Jump to content

ஆடிக்கூழ் செய்வது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிக்கூழ் செய்வது எப்படி?

16ம் திகதி ஆடிப்பிறப்பாம்......

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்
பச்சையரிசி இடித்துத் தெள்ளி
வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து
தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்
சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி
வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டுமா வுருண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்கவா யூறிடுமே
குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே
குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து
அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே
வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல
மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
– நவாலியூர் சோமசுந்தரப்புலவர்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கேற்ற சிறப்பான பதிவு.......நல்ல விளக்கமாகவும் தெளிவாகவும் சொல்கிறார்....ஆடிக்கூழில் பதத்தைத் தவறவிட்டால் அது கூழாய் இராது......பகிர்வுக்கு நன்றி......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் செய்வம் எண்டு பெரிய திட்டம் எல்லாம் போட..... கெடுத்தாச்சு 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் செய்வம் எண்டு பெரிய திட்டம் எல்லாம் போட..... கெடுத்தாச்சு 😃

நீங்கள் யு டியூப்பில் தானே போடுகிறணீங்கள் . கெதியாய் போடுங்கோ.....லைக் பண்ண கை துறுதுறுக்குது.....சதி செய்த  குமாரசாமியை ஒழுங்கையில் சந்திப்பம்.....!   😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் செய்வம் எண்டு பெரிய திட்டம் எல்லாம் போட..... கெடுத்தாச்சு 😃

பரவாயில்லை அடிக்கடி சாப்பிட்டதான் வயிறு நிறையும், செய்து போடுங்கோ, சாப்பிட நாங்கள் எல்லாம் இருக்கிறோம்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் செய்வம் எண்டு பெரிய திட்டம் எல்லாம் போட..... கெடுத்தாச்சு 😃

"பிரிட்டிஷ் ஆடிக்கூழ்" எண்டு போட்டு என்னத்தை எண்டாலும் கலக்கி ஊத்தி காய்ச்சி விடுங்கோ பிரச்சனை முடிஞ்சுது....பாக்கிற சனம் என்ன கோட்டிலை வழக்கு போடப் போகுதே இல்லைத்தானே 😎

45 minutes ago, suvy said:

நீங்கள் யு டியூப்பில் தானே போடுகிறணீங்கள் . கெதியாய் போடுங்கோ.....லைக் பண்ண கை துறுதுறுக்குது.....சதி செய்த  குமாரசாமியை ஒழுங்கையில் சந்திப்பம்.....!   😎

வில்லன்கள் எப்பவும் சொந்த வீட்டுக்குள்ளைதான்...☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் ஆடிக்கூழும் கொழுக்கட்டையும் வரும்   😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

விரைவில் ஆடிக்கூழும் கொழுக்கட்டையும் வரும்   😀

ஆடி பிறக்க முதல் போட்டால் தான் பிரயோசனமாக இருக்கும் சுமோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

ஆடி பிறக்க முதல் போட்டால் தான் பிரயோசனமாக இருக்கும் சுமோ...

போட்டிடுவம் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுடச் சுடச் செய்து போட்டாச்சு என் சமையல் பதிவில்   😎

15 hours ago, MEERA said:

ஆடி பிறக்க முதல் போட்டால் தான் பிரயோசனமாக இருக்கும் சுமோ...

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.