Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

நிறமில்லா மனிதர்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்பனி படர்ந்த ஊதல் காற்று ஒரு காது வழியே ஊசியாய்த் துளைத்து மற்றைய காது வழியே வெளியேறி அவனை ஒரு வழிப் பண்ணிக்கொண்டிருந்தது. பனித்துகள்கள் மெல்லிய மலர் இதழ்களாய் காற்றோடு இழைந்து பூமியெங்கும் வெண்மையான நிலவிரிப்பை படர விட்டிருந்தது. கிராமப்புறமாதலால் பனிக்காலத்தில் கூட பசுமை மாறாத பச்சை மரங்களும் இலை உதிர்ந்திருந்த சாலையோரத்து மரங்களும் பனி படர்ந்து வெள்ளை வெளேரென நத்தார்ப் பண்டிகை மடலில் காட்சியளிப்பது போன்ற தோற்றத்தை அவனுக்கு நினைவூட்டியது. இன்று போலத்தான் அன்றொரு நாள் கொட்டிய பனியும் நடந்த சம்பவமும் அவனுக்கு ஒரே சம்பவம் மீண்டும் அதே போல நடப்பது போன்றதொரு மாயையைத் தோற்றுவிக்கிறது. நினைவுகள் அசை போட்டன.

கெலி அவனோடு வேலை பார்க்கும் வயோதிபத்தை நெருங்கும் பெண் தோழியொருவர். அவளின் வழமையான நக்கல் நளினங்கள் தனித்தன்மை வாய்ந்ததால் அவளுடனான சம்பாசனைகள் அவனுக்கு பிடிக்கும். பனி கொட்டியதைப்பற்றி சலிப்பும் நக்கலுமாகக் கலந்து அவள் கூறியது அவனுக்கு ஞாபகம் வந்ததில் அவனையறியாமல் சிரிப்பும் வந்தது. அப்பெண்ணுக்கு குளிர்காலம் என்றாலே ஆகாது. ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு சலிப்புக் கலந்த புதுக்கதையோடு தான் வேலைக்கு வருவாள். அன்றும் அப்படித்தான் ஒரு மாலை வேளையில் வேலை முடிவதற்கு இன்னும் சில மணிகளே இருந்த போது, வானிலை அறிக்கையையும் பொய்யாக்கியபடி, பனிக்கட்டிகள் சின்னஞ்சிறு கூழாங்கற்களாகக் கொட்டத்தொடங்கியது. அவனுக்கு சாளரத்தினூடே பனிபொழிவதைப் பார்க்கும் வசதி இருந்ததில், பார்க்கும் போதே மனமெல்லாம் சிலீரென்ற குளிர் இதமாகப் பரவத்தொடங்கியது.


“ என்ன ஒரு அழகு!” என்றவனை பின்னே வந்து நின்றகெலி பெயருக்கேற்றாப் போல் ஒரு விதமான , அதீத ஆர்வம் கலந்த பதட்டத்தோடு அவனையும் தள்ளிக்கொண்டு சாளரத்தின் வழியே வெளியில் பார்த்தவள் புறுபுறுக்கத்தொடங்கினாள்.

“ இதையெல்லாம் நத்தார் பண்டிகை வாழ்த்து மடல்களில் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த பனி மழைஅன்றாட வாழ்க்கையை நாசப்படுத்தி விடும்!”
தாம் நினைப்பதை அப்படியப்படியே முகத்துக்கு நேரே சொல்லிவிடும் பழக்கம் இக்கலாச்சாரத்தினது பாதிப்பு போலும் என்று அவன் நினைத்துக்கொண்டான்.

வறுத்தெடுக்கும் யாழ்ப்பாணத்து வெயிலில் காய்ந்து போய், கமம் செய்த காலத்தில் மழைக்காக ஏங்கிய வானம் பார்த்த பூமி அவன் மனதில் ஊசலாடியது. வெயிலில் காய்ந்ததால் தான் எனக்கு குளிர்காலம் பொற்காலமாய் இருக்கிறதோ என எண்ணிக்கொண்டான். இப்பனி இன்னும் அதிகமாகக் கொட்டக் கொட்ட கெலிக்கு பதட்டமும் அதிகமானது.


“ இன்றைக்கு வீட்டுக்கு போனமாதிரித்தான், காரும் எடுக்கேலாமல்ப் போகப்போகிறது !” தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். இவனையும் தன்னோடு கூட்டுச்சேர்த்துக் கொண்டு வேளைக்கே வீடு போய்ச்சேர்வதே அவள் நோக்கமாயிருந்தது. அவளது வீடும் அவனது வீடும் எதிர் எதிர்த்திசையில் இருந்தாலும் ஒரு மரியாதை அல்லது மனிதாபிமானம் கலந்த உணர்வில் அவனையும்  தன்னுடன் வருமாறு வற்புறுத்தினாள். இவளோடு போனால் அநியாயத்துக்கு வழியெங்கும் புறுபுறுத்துக் கொண்டே தான் வருவாள் என நினைத்துக்கொண்டவன் தான் இன்னும் பத்து நிமிட அவசர மின் அஞ்சல் வேலைகளை முடித்துக் கொண்டு புறப்படுவதாய் சாக்குப்போக்கு சொல்லி அவளை அனுப்பி வைத்தான்.

அப்படி அவளுடன் போகாமல் விட்டது எவ்வளவு தவறென்று புரிவதற்கு அவனுக்கு அதிக நேரமாகவில்லை. உறைபனியை விட கடுங்குளிருடன் கலந்து வீசிய பனிக்காற்று ஒரு செவி வழியே புகுந்து மறுகாது வழியே வெளியேறியது. எதிர்பாரா விதமாய் மாறிய காலநிலையை சமாளிக்கக்கூடிய உடைகளும் இன்றி, மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து சேவையுடன் எத்தனை மணிக்கு வீடு போய்ச்சேர்வதென்ற கவலை அவனை பலமாக ஆட்டத்தொடங்கியது.

பஸ் நிலையம் யாருமன்றி அனாதரவாய் பனிமூட்டத்தில் மூழ்கிக்கிடந்தது. வழமையான பொதுப் போக்குவரத்து சேவைகளனைத்தும் ஸ்தம்பித்துப் போயிருந்ததை, வெறிச்சோடிப்போயிருந்த வீதி பறை சாற்றிக்கொண்டிருந்தது. நடந்து போவதானால் ஆறேழு மைல்களாவது நடக்க வேண்டியிருக்கும். ஒரு நாள்ப் பொழுது வேலையில் கழிந்ததில் இயற்கையாக ஏற்பட்ட அசதியும் காலநிலை தந்த குளிரின் தாக்கமும் சேர்ந்து நடப்பதென்பது நடவாத காரியமாய்த் தோன்றியது அவனுக்கு.

அப்போது தான் திடீரெனத் தோன்றிய அவ்வாலிபன் அவன் கவனத்தை ஈர்த்தான். அவனுக்குக் கண்பார்வை இல்லாததை அவன் வைத்திருந்த வெண் பிரம்பு பறை சாற்றினாலும், வாலிபத்துக்குரிய கம்பீரம் குறையாத உடல்வாகும், பொன்னிற முடியும், ஆங்கிலேயர்களுக்கே உரிய சிவந்த தோலும் அவனை ஒரு அழகனாகவே காட்டியது.

இவன் பஸ் தரிப்பில் நிற்பதை உணர்வால் அறிந்து, “ மன்னிக்க வேண்டும், வழமையான ஆறு மணி 127 பஸ் போய் விட்டதா? “ கேட்டு விட்டு பதிலுக்காக இவன் பக்கம் முகத்தை திருப்பி வைத்துக்கொண்டான்.  இவனும் அந்த பஸ் சீரற்ற காலனிலை காரணமாய் தாங்கள் நின்ற பஸ் தரிப்பைத் தாண்டிப்போயிருக்கச் சந்தர்ப்பம் இல்லை என்பதைக் கூற அவன் முகத்தில் புன்முறுவல்.

“ என் பெயர் அலன், உங்கள் பெயர்??” எனக் கேள்வி தொக்கியது.

சந்திரசேகரன் என்ற பெயரை இவனுக்கு எப்படிச் சொன்னால் புரியும் என ஒரு நிமிடம் தடுமாறி, சந்திரனும் போய் சேகரனும் போய் தான் ‘ஸான்’ ஆனதைப் பகிர்ந்து கொண்டான். லண்டன் மாநகரம் வந்து ஒரு சில வருடங்களே ஆகியிருந்ததில், இவன் மொழி வாடையில் தெரிந்த வித்தியாசமும் அவன் பெயரில் இருந்த அந்நியத்தன்மையும் அவ்வாலிபனுக்கு இவன் இவ்வூரோ ஆங்கிலமோ தாயகமோ தாய் மொழியோ அல்ல என்பதை நன்றாகவே புரிய வைத்திருக்க வேண்டும். பேசிய ஒரு சில நிமிடங்களிலேயே போக வேண்டிய பஸ் அவர்கள் நின்ற தரிப்பிடத்துக்கு வர அவன் அவ்வாலிபனுக்கும் அவ்விபரத்தை சொல்லி, அவனை முதலில் ஏறச்சொல்லி தான் பின்னே ஏறியவன், அலன் பயணச்சீட்டை எடுத்த பின் தனது பயணச்சீட்டை எடுப்பதற்காக கையை தன் சட்டைப்பைக்குள் விட்டவன், அதிர்ந்து போனான். பணப்பையைக் காணவில்லை. தலை விறைக்க நின்றவனுக்கு அப்போது தான் தன்னுடைய பணப்பையை அலுவலகத்தில் மேசையில் எடுத்து வைத்த நினைவு வர, இப்போது என்ன செய்வது என்ற யோசனை பலமாகத் தாக்கியது. இறங்கி நடப்பதானால் குளிரில் விறைத்தபடி பல மைல்கள் நடக்க வேண்டியிருக்கும். சாரதியும் பொறுமை இழந்தவராய் அவன் முகத்தைப் பார்க்க அவன் வெட்கத்திலும் அவமானத்திலும் கூனிக்குறுகிப் போனான். பொட்டும் பிறையுமாக பஸ்ஸிலிருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண் அவள் கணவனைப் போல பக்கத்திலிருந்தவரை இறுகப் பற்றிக்கொண்டாள். ஏதோ ஒரு கொலைக் குற்றவாளியைப் பார்த்த பயம் அவள் முகத்தில் ஒரு வினாடி தோன்றி மறைய, இவனுக்கு அவமானத்தில் உடல் இன்னும் கூனிக்குறுகியது.

அவர்கள் இருவரும் தம் பார்வையை வெளியே பார்ப்பதைப் போல பாவனை செய்த அதே நொடியில் அவனுக்கு முன்னே பஸ்சில் ஏறிய அலன், அச்சம்பவத்தை உணர்ந்து, சாரதியை நோக்கித் திரும்பி, “அவருக்கு தேவையானதை தயவு செய்து இதிலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்,” என்றவாறே தன் பணப்பையை சாரதியின் பக்கம் நீட்டினான்.

அவன் இருந்த சூழ்நிலையில் அவனால் அந்த உதவியை மறுக்கமுடியாமல் தத்தளிக்க, அலன் மறுபடியும் இவன் காதில் மிக மென்மையாக,

” உனக்கு என் உதவி சங்கடமாகப்பட்டால், நீயும் உதவி தேவைப்படும் இன்னொருவருக்கு இதே போல செய்து, என் பங்கைச் செலுத்தி விடு!” என்றவாறே அழகான புன்னகையுடன் நகர்ந்தான்.

நெகிழ்ந்து போன அந்தக்கணங்கள் நேற்று நடந்தது போல் இருந்தாலும் ஒவ்வொரு பனிக்காலத்திலும், பஸ் தரிப்பிற்கு வரும்போதெல்லாம் இந்நினைவு அவன் கேட்காமலே வந்து போகும். கண் தெரியாத அலனும், நிறங்களும் இனங்களும் பார்த்தறியாத அவன் மனத்தில் தோன்றும் மனித நேயமும் இவனை இன்றைக்கும் நெகிழ வைத்துக்கொண்டே தான் இருக்கின்றன.

அவன் வசிக்கும் வீட்டிற்கு பஸ் தரிப்பிலிருந்து பத்து நிமிடங்களாவது நடக்க வேண்டியிருக்கும். உறைபனியில் வழுக்கி விழாமல் மெதுமெதுவாக அடியெடுத்து வைத்தவனுக்கு பசி வயிற்றைப் பிறாண்டத் தொடங்கியது. வீட்டில் எப்படியாவது நல்லதொரு உணவு காத்திருக்கும் என்ற உணர்வும் இதுக்கெல்லாம் ஏதோ தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்ற நன்றியும் அவன் மனதில் தோன்றி மறைந்தது. சிரித்த முகம் மாறாமல் உணவு பரிமாறும் அவன் சகோதரி தற்செயலாகவே அவனுக்குப் பரிச்சயமானவள். தன் உடன் பிறந்த சகோதரியாகவே அவளை மதிப்பவனுக்கு அவன் இரத்தம் கூட அவள் உடம்பில் ஓடுவதும் ஒரு காரணமாக இருக்கலாம் என எண்ணிக்கொண்டான்.

ஒரு மாலை வேளையில் வேலை விட்டுத்திரும்பிய போது இருண்ட வீதி விபத்தொன்றில் அடிபட்டு இருந்தவளை யாரெனத்தெரியாமலே அவசர மருத்துவ சேவைக்கு அறிவித்து, அவர்களுடனே பயனம் செய்து அவளுக்கு உடனடியாகத் தேவைப்பட்ட குருதி வகை அதிஷ்டவசமாக அவனுடையதாகவும் இருக்க மறுப்பேதுமன்றி அவளுக்குதவிய தருணத்தில் இருந்து இற்றை வரை அவர்கள் சகோதரங்களாகிப் போயினர்.

இதோ வீடு கிட்டியாயிற்று, இரண்டே அடிதான் மிகுதியாய் இருக்கவும், வீட்டின் வெளிக்கதவைத் திறந்தபடி தன்னோடு அதே வீட்டில் வசிக்கும் நண்பன் ஒருவன் வீட்டிற்கு வெளியே வரவும் சரியாகவிருந்தது. சத்தமின்றி உள்ளே வந்தவனுக்கு தன் பெயர் எதேச்சையாகக் காதில் விழவும் என்னவாக இருக்கும் என இயல்பாக வந்த ஆர்வத்தில் காதைக் கூராக்கினான். மற்றவர்களின் கதைகளை ஒட்டுக்கேட்கும் பழக்கம் அவனிடமில்லையாயினும், தன்னைப்பற்றிக் கதைக்க அவன் சகோதரிக்கு எதுவும் இருக்கப்போவதில்லை, அவள் அப்படிக் கதைக்கக் கூடியவளுமல்ல என்ற இயல்பான எண்ணம் அவனுக்கு இருந்தது.

யாரோ வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருக்க வேண்டும். அக்கா தான் அவர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்கும் இவன் வீடு வந்து சேர்ந்து விட்டது தெரிந்திருக்கவில்லை என்பது அவர்கள் கதையில் தன் பெயர் அடிபடுவதிலிருந்து தெரிந்தது. மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்ப வழியின்றி தவித்தவனுக்கு, தான் வீட்டுக்கு வந்ததை அறிவிப்பதற்காக அறைக்கு வெளியே போய் அவர்களுக்கு அறிவிப்பதா அல்லது அவர்கள் கதைப்பதைப் பொருட்படுத்தாமல் இருப்பதா என்பதில் சிக்கல் ஏற்பட்டது. மிகவும் சிரமத்தின் மத்தியில் சங்கடத்துடன் தன் அறைக்கு வெளியே வந்தவனுக்கு கால்கள் இயங்க மறுத்ததுக்கு அவர்களின் சம்பாசனையில் தன் பெயர் மட்டுமல்ல தன் குலம் கோத்திரம் எல்லாமும் அடிபடுவது அவனை ஸ்தம்பிக்க வைத்தது.

அதுவும் அவன் சகோதரியாய், வலம் வந்தவள், “ என்னவோ மாலா நீ நினைக்குமாப் போல இல்லை. என்னதான் நல்ல பெடியன் எண்டாலும் கலியாணம் எண்டு வரேக்க நாங்கள் கவனமாய்த் தான் இருக்க வேணும். நாளைக்கு எனக்கு இன்னொரு தங்கச்சியும் எல்லோ இருக்கிறாள். நான் மூத்தவளுக்கு ஸானைக் கட்டிக் கொடுத்தால் பிறகு நாங்கள் ஊருக்குள்ள இன்னொரு மாப்பிள்ளை எடுக்கேலுமே?”

அவன் சகோதரியாக வரிந்தெடுத்துக் கொண்டவள், தன் உதிரம் தந்து உயிர் காத்த இன்னொரு உயிர், அவள் தானா இப்படி பேசுவது என அதிர்ந்து போனவனுக்கு இன்னும் தொடர்ந்த அசிங்கங்கள் மனிதர்கள் எவ்வாறெல்லாம் தம்மைப் பிரித்துக் கொள்கிறார்கள், இன வாரியாக, மத வாரியாக, கலாச்சார வாரியாக, ஊர் வாரியாக என்பது ஒரு சாட்டை அடியுடன் பலவந்தமாக மண்டைக்குள் புகுத்தப்பட்டது. அக்குளிரிலும் வியர்த்துக் கொட்ட, மெதுவாக சத்தமின்றி வெளிக்கதவைத் திறந்து, பனிக்காற்றை ஆழ உள்ளெடுத்து வெளியேற்றியவனுக்கு பழையபடி பஸ் தரிப்பும் பார்வை இழந்த அலனும், அவனுடைய மனித நேயமும் மீண்டும் ஒருமுறை வந்து போனது.

அவனது அறையும், அவன் விட்டுப் போன பொருட்களையும் பார்த்து அவன் ‘அக்கா’ அவனைக் காணாமல் போனவர்களின் பட்டியலில் இணைத்துக் கொண்டு,
“ நாகரீகமற்றதுகள், நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டுக்க வைச்சது என்ர பிழை தான்!” எனக்கூறிக்கொண்டாள்.

 

 
 
 
no_photo.png
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Edited by தோழி
 • Like 13
Link to post
Share on other sites

கதை அருமை தோழி. அந்நியர்களை விட கூட இருப்பவர்கள் தான் காயப்படுத்துவார்கள் என எங்கோ வாசித்தது   நினைவுக்கு வருகிறது. 
சுய ஆக்கங்களை யாழில்  எழுதுவது அருகி வரும் நிலையில் நீங்கள் மீண்டும் தொடக்கி வைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

தங்கள் விமர்சனத்துக்கு மிக்க நன்றி தோழரே! யாழ் இணையத்தினூடாக உங்களையும், ஏனைய தோழர் தோழிகளையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 

மீண்டும் சந்திப்போம். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

     கெலி என்னும் போது தான் புறூஸ்லீயுடன் நடித்த ஜிம்கெலி ஞாபகமாக இருக்கிறது.
   என்னது கதையென்று பார்த்தால் புத்தகம் மாதிரியல்லவா இருக்கிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

😃வித்தியாசமான விமர்சனம் தந்திருக்கிறீர்கள், சிறப்பு! நன்றி தோழரே...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றியற்ற வர்  " அக்கா என்ப்படுபவர் தானே "  

 

அவன் சகோதரியாக வரிந்தெடுத்துக் கொண்டவள், தன் உதிரம் தந்து உயிர் காத்த இன்னொரு உயிர், அவள் தானா இப்படி பேசுவது என அதிர்ந்து போனவனுக்கு இன்னும் தொடர்ந்த அசிங்கங்கள் மனிதர்கள் எவ்வாறெல்லாம் தம்மைப் பிரித்துக் கொள்கிறார்கள்

நீங்கள் ஏன் வீடடை விட்டு போக வேண்டும்

. “ நாகரீகமற்றதுகள், நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டுக்க வைச்சது என்ர பிழை தான்!” எனக்கூறிக்கொண்டாள்."  இன்னும் தொடருமா ?

ஆரம்பம் நன்றாக இருக்கிறது முடிவைக் கொஞ்சம்  இன்னும் தெளிவாக  அமைக்கலாம் .  பாராட்டுக்கள் மேலும் உங்கள் பகிர்வுகளைத் தாருங்கள் .

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிலாமதி, இறுதிப்பகுதியை வாசகர்கள் தமக்கேற்றார்ப் போல் யோசிக்கவும் மாற்றுவதற்கும் இடம் கொடுத்து பழகி விட்டது. உங்கள் காத்திரமான கருத்துக்கு அன்பும் நன்றியும். 

தொடர்ந்து யாழ் இணையத்தில் எழுத முயற்சிக்கிறேன். 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக எழுதுகிறீர்கள் தோழி.தொடர்ந்து யாழில் பயணியுங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அன்பும் நன்றியும்! தமிழால் இணைவோம்!  

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கு உங்கள் கதை, அழகாக எழுதியுள்ளீர்கள், எங்குபோனாலும் மாற மாட்டார்கள் 

தொடர்ந்து எழுதுங்கள் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அன்பும் நன்றியும்! 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வாழ்வியலில் பலரும் மறைக்க விரும்பும் உண்மையை கூறிய சிறுகதை. நன்றி. 

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு கருவைக்கொண்டு கதையை எழுதியிருக்கின்ரீர்கள்......தொடர்ந்து எழுதுங்கள்.....!   😁

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 விமர்சனத்தை பகிர்ந்தமைக்கு நன்றியும் அன்பும்! 

3 hours ago, tulpen said:

தமிழர் வாழ்வியலில் பலரும் மறைக்க விரும்பும் உண்மையை கூறிய சிறுகதை. நன்றி. 

அன்பும் நன்றியும்! 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உங்களது சிறுகதை மிகவும் பிடித்திருக்கிறது.

சந்திரசேகரன், அன்று கெலியுடன் காரில் போகாமல்விட்டது ஒரு வழியில் நன்மைக்கே. எங்களது வாழ்க்கையில் சில நேரங்களில் சில மனிதர்கள் வருவது, ஒன்று அவர்களால் எங்கள் வாழ்க்கை மாறும் அல்லது எங்களால் அவர்கள் வாழ்க்கை மாறும் என படித்த நினைவு. 

நீங்கள் நிறமில்லா மனிதர்கள் என எழுதியது போல, நான் எனது வீட்டில் வெவ்வேறு மனித முகங்களின் paintings and woodcraftம்   சேர்த்து வைத்திருக்கிறேன், ஏனெனில் ஒவ்வொரு சித்திரத்தின் முகமும் ஒவ்வொருவிதம் அதேபோலதான் நிஜ மனிதர்களும் என்பதை அடிக்கடி நினைவுபடுத்தும்.

நிறமில்லா மனிதர்களும், வீட்டைவிட்டு வெளியே போகும்போது, உண்மை உருவைமறைத்து முகமூடி அணிந்த மனிதர்களுமே இப்பொழுது அதிகம். 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கதை சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் தோழி

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி! 🙏

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள். தொடர்ந்தும் உங்கள் ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். பாராட்டுக்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavallur Kanmani said:

மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள். தொடர்ந்தும் உங்கள் ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். பாராட்டுக்கள்

விமர்சனத்துக்கு நன்றியும் அன்பும்! உங்கள் பாராட்டுக்களே என்னை எழுதத் தூண்டுகிறது தோழி! 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2020 at 20:15, பிரபா சிதம்பரநாதன் said:

உங்களது சிறுகதை மிகவும் பிடித்திருக்கிறது.

சந்திரசேகரன், அன்று கெலியுடன் காரில் போகாமல்விட்டது ஒரு வழியில் நன்மைக்கே. எங்களது வாழ்க்கையில் சில நேரங்களில் சில மனிதர்கள் வருவது, ஒன்று அவர்களால் எங்கள் வாழ்க்கை மாறும் அல்லது எங்களால் அவர்கள் வாழ்க்கை மாறும் என படித்த நினைவு. 

நீங்கள் நிறமில்லா மனிதர்கள் என எழுதியது போல, நான் எனது வீட்டில் வெவ்வேறு மனித முகங்களின் paintings and woodcraftம்   சேர்த்து வைத்திருக்கிறேன், ஏனெனில் ஒவ்வொரு சித்திரத்தின் முகமும் ஒவ்வொருவிதம் அதேபோலதான் நிஜ மனிதர்களும் என்பதை அடிக்கடி நினைவுபடுத்தும்.

நிறமில்லா மனிதர்களும், வீட்டைவிட்டு வெளியே போகும்போது, உண்மை உருவைமறைத்து முகமூடி அணிந்த மனிதர்களுமே இப்பொழுது அதிகம். 

நீங்கள் நல்ல கலை ரசனைநுள்ளவர் போல், அதுதான் சித்திரத்தை பற்றி நல்ல அறித்துவைத்துள்ளீர்கள். உங்கள் வீட்டில் யாராவது சித்திரம் படிக்கின்றார்களா? 

என் வாழ்கையில்  பல நல்ல உள்ளங்களை சந்தித்தால் என் வாழ்கை உயர்ந்து கொண்டே போனது. இதுவரை சறுக்கவில்லை, கடவுள் அருள்🙏

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இக்கதையைப் படித்தேன். நம்மவர்கள் உதவி தேவைப்படும்போது எல்லாக் கெளரவங்களையும் மறந்துவிடுவார்கள். கொஞ்சம் “மிதந்தவுடன்” எல்லாக் குணங்களும் வந்துசேர்ந்துவிடும். 

 

On 7/7/2020 at 22:27, தோழி said:

வழமையான ஆறு மணி 127 பஸ்

127 பச்சைக் கலரில் ஓடிய பஸ்ஸில் 90களில் நானும் பயணித்திருக்கின்றேன். 😀 ஒரு கடும் பனிப்பொழிவுக் காலத்தில் பஸ்ஸுக்காக கால் விறைக்கக் காத்தும் இருந்திருக்கின்றேன்😕

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 20/7/2020 at 20:38, உடையார் said:

நீங்கள் நல்ல கலை ரசனைநுள்ளவர் போல், அதுதான் சித்திரத்தை பற்றி நல்ல அறித்துவைத்துள்ளீர்கள்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் சித்திரம் வரைதலை ஒரு பாடமாக எடுத்தேன். மறைந்த சிற்ப கலாநிதி, ஆசிரியர் க. சிவப்பிரகாசம் அவர்களின் மாணவி சிவகெளரி அவர்கள்தான் எங்களது கல்லூரி ஆசிரியை. அவரின் ஊக்கம் எனக்கு ஒரு உந்துதலாக இருந்தது. அவர் மூலம் கொஞ்ச நாட்கள் மறைந்த சிவப்பிரகாசம் ஆசிரியரிடமும் ஓவியம் வரைதலை பயிலமுடிந்தது. 

சிறுவயதிலும் மனித முகங்களை வரைவது ஒரு பழக்கம்.. இப்பொழுது வரைவது இல்லை ஆனால் ஓவியங்கள், வர்ணங்கள் இயற்கையை ரசிப்பது தொடர்கிறது. 

 

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

கல்லூரியில் படிக்கும் காலத்தில் சித்திரம் வரைதலை ஒரு பாடமாக எடுத்தேன். மறைந்த சிற்ப கலாநிதி, ஆசிரியர் க. சிவப்பிரகாசம் அவர்களின் மாணவி சிவகெளரி அவர்கள்தான் எங்களது கல்லூரி ஆசிரியை. அவரின் ஊக்கம் எனக்கு ஒரு உந்துதலாக இருந்தது. அவர் மூலம் கொஞ்ச நாட்கள் மறைந்த சிவப்பிரகாசம் ஆசிரியரிடமும் ஓவியம் வரைதலை பயிலமுடிந்தது. 

சிறுவயதிலும் மனித முகங்களை வரைவது ஒரு பழக்கம்.. இப்பொழுது வரைவது இல்லை ஆனால் ஓவியங்கள், வர்ணங்கள் இயற்கையை ரசிப்பது தொடர்கிறது. 

 

ஓ... அப்படியா அதுதான் உங்களுக்கு நல்ல கலை ரசனை, இயற்கையையும் ரசிகின்றீர்கள் 

எனக்கு சித்திரம் சதவீதம் கூட வராது, சங்கீதம்தான் விரும்பிஎடுத்தேன் என்ர கஷ்ட காலம் ஒரு நாள் கொப்பி கொண்டு போகவில்லை, ரீச்சர் கொப்பி கொண்டு வராத ஆட்களை கையை உயர்ந்த சொன்னா, அடிப்பா என்றுவிட்டு உயர்த்த வில்லை.

சரி பாட்டு பாட தொடங்கியவுடன் ஒரு கொப்பியை விரித்து வைத்துவிட்டு பக்கத்தில் இருந்தவனின் கொப்பியை கடைக்கண்ணால் பார்த்து பாட, மனிசிக்கு நல்ல கோபம்😡;  மனிசி தடி முறியும் வரை அடியோ அடி அந்த மாதிரி🤣😂.

ரோஷத்தில சித்திரத்துக்கு போனா 40 புள்ளிக்கு மேல் போகமுடியவில்லை😪, சங்கீதத்தில் 80க்கு மேல் எடுத்து வகுப்பில் முதலாவதாக வந்தனான், அந்த அடியால் என் வாழ்கை மாறிவிட்டது.

சித்திர வாத்தியார் நல்லவர், அதனால் தப்பித்துவிட்டேன்.

கடவுளா பார்த்து என் ஆசையை மனைவி மக்கள் மூலம் நிறைவேற்றிவிட்டார். மனைவி இராமநாதன் கலைக்கல்லுரியில் சங்கீத துணை பேராசிரியராக இருந்தவர், இப்ப வீட்டில் ஒரே சங்கீத மழைதான்🙏

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

இன்றுதான் இக்கதையைப் படித்தேன். நம்மவர்கள் உதவி தேவைப்படும்போது எல்லாக் கெளரவங்களையும் மறந்துவிடுவார்கள். கொஞ்சம் “மிதந்தவுடன்” எல்லாக் குணங்களும் வந்துசேர்ந்துவிடும். 

 

127 பச்சைக் கலரில் ஓடிய பஸ்ஸில் 90களில் நானும் பயணித்திருக்கின்றேன். 😀 ஒரு கடும் பனிப்பொழிவுக் காலத்தில் பஸ்ஸுக்காக கால் விறைக்கக் காத்தும் இருந்திருக்கின்றேன்😕

நன்றி கிருபன்! காத்திரமான விமர்சனம். 

பஸ்ஸுக்காகக் காத்திருக்கையில் என்னைக் காணாதது உங்கள் அதிஸ்டம் ! 😆

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

இன்றுதான் இக்கதையைப் படித்தேன். நம்மவர்கள் உதவி தேவைப்படும்போது எல்லாக் கெளரவங்களையும் மறந்துவிடுவார்கள். கொஞ்சம் “மிதந்தவுடன்” எல்லாக் குணங்களும் வந்துசேர்ந்துவிடும். 

இது 100% உண்மை, எம்வர்களில் இருக்கும் குணம், எப்பதான் மாறுமோ

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இவன் வில்லங்கமான ஆள் எதுக்கும் நாமள் கவனமாய் இருப்பம்...அடி உதை வாங்கினாலும் பரவாயில்லை.😎  
  • Lebanon explosion 'destroys Hezbollah arms depot' 7 hours ago   Reuters Ambulances rushed to the scene amid unconfirmed reports of several wounded A big explosion in southern Lebanon has destroyed what security sources said was a Hezbollah arms depot. The blast sent a huge plume of black smoke into the air above the village of Ain Qana, which is a stronghold of the militant Shia Islamist movement. Ambulances rushed to the scene amid unconfirmed reports of several wounded. One security source said the blast was caused by a "technical error", although the state news agency noted that it had coincided with Israeli overflights.  The Israeli military did not comment on the incident. Reuters The south of Lebanon is a stronghold of Hezbollah The Lebanese Army said in a statement that the explosion occurred at about 15:00 local time (12:00 GMT) in a building in Ain Qana. "Instantly, an army force arrived at the site and launched an investigation into the causes of the blast," it added. There was also no immediate comment from Hezbollah, although the group's TV channel Al Manar said the explosion happened in one of Ain Qana's houses and that the cause was unknown. It added that no casualties were reported.  Profile: Lebanon's Hezbollah movement The inferno and the mystery ship Beirut explosion: Before-and-after images The Wall Street Journal cited an official with Hezbollah's media unit as saying the blast happened at a centre where explosive remnants of the 2006 war between Hezbollah and Israel were stored.  An AFP news agency photographer said Hezbollah cordoned off the scene. The explosion further rattled a country that is still trying to recover from the devastating blast in Beirut last month which killed almost 200 people. The disaster, which is still under investigation, happened when a fire triggered the detonation of 2,750 tonnes of ammonium nitrate that had been stored unsafely. President Trump blames China for the Covid-19 outbreak amid warnings of a Cold War between the two.
  • மனித உரிமை ஆணையாளருக்கு க.வி.விக்னேஸ்வரன் கடிதம் சர்வதேச சமூகங்களுக்கு மீண்டும் சமாதானத்தை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறிய ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் திருமதி மிசெல் பச்செலெட் ஜெரியாவிற்கு நன்றி கூறி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். மேலும் விக்கினேஸ்வரன் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், “2020 செப்ரெம்பர் 14ந் திகதி உங்களால் வெளியிடப்பட்ட கருத்துரைக்கு இலங்கை என்ற தீபகற்பத்தின் தமிழ் மக்கள் தங்களது மனமார்ந்த நன்றியையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கின்றார்கள். இலங்கை அரசாங்கத்தினுடைய கவலை தரும் போக்கினை நீங்கள் அறிந்துள்ளமை எமக்கு மகிழ்வைத் தருகின்றது. அதாவது அதிகார நிறுவனங்களின் சுதந்திரத்தைப் பேணாதிருத்தல், குடியியல் பதவிகளுக்கு இராணுவத்தினரை நியமித்தல், போர்க்குற்றங்கள், மனிதத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை போன்றவற்றினோடு தொடர்பிருக்கும் அலுவலர்களின் குற்ற ஆராய்வு சம்பந்தமாக பொறுப்புக் கூறல் அற்ற நிலை போன்றவை அவை. மேற்கூறிய அரசியல் ரீதியான குறைபாடுகளை வெளிக்கொண்டு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதை தமிழ் மக்கள் சுட்டிக் காட்ட விரும்புகின்றார்கள். இது தனிப்பட்ட ஒரு ஜனாதிபதிக்கு அப்பால் தொடர்ந்து வந்த நிர்வாக அலகுகளின் செயற்பாடுகள் தங்களால் குறிப்பிடப்பட்ட பண்பியல்புகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. இவை இலங்கையின் இதுவரை கால அரசாங்க முறைமையின் குறைபாடுகளாவன. இந் நாட்டினுடைய அரசியல் ரீதியான தத்துவார்த்த வெளிப்பாடுகள் இவை. இப் பிராந்தியத்தின் சமாதானத்திற்கும் நிரந்தர அபிவிருத்திக்கும் நீங்கள் கூறுவது போல் இவை பாதிப்பாக அமையக் கூடும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் சர்வதேச வழிமுறைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் அமைய சகலரும் நடந்துகொள்வதில் தான் உண்மையான நல்லிணக்கம் ஏற்படும் என்பதில் தமிழ் மக்களிடையே மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதற்கான முக்கிய அடிப்படைக் கருத்துருவாக்கம் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் முதலாவது உறுப்புரையில் இடம்பெற்றுள்ளது. அதாவது சர்வதேச சமாதானமும் பாதுகாப்பும் வெவ்வேறு மனித குழுமங்களின் சம உரித்துக்களிலும் சுயநிர்ணயத்திலும் பிரிக்க முடியாதவாறு தங்கி இருக்கின்றன என்பதே அது. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை மீதான பார்வை சர்வதேச சமூகங்களுக்கு மீண்டும் சமாதானத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை அவர்களுக்கு எடுத்துக் காட்டுகின்றது. இதனை அடைய எடுக்கப்படும் சகல முயற்சிகளுக்கும் தமிழ் மக்கள் உற்ற துணையாக இருப்பார்கள் என்பதை உங்களுக்கு சொல்லி வைக்கின்றேன். அதிமேதகு தங்களுக்கு என்னுடைய நன்றிகள் உரித்தாகுக” என்று குறிப்பிட்டுள்ளார்.   http://www.ilakku.org/மனித-உரிமை-ஆணையாளருக்கு/
  • பாராளுமன்றில் தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய -கஜேந்திரன் தினம் பாராளுமன்றம் கூடிய போது, அங்கு உரை நிகழ்த்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள், உரையாற்றுவதற்கு முன்பாக தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்திய பின்னர் தனது உரையை ஆரம்பித்தார். அவரின் உணர்ச்சிபூர்வமாக அமைந்த உரையை கீழே தருகின்றோம். மதிப்பிற்குரிய பிரதி சபாநாயகர் அவர்களே இன்றைய தினம் இந்த நாடாளுமன்றத்திலே உங்கள் தேசத்தின் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைப்பதற்காக நீங்களே 20ஆவது திருத்தச் சட்டத்தை சமர்ப்பித்திருக்கின்ற இந்த வேளையிலே, இன்றைய நாள் தமிழ்த் தேசத்தைப் பொறுத்தவரையிலே மிக முக்கியமான நாள். எங்களது தேசத்தினதும், உங்களது தேசத்தினதும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், எமது தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்திற்காகவும் ஜனநாயக வழியிலே, வன்முறையின்றி உணவுமின்றி, நீருமின்றி உண்ணா நோன்பிருந்து  உயிர்த் தியாகம் செய்த மாவீரன் அண்ணன் திலீபன் அவர்களின் 8ஆம் நாள் நினைவேந்தலை நாங்கள் இதயத்திலே நிறுத்தி அவர்களுக்காக ஒரு நிமிடம் தலைசாய்த்து நான் என்னுடைய உரையைத் தொடருகின்றேன். 20ஆவது திருத்தச்சட்டம் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கின்ற செயற்பாடென்றும், ஒரு தேசத்துரோக செயற்பாடு என்று சொல்லியும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து, அதற்கெதிராகப் போராட்டம் செய்து உரைநிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள். அதை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் நான் கவலையுடன் சுட்டிக்காட்ட விரும்பும் விடயம், 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சியினர், இந்த நாட்டின் அரசியலமைப்பின் 10ஆம், 14ஆம் ஷரத்துக்களின்படி பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், கூட்டாக செயற்படும் சுதந்திரம், கூட்டாக நினைவுகூரும் சுதந்திரம் போன்றவற்றை அனுஸ்டிக்கக்கூடிய இந்த அரசியலமைப்பின் பிரகாரம் இருக்கக்கூடிய நினைவேந்தல் உரிமையை, எங்களின் விடுதலைக்காக உயிர்நீத்தவர்களை நினைவுகூருகின்ற அந்த உரிமையை இந்த அரசு முற்றாக மறுத்திருக்கின்றது. அதனை ஆமோதித்துக் கொண்டிருக்கின்ற இந்த எதிர்க்கட்சியினர் ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுக்கின்றோம் என்று கூறிக்கொண்டிருக்கின்றார்கள்.  இது கவலைக்குரிய விடயம். 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாங்களும் இருக்கின்றோம். அது நீக்கப்பட வேண்டும். ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் எங்களது கருத்தும். ஆனால் எதிர்க்கட்சியினர் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் இந்தத் தீவின் சகோதர தேசத்தின் ஜனநாயக உரிமைகளை முற்றாக மறுத்துக் கொண்டு, உங்கள் ஜனநாயக உரிமைகளை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்று நீங்கள் ஒருபோதும் நினைக்கக் கூடாது. கடந்த 70 ஆண்டுகளாக உங்கள் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடியாமல் இருப்பதற்கு இது ஒரு காரணமாகும். 18ஆவது திருத்தச் சட்டத்தினூடாக உங்களால் ஜனநாயகத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை. 19ஆவது மூலம் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. 20ஆவதின் மூலமாகவும் உங்களால் பாதுகாத்துக் கொள்ள முடியாது. ஏனெனில், இந்த நாட்டில் தமிழர்களின் ஜனநாயகத்தை நசுக்கிக் கொண்டு ஒருபொழுதும் உங்களால் இந்த நாட்டில் ஒரு ஜனநாயக சூழலை உருவாக்கிக் கொள்ள முடியாது என்பதை இந்த இடத்தில் ஆணித்தரமாகப் பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன். குற்றவியல் சட்டக்கோவை 106/1இன் மூலம் வடக்குக் கிழக்கிலே நாங்கள் எங்கள் உரிமைக்காக உயிர் நீத்தவர்களை நினைவுகூர முடியாது என்று நீதிமன்றம்ஒன்று  கட்டளையிட்டிருக்கின்றது. அதேபோன்று வவுனியா வடக்கு நெடுங்கேணியிலே வெடுக்குநாறி சிவன் ஆலயத்திலே திருவிழா நடத்துவதற்கு ஆலய நிர்வாகத்தினர் முயன்ற போது பொலிசார் அங்கு சென்று வலிந்து வழக்குத் தாக்கல் செய்தார்கள். ஆனால் இதே 106/1இன் கீழ்  திருவிழாவை தடுக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி காவல்துறையினர் அந்த ஆலயத்திலே திருவிழாவை முற்றாகக் குழப்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பாக நீதிமன்றம் கூறிய தீர்ப்பினை கடைப்பிடித்து, வீடுகளிலே சுவாமிக்குகூட பூ வைக்க முடியாது  காவல்துறையினரின் கெடுபிடிகள் உச்சக் கட்டத்தையடைந்துள்ளது. மட்டக்கப்பிலே காவல்துறை அதிகாரி எங்களின் கட்சி உறுப்பினர் குணராசா குணசேகரன் அவர்களை அழைத்து திலீபனுக்கு நினைவேந்தல் செய்தால், உனக்கு நினைவேந்தல் செய்வதற்கு எவரும் இருக்க மாட்டார்கள் என்று கூறி அச்சுறுத்தியிருக்கின்றார். இப்படியான நெருக்கடியான நிலைமையிலே தான் நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம். எங்களைப் பொறுத்தவரையில் எங்களின் உரிமைக்காக உயிர்நீத்தவர்களுக்கு நினைவேந்துவதற்காக தொடர்ச்சியாக நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டேயிருப்போம். உள் நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் நாங்கள் இந்த நினைவேந்தலுக்காக போராடிக் கொண்டிருப்போம் என்பதை இந்த இடத்திலே ஆணித்தரமாகக் கூறிக் கொள்கிறேன். வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகரப் பகுதியிலுள்ள வவுனியா குளம் சட்டவிரோதமாக நிரப்பப்பட்டு அங்கு பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த பூங்கா அமைப்பதற்கான அனுமதி மாகாண நீர்பாசனத் திணைக்களத்தினால் வழங்கப்படவில்லை. உங்கள் அமைச்சரவையினாலும் வழங்கப்படவில்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவினாலும் வழங்கப்படவில்லை. சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆய்வறிக்கைகள் எதுவும் அங்கு சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த விடயம் தொடர்பாக நீங்கள் கருத்திற் கொள்ள வேண்டும். அந்தக் குளத்தைச் சுற்றியுள்ள 30 கிராமங்களில் குடிநீர்ப் பிரச்சினை ஏற்படுகின்றது. அதனால் வவுனியா நகர மக்கள் பாதிக்கப்படும் நிலைமை உருவாகின்றது. இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பன்குடா வெளியில் சுமணரத்தின தேரர் அவர்கள் தொல்பொருள் திணைக்களம் என்ற பெயரினால், அரச உத்தியோகத்தர்களை அடித்து அடாவடித்தனம் செய்து கொண்டிருக்கின்றார். அவர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.  அங்கே அவரின் செயற்பாடுகள் தமிழர்களின் பாதுகாப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து கொண்டிருக்கின்றது. ஆகவே இந்த நிலைமைகளை இந்த சபை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டு, என்னுடைய கருத்துக்களை நிறைவு செய்து கொள்கின்றேன். நன்றி என்று கூறி உரையை நிறைவு செய்தார். தனது உரைக்குரிய நேரம் முடிவடைந்த நிலையிலும், மேலும் நேரம் கேட்ட தனது உரையை ஆவேசமாகவும் விரைவாகவும் ஆற்றியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அப்போதைய காலம் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரும், பொலிசாரும் திரிந்த காலம். அத்துடன் பயிற்சி பெற்ற போராளிகள் இந்தியாவிலிருந்து வந்து கொண்டிருந்த காலம். ஜெகன் என்பவர் தான் ஒரு கண்ணிவெடித் தாக்குதலை நடத்திவிட்டு,அதிலிருந்து ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டு எமது அமைப்பில் இணைவது என்பதே நோக்கமாக இருந்தது. அதற்காக அவருக்கு விக்டர் அண்ணா மூலம் அதற்குரிய பயிற்சிகள் வழங்கப்பட்டன. புரிந்துணர்வு அடிப்படையில் திலீபன் இவற்றை மேற்கொண்டிருந்தார். ( ) என்றதொரு இயக்கம் எங்களுடன் சேர்வதாக இருந்தது. இதே நேரம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு அருகில் இந்தியாவிலிருந்து வந்த ஞானம் என்ற போராளியின் தலைமையில் ஒரு முகாம் அமைக்கப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் வட்டுக்கோட்டையிலிருந்து கடற்படையினர் தண்ணீர் எடுத்துக் கொண்டு கோட்டைக்குச் செல்வார்கள். அதேபோல காரைநகரிலிருந்தும் கடற்படையினர் கோட்டைக்குச் செல்வார்கள். அதனால் அங்கே ஒரு கண்ணிவெடித் தாக்குதலை மேற்கொள்வதற்காக ஜெகன் கண்ணிவெடியைப் புதைத்து வைத்து விட்டு காவலிருந்தார். அந்தக் காலப்பகுதியில் அதிகாலையில் முகாமைச் சுற்றிய வீதிகளில் நோட்டமிடுவதற்காக இரண்டு போராளிகளை அனுப்புவது வழக்கம். ஜெகன் கண்ணிவெடி வைத்திருந்த இடத்திற்கு அருகில் இவர்கள் சென்றதும், சந்தேகமடைந்த ஜெகனின் நண்பர்கள், இவ்விடத்தில் நிற்காது அகன்று செல்லுமாறு கூறியதையடுத்து, இரு தரப்பினருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஜெகனின் நண்பர்கள் அவர்களை அடித்து துரத்தி விட்டிருந்தனர். அவர்கள் அழுத வண்ணம் முகாமிற்கு வந்து முகாம் பொறுப்பாளராக இருந்த ஞானம் என்பவரிடம் சொல்ல, அவர் துப்பாக்கியுடன் சென்று, ஜெகனின் நண்பர்களை அடித்ததால் கைகலப்பு ஏற்பட்டது. அதே சமயம் ஜெகன் ஜீப்பில் அவ்விடத்திற்கு வந்த போது, ஞானம் ஜெகனை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில், ஜெகன் அந்த இடத்திலேயே மரணமடைந்தார். இரகசியம் கருதி இயக்கம் சில தகவல்களை வெளியில் சொல்லாத காரணத்தினால் ஞானத்திற்கு ஜெகன் பற்றிய தகவல் தெரியவில்லை. தங்கள் முகாமிருக்கும் இடத்தில் தாக்குதல் நடத்தினால் தமக்கு பாதகமான சூழ்நிலை ஏற்படும் என்று கருதியோ என்னவோ ஞானம் செய்த செயல் ஒரு துன்பியல் நடவடிக்கையாக மாறியது. அன்று தான் திலீபன் கண்கலங்கி அழுததை நான் பார்த்தேன். உடனே கிட்டண்ணா கோபம் கொண்டு, ஞானத்தை தண்டித்து, அவரை வீட்டிற்கு அனுப்பி  ஒரு சோகமான நிகழ்ச்சியே நடந்து விட்டது. பின்னர் ஞானம் சயனைட் அருந்தியதும், ஜெகனை எங்கள் மாவீரர் பட்டியலில் இணைத்ததுடன், அவரின் வீரவணக்க சுவரொட்டிகளை ஒட்டி, ஏனைய அவரின் நண்பர்களை எமது இயக்கத்துடன் இணைத்ததும் தான் நடந்த சம்பவம். http://www.ilakku.org/பாராளுமன்றில்-தியாகதீபம/
  • தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் தியாக வேள்வி 08ம் நாள்       இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க நிற்கவேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளினால் கொட்டகை போடத் தொடங்கியிருந்தார்கள். உண்ணாவிரதம் ஆரம்பிக்கும்போது இத்தனை சனக்கூட்டம் வருமென் யாருமே எதிர்பார்க்கவில்லை. இலங்கையில் மட்டுமன்றி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் கூட திலீபனின் தியாகப் பயணம் பற்றியே மக்கயில் பெரும்பாலானோர் பேசிக் கொண்டிருப்பதாகப், பத்திரிகைகளில் போட்டிருந்தார்கள். அத்துடன் தமிழீழத்தின் பல பாகங்களிலும் பரவலாக மக்கள் அடையாள உண்ணாவிரதங்களை மேற்கொண்டு தம் எழுச்சியைக் காட்டிக் கொண்டிருந்தனர். மட்டக்களப்பு மாநகரில் ‘மதன்’ என்ற இளம் தளபதி ஒருவர், மக்களின் ஆதரவுடன் தன் போராட்டத்தைத் திலீபனின் வழியில் இன்னும் இரண்டு நாட்களில் ஆரம்பிக்கவிருப்பதாக என்னிடம் மாத்தா கூறினார். இந்த மதனைத் தெரியாதவர்களே மட்டக்களப்பில் இல்லை. 1985ம் ஆண்டு நான் இந்தியாவில் இருந்தபோது மதன் தமிழீழத்துக்குச் சென்றார். பல போர்க்களங்களைத் தன் இளம் வயதில் சந்தித்தார். மட்டக்களப்பு மாவட்டத் தளபதியாக இருந்த கருணாவுடன் சேர்ந்து திருகோணமலையிலுள்ள குச்சவெளிப் பொலிஸ் நிலையத்தைத் தகர்த்தவர்களுள், இந்த மதனும் ஒருவர். இதே குச்சவெளிப் பொலிஸ் நிலையத் தாக்குதல்களில் முக்கிய பங்கெடுத்தவர்கள் என் மனதில் மட்டுமன்றி தமிழ் மக்களின் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்திருக்கின்றார்கள். அவர்கள் வேறு யாரமல்ல….. லெப்டினன்ட் கேர்ணல் சந்தோஷம், லெப்டினன்ட் கேர்ணல் குமரப்பா, லெப்டினன்ட் கேர்ணல் புலேந்திரன் ஆகியோர்தான். தமிழீழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திலே திருச் செல்வம், என்ற போராளியும், அவருடன் சேர்ந்து பல பொது மக்களும், உண்ணாவிரதப் போராட்டத்தினை நாளை தொடங்கவிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன. தமிழீழம் எங்குமே அஹிம்சைப் போர் தீப்பிளம்பாக எரிந்து கொண்டிருக்கிறது. திலீபன் ஓர் மகத்தான மனிதன் தான். இல்லைனெ;றால் அவன் வழியிலே இத்தனை மக்கள் சக்தியா…..? வல்வெட்டித்துறையிலே திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் ஐந்து தமிழர்களைத், தலைவர் பிரபாகரன் நேரில் சென்று சந்தித்தபோது எடுக்கப்பட்ட படத்தையும், திலீபனின் படத்தையும், பத்திரிகைகளில் அருகருகே பிரசுரித்திருந்தார்கள். “ஈழமுரசு” பத்திரிகையில் திலீபனுக்கு அடுத்த மேடையிலே சாகும் வரை (நீராகாரம் அருந்தாமல்) உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கும் திருமதி நல்லையா, செல்வி.குகசாந்தினி, செல்வி.சிவா துரையப்பா ஆகியோரின் படங்களைப் போட்டிருந்தார்கள். மொத்தத்தில் எல்லாமே திலீபனின் அகிம்சைப் போருக்கு வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருந்தன. பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் மட்டுமன்றி ஒவ்வொரு ஊரிலிருந்தும் பல பொதுசன அமைப்புக்கள் அணியாக வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபற்றுவதோடு திலீபனுக்காக கவிதை வடிவில் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களையும் அச்சடித்து விநியோகித்து வந்தன. இந்த எழுச்சியை, மக்களின் வெள்ளத்தைப் பார்ப்பதற்கு என்றே தினமும் யாழ்ப்பாண நகரத்தைச் சுற்றி; சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. இந்திய சமாதானப் படையின் ஹெலிகொப்டர்கள். புலிகள் ஆயுதப் போராட்டத்தில் மட்டுமல்ல. அஹிம்சைப் போராட்டத்திலும் சாதனை படைக்கும் திறன் பெற்றவர்கள் என்ற பேருண்மை, உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது. திலீபனின் சாதனை உலக அரங்கிலே ஓர் சரித்திரமாகிக் கொண்டிருக்கிறது. உலகிலே முதன் முதலாக ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து ஏழு நாட்களை வெற்றிகரமாக முடித்தவர். என்ற பெருமையுடன் அதோ கட்டிலில் துவண்டு வதங்கி, உறங்கிக் கொண்டிருக்கிறார் திலீபன். அவரது கண்கள் இரண்டிலும் குழிகள் விழுந்து விட்டன. முகம் சருகைப்போல் காய்ந்து கிடக்கிறது. தலைமயிர்கள் குழம்பிக் கிடக்கின்றன…… வயிறு ஒட்டிவிட்டது. நீரின்றி வாடிக்கிடக்கும் ஓர் கொடியினைப் போல் வதங்கிக் கிடக்கின்றார். அவரால் விழிகளைத் திறக்க முடியவில்லை. பார்க்க முடியவில்லை….. பேச முடியவில்லை…… சிரிக்க முடியவில்லை……… ஆம் ! தூங்க மட்டும்தான் முடிகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்தக் கோல நிலவு தன் எழிலை இழந்து வாடி வதங்கப் போகிறது? முரளியின் பொறுப்பிலுள்ள மாணவர் அமைப்பைச் (ளு.ழு.டு.வு) சேர்ந்த மாணவ-மாணவிகள் சனக்கூட்டத்தைக் கட்டுப்படு;த்திக் கொண்டிருக்கின்றனர். மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், சனங்களை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். புக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி விட்டன. பெரும்பாலானோர் அழுதழுது கவிதை படிக்கின்றார்கள். “சிந்திய குருதியால் சிவந்த தமிழ் மண்ணில் சந்ததி ஒன்று சரித்திரம் படைக்க…. முந்திடும் என்பதால்…. முளையிலே கிள்ளிட….. சிந்தனை செய்தவர் சிறுநரிக் கூட்டமாய்…. ‘இந்தியப்படையெனும்’ பெயருடன் வந்தெம் சந்திரன் போன்ற… திலீபனின் உயிரைப் பறித்திட எண்ணினால்….. பாரிலே புரட்சி….. வெடித்திடும் என்று…. வெறியுடன் அவர்களை….. எச்சரிக்கின்றேன் !” மேடையிலே முழங்கிக் கொண்டிருந்த இந்தக் கவிதை என் மனத்திலே ஆழமாகப் பதிகிறது. இன்று திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது என்பதை அவரின் வைத்தியக் குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன. இரத்த அழுத்தம் – 80/50 நாடித் துடிப்பு – 140 சுவாசம் – 24 – தியாக வேள்வி தொடரும்… எழுத்துருவாக்கம்: கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன்.   https://thesakkatru.com/08th-day-with-lieutenant-colonel-thilipan/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.