்பித்தான் வாழ்க்கை நடத்துகிறோம். தொடர்ந்து பயிர் செய்து எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எமது கிராம கமக்கார அமைப்பு, கிராம சேவையாளர், சமூக ஆர்வலர், பங்குத்தந்தைக்கும் அறியத்தந்திருந்தோம். அதற்கு எந்த வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. எமது குரல்களுக்கும் மதிப்பு கொடுக்கப்படவில்லை. நாங்கள் மிகவும் வறிய மக்கள். எங்கள் நிலத்தை எங்களுக்கே தந்து விடுங்கள் நாங்கள் அந்த வயல் காணிகளை நம்பித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எனவே தாங்கள் இதை கவனத்தில் கொண்டு இந்த காணிக்குரிய நடவடிக்கைகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் தங்களை மிகவும் மனம் வருந்தி கேட்பதோடு, தாங்கள் எமக்கு நல்ல முடிவைத் தருவீர்கள் என நம்புகின்றோம். எனவே தாங்கள் இதைத் கருத்தில் கொண்டு செயற்படுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஒரு வாரத்தினுள் எமக்கு ஒரு நல்ல முடிவினை தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். என அம் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.   https://www.virakesari.lk/article/88063  
  • புதிய அரசு செல்லப்போகும் பாதையும் சிறுபான்மையின மக்களின் கேள்வியும் August 14, 2020   பொது ஜன பெரமுன அரசாங்கம் பதவியேற்றுக்கொண்ட இரண்டு தினங்களுக்குள்ளாகவே அது எந்தத் திசையில் பணயிக்கப்போகின்றது என்பது அதன் ஒவ்வொரு செயற்பாடுகளின் மூலமாகவும் தெளிவாகியிருக்கின்றது. அமைச்சரவையில் இரண்டே இரண்டு சிறுபான்மையினர். அமைச்சரவைப் பதவியேற்பின் போது சிறுபான்மையினருக்கான அடையாளங்கள் அகற்றப்பட்ட சிங்கக்கொடி. பதவியேற்பு நிகழ்வில் பௌத்த மதத் தலைவர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டமை.   காணி, காவல்துறை அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கப்போவதில்லை என்ற அதற்குப் பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகரவின் அறிவிப்பு. அமைச்சுக்களின் செயலாளர்கள் அனைவருமே சிங்களவர்கள். செஞ்சோலை நினைவு கூரலுக்குத் தடை. இப்படி இவை எல்லாம் ஓரளவுக்கு எதிர்பார்க்கப்பட்டவைதான். ஆனால், இவ்வளவு விரைவாக வரும் என்பதுதான் எதிர்பார்க்காததது. இதன் தொடர்ச்சியாக என்னவெல்லாம்  நடைபெறப் போகின்றது என்ற கேள்வியும் உள்ளது. ஜனாதிபதி கோட்டடாபய ராஜபக்‌ஷவின் அரசாங்கம் சிங்களத் தேசியவாத நிலைப்பாட்டிலிருந்து உருவாக்கப்பட்ட ஒன்று. “வியத்மக” என்ற அமைப்புத்தான் கோட்டாபயவை ஜனாதிபதியாகக் கொண்டுவர வேண்டும் என்பதற்கான முயற்சிகளை நான்கு வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்திருந்தது. சிங்கள தேசியவாத புத்திஜீவிகள், மற்றும் முன்னாள் படை அதிகாரிகளை உள்ளடக்கிய இந்த அமைப்பின் செல்வாக்கு அரசாங்கத்துக்குள் அதிகளவுக்கு இருப்பது இரகசியமானதல்ல. வியத்மகவின் சிந்தனையோட்டம் அரசாங்கத்திலும் பெருமளவுக்கு இருக்கின்றது. அரசாங்கத்துக்குள் நேரடியாக மட்டுமன்றி, அமைச்சுக்களின் செயலாளர்களாகவும் “வியத்மக” உறுப்பினர்கள் உள்ளே சென்றிருக்கின்றார்கள்.    சர்வதேச ரீதியாகவே தேசியவாத அமைப்புக்களின் எழிச்சியையும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் அவர்களுக்குள்ள இயலுமையையும் அண்மைக்காலத்தில் காணமுடிகின்றது. தீவிர தேசியவாதப் பாதையில் சென்றால்தான் அதிகாரத்தை இறுக்கமாக வைத்துக்கொள்ள முடியும் என்ற கருத்தும் உருவாகியிருக்கின்றது. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல என்றே தோன்றுகின்றது.    கண்டியில் இடம்பெற்ற அமைச்சரவைப் பதவியேற்பின்போது பறக்கவிடப்பட்டிருந்த “தேசியக் கொடிகளில்” சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மஞ்சள், பச்சை நிற அடையாளங்கள் நீக்கப்பட்டிருந்தன. தேசியக் கொடி எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பது அரசியலமைப்பிலேயே சொல்லப்பட்டிருக்கின்றது. அதற்கு முரணாக தேசியக் கொடியைப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம். அதனைத் தெரிந்துகொண்டிருந்தும் சிறுபான்மையினரின் அடையாளங்கள் நீக்கப்பட்ட “சிங்கக் கொடிகள்” பறக்கவிடப்பட்டிருந்தன. இது ஒரு தற்செயல் நிழ்வாக இருக்க வாய்ப்பில்லை. நன்கு திட்டமிட்ட ஒரு செயற்பாடு இது. இதன் மூலம் அவர்கள் சொல்லியிருக்கும் செய்தி வெளிப்படையானது.    இதனைவிட பதவியேற்பு வைபவத்தில் மற்றொரு விடயமும் அவதானிக்க முடிந்தது. பௌத்த மதத் தலைவர்களுக்கு மட்டுமே அங்கு விஷேடமாக இடமளிக்கப்பட்டிருந்தது. ஏனைய மதத் தலைவர்கள் அங்கு அழைக்கப்பட்டிருக்கவில்லை.  இந்தியாவுக்கும், சர்வதேசத்துக்கும் “13 பிளஸ்” என மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த போது பல தடவைகள் வாக்குறுதியளித்திருந்தார். ஆனால், “13” கூட முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுதான் களநிலை. குறிப்பாக மாகாண சபைகளுக்கான காணி, காவல்துறை அதிகாரங்களைக் கொடுப்பதற்கு மத்திய அரசாங்கம் தயாராகவில்லை. இப்போது மாகாண சபைகளுக்கான இராஜங்க அமைச்சராப் பதவியேற்றிருக்கும் சரத் வீரசேகர, “இந்த அதிகாரங்களை வழங்கினால் காவல்துறை பிளவுண்டு போய்விடும். என்பதால் அவற்றை வழங்க முடியாது” என பகிரங்கமாகவே அறிவித்திருக்கின்றார்.   சரத் வீரசேகர முன்னாள் கடற்படை அதிகாரி என்பதுடன், “வியத்மக” அமைப்பின் முக்கியமான ஒருவர் என்பதும் கவனிக்கத்தக்கது. கடும் சிங்களத் தேசியவாதப் போக்கைக் கொண்ட அவர், கடந்த சில வருடங்களாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்களிலும் பிரசன்னமாகி சர்ச்சைகளை உருவாக்கிவருபவர். அவ்வாறான ஒரு நிலைப்பாட்டைத்தான் அவர் எடுப்பார் என்பது ஆச்சரியமானதல்ல. இன்று நடைபெறவிருந்த செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. போரில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவுகூருவதைத் தடை செய்ய முடியாது என்ற நிலைப்பாட்டை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தது. ஆக, இவ்வாறான நினைவுகூரல்களைத் தடுப்பது ஐ.நா.வின் விதி முறைகளை மீறுவதாகவே இருக்கும். அரசாங்கத்தில் இராணுவத்தின் செல்வாக்கு அதிகளவுக்கு இருக்கும் நிலையில், படையினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக்கூடிய இது போன்ற நிகழ்வுகள் அரசாங்கத்துக்குச் சங்கடத்தைக்கொடுப்பதாகவே இருக்கும். தற்போது பதவியேற்றிருப்பது சிங்களத் தேசியவாதத்தையும், இராணுவப் பின்னணியையும் கொண்ட ஒரு அரசாங்கம். இப்படித்தான் இந்த அரசாங்கம் செயற்படும் என்பது எதிர்பார்க்கக்கூடியதுதான். இதனை எதிர்கொள்வதற்கும், தமிழ் மக்களின் இருப்பை உறுதிசெய்வதற்கும் தமிழ்த் தரப்பின் பிரதிநிதிகள் எந்தளவுக்குத் தயாராகவுள்ளார்கள்? இதுதான் தமிழ் மக்களிடம் இன்றுள்ள கேள்வி! http://thinakkural.lk/article/62324
  • இன்று பிறந்த நாளை... வெகு விமர்சையாக கொண்டாடும்,  🎇 குமாரசாமி அண்ணாவிற்கும்,  புத்தனுக்கும்.... 🍭 💖 உளம் கனிந்த.... பிறந்த நாள், வாழ்த்துக்கள்.  🎂 உங்கள்  இரண்டு பேருக்கும்... எத்தினை வயது? எண்டு சொல்லுங்கோவன். ப்ளீஸ்.  
  • முன்னணியின் தேசிய அமைப்பாளர், பேச்சாளர் பதவிகளிலிருந்து மணிவண்ணன் நீக்கம்; மத்திய குழு அதிரடித் தீர்மானம் August 14, 2020   தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணனை நீக்குவதற்கு கட்சியின் மத்திய குழு தீர்மானம் எடுத்துள்ளதாக யாழ்ப்பாணச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. முன்னணியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றபோதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.   நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மணிவண்ணண் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்டார் என்று கட்சியினர் தெரிவித்து வந்த நிலையில் நேற்று அவசரமாகக்கூடி கட்சியின் மத்திய குழு மணிவண்ணனை நீக்குவதென முடிவெடுத்துள்ளது.   http://thinakkural.lk/article/62424