Jump to content

மாற்று திறனாளிகளின் திறமைகள்


Recommended Posts

  • Replies 136
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டிசம் எப்படி கண்டறிவது? இலவச சிகிச்சைகள் எங்கு பெறலாம்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதித்து நடவுங்கள் - பெற்றோரின் மனக் குமுறல்கள் - ஆட்டிசம் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுத்திறனாளிகளின் கல்விக்காக பேரணி!

01-18.jpg?189db0&189db0

 

மட்டக்களப்பு – கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஒளிமயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினால் விசேட திறன் கொண்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் நாம் அக்கறை செலுத்துவோம் என்னும் தொனிப் பொருளிலான பேரணி இன்று (11) வாழைச்சேனையில் முன்னெடுக்கப்பட்டது.

ஒளிமயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவர் எஸ்.றபீக் தலைமையில் வாழைச்சேனை ஹைறாத் பள்ளிவாயல் அருகில் இருந்து ஆரம்பமான பேரணி ஒளிமயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் காரியாலயம் வரை சென்றடைந்தது.

குறித்த பேரணியில் கோறளைப்பற்று மத்தி உதவி பிரதேச செயலாளர் திருமதி.எம்.ஏ.சி.றமீஸா, சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம், சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர், மாற்றுத் திறனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்வி எமது சொத்தாகும், விசேட திறன்கொண்ட மாணவர்கள் வீட்டில் முடங்கிக் கிடப்பார்களானால் பெற்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், வலது குறைந்த பிள்ளைகளை அன்புடன் பராமரிப்போம் அவர்களின் கல்வி உரிமையை பாதுகாப்போம், பெற்றோர்களே மாற்றுத்திறனாளி பிள்ளையின் கல்விக்கான உரிமையை வழங்குங்கள், கல்விக்கு ஊனம் ஒரு குறையில்லை என்னும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இதில் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் நாம் அக்கறை செலுத்துவோம் என்னும் தொனிப் பொருளிலான துண்டுப் பிரசுரங்கள் வீதிகளில் பயணம் செய்தவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. (150)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டிசம் குறைபாடு உடைய மகன் : ஆசியராக மாறி தேர்ச்சி பெற வைத்த தாய் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹைதராபாத்தை சேர்ந்த வருண் ஆட்டிசம் குறைபாடு உடையவர் என்பது தெரியவந்தபோது அவருக்கு வயது மூன்று.

ஆனால், கர்நாடக இசையையும், 30 மொழிகளையும் கற்றுக்கொள்ள ஆட்டிசம் அவருக்கு ஒரு தடையாக இல்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆட்டிசம் உள்ளவர்களுக்கு உதவும் தொழில்நுட்பங்கள்

கோவை: யோகா, விளையாட்டு பயிற்சிகளால் ஆட்டிசம் பாதிப்பைக் குறைக்கலாம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எது இயலாமை... மாற்றுதிறனாளிகள் பற்றிய உங்கள் எண்ணத்தை மாற்றும் பேச்சு🙏🙏🙏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு எல்லாம் சோறு போட உழைக்கும் இவர் தான் உலகிலேயே உயர்ந்தவர்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவு திறன் மிகுந்த ஆட்டிசம் குழந்தைகள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Change for Autism in Sri Lanka

This Autism Awareness Month, we partnered up with Reach Beyond in an attempt to understand the complexities and common misconceptions of autism. Here's everything we learned!

இந்த மன இறுக்கம் விழிப்புணர்வு மாதம், மன இறுக்கத்தின் சிக்கல்கள் மற்றும் பொதுவான தவறான கருத்துக்களைப் புரிந்துகொள்ளும் முயற்சியில்

நாங்கள் கூட்டுசேர்ந்தோம். நாங்கள் கற்றுக்கொண்ட அனைத்தும் இங்கே!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் உருவில் SPB இருக்கின்றார் அவர் மறையவில்லை🙏

முழுக் காணொளியும் மனதுக்கு இதமாக சந்தோஷமாக இருந்திச்சு பார்த்து முடியுவரை, ஏன்ர முடிந்தது என்றா மாதிரியிருக்கு

பார்வையற்றவர் படைத்திடும் சாதனைகள் | SPB | Senthilvel | Tamil Kelvi

SPB யை நினைத்து உருகும் பார்வையற்ற பாடகர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Muniba Mazari First Time Standing Up From Wheel chair After 10 Years. Muniba Mazari (born 3 March 1987) is a Pakistani Artist, Motivational Speaker, Activist, TV Host and Pakistan's First Goodwill Ambassador to UNWomen Pakistan.She uses a wheelchair due to injuries sustained in a car accident at the age of 21 which makes her Pakistan's first wheelchair-using model.
She is one of the Forbes 30 under 30 for 2016 in Media and Marketing Category and one of the BBC’s top 100 women for 2015.


முனிபா மசாரி முதல் முறையாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து நிற்கிறார். முனிபா மசாரி (பிறப்பு: மார்ச் 3, 1987) ஒரு பாகிஸ்தான் கலைஞர், உந்துதல் பேச்சாளர், செயற்பாட்டாளர், டிவி ஹோஸ்ட் மற்றும் பாக்கிஸ்தானின் UNWomen பாக்கிஸ்தானின் முதல் நல்லெண்ண தூதர் ஆவார். 21 வயதில் கார் விபத்தில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக சக்கர நாற்காலியைப் பயன்படுத்துகிறார். முதல் சக்கர நாற்காலி பயன்படுத்தும் மாதிரி.
மீடியா மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் 2016 ஆம் ஆண்டிற்கான 30 வயதிற்குட்பட்ட ஃபோர்ப்ஸ் 30 பேரில் ஒருவராகவும், 2015 ஆம் ஆண்டிற்கான பிபிசியின் சிறந்த 100 பெண்களில் ஒருவராகவும் உள்ளார்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Salem R R Tamilselvan  - உங்களின் நல்ல மனதிற்கு இன்னும் பல்லாண்டு சந்தோஷமாக உங்கள் குடும்பத்துடன் வாழ பிரார்த்தின்றேன்  🙏

சென்னை வேளச்சேரியில் Phoenix Mall எதிரில் இயங்கும் சேலம் RR பிரியாணி உணவகம் தற்போது தன் பிரியாணி விற்பனை நேரமான 11am to 4pm மணிதவிர மற்ற நேரங்களில் மாற்றுத்திறனாளிகள் நடத்தும் சிறப்பு SALEM RR SPECIAL TIFFIN CENTERஆக செயல்படுகிறது. தன்னிடம் உதவி கேட்டு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த உதவியை செய்துள்ளார் இந்த உணவகத்தின் உரிமையாளர் Salem R R Tamilselvan ஐயா அவர்கள். மேற்கொண்டு இந்த தன்னம்பிக்கை நண்பர்களான இவர்கள் இந்த உணவகத்தை எப்படி நடத்துகிறார்கள் என்பதைப்பற்றிய பதிவு இது.

விரைவில் இவர்கள் நல்ல நிலைய அடைய மனதார வாழ்த்துகின்றேன்

நல்லதொரு சிறந்த காணொளி

நல்லதொரு தூர நோக்கும் இவர்களுக்கு - ஆண்டவனின் அருளால் வெகு சிறப்பாக வருவார்கள்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.