Jump to content

கொரோனா வைரஸ்: காற்று வழியாக பரவுவது என்றால் என்ன? கட்டுப்படுத்துவது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ்: காற்று வழியாக பரவுவது என்றால் என்ன? கட்டுப்படுத்துவது எப்படி?

தும்மல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அண்மை காலம் வரை கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு, அந்த வைரஸ் இருக்கும் பரப்புகளுடனான தொடர்புகளே தொற்று பரவ ஒரே அறிவியல் ரீதியிலான காரணமாக உலக சுகாதார நிறுவனம் கருதி வந்தது.

ஒருவர் இருமும் போதும், தும்மும் போதும் வெளியேறும் நீர் குமிழிகள் மூலம் இந்த வைரஸ் பரவுவதாக இதுவரை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்த காரணத்தால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நன்றாக கைகழுவுவதை உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில், காற்றில் உள்ள மிகச் சிறிய பொருட்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பது தொடர்பாக சில அறிவியல் ஆதாரங்கள் வெளிவந்துள்ளதை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.

கூட்டம் அதிகமுள்ள, முற்றிலும் மூடப்பட்ட மற்றும் மோசமான காற்றோட்ட வசதி உள்ள அமைப்புகளில் காற்று வழியாக இந்த வைரஸ் பரவலாம் என்பதை மறுக்க இயலாது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

மேற்கூறிய ஆதாரம் உறுதி செய்யப்பட்டால் உள்ளரங்குகளில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் மாற்றம் செய்யவேண்டிவரும்.

காற்று வழியாக பரவல் என்றால் என்ன?

காற்றில் சில மணி நேரங்களாக உலாவும் மிகச்சிறிய பொருட்களில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாவை நாம் சுவாசிக்கும்போது காற்று வழியாக வைரஸ் பரவுவது சாத்தியமாகிறது.

பெரும் பரப்பில் இந்த மிக சிறு துளிகள் பரவக்கூடும்.

காற்று வழியாக பரவும் தொற்றுநோய்களுக்கு காசநோய் மற்றும் நிமோனியா ஆகியவை உதாரணங்கள்.

கூட்டம் அதிகமுள்ள மற்றும் முற்றிலும் மூடப்பட்டதாக உள்ள அமைப்புகளில் காற்று வழியாக இந்த வைரஸ் பரவலாம் என்று வெளியிடப்பட்ட அறிவியல் ஆதாரத்தை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.

Medical worker wearing PPEபடத்தின் காப்புரிமைEPA

காற்றில் எவ்வளவு நேரம் வைரஸ் நீடிக்கும்?

செயற்கை முறையில் காற்றில் தூவப்பட்ட கொரோனா வைரஸால் குறைந்தது 3 மணி நேரம் காற்றில் உயிர்ப்புடன் நீடித்திருக்க முடிகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில், பரிசோதனை கூடங்களில் நடக்கும் ஆய்வின் முடிவுகளுக்கு இயல்பான நடப்பு சூழல்களில் நடப்பவைக்கும் மாற்றங்கள் இருக்கும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதி விரைவில் பரவும் வைரஸாக அறியப்படும் கொரோனா வைரஸ் காற்றில் பரவ வாய்ப்புள்ளது என்ற சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் வாஷிங்டன் அருகேயுள்ள ஒரு நகரில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் ஒருவரால், அவர் கலந்து கொண்ட நிகழ்வில் அவருடன் பாடிய குறைந்தது 45 பேருக்கு இந்த தொற்று பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது.

இவ்வாறு தொற்று பரவியவர்களில் பலர் சமூக இடைவெளி கட்டுப்பாடுகளை சரியாக கடைபிடித்துள்ளனர்.

இதேபோன்று ஒரு சம்பவம் கடந்த ஜனவரி மாதத்தில் சீனாவிலும் நடந்துள்ளது.

அங்குள்ள உணவுவிடுதியில் உணவருந்திய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலமாக அவர் உணவருந்திய சமயத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 9 பேருக்கு இந்த தொற்று பரவியுள்ளது.

அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர் 6 மீட்டர் இடைவெளியில் இருந்தார் என்பதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Banner image reading 'more about coronavirus' Banner

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

எந்த ஒரு தொற்றும், அது பரவும் விதத்தை வைத்துதான் அந்த தொற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கமுடியும்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, வெதுவெதுப்பான நீர் மற்றும் சோப் மூலம் 20 வினாடிகளுக்கு கைகழுவதையும், சமூக இடைவெளியையும் உலக சுகாதார நிறுவனத்தின் தற்போதைய வழிகாட்டுதல் பரிந்துரைத்துள்ளது.

ஆனால் காற்று வழியாக கொரோனா வைரஸ் பரவுவது உறுதி செய்யப்பட்டால் இந்த வழிமுறைகளை கொண்டு மட்டும் கட்டுப்படுத்த இயலாது.

காற்று வழியாக கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படும் புதிய ஆதாரத்தை அடிப்படையாக கொண்டு தற்போதைய வழிகாட்டுதல்களில், உலக சுகாதார நிறுவனம் எந்த மாற்றமும் செய்யவில்லை.

A church choir in the USபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இது உறுதி செய்யப்பட்டால், முகக்கவசம் பயன்படுத்துதல் இன்னமும் பரந்த அளவில் செயல்படுத்தப்படலாம். அதேபோன்று பார்கள், உணவு விடுதிகள் மற்றும் பொது போக்குவரத்து ஆகிய இடங்களில் சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படலாம்.

ஆனால், இது உறுதி செய்யப்பட்டால் குளிர்சாதன வசதி பொருத்திய இடங்களிலும் மிக கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

வழிகாட்டுதல்களில் மாற்றம் செய்ய உலக சுகாதார நிறுவனம் முடிவெடுத்தது ஏன்?

அண்மையில் 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு உலக சுகாதார நிறுவனத்துக்கு ஒரு கடிதம் அனுப்பினர்.

அதில், காற்று வழியாக வைரஸ் பரவும் வாய்ப்புள்ளதால், கொரோனா வைரஸ் வழிகாட்டுதல்களை ஐ.நா. முகமை மேம்படுத்த வேண்டுமென அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

'இந்த புதிய ஆதாரத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்'' என உலக சுகாதார நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கையெழுத்திட்டவரும், கொலராடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த வேதியல் ஆராய்ச்சியாளருமான ஜோஸ் ஜிம்னேஷ் தெரிவித்துள்ளார்.

''இது நிச்சயம் உலக சுகாதார நிறுவனத்தை தாக்கி நாங்கள் அனுப்பிய கடிதம் அல்ல. இது ஓர் அறிவியல் விவாதம்; ஆனால் நாங்கள் பலமுறை இது குறித்து விளக்கியும் அவர்கள் இது குறித்து கேட்க மறுப்பதால் , இதனை பொது மக்களுக்கு எடுத்துரைக்க உள்ளோம்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த கடிதத்துக்கு பதில் அளிக்கும் விதமாக உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த நோய்த்தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவின் தலைவரான பெனிடேட்டா அலிகிரான்சி கூறுகையில், கூட்டம் அதிகமுள்ள, முற்றிலும் மூடப்பட்ட மற்றும் மோசமான காற்றோட்ட வசதி உள்ள அமைப்புகளில் காற்று வழியாக இந்த வைரஸ் பரவலாம் என்பதை மறுக்க இயலாது என்று தெரிவித்தார்.

அதேவேளையில், இந்த புதிய ஆதாரங்கள் ஆரம்ப நிலையில் உள்ளதாகவும், இது குறித்து மேலும் விரிவான மதிப்பீடு தேவை என்று உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த டேவிட் ஹேமேன் என்ற மற்றொரு ஆலோசகர், மேலும் விரிவான ஆராய்ச்சிகள் மூலம் மேலும் தகவல்களை தங்களின் முகமை எதிர்பார்ப்பதாகவும், அவற்றை கொண்டு இந்த வைரஸை கட்டுப்படுத்த புதிய வழிமுறைகள் குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/science-53359917

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அண்ணை, நானும் உளப்பூர்வமாகவே எழுதுகிறேன். 1. கொடி பிடிக்காமல் போனால் நாம் சொல்வதை கேட்பார்கள் என்பதில்லை, ஆனால் இதை ஒரு அமைப்பு சார்ந்ததாக அல்லாமல் ஒரு இனம் சார்ந்ததாக காட்ட முடியும் என்கிறார்கள் ஒரு சாரார். கொடிக்கு யாரும் அவமரியாதை நினைப்பதில்லை. அந்த கொடிக்காக மாண்டவர் மீது இருக்கும் அதே மரியாதை அந்த கொடியின் மீதும் இருக்கும். ஆனால் ரதி அக்கா சொல்வதை போல, தீர்வு  வந்தபின் கொடியை பிடிக்கலாம், இப்போ உலக ஓப்புக்காக இதை தவிர்ப்போம் என்கிறனர் இவர்கள். (நானும் முன்பு இப்படி யோசித்தேன், எழுதினேன்). 2. இல்லை எப்படியோ நாம் சொல்வதை யாரும் கேட்கபோவதில்லை. எனவே கொடியை விடுத்து போவதில் அர்த்தமில்லை. கொடியோடு போவோம், போராடுவோம் என்கிறார்கள் மறுசாரார். இதில் ஒரு உள் அணியினர், கொடியை விடுத்து போனால் எமக்கு தீர்வு வரும் என்றால், அப்படி ஒரு தீர்வே தேவையில்லை என (வெளிநாட்டில் இருந்தபடி) சொல்பவர்களாயும் உள்ளனர். இந்த உள் அணியின் முரட்டு பிடிவாதத்தில் எனக்கு துளியும் உடன்பாடில்லை. ஆனால் எப்படியும் ஒன்றும் ஆகப்போவதில்லை, எனவே கொடியோடு போவோம் என்பதில் ஒரு குறைந்தபட்ச நியாயம் இருப்பதாகவே படுகிறது. கொடி பிடிப்பதில் ஏற்பு இல்லை எனும் நாதமுனி, ஆனால் கொடி பிடிப்பவரை பிடிக்க விடுங்கோ, பிடிக்க விரும்பாதோர் பிடிக்காமல் போங்கோ என்கிறார். இது ஒன்றும் புதிதல்ல. 2009இல் பலர் கொடி பிடிக்க விரும்பாமல் ஆனால் போராட்டத்து வந்தார்கள் என்பது போராட்டத்தில் கலந்தவர்களுக்கு தெரியும். அதுவும் ஒரு கடும் பனிக்காலம்தான். ஆனால் இப்போ? எனது அவதானத்தில் நிச்சயமாக கொடி பிடிப்பவர்கள் மட்டும்தான் போராட போகிறார்கள்.  ஆகவே - அவர்கள் நாங்கள் யார் சொன்னாலும் கேட்க போவதில்லை. ஆனால் எத்தனை பேர் போகிறார்கள்? படத்தை மிக கவனப்பட்டு முதல் வரி மட்டும் தெரியும்படி எடுத்துள்ளார்கள்.  ஏன்? ரெண்டாம், மூன்றாம் அடுக்கில் நிற்க ஆட்கள் இல்லை. சில சமயம் - கொடியை தவிர்த்தால் - இன்னும் பலர் வந்து சேரக்கூடும். வராமலும் போகலாம். இங்கே ஒரே ஒரு கேள்விதான். இன்றைய நிலையில், கொடி பிடிப்பதால் எமக்கு நன்மையா? தீமையா? இதற்கான பதில் இப்போதைக்கு மாறி மாறி கதைப்பது மட்டும்தான். அது (மட்டும்) தான் 3 பக்கமாக இங்கே நடந்துள்ளது. என்னை பொறுத்தவரை - நாம் தொண்டை தண்ணி வத்த கத்தியும் ஒரு பலனுமில்லை. பெரிய நாடுகளுக்கு நாம் தேவைபட்டால், மூன்று பேர் சேர்ந்து போராடியதையும் பெரியதாக கருதி செயல்பாட்டில் இறங்குவார்கள், அவர்களுக்கு தேவைபடாவிட்டால் - உலகின் 5வது பெரிய பொருளாதாரத்தின் பாராளுமன்றம் முன், ஆயிரகணக்கில் கூடி24/7 போராடினாலும் உச்சு கொட்டி விட்டு போய் கொண்டே இருப்பார்கள். ஒன்றுபட்ட இலங்கைக்குள் எமது இனத்தின் சக வாழ்வுக்கான தீர்வு இந்த வீதி போராட்டங்களில் இல்லை என நான் நினைக்கிறேன். அது இலங்கையில் ஒரு காத்திரமான தமிழ் தலைமை அமைந்து, அது சர்வதேச காய்நகர்தல்களை திறம்பட கையாளுவதன் மூலமே சாத்தியம்.  எமக்கான அரசியல் தீர்வு திருமணம் என்றால் - பொம்பிளை மாப்பிள்ளை, இலங்கையில் இருக்கும் தமிழ் தலைமைகள். மேளகச்சேரி புலம்பெயர் போராடங்கள். பொம்பிளை மாப்பிள்ளை ரெடி என்றால் மேள கச்சேரியும் கல்யாணத்தில் ஒரு அங்கமாகலாம்.  அவர்கள் இல்லாமல் தனியே தவிலை மட்டும் அடித்து, கல்யாணத்தை ஒப்பேற்ற முடியாது. ஆனால் அப்படி ஒரு ஆமான தலைமை அங்கேயும் இருப்பதாக தெரியவில்லை. சுமந்திரம், சீவி போன்றோர் இப்படி ஒரு தலைமைதுவத்தை வழங்ககூடும் என்ற எதிர்பார்ப்பும் பிழைத்து போனதை காண்கிறோம்.  ஆகவே இப்போதைக்கு இதை பற்றி அடிபடுவதில் அதிகம் அர்த்தம் இல்லை என நினைக்கிறேன். ஆனால் அவர்களுக்கு ஒரு நாள் நாம் தேவைபட்டு, சர்வதேசம் எம்மை அழைத்து கொடியை மடக்கி விட்டு வாருங்கள் விடயத்தை செய்துதருகிறோம், என்று சொல்லும் நிலை வந்தால் ( பூகோள அரசியல் மாற்றத்தால்) அப்போதாவது, கொடியை கொஞ்ச காலம் ஒத்தி வைக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.  எந்த தனி நபர், கொள்கை, கொடி மீதான அதீத பற்றுதலும் எமது மக்களின் கெளரவமான சகவாழ்வுக்கு தடையாக வரக்கூடாது. அந்த கொடியை இறுக பற்றியபடி மாண்டோரும், இன்றைய நிலையில் இதையே சொல்லுவார்கள் என்பதே நான் நினைப்பது.  
    • சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைச்சுக் கொள்ளும் வியாபாரம் நிலைக்கிறது..  
    • நல்ல கண்ணோட்டம் மல்லிகை வாசம். 👍🏽
    • நீங்கள்... எத்தனை, முறை... மாற்றுக்  கருத்து, மாணிக்கங்களிடமிருந்து.... 2009´க்குப் பின்.. என்ன செய்தீர்கள்? என்று... இதே.... களத்தில், பலரும், பலமுறை  கேட்டும்... "கழுவுகிற மீனில், நழுவுகிற மீனாக"  தப்பி... ஓடி விடுகின்ற, ஆட்கள் தான்... இந்த, மாற்றுக் கருத்து, மாணிக்கங்கள். இவர்களை... ஓட்டுக் குழுக்கள் என்று, முன்பு சொல்வார்கள். உண்மையில்... அப்பவும், இப்பவும்...   ஓட்டுக் குழுக்கள், வேறு வடிவங்களில் வந்து உள்ளமை.. கவனிக்கப்  பட்டுள்ளது.    எத்தனையோ.... வசதிகள், ஆளுமை  இருந்தும்,  காட்டிக் கொடுப்புகளால்... தோல்வி உற்ற இனம்,  உலகத்திற்கே.... மூத்த, தமிழ் இனம்.  ஆனபடியால்... சில, விடயங்களில்... கடந்து போக வேண்டிய... காலக் கட்டாயம், கண் முன்னே.. உள்ளது. 
    • இன்றைய இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள் https://www.facebook.com/tamilmangaiyarmalar/videos/278613660055807
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.