Jump to content

ராடா நிறுவன நிதி மோசடி: டிரான் அலஸ், எமில்காந்தன் உள்ளிட்ட நால்வர் விடுவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராடா நிறுவன நிதி மோசடி: டிரான் அலஸ், எமில்காந்தன் உள்ளிட்ட நால்வர் விடுவிப்பு

image_719b78f30c.jpg

 

ராடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிரான் அலஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் நால்வர் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சுனாமியால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அழிவடைந்த வீடுகளைப் புனரமைப்பதற்காக திறைசேரியில் இருந்து ராடா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் ரூபாய் நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது, இந்த வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ்,  எமில்காந்தன், சாலிய விக்ரமசூரிய மற்றும் ஜயந்த டயஸ் சமரசிங்க ஆகியோர் இவ்வாறு குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ், சாலிய விக்ரமசூரிய மற்றும் ஜயந்த டயஸ் சமரசிங்க ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி பிணை வழங்கியிருந்தது.

 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ரட-நறவன-நத-மசட-டரன-அலஸ-எமலகநதன-உளளடட-நலவர-வடவபப/150-253009

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு சுனாமி நிதி மோசடி; முன்னாள் எம்பி உட்பட நால்வர் விடுதலை!

20200710_105105.jpg?189db0&189db0

 

200 மில்லியன் அரச நிதி மோசடி வழக்கில் இருந்து ராடா எனும் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிரான் அலஸ் உள்ளிட்ட நால்வரை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (10) சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது.

டிரான் அலஸ், புலிகளின் வட, கிழக்கு மாகாண நிதி தலைவர் என்று கூறப்படும் எமில் கந்தன், ராடா நிறுவன முன்னாள் நிறைவேற்று அதிகாரி சாலிய விக்ரமசூரிய மற்றும் ஜயந்த டயஸ சமரசிங்க ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்னர்.

2006ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக வட மாகாணத்தில் வீடுகள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்களுக்காக வீடமைப்புத் திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்ட போது 200 மில்லியன் ரூபாய் அரச நிதியை மோசடி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு இந்த வழக்கு தொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் எம்பியான டிரான் அலஸ் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுனவில் போட்டியிடுகின்றமையும், வெளிநாட்டில் உள்ள எமில் கந்தன் ராஜபக்சக்களுடன் நெருங்கிய நபராக உள்ளார் என்பதும் சுட்டிக்காடத்தக்கது.

https://newuthayan.com/வடக்கு-சுனாமி-நிதி-மோசடி/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.