Jump to content

சாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே 
சாதி எம் இன‌த்துக்கு பிடிச்ச‌ ஒரு ச‌ணிய‌ன் என்று தான் சொல்ல‌னும் 😓, ச‌ரி சொல்ல‌ வ‌ந்த‌தை சொல்லுகிறேன் 🙏


அன்மையில் என‌து ம‌ச்சாள் சாதி ம‌றுப்பு திரும‌ண‌ம் செய்தா , ஆர‌ம்ப‌த்தில் மாமா இந்த‌ திரும‌ண‌த்த‌ ந‌ட‌த்த‌ விட‌ மாட்டேன் என்று வில்ல‌ன் போல் நின்றார் , புல‌ம்பெய‌ர் நாட்டில் பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் ஒரு முடிவு எடுத்தா அதில் பெரிசா மாற்ற‌ம் செய்ய‌ மாட்டின‌ம் , என்ர‌ ம‌ச்சாள் திரும‌ண‌ம் செய்தா அந்த‌ பெடிய‌னை தான் செய்வேன் என்று விடா பிடியில் நின்றா , அத்தையும் மாமாவும் எவ‌ள‌வு சொல்லியும் ம‌ச்சாள் பெற்றோரின் சொல்ல‌ கேக்கிற‌ மாதிரி இல்ல‌ ,  ப‌ல‌ பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு அத்தையும் மாமாவும் திரும‌ண‌த்துக்கு ச‌ம்ம‌திச்சு ம‌க‌ளின் திரும‌ண‌த்த‌ த‌மிழ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌முறையில்  கோயிலில் வைத்து தாலி க‌ட்டி வைத்தார்க‌ள்  ,

அடுத்த‌ நாள் ம‌ண்ட‌ப‌த்தில் ம‌ன‌ ம‌க்க‌ள் இருக்க‌ உற‌வின‌ர்க‌ள் ந‌ட்பு வ‌ட்டார‌ங்க‌ள் திரும‌ண‌ த‌ம்ப‌திக‌ளை வாழ்த்தி விட்டு புகைப் ப‌ட‌ம் வீடியோ எடுத்து சாப்பிட்டு ஆட்ட‌ம் பாட்ட‌ம் போட்டு அவ‌ர்க‌ளின் திரும‌ண‌ நிக‌ழ்வு ந‌ல்ல‌ மாதிரி முடிஞ்சுது 💏🙏,


ம‌ழை விட்டாலும் தூவான‌ம் விட‌ வில்லை என்ற‌ மாதிரி , திரும‌ண‌ம் முடிந்தாப் பிற‌க்கு ஒரு  சில‌ சொந்த‌ங்க‌ள் அத்தையையும் மாமாவையும் ந‌க்க‌ல் ப‌ண்ண‌ தொட‌ங்கிட்டின‌ம் ம‌ற்ற‌ நாடுக‌ளில் இருந்து  ( எப்ப‌ மீன் பிடிக்க‌ போவிங்க‌ள் என்று  😓)
இத‌ கேக்க‌ என‌க்கு கெட்ட‌ கோவ‌ம் வ‌ந்திச்சு , ம‌ச்சாள் திரும‌ண‌ம் செய்த‌ பெடிய‌னின் பெற்றோர்  ஊரில் மீன் பிடிக்கும் தொழில் செய்தார்க‌ள்  , அத‌ வைச்சு ஒரு சில‌ சொந்த‌ங்க‌ள் ந‌க்க‌ல் நையாண்டியில் இற‌ங்கிட்டின‌ம் , அவ‌ர்க‌ளின் ந‌க்க‌ல் நையாண்டி உண்மையில் ம‌ன‌ உளைச்ச‌ல‌ அத்தைக்கும் மாமாவுக்கு குடுத்து இருக்க‌ கூடும்  , 

நான் உற‌வுகளின் கொண்டாட்ட‌ங்க‌ளில் க‌ல‌ந்து கொள்வ‌து இல்லை , அத்தை என்னையும் திரும‌ண‌த்துக்கு அழைத்தா நான் போக‌ வில்லை , ஒரு சொந்த‌ங்க‌ளின் திரும‌ண‌ நிக‌ழ்வுக்கு போய் விட்டு ம‌ற்ற‌வையின் நிக‌ழ்வுக்கு போகாம‌ல் விட்டால் என்னை அதிக‌மாய் க‌ழுவி ஊத்துங்க‌ள் , 

என‌க்கு உந்த‌ ஒன்றுக்கும்  உத‌வாத‌ சாதிய‌ தூக்கி பிடிப்ப‌வ‌ர்க‌ளை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது , சொந்த‌ங்க‌ள் எல்லாரும் என் ம‌ச்சாளின் திரும‌ண‌த்துக்கு எதிரா நின்று இருந்தாலும் நான் த‌னி ஒருவ‌னாய் அவ‌ர்க‌ளை த‌மிழ் நாட்டுக்கு கூட்டிட்டு போய் அவ‌ர்க‌ளின் திரும‌ண‌த்தை ஜாம் ஜாம் என்று  செய்து வைத்து இருப்பேன் ,  பின் விலைவுக‌ளை ப‌ற்றி நான் பெரிசா யோசிக்க‌ மாட்டேன் ,  

என‌க்கு இங்கை ந‌ண்ப‌ர்க‌ள் தோழிக‌ள் என்று இருக்கின‌ம் , இதுவ‌ரை நாங்க‌ள் சாதிய‌ ப‌ற்றி க‌தைச்ச‌து இல்ல‌ , த‌மிழீழ‌த்தில் எந்த‌ ஊர் என்று கேட்டு இருக்கிறோம் எந்த‌ சாதி என்ற‌ வார்த்தை எங்க‌ள் வாயில் இருந்து வெளியில் வ‌ந்த‌து இல்ல‌ 🤞😍

பெரியார் சாதிய‌ ஒழித்தாரோ இல்லையோ , எங்க‌ட‌ த‌லைவர் சாதிய‌ இல்லாம‌ல் செய்த‌வ‌ர் , அவ‌ரின் கொள்கையை பார்த்து வ‌ள‌ந்த‌ பிள்ளைக‌ள் சாதிய‌ ஒரு பொருட்டாக‌வே க‌ருத‌ மாட்டார்க‌ள் 😘🤞


யாழ்க‌ள‌ உற‌வுக‌ள் ஆகிய‌ நீங்க‌ள் சாதிய‌ தூக்கி எறிந்த‌  உற‌வுக‌ளாய் இருந்தா உங்க‌ளின் அனுப‌வ‌ங்க‌ளை இந்த‌ திரியில் ப‌கிர்ந்து கொள்ளுங்கோ 🤞

அன்புட‌ன் பைய‌ன்26 😘🤞

 

 

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

ம‌ழை விட்டாலும் தூவான‌ம் விட‌ வில்லை என்ற‌ மாதிரி , திரும‌ண‌ம் முடிந்தாப் பிற‌க்கு ஒரு  சில‌ சொந்த‌ங்க‌ள் அத்தையையும் மாமாவையும் ந‌க்க‌ல் ப‌ண்ண‌ தொட‌ங்கிட்டின‌ம் ம‌ற்ற‌ நாடுக‌ளில் இருந்து  ( எப்ப‌ மீன் பிடிக்க‌ போவிங்க‌ள் என்று  😓)
இத‌ கேக்க‌ என‌க்கு கெட்ட‌ கோவ‌ம் வ‌ந்திச்சு , ம‌ச்சாள் திரும‌ண‌ம் செய்த‌ பெடிய‌னின் பெற்றோர்  ஊரில் மீன் பிடிக்கும் தொழில் செய்தார்க‌ள்  , அத‌ வைச்சு ஒரு சில‌ சொந்த‌ங்க‌ள் ந‌க்க‌ல் நையாண்டியில் இற‌ங்கிட்டின‌ம் , அவ‌ர்க‌ளின் ந‌க்க‌ல் நையாண்டி உண்மையில் ம‌ன‌ உளைச்ச‌ல‌ அத்தைக்கும் மாமாவுக்கு குடுத்து இருக்க‌ கூடும்

அப்பன் உது எந்த நாட்டிலை நடந்தது?
எங்கடை சனங்களை திருத்தேலாது. வெள்ளைக்காரங்களை கட்டினால் பேசாமல் இருக்குங்கள். ஆனால் தமிழருக்கை கட்டினால் இல்லாத நுணுக்கம் எல்லாம் பாக்குங்கள்.tw_rage:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

அப்பன் உது எந்த நாட்டிலை நடந்தது?
எங்கடை சனங்களை திருத்தேலாது. வெள்ளைக்காரங்களை கட்டினால் பேசாமல் இருக்குங்கள். ஆனால் தமிழருக்கை கட்டினால் இல்லாத நுணுக்கம் எல்லாம் பாக்குங்கள்.tw_rage:

வெள்ளைக்காரரெண்டா வெள்ளைச் சாதி. தமிழரெண்டா என்னென்று ஏற்கமுடியும்? பிறகு கெளரவம் என்னாகிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகன், குஜராத்திக்கார பிள்ளை ஒருத்தரை தான் கலியாணம் கட்டப்போறன் எண்டு சொல்லுறார்.

பிள்ளை... நல்ல வடிவு.... அங்கிள், ஆன்டி எண்டு சரியான பாசமா இருக்கிறா. கொஞ்சம் பசையான ஆக்கள்.... மோடியிண்ட தூரத்து சொந்தமாமே.

நாங்களும் விசாரிச்சு பார்க்கேக்குள்ள, அவியல் அங்க பிராமணராமே. சுத்த சைவமமாம். நாமளும் இனி மச்சம் சாப்பிடாமல் இருப்போமா எண்டு எண்ட மனிசி சொல்லுறா.... ஹீ... ஹீ....

இதுதான் நிலைமை பையா...

உந்த நக்கல் அடிக்கிற கோஸ்ட்டிகளுக்கும் நாளை இதுதான் நிலைமை எண்டு விளங்கினா, கப்சிப் ஆயிடுவினம்.

Link to comment
Share on other sites

2004ம் ஆண்டு ஆழிப்பேரலை அனர்த்தம் நடந்தவுடன் நாங்கள் வாழ்கிற நாடுகளில் எமது மக்களுக்கு நிவாரண பொருட்கள் சேகரித்து அனுப்பும் பணியில் இறங்கினோம். 2005 சித்திரை அளவில் எமது பணிகள் உடனடி நிவாரணம் என்ற நிலையில் இருந்து தட்காலிக்க தங்குமிடம் மற்றும் மருத்துவமி தாய் சேய் நல திட்டங்களுக்கு உதவுதல் என விரிவடைந்தது. அதனால் உடனடி நிவாரணத்துக்காக சேர்த்த உடைகள் காலணிகளின் ஒரு பகுதி எமது மக்களுக்கு இனி தேவை வராது என்ற காரணத்தால் உள்நாடு தொண்டமைப்புக்கு கொடுக்க வழிசெய்தோம். சக தொண்டர் தனது வானில் பொருட்களை கொண்டுசெல்ல முன்வந்தார். எல்லோரும் சேர்ந்து பொருட்களை வானில் ஏற்றினோம். ஏற்றிய பின்னர் பொருட்களை இறக்க உதவிக்கு ஆள் தேவைப்பட்டது. வந்த தொண்டர் ஒவொருவரும் ஒவொரு சாட்டு சொன்னார்கள். நான் உள்ளே அடுத்த தடவை கொண்டு செல்லவேண்டிய பொருட்களை பொதிசெய்து அடுக்குவதில் மும்மரமாக இருந்தேன். நான் அந்த வேலையை விட்டுவிட்டு வானில் ஏறி சென்று பொருட்களை இறக்குவத்திட்கு உதவினேன். இவ்வாறு  இருமுறை செய்து அன்றைய வேலையை முடித்தோம். 

சில வாரங்கள் கடந்து எங்களுக்கு  அயராது உதவுகிற ஒரு அம்மாவுடன் நான் கதைத்துக்கொண்டிருந்தபோது எங்களுக்கு வான் தந்து உதவிய தொண்டர் தனக்கு செய்த உதவிகள் பற்றி கூறி நீங்கள் வானிலை போய் அவருக்கு உதவி செய்ததுக்கு எவ்ளவு நல்லது. மற்றவை அப்படி செய்ய மாட்டினம் என்றார். எனக்கோ ஒன்றும் புரியவில்லை. மேலும் வினவிய பொழுது சொன்னார் "அவர் தாழ்ந்த சாதி" என்று சொல்லி அவருடன் போக பலர் தயங்குகிறார்கள் என்றார். அவரை எப்படி எங்கள்  சமூகம் தமது தேவைக்கு பாவித்துவிட்டு பின்னர் இப்படி செய்கிறார்கள் என்று மனம் நொந்தார். 

இதை போல பல நிகழ்வுகளை நான் கண்டிருந்தாலும்  இந்த ஒரு நிகழ்வு எனது சக தொண்டர்கள் மீதும் எமது சமூகம் மீதும்  பெரும் வெறுப்பை கொண்டுவந்தது. எனது சக தொண்டர்கள் பலர் என்னை விட வயதில் கூடியவர்கள். பெரிய பதவிகளி பட்டம்  பெற்றவர்கள். நாங்களோ பல்கலைகழகம் முடித்திவிடு அப்போதான் வேலை வாழ்கையை தொடங்கின காலம். நாங்கள் எல்லோரும்  வாழ்த்த நாட்டில் இருந்து கலைக்கப்பட்டு வேறு நாட்டில் வேரூன்றி வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள். எல்லாவற்றையும் இழந்த நாங்கள் சாதியை மட்டும் இழக்கவில்லை. கடல் கடந்து வந்தாலும் சாதி மட்டும் எமக்கு பெரிதாக தெரிகிறது. எமது சமூகத்தில் ஒருபகுதியை சாதி அடிப்படையில் ஒடுக்கிக்கொண்டு நாங்கள் வாழும் நாடுகளில் இனத்துவேசம் இருப்பதாக  அதே கூட்டம் அலறுவது நகைப்பிட்குரியது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சாதி மதம் பார்ப்பதில்லை, பிள்ளைகள் தமிழரை செய்தால் சந்தோஷம், பார்ப்பம் ஆண்டவன் என்ன செய்கின்றார் என்று. ஊரில் வீட்டிற்கு எல்லோரும் வந்து போவார்கள். காரைநகரில் இருந்து இடபெயர்ந்து எங்கள் ஊரில் ஒரு மீனவக்குடும்பம் வந்திருந்தார்கள், மிகவும் நல்லவர்கள், காரைநகர் சிவன் கோவிலுக்கு கிட்டதான் வீடு.  ஓவ்வொரு நாளும் எங்கள் வீட்டில்தான் பொழுது பகல் இரவு என்றில்லாமல்.

அவர்களில் ஒரு அக்காதான் என் பிள்ளைகளை மூவரையும் பிறந்தது முதல் வளர்த்தவா இரவு பகல் பாராமல்.

விடுமுறையில் யார் வீட்டு போகட்டிலும் அவர்கள் வீட்டுக்குதான் முதல் போவேன், இப்பவும் ஊரில் அம்மாவை அவா பார்க்க போனால் அம்மா உடன் போன் எடுத்து தருவா கதைக்க , பிள்ளைகளுக்கு அவா என்றால் காணும்.

சின்னலில் இருந்தே நான் இதை பார்ப்பதுமில்லை இதனால் பாதிக்கப்பட்டதுமில்லை. 

ஆனால் மரியாதை தெரியாதவர்களுடன் தூர விலகியிருந்தேன், அது சொந்தமாக இருந்தாலும் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

மகன், குஜராத்திக்கார பிள்ளை ஒருத்தரை தான் கலியாணம் கட்டப்போறன் எண்டு சொல்லுறார்.

பிள்ளை... நல்ல வடிவு.... அங்கிள், ஆன்டி எண்டு சரியான பாசமா இருக்கிறா. கொஞ்சம் பசையான ஆக்கள்.... மோடியிண்ட தூரத்து சொந்தமாமே.

நாங்களும் விசாரிச்சு பார்க்கேக்குள்ள, அவியல் அங்க பிராமணராமே. சுத்த சைவமமாம். நாமளும் இனி மச்சம் சாப்பிடாமல் இருப்போமா எண்டு எண்ட மனிசி சொல்லுறா.... ஹீ... ஹீ....

இதுதான் நிலைமை பையா...

உந்த நக்கல் அடிக்கிற கோஸ்ட்டிகளுக்கும் நாளை இதுதான் நிலைமை எண்டு விளங்கினா, கப்சிப் ஆயிடுவினம்.

குஜாரத்து பிள்ளையள் நன்றாக படித்தும் 
உயர் வேலையிலும் இங்கு பலபேர் இருக்கிறார்கள் 
கூடுதலாக (பிரமணரோ தெரியவில்லை) அசைவம் உண்பதில்லை 
பலருடன் நெருங்கி பழகி வந்தேன் .... 
இப்போ இந்த மோடி ஆதரவு ..அதனால் கோமாளி ட்ரம்முக்கு ஆதரவு 
என்று அவர்களை பற்றி நான் வைத்த்திருந்த நல்ல மதிப்புகளை 
அவர்களாகவே கெடுத்துவிட்டார்கள். 
இப்போ ஏனோ தானோ என்றுதன பழகிறது ...மனசு இடம்தருகுதில்லை 

அநீதிகளை அங்கீகரிப்பவர்களுடன் 
அண்டி பழகுவது கொஞ்சம் சஞ்சாரமக இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களின் பிள்ளைகள் சாதிமறுப்பு/காதல் திருமணம் செய்தால் எள்ளி நகைப்பவர்களின் பிள்ளைகள் அவ்வாறு செய்தால் என்ன செய்வார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஏராளன் said:

மற்றவர்களின் பிள்ளைகள் சாதிமறுப்பு/காதல் திருமணம் செய்தால் எள்ளி நகைப்பவர்களின் பிள்ளைகள் அவ்வாறு செய்தால் என்ன செய்வார்கள்?

hqdefault.jpg

அதை போன மாசம் தெரியாம சொல்லிட்டேன்.. போவீயா..☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

அப்பன் உது எந்த நாட்டிலை நடந்தது?
எங்கடை சனங்களை திருத்தேலாது. வெள்ளைக்காரங்களை கட்டினால் பேசாமல் இருக்குங்கள். ஆனால் தமிழருக்கை கட்டினால் இல்லாத நுணுக்கம் எல்லாம் பாக்குங்கள்.tw_rage:

germanyயில்  munster என்ற‌ இட‌த்தில் ,  நீங்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் இருந்து 250கிலோ மீற்ற‌ர் என்று நினைக்கிறேன் தாத்தா , 

போக‌ விட்டு குறை சொல்லி க‌தைப்ப‌தில் சாதிய‌‌  தூக்கி பிடிப்ப‌தில் எங்க‌டைய‌ல‌ மிஞ்ச‌ இந்த‌ உல‌கில் ஆட்க‌ள் இல்ல‌ தாத்தா ,

ஊரில் பெடிய‌ங்க‌ள் போராடி உயிர் நீக்க‌ அத‌ சாட்டி புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்து செட்டில் ஆகிட்டு எம்ம‌வ‌ர்க‌ள் சாதிய‌ ப‌ற்றி க‌தைப்ப‌து வெக்க‌க் கேடு , 

நாட்டுக்காக‌ இன‌த்துக்காக‌ உயிர் தியாக‌ம் செய்த‌ மாவீர‌ர்க‌ள் கூட‌ ஜாதிய‌ ப‌ற்றி க‌தைச்ச‌து இல்ல ‌ அவ‌ர்க‌ளின் விருப்ப‌ம் த‌மிழீழ‌ ம‌ண்ணில்  சாதி இருக்க‌ கூடாது , த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் சாதி‌ இல்ல‌ த‌மிழீழ‌த்தில் இத‌ என் க‌ண்ணால் பார்த்து இருக்கிறேன் சிறு வ‌ய‌தில் , 

எல்லா புக‌ழும் த‌லைவ‌ர் ஒருவ‌ருக்கே 🙏
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

மற்றவர்களின் பிள்ளைகள் சாதிமறுப்பு/காதல் திருமணம் செய்தால் எள்ளி நகைப்பவர்களின் பிள்ளைகள் அவ்வாறு செய்தால் என்ன செய்வார்கள்?

அதுவும் இஞ்சை ஜேர்மனியிலை நடந்திருக்கு.
அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டான், அடிமை, மேலோன், கீழோன்.... மனித வரலாறில் பின்னிப்பிணைநதது.

சஜித் பிரேமதாசவிடம் ஜதேகயினை கையழிக்காமல் ரணில் இழுத்தடிப்பதும் சிங்கள சாதிய காரணம் தான். அதேவேளை, மகிந்தா, சாதியத்துக்கு வெளியே சிங்கள மக்களால் விரும்பப்பட காரணம், தமிழர் என்ற இனத்தை ஒடுக்கியமை.

ஆங்கிலேயரில் கூட, அயர்ன்சிமித் (இரும்பு வேலை செய்வோர்), கோல்ட்சிமித், ரெய்லர், பேக்கர், மில்லர், வோட்டர்மான்.... இருந்திருக்கிறது.

அண்டர்ரேக்கர்ஸ் என்னும் வெட்டியான் வேலை....இங்கே அந்த வேலையால் கிடைக்கும் பணத்தால், பலர் கவரப்பட்டனர். ஒரு குறித்த சமூகத்துக்கான வேலை என்பதை பொருளாதாரம் உடைத்தெறிந்தது.

அதே போல, கனடாவில் நம்மவரிடையே, இந்த தொழிலில், பலர் சாதியத்துக்கு அப்பால், இறங்கி விட்டார்கள்.

பொருளாதாரம் ஒன்றே இதனை துடைத்தெறியும்.

இன்னும் விளக்கமாக சொல்லவேண்டுமாயின், ஊரில் தாழ்த்தப்பட்டவர் என்று ஒதுக்கி வைத்தவர் வீட்டில் சாப்பிட மாட்டார்கள். ஆனாலும் அவர்கள், சாப்பாட்டு கடை திறந்தால், அங்கே கொத்து ரொட்டியும்.... ஆட்டிறைச்சி கறியும்... அந்தமாதிரி என்று அனைவரும் அலை மோதுவர். இது பொருளாதாரம்உடைத்த சாதீயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

ஆண்டான், அடிமை, மேலோன், கீழோன்.... மனித வரலாறில் பின்னிப்பிணைநதது.

சஜித் பிரேமதாசவிடம் ஜதேகயினை கையழிக்காமல் ரணில் இழுத்தடிப்பதும் சிங்கள சாதிய காரணம் தான். அதேவேளை, மகிந்தா, சாதியத்துக்கு வெளியே சிங்கள மக்களால் விரும்பப்பட காரணம், தமிழர் என்ற இனத்தை ஒடுக்கியமை.

ஆங்கிலேயரில் கூட, அயர்ன்சிமித் (இரும்பு வேலை செய்வோர்), கோல்ட்சிமித், ரெய்லர், பேக்கர், மில்லர், வோட்டர்மான்.... இருந்திருக்கிறது.

அண்டர்ரேக்கர்ஸ் என்னும் வெட்டியான் வேலை....இங்கே அந்த வேலையால் கிடைக்கும் பணத்தால், பலர் கவரப்பட்டனர். ஒரு குறித்த சமூகத்துக்கான வேலை என்பதை பொருளாதாரம் உடைத்தெறிந்தது.

அதே போல, கனடாவில் நம்மவரிடையே, இந்த தொழிலில், பலர் சாதியத்துக்கு அப்பால், இறங்கி விட்டார்கள்.

பொருளாதாரம் ஒன்றே இதனை துடைத்தெறியும்.

உண்மை.  

அரசியலரங்குமுதல் அனைத்துத் தளங்களிலும் சாதீயம் கோலோச்சி வருகிறதென்பதை சரியாகச் சுட்டியுள்ளீர்கள். புலத்திலே இடத்துக்கிடமும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்பவும் கடைப்பித்தலும் அனுசரித்தலுமாக நகர்கிறது. நீங்கள் சுட்டியுள்ளதுபோன்று  'பொருளாதாரம் ஒன்றே இதனை துடைத்தெறியும்'  என்ற இலக்கைத் தமிழீழம் அடையச் சரியானதொரு அரசியல் இலக்கு எட்டப்பட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு அனைவருக்கும் கல்வி வாய்ப்புகள் கிடைத்து, முழுமையான அறிவுப்பரப்புடைய ஒரு குமுகாயமாகும்போது பொருளாதார சமத்துவம் மலரக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதனை எமதினம் தொட இன்னும் இரண்டு தலைமுறைகளையாவது கடக்கவேண்டிவரலாம். ஆனால் புலத்திலே பொருளாதார சமநிலையிலும் சாதி பார்க்கப்படுகிறதே. நானறிந்த ஒரு பொதுத் தளத்திலே நகரமட்டத்திலே இருப்பவர் தனது பிள்ளைகளுக்கு யார்யார் என்ன என்பதை கூறிவைத்துள்ளதோடு பிள்ளைகள் மிகநெருக்கமாகப் பழகும் நட்புவட்டத்திலே உரையாடிய சம்பவங்களையும் அறிந்துள்ளேன்.எனவே இங்கும் ஒரு இரண்டு தலைமுறைகளைக் கடக்கும்போது பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து சாதியென்பது தேய்நிலைக்குச் சென்றுவிடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

நான் சாதி மதம் பார்ப்பதில்லை, பிள்ளைகள் தமிழரை செய்தால் சந்தோஷம், பார்ப்பம் ஆண்டவன் என்ன செய்கின்றார் என்று. ஊரில் வீட்டிற்கு எல்லோரும் வந்து போவார்கள். காரைநகரில் இருந்து இடபெயர்ந்து எங்கள் ஊரில் ஒரு மீனவக்குடும்பம் வந்திருந்தார்கள், மிகவும் நல்லவர்கள், காரைநகர் சிவன் கோவிலுக்கு கிட்டதான் வீடு.  ஓவ்வொரு நாளும் எங்கள் வீட்டில்தான் பொழுது பகல் இரவு என்றில்லாமல்.

அவர்களில் ஒரு அக்காதான் என் பிள்ளைகளை மூவரையும் பிறந்தது முதல் வளர்த்தவா இரவு பகல் பாராமல்.

விடுமுறையில் யார் வீட்டு போகட்டிலும் அவர்கள் வீட்டுக்குதான் முதல் போவேன், இப்பவும் ஊரில் அம்மாவை அவா பார்க்க போனால் அம்மா உடன் போன் எடுத்து தருவா கதைக்க , பிள்ளைகளுக்கு அவா என்றால் காணும்.

சின்னலில் இருந்தே நான் இதை பார்ப்பதுமில்லை இதனால் பாதிக்கப்பட்டதுமில்லை. 

ஆனால் மரியாதை தெரியாதவர்களுடன் தூர விலகியிருந்தேன், அது சொந்தமாக இருந்தாலும் . 

யாழ்ப்பாண‌த்தை சிங்க‌ள‌ இராணுவ‌ம் கைப்ப‌ற்ற‌ மீசாலையில் அத்தை வீட்டில் த‌ங்கி இருந்தேன் , 

மீசாலையில் 4வீடு இருந்த‌து சொந்த‌ங்க‌ள் ம‌ற்றும் ம‌ற்ற‌ ஊர்க‌ளில் இருந்து மீசாலைக்கு வ‌ந்த‌ உற‌வுக‌ளை எங்க‌ளுட‌ன் தான் த‌ங்க‌ வைச்சோம் ,  என‌க்கு என்ர‌ சொந்த‌த்த‌ த‌விற‌ ம‌ற்ற‌ உற‌வுக‌ளைத் தெரியாது , கொஞ்ச‌ நாட்க‌ள் போக‌ ஏதோ நெருங்கிய‌ சொந்த‌ங்க‌ள் போல் ஆகி விட்டோம் , 
ஒரு தாய் பிள்ளைக‌ள் போல் எல்லாரும் ஒன்னாத்தான் விளையாடுவோம்  , ஊரில் நாங்க‌ள் சாதி பார்த்த‌து இல்ல‌ , அப்ப‌டி இருந்த‌ ப‌டியால் தான் அந்தப்‌  பெரிய‌ வீடுக‌ளில்   ப‌ல‌ குடும்ப‌ங்க‌ள் ஒற்றுமையா த‌ங்கி இருந்தார்க‌ள் 🙏🤞😘

இட‌ம்பெய‌ர்ந்து இருந்தாலும் அந்த‌ வாழ்க்கைய‌ நினைக்கையில் மிக‌வும் ம‌கிழ்ச்சியாய் இருக்கு உடையார் ஜ‌யா , 

நாங்க‌ள் என்ன‌ தான் செய்தாலும் எங்க‌ளை எங்க‌ட‌ பாட்டில் விளையாட‌ விடுவின‌ம்  ,

வெளி நாட்டில் இருக்கும் சொந்த‌ங்க‌ள் தான் சாதி பாப்பின‌ம் , ஊரில் சாதி என்ற‌ சொல்லுக்கே இட‌ம் இல்ல‌ ,  ஊர் சொந்த‌ங்க‌ளுட‌ன் புல‌ம் பெய‌ர் நாட்ட‌வ‌ர்க‌ளை ஒப்பிட்டு பார்க்க‌ முடியாது உடையார் ஜ‌யா 🙏

Link to comment
Share on other sites

நான் யாழ் திருநெல்வேலியில் இருந்த பரமேசுவராக் கல்லுாரியில் படித்தவன். இன்று கல்லூரி பல்கலைக் கழகமாக மாற்றப்பட்டுள்ளது. அந்தக் கல்லூரிக்கு திரு. சிவபாதசு்தரம் அவர்கள் அதிபராக இருந்தார். அங்கு சாதி பார்க்கும் பழக்கம் எதுவும் புகுந்துவிடாது கல்லுரியைத் திறம்பட அவர் நிர்வகித்தும் வந்தார். எங்கள் வகுப்பிலும் நாங்கள் அனைவரும் மாணவ மாணவிகளாகவே இணைந்திருந்தோம். அந்த அனுபவம்.... அனைவரும் மனிதர்களே என்ற உணர்வை எங்களுள் வளர்த்துவிட்டிருந்தது.

நல்லூர்த் திருவிழாவிற்குப் போடும் தண்ணீர்ப்பந்தலில் தொண்டு செய்யும்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று வேறாக வைக்கப்டிருக்கும் கறள்பிடித்த மூக்குப் பேணிமுறைமையை மாற்ற எங்களால் முடியவில்லை. ஆனாலும் அந்தப் பேணிகளையே நாங்கள் பாவித்து மோர், ஊறுகாய், சக்கரைத்தண்ணிர் என்று அருந்திப் பெரிசுகளிடம் எதிர்ப்பும், சிலரிடம் பாராட்டும் பெற்றுள்ளோம். பிற்பட்ட நாட்களில் சாதி அடிப்படையில் சிறுபான்மைத் தமிழரென்று கட்சி தொடங்கப்பட்டதும், எங்களுடன் நண்பர்களாக இருந்தவர்களும் அதற்கு ஆதரவுநல்க முற்பட்டதும் கண்டு எங்கள் ஆர்வம் குறைந்ததையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

எங்கள் சொந்தங்களில் பலர் குலம் கோத்திரம் பாராது காதலித்தும், பேசியும் கல்யாணம் செய்தவர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக நன்றாகவே வாழ்கின்றனர்.

1 hour ago, Nathamuni said:

பொருளாதாரம் ஒன்றே இதனை துடைத்தெறியும்.

உண்மைதான் என்றாலும், ஒரு நல்ல தலைவனாலும் இதனைத் துடைத்தெறிய முடியும். ஒரு தலைவன், அவன் பிரபாகரன், செய்தும் காட்டினான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறு வயதில் இருந்தே சாதீயம் பற்றி பெரியவர்கள் கதைப்பதை கேட்டு வளர்ந்தவர்கள் நாம்.அதிலும்  சில நெருங்கிய சொந்தங்கள் கொஞ்சம் அதிகமாகவே அதுக்கு முக்கியத்துவம் கொடுத்ததயும் கவனித்தேன். எனெக்கென்று ஒரு கொள்கை தோன்றும் வரை, சாதி பாகுபாடு என்பது எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டது ஒன்று என்றே நினைத்தேன். அதிலும் பக்கத்துக்கு வீட்டு மனிசி அவர்களை இழிவாக நடத்துவதை பார்க்கும்போது எங்கட அப்பம்மா, அம்மம்மா அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் நடத்தும் போது அதுவே பெரிய விசயம் என்று நினைத்தேன். வளர்ந்தபிறகு என்னுள் நிறைய கேள்விகள். பெரியவர்கள் எல்லோரையும் நிறைய கேள்வி கேட்டுருக்கிறேன்.

ஆதி காலத்தில் தொழில் நிமித்தம் வந்த பிரிவுகள் பிற்காலத்தில் எப்படியோ மருவி இப்படி ஒரு கேவலமான நிலைக்கு வந்திட்டுது. இது எமது மண்ணில் எப்ப தொடங்கியது என்று தெரியவில்லை. ஆனால் பிரிட்டிஷ் காரரிடம் 700 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறது என்று அறிந்தேன். 1950 களில் இருந்து அந்த முறை ஒழிக்கப்பட்டாலும்  மறைமுகமாக இப்பவும் பல பிரிட்டிஷ் குடும்பங்களில் சாதி முறைகள் மிகவும் உக்கிரமாக கடைபிடிக்கிறார்கள். 1994 களில் என்னுடன் மாலைதீவில் படிப்பித்த ஒரு வெள்ளைக்காரி இதைப்பற்றி நிறைய சொல்லியிருந்தார். அவரது அம்மா பக்கம் யாருமே அவவின் குடும்பத்துடன் சேர்வதில்லை அன்றும் அதற்கு அவவின் அப்பாவின் கிளாஸ் குறைவு என்பதே காரணம் என்றும் கூறினா. அண்மையில் J K Rawling ஹரி பொட்டெர் புத்தகம் எழுதிய பில்லியனரயும்  எல்லா உயர் மட்ட வெள்ளைகார்களும் அவ்வளவு மதிப்பதில்லை என்று வாசித்தேன். 


நானாக ஒருபோதும் இவர் என்ன சாதியாக இருக்கும் என்று  ஒருநாளும் நினைப்பதில்லை. ஆனால் என்னுடைய நிறைய தோழிகள் அப்படியான ஒரு மன நிலையில் தான் இன்னும் இருக்கிறார்கள்.  அவர்களுடன் இந்தியாவில் ஹொஸ்டலில் இருக்கும்போது  அவர்கள் சில சக யாழ்ப்பாண மாணவிகளை நடத்திய விதமும் அதனால் அவர்கள் மனம் உடைந்து போய் " ஊரில் தான் தலை நிமிர்ந்து நிற்க முடியவில்லை, படிக்க வந்த இடத்திலுமா" என்று  சொல்லி வேதனை பட்டார்கள். நான் மாத்தளை, கொழும்பில் படித்ததால் இந்த பேச்சு அவ்வளவும் வருவதில்லை. அப்படி இருந்தும் ஒரு மாணவிக்கு வேலையே எவர் என்ன சாதி என்று கண்டறிந்து அவர்கள் முன்னாலேயே சாதியம் பற்றி கதைத்து அவர்கள் மனதை நோகடிப்பார். 

கொழும்பு பாடசாலைகளில் நிறய இந்திய செட்டி மாணவிகள், மலையக  மாணவிகள் படித்தார்கள். அவர்களையும் விட்டு வைத்ததாக இல்லை. நீங்கள் இந்த ஊர் இல்லை, உங்கள் தமிழ் சரியில்லை என்று தாழ்த்தி கதைப்பார்கள். நானும் ஆரம்பத்தில் இந்த கதையில்  ஈடுபட்ட ஆள்தான். ஆனால் மிக விரைவில் அது தவறு என்று உணர்ந்து விட்டேன். 

எனது மகன்மாருக்கு சாதியம் பற்றி நல்லா தெரியும். அதை அவர்கள் ஒரு சமூக குற்றம், கேலிக்கு உரிய பாகுபாடு அது என்று சொல்வார்கள். அண்மையில் தங்கையின் மகளுடன் கதைக்கும்போது கனடா பள்ளிக்கூட எமது ஊர் பிள்ளைகள் சாதியம் பற்றி கதைப்பதாகவும் பிரித்து  வைத்து கூட்டம் கூடுவதாகவும் சொல்லக்கேட்டு மிகவும் ஆத்திரம் அடைந்தேன். இப்படி எனது இளைய தலைமுறை வரை இந்த இழிவான பாகுபாடு சென்றைந்து விட்டதே என்று தங்கையிடம் சொல்லி கவலை பட்டேன் . வெளிநாடுகளில் யாரவது உழைத்தோ படித்தோ நல்லா வந்துவிட்டால் , அவர் பின்புலம் பற்றி அறிந்து அவர்களை விழுத்துவதிலே  சிலருக்கு ஒரு சிற்றின்பம். 

இப்படியான ஒரு சமுதாயத்தில் பிறந்து வளர்ந்ததால், எமக்கென்று ஒரு கொள்கை இருந்தாலும் நானோ அல்லது எனது உறவினர்களோ எமது சமுதாயத்தை விட வேறு வேறு ஒரு சமுதாயத்தில் உள்ளவரை கலியாணம் செய்யும்போது மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று நினைப்பது தான் முன்னுக்கு நிக்கிறதே ஒழிய எனது கொள்கை அல்ல என்பதுதான் உண்மை. இந்தியர்கள், வெள்ளைக்காரர் மற்றும் ஊரவரை செய்தால் ஒன்றும் சொல்லாத எமது சமூகம் எமது மக்களை மற்றும் கூறு போட்டு பிரிப்பது மிகவும் கவலைக்குரிய விடயம். 

பிகு : மற்ற சமுதாயங்கள், நாட்டவர்களை இழிவு படுத்தி கதைத்த எனது சொந்தங்கள், நற்புகள் எல்லாம் தமது பிள்ளைகள் அப்படி செய்தவுடன் பேச்சை மாற்றி கதைக்கிறார்கள் என்பதுதான் உண்மை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

ஆண்டான், அடிமை, மேலோன், கீழோன்.... மனித வரலாறில் பின்னிப்பிணைநதது.

சஜித் பிரேமதாசவிடம் ஜதேகயினை கையழிக்காமல் ரணில் இழுத்தடிப்பதும் சிங்கள சாதிய காரணம் தான். அதேவேளை, மகிந்தா, சாதியத்துக்கு வெளியே சிங்கள மக்களால் விரும்பப்பட காரணம், தமிழர் என்ற இனத்தை ஒடுக்கியமை.

ஆங்கிலேயரில் கூட, அயர்ன்சிமித் (இரும்பு வேலை செய்வோர்), கோல்ட்சிமித், ரெய்லர், பேக்கர், மில்லர், வோட்டர்மான்.... இருந்திருக்கிறது.

அண்டர்ரேக்கர்ஸ் என்னும் வெட்டியான் வேலை....இங்கே அந்த வேலையால் கிடைக்கும் பணத்தால், பலர் கவரப்பட்டனர். ஒரு குறித்த சமூகத்துக்கான வேலை என்பதை பொருளாதாரம் உடைத்தெறிந்தது.

அதே போல, கனடாவில் நம்மவரிடையே, இந்த தொழிலில், பலர் சாதியத்துக்கு அப்பால், இறங்கி விட்டார்கள்.

பொருளாதாரம் ஒன்றே இதனை துடைத்தெறியும்.

இன்னும் விளக்கமாக சொல்லவேண்டுமாயின், ஊரில் தாழ்த்தப்பட்டவர் என்று ஒதுக்கி வைத்தவர் வீட்டில் சாப்பிட மாட்டார்கள். ஆனாலும் அவர்கள், சாப்பாட்டு கடை திறந்தால், அங்கே கொத்து ரொட்டியும்.... ஆட்டிறைச்சி கறியும்... அந்தமாதிரி என்று அனைவரும் அலை மோதுவர். இது பொருளாதாரம்உடைத்த சாதீயம்.

ஊரில் மேட்டுக்குடி திமிரில் இருந்தவர்கள்,கோட்டு சூட்டு அணிவதை மேன்மையாக நினைத்தவர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு வந்து பட்ட அவலங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பணத்துக்காக எந்த வேலையும் செய்தார்கள். பணத்தின் முன் அவர்களின் ஊர் வரட்டுக் கௌரவங்கள் கரைந்து போயின.தினசரி துப்பவரவு தொழில்   செய்கின்றனர்.உணவு விடுதிகளில் கோப்பை கழுவுகின்றனர்.வீதி துப்பரவாக்கும் தொழில்கூட செய்கின்றனர். இருந்தாலும் சாதி எனும் கையாலாக தனத்தை இன்னும் விடவேயில்லை.

இவர்களுக்கு   சாதி குறைந்தவர்கள் என கருதப்படும் வீடுகளில் வயிறு புடைக்க உண்டு விட்டு  புறம் சொல்லும் திமிர்பழக்கமும் இன்றும் குறையவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பகிடி என்ன என்றால் .... பார்ப்பான் ஒட்டுமொத்தமாக 
எல்லோரையும் கழுவி ஊத்துகிறான் என்பது கூட தெரியாமல் இருப்பதுதான்.

மேலே சிலர் பொருளாதார மேம்பாடு பற்றி எழுதுகிறார்கள் 
அது ஒரு சிலரை மீட்க்கும் ஒரு சமூக இடைவெளியை நிரப்பாது 
ஒரு சமூகமே பொருளாதார வளர்ச்சி  கண்டால்? கூட நிற வேற்றுமை 
போல இதுவும் தொடரும். 

அறிவு வளர்ச்சி ஒன்றுதான் எல்லா மனித அவலத்தையும் மீட்க்கும் 
எல்லா முடாள்தனமும் அறிவின்மையில் இருந்துதான் உருவாக்குகிறது 
ஒரு சக மனிதனை தாழ்த்துவதில் தொடங்கி சாயிபாபா நித்தியானந்தாவை போன்ற 
பொறுக்கிகளி தொழுவது வரை அறிவீனம்தான் அடிப்படை காரணம். 

மேலே நடந்த சம்பவங்களை வாசித்து சிலர் கோபம் கொண்டிருக்கலாம் 
எனக்கு அவர்கள் மேல் பரிதாபம் மட்டுமே வருகிறது அதுக்கு காரணம் 
அவர்கள் முன்னேறிய நாடுகளுக்கு வந்தும் அறிவு ரீதியாக எந்த முன்னேற்றமும் 
காண கூடிய சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதுதான்.
அறிவு என்பதை சிலர் தப்பாக படித்து பட்டம் பெறுவதை எண்ணாதீர்கள் 
மனித அறிவு என்பது ஆறாம் அறிவின் செயல்பாடு பற்றியது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

பொருளாதாரம் ஒன்றே இதனை துடைத்தெறியும்.

 

ஒரு ஊரில் குறிப்பிட்ட சமுகம் ஒன்றை சேந்தவர்கள் சிங்கப்புர் பென்சனியர் பரம்பரையை சேர்ந்தவர்கள்.அழகான இளம் பெண்கள்.அதே சமுகத்ததை சேர்ந்தவர்கள் கோவிலில் வெளியே நிக்க இவர்கள் எந்த தங்கு தடையும் இல்லாமல் உள் போவார்கள்.யாரும் தடுப்பிதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதிகள் நீர்த்துப்போக  வேண்டும் என்றால்(அழிந்துபோக என்று சொல்லவில்லை, அது முடியாது). இதுபோல்  சாதியின் பேரால் கலந்துரையாடுவதே தப்பு என்றுதான் நினைக்கின்றேன்.பொதுவாக யாழ் நகரத்துக்குள் மிக மிக சொற்பமாகவே இருந்தது. அதற்கு காரணம் அரசாங்க வேலைகள், கராஜ்சுகள், பட்டறைகள், மற்றும் தொழிற்சாலைகள்.இவைகளில் எல்லாப் பொடியன்களும் பரவலாக வந்து வேலைகள் செய்வதுடன், சேர்ந்தே சினிமாவுக்கு, கடைகளுக்கு, நண்பர்களின் வீடுகளுக்கு என்று சகஜமாகப் போய் வருவதுண்டு.....!

காதல்தான் முக்கியமாக சாதிகளை உடைத்து கலியாணமும் கடந்து சென்றது. ஆனால் இங்கேயும் ஒரு தூரதிஷ்ட்டம் யாதெனில் அவர்களது பிள்ளைகள் பெரியவர்களாகி பேசிச்செய்யும் கலியாணம் என்னும்போது (எல்லாப்பிள்ளைகளாலும் காதலிக்க முடிவதில்லை பறக்கத் தெரியாத குஞ்சசுகள்போல்)புருஷன் பெஞ்சாதி புடுங்குப் படுவினம் யாருடைய சாதிக்குள்ள செய்வதென்று......!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதிய நச்சு தமிழரின் நாடி நரம்பு என எல்லாவற்றிலும்  ஊறிய பெரும் தலையிடி

அதை முற்றாக  ஒழிக்கணும் என்பதில்  மாற்றுக்கருத்தில்லை

ஆனால் அது உடன் சாத்தியமில்லை

மாற்றுத்திருமணம் செய்தனர் என  நீங்கள்  குறிப்பிடுபவர்களே 

எவ்வளவு  காலத்துக்கு இதற்கு  முகம்  கொடுத்தபடி வாழ்வார்கள்  என்பதே கேள்விக்குறி  தான்

நக்கல்  நளினம்  வம்புக்கிழுத்தல் 

ஏன்  பொடியனின்  பக்கமும் கிளறி  கிளறி பதம்  பார்ப்பார்கள்

முடிவு??????

நீங்கள்  என்ன செய்திருக்கிறீர்கள் என்ற  கேள்விக்கு

எனக்கிருக்கும்  அதிகாரத்தை  வைத்து

கனக்க  செய்திருக்கின்றேன்

அதை  நான்  பகிரங்கப்படுத்தினால்

சம்பந்தப்பட்டவர்களை வம்பிழுக்க எம்  சமூகம்  தேடுதலை தொடங்கிவிடும்😡

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

1950 களில் இருந்து அந்த முறை ஒழிக்கப்பட்டாலும்  மறைமுகமாக இப்பவும் பல பிரிட்டிஷ் குடும்பங்களில் சாதி முறைகள் மிகவும் உக்கிரமாக கடைபிடிக்கிறார்கள். 1994 களில் என்னுடன் மாலைதீவில் படிப்பித்த ஒரு வெள்ளைக்காரி இதைப்பற்றி நிறைய சொல்லியிருந்தார். அவரது அம்மா பக்கம் யாருமே அவவின் குடும்பத்துடன் சேர்வதில்லை அன்றும் அதற்கு அவவின் அப்பாவின் கிளாஸ் குறைவு என்பதே காரணம் என்றும் கூறினா

 

Class (வர்க்கம்) உம் Caste (தென்னாசியர்களுக்கே உரித்தானது) உம் ஒன்றல்ல. 

ஆங்கிலேயர்களில் elite,  middle class, working class என்ற வேறுபாடுகள் பொருளாதார அடிப்படையில் இருக்கின்றது. 
ஆனால் பொருளாதாரத்தில் சமமாக இருந்தாலும் பிறப்பால் தாழ்ந்தவர், உயர்ந்தவர் என்பது வருணாசிரமத்தின் வழிவந்த கலாச்சாரத்தில் இந்தியாவிலும், இலங்கையிலும் ஊறிப்போயிருக்கின்றது. 

 

போராட்டத்தாலும், புலம்பெயர்வாலும் சாதீய வேறுபாடுகள், திருமணம் தவிர்ந்து, குறைந்து போயிருந்தன. தாயகத்தில் எப்படி நிலைமை என்று சொல்லமுடியாது. ஆனால் இளம் தலைமுறை இப்படியான வேறுபாடுகளைப் பற்றி இப்போது அலட்டிக்கொள்வதில்லை என்றுதான் நினைக்கின்றேன்.

80 - 90 களில் புலம்பெயர்ந்த தமிழர் சாதியையும் மேற்குநாடுகளில் காவிவந்தாலும், பையன் சொன்னது மாதிரி கலப்புத் திருமணங்கள் நடக்கும்போது நக்கல் அடித்தது ஆச்சரியமாக இருக்கின்றது. இவர்களின் மேற்குநாடுகளில்  வசித்தாலும் ஒரு வளர்ச்சியையும் கலாச்சாரத்திலோ பண்பாட்டிலோ காட்டாமல் தாங்கள் வந்த காலத்திலேயே உறைந்து நிற்பவர்கள்.

 

இலண்டனில் சாதிகளைப் பற்றி அலட்டுபவர்களை நான் இதுவரை காணவில்லை. ஆனால் ஐரோப்பாவுக்குள் 90 களில் சகஜமாக சாதி சொல்லிக் கதைப்பதைப் பார்த்து அருவருப்படைந்திருக்கின்றேன்.   சுவிஸில் ஒரு முழு இரவு (நித்திரை கொள்ளாமல்!) பெரிய வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றேன். ஆனால் இப்போது அங்கும் சாதி ரீதியான கதைகளைக் காணவில்லை. எனவே இது தமிழரிடம் இருந்து காணாமல் போகும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆனால் இந்தியாவில் தொடர்ந்து இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

 

ஆனால் இந்தியாவில் தொடர்ந்து இருக்கும்.

இது முற்றிலும் உண்மை , சும்மா வாய் சொல் அள‌வில் தான் பெரியார் பெண்ணிய‌ விடுத‌லைக்கு போராடினார் , சாதிய‌ ‌ இல்லாம‌ செய்தார் என்று பொய் வின்ப‌த்த‌ இப்ப‌வும் திராவிட‌ க‌ட்சிக‌ள் சொல்லிட்டுத் தான் இருக்கின‌ம் , 

தேர்த‌ல் நேர‌ம் பெரியாரை ம‌ற‌ந்து எந்த‌ தொகுதிக்கு எந்த‌ சாதி வேட்பாள‌ர‌ நிறுத்தினால் கூடுத‌ல் வெற்றியை ஈட்ட‌லாம் என்று திராவிட‌ க‌ட்சிக‌ளுக்கு ந‌ல்லாவே தெரியும் /

எங்க‌ட‌ போராட்ட‌மும் த‌லைவ‌ரும் இருந்து இருக்க‌னும் சாதி என்ற‌ க‌தைக்கே இட‌ம் இருந்து இருக்காது ஈழ‌ ம‌ண்ணில் 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு த‌மிழீழ‌ ம‌ண்ணில் மெது மெதுவாய் சாதி த‌லை தூக்குது , என்ர‌ ஈழ‌ அனுப‌வ‌த்தில் என‌க்கு நினைவு தெரிந்த‌ நாள் முத‌ல் ஈழ‌த்தில் சாதி இருந்த‌து இல்ல 💪🤞‌ , 

எங்க‌ட‌ கோயில் திருவிழாவுக்கு யாரும் வ‌ர‌லாம் 1994 அந்த‌க் கால‌ப் ப‌குதியில்  , இப்ப‌ ஒரு சில‌ கோயிலுக்கு ஒரு சில‌ சாதிக் கார‌ர் போக‌ முடியாது 😓

என்ன‌ செய்வ‌து பிர‌பாக‌ன் என்ற‌ ஒப்ப‌ற்ற‌ த‌லைவ‌ர் பின்னால் ஒரு இன‌மே சாதி ம‌த‌ங்க‌ளை க‌ட‌ந்து ஒற்றுமையா நின்றார்க‌ள் 🙏

த‌லைவ‌ரின் ம‌றைவோடு எல்லாம் த‌லை கீழா போச்சு 😓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Oxford Centre For Hindu Studies என்ற ஒரு வெள்ளயள் குரூப் ஒன்று ஒன்லைன் கோர்ஸ் என்று எதையோ போட்டு விக்கினம். இந்த கோர்ஸ் £95.

உதில ஒரு பாடம்: Session Three: The Caste System

பிராமணர்கள் தான் பின்னே இருக்கிறார்கள். அவர்கள் தான் இதனை இங்கே தள்ளிக் கொண்டு வருகின்றார்கள்.

https://ochsonline.org/product/hinduism-ritual-yoga-caste-gender/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, சுவைப்பிரியன் said:

ஒரு ஊரில் குறிப்பிட்ட சமுகம் ஒன்றை சேந்தவர்கள் சிங்கப்புர் பென்சனியர் பரம்பரையை சேர்ந்தவர்கள்.அழகான இளம் பெண்கள்.அதே சமுகத்ததை சேர்ந்தவர்கள் கோவிலில் வெளியே நிக்க இவர்கள் எந்த தங்கு தடையும் இல்லாமல் உள் போவார்கள்.யாரும் தடுப்பிதில்லை.

காரைநகர்  பக்கம் இப்பிபியிருக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.