Jump to content

உங்கள் வீட்டின் சுவற்றில்.. இவ்வாறு போஸ்டர் ஒட்டினால், நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 7 people, outdoor

 

வேட்பாளர்களே உங்கள் தொண்டர்களுக்கு போஸ்டர் ஒட்டுவதற்கு பணத்தை மாத்திரம் கொடுக்காதீர்கள் கொஞ்சம் சமூக சிந்தனையையும் ஊட்டுங்கள்...

திறக்கப்பட்டு சில நாட்களே ஆன இந்த கட்டிடத்தின் சுற்றுச்சுவரை நாசமாக்கி வைத்திருக்கும் இச்செயற்பாட்டின் மூலம் உங்கள் சமூக சிந்தனை கேலிக்கூத்தாகிறது. 

யாரோ ஒரு கூலித்தொண்டன் கொடுத்த காசுக்கு வேலைசெய்கிறேன் என கிஞ்சித்தும் சமூக சிந்தனையின்றி இதில் ஒட்டிவிட்டுச்சென்றிருக்கிறான். 

அந்தச்சுவற்றுக்கு வண்ணம் பூசி சில நாட்கள்தான் ஆகிறது. உங்கள் வீட்டின் சுவற்றில் இவ்வாறு போஸ்டர் ஒட்டினால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? 

மக்கள் ஒட்டியவன் யாரென்று பார்க்க மாட்டார்கள் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் உள்ளவர் யாரென்றுதான் பார்த்து காறித்துப்புவார்கள். இவ்வாறான இழி செயல்களால் உங்களுக்கு மாத்திரம் இல்லை உங்கள் கட்சிக்கும்தான் பாதிப்பு. இவ்வாறு சமூக சிந்தனை இல்லாமல் போஸ்டர் ஒட்டும் ஒரு அணி எவ்வாறு மக்கள் பிரச்சனைக்கு தீர்வு பெற்றுத்தரும் என்று சிந்திப்பார்கள் மக்கள். உங்களின் தோல்வியோடு கட்சியையும் தோற்கவைக்கவா இவ்வாறு செயற்படுகின்றீர்கள்? 

மக்களுக்கு சேவையாற்ற பாராளுமன்றம் போகிறேன் என்று தேர்தலில் போட்டியிடும் நீங்கள் மக்கள் சொத்திலும் அக்கறை கொண்டிருக்கவேண்டும். எல்லா இடமும் உங்கள் முகம் தெரிய வேண்டும் என்றால் தொண்டர்களின் முதுகில் ஒட்டுங்கள் போஸ்டர். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு சகித்துக்கொள்வார்கள் அவர்கள். பொதுச்சொத்தை நாசம் செய்யாதீர்கள். 

தினமும் கடந்து செல்லும் போது அழகாக காட்சி தந்த அந்த மதில்கள் இன்று அவலட்சணமாக காட்சியளிக்கிறது.

சுப்ரமணிய பிரபா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/7/2020 at 05:30, தமிழ் சிறி said:

Image may contain: 7 people, outdoor

 

வேட்பாளர்களே உங்கள் தொண்டர்களுக்கு போஸ்டர் ஒட்டுவதற்கு பணத்தை மாத்திரம் கொடுக்காதீர்கள் கொஞ்சம் சமூக சிந்தனையையும் ஊட்டுங்கள்...

திறக்கப்பட்டு சில நாட்களே ஆன இந்த கட்டிடத்தின் சுற்றுச்சுவரை நாசமாக்கி வைத்திருக்கும் இச்செயற்பாட்டின் மூலம் உங்கள் சமூக சிந்தனை கேலிக்கூத்தாகிறது. 

யாரோ ஒரு கூலித்தொண்டன் கொடுத்த காசுக்கு வேலைசெய்கிறேன் என கிஞ்சித்தும் சமூக சிந்தனையின்றி இதில் ஒட்டிவிட்டுச்சென்றிருக்கிறான். 

அந்தச்சுவற்றுக்கு வண்ணம் பூசி சில நாட்கள்தான் ஆகிறது. உங்கள் வீட்டின் சுவற்றில் இவ்வாறு போஸ்டர் ஒட்டினால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? 

மக்கள் ஒட்டியவன் யாரென்று பார்க்க மாட்டார்கள் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் உள்ளவர் யாரென்றுதான் பார்த்து காறித்துப்புவார்கள். இவ்வாறான இழி செயல்களால் உங்களுக்கு மாத்திரம் இல்லை உங்கள் கட்சிக்கும்தான் பாதிப்பு. இவ்வாறு சமூக சிந்தனை இல்லாமல் போஸ்டர் ஒட்டும் ஒரு அணி எவ்வாறு மக்கள் பிரச்சனைக்கு தீர்வு பெற்றுத்தரும் என்று சிந்திப்பார்கள் மக்கள். உங்களின் தோல்வியோடு கட்சியையும் தோற்கவைக்கவா இவ்வாறு செயற்படுகின்றீர்கள்? 

மக்களுக்கு சேவையாற்ற பாராளுமன்றம் போகிறேன் என்று தேர்தலில் போட்டியிடும் நீங்கள் மக்கள் சொத்திலும் அக்கறை கொண்டிருக்கவேண்டும். எல்லா இடமும் உங்கள் முகம் தெரிய வேண்டும் என்றால் தொண்டர்களின் முதுகில் ஒட்டுங்கள் போஸ்டர். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு சகித்துக்கொள்வார்கள் அவர்கள். பொதுச்சொத்தை நாசம் செய்யாதீர்கள். 

தினமும் கடந்து செல்லும் போது அழகாக காட்சி தந்த அந்த மதில்கள் இன்று அவலட்சணமாக காட்சியளிக்கிறது.

சுப்ரமணிய பிரபா

உங்களுக்கு எனதும், எனது உறவினர்கள், நண்பர்கள் வாக்குகள் இல்லை என்று சொன்னால், வந்து உரித்துக் கொண்டு ஓடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலும் சட்டமும் ஒழுங்கான நாடுகளிலை விளம்பரங்கள் ஒட்டுறதுக்கெண்டே இடங்கள் ஒதுக்கி வைச்சிருப்பினம். அது தேர்தல் விளம்பரம் எண்டாலும் குறிப்பிட்ட இடத்திலை தான் ஒட்ட வேணும் இதுதான் சட்டம்.

சமுதாய சீர்திருத்தத்தை முதலில் இப்படியான இடங்களிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.அரசியலை திருத்த சமுதாயம் தானாக திருந்தும்.கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு சமுதாய சீர்திருத்தம் பேசுவதில் எவ்வித பயனும் இல்லை.


அதை விட்டுட்டு  சும்மா ஆன்மீகத்தையும் கோயில் குளத்தையும் பார்த்து குலைக்கிறதிலை ஒரு பிரயோசனமும் இல்லை.😎

 

Ex-Models - Seite 7 von 9 - Ein Crossmedia-Projekt über Schönheitskonzepte  und Altersbilder.

Das steckt hinter den provokanten Werbeplakaten an Güterslohs  Straßenrändern - nw.de

Wahlplakat-Analyse zur Europawahl: „Mangelnde Unterscheidbarkeit ist immer  ein Vorteil für Populisten“ - Politik - Tagesspiegel

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

106602481_3346807238705520_1091877917903807429_n.jpg?_nc_cat=100&_nc_sid=dbeb18&_nc_ohc=ZP2U_2E7xgEAX_kWX6C&_nc_ht=scontent-frx5-1.xx&oh=7989a6f0a226aa280f9c22f0cc6650e3&oe=5F388768

அழகிய குடிபானத்தை வாங்கும் மக்கள், 
இவ்வாறு படங்களைப் பார்க்கும் போது, குடிபான வெறுப்பு ஏற்படுகிறது..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.