Jump to content

மாற்று திறனாளிகளின் திறமைகள்


Recommended Posts

  • Replies 136
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

சோதனையை வென்ற சாதனையாளர்கள்: மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புப் பகிர்வு   சோதனையை வென்ற சாதனையாளர்கள்: மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புப் பகிர்வு இயற்கையின் படைப்

  • கருத்துக்கள உறவுகள்

மனுவுடன் மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளிப் பெண்! சிகிச்சை அளித்து உதவிய தி.மு.க எம்.எல்.ஏ

உதவி செய்த எம்.எல்.ஏ

உதவி செய்த எம்.எல்.ஏ

திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ அலுவலகத்தில் மனுவுடன் மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு எம்.எல்.ஏ சரவணன் சிகிச்சையளித்து உதவினார்.

திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிப் பெண் சசிகலா. தனக்கு உதவி கோரி எம்.எல்.ஏ அலுவலகத்தில் மனு அளிக்க வந்தபோது, மயங்கி விழுந்த சம்பவம் பலரையும் கலங்கவைத்தது.

முதலுதவி செய்த டாக்டர் சரவணன்
 
முதலுதவி செய்த டாக்டர் சரவணன்

கணவரால் கைவிடப்பட்டு ஆதரவின்றி இதயப் பிரச்னையுள்ள குழந்தையுடன் கஷ்டப்படும் சசிகலா, தனக்கும் தன் குழந்தைக்கும் உதவி வேண்டும் என திருப்பரங்குன்றம் தி.மு.க எம்.எல்.ஏ டாக்டர் சரவணனிடம் மனு அளிக்க சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துககு நேற்று வந்திருந்தார்.

 

சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் இருந்தவருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டு மயங்கிக் கீழே விழுந்தார். இதைப் பார்த்து அங்கிருந்தவர்களும், மனு வாங்கிக்கொண்டிருந்த டாக்டர் சரவணனும் வேகமாகச் சென்று அந்தப் பெண்ணுக்கு முதலுதவி அளித்து, ஓய்வெடுக்கவைத்தனர்.

பின்பு அவரை ஆசுவாசப்படுத்தி அவர் பிரச்னையை டாக்டர் சரவணன் கேட்டபோது, எந்தவோர் ஆதரவும் இன்றித் தவிக்கும் தனக்கும், இதயப் பிரச்னையுடன் இருக்கும் தனது மகனின் மருத்துவத்துக்கும் உதவி கேட்டு வந்திருப்பதாகவும், இதைப் பற்றி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் அழுதபடி தெரிவித்தார்.

முதலுதவி சிகிச்சை
 
முதலுதவி சிகிச்சை

அவருக்கு ஆறுதல் கூறிய டாக்டர் சரவணன், குழந்தைக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை தனது மருத்துவமனையில் இலவசமாக பார்ப்பதாக அவரிடம் தெரிவித்தவர், அந்தப் பெண்ணுக்குத் தற்போதைய செலவுக்கு நிதி உதவி செய்தார்.

மாதம்தோறும் அரசு உதவித்தொகை கிடைக்க கலெக்டர் அலுவலத்துக்குப் பரிந்துரை செய்வதாகவும், அந்தப் பெண் விரும்பினால் பெண்கள் காப்பகத்தில் சேர்த்தவிடுவதாகவும் உறுதியளித்திருக்கிறார். ஆதரவற்ற மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு தக்க நேரத்தில் சிகிச்சை அளித்து எம்.எல்.ஏ செய்த உதவி, நெகிழ்ச்சியை ஏற்படுத்தி்யிருக்கிறது.

 

 

https://www.vikatan.com/social-affairs/politics/dmk-mla-saravanan-helps-poor-woman-and-her-child

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கேரம் விளையாட்டில் திறமையான மாற்று திறனாளி பயிற்சியாளர் - 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுத்திறனாளிகளின் கனவை நனவாக்கும் ‘WE CAN’

 
DSC01173-696x464.jpg
 122 Views
“கோவிட்-19க்குப் பின்னரான மெருகேற்றிய உலகை உருவாக்குவோம், மாற்றுத் திறனாளிகளை உள்வாங்கி, அணுகு வசதிகளை மேம்படுத்தி, நிலைத்து நிற்கும் மாற்றங்கள் கொண்டதோர் புதிய உலகம் படைப்போம்“ என இந்த ஆண்டுக்கான சர்வதேச மாற்றுத் திறனாளிகள் நாளுக்கான ( டிசம்பர் -3) வாசகமாக UNESCO (ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்) அறிவித்திருக்கின்றது.
 
IMG-20201128-WA0014-1.jpg
 
இதனடிப்படையில், மாந்தை மேற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பாகிய  ‘WE CAN Creative Jobs for Differently Abled’ தனது தொழில் முயற்சிகளில் ஒன்றாகிய நலச்சுவையகத்தையும்  மாதிரி பண்ணையையும் திறந்து வைத்துள்ளது.

IMG-20201123-WA0022.jpg

மாந்தை மேற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பு, (WE CAN Creative Jobs for Differently Abled) மாற்றுத்திறனாளிகளுடைய உரிமைகளுக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் சேவையாற்றி வருகின்றது.

3-2.jpg

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்புகளை வழங்குவதற்காகவும் நிலையான வாழ்வாதார திட்டங்களுக்காகவும்  பண்ணை போன்ற தொழில் முறயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

DSC01106.jpg

திருமதி வேலு தவமணி (எழுத்தாளர் வெற்றிச்செல்வியின் தாயார்) அவர்களால் மாற்றுத்திறனாளிகள் அமைப்பிற்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட வேட்டையாமுறிப்பில் அமைந்திருக்கும் காணியிலேயே ஒருங்கிணைந்த பண்ணை முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

12.jpg

மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் சிறு குழுக்களுக்காக வொய்ஸ் நிறுவனத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட குழு நிதிகளை ஒன்றிணைத்து கட்டப்பட்ட நலச்சுவையகம் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று திறந்து வைக்கப்பட்டது.

131579656_1798558653626986_3649144806001

இவ்விரண்டு நிகழ்வுகளிலும் முதன்மை விருந்தினராக் கலந்துகொண்டார் மன்னார் மாவட்டத்தின்  அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமெல்.

 

https://www.ilakku.org/?p=37318

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் மண் வன்னி வாழ் மாணவனின் மனதை உருக்கும் நடனக்காட்சி.

பல கனவுகளை சுமந்த ஈழத்து இறுதிப் போரின் போது தனது  4 வயதில் தேவிபுரம் பகுதியில் எறிகணையினால் காலொன்றை இழந்த வன்னி வாழ் மாணவனின் நடனக்காட்சி. 

இப்போது தரம் 10இல் கற்கிறார். எங்கள் உறவின் திறனை உலகெல்லாம் எடுத்து காட்டுவோம்.

தமிழன் உயிரைக்கொடுத்தும் நினைத்ததை முடிப்பவன்.
தம்பி நீ உன் காலொன்றை இழக்கவில்லை தமிழ் மண் உன்னை வாழ வைக்கும் - வாழ வைப்போம்.

 

Link to post
Share on other sites
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி

வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி
கரகாட்டம் ஆடியபடி கிருஷ்ணவேணி நாற்று நட்ட காட்சி.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள பெரியதிருக்கோணம் கிராமத்தை சேர்ந்த பாண்டியன். அரசு பஸ் டிரைவர். இவருடைய மனைவி மாலா.
 
இவர் காது கேளாதோர் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியின் மகள் கிருஷ்ணவேணி(வயது 15). பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளியான இவர், ஜெயங்கொண்டத்தில் உள்ள காது கேளாதோருக்கான தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் விவசாயத்தை காக்க வேண்டும், பாரம்பரிய கலைகளை காக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலையில் கரகம் வைத்து ஆடிக்கொண்டே வயலில் இறங்கி நேற்று நாற்றுகளை நட்டார்.
 
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவர் கரகாட்டம் ஆடிக்கொண்டே நடவு செய்ததை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து, மாணவியை பாராட்டினர். இது குறித்து மாணவியின் தாய் மாலா கூறுகையில், விவசாயம், கரகாட்டம் உள்ளிட்டவற்றை பேணிக்காத்து, கலைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக கடந்த 2 நாட்களாக வயலில் இறங்கி இந்த பயிற்சியினை கிருஷ்ணவேணி மேற்கொண்டுள்ளார். மேலும், இந்தியா புக்ஆப் ரெக்கார்டில் இடம்பெறவும் இந்த சாதனை முயற்சி செய்துள்ளோம், என்றார்.
 
https://www.dailythanthi.com/News/State/2021/01/16150759/Awarenessraising-disabled-student.vpf
 
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.