Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில்.. குற்றச்செயல்களை கட்டுப்படுத்த, கிராமத்திற்கு ஒரு இராணுவ அதிகாரி நியமனம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1-army.jpg

யாழில்.. குற்றச்செயல்களை கட்டுப்படுத்த, கிராமத்திற்கு ஒரு இராணுவ அதிகாரி நியமனம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள பிரதேசங்களில் கிராம அலுவலகர் பிரிவு ஒவ்வொன்றுக்கும் இராணுவ அலுவலகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிராம அலுவலகர் பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்களைத் தடுத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் – நுகர்வை ஒழித்தல் போன்றவற்றை அந்தப் பகுதி இராணுவ அலுவலகர் முன்னெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவுக்கும் இராணுவ அலுவலகர் ஒருவர் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் மேலும் இராணுவச் சிப்பாய்கள் கடமைக்கு அமர்த்தப்படுவர்.

இவ்வாறு நியமிக்கப்பட்ட இராணுவ அலுவலகரின் பொறுப்புத் தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவூட்டல் நடவடிக்கை இடம் பெறுகின்றது.

கிராம அலுவலகர் பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்கள், போதைப்பொருள் விற்பனை – கடத்தல் மற்றும் நுகர்வு உள்ளிட்டவை தொடர்பில் முதலில் அந்தப் பிரிவுக்குப் பொறுப்பான இராணுவ அலுவலகருக்கு தெரியப்படுத்த வேண்டும். அவர் ஊடாகவே பொலிஸாருக்கு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கில் சிவில் நிர்வாகக் கட்டமைப்பில் மீளவும் முற்றுமுழுதான இராணுவ தலையீடு முன்னெடுக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளதா தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/யாழில்-குற்றச்செயல்களை-க/

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திருவாசகத்தில் ஒரு வாசகம் -07   
    • அற்புதத்தின் சக்தி (இறையருள் ) ➡வாழ்க்கையில் அற்புதத்தின் மகத்துவத்தை உணர்த்தும் காணொளி. ➡நம் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்துவதற்கான வழிமுறைகள். ➡சாமானிய மக்களுக்கு சென்றடைய அதிகம் பகிரவும்    
    • பாக்கியம் அக்காவின் புகழ் அமெரிக்கா, லண்டன் என்று ஒங்கிபெருகுவதை பார்த்து  பேருவகை கொள்ளும் அதேவேளை  அக்காவின் சாதனைகளை  நேரடியாக பார்த்தும் கேட்டும் ரசித்தவன் என்ற முறையில்  அதனை யாழில் பதிவு செய்ய வேண்டிய கடப்பாடுள்ளவனாக நேர்மையாக  எனது சேவையை தொடர்வேன் என்பதை அக்காவின் கறள் புடிச்ச கசிப்பு கலன் மீது அடித்து  சத்தியம் செய்துவிட்டு அக்காவின் வரலாற்று குறிப்புகளை இங்கே செதுக்குகிறேன்.  அக்காவின் சாதனைப்பயணம் அவரது எட்டாம் வகுப்பு விஞ்ஞானப்புத்தகத்தில் இருந்து ஆரம்பிக்கிறது, எட்டாம் வகுப்பையே மூன்று வருடங்கள் எம்பி எம்பி படித்த அக்காவிற்கு தெரிந்து விட்டது இனி ஏணி வைத்தாலும் படிப்பு நமக்கு எட்டாது என்று , இருந்தாலும் கற்ற கல்வி வீண் போகக்கூடாது என்று வெறித்தனமாக விஞ்ஞானப்புத்தகத்தை புத்தகத்தை புரட்டிய  போது அவரது பார்வை ஒரு படத்தின் மேல் குத்தி நின்றது , அதுதான் காய்ச்சி வடிக்கும் செயன்முறை ,  நியூட்டனுக்கு ஆப்பிளை பார்த்ததும் பொறி பிறந்ததை போல் அக்காவிற்கு காய்ச்சிவடிப்பை பார்த்ததும் விளங்கிவிட்டது இனிமேல் நம்முடைய எதிர்காலமே இதுதான் என்று , நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக காய்ச்சி வடிப்பில் பல சுட்சுமங்களை கண்டுபிடித்து  (பல்லி வால், பழைய இறதல் சைக்கிள் ரிம் போன்றவற்றை கனகச்சிதமாக மிக்ஸ் பண்ணி )  ஊரிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய  சுய தயாரிக்கப்பட்ட தொழில்முனைவோர்  (self made entrepreneur) ஆக மாறிப்போனார்.  சப்பட்டை , உருண்டைகளை கையில் இருபது ரூபாவை மட்டும் வைத்துக்கொண்டு எட்ட நின்று பார்த்து ஏங்கிய குடிமக்களை அக்கா வாரியணைத்து போதும் போதுமென்று மப்பேத்தினார் ,விடுமா இலங்கை காவல்துறை  முன்னே பெட்டிக்கடை பின்னே மப்புக்கடை என்று ஜரூராக நடந்த வியாபாரத்தில் ரெய்டு நடத்தி அக்காவின் சமூக சேவைக்கு முட்டு கட்டைபோட்டார்கள், ஜப்தி பண்ணிய கசிப்புபோத்தலில் ஒரு இரண்டு துளியை உள்ளே விட்ட போலீசார் அக்காவின் பார்முலாவிற்கு அடிமையாகிப்போய் முழுநேர வாடிக்கையாளராகிப்போன அதிசயங்களும் நடந்தன. அக்காவின் கசிப்பு பார்முலா மேற்கூறியவைகளை தவிர்த்து வேறு எவ்வாறான குடும்ப,சமூக,பொருளாதார உட்கட்டுமான  அபிவிருத்திகளையும்  மருத்துவ,விஞ்ஞான துறைகளின்  வளர்ச்சிக்கு எவ்வாறு வழியேற்படுத்திக்கொடுத்தது  என்பதுடன் Corvid19 இற்கான உடனடி தற்காலிக  தீர்வில் இதனையும் ஒன்றாக கவனத்திலெடுக்க வேண்டிய அவசியத்தையும் வாசக நல்லுள்ளங்களின் ஆதரவை தொடர்ந்து அடுத்த பதிவில்  பதிவிடலாம் என்று எண்ணியுள்ளேன்   தொடரும்  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.