Jump to content

சாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த நாடுகளுக்கு 20 வயதை கடந்து வந்தவர்கள் அனைவருக்குமே சாதிபாகுபாடு என்பது மனதில் உறங்கி கொண்டே இருக்கிறது, ஆனால் அதை வெளிப்படையாக காட்டமுடியாததுக்கு இரண்டே காரணங்கள்தான்.

1)  எந்த ஒரு மனிதனிலும் தங்கி எவரும் இல்லை, எவருக்கும் சலாம் போடவேண்டிய அவசியமில்லை,

2) அப்படி திமிர்காட்டி நேரடி ஒடுக்குமுறைகாட்டினால் சட்டம் எந்த பாகுபாடும் பார்க்காமல் குற்றவாளிகள் மீது மட்டுமே  நடவடிக்கை எடுக்கும். அங்கே தனிமனிதர்கள் தமது அந்தஸ்தை காண்பித்து சட்டத்தை வளைத்து தமக்கு சாதகமாய் ஆக்கமுடியாது.

தாயகத்தில் சாதிய செல்வாக்கில் உள்ளவர்கள் தமது செல்வாக்கு அந்தஸ்தை பாவித்து காவல்துறையை தமது வீட்டுக்கே கூட்டி வந்து விருந்து வைப்பார்கள், அல்லது தனிப்பட்ட ரீதியில் கவனிப்பார்கள், அங்கே ஒடுக்கப்பட்ட ஏழைகள் பக்கம் இருக்கும் நீதி சபையேறாது.

புலம்பெயர் தேசத்தில் அடுத்த தலைமுறையாக பிறந்தவர்களிடம் 50% சாதி உணர்வு இருக்கும் அது அவர்களாய் உணர்ந்ததல்ல பெற்றோர்களால் அறிவுறுத்தப்பட்ட வளர்ப்பு அது.,

அதுக்கடுத்த தலைமுறையில் 75% சாதி இல்லாமல் போகும் ,

அதுக்கடுத்த தலைமுறையில் சாதி மட்டுமல்ல தமிழும் இல்லாமல் போகும்.

அதுக்கு அடுத்த அடுத்த தலைமுறைகள் எப்படி தமது மூதாதையர்கள் வெளிநாடுகளுக்கு வந்தார்கள் என்ற வரலாற்றையே குத்து மதிப்பாகதான் அறிந்து வைத்திருப்பார்கள்.

ஒரு கட்டத்தில் புலம்பெயர் தேசங்களில் சாதி முற்றாகவே இல்லாமல் போகும்.

ஆனால் எத்தனை தலைமுறைகள் அல்ல நூற்றாண்டுகள் ஆனாலும் தாயகத்தில் சாதிவெறி என்பது இருந்தே ஆகும், இப்போது இருப்பதைவிட அது பல மடங்கு அதிகரித்தும் செல்லவும் வாய்ப்பு உண்டு.

சாதி தவறு மனிதனை பிரித்து பார்க்ககூடாது, சாதியில் ஒன்றுமில்லை என்று குரல் எழுப்புகிறவர்களில் 90% வீதத்திற்கு அதிகமானோர் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் என்பதே கசப்பான உண்மை.

என்றைக்கு உயர் சாதியென்று தம்மை கருதிகொள்பவர்களில் 90% வீதம்பேர் சாதி தவறென்று  குரல் கொடுக்கிறார்களோ அன்றுதான் சாதிய ஒழிப்பு சாத்தியப்படும்.ஆனால் அதற்கான சாத்தியங்கள் ஒருபோதுமேயில்லை.

பையன் இங்கே குறிப்பிட்ட  மீனவர் சாதி என்பது வெள்ளாளர்களுக்கு அடுத்தடுத்த நிலையில் உள்ளவர்கள்,அதனால் போனால் போவுதென்று சகித்து கொண்டிருப்பார்கள்.

இதுவே அதற்குகீழ் உள்ள மரமேறுபவர்கள்,மூட்டை சுமப்பவர்கள், முடி வெட்டுபவர்கள், சலவை தொழிலாளர் சமூகத்தை சேர்ந்தவர்களை காதலித்திருந்தால் கண்டிப்பா ஒரு பிரளயமே நடந்திருக்கும், ஆக குறைந்தது பிள்ளைகளுடனான உறவையாவது முறித்து கொண்டிருப்பார்கள்.

தாயகத்தை பொறுத்தவரை தாழ்த்தப்பட்டவர்கள் சாதிகளை ஒழிப்பினை ஒரு போதும் சந்திக்க முடியாவிடினும் தூர நின்றுகொண்டே ஒரு மறைமுக சமத்துவத்தை ஏற்படுத்த மூன்று விஷயங்கள்  மட்டுமே அவர்களுக்கு கை கொடுக்கும் 

அவை:

கல்வி

பொருளாதாரம்.

கண்ணியமான பழக்க வழக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, valavan said:

புலம்பெயர் தேசத்தில் அடுத்த தலைமுறையாக பிறந்தவர்களிடம் 50% சாதி உணர்வு இருக்கும் அது அவர்களாய் உணர்ந்ததல்ல பெற்றோர்களால் அறிவுறுத்தப்பட்ட வளர்ப்பு அது.,

அதுக்கடுத்த தலைமுறையில் 75% சாதி இல்லாமல் போகும் ,

வளவன், உங்கள் கருத்தோடு ஒத்துக்கொள்ள முடிகின்றது 

ஆனால் தரவுகள் இல்லாமல் வீதங்களை சொல்லமுடியாது. கள ஆய்வு செய்து தரவுகளைக் வைத்துத்தான் நம்பகமான நம்பர்களைச் சொல்லலாம். இல்லாவிட்டால் Finger in the Air Estimate தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இருக்கலாம் ஆனால் பெற்றோரின் விருப்புவெறுப்புக்களும் அவர்களின் கௌரவங்களும் அதில் முக்கிய இடம் வகிக்கும்.

புரிகின்றது விசுகு ஐயா😀

18 வயது தாண்டிய பிள்ளை என்ன உயர்கல்வியை படிக்கவேண்டும் என்று தானே தீர்மானிக்கின்றது. அந்தப் பிள்ளையே என்ன வேலை செய்யவேண்டும் என்று தீர்மானித்து தன் வாழ்வை, எதிர்காலத்தை திட்டமிடுகிறது. இதற்குள் பெற்றோர் தமது விருப்பங்களைச் சொல்லலாம், ஆனால் பொதுவாகத் திணிப்பதில்லை. அப்படித் திணித்து படிப்பு பாழ்பட்ட சிலரையும் பார்த்திருக்கின்றேன்.

படித்து முடித்து வாழ்வைப் பற்றி சுயமாக முடிவெடுக்கக்கூடிய பிள்ளைகளை திருமணம் என்று வரும்போது பெற்றோர் தமது வரட்டுக் கெளரவத்திற்காக வேறுவிதமான முடிவுகளை emotional blackmail மூலம் செய்யப்பண்ணி அவர்களின் வாழ்க்கையைக் கெடுத்ததையும் அறிந்திருக்கின்றேன். 

எனவே, பிள்ளைகளை உனது சொந்தக்காலில் நில், சரி பிழைகளை அறிந்துகொள், தேவையென்றால் உதவிக்கும், ஆலோசனைக்கும் பெற்றோர் இருக்கின்றார்கள் என்று independent ஆக வளர்ப்பதுதான் மேற்குநாடுகளில் பொருந்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து இருக்கும் நாடுகளில்  சாதியம் அதிகம் பார்ப்பதில்..
முதலாம் இடம் கனடா
இரண்டாம் இடம் இங்கிலாந்து
மூன்றாமிடம் பிரான்ஸ் அல்லது ஜேர்மனி.

கலியாண புரோக்கரிடம் மாப்பிளை பொம்புளை விசாரிச்சால் புரோக்கர் கேட்பது முதலில் சாதியைத்தான்.

இலங்கையில் சாதியை ஒரு காலமும் அழிக்க முடியாது. இன்றைய தலைமுறையினரிடம் நன்றாகவே ஊறி விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இது புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் தமிழர்களின் சனத்தொகை வரிசைப் பட்டியல்.!

சாதியம் போன்ற பிற்போக்குத்தனங்களை தூக்கிப் பிடிப்பவர்களின் வீதப்பட்டியல் இப்படி இருக்காது.

30 வருட போராட்ட காலத்தில் தேசியம் என்று போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தவர்கள் உள்ளேயே சாதீயம் கனன்றுகொண்டுதான் இருந்திருக்கின்றது என்பது இந்தத் திரியில் வந்த சிலரின் கருத்துக்களில் இருந்து தெரிகின்றது.🤨

1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

கனடா?

ஐந்தாறு இலட்சம் பேர் இருந்தால் தொகைக் கணக்கில் முன்னுக்கு வரலாம் என்ற ஊகம்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

வளவன், உங்கள் கருத்தோடு ஒத்துக்கொள்ள முடிகின்றது 

ஆனால் தரவுகள் இல்லாமல் வீதங்களை சொல்லமுடியாது. கள ஆய்வு செய்து தரவுகளைக் வைத்துத்தான் நம்பகமான நம்பர்களைச் சொல்லலாம். இல்லாவிட்டால் Finger in the Air Estimate தான்.

இதில் தரவுகள் கள ஆய்வுகள் என்று  என்ன இருக்கிறது கிருபன்,

நாமேதான் தரவுகள், நாமேதான் சாதிய  களத்தில் நிற்பவர்கள்.

இந்த சமூக வலிகளுக்கு வக்கீல்களும் நாங்கள்தான், நீதிபதிகளும் நாங்கள்தான்,

ஆனால் நியாயமான தீர்ப்பு மட்டும் ஒருபோதும் வராது.

இங்கே  சாதியம் என்று சொல்லும்போது உயர் சாதியை சேர்ந்தவர்கள்தான் தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவர்களை கொடுமை படுத்துகிறார்கள்  மனதை உடைக்கிறார்கள் என்று அர்த்தமல்ல.

மீன் பிடிப்பவரா இல்லை அவர்கள் பிடித்த மீனை வாங்கி விறபவர்களா உயர்ந்தவர்கள்  என்ற சாதி போராட்டம்..

குப்பை அள்ளுபவரா  ஆஸ்பத்திரிகளில் மனித கழிவுகளை அகற்றுபவரா 

உயர்ந்த சாதி எனும் போராட்டம்..

துணி துவைப்பவரா மயிர் வெட்டுவரா  உயர்ந்தவர்  எனும் சாதி போராட்டம்,

மரமேறுபவரா மூட்டை சுமப்பவரா சாதியில் பெரியவர் என்ற போராட்டம்...

சாதி போராட்டம் என்பது உயர்ந்த சாதிக்கும் தாழ்ந்த சாதிக்கும் இடையிலானதல்ல..

தாழ்ந்த சாதிக்கும் தாழ்ந்த சாதிக்கும் இடையிலான போரும் கூட.

புலம்பெயர் தேசத்தில் ஏறக்குறைய  பெற்றோர்கள் நினைத்தால்கூட  பிள்ளைகள் யாருடன் பழகவேண்டும் என்பதை அவர்களால் தீர்மானிக்க முடியாது.

ஏறக்குறைய அவர்கள் விரும்பியவருடன் சாதியை கடந்து அல்ல நாடுகளை கடந்தே டேற்றிங் போகிறார்கள்.

இதன் தலைமுறை கடந்த தொடர்ச்சியாக  ஈழதமிழர் வழி வந்த வாரிசுகள் ஆபாச படங்களில்கூட நடிப்பார்கள்.

அதை தவறு என்று யாரும் சொன்னால் சட்டம் குற்றம் சொல்பவர்களை மட்டுமே தண்டிக்கும்.

அதைதான் வீதங்களில் ஒப்பிட்டு சொன்னேன்..

முத்தாய்ப்பா சொல்லவேண்டுமென்றால் சாதிய கொடுமை என்பது உயர்ந்த சாதி தாழந்த சாதி சம்பந்தப்பட்ட ஒரு விசயம் அல்ல,

தாழ்ந்த சாதி தாழ்ந்த சாதிக்கும் இடையில் சம்பந்தப்பட்ட விசயம்கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

கனடா?

என்ன நம்ப முடியேல்லையோ?

உங்கை கனடாவிலை ஒரு பத்து பொடியன்களுக்கும் பத்து பெட்டையளுக்கும் கலியாணம் பேசிப்பாருங்கோ அப்ப தெரியும் சாதி வக்கிரம் எங்கை பதுங்கி இருக்கெண்டு...

இல்லாட்டி ஒரு கலியாண புரோக்கருக்கு உதவியாளராய் கொஞ்ச நாளைக்கு இருந்து பாருங்கோ அப்ப தெரியும் கூத்து...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

30 வருட போராட்ட காலத்தில் தேசியம் என்று போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தவர்கள் உள்ளேயே சாதீயம் கனன்றுகொண்டுதான் இருந்திருக்கின்றது என்பது இந்தத் திரியில் வந்த சிலரின் கருத்துக்களில் இருந்து தெரிகின்றது.

களத்தில் இறங்கி மக்களோடு இல்லாமல் உங்களால் இப்படி எழுத வருகிறது. ஆனால் வயதும் அனுபவமும் உள்ள கள உறவுகளின் கருத்தை புரிந்து கொள்ளாமல் திசை திருப்புகிறீர்கள். நீங்கள் உண்மையில் இனியாவது உண்மையை தெரிந்து கொள்ள விரும்பினால் ஒரு திருமண புரோக்கரை தொடர்பு கொள்ளவும். (யாழ் களத்தில் சகாரா இருக்கிறார்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

என்ன நம்ப முடியேல்லையோ?

உங்கை கனடாவிலை ஒரு பத்து பொடியன்களுக்கும் பத்து பெட்டையளுக்கும் கலியாணம் பேசிப்பாருங்கோ அப்ப தெரியும் சாதி வக்கிரம் எங்கை பதுங்கி இருக்கெண்டு...

இல்லாட்டி ஒரு கலியாண புரோக்கருக்கு உதவியாளராய் கொஞ்ச நாளைக்கு இருந்து பாருங்கோ அப்ப தெரியும் கூத்து...:cool:

சாதி உதட்டளவில் இல்லையென்றாலும் உள்ளத்திலிருந்து புகையும் ஓர் தீ தான் திருமணம் வரும் போதும் காதல் வரும் போதும் சண்டைவரும் எரிய ஆரம்பிக்கும் அழிக்க முடியாது 

கிழக்கில் கேணல் ரமணனால் 20 கோவில்களுக்கு மேல் இடிக்கப்பட்டது காரணம் சாதிக்கொரு கோவில் திருவிழா தேர் என புலிகள் காலத்தில் கொஞ்சம் தணிந்து இருந்தாலும் மீண்டும் இலங்கையில் புகைய ஆரம்பித்து இருக்கிறது என்று சொல்லலாம் .

வடகிழக்கில் என்பதை விட இலங்கையில் சுமார் 50 மேற்பட்ட சாதிகள் இருந்ததாக ஏதோ ஓர் புத்தகத்தில் படித்த ஞாபகம் கிடைத்தால் அதன் பக்கத்தை இணைக்கிறேன்.

சாதியும் ஓர் வைரஸ்தான் அழிக்க  முடியாது செய்யும் தொழில்களை வைத்து சாதியை வகுத்துவிட்டானுகள் இன்னும் அது இருக்கிறது .  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

இது புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் தமிழர்களின் சனத்தொகை வரிசைப் பட்டியல்.!

சாதியம் போன்ற பிற்போக்குத்தனங்களை தூக்கிப் பிடிப்பவர்களின் வீதப்பட்டியல் இப்படி இருக்காது.

30 வருட போராட்ட காலத்தில் தேசியம் என்று போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தவர்கள் உள்ளேயே சாதீயம் கனன்றுகொண்டுதான் இருந்திருக்கின்றது என்பது இந்தத் திரியில் வந்த சிலரின் கருத்துக்களில் இருந்து தெரிகின்றது.🤨

ஐந்தாறு இலட்சம் பேர் இருந்தால் தொகைக் கணக்கில் முன்னுக்கு வரலாம் என்ற ஊகம்தான். 

 இன்று அந்த தேசியம் உயிர்ப்போடு இருந்திருந்தால் இந்த திரி ஆரம்பித்திருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது.
சாதீயம் தற்கொலை செய்ய பாதி தூரம் சென்றிருக்கும்.

அவர்கள்.....

எதை தொடக்கூடாதோ அதை தொடவில்லை   (ஆன்மீகம், கோவில்கள்)
எதை தொட வேண்டுமோ அதை தொட்டார்கள்  (சாதி,சீதனம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விசுகு said:

அதன்  தாக்கத்தை உணராமல்

அல்லது  இதுவரை அனுபவப்படாததால் 

இப்படி  எழுதுகிறீர்கள்  என்று  தெரிகிறது?

உண்மையில் மாற்றுத்திருமணம்  என்று புறப்பட்ட

அல்:லது தலையை  கொடுத்த  பலரும் சொல்லும்  வார்த்தை

கொஞ்சகால இந்த வாழ்வை சந்தோஷமாக வாழ்ந்துவிட்டுபோவதற்கு 

தேவையற்று இதற்குள் போய் முட்டி இழுபட்டபடி

 சந்தோஷத்தை தொலைத்து திரிகிறோம் பல வருத்தங்களுடன்.....😡

தாயகத்தில் இவ்:வாறு போராளிகளை  திருமணம்  செய்து விதவையான  பெண்களும்  இவ்வாறு தான்  ஒதுக்கப்பட்டுக்கொண்டிருப்பதை  கேள்விப்படுகிறோம்😡😡😡

தம்பி செய்தது வேறு சாதி பெண்ணை, வீட்டில் தான் இருக்கின்றா பிள்ளைகளுடன், இதுவரை எந்த பிரச்சனையுமில்லை. என் பிள்ளைகளுக்கும் நான் பார்க்கமாட்டேன், அவர்களின் விருப்பம். நான் ஒன்றிரண்டு அல்ல ஐயர் உட்பட பலருடன் நட்பாக பழகியுள்ளேன்.  அதனால் எனக்கு இந்த தாக்கமில்லை. இனியும் இருக்க போவதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

 இன்று அந்த தேசியம் உயிர்ப்போடு இருந்திருந்தால் இந்த திரி ஆரம்பித்திருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது.
சாதீயம் தற்கொலை செய்ய பாதி தூரம் சென்றிருக்கும்.

அவர்கள்.....

எதை தொடக்கூடாதோ அதை தொடவில்லை   (ஆன்மீகம், கோவில்கள்)
எதை தொட வேண்டுமோ அதை தொட்டார்கள்  (சாதி,சீதனம்)

அவர்களும் சாதிப்பிரச்சினை சார்ந்து அமைப்புக்குள் பின்பற்றிய அளவுக்கு மக்களிடம் அமுலாக்கவில்லை காரணம் அதன் வீரியத்தை அறிந்திருந்தார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, விசுகு said:

உண்மையை தெரிந்து கொள்ள விரும்பினால் ஒரு திருமண புரோக்கரை தொடர்பு கொள்ளவும்

முதலிலே எழுதியிருக்கின்றேன். கலியாணப் புரோக்கர்களுடன் பேசி திருமணம் பேசும் செய்யும் தேவை ஏற்பட்டதில்லை. அதற்கு எளிமையான காரணம் சாதகம் பார்த்துத் திருமணம் செய்யும் மூடப்பழக்கத்தில் நம்பிக்கை இல்லை.  எனவே இந்தத் தேவை இனியும் வராது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

களத்தில் இறங்கி மக்களோடு இல்லாமல் உங்களால் இப்படி எழுத வருகிறது. ஆனால் வயதும் அனுபவமும் உள்ள கள உறவுகளின் கருத்தை புரிந்து கொள்ளாமல் திசை திருப்புகிறீர்கள். நீங்கள் உண்மையில் இனியாவது உண்மையை தெரிந்து கொள்ள விரும்பினால் ஒரு திருமண புரோக்கரை தொடர்பு கொள்ளவும். (யாழ் களத்தில் சகாரா இருக்கிறார்)

நித‌ர்ச‌ன‌ உண்மையான‌ க‌ருத்து விசுகு அண்ணா ,

பெய‌ர் எழுத‌ விரும்ப‌ல‌ உங்க‌ளுக்கு தெரிந்த‌ யாழ் க‌ள‌ உற‌வு நீங்க‌ள் சொன்ன‌த‌ தான் போனில் க‌தைக்கும் போது சொன்ன‌வ‌ர் என‌க்கு கொஞ்ச‌ நாட்க‌ளுக்கு முத‌ல்  , அந்த‌ யாழ் க‌ள‌ உற‌வு இந்த‌ திரியில் எழுதிட்டு தான் இருக்கிறார் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2020 at 08:26, பையன்26 said:

த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் சாதி‌ இல்ல‌ த‌மிழீழ‌த்தில் இத‌ என் க‌ண்ணால் பார்த்து இருக்கிறேன் சிறு வ‌ய‌தில் , 

எல்லா புக‌ழும் த‌லைவ‌ர் ஒருவ‌ருக்கே 🙏

35 minutes ago, விசுகு said:

அவர்களும் சாதிப்பிரச்சினை சார்ந்து அமைப்புக்குள் பின்பற்றிய அளவுக்கு மக்களிடம் அமுலாக்கவில்லை காரணம் அதன் வீரியத்தை அறிந்திருந்தார்கள்

21 minutes ago, பையன்26 said:

நித‌ர்ச‌ன‌ உண்மையான‌ க‌ருத்து விசுகு அண்ணா ,

பெய‌ர் எழுத‌ விரும்ப‌ல‌ உங்க‌ளுக்கு தெரிந்த‌ யாழ் க‌ள‌ உற‌வு நீங்க‌ள் சொன்ன‌த‌ தான் போனில் க‌தைக்கும் போது சொன்ன‌வ‌ர் என‌க்கு கொஞ்ச‌ நாட்க‌ளுக்கு முத‌ல்  , 

ஒரே குழப்பமாக இருக்கு🤔🤔🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

கிருப‌ன் அண்ணா , நான் த‌மிழீழ‌த்தில் வாழ்ந்த‌ கால‌த்தில் சாதி இல்லை என்று தான் எழுதினேன் , புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்த‌ பிற‌க்கு என்னோடு ப‌டிச்ச‌ ந‌ண்ப‌னிட‌ம் த‌மிழீழ‌த்தில் ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை கேட்டேன் , அவ‌ன் ஒழித்து ம‌றைக்காம‌ எல்லா உண்மையும் சொன்னான் ,

விசுகு அண்ணா எழுதின‌துக்கு நான் எழுதின‌ ப‌தில் ம‌ற்ற‌ யாழ்க‌ள‌ உற‌வும் நீங்க‌ள் எழுதின‌த‌ தான்  சொன்னார் என்று , அத‌ற்கு தான் எழுதினான் நித‌ர்ச‌ன‌ உண்மை /

எம்ம‌வ‌ர்க‌ள் வ‌ன்னியில் இருந்து இருக்க‌னும் சாதி பார்ப்ப‌வ‌ர்க‌ளுக்கு சாட்டையால் அடி விழுந்து இருக்கும் ,  

மேல‌ குசா தாத்தா சொன்ன‌து போல் எம்ம‌வ‌ர்க‌ள் இருந்து இருக்க‌னும் இந்த‌ திரி திற‌க்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் வ‌ந்து இருக்காது /

மீண்டும் சொல்லுகிறேன் எல்லா புக‌ழும் த‌லைவ‌ர் ஒருவ‌ருக்கே 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருப‌ன் அண்ணா நீங்க‌ள் ப‌ழ‌கும் உற‌வுக‌ள் சாதிய‌ அடியோடு வெறுக்க‌ கூடிய‌வ‌ர்க‌ளாய் இருந்தா அவ‌ர்க‌ள் உண்மையில் மிக‌வும் ம‌னித‌ நேய‌த்த‌ நேசிக்க‌ கூடிய‌வ‌ர்க‌ள் 🙏😍

விசுகு அண்ணா ம‌ற்றும் குசா தாத்தா எழுதுவ‌து வெரும் க‌ற்ப‌னை என்று நினைக்க‌ வேண்டாம் அவ‌ர்க‌ள் எழுதுவ‌தில் ப‌ல‌ நூறு உண்மைக‌ள் அட‌ங்கி இருக்கு 😓

நான் பார்த்த‌ ம‌ட்டில் டென்மார்க்கில் சாதிய‌ எம்ம‌வ‌ர்க‌ள் தூக்கி பிடிப்ப‌து இல்ல 🙏‌ , 

விசுகு அண்ணாவுக்கும் ச‌ரி குசா தாத்தாவுக்கும் ச‌ரி இவ‌ர்க‌ளுக்கு டென்மார்க்கில் நெருங்கிய‌ சொந்த‌ங்க‌ள் இருக்கின‌ம் அவ‌ர்க‌ள் இட‌த்தில்  விசாரிச்சா தெரியும் நான் சொல்லுவ‌து எவ‌ள‌வு உண்மை என்று /

பிரான்ஸ்
க‌ன‌டா போன்ற‌ நாடுக‌ளில் எம்ம‌வ‌ர்க‌ள் அதிக‌ம் சாதிய‌ தூக்கி பிடிப்ப‌வ‌ர்க‌ள்  ,

யாழ்க‌ள‌த்தில் க‌ன‌டாவில் வ‌சிக்கும் ப‌ல‌ உற‌வுக‌ள் இருக்கின‌ம் அவையும் இந்த‌ திரிக்குள் வ‌ந்து எழுதினால் எம் ச‌முதாய‌த்தில் என்ன‌ ந‌ட‌க்குது என்ற‌ உண்மைய‌ அறிய‌லாம் /

நான் அப்ப‌வும் இப்ப‌வும் எப்ப‌வும்  சாதிக்கு முற்றிலும் எதிரான‌வ‌ன் ,

உதார‌ன‌த்துக்கு நான் சாதி ம‌றுப்பு திரும‌ண‌ம் செய்து என்ர‌ சொந்த‌ங்க‌ள் என்னை வீட்டுக்குள் அனைக்காம‌ த‌ள்ளி வைத்தால் நான் ஒரு போதும் க‌வ‌லைப் ப‌ட‌ மாட்டேன் , 
உப்ப‌டி கேவ‌ல‌ம் கெட்ட‌ சொந்த‌ம் என‌க்கு ஒரு போதும்  தேவை இல்லை என்று தான் என் ம‌ன‌சு சொல்லும் ,

என்ர‌ ம‌னைவியின் பிள்ளைக‌ளின் அன்போடு மீதிக் கால‌த்த‌ வாழ்ந்து விட்டு போவேன் 🤞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பையன்26 said:

நான் பார்த்த‌ ம‌ட்டில் டென்மார்க்கில் சாதிய‌ எம்ம‌வ‌ர்க‌ள் தூக்கி பிடிப்ப‌து இல்ல 🙏

இதைத்தான் நான் இலண்டனில் பழகுபவர்களிடம் காண்பது. 

இந்தத் திரியில் பலரும் சொல்வது பேச்சுத் திருமணத்தின்போது சாதி பார்க்கப்படுகின்றது.  ஆனால் எல்லாப் பேச்சுத் திருமணங்களிலும் இல்லை.

தாயகத்தில் சாதீயம் முன்னர் இருந்த உக்கிர நிலையில் இருந்து மாறி திருமண விடயத்திலும், சில கோவில்களில் அனுமதி இல்லை என்பதிலும் சுருங்கிவிட்டது. முன்னரைப் போல, கல்வியில், காணி வாங்குவதில், ஏன் பாடசாலை அனுமதிகளில், வேலை பெற்றுக்கொள்வதில் இருந்த உக்கிர நிலையோ, சாப்பாட்டுக் கடைகளில் இரட்டைக் குவளை பாவிக்கும் முறையோ எல்லாம் திரும்பிவராது. 

பழைய வரலாற்றை சிவா சின்னப்பொடி (யாழ் உறுப்பினர்தான்) எழுதிய நினைவழியா வடுக்கள் என்ற புத்தகத்தில் படித்திருந்தேன். நினைத்தே பார்த்திராத கொடுமைகளில் இருந்து  விலகி எவ்வளவு முற்போக்கான மாற்றங்கள் வந்துவிட்டன. இன்னும் முன்னோக்கித்தான் பயணிப்போம் என்பதில் நம்பிக்கை நிறையவே இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தாங்கள் சாதி பார்ப்பதில்லை என்று எழுதுபவர்களை பார்க்க பரிதாபமாய் இருக்கிறது ....அவர்கள் தங்கட பிள்ளைகளுக்கு ,சகோதரங்களுக்கு  தங்களை விட குறைந்த சாதியில் திருமணம் செய்து கொடுப்பார்களா?
அவர்கள் முதலில் சொல்வது நாங்கள் எங்கட ஆட்களுக்குள்ள தான் செய்வம்...அர்த்தம் எங்கட சாதிக்குள் தான் செய்வம்.
புலம் பேர் நாடுகளில் கூட இரண்டாம் தலைமுறைக்கு  திருமணம் பேசும் போது தரகர்மார் முதல் கேட்பது பெற்றோர் ஊரில் எந்த இடம்?, எந்த றோட் ? அர்த்தம் ஊரில் எந்த சாதி என்று அறிவது தான்.
புலிகள் சாதி பார்ப்பதில்லை, தலைவர் சாதி பார்ப்பதில்லை என்று எழுதுபவர்கள் கண்களை மூடிக் கொண்டு தான் எழுதுகிறார்கள்.
ஏன் தலைவராலோ ,சு,பானாவாலோ தங்களை விட குறைந்த சாதி பெண்ணை திருமணம் செய்ய முடியாமல் போனது ?[கேட்டால் காதல் என்றுவினம்]...தலைவர் இருந்திருந்தால் கட்டாயம் தன்ட மகளுக்கு மதி அக்காவின் அடியில் தான் திருமணம் செய்து கொடுத்திருப்பார்.
குறைந்த சாதியை சேர்ந்தவர்களுக்கு,அவர்களை விட உயர்ந்த சாதியில் திருமணம் செய்து கொடுத்தால் சாதி ஒழியும் என்று நினைப்பதே முட்டாள்தனம்.
ஏன் அவர்கள் தங்களை விட குறைந்த சாதியில் கல்யாணம் கட்ட நினைப்பதில்லை ?...அப்படி கட்டினால் சாதி ஒழியாதோ?
லண்டனில் நான் பார்த்த வரைக்கும் எங்கட ஐயர்மார் அநேகமான தமிழ் குடும்பங்களுடன் சேர்ந்து பழகுவார்கள் ...வீட்டை போய் தேனீர் கூட குடிப்பார்கள் ...அதே நேரத்தில் திருமணம் என்று வந்தால் தங்களுக்குள்ளே தான் செய்வார்கள்.
வெள்ளாளரை தவித்து  அடுத்த நிலையில் உள்ள சாதிக்காரர்கள் தான் தாழ்வு மனப்பான்மை காரணமாய் ,தாங்கள் பெரிது என்று காட்டுவதற்காக அடுத்தவர் வீட்டில் சாப்பிட ,குடிக்க மாட்டார்கள் ...இதுவும் லண்டனில் நான் கண்டது 

Link to comment
Share on other sites

13 hours ago, குமாரசாமி said:

ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து இருக்கும் நாடுகளில்  சாதியம் அதிகம் பார்ப்பதில்..
முதலாம் இடம் கனடா
இரண்டாம் இடம் இங்கிலாந்து
மூன்றாமிடம் பிரான்ஸ் அல்லது ஜேர்மனி.

கலியாண புரோக்கரிடம் மாப்பிளை பொம்புளை விசாரிச்சால் புரோக்கர் கேட்பது முதலில் சாதியைத்தான்.

இலங்கையில் சாதியை ஒரு காலமும் அழிக்க முடியாது. இன்றைய தலைமுறையினரிடம் நன்றாகவே ஊறி விட்டது.

நிதர்சன உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

இங்கு தாங்கள் சாதி பார்ப்பதில்லை என்று எழுதுபவர்களை பார்க்க பரிதாபமாய் இருக்கிறது ....அவர்கள் தங்கட பிள்ளைகளுக்கு ,சகோதரங்களுக்கு  தங்களை விட குறைந்த சாதியில் திருமணம் செய்து கொடுப்பார்களா?
அவர்கள் முதலில் சொல்வது நாங்கள் எங்கட ஆட்களுக்குள்ள தான் செய்வம்...அர்த்தம் எங்கட சாதிக்குள் தான் செய்வம்.
புலம் பேர் நாடுகளில் கூட இரண்டாம் தலைமுறைக்கு  திருமணம் பேசும் போது தரகர்மார் முதல் கேட்பது பெற்றோர் ஊரில் எந்த இடம்?, எந்த றோட் ? அர்த்தம் ஊரில் எந்த சாதி என்று அறிவது தான்.
புலிகள் சாதி பார்ப்பதில்லை, தலைவர் சாதி பார்ப்பதில்லை என்று எழுதுபவர்கள் கண்களை மூடிக் கொண்டு தான் எழுதுகிறார்கள்.
ஏன் தலைவராலோ ,சு,பானாவாலோ தங்களை விட குறைந்த சாதி பெண்ணை திருமணம் செய்ய முடியாமல் போனது ?[கேட்டால் காதல் என்றுவினம்]...தலைவர் இருந்திருந்தால் கட்டாயம் தன்ட மகளுக்கு மதி அக்காவின் அடியில் தான் திருமணம் செய்து கொடுத்திருப்பார்.
குறைந்த சாதியை சேர்ந்தவர்களுக்கு,அவர்களை விட உயர்ந்த சாதியில் திருமணம் செய்து கொடுத்தால் சாதி ஒழியும் என்று நினைப்பதே முட்டாள்தனம்.
ஏன் அவர்கள் தங்களை விட குறைந்த சாதியில் கல்யாணம் கட்ட நினைப்பதில்லை ?...அப்படி கட்டினால் சாதி ஒழியாதோ?
லண்டனில் நான் பார்த்த வரைக்கும் எங்கட ஐயர்மார் அநேகமான தமிழ் குடும்பங்களுடன் சேர்ந்து பழகுவார்கள் ...வீட்டை போய் தேனீர் கூட குடிப்பார்கள் ...அதே நேரத்தில் திருமணம் என்று வந்தால் தங்களுக்குள்ளே தான் செய்வார்கள்.
வெள்ளாளரை தவித்து  அடுத்த நிலையில் உள்ள சாதிக்காரர்கள் தான் தாழ்வு மனப்பான்மை காரணமாய் ,தாங்கள் பெரிது என்று காட்டுவதற்காக அடுத்தவர் வீட்டில் சாப்பிட ,குடிக்க மாட்டார்கள் ...இதுவும் லண்டனில் நான் கண்டது 

வ‌ண‌க்க‌ம் அக்கா இந்த‌ திரியில் உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி ,

நீங்க‌ள் உங்க‌ட‌ அண்ண‌ர் க‌ருணாவை பின் தொட‌ருகிற‌ நீங்க‌ள் ,
நான் சிறு வ‌ய‌து முத‌லே த‌லைவ‌ரின் கொள்கைய‌ பார்த்து வ‌ள‌ந்த‌வ‌ன்🤞 ,

நீங்க‌ள் இப்ப‌டி எழுதுவிங்க‌ள் என்று நான் கொஞ்ச‌மும் நினைத்து கூட‌ பார்க்க‌ல‌ , த‌லைவ‌ரும் அவ‌ரின் பிள்ளைக‌ளும் போர்க் க‌ள‌த்தில் இற‌ந்து விட்டின‌ம் அவ‌ர்க‌ளை தூற்றி எழுதுவ‌து ந‌ல்ல‌ம் இல்ல‌ ,

உங்க‌ட அண்ண‌ருக்கும் த‌லைவ‌ர் தானே பொண்ணு பார்த்து முன் நின்று திரும‌ண‌த்த‌ செய்து வைச்ச‌வ‌ர் ,

த‌லைவ‌ர் உயிருட‌ன் இருந்து இருந்தா அவ‌ரின் ம‌க‌ளை எம் போராட்ட‌த்தில் இருந்த‌ போராளிக‌ளில் ஒருவ‌ருக்கு தான் திரும‌ண‌ம் செய்து வைத்து இருப்பார் ,

த‌லைவ‌ர் போராளிக‌ள் வ‌ன்னியில் இருந்த‌ போது த‌மிழீழ‌ ம‌க்க‌ள் எப்ப‌டி வாழ்ந்தார்க‌ள் என்ப‌த‌ அவ‌ர்க‌ளின் பாதுகாப்பில் வாழ்ந்த‌ ம‌க்க‌ளுக்கு தெரியும் , இப்ப‌ த‌மிழீழ‌த்தில் ம‌க்க‌ள் எப்ப‌டி வாழுகிறார்க‌ள் என்று ஒட்டு மொத்த‌ த‌மிழீழ‌த்தையும் சுற்றி பார்த்தா தெரியும்  , 

நான் த‌மிழீழ‌த்தில் வாழ்ந்த‌ கால‌த்தில் சாதி ச‌ண்டைய‌ பார்த்த‌து இல்ல‌ , சாதிய‌ ப‌ற்றி உற‌வுக‌ள் அல‌ட்டின‌தும் இல்ல‌ ,

ஒரு ‌ ச‌ம்ப‌வ‌த்த‌ உங்க‌ளுக்கு சொல்ல‌ விரும்புகிறேன் , 1995ம் ஆண்டு சிங்க‌ள‌ இராணுவ‌ம் யாழ்ப்பாண‌த்த‌ கைப்ப‌ற்ற‌ , மீசாலையில் அத்தை வீட்டில் த‌ங்கி இருந்தேன் , என்ர‌ சொந்த‌ங்க‌ளை த‌விற‌ ம‌ற்ற‌ ஊர்க‌ளில் இருந்து மீசாலையில் அத்தை வீட்டில் த‌ங்கி இருந்த‌ உற‌வுக‌ளை என‌க்கு யார் என்று கூட‌ தெரியாது , பெரிய‌ வீடுக‌ள் இருந்த‌ ப‌டியால் ப‌ல‌ ஊர்க‌ளில் இருந்து இட‌ம்பெய‌ர்ந்து வ‌ந்த‌ ம‌க்க‌ளை எங்க‌ட‌ வீடுக‌ளில் தான் த‌ங்க‌ வைச்சோம் ஒன்னா சாப்பிட்டோம் ஒன்னா ப‌ழ‌கினோம் ,
சாதி என்ற‌ சொல்லுக்கே இட‌ம் இல்ல‌ , கிட்ட‌ த‌ட்ட‌ 13 குடும்ப‌ங்க‌ள் 4 வீட்டில் த‌ங்கி இருக்க‌ ஏற்பாடு செய்து கொடுத்தோம் , 

இப்ப‌டித் தான் எங்க‌ட‌ த‌மிழீழ‌ வாழ்க்கை 🤞🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

முதலிலே எழுதியிருக்கின்றேன். கலியாணப் புரோக்கர்களுடன் பேசி திருமணம் பேசும் செய்யும் தேவை ஏற்பட்டதில்லை. அதற்கு எளிமையான காரணம் சாதகம் பார்த்துத் திருமணம் செய்யும் மூடப்பழக்கத்தில் நம்பிக்கை இல்லை.  எனவே இந்தத் தேவை இனியும் வராது

ரொம்ப கடினமான பணி ராஜாக்கள் இந்த மாதிரியான முகத்தை கட்டி பயணிக்கும் குதிரைகளுக்கு உலகைக் காட்டுவது. நான் உங்களுக்கு திருமணம் செய்ய தரகர்களை தொடர்பு கொள்ள சொல்லவில்லை எம்மவர் திருமணங்கள் எப்படி ஒப்பேற்ற படுகின்றன என்பதை தெரிந்து கொள்ள மட்டுமே. சகாரா இங்கு எழுதினால் என் நேரம் மிச்சமாகும் என்று நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விசுகு said:

விசுகர்! புத்தக படிப்பை விட,பள்ளி படிப்பை விட சமுதாய அனுபவம் மிக முக்கியம்.  புத்தக அனுபவத்தை மட்டும் வைத்து இங்கே  கருத்தெழுதும் ஒருவரில் அதன் தாக்கம் நன்றாகவே தெரிகின்றது. தானும் தன்னை சுற்றியுள்ளவர்களை வைத்து உலக நடப்பை கணக்கிட்டு வைத்துள்ளார்.
எல்லா சமூத்துடனும் பழகினால் உலக அனுபவம் ,நாட்டு நடப்புகள் தானாக விரல்நுனியில் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

விசுகர்! புத்தக படிப்பை விட,பள்ளி படிப்பை விட சமுதாய அனுபவம் மிக முக்கியம்.  புத்தக அனுபவத்தை மட்டும் வைத்து இங்கே  கருத்தெழுதும் ஒருவரில் அதன் தாக்கம் நன்றாகவே தெரிகின்றது. தானும் தன்னை சுற்றியுள்ளவர்களை வைத்து உலக நடப்பை கணக்கிட்டு வைத்துள்ளார்.
எல்லா சமூத்துடனும் பழகினால் உலக அனுபவம் ,நாட்டு நடப்புகள் தானாக விரல்நுனியில் இருக்கும்.

குமாரசாமி ஐயா, என்னை மேற்கோள் காட்டிச் சொன்னால் எனக்கு ஒன்றும் இரத்தக்கொதிப்பு வராது😎 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.