Jump to content

கொவிட் -19 நிதியத்தின் நிதிக் கையிருப்பு அதிகரிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொவிட் -19 நிதியத்தின் நிதிக் கையிருப்பு அதிகரிப்பு!

1585041608-corona-map-3.jpg?189db0&189db0

இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,448 மில்லியனாக அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெலிசறை சுவாச நோய்களுக்கான வைத்தியசாலையினால் சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபா நிதி நேற்றைய தினம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் அயகம பிரதேச செயலகத்தினால் சுமார் 35 ஆயிரம் ரூபாவும், பேருவலை நகர சபையினால் ஒரு லட்சத்து 31 ஆம் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தனிப்பட்ட ரீதியிலும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட குறித்த நிதியத்திற்கு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்கள் பங்களிப்பு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/கொவிட்-19-நிதியத்தின்-நிதி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட குறித்த நிதியத்திற்கு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்கள் பங்களிப்பு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நன்கொடைகளை வைத்து உயரப்போகும் அதிஷ்டசாலி அரசியல்வாதிகளுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

இந்த நன்கொடைகளை வைத்து உயரப்போகும் அதிஷ்டசாலி அரசியல்வாதிகளுக்கு வாழ்த்துக்கள்.

இரு சிங்களக்கட்சிகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசம்

ஐக்கிய தேசியக்கட்சி
நானும் அடி நீயும் அடி முடிந்தவனெல்லாம் அடி

சுதந்திரக்கட்சி
ராஜபக்ச குடும்பம் மாத்திரம் துடைத்தெடுத்து விட்டு மற்றவர்களுக்கு சில்லறையை விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆசிரியர்கள் என்கிற வகையில் என்னை அதிகம் பாதித்தவர் பேரின்பராஜா சேர். அடுத்ததாக நான் அதிகம் மதிப்பு வைத்திருப்பவர் பிரேம்நாத் மாஸ்ட்டர். அவர்பற்றியும் முன்னர் ஒருமுறை எழுதியிருக்கிறேன். இவர்களின் பாதிப்பும், அவர்களுடனான் எனது நினைவுகளும் என்றுமே மறக்கமுடியாதவை.   உங்களின் ஆதரவிற்கு நன்றி சுவி. எனது எழுத்து நடை எப்போதுமே ஒரே மாதிரியேதான் இருக்கிறது. இதனை மாற்ற என்னால் முடியவில்லை. சிலருக்கு இதனைப் படிக்கும்போது "ஒரே மாதிரி எழுதுகிறான்" என்கிற சலிப்பும் உருவாகலாம். அடுத்ததாக, எனது அனுபவக் குறிப்புகளில் சில வெறும் அனுபவங்கள் மட்டும்தான். பெரிதாக எதுவுமே இருப்பதில்லை. ஆனாலும், அனுபவத்தினை இங்கு பலருடன் பகிரும்போது ஒரு ஆத்ம திருப்தி ஏற்படுகிறது. அதனால் எழுதுகிறேன். அத்துடன், எனது அனுபவங்களில் யாழில் இருக்கும் ஒருசிலராவது வந்துபோவார்கள், குறைந்தது நான் எழுதும் விடயங்கள் பற்றி அறிந்திருக்கிறார்கள். அதனால், அவர்களுக்கும் எனது அனுபவக் குறிப்பு ஒரு நினைவு மீட்டலாக மாறியிருக்கிறது.   மிக்க நன்றி சிறி, நான் எழுதுவதை படிக்கும் ஒரு சிலரில் நீங்களும் ஒருவர். உங்களின் ஆதரவுக்கு எனது நன்றிகள்.   உங்களின் கருத்தைப் படித்து மிகவும் மகிழ்ந்தேன். எனது எழுத்து உங்களையும் எனது அனுபவப் பகிர்வில் ஒருவனாக உணரவைத்தது என்பது மனநிறைவைத் தந்தது. மிக்க நன்றி !   மிக்க நன்றி சுவைப்பிரியன். நீங்களும் மட்டக்களப்பில் வாழ்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சிலவேளை நான் குறிப்பிடும் ஆசிரியர்கள் பற்றி அறிந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்.    எனக்குத் தெரியும் அண்ணா. நான் எழுதும் எல்லாக் கட்டுரைகளிலும் நீங்கள தவறாது வந்து கருத்துப் பகிர்ந்திருக்கிறீர்கள். தொடர்ச்சியாக உற்சாகமூட்டி ஆதரவளித்திருக்கிறீர்கள். வழமைபோல, இன்றும் உங்களின் அயராத ஆதரவிற்கு நன்றியண்ணா!   நன்றி குமாரசாமியண்ணை. உங்களுடன் இக்களத்தில் பலவிடங்களில் முரண்பட்டு எழுதியிருக்கிறேன். அப்படியிருந்தும் நீங்கள் தொடர்ந்தும் எனது அனுபவக் குறிப்புக்களில் ஆதரவு தந்துவருகிறீர்கள். மிக்க நன்றியண்ணா! நீங்கள் கூறுவது மெத்தச்சரி. பேரின்பராஜா சேர் வந்திருக்காவிட்டால் நிச்சயம் எனது வாழ்வு மாறிப்போயிருக்கும். ஆம், நான் அதிஷ்ட்டசாலிதான்.  கமலா டீச்சருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். பாடசாலையில் படித்த காலத்திலும், பலகலைக் கழக அனுமதிக்குக் காத்திருந்த காலத்திலும் அவர் எனக்கு உதவியிருக்கிறார். கண்டிப்பானவர், ஆனால் உதவும் மனம் கொண்டவர்.  அவர் மரணித்த செய்தி கேள்விப்பட்டேன். அவரது மூத்த மகன், பிலிப் இங்குதான் இருக்கிறார். பலமுறை அவரைக் கண்டு பேசியிருக்கிறேன். தேவநம்பி என்று இன்னொரு மகனும் அந்தக் காலத்தில் எமக்கு ஒரு வகுப்பு மேலே படித்தார். இப்போது பொறியியலாளராக இருக்கிறார் என்று நினைக்கிறேன். எமது வகுப்பில் படித்த பல மாணவர்கள் பலகலைக் கழகம் சென்றார்கள். மதனும், சுகந்தும் வைத்தியர்களானார்கள். ராதா, கிரிந்தி, மெளலி ஆகியோர் பொறியியிலாளர்களானார்கள். மெய்யழகன் பட்டப்படிப்பு முடித்ததாகக் கேள்விப்பட்டேன். பிரபா தொழிநுட்ப அதிகாரியாகவும் ஏனையவர்கள் நல்ல துறைகளில் தொழில்புரிவதாகவும் அறிந்தேன். ஆம், அந்த வகுப்புக் கொஞ்சம் பிரபலம் தான். எனது நண்பர்களையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் ரதி. உலகம் சின்னதுதான். உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி !
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • எனது வாழ்க்கையில் என்னை மிகவும் பாதித்த, தாக்கத்தினை உண்டாக்கிய மனிதர்கள் பற்றிப் பேசவேண்டும் என்று விரும்பினேன். அதனால்,  அவ்வப்போது இவர்கள் பற்றி எழுதிவருகிறேன். இதன்மூலம் எனது சிறுவயது நினைவுகளை இரைமீட்டிப் பார்க்கவும் என்னால் முடிகிறது. பேரின்பராஜா சேர் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர். இடையிடையே கல்வித்திணைக்களத்தின் மூலம் வெவ்வேறு பாடசாலைகளுக்குச் சென்று கஷ்ட்டப்படும் மாணவர்களுக்கு கணிதத்தினைக் கற்பிப்பதில் தேர்ச்சி பெற்றவர். கணிதத்தின்மீது எனக்கு விருப்பினை உருவாக்கியவர் அவர்தான். அவரன்றி இன்று ஒரு பொறியியலாளனாக நான் வந்திருக்கச் சாத்தியமில்லை என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். ஆகவேதான் அவர்பற்றிப் பேசுவேண்டும் என்று விரும்பினேன்.  இதே காலத்தில் இன்னும் பல ஆசிரியர்களும் எனக்குக் கற்பித்தார்கள். அகஸ்டின் டீச்சர் மூலம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் நாடகம் ஒன்றிலும் பங்குகொள்ளும் அனுபவம் கிடைத்தது. நத்தார் கால ஒளிவிழா நிகழ்வுகளில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை அரங்கேற்ற அவர் பட்ட பாடும், எம்மைப் பயிற்றுவிப்பதில் அவர் காட்டிய ஈடுபாடும் மெச்சத்தக்கது. தனது சொந்தப் பிள்ளைகள் போலவே அவர் எம்மை நடத்தினார். சுயநலமின்றி பிள்ளைகளை வழிநடத்தி, தம்மால் முடிந்தளவு முன்னேற்றப் பாடுபடும் இவர்கள் போன்ற ஆசிரியர்களிடம் கற்றது எனது பாக்கியமே.  அதேபோல கோமதி டீச்சர். பாடசாலையில் எனது வகுப்பிற்கு வர்த்தகமும் கணக்கியலும் அவர் கற்றுத்தருவதில்லை. ஆனால், நான் ஒருமுறை அவரிடம் கணக்கியலில் உதவி கோரியிருந்தேன். எனக்கு பாடசாலையில் அவர் படிப்பிக்காதபோதும், மாலை நேரங்களில் இன்னும் ஒரு நண்பனுடன் அவரின் வீட்டிற்கு அழைத்துக் கற்றுத்தந்தார். டியூஷன் பணத்தை வாங்க மறுத்து சில மாதங்களாவது எமக்குச் சொல்லித் தந்தார்.  ஆங்கிலம் கற்றுத்தந்த சேவியர் டீச்சர். சொந்தப் பிள்ளைகளுடன் பேசுவது போல மிகவும் அன்பாகவும், இயல்பாகவும் எல்லோருடனும் பேசும், பழகும் அவர் வகுப்பிற்கு வந்தாலே கலகலப்பாகிவிடுவோம். மாணவர்கள் மேல் அவர் வைத்திருந்த நேசம் உண்மையானது. அதே போல தமிழ் கற்றுத்தந்த மணியம் (பெயர் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்) மாஸ்ட்டர். வகுப்பில் இறுதிவாங்கில் இருக்கும் ஒருவனால் விவரணக் கட்டுரையும் எழுதமுடியும் என்று முழு வகுப்பிற்கும் சொல்லிக் காட்டியவர் அவர். மாலை நேரக் காட்சியை வர்ணித்து எழுதுங்கள் என்று கூறியபோது, நான் எழுதிக்கொடுத்த கட்டுரையினை, சுகந்தை அழைத்து, "இதை முன்னுக்கு வந்து நின்று சத்தமாக வாசி" என்று அவர் கூறவும், சுகந்தும் அதனைப் படித்து முடித்தான். வாசித்து முடித்தவுடன், "ஆர் இதை எழுதியது? " என்று கேட்கவும், நான் கையை உயர்த்திக் காட்டினேன். அன்றிலிருந்து வகுப்பில் தமிழ்க் கட்டுரை எழுதுவதென்றால், என்னிடம் மாணவர்கள் வருவதும் நடந்தது.  இவர்கள் எல்லாருமே ஏதோ ஒரு வகையில் எனது வாழ்க்கையை தீர்மானித்திருக்கிறார்கள்.இவர்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.