Jump to content

தெல்லிப்பழையில் 9 ஆடுகளை கடித்துக் கொன்ற சிறுத்தை!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தெல்லிப்பழையில் 9 ஆடுகளை கடித்துக் கொன்ற சிறுத்தை!

IMG_20200707_164555-960x530.jpg?189db0&189db0

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை மாவை கலட்டி பகுதியில் வீட்டில் கட்டியிருந்த 9 ஆடுகளை சிறுத்தை ஒன்று கடித்து கொன்றுள்ளது.

இன்று (07) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வீட்டில் கட்டப்பட்டிருந்த 19 ஆடுகளில் 9 ஆடுகள் கொல்லப்பட்டதுடன் ஐந்து ஆடுகள் காயமடைந்துள்ளது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சருகுபுலி வட பகுதியில் இருக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சருகுபுலி வட பகுதியில் இருக்கா?

தென்பகுதிலே, ஆக்கினை தாங்க ஏலாம  வெடி வைச்சு கொல்லுறாங்கள்.

அறுந்து போவார்.... கொண்டுவந்து உங்க விட்டுடாங்களோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் மரநாய் தான் கோழி ஆட்டைக் கடிப்பது. இப்ப புதிசா சருகுப்புலி எங்கிருந்து வந்தது..??!

Link to comment
Share on other sites

14 minutes ago, nedukkalapoovan said:

ஊரில் மரநாய் தான் கோழி ஆட்டைக் கடிப்பது. இப்ப புதிசா சருகுப்புலி எங்கிருந்து வந்தது..??!

உண்மையாகவே ஊரில் சருகுப்புலி என்று ஒன்று இருக்கின்றதா? ஓம் எனில் சருகுப் புலி என்றால் எப்படி இருக்கும்? ஆங்கிலத்தில் இதனை எப்படி அழைப்பர்?

ஊரில் நான் வளர்த்த புறாக்களில் பத்து பதினைந்து புறாக்களை நெடுக்கு குறிப்பிட்டு இருக்கும் மரநாய் ஒரே இரவில் வேட்டையாடி கொன்றது நினைவுக்கு வருகுது,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது புதுசா இருக்குது.சந்தேகம் என்னவென்டால் உந்த புலிக்கு நாலு காலா அல்லது இரன்டு காலா என்பது தான்.
பி.கு-நான் வீடியோ பாக்கவில்லை தவறு இருந்தால் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nedukkalapoovan said:

ஊரில் மரநாய் தான் கோழி ஆட்டைக் கடிப்பது. இப்ப புதிசா சருகுப்புலி எங்கிருந்து வந்தது..??!

எங்காவது இருந்து வந்திருக்கலாம்.. கூகிளில் போய் பாருங்கள் வேறு,வேறு செய்திகளில் கடந்த காலங்களில் நடந்தவை பற்றி..என் அறிவுக்கு எட்டியவரை தேடியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரநாயின்  வேலை  அதுகளுக்கு வெறி பிடிப்பது ஆக்கும் தமது உணவுதேவைக்கு அதிகமாக கோழி புறா ஆடுகளை கொல்லும்  மற்றைய மிருகங்கள் வரைமுறையுடன் நிக்கும் வீடியோவில் அதிகாரிகள் தான் சொன்னவை சருகு புலி என்று சொல்கிறார் .

நாங்கள் இருக்கும் காலத்தில் கோழிபண்ணைக்குள்  இறங்கி ஒரு இரவில் 400 கோழிக்கு மேல் போட்டு தள்ளி விட்டுதுகள் இதே போல் முழுமையாக உண்ணாமல் விட்டிருக்கும் வீடியோவில் உள்ளது போல் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

இது புதுசா இருக்குது.சந்தேகம் என்னவென்டால் உந்த புலிக்கு நாலு காலா அல்லது இரன்டு காலா என்பது தான்.
பி.கு-நான் வீடியோ பாக்கவில்லை தவறு இருந்தால் மன்னிக்கவும்.

சுவைப்பிரியன்,  காணொளியை.... கட்டாயம் பாருங்கள்.

ஒரு பெரிய மிருகம் தான்.... அந்த ஆடுகளை கடித்து உள்ளது போல் தெரிகிறது.

நிச்சயம் அது, மரநாய் கடித்து வந்த காயம் போல் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

இது தெற்கில இருந்து பலாலி ஊடாக இறக்குமதி செய்யப்பட்டிருக்க வேணும்!

இதுவரை குடா நாட்டில் இல்லாத ஒன்று திடீரென வர சாத்தியம் இல்லை.
சொறிலங்கா அரசின் இனவழிப்பு யுக்திகளில் ஒன்டு.

புதுக்குடியிருப்பில் கொண்டைனரில் குரங்குகளை கொண்டுவந்து இறக்கினத்தை நேரில் கண்டது முன்னர் வந்த செய்தி.

வன்னி காட்டுல யானைகளையும், முதலைகளையும் இறக்கினத்தை நேரில் கண்டதும் முன்னர் வந்த செய்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

உண்மையாகவே ஊரில் சருகுப்புலி என்று ஒன்று இருக்கின்றதா? ஓம் எனில் சருகுப் புலி என்றால் எப்படி இருக்கும்? ஆங்கிலத்தில் இதனை எப்படி அழைப்பர்?

ஊரில் நான் வளர்த்த புறாக்களில் பத்து பதினைந்து புறாக்களை நெடுக்கு குறிப்பிட்டு இருக்கும் மரநாய் ஒரே இரவில் வேட்டையாடி கொன்றது நினைவுக்கு வருகுது,

சருகுபுலி என்று எதை அழைப்பர் என்று தெரியவில்லை! ஆனால், இலங்கையில் இருக்கும் ஒரேயொரு பெரிய வேட்டையாடும் பூனையினமென்றால் அது சிறுத்தைப் புலி தான் (சிங்களத்தில் "கொட்டி" அல்லது "திவிய" என்று அழைப்பர்). 

இலங்கையைப் பொறுத்தவரை சிறுத்தைகள் வறள்வலயத்தில் அதிகம் காணப்படுகின்றன. யாழில் இருப்பதற்கு சாத்தியங்கள் இல்லாமலில்லை!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.