• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
உடையார்

மாற்று திறனாளிகளின் திறமைகள்

Recommended Posts

சோதனையை வென்ற சாதனையாளர்கள்: மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புப் பகிர்வு

சோதனையை வென்ற சாதனையாளர்கள்: மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புப் பகிர்வு

 

சோதனையை வென்ற சாதனையாளர்கள்: மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புப் பகிர்வு

யற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகானவை. மனிதனும் அது போலத்தான்.

 

ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து தோற்றத்தில், குணத்தில், திறமைகளில் என எல்லா வகையிலும் வேறுபடுகின்றனர். ஆனால் யாரும் முழுமையோடு படைக்கப்படுவதில்லை. குறைகள் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கத்தான் செய்கின்றன. அதை பெரிதாய் நினைத்து வருந்துகிறவன் உல்கையே வெறுத்துப்போய்ப் பார்க்கிறான். அதை உடைத்து எழுபவன் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிறான். இன்று, உலக மாற்றுத் திறனாளிகள் தினம். தங்கள் உடலிலுள்ள குறைகளை துச்சமாய் மிதித்து,  வாழ்க்கை என்னும் சமுத்திரத்தில் எதிர்நீச்சல் அடித்து உலகின் பார்வையை தங்கள் மீது திருப்பிய ஒருசில சாதனையாளர்கள் பற்றிய தொகுப்பு இதோ…

ஹெலென் கெல்லர்

சோதனையை வென்ற சாதனையாளர்கள்: மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புப் பகிர்வு

 

இளம் வயதில் ஏற்பட்ட மர்மக் காய்ச்சலால் பார்வை, பேச்சு, கேட்கும் திறன் அனைத்தையும் இழந்தவர் ஹெலென் கெல்லர். ஆனி சுலிவன் என்பவரால் சைகை மொழி கற்பிக்கப்பட்டு பிறரோடு தொடர்புகொள்ளத் தொடங்கினார். பேச்சு மற்றும் கேட்கும் திறனை இழந்தவர்களில் முதன்முதல் இளங்கலை பட்டம் பெற்றவர் இவர்தான். சுமார் 40 நாடுகளுக்குப் பயணம் செய்து மாற்றுத் திறன் கொண்டவர்கள்,தங்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்க பல சொற்பொழிவுகள் ஆற்றினார். பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ள இவர், பல இடங்களில் தொழிலாளர் நலனுக்காகவும், பெண்கள் உரிமைக்காகவும் குரல் கொடுத்துள்ளார். உலகிலுள்ள மாற்றுத் திறன் கொண்ட மக்களுக்கான போராளியாகக் கருதப்பட்டார் ஹெலென். இவரது வாழ்க்கையைத் தழுவி ‘தி மிராக்கிள் உமன்’ என்ற பெயரில் நாடகங்களும் திரைப்படமும் வெளியாகி,  பெரும் வரவேற்பைப் பெற்றன. இவர் பிறந்த தினமான ஜூன் 27, அமெரிக்காவில் ஹெலென் கெல்லர் தினமாகக் கொண்டாடப் படுகிறது.

சுதா சந்திரன்

சோதனையை வென்ற சாதனையாளர்கள்: மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புப் பகிர்வு

நம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானவர். தமிழ் தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் தோன்றியவர். மிகச் சிறந்த பரதக் கலைஞர். இயற்கை இவரோடு விளையாடியபோது இவருக்கு வயது 17. திருச்சி அருகே ஏற்பட்ட விபத்தால் இவர் ஒரு காலை இழக்க நேரிட்டது, அதன் பிறகு, ‘ஜெய்ப்பூர் ஃபூட்’ எனப்படும் செயற்கை காலின் உதவியோடு நடக்கத் தொடங்கினார். ஆனால் இவர் நடப்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. தான் உயிரிலும் மேலாய் நேசித்த நடனத்தில் தன் கவனத்தைத் திருப்பினார். தேர்ந்த பரதக் கலைஞரான இவர், உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று கச்சேரிகள் நடத்தியுள்ளார். இவரது வாழ்க்கையைத் தழுவி தெலுங்கில் ‘மயூரா’  ( தமிழில் 'மயூரி') என்ற திரைப்படம் எடுக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார் இவர். தனது சோதனையை பெரிதுபடுத்தாமல் நாட்டியத்தில் சாதித்துக் காட்டி பலருக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறார் இவர்.

ஸ்டீபன் ஹாகிங்

சோதனையை வென்ற சாதனையாளர்கள்: மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புப் பகிர்வு

1942ல் பிறந்த இந்த அறிவியல் மேதை தனது 21வது வயதில் தசையூட்டமற்ற பக்க மரபு நோயால் பாதிக்கப் பட்டார். கை, கால் முழுவதும் செயலிழந்து வீல் சேரிலேயே வாழ்க்கை கழிந்த போதும், இவரது மூளையின் செயல்பாடு சற்றும் ஓயவில்லை. சார்பியல் மற்றும் குவான்டம் ஈர்ப்பில் அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். இவரது ‘ப்ரீஃப் ஹிஸ்டரி ஆப் டைம்’ என்ற புத்தகம்,  விற்பனையில் பல சாதனைகள் நிகழ்த்தியது. 2009ல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டபோதிலும், அசராமல் வேற்றுகிரக வாசிகளைப் பற்றிய ஆராய்ச்சிகளைத் தொடங்கியுள்ளார் இவர்.

ஜான் நேஷ்

சோதனையை வென்ற சாதனையாளர்கள்: மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புப் பகிர்வு
 

நோபல் பரிசு பெற்ற இவர், கணிதத்திற்கு மிகப்பெரும் பங்காற்றியவர். இவர் கண்டுபிடித்த ஆட்டக் கோட்பாடு பொருளாதாரம், அரசியல், உயிரியல், கணினி அறிவியல் எனப் பல இடங்களிலும் பயன்படுகிறது. சைசோப்ரேனியா என்னும் மன நோயால் பாதிக்கப்பட்ட நேஷ், ஜாமெட்ரி, டிபரென்சியல் சமன்பாடு முதலியவற்றிற்கும் முன்னோடியாய்த் திகழ்ந்தவர். தீவிர மன நோயால் பாதிக்கப்பட்ட இவர், கற்பனையாக சில விஷயங்களை புனைந்து கொண்டு பயப்படுவார் என்று அவரது மனைவி கூறியுள்ளார். ஆனாலும் தனக்கு மிகவும் பிடித்த கணிதத்தை அவர் ஒருபோதும் ஒதுக்கவில்லை. கணிதத்தோடு வாழ்ந்ததால்தான் அவர் நீண்ட காலம் உயிரோடு இருந்தார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். 1994-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் நிணைவுப் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

பீத்தோவன்

சோதனையை வென்ற சாதனையாளர்கள்: மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புப் பகிர்வு
 

இசை உலகின் பிதாமகனாய் கருதப்பட்டவர் பீத்தோவன். மிகச்சிறந்த பியானோ இசைக்கலைஞரான இவர், மேற்கத்திய இசையின் பரிணாமத்திற்கு பெரும் பாலமாய் விளங்கியவர். இவர் முதன்முதலில் இசைக் கச்சேரி நடத்தையில் இவருக்கு வயது 8. தனது 26-வது வயதில் கேட்கும் திறனை முழுமையாக இழந்தார் பீத்தோவன். ஆனால் இவர் அசரவில்லை. இசையிலேயே மூழ்கினார். இசையில் பல முத்துக்களை அள்ளினார். அவற்றுள் நைன்த் சிம்பனி, வயலின் கான்செர்டோ போன்றவை குறிப்பிடத்தக்கவை. பைபோலார் நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார் இந்த இசை மேதை.

மர்லா ருன்யான்

சோதனையை வென்ற சாதனையாளர்கள்: மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புப் பகிர்வு
 
 அமெரிக்காவைச் சார்ந்த தடகள வீராங்கனையான இவர் பார்வையற்றவராவார். மாற்றுத் திறனாளிகளுக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில்,  மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர். மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும் பாராலிம்பிக் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார். 1992 பாராலிம்பிக்கில் 4 தங்கப் பதக்கங்களும்,1996ம் ஆண்டு 1 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். ஹெப்டத்லான், மாரத்தான், 500 மீட்டர், 20000 மீட்டர் ஆகிய பிரிவுகளில் அமெரிக்காவின் தேசிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர் இவர்தான்.

நிக் வுஜுசிக்

சோதனையை வென்ற சாதனையாளர்கள்: மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புப் பகிர்வு
 
 

வலைத்தளங்களில் பிசியாக இருப்பவர்கள் இவரைத் தெரியாமல் இருக்க முடியாது. 1982ல் ஆஸ்திரேலியாவில் பிறந்த நிக்கிற்கு இரண்டு கைகள், கால்கள் கிடையாது. சிறு வயதில் பல துன்பங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் ஆளான நிக்,  பின்னர் வாழ்க்கையை எதிர்த்துப் போராடத் தொடங்கினார். ‘லைஃப் வித்தவுட் லிம்ப்ஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கி,  மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுக்காக உதவி செய்து வருகிறார். பட்டர்பிளை சர்க்கஸ் எனும் குறும்படத்தில் நடித்து,  அதற்காக சில விருதுகளும் வென்றுள்ளார். 2005-ம் ஆண்டிற்கான சிறந்த ஆஸ்திரேலியன் என்னும் விருது இவருக்கு வழங்கப்பட்டது. “என்னுடைய வீட்டில் நான் எப்போதும் ஷூக்கள் வைத்திருப்பேன். எனக்கு ஆச்சரியங்களின் மீது அதீத நம்பிக்கை உள்ளது. நம்பிக்கை எனக்கு மிகவும் அதிகமாகவே உள்ளது” என்று சிரிக்கிறார் நிக்.

ஆஸ்கர் பிஸ்டோரியஸ்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அம்மாவை நினைத்து கதறும் பார்வையற்ற சிறுவனின் பாட்டு

 

Share this post


Link to post
Share on other sites

தூங்கி விழுந்தால் இந்த பூமி நமக்கு படுக்கையாகிறது
எழுந்து நடந்தாலோ அதுவே நமக்கு பாதையாகிறது
நம் பாதங்கள் நடக்க தயாரானால் பாதைகள் மறுப்பு சொல்லப்போவதில்லை

வழியில் தொன்படும் உன் ஏதிர்பாளர்களுக்கு வணக்கம் சொல்லு

ஓடி வந்து கைகுலுக்க ஒருவருமில்லையா உன்னிடம் நீயே கை குலுக்கிகொள்

அதற்காகதான் ஆண்டவன் கொடுத்திருப்பது இரண்டு கைகளை

நட எழுந்து நட நாளை  நமதேன்ற நம்பிகையுன் நட

நாளையென்ன இன்றே வசந்தம் வரும் உன் வாசலைத்தேடி  

Share this post


Link to post
Share on other sites

விசுவாசம் படத்தின் கண்ணான கண்ணே என்ற பாடல் பாடி அசத்திய சஹானா

 

Share this post


Link to post
Share on other sites

பனை மரம் ஏறி பிழைப்பு நடத்தும் கண் பார்வையற்ற முருகாண்டி "கண்ணு மட்டும்தானே போச்சு... ஆனா கை கால் நல்லாதான இருக்கு...” - வாழ்வாதாரத்துக்காக பனை மரம் ஏறும் பார்வையற்ற மாற்றுத் திறனாளி

 

Share this post


Link to post
Share on other sites

தன்னம்பிக்கையை இழக்காத மாற்றுத்திறனாளி மாணவி ப்ரீத்தி

 

Share this post


Link to post
Share on other sites

India's 1st மாற்றுத்திறனாளிகள் உணவகம் | வித விதமான வகை உணவுகள் |

Senthil Kumar Mj
10 hours ago
நல்ல பதிவு, பக்கோடா பாய்ஸ்க்கு தலை வணங்குகிறேன், இதை போல் எந்த ஒரு யூடியூப் சேனலும் இதுவரை ஒளிப்பரப்பியது இல்லை, இதற்காகவே உங்கள் சேனலின் ஒருவன் என்பதால் பெருமைபடுகிறேன், இந்த மாற்றுத்திறனாளிகளின் முயற்சி வெற்றி அடைய இறைவனிடம் மனமாற வேண்டிக் கொள்கிறேன், அதைப் போல் இவர்களுக்கு வாய்ப்பு தந்த சேலம் R R பிரியாணி நிறுவனருக்கு என் நன்றிகள், சகோ தயவு செய்து என் வாழ்த்துக்களை அந்த உணவகம் நடத்தும் "சாதனையாளர்களுக்கு" தெரியப்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன்

In this Vlog, You are going to see the 1st Differently abled restaurant in India. Its a proud moment of Tamil people and say we are first in this also. Thanks to RR Salem to give such an opportunity.

Shop Details:
SALEM RR BIRIYANI
Near checkpost, Anna Garden, Velachery, Chennai, Tamil Nadu 600022
Opp to Pheonix Market City
Map: https://goo.gl/maps/3sZYP8wnfVF3Z4wp7
Catering Orders: Contact Co-Ordinator: 9176045578, 9840683403

 

 

Share this post


Link to post
Share on other sites


VisAbility e.V.

இச் சுருக்கமான காணொளி மூலம் இலங்கையில் எங்களால் கடந்த வருடம் 2017 ம் ஆண்டு ஆணி ,ஆடி மாதங்களில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் நடாத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான கலப்பு நடனம் மற்றும் அவர்களுக்கான உரிமைகள் தொடர்பான பட்டறைகளின் செயற்பாட்டுத் திட்டங்களை தெளிவாக காணக்கூடியதாக இருக்கும்.
மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள இணைய முகவரியுடன் தொடர்புகொள்ளவும். www.visability.social

நல்லதொரு முயற்ச்சி இலங்கையில், இவர்களை இன்னும் ஊக்குவிக்க வேண்டும், போரால் எத்தனையோ பேர் மாற்றுதிறனாளியகிவிட்டார்கள். அவர்களின் வாழ்வுக்கு இவர்களால் விடிவு வரவேண்டும் 🙏

Share this post


Link to post
Share on other sites

தன்னம்பிக்கை பெற்ற மாற்று திறனாளிகள்

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே
வாழ்த்து பாடு
கருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு
கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழணும் நூறு ஆண்டு
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்

 

Share this post


Link to post
Share on other sites

தமிழ் மாற்று திறனாளிகள் விளையாட்டு போட்டி | Tamil Para Sports Jaffna | 7th August Vanakkam Thainadu

 

Share this post


Link to post
Share on other sites

தமிழ் மாற்று திறனாளிகள் விளையாட்டு போட்டி | Tamil Para Sports Jaffna Day 1 | 8th August Vanakkam Thainadu

 

Share this post


Link to post
Share on other sites

தமிழ் மாற்று திறனாளிகள் விளையாட்டு போட்டி | Tamil Para Sports Jaffna | 9th August Vanakkam Thainadu

 

Share this post


Link to post
Share on other sites

We need people like him in the world. 

Sivan Foundation for special need children established by Ganeswaran Velayutham who is a business man from United Kingdom. 

He is originally from Jaffna, Srilanka. He is doing all from his own money. Now he has five centres take care more than 300 plus children. 

If you need help special need children contact them @ 021- 226-1838.
 

உலகில் அவரைப் போன்றவர்கள் நமக்குத் தேவை.

விசேட தேவை குழந்தைகளுக்கான சிவன் அறக்கட்டளை, ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த வணிக மனிதரான கணேஸ்வரன் வேலாயுதத்தால் நிறுவப்பட்டது.

இவர் முதலில் ஸ்ரீலங்காவின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அவர் தனது சொந்தப் பணத்திலிருந்தே அனைத்தையும் செய்கிறார். இப்போது அவர் ஐந்து மையங்களை 300 க்கும் மேற்பட்ட குழந்தைகளை கவனித்து வருகிறார்.

உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் சிறப்பு தேவை குழந்தைகள் அவர்களை தொடர்பு கொள்ளவும் @ 021- 226-1838.

 

Share this post


Link to post
Share on other sites

மாஸ்டர் ராகவாலாரன்ஸ் மாற்றுத்திறனாளிகள் நடனகுழு மாணவர்களின் நடனம்

 

Share this post


Link to post
Share on other sites

எண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று நிரூபித்த மாற்றுத்திறனாளி பூரண சுந்தரி- பார்வை சவாலே சாதிக்கத் தூண்டியதாக பேட்டி

visually-challenged-from-madurai-cracks-upsc-exam-bags-286th-rank பூரண சுந்தரி

எண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல என்பதற்கு உதாரணமாக இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வாகியுள்ளார் மதுரையைச் சேர்ந்த பார்வை சவால் கொண்ட மாற்றுத்திறனாளி பூரண சுந்தரி. அவரின் சாதனை அனைவருக்கும் முன்னுதாரணமாக மாறியுள்ளது.

ஐஏஎஸ் தேர்வில் 286-வது இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார்

2019-ம் ஆண்டுக்கான இந்திய குடிமைப் பணிகள் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 2019-ம் ஆண்டு எழுதிய தேர்வில் 829 பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மதுரை சிம்மக்கல் அருகேயுள்ள மணிநகரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன்- ஆவுடை தேவி தம்பதி. இவர்களின் பார்வை சவால் கொண்ட மாற்றுத்திறனாளி மகள் தான் பூரண சுந்தரி.

பூரண சுந்தரியின் 5 வயதில் அவரது பார்வை நரம்பு சுருங்கியதால் பார்வையை இழந்தார். இருந்தபோதிலும் தன்னம்பிக்கையோடு தனது கல்வியைத் தொடர வேண்டும் என்று எண்ணி ஒன்றாம் வகுப்பிலிருந்தே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுவந்துள்ளார்.

சம்மட்டிபுரத்தில் உள்ள கேஎன்பிஎம் எம்பிஎஸ் உயர்நிலைப் பள்ளியில் மதுரை ஒருங்கிணைந்த கல்வி IEDSS-ல் சிறப்புகல்வி திட்டத்தின் கீழ் பயின்றார்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண்னும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1092 மதிப்பெண் பெற்ற நிலையில் இளங்கலை இலக்கியம் (ஆங்கிலம்) பயின்றுவந்துள்ளார்.

சாதிக்கத் தூண்டிய சவால்கள்:

சிறு வயதிலிருந்தே ஒரு மாற்றுத்திறனாளியாக கல்வி கற்பதில் எதிர்கொள்ள வேண்டியிருந்த சவால்கள் தான் தன்னை சாதிக்கத் தூண்டியதாக பூரண சுந்தரி கூறுகிறார்.

இதனால், கடந்த 2016-ம் ஆண்டு முதல் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு, வங்கி போட்டித் தேர்வு, குடியுரிமை பணி தேர்வு என 20-க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகளை மனம் தளராமல் எழுதியுள்ளார்.

போட்டித் தேர்வுகளில் தோல்வி அடைந்தாலும் கூட நிச்சயம் ஒருநாள் சிவில் சர்வீஸ் தேர்வில் வென்றுவிட வேண்டும் என்ற முனைப்போடு தேர்வுகளை எழுதிவந்தார். கடந்த 2018-ம் ஆண்டு வங்கித் தேர்வில் வெற்றி பெற்று அரசு ஊரக வளர்ச்சி வங்கியில் கிளர்க்காக பணிபுரிந்து வரும் நிலையில் 4-வது முறையாக கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற குடியுரிமை பணிகளுக்கான தேர்வை எழுதியுள்ளார்.

தேர்வில் 286 இடத்தில் வெற்றியும் கண்டுள்ளார் பூரண சுந்தரி.

15965528742027.jpg

தேர்வு வெற்றி குறித்து பேசிய பூரண சுந்தரி, "நான் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக இருந்துகொண்டு இந்த வெற்றி இலக்கை அடைய எண்ணற்ற சவால்களை சந்தித்தாலும் எனது பெற்றோரின் பேருதவி அவற்றை லகுவாக்கிவிட்டது.

அவர்கள் பாடங்களை எனக்குப் படித்து காண்பிக்க அதனைக் கேட்டு மனனம் செய்து கற்றுகொண்டேன். போட்டி தேர்விற்காக நான் சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கிப் பயின்றபோது அங்குள்ள நண்பர்கள் கொடுத்த உற்சாகம் என்னை வெற்றியாளராக உருவாக்கியுள்ளது.

சிறு வயது முதல் எனது அம்மா சொல்லித் தரும் பாடங்களை நன்கு கவனித்து கற்றுகொண்டதால் போட்டித் தேர்வுகளிலும் அது உதவியாக இருந்தது. என் தாய் எனக்கு ஆசிரியராகவும் இருந்தார்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்ற எண்ணமே எனக்கு வராத அளவிற்கு எனது பெற்றோர் என்னைப் பார்த்துகொண்டனர்.

15965533442027.jpg

பெற்றோருடன் பூரண சுந்தரி

நான் சந்தித்த சவால்களே என்னை ஆட்சிப் பணியில் அமர வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் நிர்வாக ரீதியாக முடிவுகளை எடுக்கவும் திட்டங்களை வகுக்கவும் வேண்டும் என்று தூண்டியது.

அது இப்போது சாத்தியமாகியுள்ளது.

குடியுரிமை ஆட்சிப்பணியில் இருந்து அரசின் திட்டங்களை மக்களுக்கு நேரடியாக கொண்டுசேர்க்க ஏழை எளிய மக்களுக்கு பாலமாக இருக்க விரும்புகிறேன்.

என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து போராடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்" என்றார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/568186-visually-challenged-from-madurai-cracks-upsc-exam-bags-286th-rank-5.html

 

Share this post


Link to post
Share on other sites

படுத்த படுக்கையாக வீட்டுக்குள் முடங்கி கிடந்து இருந்தவரை எழுந்து களப்பணி செய்ய வைத்திருகின்றது நாம் தமிழர் 

நீங்கள் இவரின் காணோளியை பாருங்கள், பார்த்துவிட்டு எத்தனையோ காணோளிகளை subscribe பண்ணி வைத்திருப்பீர்கள், அதைபோல இதையும் செய்துவிடுங்கள், அது அவருக்கு வருமானத்தையும் வாழ்கையில் ஒரு பிடிப்பையும் ஊக்கத்தையும் உங்கள் மூலம் கொடுக்க முடியும் நன்றி உறவுகளே 🙏🙏🙏

 

Share this post


Link to post
Share on other sites

handicapped in chennai help ngo udavikaramமாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் உதவிக்கரம்-044-2489 0665

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • மாமனிதர் ரவிராஜின் மனைவியை TNA தனது அரசியலுக்குப் பாவித்தது. இது புரியாத அவர் எவ்வாறு அரசியல் செய்யப்போகிறார் 🤔 அவரது அரசியலுக்கு அடிப்படையே மாமனிதர் ரவிராஜ் என்னும் பெயர்தான். அந்த மனிதனின் கெளரவத்திற்கு பங்கம் வராது பாதுகாப்பதில்தான் அவரது அரசியல் வாழ்க்கை தங்கியுள்ளது.  நாங்கள் சுமந்திரன் மீது எவ்வளவுதான் வெறுப்பைக் உமிழ்ந்தாலும் அவரிடமிருந்து இந்த அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று உள்ளது. அது.. .... அந்த மனிதன் எந்த ஒரு இடத்திலும் நிதானம் தவறவில்லை.  திருமதி ரவிராஜ் அவர்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நிதானத்தைத்  தவறவிடக்கூடாது 🙏
  • நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும் நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும் பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும் பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும் மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும் மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும் நான் பேச .... சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும் இல்லை சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை நான் பேச ...  
  • மனிதர் வாயால் எழுப்பும் ஒலியை குறிக்கும் சொல்   முதல் நீக்கின் ஓசையை குறிக்கும் கடை நீக்கின் தவிர்க்கமுடியவில்லை என்பதை குறிக்கும் சொல் கடையிழந்து நிற்கின்றது   போக்கிரி படத்தில் ஒரு காட்சி வருகின்றது இந்த ஒலியை பற்றி ஒரு பாட்டிற்கு முன்    
  • 520  காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே. நம்பு வாரவர் நாவி னவிற்றினால் வம்பு நாண்மலர் வார்மது வொப்பது செம்பொ னார்தில கம்முல குக்கெலாம் நம்பன் நாமம் நமச்சி வாயவே. நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந் தக்கு மாலைகொ டங்கையில் எண்ணுவார் தக்க வானவ ராத்தகு விப்பது நக்கன் நாமம் நமச்சி வாயவே. இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால் நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால் நியமந் தான்நினை வார்க்கினி யான்நெற்றி நயனன் நாமம் நமச்சி வாயவே. கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள் இல்லா ரேனும் இயம்புவ ராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவ ரென்பரால் நல்லார் நாமம் நமச்சி வாயவே. மந்த ரம்மன பாவங்கள் மேவிய பந்த னையவர் தாமும் பகர்வரேல் சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் நந்தி நாமம் நமச்சி வாயவே. நரக மேழ்புக நாடின ராயினும் உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர் விரவி யேபுகு வித்திடு மென்பரால் வரதன் நாமம் நமச்சி வாயவே. இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல் தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும் மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை நலங்கொள் நாமம் நமச்சி வாயவே. போதன் போதன கண்ணனும் அண்ணல்தன் பாதந் தான்முடி நேடிய பண்பராய் யாதுங் காண்பரி தாகி அலந்தவர் ஓதும் நாமம் நமச்சி வாயவே. கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள் வெஞ்சொல் மிண்டர் விரவில ரென்பரால் விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய் நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே. நந்தி நாமம் நமச்சிவா யவெனுஞ் சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல் சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம் பந்த பாசம் அறுக்கவல் லார்களே.