Jump to content

அமெரிக்காவில் நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட்-19 பாதிப்பு பதிவானது!


Recommended Posts

அமெரிக்காவில் நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட்-19 பாதிப்பு பதிவானது!

 

 

    by : Anojkiyan

Capture-3-720x450.jpg

உலகிலேயே கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்ட நாடாக விளங்கும் அமெரிக்காவில், நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கடந்த 24 மணித்தியாலத்தில் அமெரிக்காவில் 61,848பேர் பாதிப்படைந்துள்ளனர். மேலும், 890பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்மைய அமெரிக்காவில் வைரஸ் தொற்று தோன்றியதிலிருந்து பதிவான, நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

அத்துடன், அமெரிக்காவில் கொவிட்-19 பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 31இலட்சத்து 58ஆயிரத்து 932ஆகும். அதேபோல, அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 34ஆயிரத்து 862ஆகும்.

இதுதவிர அங்கு 16இலட்சத்து 31ஆயிரத்து 391பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 15ஆயிரத்து 457பேர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இதுவரை 13இலட்சத்து 92ஆயிரத்து 679பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

அமெரிக்காவில் அதிகப்படியாக, நியூயோர்க் மாநிலத்தில் அதிகமாக கொவிட்-19 பாதிப்பு பதிவாகியுள்ளது. அங்கு 4 இலட்சத்து 24ஆயிரத்து 263பேர் பாதிப்படைந்துள்ளனர்.

https://athavannews.com/அமெரிக்காவில்-நாளொன்று-3/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.