• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
nunavilan

இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத்தீவுகள்: டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பிக்கிறது

Recommended Posts

இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத்தீவுகள்: டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பிக்கிறது

 

2020 ஜூலை 07 , பி.ப. 10:40

 

 

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, செளதாம்டனில் இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் ஆரம்பிக்கிறது.

அந்தவகையில் கொவிட்-19 பரவலுக்குப் பின்னர் ஏறத்தாழ நான்கு மாதங்களுக்குப் பின்னர் இப்போட்டியுடன் கிரிக்கெட் மீளத் திரும்புகின்ற நிலையில், போட்டி முடிவுக்கப்பால் போட்டி எவ்வாறு நடைபெறுகின்றது என்பது உற்று நோக்கப்படும்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் எட்டாமிடத்திலேயே மேற்கிந்தியத் தீவுகள் காணப்படுகின்றபோதும், அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டர், கேமார் றோச், ஷனொன் கப்ரியல், அல்ஸாரி ஜோசப் என பலமான வேகப்பந்துவீச்சுவரிசையைக் கொண்டிருக்கின்ற நிலையில், கிரேய்க் பிறத்வெய்ட், ஷே ஹோப், ஷேன் டெளரிச் உள்ளிட்ட வீரர்கள் ஓட்டங்களைப் பெறுமிடத்து வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து ஆடுகளங்களில் மேற்கிந்தியத் தீவுகள் சாதிக்க முடியும்.

மறுபக்கமாக சொந்த மண்ணில் அசைக்க முடியாத வீரனாகக் காணப்படும் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்துவீச்சுக் குழாமை எவ்வாறு எதிர்கொள்வது என்பதிலேயே இத்தொடரின் முடிவு தங்கியிருக்கிறது.

இந்நிலையில், தனது இரண்டாவது பிள்ளையின் பிறப்பு காரணமாக முதலாவது டெஸ்டை இங்கிலாந்தின் வழமையான டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவர் ஜோ றூட் தவறவிடுகின்ற நிலையில், அவரைப் பிரதியிடுகின்ற பென் ஸ்டோக்ஸின் தலைமைத்துவத்தோடு, பணிச்சுமையையும் முதலாவது டெஸ்ட் போட்டியில் நோக்கப்படும். ஏனெனில் இங்கிலாந்தின் மத்தியவரிசையின் முள்ளந்தண்டாக பென் ஸ்டோக்ஸே காணப்படுவதோடு, பந்துவீச்சிலும் தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியவராக உள்ளார்.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/இங்கிலாந்து-எதிர்-மேற்கிந்தியத்தீவுகள்-டெஸ்ட்-தொடர்-நாளை-ஆரம்பிக்கிறது/44-252918

Share this post


Link to post
Share on other sites
HOLDING BACK TEARS West Indies legend Michael Holding fights back tears as he delivers passionate anti-racism speech before England clash
He's always been a legend in our house growing up. Even more so now.
The part I understood and felt the most was the SIGH of sadness at the end. ☹️. I can relate.

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • புத்தன், கு.மா அண்ணா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  • கிறிஸ்தவர்களுக்கு எதிராக கருத்து கூறியதற்கு ஆதாரம் உண்டா??
  • செஞ்சோலைபடுகொலை_14ஆகஸ்ட்_2006 Posted on August 14, 2020 by கவிரதன்  49 0   முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர்பிரிவில் உள்ள அவள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் 2006 ஓகஸ்ட் 10ஆம் நாள்முதல் நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கன அனர்த்த முகாமைத்துவ முதலுதவிப் பயிற்சிநெறியில் வன்னிப்பிரதேச கிளிநொச்சி, முல்லைத்தீவு கல்வி வலயங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான உயர்தர வகுப்பு மாணவிகள் பங்குபற்றியிருந்தனர். மாணவர்கள் பயிற்சி நெறியில் பங்குபற்றிக்கொண்டிருந்த வேளை இலங்கை வான்படைக்குச் சொந்தமான நான்கு கிபிர் விமானங்கள் செஞ்சோலை வளாகத்தில் 2006 ஒகஸ்ட் 14 அன்று காலை 7.30 மணியளவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கண்மூடித்தனமான மேற்கொண்டன. இக்குண்டுத்தாக்குதலில் 52 மாணவிகள் மற்றும் இரு பணியாளாக்ள் உட்பட 54பேர் உயிரிழந்தனர். 130 மாணவிகள் படுகாயமடைந்ததுடன் பல மாணவிகள் சிறு காயங்களுக்குமுள்ளாகினர். படுகாயமடைந்தவாக்ளில் மூன்று மாணவியர்களுக்கு கால்கள் துண்டிகக்ப்பட்டதுடன் மாணவி ஒருவர் கண் ஒன்றை இழந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். இவர்களில் மேலும் காயப்படட் மூன்று மாணவிகள் முல்லைத்தீவு வைத்தியசாலையினால் கண்டி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைகக்ப்பட்டனர். சிறீலங்கா பயங்கரவாத விசாரணைத் திணைக்களம் உடனடியாக காயப்படட் மூன்று மாணவிகளையும் கைதுக்குள்ளாக்கினர். இறுதியாக மூன்று மாணவிகளும் விடுவிக்கப்பட்டு வன்னியிலுள்ள தமது வீட்டுக்குச்செல்ல விடுவதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டனர். அவர்களுள் காயமடைந்த ஒரு மாணவி வவுனியாவில் இறந்துவிட்டார். மற்றைய இரு மாணவிகளும் உடனடியாக கண்டி வைத்தியசாலைக்கு திரும்ப எடுத்துச் செல்லப்பட்டனர். சில மாதங்களின்பின் இரு மாணவிகளும் எங்கே தங்குகின்றார்கள் என்பதே மர்மமாக மாறியது அவர்களது பெற்றோர்கள் மட்டும் ஏற்கனவே ஒழுங்குபடுத்தப்பட்ட இடத்தில் அவர்களைச் சந்திப்பதற்கு அனுமதிக்கபப்டுகின்றனர்.ஏறத்தாழஇரு வருடங்களாக எதுவித குற்றச்சாட்டுக்களுமின்றி இந்த இரு மாணவிகளது தடுத்துவைத்தலானது அவர்களது பெற்றோருக்கு விளங்கிக்கொள்ள முடியாததாகவே இருக்கிறது. http://www.kuriyeedu.com/wp-content/uploads/2020/08/Sensoolai-Vadu.mp4?_=1  
  • உலகத் தமிழர்களின், அபிமானப் பாடகர்... பாலசுப்பிரமணியம் அவர்கள்,  விரைவில் நலம் பெற  வேண்டும் என,  நல்லூர் முருகனை பிரார்த்திக்கின்றேன்.  🙏
  • தடையை மீறி செஞ்சோலை 14 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு Posted on August 14, 2020 by தென்னவள்  14 0 முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு படையினர் மற்றும் பொலிஸாரின் அச்சுறுத்தலையும் மீறி நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது. காலை 6.15 மணிக்கு விமானத்தாக்குதல் இடம்பெற்ற இடைக்கட்டு செஞ்சொலை வளாகப்பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 6.45 மணிக்கும் உறவினர்கள் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். பின்னர், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடமாகாணசபை முன்னால் உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் உள்ளிட்டவர்களால் அதே இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் நினைவேந்தல் இடம்பெறும் வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் அமைக்கப்பட்ட நினைவு வளைவிற்கு அருகில்  நினைவேந்தல்  நடத்த பொலிஸார் தடை விதித்திருந்தனர். இருந்தபோதிலும் தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அந்த இடத்திற்கு சென்றபோது பொலிஸார தடைவிதித்துள்ளனர். எனினும், வழமைபோல் நிகழ்வு செய்யும் அதே இடத்தில் சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். நினைவேந்தல் இடம்பெற்ற பகுதிகளில் ஆயுதம் தாங்கிய படையினர் பொலிஸார் மற்றும் அரச புலனாய்வாளர்கள் பிரசன்னமாகியிருந்ததோடு அஞ்சலி நிகழ்வினை மேற்கொள்பவர்களை புகைப்படம் எடுத்துள்ளனர். https://www.kuriyeedu.com/?p=273400