Jump to content

“இராவணன் தமிழனா? சிங்களவனா? என்பது முக்கியமல்ல. அவன் இலங்கையன்”- ராவணபாலய


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“இராவணன் தமிழன் அல்லது சிங்களவன். அது முக்கியமல்ல. அவன் இலங்கையை ஆண்ட ஒரு மன்னன். அவன் இலங்கையன்.” இவ்வாறு எல்லாவல மேதானந்த தேரரின் கருத்துக்கு பதிலளித்துள்ளது தெற்கின் கடும்போக்கு சிங்கள அமைப்பான ராவணபாலய அமைப்பு.

எல்லாவல தேரர் “சுடர் ஒளி”க்கு கூறிய கருத்தில், “இராவணன் இலங்கையை ஆண்டது கட்டுக்கதை” என்று கூறியிருந்தார். இது தொடர்பில் வினவிய போதே ராவணபாலயவின் பொதுச்செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸதேரர் மேலும் தெரிவித்ததாவது,

“விஜயன் இங்கு வந்தபோது குவேனி இங்கிருந்தார். குவேனியின் படையணியே விஜயனை கைது செய்தது. குவேனியின் பின்புலத்தை ஆராய முற்பட்டால் இராவணன் பற்றிய உண்மைகள் வெளிப்பட்டால் என்ன செய்வது? பலரும் பலவிதமாக கருத்துக்களை வெளியிடலாம். இராவணனுடன் 12 ஆண்டுகள் போர் நடந்தது என்று இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது பொய்யெனில் எழுதியவர் அதை உள்ளடக்கியிருந்திருக்க மாட்டார். புனையப்பட்ட கதையெனில், இந்தியாவுக்கு சார்பாக கதை அமைந்திருக்கும். அதிலும் இராவணனை ஒன்றரை மணி நேரத்தில் தீர்த்துக் கட்டி விட்டோம் என்று கதை அமைந்திருக்கும். அவ்வாறு அமையவில்லை. இராவணன் தமிழனா, சிங்களவனா என்பது முக்கியமல்ல. அவன் இலங்கையன்” இவ்வாறு கூறுகிறார் ராவணபாலய செயலாளர்.

https://newuthayan.com/இராவணன்-தமிழனா-சிங/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராவணன் சிவபக்தன்: தேரரின் கருத்து கண்டிக்கத்தக்கது – இந்துமகாசபா வேதனை

93dbc1_fec8c3fc59f74c2bb831c3926ba04021mv2.jpg?189db0&189db0

 

“கோணேஸ்வரம் என்பது பாடல் பெற்ற சிவதலம். எல்லாவல மேதானந்த தேரர் கூறிய கருத்து கண்டிக்கத்தக்கது. இது தொடர்பில் ஆலய நிர்வாகம் உரிய பதிலை வழங்க வேண்டும். அத்துடன் புத்தசாசன அமைச்சுக்கு சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். இலங்கை இராவணன் ஆண்ட தேசமாகும். சீதாவலியவில் கோயில் உள்ளது. அனுமன் இலங்கை வந்து சென்ற ஆதாரங்கள் உள்ளன. மேலும் இராவண எல்லவில் குகைகள் உள்ளன. ஆகையால் தேரர் குறிப்பிட்ட கருத்தானது இந்து மக்களின் மனதை மேலும் புண்படுத்தியிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது “

என்று இலங்கை இந்துமாசபா தலைவர் சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா சபா சார்பில் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தபாயவால் நியமிக்கப்பட்ட செயலணியின் தலைவரான எல்லாவல மேதானந்த தேரர் “இராவணன் இலங்கையை ஆண்டது கட்டுக்கதை” என்றும் “கோணேஸ்வரம் கோயில் அல்ல. அது கோகண்ண விகாரை” என்றும் “சுடர் ஒளி” பத்திரிகைக்கு வெளியிட்ட கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பினர் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/இராவணன்-சிவபக்தன்-தேர/

 

Link to comment
Share on other sites

1 hour ago, உடையார் said:

ஜனாதிபதி கோத்தபாயவால் நியமிக்கப்பட்ட செயலணியின் தலைவரான எல்லாவல மேதானந்த தேரர் “இராவணன் இலங்கையை ஆண்டது கட்டுக்கதை” என்றும் “கோணேஸ்வரம் கோயில் அல்ல. அது கோகண்ண விகாரை” என்றும் “சுடர் ஒளி” பத்திரிகைக்கு வெளியிட்ட கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பினர் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மொத்தத்துல கட்டுக்கதைல பிறந்து வாழ்றதுகள் புதிய கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுதுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராவணன் – முஸ்லிம் மன்னன் , ராமன் – ரஹ்மான் , சீதா – சய்யிதா : உலமாக் கட்சியின் புதிய வெடிகுண்டு!

InShot_20200709_185759754-960x581.jpg?189db0&189db0

கோணேஸ்வரத்தில் பௌத்த விகாரை இருந்தது என்ற தேரரின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இராவணன் முஸ்லிம் மன்னன். எனவே அவர் காலத்தில் முஸ்லிம்களின் இடமாகவே இது இருந்திருக்கும்” என்று உலமாக் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது:

“திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில் 40 அடியில் இராவணனின் சமாதி ஒன்று உண்டு என்றும் அதற்கருகில் அவன் தாயின் சமாதி உண்டு என்றும் இந்தியாவில் இருந்து வந்த சீக்கிய ஆய்வாளர் குறிப்பிட்டிருக்கிறார். அதே போல் கோணேஸ்வரம் கோயிலில் இராவணன் வெட்டும் உள்ளது. பௌத்தர்கள் இலங்கை வந்து வெறும் 2500 ஆண்டுகளே ஆகிறது. இந்த 40 அடி சமாதி சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவனுடையதாய் தான் இருக்க வேண்டும். 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் ஆதாமின் வாரிசுகள் வாழ்ந்துள்ளனர்.

அதன் பிறகே விஜயன் இங்கு வந்து குவேனியை கரம் பிடித்தான். ஆதலால் குவேனி பௌத்த மதத்தைச் சேர்ந்தவள் இல்லை. அவள் இந்து அல்லது முஸ்லிமாக இருக்கலாம். என்னுடைய ஆய்வின்படி, அவர்கள் எல்லாம் ஆதாமின் வாரிசுகளாவர். அதேவேளை ராமன் என்பவர் ரஹ்மான், சீதா என்பவர் சய்யிதா ஆகும். மரபுரீதியாக பேச்சு வழக்கு மாறிய போதே பெயர்களும் மாறியிருக்கலாம். ராமர் கூட எம் இறைதூதராக இருக்கலாம் என்றே நாம் நம்புகிறோம். இராவணன் தவறுகள் செய்த ஒரு முஸ்லிம். அவனை நல்வழிப்படுத்த வந்த தூதரே ராமன். இதுவே எனது வாதம்” என்றார்.

https://newuthayan.com/இராவணன்-முஸ்லிம்-மன்னன்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.