Jump to content

வடக்கு மக்களுக்கு வாழும் உரிமை இருந்தால் போதும் அதிகாரப்பகிர்வு அவசியமில்லை.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மக்களுக்கு வாழும் உரிமை இருந்தால்போதும் அதிகாரப்பகிர்வு அவசியமில்லை..!

imageproxy-11900533267.jpeg

இந்தியாவால் திணிக்கப்பட்ட அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்கமுடியாது. அது இல்லாதொழிக்கப்படவேண்டும்.

இவ்வாறு வலியுறுத்தினார் ராவணா பலய அமைப்பின் பொதுச்செயலர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர்.

அத்துடன், "வடக்கு மக்களுக்கு வாழும் உரிமை இருந்தால் போதும் அவர்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமில்லை " , எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதிகாரப்பகிர்வு தொடர்பில் கருத்து வெளியிட்ட இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் மேலும் தெரிவித்ததாவது:- “அரசமைப்பின் 13-ஆவது திருத்தச்சட்டம் என்பது இந்திய அரசால் எமக்கு பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றாகும். எனவே, அதனை மதிக்கவேண்டும், ஆனால் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது கட்டாயமில்லை.

தேர்தல் காலத்தில் மாத்திரமே 13 ஆவது திருத்தச்சட்டம் பற்றி பேசப்படுகின்றது. தேர்தல் முடிந்த பிறகு 13 என்று ஒன்று இருக்கின்றதா என்றுகூட தெரியாது.

வடக்கு மக்களுக்கு சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலையே அவசியமாகின்றது. வேலையின்மை பிரச்சினை தீர்க்கப்படவேண்டும், வீடுகள் நிர்மாணிக்கப்படவேண்டும், விவசாயத்தை முன்னெடுப்பதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்படவேண்டும். இவை நடைபெற்றால் அதிகாரப் பகிர்வுக்கான அவசியம் எழாது.

அரசியல்வாதிகளே 13 பற்றி கருத்து வெளியிடுகின்றனர். மக்கள் அதிகாரப்பகிர்வை கோரவில்லை. தமிழ் அடிப்படைவாதிகள் தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காகவும், சிங்கள சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காகவுமே இவ்வாறான அறிவிப்புகளை விடுத்துவருகின்றனர்.

எனவே, அதிகாரப்பகிர்வு அவசியமில்லை. 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எமது அமைப்பு முழுமையான எதிர்ப்பை வெளியிடுகின்றது” – என்றார்.

http://puthusudar.lk/2020/07/09/வடக்கு-மக்களுக்கு-வாழும்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வடக்கு மக்களுக்கு வாழும் உரிமை இருந்தால்போதும் அதிகாரப்பகிர்வு அவசியமில்லை..!

அத நீ சொல்லக்கூடாது.  அதற்கு உனக்கு உரிமை இல்லை. உன் வேலை எதுவோ அதை மட்டும் பார். முற்றும் துறந்த ஞானி பேசும் பேச்சாய் இல்லையே உன் பேச்சு. அடிச்சு பறிச்சு வயிறு வளர்க்க திரியுதுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்த பெருமானின் உன்னத வழிகாட்டலையும் போதனைகளையும் நற்சிந்தனைகளையும் வேண்டுமென்றே உருமாற்றி அரசு கற்பித்த பாடங்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட இவர் போன்ற மனித நேயமற்ற ஈனப்பிறவிகள் சிறிலங்காவின் சமய தலைமைகளாக முன்னின்று அரசியல் பேசும் இந்த நிலைமை எமது நாட்டில்  மனித உரிமைக்கும் ஜனநாயகத்திற்கும் விழுந்த சாட்டையடி.

துறவறம் பூண்டு வாழும் கட்டுப்பாடான வாழ்க்கையில் இணய தமது பிள்ளைகளை  அனுப்பிவைக்க நல்ல குடும்பத்து பெற்றோர்கள் சம்மதிக்காததால் நாட்டில் புத்த துறவிகளுக்கு பெரிய தட்டுப்பாடு நிலவியது. இதை மாற்றியமைக்க அரசின் திட்டமிடலில் புத்த துறவிகளாக இளம் வயதினர் சீர்திருத்த பாடசலைகளில் இருந்தும் நன்னடத்தைச் சிறைக்கூடங்களில்  இருந்தும் இளம் குற்றவாளிகள் விடுதலை வழங்கப்பட்டு துறவிகள் பயிற்சிக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள். ஒழுங்காக சீர்திருத்தம் செய்யப்படாத இந்த குற்றவாளி துறவிகளின் மனதில் வளர்ந்தபின்னரும் இரத்த வெறிதான் மேலோங்கி இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குற்றச் செயலில் ஈடுபடும் பிக்குகளுக்கு தண்டனை வழங்கும்போது;  வெறும் தண்டனையை விதிக்காமல் புத்த தர்மம் என்ன சொல்கிறது? இவர்கள் அதற்கு மாறாக குற்றமிழைத்ததால் தொடர்ந்து பிக்குவாக இருக்கமுடியாது. தர்மம் தெரிந்தும் அதற்கு எதிராக   குற்றம் இழைத்ததால் அதிகபட்ச தண்டனையும் வழங்குவதன் மூலம் உவங்களின் போலி முகத்தை கழட்டலாம். ஆனால் சிங்கள நீதிபதிகள் செய்யமாட்டார்கள். மக்களும் உவங்களை உயர்ந்தவர்களாக கருதுவதை நிறுத்தவும் மாட்டார்கள். மதத்தை வைத்தும் ஏய்த்தும் பிழைப்பு நடத்துவோர் இருக்கும்வரை  இப்படிபட்டவர்கள் பெருகிக் கொண்டுதான் இருப்பார்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள நீதிபதிகளும் சளைத்தவர்கள் அல்ல. பாரிய குற்றசெயல்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கும்போது நன்னடத்தை நிலையங்கள் சீர்திருத்தப்பள்ளிகள் போன்ற புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பாமல் நேரடியாகவே கட்டாய சமுதாய சேவை (Compulsory community service) என்ற போர்வையில் அவர்களை துறவிகளுக்கான புத்த மடாலயங்களுக்கு அனுப்பிவைக்கும்படி தீர்ப்பு வழங்குகிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.