Jump to content

அவுஸ்ரேலியாவில் ஐந்து மில்லியன் மக்கள் ஆறு வாரங்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற தடை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

07072020_melbourne-bestpic_064056-2040x1360-1-720x450.jpg

அவுஸ்ரேலியாவில் ஐந்து மில்லியன் மக்கள் ஆறு வாரங்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற தடை!

கொரோனா வைரஸுக்கு (கொவிட்-19) எதிரான அவுஸ்ரேலியாவின் போராட்டத்தின் அடுத்த கட்டம், தொடங்கியுள்ளது.

ஆம்! மெல்பேர்ன், மார்னிங்டன் தீபகற்பம் மற்றும் மிட்செல் ஷைர் முழுவதும் ஐந்து மில்லியன் மக்கள் அத்தியாவசிய காரணங்களைத் தவிர்த்து, அடுத்த ஆறு வாரங்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

எப்போது வேண்டுமானாலும் எங்கும் சோதனைச் சாவடிகள் அமைத்து, நகரத்தை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கப்படுமென பொலிஸார் கூறுகின்றனர்.

விக்டோரியா மாநிலத்தில் 191 புதிய நோய்த்தொற்றுகள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை முடக்கநிலை அறிவிக்கப்பட்டது. இது தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அதன் மிக உயர்ந்த தினசரி எண்ணிக்கை இதுவாகும்.

முந்தைய நாட்களில் பல்பொருள் அங்காடிகளில் கொவிட்-19 தொற்று பரவல் அச்சம் இருந்ததன் காரணமாக, புதிய கட்டுப்பாடுகள் புதன்கிழமை நள்ளிரவில் அமுல்படுத்தப்பட்டன. கொள்முதல் வரம்புகள் விதிக்கப்பட்டன.

நியூசவுத் வேல்ஸில் முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன், எல்லைக் கடப்புகளின் விளைவாக வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க ஆல்பரிக்கு வடக்கே இரண்டாவது எல்லையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறார்.

https://athavannews.com/அவுஸ்ரேலியாவில்-ஐந்து-மி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் தப்பிவிட்டோம் என ஒரு சிறு நினைப்பு🤔

இது ஒரு கொரோணா தடுப்பு நிலைய காவல் அதிகாரியால் வந்த வினை. தடுத்து வைத்திருவர்களுடன் பழகி, ஊரொல்லாம் சுத்தியதின் வினை, யார் யாருக்கு கொரோணா என தெரியவில்லை இப்ப. சோதனை செய்யவும் சிலர் மறுக்கின்றார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா எடுத்துள்ள திடீர் முடிவு

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்ப அனுமதிக்கப்பட்ட பிரஜைகளின் எண்ணிக்கையை 50 சதவீதமாக குறைக்க முடிவெடுத்துள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் வெள்ளிக்கிழமை 288 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தொற்று நோய் தொடங்கியதிலிருந்து அவுஸ்திரேலியாவில் எந்தப் பகுதியிலும் பதிவாகாத அதிகளவான ஒரே நாள் எண்ணிக்கையாகும்.

இவ்வாறான நிலைமைகள் காரணமாகவே மேற்கண்ட முடிவினை எடுத்துள்ளதாக அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கோட் மோரிசன் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் முதல் அவுஸ்திரேலிய பிரஜைகள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களை மட்டுமே நாட்டிற்குள் நுழைய அந் நாட்டு அரசாங்கம் அனுமதித்தது. அவர்கள் நாட்டை வந்தடைந்ததும் ஹோட்டல்களில் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இதற்கான செலவுகளை அரசாங்கம் பொறுப்பேற்றிருந்தது.

இந் நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அவுஸ்திரேலியா ஒவ்வொருவாரமும் நாடு திரும்பும் பிரஜைகள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பாளர்களின் தொகையை சரி பாதியாக குறைக்கவுள்ளது.

அத்துடன் நாடு திரும்பும் அனைவரும் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான செலவுகளையும் அவர்களே பொறுப்பேற்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது

https://www.virakesari.lk/article/85535

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/7NEWSBrisbane/videos/685469312210299/

ஆரம்பத்தில் கொரோனா அவுஸ்திரேலியாவில் பரவுவதற்கு முன் இந்த அவுஸ்திரேலியர் ஆசிய பின்புலம் கொண்ட மக்களிடம் நடந்து கொண்டதை இந்த ஒளிப்பதிவில் காணலாம், 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.