Jump to content

தொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில் மக்களின் காணிகள் கபளீகரம்: ரிஷாத்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தொல்பொருள் திணைக்களத்துக்கு உரித்துடைய சொத்தானது, நமது முழு நாட்டுக்கும் சொந்தமானதேயொழிய, அது குறிப்பிட்ட சமூகத்துக்கு மாத்திரம் சொந்தமானதல்ல எனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
 
மேலும்,  தொல்பொருள் பிரச்சினை சில பிரதேசங்களில் தற்போது உருவெடுத்து வருகின்றது. சுமார் 30 வருட யுத்தத்தினால் பல்வேறு கஷ்டங்களையும் பல இன்னல்களையும்  வடக்கு, கிழக்கு மக்கள் சந்தித்தனர். உயிர்களையும் உடைமைகளையும் இழந்தது மட்டுமின்றி, காணிகளைக் கூட இழந்திருக்கின்றனர். யுத்தம் முடிந்து தனது சொந்த இடங்களில் மீளக்குடியேறிய மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். தொல்பொருளியல் என்ற போர்வையிலே, இந்த மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்படும் முயற்சிகளை அனுமதிக்க முடியாது.

பிரச்சினைகள் உள்ள இடங்களில் இதனை சாதுரியமாகத் தீர்த்து வைப்பது உரியவர்களின் பொறுப்பாகும்.

குறிப்பிட்ட பிரதேசத்தின் அரசியல்வாதிகள், சமூகத் தலைமைகள், மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதன் மூலம், இதயசுத்தியுடனும் நேர்மையுடனும் இதனைத் தீர்த்துக்கொள்ள முடியும். அதைவிடுத்து, இதனை பூதாகாரமாக்கி, இனங்களுக்கிடையிலான சச்சரவாக மாற்றுவதற்கு, சம்பந்தப்பட்ட தரப்பினர் இடமளிக்கக் கூடாது. அது நாட்டுக்கு நல்லதுமல்ல. இனவாதிகள் இதனை தூக்கிப்பிடித்துக்கொண்டு திரிவதை கட்டுப்படுத்த வேண்டும்.” என்றார்.  

s.jpg

மேலும், “வன்னி மாவட்டத்திலே, சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, தரமான வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. சஜித் வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது, இந்தப் பிரதேச மக்களின் வீடில்லாப் பிரச்சினையை தீர்த்துவைக்க, பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர். பாகுபாடின்றி இதய சுத்தியுடன் பணியாற்றியவர். வன்னி மாவட்ட கிராமங்களுக்கு நாங்கள் செல்லும் போதெல்லாம் மக்கள் அவரது சேவைகளை நினைவுகூர்வதுடன், அதற்காக நன்றிக்கடன் செலுத்தவும் காத்திருக்கின்றனர்.

மேலும், தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒன்று சேர்ந்து வாக்களிக்கும் கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி பரிணமித்துள்ளதால், தொலைபேசி சின்னத்துக்கு அதிகளவான வாக்குகள் கிடைத்து, ஒன்றுக்கு மேற்பட்ட ஆசனங்களை வெல்லக்கூடிய வாய்ப்பு எமக்கு இருக்கின்றது” என்று தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/85553

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான கருத்து....

சிங்களத்தின் கோரமுகம், தமிழ் பேசும் மக்களாக இனைய வைப்பதை தவிர வேறு வழியில்லை என்று முன்னமே சொல்லி இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

14 hours ago, Nathamuni said:

சரியான கருத்து....

சிங்களத்தின் கோரமுகம், தமிழ் பேசும் மக்களாக இனைய வைப்பதை தவிர வேறு வழியில்லை என்று முன்னமே சொல்லி இருக்கிறேன்.

இன்னுமா இவர்களை நம்புரிங்கள் ... மன்னார் மாவட்டம் என்ன ஆனது என்று தெரியும் தானே அதே போல் முழு வடக்கு மாகாணமும் கைவிட்டு போக வேண்டுமா...? இவர் எவ்வாளவு அட்டகாசம் பண்ணினார் என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல முழு இலங்கையுமே இவரை பார்த்து முழு இலங்கையுமே அஞ்சுகின்றது . 

சிங்களவனை எதிர்ப்பதற்காக இவருடன் கூட்டு வைப்பது முட்டாள்தனம். இதை கடந்த 40 வருடங்களில் நாம் பட்ட அனுபவங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Dash said:

நான் முன்னர் இட்டுள்ள பதிவுகளை பார்த்தீர்களானால், இவரது வேலைகள் குறித்து அதிக தகவல்களை இங்கே தந்ததை அறிவீர்கள். ஆங்கில பத்திரிகைகளில் வந்ததை கூட மொழிபெயர்த்து போட்டிருக்கிறேன்.

ஆனால், இன்று இவர் சொல்வதில் உள்ள நியாயத்தினை ஏற்றுகொள்ளும் பக்குவம் உள்ளது.

ஏனெனில், சிங்களவன், தனி சிங்களவர்கள் கொண்ட தொல்பொருள் குழு ஒன்றினை அமைத்து, கோணேஸ்வரம், நல்லூர் என குறிவைக்க ஆரம்பித்து விட்டான். நாளை அவர்களுக்கும் வரும்.

நமது பங்காளிச்சண்டைக்கு இது சமயம் அல்ல. பொது எதிரியினை எதிர்க்க ஒன்றிணைய வேண்டும். இல்லாவிடில் தனித்தனியாக அனைத்தையும் இழக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

சரியான கருத்து....

சிங்களத்தின் கோரமுகம், தமிழ் பேசும் மக்களாக இனைய வைப்பதை தவிர வேறு வழியில்லை என்று முன்னமே சொல்லி இருக்கிறேன்.

29 minutes ago, Nathamuni said:

நான் முன்னர் இட்டுள்ள பதிவுகளை பார்த்தீர்களானால், இவரது வேலைகள் குறித்து அதிக தகவல்களை இங்கே தந்ததை அறிவீர்கள். ஆங்கில பத்திரிகைகளில் வந்ததை கூட மொழிபெயர்த்து போட்டிருக்கிறேன்.

ஆனால், இன்று இவர் சொல்வதில் உள்ள நியாயத்தினை ஏற்றுகொள்ளும் பக்குவம் உள்ளது.

ஏனெனில், சிங்களவன், தனி சிங்களவர்கள் கொண்ட தொல்பொருள் குழு ஒன்றினை அமைத்து, கோணேஸ்வரம், நல்லூர் என குறிவைக்க ஆரம்பித்து விட்டான். நாளை அவர்களுக்கும் வரும்.

நமது பங்காளிச்சண்டைக்கு இது சமயம் அல்ல. பொது எதிரியினை எதிர்க்க ஒன்றிணைய வேண்டும். இல்லாவிடில் தனித்தனியாக அனைத்தையும் இழக்கவேண்டும்.

 எனக்கென்னவோ இவர்களில் நம்பிக்கையில்லை, எப்ப வேணுமென்றாலும் காலை வாரிவிடுவார்கள், பட்ட அனுபவம்😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, உடையார் said:

 எனக்கென்னவோ இவர்களில் நம்பிக்கையில்லை, எப்ப வேணுமென்றாலும் காலை வாரிவிடுவார்கள், பட்ட அனுபவம்😡

இல்லை, நாம் சண்டை இட்டபோது போது, சிங்களத்தின் மடியில் இருந்து இவர்கள் ஆடியது கொஞ்சமல்ல.

இப்போது அவர்கள் வீசி எறியப்பட்டுள்ளார்கள். காரணம்.... குண்டு வெடிப்பு.

இப்போது சிங்களத்தின் திட்டம்.... எமது வரலாற்று சான்றுகளை மடக்குவது. அதனை தடுக்க வேண்டும், அது முக்கியமானது.

அதேவேளை, அவர்களும் ஆதரவு தாராவிடில், அவரகளது இடங்கள், முக்கியமாக காத்தான்குடி, அம்பாறை.... பறிபோகும்.

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

நான் முன்னர் இட்டுள்ள பதிவுகளை பார்த்தீர்களானால், இவரது வேலைகள் குறித்து அதிக தகவல்களை இங்கே தந்ததை அறிவீர்கள். ஆங்கில பத்திரிகைகளில் வந்ததை கூட மொழிபெயர்த்து போட்டிருக்கிறேன்.

ஆனால், இன்று இவர் சொல்வதில் உள்ள நியாயத்தினை ஏற்றுகொள்ளும் பக்குவம் உள்ளது.

ஏனெனில், சிங்களவன், தனி சிங்களவர்கள் கொண்ட தொல்பொருள் குழு ஒன்றினை அமைத்து, கோணேஸ்வரம், நல்லூர் என குறிவைக்க ஆரம்பித்து விட்டான். நாளை அவர்களுக்கும் வரும்.

நமது பங்காளிச்சண்டைக்கு இது சமயம் அல்ல. பொது எதிரியினை எதிர்க்க ஒன்றிணைய வேண்டும். இல்லாவிடில் தனித்தனியாக அனைத்தையும் இழக்கவேண்டும்.

முதலாவது இந்த கோத்தாவின் ஆட்சிப்நீண்ட நாட்கள் நிலைக்க போவதில்லை   இவர் பெரும்பாலும் பாராளுமன்றம் மூலம் பதவி நீக்கம் செய்யப்படவே வாய்ப்புக்கள் அதிகம்,சிங்கள மக்கள் மத்தியில் ஏற்கனவே அதிருப்திகள் உண்டு. இந்த தேர்தலே அவர்கள் எதிர்பார்க்கும் 2/3. கிடைக்குமா என்பது சந்தேகமே.

அதே போல் அப்படி இவர்கள் வந்தாலும் அதை எதிர்க் நாம் வழிவகைகளை ஆராய வேண்டுமேயொழிய அதற்காக்ச் இவர்களுடன் சேர்வது முட்டாள் தனம். சிங்களவனை எதிர்க்கவாவது எம்மிடம் பொறிமுறகள் உள்ளன ஆனால் இவர்களை எதிர்க்க எதுவுமில்லை. மன்னார் போல் முழுவதையும் கைவிடும் நிலை தான் ஏற்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் புடுங்கின காணிகள்...எந்தக் கணக்கிலை...சாத்தான் வேதமோதுது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கை பௌத்த மாநிலமாக்கவே செயலணி – விக்னேஸ்வரன்

1-a-vicky.png?189db0&189db0

கிழக்கை சிங்கள பௌத்த மாநிலமாக அடையாளம் காட்டவே கிழக்கு ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது என்பது எல்லாவல்ல மேதானந்த தேரரின் கூற்று நிரூபித்துள்ளது என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,

  • IMG_20200711_235423.png?189db0&189db0
  • IMG_20200711_235410.png?189db0&189db0

https://newuthayan.com/கிழக்கை-பௌத்த-மாநிலமாக்க/

Link to comment
Share on other sites

3 hours ago, உடையார் said:

'சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்' என்று பாரதி பாடியபோது அதனையாருமே..... ஒரு தமிழன்கூட எதிர்க்கவில்லை. மாறாக பாரதியாரின் இந்தப் பாடலை திரைப்படத்திலும் இணைத்து உலகெலாம் பரப்பினார்கள். இப்படியான செயற்பாடுகளே, தேரருக்கும் இலங்கை சிங்களநாடு என்று சொல்லும் தைரியத்தைக் கொடுத்துள்ளது.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.