Jump to content

கோணேஸ்வரம் கோயில் அல்ல அது கோகண்ண விகாரையே என்கிறார் மேதானந்த தேரர்.!


Recommended Posts

விஜயன் இலங்கைக்கு வரும்போதே இங்கு பஞ்ச ஈஸ்வரங்கள் இருந்தன

விஜயன் இலங்கைக்கு வரும்போதே இங்கு பஞ்ச ஈஸ்வரங்கள் இருந்தன

 

திருக்கோணேச்சரம் மற்றும் நல்லூர் முருகன் ஆலயம் என்பன தொடர்பாக எல்லாவல மேதானந்த தேரர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சைவத்தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளன எனத் தெரிவித்துள்ள அகில இலங்கை சைவ மகா சபை, இலங்கைக்கு பௌத்த சமயம் கொண்டுவரப்படும் முன்னரே இங்கு சிவ வழிபாடு இருந்தது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் குடியேறி சிங்கள இனத்தை தோற்றுவித்த விஜயன் வருகையின் போதே திருக்கோணேச்சரம் உள்ளிட்ட பஞ்ச ஈச்சரங்கள் இங்கே இருந்ததாகவும் அங்கு சென்று விஜயன் வழிபட்டதாகவும் மகாவம்சமே ஒப்புக்கொள்கின்றது என்பதையும் சைவ மகா சபை வெளிப்படுத்தியுள்ளது.

மூத்த சிவனின் மகனாகிய தேவநம்பியதீசன் கி.மு 243 இல் பௌத்த மதத்திற்கு மதம் மாறும் வரை இலங்கை முழுவதும் சைவ சமயமே பின்பற்றபட்டது என்ற வரலாற்று உண்மையை எல்லாவெல மேதானந்த தேரர் மனங்கொள்வது நல்லது எனவும் சைவ மகா சபை தெரிவித்துள்ளது.

கிழக்கு தொல்லியல் செயலணிக்கு நியமிக்கப்பட்ட மேதானந்த தேரர் சமீப காலமாக சைவ ஆலயங்கள் தொடர்பாக வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அகில இலங்கை சைவ மகா சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

தமிழர்களுடையதும் இலங்கையினுடையதும் பூர்வீக புராதன சமயமான சைவத்தினுடைய ஆதி வழிபாட்டு இடமும் பாடல் பெற்ற தலமும் மாமன்னன் இராவணனுடைய காலத்திலேயே இருந்த ஈச்சரமுமான திருக்கோணேச்சரத்தை விகாரை அமைந்திருந்த இடம் எனவும் நல்லூர் முருகன் ஆலயம் தொடர்பாகவும் மேதானந்த தேரர் வெளியிட்டுள்ள கருத்துகள் சைவத் தமிழர்களை மிகவும் மனவேதனைக்கு உள்ளாகி உள்ளது.

இராவணன் வெட்டு போன்ற மிகப் பண்டைய அடையாளங்களையும், பின்னர் குளக்கோட்ட மன்னனுடைய திருப்பணி செய்திகளை கொண்டதும் 1500 ஆண்டுகளிற்கு முன்னரே தாய் தமிழகத்திலேயே பெரிதும் அறியப்பட்டு போற்றப்பட்ட திருக்கோவிலாக இருந்தமையால் அங்கிருந்தே திருஞான சம்பந்த நாயனாரால் பாடல் பெற்ற தலமாகவும் திருக்கோணேச்சரம் விளங்குகின்றது.

திருமூலரால் சிவபூமி என்று அழைக்கப்பட்ட இந்த நாட்டில் ஒரு காலத்தில் சிவ வழிபாடு மட்டுமே எங்கும் பரந்து வியாபித்து இருந்தது. பின்னர் காலத்திற்கு காலம் அந்நியர் வருகைகளால் ஏற்பட்ட மத மாற்றங்கள் காரணமாக பல மதங்கள் தோற்றுவிக்கப்பட்டு சைவத்தின் பல புராதன சிவாலயங்கள் அழிக்கப்பட்டன. இதேபோன்று சைவத்தமிழ் மக்களுடைய வாழ்விடங்கள் பறிக்கப்பட்டன.

இத்தனை அநீதிகள் நடைபெற்ற போதிலும் அவற்றை மீள உரிமை கோரி மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்காமல் இருக்கும் ஒரு மக்கள் குழுமத்தை மீண்டும் மீண்டும் அனைவரும் சீண்டிப் பார்ப்பது எம் மக்களின் மனங்களில் ஆறாத் துயரை தோற்றுவிக்கின்றது.

எனவே, இவ்வாறான கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்துவதை மேதானந்த தேரர் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும், உண்மையையும் மத நல்லிணக்கத்தையும் நேசிக்கும் அனைவரும் நாட்டின் பூர்வீக குடிகளான சைவத் தமிழர்களின் வழிபாட்டு தொன்மங்களை பாதுகாக்க உரத்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

-யாழ். நிருபர் பிரதீபன்-

http://tamil.adaderana.lk/news.php?nid=130753

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Nathamuni said:

அய்யய்யோ, அவர் இன்னும் கிளம்பலையா.....

இவர் தானே, லிஸ்டில இல்லாத புது விசயம் சொன்னார்.. கப்பலில் போய் கொண்டிருந்த அமீர் பாய், இறங்கி ஓடி போய், கக்கா, இருந்ததால, அமீர்+கக்கா = அமெரிக்கா என்று பெயர் வந்தது என்று.

இஞ்சை கேட்டுதே நாதர்! உந்த விசயம் ரம்புக்கு தெரியுமோ? தெரியாட்டில் ஒருக்கால் ரம்புக்கு தெரியப்படுத்தி விடுங்கோ. மிச்சத்தை சிங்கன் பாத்துக்கொள்வார் :grin:

Gefahr für Börsen und Anleger, wenn Donald Trump gewinnt

Link to comment
Share on other sites

On 8/7/2020 at 01:21, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ராமேஸ்வர கோயில் அல்ல ராமன்ண விகாரையே அது...என்டு சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை போல் கிடக்கு..☺️..😊

இத சொல்லப்போவது வேறுயாருமல்ல. மோடி தான் விழுந்தடிச்சு சொல்லுவார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேதானந்த தேரரின் கருத்து விவகாரம்; ஆதாரத்துடன் செந்தில் கண்டனம்!

unnamed-3.jpg?189db0&189db0

 

வரலாற்று புகழ்மிக்க திருக்கோணேஸ்வரம் ஆலயம் பௌத்த விகாரையின் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக எல்லாவல மேதானந்த தேரர் வெளியிட்ட கருத்தை செந்தில் தொண்டமான் கண்டித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

“தமிழர்களின் வரலாறு, கலாசாரம் தொடர்பில் தவறான கருத்துகள் முன்வைக்கப்படும்போது அதனை எதிர்ப்பதற்கு நான் ஒருபோதும் தயங்குவதில்லை.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட செயலணியின் செயற்பாடானது தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதே அன்றி, சமூகத்துக்கு இடையில் குழப்பங்களைத் தோற்றுவிக்கும் வகையில் கருத்துகளை வெளியிடுவதல்ல.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை மக்களின் அங்கத்தவன் நான். அந்த வகையில் தேரருக்கு ஒரு விடயத்தைச் சொல்வதற்கு எந்தளவுக்கு உரிமை இருக்கிறதோ அதேபோல அவர் சொல்லும் கருத்து தவறு என அதனை எதிர்ப்பதற்கும் எனக்கு முழு உரிமையும் உண்டு.

இந்து மதம் ஒரு புனிதமான மதம். அந்த மதத்தை பின்பற்றுவபர்கள் சமய ஒழுக்கத்துடன் வாழ்பவர்கள். அனைத்து மதங்களையும் சமமாக மதிப்பவர்கள். அவ்வாறானவர்கள் வேறு மத சின்னங்களை அழிக்கும் அளவுக்கு கீழ்த்தரமானவர்கள் அல்லர்.

தேரரின் கருத்து தொடர்பில் நான் விரிவாக ஆராய்ந்தேன். இலங்கையில் தமிழ் எழுத்துக்கள் பதிவாகிய ஆண்டு முதற்கொண்டு சிங்கள எழுத்துகள் எவ்வாறு, எப்போது பதிவாகியன என்பது தொடர்பான தகவல்களை சேகரித்துள்ளேன்.

சிகிரியாவில் தான் மிகப் பழைமையான சிங்கள இலக்கிய எழுத்துகள் காணப்படுகின்றன. அவை கி.பி. 7ம் நூற்றாணடைச் சேர்ந்தவை என கணிப்பிடப்படுகிறது. ஆனால் கி.பி. 5ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வாயு புராணத்தில் இலங்கை, மலையதீவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அந்தத் தீவின் கிழக்கிலே அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் பற்றியும் எழுதப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களின் பூர்வீக வரலாறு விஜயன் வருகைக்கு முன்னர், அதாவது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய பண்பாடுகளில் இருந்து தொடங்குவதாக கட்டுக்கரை அகழ்வாய்வுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற சான்றுகளிலிருந்து தெரியவந்துள்ளது. சிங்கள மொழி உருவாக்கம் பெற்றதாகக் கருதப்படும் காலகட்டமான கி.பி. 7ம் நூற்றாண்டுக்கு முன்னரே தமிழர்கள் வாழ்ந்த நிலப்பகுதியாக இலங்கை விளங்கியமைக்கான ஆதாரபூர்வமான ஆவணங்கள் உண்டு.

ஜனாதிபதி செயலணி உறுப்பினரான தேரரின் தேவையற்ற, மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையிலான இந்தக் கருத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன். அதேபோல தேரரின் கருத்துக்கு ஆவண ரீதியாக உறுதிப்படுத்தவும் தயார், அரசியல் ரீதியாக எதிர்ப்பதற்கும் தயார்” – என்றார்.

https://newuthayan.com/மேதானந்த-தேரரின்-கருத்து/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.