Jump to content

ராஜபக்சாக்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு நிரந்தர எதிரிகளாக கருதவில்லை – சர்வதேச ஊடகத்திற்கு சம்பந்தன் கருத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சாக்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு நிரந்தர எதிரிகளாக கருதவில்லை – சர்வதேச ஊடகத்திற்கு சம்பந்தன் கருத்து

July 9, 2020

ராஜபக்சாக்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு நிரந்தர எதிரியாக கருதவில்லை என கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இன்றுமாலை தொலைபேசி மூலம் வழங்கிய பேட்டியில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இதனை எனக்கு தெரிவித்தார் என சோனியா சர்கார் என்ற வெளிநாட்டு செய்தியாளர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Sampanthan--300x169.jpg

எங்கள் கட்சி ராஜபக்சாக்களை நிரந்தர எதிரியாக கருதவில்லை என சம்பந்தன் எனக்கு தெரிவித்தார் என அந்த செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சியில் சர்வாதிகரபோக்கினை கொண்டுவந்தமை போன்ற ஏற்றுக்கொள்ளமுடியாத விடயங்களை அவர்கள் செய்ததன் காரணமாகவே நாங்கள் 2015 இல் அவர்களை எதிர்த்தோம் என அவர் குறிப்பிட்டார் என அந்த செய்தியாளர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

ராஜபக்ச சகோதரர்கள் அரசமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்,யுத்தத்தின்போது பொதுமக்களுக்கு எதிராக படையினர் மேற்கொண்ட குற்றங்களை விசாரணை செய்வதற்கான சுயாதீன ஆணைக்குழுவை கைவிடுவதற்கான நோக்கத்தை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர் அவர்கள் நீதித்துறையின் நடவடிக்கைகளில் தலையிட முயன்றனர் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 

gota-mahinda2-300x240.jpg

 

எதிர்காலத்தில் ராஜபக்சாக்கள் நாட்டை முன்னேற்றகரமான விதத்தில் ஆட்சி செய்தால் நாங்கள் அவர்களை எதிர்க்கமாட்டோம் என சம்பந்தன் தெரிவித்தார்,தற்போது எங்கள் தீர்மானங்கள் சில கொள்கைகளின் அடிப்படையில் காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார் என சோனியா சர்கார் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் மக்களுக்கு எது சிறந்ததோ அதனை நாங்கள் செய்வோம்,தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விடயங்களில் எந்தவிட்டுக்கொடுப்புமில்லை எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 

http://thinakkural.lk/article/53269

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கவனம் பாத்து, எஜமானர்  முகம் கோணப்போறார். எப்பிடித்தான் இவங்களால மாத்தி மாத்திப் பேச முடியுது? மானங் கெட்டவன் எல்லாம் இனத்துக்கு தலைவனாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

 கவனம் பாத்து, எஜமானர்  முகம் கோணப்போறார். எப்பிடித்தான் இவங்களால மாத்தி மாத்திப் பேச முடியுது? மானங் கெட்டவன் எல்லாம் இனத்துக்கு தலைவனாம்!

இதுக்குப் பிறகும்.... இவர்களுக்கு வாக்குப் போடுபவர்களை நினைக்க கோபம் தான் வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சக்களையே நிரந்தர எதிரிகளாக பார்க்காத தயாள குணமுள்ள இந்த தமிழ் அரசியல் தலைமைகள் வேறு எந்த சிங்கள அரசியல்வாதிகளையும் அந்த நிலையில் வைத்து பார்க்க முடியாது. ஆனால் இப்படியானவர்களின் அரசியலில் நிரந்தர எதிரிகள் என்று சொல்ல தங்கள் சொந்த இனத்தின் மாற்றுதலைமைகளைக் கொண்ட நீண்ட பட்டியலை வைத்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.