Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஆடிக்கூழ் செய்வது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிக்கூழ் செய்வது எப்படி?

16ம் திகதி ஆடிப்பிறப்பாம்......

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்
பச்சையரிசி இடித்துத் தெள்ளி
வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து
தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்
சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி
வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டுமா வுருண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்கவா யூறிடுமே
குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே
குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து
அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே
வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல
மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
– நவாலியூர் சோமசுந்தரப்புலவர்-

  • Like 3
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கேற்ற சிறப்பான பதிவு.......நல்ல விளக்கமாகவும் தெளிவாகவும் சொல்கிறார்....ஆடிக்கூழில் பதத்தைத் தவறவிட்டால் அது கூழாய் இராது......பகிர்வுக்கு நன்றி......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் செய்வம் எண்டு பெரிய திட்டம் எல்லாம் போட..... கெடுத்தாச்சு 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் செய்வம் எண்டு பெரிய திட்டம் எல்லாம் போட..... கெடுத்தாச்சு 😃

நீங்கள் யு டியூப்பில் தானே போடுகிறணீங்கள் . கெதியாய் போடுங்கோ.....லைக் பண்ண கை துறுதுறுக்குது.....சதி செய்த  குமாரசாமியை ஒழுங்கையில் சந்திப்பம்.....!   😎

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் செய்வம் எண்டு பெரிய திட்டம் எல்லாம் போட..... கெடுத்தாச்சு 😃

பரவாயில்லை அடிக்கடி சாப்பிட்டதான் வயிறு நிறையும், செய்து போடுங்கோ, சாப்பிட நாங்கள் எல்லாம் இருக்கிறோம்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் செய்வம் எண்டு பெரிய திட்டம் எல்லாம் போட..... கெடுத்தாச்சு 😃

"பிரிட்டிஷ் ஆடிக்கூழ்" எண்டு போட்டு என்னத்தை எண்டாலும் கலக்கி ஊத்தி காய்ச்சி விடுங்கோ பிரச்சனை முடிஞ்சுது....பாக்கிற சனம் என்ன கோட்டிலை வழக்கு போடப் போகுதே இல்லைத்தானே 😎

45 minutes ago, suvy said:

நீங்கள் யு டியூப்பில் தானே போடுகிறணீங்கள் . கெதியாய் போடுங்கோ.....லைக் பண்ண கை துறுதுறுக்குது.....சதி செய்த  குமாரசாமியை ஒழுங்கையில் சந்திப்பம்.....!   😎

வில்லன்கள் எப்பவும் சொந்த வீட்டுக்குள்ளைதான்...☺️

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் ஆடிக்கூழும் கொழுக்கட்டையும் வரும்   😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

விரைவில் ஆடிக்கூழும் கொழுக்கட்டையும் வரும்   😀

ஆடி பிறக்க முதல் போட்டால் தான் பிரயோசனமாக இருக்கும் சுமோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

ஆடி பிறக்க முதல் போட்டால் தான் பிரயோசனமாக இருக்கும் சுமோ...

போட்டிடுவம் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுடச் சுடச் செய்து போட்டாச்சு என் சமையல் பதிவில்   😎

15 hours ago, MEERA said:

ஆடி பிறக்க முதல் போட்டால் தான் பிரயோசனமாக இருக்கும் சுமோ...

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

    • By தமிழ் சிறி
      .

      யாழ்ப்பாணத்து தமிழர்களின் அடையாளங்களில் உணவுக்கு முக்கிய இடம் உள்ளது. சுவையான யாழ் சமையல் முறைகள் தற்போது மாற்றம் அடைந்து வருவதுடன் புழக்கத்தில் இருந்து இல்லாமல் போவதும் கவலைக்குரிய ஒரு விடயமாகும்.

      கூழ், கஞ்சி, களி போன்ற தமிழர்களுக்கே உரிய உணவுகளை எவ்வாறு சமைப்பது என்பதை எம்மவர்கள் மறந்து விட்டார்கள்.

      கூழ் காய்ச்ச தேவையான பொருட்கள்:

      ஒடியல் மா - 100 கிராம்

      கழுவின இறால் - 100 கிராம்

      கழுவின பாதி நண்டு - 8

      மீன்தலை - 1

      புழுங்கல் அரிசி - ஒரு கைப்பிடி

      பயிற்றங்காய் - 10

      புளி - ஒரு சின்ன உருண்டை

      பாலாக்கொட்டை - 100 கிராம்

      சிறிதாக வெட்டிய மரவள்ளிக்கிழங்கு - 250 கிராம்

      தண்ணீர் - தேவையான அளவு

      உப்பு - தேவையான அளவு

      மஞ்சள் - சிறிதளவு

      மிளகு - சிறிதளவு

      நற்சீரகம் - சிறிதளவு

      செத்தல் மிளகாய் - சிறிதளவு

      செய்முறை:

      1. ஒடியல் மாவை அரிப்பன் கொண்டு நன்றாக அரித்து கழுவி வைக்கவும்.

      2. மஞ்சள், மிளகு, நற்சீரகம் ,செத்தல் மிளகாய் ஆகியவற்றில் சிறிதளவு எடுத்து அம்மியில் நன்றாக அரைத்து உருண்டையாக்குங்கள்.

      3. அந்த உருண்டையோடு புளி சேர்த்து கரைத்து வைக்கவும்.

      4. பின்னர் நன்றாக கழுவிய அரிசியுடன் பயிற்றங்காய், பலாக்கொட்டை, மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை ஒரு பானையில் இட்டு வேகவிடவும்.

      5. மீன்தலை, நண்டு, இறால் ஆகியவற்றையும் பானைக்குள் போடவும்.

      6. இறுதியாக கரைத்த புளிக்கரைசலையும் உப்பையும் சேர்த்து தடிப்பானவுடன் இறக்கவும்.

      7. சூடாக சுவையான யாழ்ப்பாணத்துக்கூழ் தயார்.

      கூழ் குடிப்பதன் மூலம் சளி சம்பந்தமான பிரச்சனைகள் அண்டாது என்பது இம்மக்களுடைய கருத்தாகும்.

      நன்றி யாழ் மண்.

      .
    • By நவீனன்
      ஆடிப்பிறப்பு! குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்:-
       
        ஆடிப்பிறப்பு என்ற பண்டிகை தமிழ் சமூகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகும். குறிப்பாக ஈழத் தமிழர்கள் இந்தப் பண்டிகையை தமது கலாசார, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கொண்டாடி வந்துள்ளார்கள். அன்றைய நாளில் ஆடிக்கூழும், கொழுக்கட்டையும்தான் சிறப்பு உணவுகள். இந்த உணவுகள்தான் ஆடிப்பிறப்பு பண்டிகை கொண்டாட்டத்தின் அடையாளங்கள். இந்த உணவுகள் ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டு உணவுகள். இம்முறையும் ஆடிப்பிறப்பை ஒட்டி ஈழத்தில் பல வீடுகளில் கூழ்காய்ச்சி, கொழுக்கட்டை அவித்து கொண்டாடினாலும் இதையெல்லாம் கொண்டாட முடியாத நிலையிலும் பல வீடுகள்வெளித்துக் கிடக்கின்றன என்பதே சோகமானது.   சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை தொடக்கம் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலம் எனப்படும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும். பின்னர், சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலம். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும். தட்சணாயணத்தின் ஆரம்ப தினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலம் கோடைகால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் பெருகும் இயல்புடையது. வானியல், அறிவியல் பின்புலத்தை கொண்ட இந்தப் பண்டிகை இயற்கைசார்ந்த வழிபாடாகவும் பரிமாணம் பெறுகிறது.   தமிழகத்தில், இந் நாளில்  விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாடு செய்தலும் உற்றார், உறவினர்களுக்கு இவ்வுண்டி வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணலும் வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது.  ஆடி மாதத்தில் ஆற்றுநீர் வளமுள்ள தென்னாட்டு மக்கள் காவிரி போன்ற ஆற்றங்கரைகளில் சித்திரான்னம் உண்டு படகோட்டம் போன்ற கேளிக்கைகளில் பங்குபற்றும் இந்த நாளை ‘ஆடிப்பெருக்கு’ என்றும் ஆடி 18 என்றும் அழைத்து பண்டிகையாகக் கொண்டாடுவர்கள். தற்காலத்திலும் தமிழகத் தலைநகர் சென்னையில் ஆடிப்பெருக்கு கொண்டாடும் வழக்கம் இருக்கிறது.   ஆடி விதை தேடி விதை ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் ஆடி ஆவணி ஆன புரட்டாதி காடி தோய்த்த கனபனங் காயத்தைத் தேடித் தேடித் தினமும் புசிப்பவர் ஓடி யோடி யுலகெலாம் பீச்சுவர்   இப்படி தமிழக பழைய பாடல்களில் எழுதப்பட்டுள்ளமை தமிழகத்தில் ஆடிப்பிறப்பிற்குள்ள முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது.   ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை… என்ற பாடல்தான் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஆடிப்பு நாளில் நினைவுக்கு வரும். இந்தப் பாடசாலை ஈழப் புலவர்களில் ஒருவரான நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பாடியுள்ளார். ஆடிப்பிறப்புக்கு ஒரு காலத்தில் விடுமுறைகள் விடுக்கப்பட்டுள்ளன. அந்தளவு முக்கியமான நாளாக ஆடிப்பிறப்பு அமைந்துள்ளது. அதாவது தை முதல் நாளையும் ஆடி முதல் நாளையும் ஈழத்தவர்கள் கொண்டாடுகின்றனர். ஒரு ஆண்டின் தொடக்கத்தையும் அரை ஆண்டின் தொடக்கத்தையும் கொண்டாடுகின்றனர். இங்கு முதல் அரையாண்டு தேவர்களுக்குரியதென்றும் இறுதி அரையாண்டு பிதிர்களுக்கு உரியது என்றும் ஒரு ஐதீகம் இருக்கிறது.   ஆடிப்பிறப்பன்று, வானவேடிக்கைகள், வோர்னில் விழகாக்கள், களியாட்ட நிகழ்வுகள், பட்டம் விடுதல் முதலிய நிகழ்வுகளில் ஈழத்தவர்கள் ஈடுபட்டதாக மூதாதையர்களின் நினைவுக்குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்படுகிறது. சிறுவர்களும் முதியவர்களும் இணைந்து கூடிக் கொண்டாடி மகிழும் ஒரு நிகழ்வாக ஆடிப்பிறப்பு காணப்படுகிறது. நாவாலியூர் சோமசுந்தரப் புலவரின் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலைஎன்ற பாடல் ஆடிப்பிறப்பின் கொண்டாட்டம், களியாட்டம், பண்பாட்டு முக்கியத்துவம், கலாசார செழிப்பு என்று பல்வேறு முக்கிய அம்சங்களை வெளிப்படுத்துகிறது.   ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை   ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே! கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!   பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல் பச்சை அரிசி இடித்துத் தௌ;ளி, வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,   வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரில் சக்கரையுங்கலந்து, தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.   வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி வெல்லக் கலவையை உள்ளே இட்டு பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!   பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி போட்டு மாவுண்டை பயறுமிட்டு மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள் மணக்க மணக வாயூறிடுமே   குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே குத்து விளக்குக் கொளுத்தி வைத்து அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை ஆடிப் பாடிப்பும் படைப்போமே   வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே   வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம் கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக் கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே   ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தந் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! – நாவாலியூர் சோமசுந்தரப் புலவர்   இப்போது ஆடிப்பிறப்புக்கு விடுமுறை இல்லை. ஆடிப்பிறப்பு என்று மாத்திரம் வெறுமனே எமது நாட்காட்டிகள் நினைவுபடுத்துகின்றன. இப்போது விடுமுறையற்ற ஆடிப்பிறப்பு மாத்திரம் வருவதில்லை. விடுதலையற்ற ஆடிப்பிறப்புத்தான் வருகிறது. விடுதலை பெறாத இனத்தின் எல்லாப் பண்டிகைகளும் கொண்டாடும் தன்மையை இழக்கின்றன. அத்துடன் கூடியிருந்தவர்களை இழந்து, கூடியிருந்தவர்களுக்காக காத்திருக்கும் துயரச் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ள ஈழத்தில் இந்த ஆடிப்பிறப்பு வேதனையை தோற்றுவிக்கும் நாளாகவும் ஆகிவிட்டது.   ஆடிப்பிறப்புக்கு விடுமுறை வழங்கப்பட்ட செயற்பாடு ஏன் வழக்கொழிந்தது? தற்போது ஆடிப்பிறப்பின் போது கொண்டாட்ட நிகழ்வுகளை பாடசாலைகளிலும், பொதுஇடங்களிலும் வடமாகாண பண்பாட்டு திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. எனினும் ஆடிப்பிறப்பு போன்ற பண்பாட்டு முக்கியத்துவம் மிக்க தினங்களை விடுமுறை தினங்களாக்க வேண்டும். வடகிழக்கில் இந்த நடைமுறையைக் கொண்டுவருவதன் மூலம் காயப்பட்ட ஈழ மக்கள், தமது பாரம்பரிய பண்பாட்டு தினங்களை கொண்டாடி உளத்தை மகிழச்சிக்கு உள்ளாக்க முடியும்.   பண்டிகை நாட்களில் மனதில் பெரும் மகிழச்சியோடு, உறவுகள் கூடியிருப்பதுதான் மகிழச்சியையும் கொண்டாட்டதையும் புது தொடக்கத்தையும் தருகிறது. பண்பாட்டு அழிப்புக்களுக்கும் கலாசார நெருக்கடிகளுக்குள்ளும் தள்ளப்பட்டுள்ள ஈழத் தமிழ் இனம் ஆடிப்பிறப்பு போன்ற பாரம்பரிய பண்டிகை தினங்களை தொடர்ந்து கொண்டாடி தமது கலாசார, பண்பாட்டு தடத்தை வலுப்படுத்த வேண்டும். அதேநேரம், விடுதலையற்ற சனங்களாக, பண்பாட்டு – கலாசார அழிவுப் பொறிகள் சூழப்பட்ட சனங்களாக வாழும் ஈழத் தமிழ்கள் ஆடிப்பிறப்புக்களை அழுத்தம் நிறைந்த மனதோடுதான் கடந்து செல்கிறார்கள் என்பதையும் இந்த நாளில் எடுத்துரைக்க வேண்டும்.   குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன் http://globaltamilnews.net/archives/33152
    • By கந்தப்பு
      இன்று ஆடிப்பிறப்பு. ஆடி மாதம் முதலாம் திகதி தமிழர்கள் ஆடிக்கூழ் குடிப்பது வழக்கம்.

      ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
      ஆனந்த மானந்தம் தோழர்களே!
      கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
      கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

      பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
      பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
      வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
      மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

      வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
      வேலூரில் சக்கரையுங்கலந்து,
      தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
      சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

      வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
      வெல்லக் கலவையை உள்ளே இட்டு
      பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
      பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

      பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
      போட்டு மாவுண்டை பயறுமிட்டு
      மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
      மணக்க மணக வாயூறிடுமே

      குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே
      குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
      அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
      ஆடிப் பாடிப்பும் படைப்போமே

      வன்னப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
      வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
      அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
      ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

      வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
      மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
      கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
      கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

      ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
      ஆனந்த மானந்தந் தோழர்களே
      கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
      கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

      -நவாலி சோமசுந்திரப்புலவர்

      எங்கள் வீட்டில் ஆடிக்கூழ் கட்டாயமிருக்கும். எனக்கு ஒரு சின்ன வருத்தம். ஈழத் தமிழர்கள் பாரம்பரியமாக ஆடிமாதத்தில் முதலாம் திகதி ஆடிக்கூழ் காட்சி உண்ணுவது வழக்கம். ஆனால் புலத்தில் இப்பொழுது மிகவும் குறைவானவர்களே ஆடிக்கூழ் காட்சுவது வழக்கம். தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகள்/விழாக்கள் புலத்தில் குறைந்து வெள்ளைக்காரர்களினைப் பார்த்து காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் (ஈழத்தமிழர்களுக்கு ஒவ்வொரு நாளும் அன்னையர் தினம், தாயார் தினம் கொண்டாடப்பட வேண்டும்),இன்னும் பல தினங்கள்(21 வயது வந்தவுடன் நடக்கும் களியாட்டங்கள்) தமிழர்கள் கொண்டாடுகிறார்கள். தமிழர்களின் பாரம்பரக்கலையான பறைமேளம், நாதஸ்வரம், மேளம் போன்றவற்றினை சாதி என்ற பெயரில் ஒதுக்கிவிட்டு, மிருதங்கம் கற்பதற்கும், பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிக்காமல் , தெழுங்கு கீர்த்தனை, நாட்டியங்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தமிழ்ப் பெயர்களினை பிள்ளைகளுக்கு சூட்டாமல், வெள்ளைக்காரர்கள் கூப்பிடுவதற்கு இலகுவாக தமிழ் அல்லாத பெயர்களினை பிள்ளைகளுக்கு சூட்டுகிறார்கள்.
    • By akootha
      [size=4]ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே கூடிப் பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே[/size]




      [size=2][size=4]இன்று திங்கட்கிழமை ஆடிப்பிறப்பு. சோமசுந்தரப்புலவர் கூழைப்பற்றி பாடினாலும் பாடினார். எங்கள் மனமும் கூழுக்காக அலையத் தொடங்கியது. முன்னரெல்லாம் ஆடி பிறந்துவிட்டால் போதும் ஊரிலே கொழுக்கட்டைக்கும் கூழுக்கும் குறைவே இருக்காது.[/size][/size]




      [size=2][size=4]அந்தக் கூழின் சுவை கடந்த சில நாள்களாகவே எங்களையும் ஏதோ செய்தது. நாங்கள் என்றால் நானும் அரவிந்தனும் தென்இலங்கையில் அறைக்குள் இருந்து படித்துக் கொண்டிருக்கும் வட இலங்கைவாசிகள்.[/size][/size]




      [size=2][size=4]"கூழை கடையிலே காசுகொடுத்து வாங்க முடியுமா?'' என்று அறைத்தோழன் அரவிந்தனிடம் கேட்டேன். ஒழுங்காய் சோறு, கறி, பிட்டு, இடியப்பத்தையே செய்ய மாட்டாங்கள். இந்தப் பனங்கட்டிக் கூழைப் பற்றி இஞ்சை உள்ளவர்களுக்கெல்லாம் என்ன தெரியும்? இப்பவெல்லாம் சனம் கூழை மறந்து; ஏன் சோமசுந்தரப் புலவரையே மறந்து போய்ச்சு எங்கட அடிப்படைப் உணவுப் பழக்கங்களை எல்லாம் சனம் மறந்து போய்ச்சு'' [/size][size=4] என்று பெரிய ஒரு லெக்சரே அடித்தான் அரவிந்தன். எனக்குக் கூழ் ஆசையை விடமுடியவில்லை. இனி இதற்காக ஊருக்கா போக முடியும்?[/size][/size]




      [size=2][size=4]நாங்கள் எதிர்பார்த்த ஆடிப்பிறப்பு வந்தது. அன்று காலையில் இருந்தே எனக்கு ஊரின் ஞாபகம்தான் ஊரிலே அன்றைய தினம் அங்குள்ள கிணற்றடி வைரவர் கோயில்களுக்கெல்லாம் பொங்கல் செய்து படைப்பார்கள். பால்றொட்டி, வடை, முறுக்கு, அரியதரம் போன்ற பலகாரங்களை எல்லாம் சுட்டு அயலவர்களுடன் பகிர்ந்து உண்பார்கள். [/size][/size]




      [size=2][size=4]இந்தப் பலகாரங்கள் கூட இப்போ பலருக்கு மறந்திருக்கும். இதுதவிர பனங்கட்டிக் கூழ் காய்ச்சுவார்கள். கொழுக்கட்டை அவிப்பார்கள். இது ஆடி மாதம் பூராகவும் தொடர்ந்தபடிதான் இருக்கும். எங்களுக்கெல்லாம் ஒரே வேட்டைதான். அதெல்லாம் ஒரு காலம்?[/size][/size]




      [size=2][size=4]"மச்சான் பின்னேரம் வேலை முடிஞ்சு வந்த உடனே ரெடியாய் இரு. நாங்கள் வெள்ளவத்தையில் இருக்கிற என்னுடைய சித்தப்பா முறையான ஒருவரின் வீட்டை போவம்'' என்றான் அரவிந்தன்.[/size][/size]




      [size=2][size=4]"இல்லை மச்சான் சுகுமார், என்று எனக்கு தெரிந்தவர் பம்பலப்பிட்டியில் இருக்கிறார் அங்கை போவம்'' என்று நான் கூறினேன். "இல்லை மச்சான் சித்தப்பா வீட்டை போவம்'' என்று மீண்டும் அரவிந்தன் கூறினான். எனக்கு கோபம் வந்தது.[/size][/size]




      [size=2][size=4]"உங்கட சித்தப்பா வீட்டிலை கட்டாயம் கூழ் காய்ச்சுவினமோ'' என்று ஒரு கேள்வியைக் கேட்டுவைத்தேன். அரவிந்தன் யோசித்தான். பின்பு அதே கேள்வியை மீண்டும் என்னிடம் கேட்டான்.[/size][/size]




      [size=2][size=4]"உன்ரை சுகுமார் வீட்டிலை கட்டாயம் கூழ் காய்ச்சுவினமோ?'' எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. "போன வருசம் சித்தப்பா வீட்டிலை கூழ் காய்ச்சினவை. நான் தற்செயலாகப் போன போது எனக்கு கூழ் கிடைத்தது'' என்றான் அரவிந்தன். சரி என்று அவனது விருப்பப்படியே சித்தப்பா வீட்டுக்குப் போவதாகத் தீர்மானித்துக் கொண்டோம்.[/size][/size]




      [size=2][size=4]அன்று மாலை நானும் அரவிந்தனும் சீவிச்சிங்காரித்துக் கொண்டு சித்தப்பா வீடு நோக்கிப் புறப்பட்டோம். "போகும் போது வெறுங்கையுடன் போகக்கூடாது'' என்றான் அரவிந்தன். நான் உடனே கடையில் ஒரு பிஸ்கட் பெட்டி ஒன்றை வாங்கிக் கொண்டேன். அதாவது பண்டமாற்று முறை. நாங்கள் பிஸ்கட்டைக் கொடுத்து கூழ் குடிக்கப்போகின்றோம். குசேலர் கூட கிருஸ்ணனைக் காணப் போகும் போது அவலுடன்தான் போனாராம்.[/size][/size]




      [size=2][size=4]அங்கே போய்ச் சேர்ந்த போது எங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. பலதரப்பட்ட விடயங்களையும் பேசிக்கொண்டோம். எனது கண்கள் எப்போது கூழ் வரும் என்று அடுக்களைப் பக்கம் நோக்கியபடியே இருந்தது. பிஸ்கட் தந்தார்கள், கேக் தந்தார்கள், தேநீர் தந்தார்கள். கூழ் மட்டும் வரவே இல்லை. [/size][/size]




      [size=2][size=4]"ஒருவேளை ஆடிப்பிறப்பை கேக் வெட்டித்தான் கொண்டாடினார்களோ?'' இருந்தே இருந்து பார்த்தோம் கடைசியில் பொறுமை இழந்த அரவிந்தன். "இன்றைக்கு மாதப்பிறப்பெல்லோ'' என்று கேட்டான் அவர்கள் கலண்டரைப் பார்த்துவிட்டு "இன்றைக்கு பதினாறாம் திகதிதானே'' என்றார்கள்.[/size][/size]




      [size=2][size=4]"அடியடா பிறப்படலையிலை எண்டானாம்'' போய்ச்சு.. கூழ் ஆசை போய்ச்சு. அப்போது சித்தப்பாதான் சுதாகரித்துக் கொண்டு. "இண்டைக்கு ஆடிப்பிறப்பு அது எனக்கு தெரியும். இஞ்சை என்னத்தைத்தான் செய்யிறது?'' என்று சலித்துக் கொண்டார். துணைக்கு அவரது மனைவியும்.[/size][/size]




      [size=2][size=4]"போன வருசம் கூழ் காய்ச்சி ஒருத்தருமே குடிக்கேல்லைத் தம்பி. இந்தப் பிள்ளைகளுக்குக் கூழ், கஞ்சி ஒத்துக்கொள்ளாது. எந்த நேரமும் ஐஸ்கிறீமை, யோக்கடை வாங்கி வைச்சு சாப்பிட்டுப் பழகிவிட்டுதுகள்'' என்று கூறிய போது நான் அரவிந்தனைப் பார்த்தேன். அவனைப் பிடித்துச் சாப்பிடவேண்டும் போல இருந்தது. இருவருமாக விடைபெற்றுக் கொண்டாம். வெளியே வீதிக்கு வந்த பின்னர்...[/size][/size]




      [size=2][size=4]"மச்சான் நீ சொன்ன சுகுமார் வீட்டுக்குப் போய்ப் பார்த்தார் என்ன? என்று என்னைப் பார்த்துக் கேட்டான் அரவிந்தன்'' இப்போ நான் விட்டாலும் அவன் விடவில்லை. "சரி'' என்றேன். இருவருமாக மீண்டும் ஒரு பிஸ்கற் பெட்டியை வாங்கிக் கொண்டு சுகுமார் வீடு நோக்கிப் புறப்பட்டோம்.[/size][/size]




      [size=2][size=4]சுகுமாரும் மனைவியும் எங்களை முகமலர்ச்சியோடு வரவேற்றார்கள். அவராகவே இன்றைக்கு "ஆடிப்பிறப்பு'' என்றும் அதன் சிறப்புக்களையும், அதை எப்படி எல்லாம் கொண்டாடுவோம் என்று சொல்லிக் கொண்டே வந்தார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. [/size][/size]




      [size=2][size=4]இவர் எப்போது கூழ்பற்றிக் கூறுவார்? என்று காத்திருந்தேன். பயன் இல்லை. இறுதியாக நானே சுகுமாரின் மனைவியிடம்[/size][/size]




      [size=2][size=4]"நீங்கள் ஆடிப்பிறப்புக்கு கூழ் ஒன்று காய்ச்சுவதில்லையா?'' என்று கேட்டேன்.[/size][/size]




      [size=2][size=4]""ஆ.... கூழ்'' ""இந்த மரவள்ளிக்கிழங்கு, நண்டு, இறால் எல்லாம் போட்டுக் காய்ச்சு வாங்களே அதுவா?'' என்று கேட்ட போது நான் மயங்கி விழாத குறைதான்.[/size][/size]




      [size=2][size=4]"அ அதுவும் கூழ்தான்........ இ..இது வேறை கூழ்'' என்றான் அரவிந்தன்.[/size][/size]




      [size=2][size=4]""எட தம்பி என்ரை மனிசிக்கு கொழும்பு வந்த பிறகு தான் சமைக்கவே தெரியும் அதுகும் நான் சொல்லிக் கொடுத்துத்தான். நந்தினிக்கு கூழ் மட்டுமில்லை கொழுக்கட்டையும் செய்யத் தெரியாது'' என்னறார் சுகுமார்.[/size][/size]




      [size=2][size=4]"சரி சரி அடுத்த தடவை ஊருக்குப் போட்டு வரும் போது கூழ் காய்ச்சுவது எப்படி? என்று அறிஞ்சுகொண்டு வாங்கோ'' என்று கூறியபடி நாங்கள் எழுந்த போது.....[/size][/size]




      [size=2][size=4]"இல்லை இல்லை கட்டாயம் இருந்து சாப்பிட்டு விட்டுத்தான் போகவேணும்'' என்று கூறி பிட்டு அவித்துத் தந்தார்கள். நாங்களும் கூழுக்குப் போய்... பிட்டை நிரப்பிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.[/size][/size]




      [size=2][size=4]"மச்சான் நாங்கள் கல்யாணம் முடிக்கும் போது நல்லாய் சமைக்கத் தெரிந்த பெண்ணாகத்தான் கட்டவேணும்'' என்று கூறினான் அரவிந்தன். எனக்குச் சிரிப்பாக இருந்தது. ஏதோ கூழ் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் சொல்லுகிறான். நாளைக்கு எல்லாம் சரியாப் போகும் என்று நினைத்துக் கொண்டேன்.[/size][/size]




      [size=2][size=4]கூழ் ஆசையை தற்காலிகமாக ஒத்திவைத்துக் கொண்டோம். ஆடி மாதமும் கொஞ்சம் கொஞ்சமாக போய்க் கொண்டிருந்தது. கூடவே எங்கள் கூழ் ஆசையும் தான்.[/size][/size]




      [size=2][size=4]அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. அதிகாலையிலேயே அவசரமாக என்னை எழுப்பினான் அரவிந்தன்.[/size][/size]




      [size=2][size=4]"மச்சான் இண்டைக்கு நாங்கள் கூழ்குடிக்கப் போகின்றோம்'' என்றான். இரவு முழுவதும் கூழைப்பற்றியே கனவு கண்டு இருப்பான் போலட இருக்கிறது. நிமிர்ந்து உட்கார்ந்தேன்.[/size][/size]




      [size=2][size=4]"மச்சான் நல்ல ஒரு ஐடியா!! கூழுக்குத் தேவையான சாமான்களை கடையிலை வாங்குவம். அதைப் பக்கத்து வீட்டு அன்ரியிட்டை கொடுத்தால் கூழ் காய்ச்சித் தருவா'' என்றான்.[/size][/size]




      [size=2][size=4]"அன்ரிக்கு கூழ் காய்ச்சத் தெரிந்திருக்குமா?'' என்று கேட்டேன். "ஓம் மச்சான் அதுகள் நவாலி, சங்கரத்தையைச் சேர்ந்த சனம். கட்டாயம் தெரிஞ்சிருக்கும்'' என்றான். [/size][/size]




      [size=2][size=4]"நவாலி'' என்றவுடன் எனக்கு நம்பிக்கை வந்தது. "சோமசுந்தரப்புலவர் பிறந்த ஊர் அல்லவா?[/size][/size]




      [size=2][size=4]அவர்களுக்கு கட்டாயம் ஆடிக் கூழைப் பற்றித் தெரிந்திருக்கும். அன்று மாலை அதற்கு வேண்டிய சாமான்களை வாங்கிக் கொண்டு அன்ரி வீட்டுக்குச் சென்றோம். அன்ரிக்கு ஏதோ விளங்கியிருக்க வேண்டும்.[/size][/size]




      [size=2][size=4]"தம்பிமாருக்கு என்ன செய்துதர வேணும்?... ஐசிங் கேக்கா? புருட்கேக்கா? பலூடாவா? மஸ்கெற்றா? பால்க் கோவாவா? சூசியமா? அல்லது சில்லிப் பராட்டவா? பூரியா, சப்பாத்தியா? சொல்லுங்கோ தம்பிமார் என்ன செய்து தரவேணும்?....'' ""ஆ இதுகள் எல்லாம் தின்பண்டங்களா? இதுகளைப் பற்றி எல்லாம் எங்களுக்கு எதுகுமே தெரியாது?'' என்று சொல்ல நினைத்தேன் சொல்லவில்லை. [/size][/size]




      [size=2][size=4]அரவிந்தன் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை. உண்மையாகவே அன்ரி ஒரு சமையல் புயல்தான், நிச்சயமாக இன்று கூழ் குடிக்கலாம். என்று நினைத்துக் கொண்டேன். நான் சுதாகரித்துக் கொண்டு.. "அன்ரி அவ்வளவிற்குச் சிரமப்பட வேண்டாம். எங்களுக்கு ஆடிக்கூழ் காய்ச்சித் தரமுடியுமா? என்று கேட்டேன்.[/size][/size]




      [size=2][size=4]"ஆடிக்கூழா......?''[/size][/size]



      [size=2][size=4]"ஓம் அதுதான் சோமசுந்தரப் புலவர் பாடினாரே பனங்கட்டிக்கூழ்'' என்றேன்.[/size][/size]




      [size=2][size=4]"யார் சோமசுந்தரப் புலவர்?'' என்று கேட்டாள் அன்ரி.[/size][/size]




      [size=2][size=4]எனக்கு ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போச்சு.... அதன் பிறகு அரவிந்தன்தான் பேசினான்.[/size][/size]




      [size=2][size=4]"இது பயறு, பனங்கட்டி தேங்காய் எல்லாம் போட்டுக் காய்ச்சுவாங்களே அது தான்'' என்றான்.[/size][/size]




      [size=2][size=4]"....அ... அது ஊரிலை சின்னனிலை ஒருக்கால் குடிச்சிருக்கிறன். ஆனால் அது எப்படி செய்கிறது எண்டு எனக்குத் தெரியாது'' என்று கையைப் பிசைந்து கொண்டாள். பேசத் தெரியாதவன் ஆங்கிலம் பேசின மாதிரித்தான் என்று நினைத்துக் கொண்டு,[/size][/size]




      [size=2][size=4]"சரி போகட்டும் எங்களுக்கு பால்க்கோவா தேவைப்படும் போது வாறம் அன்ரி'' என்று கூறியபடி விடைபெற்றுக் கொண்டோம்.[/size][/size]




      [size=2][size=4]வெளிநாடுகளில் இருந்து எல்லாம் பலர் தங்கள் பெற்றோருக்கு இப்படி ""ஒடியற்கூழ், பனங்கூழ் எல்லாம் குடிக்க ஆசையாக இருக்கிறது என்று கடிதம் எழுதியதை எல்லாம் நான் கேள்விப்பட்டிருக்கின்றேன்.[/size][/size]




      [size=2][size=4]ஆனால் இந்த இரண்டுங்கெட்டான் கொழும்புவாழ் பெருங்குடி மக்கள் மட்டும் எங்கள் வாழ்க்கை முறையையே மறந்துட்டார்கள் என்று நான் ஆதங்கப் பட்டேன். அப்போது "உனக்கு ஒருத்தரும் கூழ்காய்ச்சித் தரவில்லை என்ற கோவம் மச்சான்'' என்றான் அரவிந்தன்.[/size][/size]




      [size=2][size=4]நாங்கள் மீண்டும் அறைக்கு வந்த கையோடு அரவிந்தன் மண்ணெண்ணைக் குக்கரை எடுத்து அடுப்பை மூட்டினான். சருவத்தை வைத்துத் தண்ணீர் ஊற்றினான்.[/size][/size]




      [size=2][size=4]"எடேய் என்ன செய்யப் போறாய்?'' என்றேன்.[/size][/size]




      [size=2][size=4]"நீயே பார்... கூழ் பெரிய கூழ்? எனக்கு கொஞ்சம் சமையல் தெரியும். இண்டைக்கு எப்படியும் கூழ்குடிக்கிறது தான்'' என்றான்.[/size][/size]




      [size=2][size=4]சருவத்து நீர் கொதித்ததும் பயறை அதற்குள் போட்டு அவித்தான். பயறு அவிந்து வந்த போது, தேங்காய்ப்பாலையும் விட்டு அரிசிமாவையும் போட்டுக் கலக்கினான். நான் பனங்கட்டியை வெட்டிக் கொடுத்தேன். அதனையும் உள்ளே போட்டுக் கொதிக்க விட்டான். [/size][/size]




      [size=2][size=4]அப்போது தான் ஞாபகம் வந்தது. தேங்காய் ஒன்றை உடைத்து, சொட்டாக்கி அதை நறுக்கி உள்ளே போட்டுக் கலக்கினோம். கூழின் வாசனை மூக்கைத் துளைத்தது. எனக்கு இருப்புக் கொள்ளவில்லை.[/size][/size]




      [size=2][size=4]"மச்சான் ஆடிக்கூழ் லேசாய் உறைக்கிறது தானே? அதற்கு என்ன போட வேண்டும். என்று கேட்டேன். ""வேறை என்ன செத்தல் மிளகாயை இடித்துப் போடவேண்டும்'' என்றான்.[/size][/size]




      [size=2][size=4]அந்தப் பதிலினால் அன்றைய அந்த ஆடிக்கூழில் பெரிய ஒரு திருப்பமே ஏற்படப் போகின்றது என்பதை [/size][/size]




      [size=2][size=4]அப்போது நான் அறிந்திருக்கவில்லை. [/size][/size]




      [size=2][size=4]மிளகாய் இடித்துப் போட்டு கூழைக்காய்ச்சி இறக்கி வைத்தான் அரவிந்தன். அந்தக் கூழைக் குடித்தது முதல் குடல் எல்லாம் எரிந்து இரண்டு நாள்களாய் ஒரே வயிற்றுப் போக்கு. கூழாசை குடலைக் கொண்டு போகப் பார்த்தது. நல்லகாலம் தப்பித்தோம்.[/size][/size]




      [size=2][size=4]பிறகுதான் நாங்கள் தெரிந்து கொண்டோம், "கூழுக்கு மிளகு, சீரகம், ஏலக்காய் இடித்துப் போட வேண்டும். அது எங்களைப் போன்ற "அவசரக் குடுக்கைகளுக்கு' சரிப்பட்டு வராது தான்.[/size][/size]




      [size=2][size=4]"ஆடிக்கூழைத் தேடிக்குடி என்று ஆச்சி அடிக்கடி கூறுவாள். அங்கெல்லாம் தேடாமலே கூழ் கிடைக்கும். இங்கு தேடினாலும் கூழ் கிடைக்கவில்லை. அவரவர்க்கு அளந்தளவுதான் எல்லாமே. ஒருவாறு ஆடிமாதமும் நிறைவு பெற்றிருந்தது. கூடவே கூழ் ஆசையும் தான். மீண்டும் அடுத்த வருடம் ஆடிமாதம் வரும் ஊருக்குப் போய், சந்தோசமாக ""கூடிப் பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம்'' என்று நினைத்துக் கொண்டோம்....!'' [/size][/size]




      [size=2]
      http://onlineuthayan...220731621490547[/size]
    • By நவீனன்
      ஆடிக்கூழ் செய்முறை
       


      5- 6 பேருக்கு போதுமானது

      தேவையான பொருட்கள் :
        அரிசி - 1/2 சுண்டு வறுத்த பயறு - 100 கிராம் கற்கண்டு - 200 கிராம் தேங்காய் - 1 உப்பு - அளவிற்கு தண்ணீர் - 14 தம்ளர்
      செய்முறை : அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து இடித்தரித்துக் கொள்க .   ஒரு தேங்காயை துருவி 4 தம்ளர் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து பாலை பிழிந்தெடுத்து , இதில் 1/2 தம்ளர் முதல் பாலை எடுத்து வேறாக வைக்கவும் .   பின்பு அரித்து வைத்துள்ள மாவில் 1/3 பனங்கு மாவை எடுத்து பாத்திரத்திலிட்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத் தம்ளர் முதல் பாலை சிறிது சிறிதாக விட்டு இடியப்ப மா பதத்திற்கு நன்றாக அடித்துக் குழைத்து , சிறு சிறு துண்டுகளாக உருட்டி மெதுவாக தட்டி வைத்துக் கொள்க .   பின்பு பானையில் 10 தம்ளர் தண்ணீரை விட்டு கொதித்த பின்பு வறுத்த பயறை கழுவிப் போட்டு அவியவிடவும் . பயறு முக்கல் பதமாக அவிந்து வரும் பொழுது உருட்டி வைத்துள்ள மா உருண்டைகளை ஒவொன்றாக போட்டு அவிய விடவும் .   பின்பு மிகுதியாக உள்ள மாவில் பாலை விட்டு கரைத்துக் கொள்க    கொத்தி நீரில் போட்ட மா உருண்டைகள் அவிந்ததும் கற்கண்டையும் கரைத்து வைத்துள்ள மா கரைசலையும் சேர்த்து கரண்டியால் நன்கு இடை விடாது துலாவி காய்ச்சவும் . கலவை ஓரளவு தடிக்க தொடங்கியதும் உப்பும் தேங்காய் சொட்டும் கலந்து இறக்கி சூட்டுடனேயே பரிமாறலாம் . http://yarlsamayal.blogspot.com/2013/03/blog-post_1.html
  • Topics

  • Posts

    • இந்தியாவை 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிகொண்டு பழிதீர்த்தது பாகிஸ்தான் இருபதுக்கு - 20 உலகக்கிண்ண சுப்பர் 12 சுற்றின் பரபரப்பான போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பொறுப்புடன் ஆடிய பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஜோடி 151 என்ற வெற்றி இலக்கை இணைப்பாட்டமாக பெற்றுக்கொடுத்து பாகிஸ்தானுக்கு வரலாற்று வெற்றியை பெற்றுக்கொடுத்தது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நேற்று இரவு டுபாயில் இடம்பெற்றது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறியது. விராட் கோலி, ரிஷப் பண்ட் இருவரும் நிதானமாக ஆடினர். ரிஷப் பண்ட் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். நிதானத்துடனும் பொறுப்புடனும் ஆடிய அணித்தலைவர் விராட் கோலி 57 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இறுதியில், இந்தியா அணி 20 ஓவர் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்களை பெற்றது. பாகிஸ்தான் சார்பில் ஷாகீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளையும் ஹசன் அலி 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதையடுத்து, 152 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. அந்த அணியின் ஆரம்ப ஆட்டக்காரர்களாக பாபர் அசாம், மொகமது ரிஸ்வான் இறங்கினர். ஆரம்பத்தில் இருந்தே இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விரட்டியடித்தனர். இருவரும் அரை சதமடித்து இந்திய அணியின் பந்து வீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தனர். இருவரையும் ஆட்டமிழக்கச் செய்வதற்கு இந்திய அணி பல வியூகங்களையும் வகுத்த போதிலும் அவை கைகூடவில்லை. இறுதியில், பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.  இப்போட்டியில் பாகிஸ்தானின் ஷாகீன் அப்ரிடி ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.   https://www.virakesari.lk/article/115938
    • அமெரிக்காவில் தடுப்பூசி ஏற்றாத மருத்துவ ஊழியர்கள் பணி நீக்கம் ம.ரூபன். உலகில் 2020 ஜனவரி-2021 மே வரை கொவிட் நோயால் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மருத்துவத்துறை  ஊழியர்கள் மரணமானதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் குறையும்போது தற்போது ரஷ்யாவில் தொற்று அதிகரித்துள்ளது. இந்நோய் பரவ காரணமான சீனாவில்  மீண்டும் தொற்று கூடியுள்ளது. அமெரிக்காவில்  மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி மருந்தை ஏற்றிக்கொள்கிறார்கள். எனினும் சில இடங்களில் கோவிட் தொற்றால் பலர் மரணமடைகின்றனர். கொரோனா ஆட்கொல்லி நோய் அமெரிக்காவிலேயே பல இலட்சம் பேரை காவு கொண்டு பொருளாதாரத்தையும் பாதித்து யுத்த கால சூழலைப்போல மக்களின் வாழ்க்கை காணப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பின் தோல்விக்கும்,பைடனின் வெற்றிக்கும் இதுவும் காரணம் பைடன் ஜனாதிபதியாக பதவிக்கு வந்ததும் தடுப்பு மருந்தை சகலரும் பெறுவதற்கு உடன் நடவடிக்கை எடுத்து, சகலரும் தடுப்பூசியை ஆர்வத்துடன் ஏற்றி வருகின்றனர். இந்நோய் தொற்றும் குறைந்து வரும்போது மருத்துவத்துறையில் சில ஊழியர்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள மறுத்து வருகின்றனர். பாதுகாப்பாக சிறுவர்கள் முதல் சகலரும் முக்கவசம் (Mask) அணிந்து சமூக இடைவெளியை பேணுகின்றனர். வர்த்தகநிலையங்கள்,உணவகங்கள், தேவாலங்கள், அலுவலகங்கள் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மாஸ்க் கட்டாயம் என அறிவித்தல்கள் உள்ளன. அமெரிக்காவுக்கு 33 நாடுகளின் பயணத்தடை நவம்பர் 8 நீக்கப்படவுள்ளதுடன்  72 மணி நேரத்திற்கு முன்னர் பயணிகள் தடுப்பூசியை ஏற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையில் நியூயோர்கில் (Northwell Health ) என்ற மிகப்பெரிய  தனியார் வைத்தியசாலையில் பணிபுரியும் 1,400 ஊழயர்கள் கொவிட்-19 தடுப்பு மருந்தை ஏற்ற மறுத்ததால் ஒக்டோபர் 6  பணிநீக்கப்பட்டனர். உலகில் எந்தவோரு நாடும் இதேபோல வேலை நீக்கும் நடவடிக்கையை மருத்து வத்துறை ஊழியர்களுக்கு எதிராக எடுத்திருக்காது. நியூயோர்க்கின் வைத்தியசாலைகளில் பணிபுரியும் 92 வீதமான 450,000 ஊழியர்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டதாக சுகாதாரப்பிரிவு கூறியுள்ளது. Presbyterian Hospital  இல் 250 ஊழியர்களும், மேற்கு வேர்ஜினியாவில் இரு பெண் ஊழியர்களும் ஒக்டோபர் 22 இல் நீக்கப்பட்டனர்.(KAISER PERMANENT) என்ற மிகப்பெரிய சுகாதார பராமரிப்பு நிறுவனத்தில் 2,200 ஊழியர்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள டிசம்பர் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பருக்குள் நியூயோர்க் (State) மாநில வைத்தியசாலைகளின் சகல ஊழியர்களும் கொவிட்- 19 தடுப்பூசியை கட்டாயம் எற்றிக்கொள்ள்வேண்டும் என  ஆளுநர் (Governor) அன்ட்ரூ கியூமோ உத்தரவிட்டிருந்தார். நியூயோர்க் நகரில் தடுப்பூசி ஏற்றாத 500 தாதிமாருக்கு  சம்பளமற்ற லீவு வழங்கப்பட்டது. ஹூஸ்டன் மெதடிஸ்ட் வைத்தியசாலையில் (Houston Methodist Hospital)  தாதிமார் தடுப்பூசி  உத்தரவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர். 26 தாதிகள் உட்பட 153 ஊழியர்கள் மருந்தை ஏற்ற மறுத்து நீக்கப்பட்டனர். இங்கு பணிபுரியும் 117 பேர் தடுப்பு மருந்தை ஏற்றும் உத்தரவுக்கு எதிராக  வழக்கு தாக்கல் செய்துள்ளனர். கொலராடா கனியன்ஸ் வைத்தியசாலையில் (Colorada Canyons Hospital)-ஒரு தாதி நீக்கப்பட்டார். ஒகியோவில் "மாஸ்க்"அணிதல், தடுப்பூசி ஏற்றும் உத்தரவை  எதிர்த்து சிலர் வீதியில் போராட்டம் செய்தனர். நியூயோர்க்-ஸ்ரேற்றன் ஐலன்ட் பல்கலைக்கழ வைத்தியசாலைக்கு முன்பாகவும்  கடந்த ஆகஸ்ட் மாதம் தடுப்பூசிக்கு எதிராக சிலர் ஆர்ப்பாட்டம் செய்தனர். தாதி ஒருவர் தடுப்பூசி ஏற்றி ஒவ்வாமையால் மயக்கமானதால், இவர்கள் தடுப்பூசியை ஏற்ற மறுப்பதாகவும் கூறப்படுகிறது.கொவிட்-19 சிகிச்சைக்கான பணிகளில் மருத்துவர்கள்,தாதியர்கள்,ஏனைய தரத்திலான ஊழியர்களும் தினமும் ஈடுபடுவதால் அவர்களின் குடும்பத்தினர்,சூழவுள்ளோர்  பாதுகாப்பு கருதி தடுப்பூசியை ஏற்றுவது மிகவும் அத்தியாவசியமானது என்று  (Northwell Health)  அதிகாரி பார்பரா ஒஸ்போர்ன் கூறியுள்ளார். வட கரோலினா மாநிலத்தில் 15 வைத்தியசாலைகளில் 35 ஆயிரம் ஊழியர்களில் தடுப்பூசி ஏற்றாத 175 பேர் நீக்கப்பட்டனர்.சிலர் தற்காலிகமாக நீக்கப்பட்டு  தடுப்பூசி ஏற்ற கால அவகாசமும் அளிக்கப்பட்டது.லொஸ் ஏஞ்சலில் தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு ஒக்டோபர் வரை அவகாசம் வழங் கப்பட்டது. பல வைத்தியசாலைகளில் கொவிட்  அச்சம் காரணமாக  சில ஊழியர்கள் சமூகமளிக்காததால் புதியவர்கள் நியமிக்கப்படுவதைப்போலவே வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களின் இடங்களுக்கும் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படுகிறது. அல்பனி மருத்துவ நிலையத்தில் (Albany Medical Center) இல் தடுப்பூசி மருந்தை ஏற்றாத 204 ஊழியர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். இதேவேளை நியுயோர்க்கின் சில ஆசிரியர்களும்,கல்வித்துறை ஊழியர்களும் கோவிட்-19 தடுப்பூசி ஏற்றும் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனுவை மன்ஹற்றன் மாவட்ட நீதிபதி மேரி கே விஸ்கொசில் நிராகரித்து,தடுப்பூசி ஏற்றாது நோய் தொற்றால்  பிள்ளைகளும்,அவர்களின் குடும்பங்களுமே பாதிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார். மன்ஹற்றன் (Manhattan) நகரில் 95 வீதமான கல்வித்திணைக்கள ஊழியர்கள் தடுப்பூசி மருந்தை பெற்றுள்ளதாகவும் 3000 ஆசிரியர்கள் பெறவுள்ளதாகவும் நகர மேயர் பில் டி பிலாசியோ தெரிவித்தார். United Airlines விமான நிறுவனத்தின் ஊழியர்களில் 593 பேர் தடுப்பூசியை  ஏற்ற மறுத்ததால் பணி நீக்கப்பட்டனர்.வேலை இழந்தவர்களுக்காக அரசு வழங்கும் நிவாரண உதவி கொடுப்பனவும் இவர்களுக்கு வழங்கப்படாது எனவும் இந்நிறுவனத்தின் நிறைவேற்றதிகாரி கூறியுள்ளார். அமெரிக்காவில் கொவிட்-19 காரணமாக மூடப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கு நிவாரண நிதி   (Unemployment Benifits) வழங்கப்பட்டது இவ்வாறு மூடப்பட்ட பல நிறுவனங்கள்,வர்த்தக நிலையங்கள்,தொழிலகங்கள் மீண்டும் இயங்கத்தொடங்கியுள்ளன. சி.என்.என் ஊடக நிறுவனத்தில் தடுப்பூசி ஏற்றாத மூன்று ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க சுகாதார செயலாளர் (அமைச்சு) சேவியர் பெக்கெறா சகலரும் கொவிட் தடுப்பூசி மருந்தை ஏற்றி, இந்நோயில் இருந்து பாதுகாத்து கொள்ள்ளுமாறு  மக்களை கேட்டுள்ளார். https://www.virakesari.lk/article/115947  
    • பதவியை இராஜினாமா செய்கிறாரா கெஹலிய?   சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தமது அமைச்சுப் பொறுப்பை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மருந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகு வதற்காகப் பிரசன்ன குணசேன எடுத்த தீர்மானத்தை ஒரு மாதத் திற்கு ஒத்திவைக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார். இதனால் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அசௌகரியத் திற்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. கெஹெலிய ரம்புக்வெல்லவுடனான தகராறு காரணமாகப் பிரசன்ன குணசேன தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்ததாக முன்னதாக ஊடகங்கள் செய்திகள் வெளியான. நேற்றுவரை கெஹலிய ரம்புக்வெல்ல அணி வெற்றி பெற்றதாகத் தோன்றினாலும், ஜனாதிபதியின் தலையீட்டால் நிலைமை மாறி யுள்ளது என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டுள்ள தாகவும் அரசாங்க வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.   https://thinakkural.lk/article/145271  
    • ஊதிய‌ பிர‌ச்ச‌னை கார‌ண‌மாய் இல‌ங்கை முன்ன‌னி வீர‌ர்க‌ள் வில‌கினார்க‌ள் இப்ப‌ இருக்கிற‌ இல‌ங்கை இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு முன்னாள் வீர‌ர்க‌ள் ஆன‌ ச‌ங்க‌க்காரா ஜெய‌வ‌த்தானாவிட‌ம் ஆலோச‌னை பெற்று திற‌மைய‌ மெது மெது வெளிக்காட்டினா , இப்ப‌ இருக்கும் இள‌ம் வீர‌ர்க‌ள் அணிய‌ நல்லா ப‌டியா கொண்டு செல்வின‌ம் இந்தியா பேய் என்றால் இல‌ங்கை பிசாசு பேய‌ விட‌ பிசாசு எவ‌ள‌வோ மேல் , இல‌ங்கை அணியின் விளையாட்டை பார்த்து தான் என‌க்கு கிரிக்கேட் மேல் ஆர்வ‌ம் வ‌ந்த‌து.........................😁😀
    • தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வயது 20 …. கூட்டமைப்பு ஏன், எவ்வாறு, உருவாக்கப்பட்டது டி.பி.எஸ்.ஜெயராஜ் ……………………………….    தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இப்போது 20 வயது. இலங்கையின் வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் முதன்மையான அரசியல் அணியான கூட்டமைப்பு 2001 டிசம்பர் பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு சில வாரங்கள் முன்னதாக 2001அக்டோபர் 22 அமைக்கப்பட்டது. அதற்கு பிறகு ஆனையிறவின் இருமருங்கிலும் எத்தனையோ நிகழ்வுப் போக்குகள் நடந்தேறிவிட்டன.    வடக்கு,கிழக்கில் தமிழ் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் தேர்தல்களில் தொடர்ச்சியாக பெரும்பாலான ஆசனங்களை வென்றதன் மூலம் இலங்கைத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் அணியாக கூட்டமைப்பு விளங்கிவருகிறது. 2001, 2004, 2010, 2015, மற்றும் 2020 பாராளுமன்ற தேர்தல்களில் கூட்டமைப்பு இரட்டை இலக்கத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுமத்தை வென்றெடுத்து வந்திருக்கின்றது. 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற வடமாகாண சபை தேர்தலிலும் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் தமிழ் பிரதிநிதிகளை கூட்டமைப்பு பெற்றது. இந்த வெற்றிகளைத் தவிர,2018 உள்ளூராட்சி தேர்தல்களில் வடக்கு,  கிழக்கில் 40 க்கும் அதிகமான உள்ளூராட்சி மன்றங்களில் கூட்டமைப்பு ‘முதலாவதாக ‘ வந்தது. 2021 ஆம் ஆண்டில் இருப்பது 2001 ஆண்டு கூட்டமைப்பு அல்ல. 2001 ஆம் ஆண்டில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது நான்கு அரசியல் கட்சிகள் அதிலா அங்கம் வகித்தன. தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் ( ரெலோ)  மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி( ஈ. பி. ஆர். எல்.எவ். ) ஆகியவையே அவையாகும். இவற்றில் தமிழ் காங்கிரஸும் ஈ.பி.ஆர். எல்.எவ்.வும் தற்போது கூட்டமைப்பில் இல்லை. தமிழர் ஐக்கிய விடுதலை கூடடணியும் மாறுதலுக்குள்ளாகி விட்டது. கூட்டணியின் தலைவரான வீரசிங்கம் ஆனந்தசங்கரி விடுதலை புலிகளின் வற்புறுத்தலை அடுத்து கூட்டமைப்பில் இருந்து “வெளியேற்றப்படார்”. சங்கரி சட்ட வழிமுறைகளின் மூலம் போராடி கூட்டணியின் கட்டுப்பாட்டை தன்னுடன் வைத்துக்கொண்டார். அதற்கு பிறகு கூட்டணியின் பெரும்பகுதி உறுப்பினர்கள் இலங்கை தமிழரசு கட்சியுடன் சேர்ந்துகொண்ட அதேவேளை சங்கரி உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துபோன கூட்டணியின் தலைவராக இருந்துவருகிறார்.   சமஷ்டி கட்சி என்று அறியப்பட்ட தமிழரசு கட்சி 1976 ஆம் ஆண்டில்  இருந்து கூட்டணியின் பிரதான அங்கத்துவ கட்சியாக இருந்துவந்தது. 2001 ஆம் ஆண்டில் கூட்டமைப்பு கூட்டணியின் சூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. 2004 ஆம் ஆண்டில் இருந்து அது தமிழரசு கட்சியின் வீடு சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது. தற்போது கூட்டமைப்பில் தமிழரசு கட்சி,ரெலோ மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) ஆகிய மூன்று கட்சிகளே அங்கம் வகிக்கின்றன. தற்போதைய பாராளுமன்றத்தில் கூட்டமைப்புக்கு யாழ்ப்பாணம்,வன்னி,திருகோணமலை,அம்பாறை,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பத்து உறுப்பினர்களே இருக்கிறார்கள். தமிழரசு கட்சியைச் சேர்ந்த அறுவர்,ரெலோவைச் சேர்ந்த மூவர், புளொட்டைச் சேர்ந்த ஒருவர்.   தற்போது ஒரு புறத்தில் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கு இடையிலும் மறுபுறத்தில் பிரதான அங்கத்துவ கட்சியான தமிழரசு கட்சிக்குள்ளும் குழப்பம் நிலவிவருகிறது. ரெலோவும் புளொட்டும் தமிழரசு கட்சிக்கு எதிராக கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றன. தமிழரசு கட்சிக்குள் இருப்பவர்களுக்கு இடையிலும் பதற்றம் நிலவுகிறது. கூட்டமைப்பின் அரசியல் எதிரிகளும் போட்டியாளர்களும் ஊடகங்களும் கூட்டமைப்புக்குள் நிலவும் முரண்பாடு பெரிதாக வெடிக்கும் என்ற அபிப்பியாயத்தை கொண்டிருக்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பு உண்மையாக வரும் என்றால் கூட்டமைப்பின் 20வது வருட கொண்டாட்டமே  அது ஐக்கியப்பட்ட அணியாக  இருக்கப்போகும் இறுதி சந்தர்ப்பமாக அமையக்கூடிய சாத்தியம் இருக்கிறது. இதை மறுதலிக்கும் வேறு தரப்பினர் கூட்டமைப்புக்குள் நிலவும் பிளவுகள் ஒன்றும் புதியவை அல்ல, கூட்டமைப்பின் தொடக்கத்தில் இருந்தே இத்தகைய பிளவுகள் இருந்துவந்திருக்கின்றன என்று கூறுகிறார்கள்.     ஆனால், பொதுவில் கூட்டமைப்பும் குறிப்பாக தமிழரசு கட்சியும் உள்ளக மற்றும் வெளிச்சவால்களை சந்திப்பதற்கு தற்போதைய தவறுகளை திருத்திக்கொள்ளவேண்டிய அவசியம் இருப்பதாக விடயமறிந்த தமிழ் வட்டாரங்களில் பரவலான கருத்து ஒருமிப்பு இருக்கிறது போன்று தோன்றுகிறது.   இத்தகைய பின்புலத்திலேயே இந்த கட்டுரை கூட்டமைப்பின் மீது கவனத்தை செலுத்துகிறது. கூட்டமைப்பு பற்றிய விடயங்கள் குறித்து நான் ஏற்கெனவே விரிவாக எழுதியிருக்கிறேன். ஏனென்றால் இலங்கையின் வடக்கு,கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மையான அரசியல் அணியாக கூட்டமைப்பே விளங்குகிறது. கூட்டமைப்பின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி அவ்வப்போது எழுதிய தொடர்ச்சியான  கட்டுரைகளின் உதவியுடன் இந்த கட்டுரையை எழுத முனைகிறேன். கூட்டமைப்பு விடுதலை புலிகளின் உருவாக்கம் என்ற பரவலான நம்பிக்கைக்கு மாறாக அது சுயாதீனமாக (விடுதலை புலிகளின் ஜாக்கிரதையுடனான மறைமுக ஆதரவுடன் ) உருவாக்கப்பட்ட ஒரு அணியாகும். அதற்கு பிறகுதான் விடுதலை புலிகள் கூட்டமைப்பை கட்டுப்படுத்த தொடங்கினார்கள். அதனால் இந்த கட்டுரை  கூட்டமைப்பு 2001 அக்டோபர் 22 எவ்வாறு அமைக்கப்பட்டது என்பதை அதன் இருபதாவது வருடாந்த நிறைவில் விளக்குகிறது.      2001தேர்தல் முடிவுகள்   கூட்டமைப்பின் தோற்றுவாய் கிழக்கிலேயே இருந்தது. 2000 அக்டோபர் 10 பாராளுமன்ற தேர்தலே அதை தூண்டிவிட்ட காரணியாகும். அந்த தேர்தலின் முடிவுகள் பொதுவில் தமிழர்களுக்கும் குறிப்பாக தமிழ் கட்சிகளுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தன. அரசியல்ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தமிழர் எவரும் தெரிவாகவில்லை. மட்டக்களப்பில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியைச் சேர்ந்த இருவர் மாத்திரமே  தெரிவாகினர். ஆளும் பொதுஜன முன்னணியின் சார்பில் போட்டியிட்ட இன்னொரு தமிழரும் வெற்றி பெற்றார். அம்பாறை மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி. டி. பி.)ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்ட ஒரு தமிழர் தெரிவு செய்யப்பட்டார்.   6 ஆசனங்களைக் கொண்ட வன்னியில் இரு சிங்களவர்களும்  (ளும் கட்சியையும் ஐக்கிய தேசிய கட்சியையும் சேர்ந்தவர்கள்) முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒருவரும் தெரிவாகினர். ரெலோவைச் சேர்ந்த இருவரும் புளொட்டைச் சேர்ந்த ஒருவருமாக மூன்று தமிழ் எம். பி.க்கள் தெரிவாகினர். அந்த நாட்களில் ஒன்பது ஆசனங்களைக் கொண்டிருந்த யாழ்ப்பாண மாவட்டத்தில் ஈ. பி. டி. பி.போனஸ் ஆசனம் உட்பட நான்கு ஆசனங்களையும் கூட்டணி மூன்று ஆசனங்களையும் பெற்றன. அதேவேளை,  தமிழ் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் ஐ.தே.க. ஒரு ஆசனத்தையும் பெற்றன. தேசியப்பட்டியல் ஆசனமொன்றைப் பெறக்கூடியதாக போதுமான வாக்குகளை எந்தவொரு தமிழ் கட்சியும் பெறவில்லை. 2000 பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு,கிழக்கில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே இருந்தது. மேலும் சிங்களவர்களின் ஆதிக்கத்திலான தேசிய கட்சிகளும் அரசாங்கத்துடன் சேர்ந்திருந்த ஈ.பி.டி.பி. போன்ற கட்சிகள் கணிசமான வாக்குகளைப் பெற்றன. அரசாங்கத்தைச் சாராத தமிழ்க்கட்சிகளின் பின்டைவுக்கான ஒரு காரணம் அவற்றுக்கிடையிலான ஐக்கியமின்மையும் தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டமையும் உத்வேகத்தை தரக்கூடிய அரசியர் நிகழ்ச்சி திட்டம் இன்மையுமாகும். கிழக்கு பல்கலைக்கழக  கருத்தரங்கு   நிலைவரத்தின் பாரதூரத்தன்மை பெரும்பாலும் ஒரே இனத்தவர்களே வாழும் வடக்கையும் விட மூவினத்தவர்களும்  வாழும் கிழக்கில் கடுமையாக உணரப்பட்டது. நிலைவரத்தை ஆராயும் கருத்தரங்கொன்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. டெயிலி மிறர் பத்திரிகையின் முன்னாள் பத்தியாளர் தர்மரத்தினம் சிவராம் என்ற தராக்கி அதற்கு தலைமை தாங்கினார். பல கல்விமான்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள், துறைசார் நிபுணர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள், பட்டதாரி மாணவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் என்று பல தரப்பட்டவர்கள் கலந்துகொண்டனர். வாக்குகள் சிதறடிக்கப்படுவதை தடுக்க எதிரணியில் உள்ள பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரு அணியில் ஐக்கியப்படவேண்டும் என்று கருத்தரங்கில் தீர்மானிக்கப்பட்டது. அந்த அணி விடுதலை புலிகளுக்கு ஆதரவானதாக இருக்கவேண்டும் என்றும் ஒரு குடையின் கீழ் அணிதிரளும் இந்த முயற்சிக்கு புலிகளின் ஆதரவு பெறப்படவேண்டும் என்றும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த பணியை ஒருங்கிணைப்பதற்கு  பிரதானமாக பத்திரிகையாளர்கள்,கல்விமான்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய வழிகாட்டல் குழுவும் மூவரைக்கொண்ட கூட்டு தலைமைக்குழுவும் அமைக்கப்பட்டது.   இந்த கடினமான முயற்சி மூன்று அம்சங்களைக் கொண்டதாக இருந்தது. முதலாவதாக,விடுதலை பலிகளின் அங்கீகாரமும் மறைமுகமான ஆதரவும். எதிரணியில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் கொல்லப்படமாட்டார்கள் என்ற விடுதலை புலிகளின் பாதுகாப்பு உத்தரவாதம் இதற்கு தேவைப்பட்டது. அதற்கு பிரதியுபகாரமாக இந்த தமிழ் கட்சிகள் விடுதலை புலிகளின் முதன்மை நிலையை ஏற்றுக்கொள்ளவேண்டியிருந்ததுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக விடுதலை புலிகளை அங்கீகரிக்கவேண்டும்.   இரண்டாவதாக,ஈ. பி. ஆர்.எல்.எவ்., ரெலோ மற்றும் புளொட் போன்ற தீவிரவாத வரலாற்றைக் கொண்ட தமிழ் கட்சிகள் ஆயுதங்களை கீழே வைப்பதாகவும் விடுதலை புலிகளை வேட்டையாடுவதற்கு அரசுடன் ஒத்துழைப்பதில்லை என்றும் பிரகடனம் செய்யவேண்டியிருந்தது. இந்த கட்சிகள் ராசீக் குழு (  ஈ.பி. ஆர். எல். எவ்.), மோகன் குழு( புளொட்) மற்றும்  ராஜன் குழு( ரெலோ) போன்ற துணை இராணுவக்குழுக்களுடன் கொண்டிருந்த தொடர்புகளை துண்டிக்கவேண்டியுமிருந்தது. மூன்று குழுக்ககளும் கிழக்கில் அப்போது தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தன.   மூன்றாவதாக, தீவிரவாதிகள் அல்லாத தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி, தமிழ் காங்கிரஸ் போன்ற கட்சிகள் முனானாள் தீவிரவாத குழுக்களுடன் ஒரு பொது முன்னணியில் சேர்ந்து செயற்படவேண்டியிருந்தது. முன்னாள் தீவிரவாத குழுக்களின் கரங்கள் இரத்தக்கறை படிந்தவை என்று உணர்ந்ததால் இவ்விரு கட்சிகளும் அவர்களுடன் சேர்ந்து செயற்பட தயக்கம் காட்டின. இது தவிர கூட்டணி ஆயுதமற்ற ஜனநாயகத்தை வேண்டிநின்றது. தமிழ் காங்கிரஸுக்கும் தமிழரசு கட்சி/கூட்டணிக்கும் இடையில் ஒரு நீண்ட பகைமை வரலாறும் இருந்தது. கூட்டணியின் அச்சம்   கூட்டணியும் அதன் 1989 அனுபவம் காரணமாக அச்சம் கொண்டிருந்தது. புதுடில்லியின் நெருக்குதல் காரணமாக ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி( ஈ.என்.டி.எல். எவ்.).,   ரெலோ,ஈ.பி.ஆர்.எல்.  எவ். போன்ற தீவிரவாத இயக்கங்கள் கூட்டணியின் வேட்பாளர்களுடன் சேர்ந்து கூட்டணியின் சூரியன் சின்னத்தின் கீழ் பாராளுமன்ற தேர்தலில்போட்டியிட்டன.  ஆனால், கூட்டணியின் ஆரம்பகால உறுப்பினர்கள் எவரும் வெற்றி பெறவில்லை.அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் மாத்திரம் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றம் சென்றார். (அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வி கண்டார்)   வன்னியில் இருந்த விடுதலை புலிகள் பேச்சுவார்த்தை செயன்முறைகளில் நேரடியாக சம்பந்தப்படவில்லை. ஆனால், மட்டக்களப்பு–அம்பாறைக்கான விடுதலை புலிகளின் அரசியல் பிரவு தலைவர் கரிகாலன் ஆதரவாக இருந்து பேச்சுவார்த்தைகளில் மறைமுகமாக சம்பந்தப்பட்டார். பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தவேளையில் கூட ஆரையம்பதி பிரதேசசபையின் தலைவரான ரெலோவைச் சேர்ந்த “ரொபேர்ட்” விடுதலை புலிகளினால் கொல்லப்பட்டார். (இந்த ரொபேர்ட் 2002 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் வைத்து விடுதலை புலிகளினால் கொல்லப்பட்ட ஈ. பி. ஆர். எல்.எவ்.ரொபேர்ட்டை விட வேறுபட்டவர்)அந்த கொலை ரெலோவுக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. அதன் விளைவாக ஐக்கிய பேச்சுவார்த்தைகளில் இருந்து ரெலோ வெளியேற விரும்பியது.     எவ்வாறெனினும் வழிகாட்டல் குழு தொடர்ந்தும் தனது முயற்சிகளை முன்னெடுத்ததுடன் கிழக்கில் விடுதலை புலிகளின் இராணுவ தலைமைத்துவத்துவத்திடம் வேண்டுகோளும் விடுத்தது. அப்போது விடுதலை புலிகளின்  கிழக்கு பிராந்திய இராணுவ தளபதியாக இருந்தவர் வேறு யாரும் அல்ல, விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கேணல்  கருணா அம்மான்தான். புலனாய்வு பிரிவினருக்கும் அரசியல் பிரிவினருக்கும் இவையிலான தொடர்பாடலில் ஏற்பட்ட குளறுபடியின் காரணமாக ஏற்பட்ட தவறு என்று அந்த கொலைக்கு விடுதலை புலிகள் ”   விளக்கம் ” கூறினர்.   இதைத் தொடர்ந்து ரெலோவையும் ஈ.பி.ஆர்.எல். எவ்.வையும் சேர்ந்த முன்னணி பிரமுகர்கள் கரிகாலனை இரகசியமாக சந்தித்து விடயத்தை ஆராய்ந்தனர். உறுதிமொழிகள் பெறப்பட்டன. அதே போன்றே கூட்டணி பிரமுகர்களும் விடுதலை புலிகளின் தலைவர்களைச் சந்தித்து பேசினர்.     இரண்டு சிறு சிக்கல்கள் ஏற்பட்டன. தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் ஐக்கியத்தை விரும்பியபோதிலும் அதன் செல்வாக்குமிக்க தளப்பிரதேசமான வவுனியாவில் உள்ள உறுப்பினர்கள் அங்கு செல்வாக்கு மிக்க இன்னொரு இயக்கமான ரெலோவுடன் அணி சேருவதற்கு விரும்பவில்லை. அதே போன்றே ரெலோவின் உயர்மட்டமும் வன்னியில்  தங்களின் ஆதரவு குறைந்துவிடும் என்ற அச்சத்தில் புளொட்டுடன் ஐக்கியப்படுவதற்கு தயங்கியது. இறுதியில் புளொட் அல்லது அதன் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டி.பி.எல்.எவ்.) ஐக்கிய முயற்சிகளில் இருந்து விலகிக்கொண்டது.   இரண்டாவது சிக்கல்  தமிழ் காங்கிரஸுக்கும் தமிழரசு கட்சி/ கூட்டணிக்கும் இடையிலான வெறுப்பாகும். சகல கட்சிகளும்  கூட்டணியின் சூரியன் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு பதிலாக தனது  சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்று தமிழ் காங்கிரஸ் விரும்பியது.    2000 ஜனவரியில் தனது கணவரான குமார் பொன்னம்பலம் கொல்லப்பட்டதையடுத்து தமிழ் காங்கிரஸில் ஆதிக்கம் மிக்க ஆளுமையாக வைத்திய கலாநிதி யோகலக்சுமி பொன்னம்பலம் விளங்கினார். அவரது வீட்டில் நடைபெற்ற நீண்ட கலந்தாலோசனைக்கு பிறகு கட்சிகளின் ஐக்கியத்துக்கு இணங்கியதுடன் சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கும் சம்மதம் தெரிவித்தார். அதேபோன்றே கூட்டணியில் இருந்த சில பிரமுகர்களும் தமிழ் காங்கிரஸுடனும் முன்னாள் தீவிரவாத குழுக்களுடனும் ஐக்கியப்படுவதற்கு தயக்கம் காட்டினர். ஆனால்,நாளடைவில் அவர்களின் மனமும் மாற்றப்பட்டது.   பேச்சுவார்த்தையின் இறுதிக்கட்டங்களில் வன்னியில் உள்ள விடுதலை புலிகள் நேரடியாக பேச்சுவார்த்தைகளில் சம்பந்தப்பட்டனர். கூட்டணி, தமிழ் காங்கிரஸ் ,ரெலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.ஆகிய கட்சிகளின் சில தலைவர்களுடன் தொலைபேசி மூலம்  தொடர்புகொள்ளப்பட்டு கூட்டணியின் சூரியன் சின்னத்தின் கீழ் ஐக்கியப்பட்டு போட்டியிடுமாறு வலியுறுத்தப்பட்டது.பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைய விடுதலை புலிகள் காரணியாயமைந்தனர். செயல்முறை இணக்கப்பாடு  தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அணியை உருவாக்குவதற்கு கூட்டணி, தமிழ் காங்கரஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ்.மற்றும் ரெலோ ஆகிய கட்சிகளிடையே ஒரு செயல்முறை இணக்கப்பாடு காணப்பட்டது. கூட்டமைப்பு சூரியன் சின்த்தின் கீழ் போட்டியிடும் என்று முடிவானது. 2001 அக்டோபர் 22  திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையொன்றின் மூலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உதயம் அறிவிக்கப்பட்டது. அந்த ஊடக அறிக்கையில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்.ஆகிய கட்சிகளின் சார்பில் முறையே  இரா.சம்பந்தன், என்.குமரகுருபரன்,என்.ஸ்ரீகாந்தா, கே.பிரேமச்சந்திரன் ஆகியோர் கச்சாத்திட்டனர். ஊடக அறிக்கையில் நான்கு முக்கிய அம்சங்கள் அடங்கியிருந்தன. முதலாவது அம்சம் பாராளுமன்ற தேர்தலில் கட்சிகளுக்கான ஆசன ஒதுக்கீடு பற்றியதாகும்.அந்த ஏற்பாடு வருமாறு;   யாழ்ப்பாணம்–கூட்டணி –7,தமிழ் காங்கரஸ் –3, ரெலோ –1,ஈ.பி.ஆர்.எல்.எவ் –1   வன்னி — கூட்டணி –3,தமிழ் காங்கிரஸ்–1,    ரெலோ–4, ஈ.பி.ஆர்.எல்.எவ்.–1, மட்டக்களப்பு– கூட்டணி — 5, தமிழ் காங்கிரஸ் –1,ரெலோ –2, ஈ.பி.ஆர்.எல்.எவ்.–1 திருகோணமலை– கூட்டணி — 3, தமிழ் காங்கிரஸ்– 1,ரெலோ –2,  ஈ.பி.ஆர்.எல்.எவ்.–0   திகாமடுல்ல —   கூட்டணி –5,தமிழ் காங்கிரஸ் –1,ரெலோ–1, ஈ.பி.ஆர்.எல்.எவ்.–0   இரண்டாவது அம்சம்  தேசியப்பட்டியல் எம்.பி.க்களின் நியமனம் பற்றியது. இதற்கான முன்னுரிமை ஒழுங்கு கூட்டணி,தமிழ் காங்கிரஸ், ரெலோ மற்றும் ஈ. பி.ஆர்.எல்.எவ்.என்று அமைந்தது. கூட்டமைப்பு பெறுகின்ற வாக்குகளின் அடிப்படையில் அதற்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைக்குமானால் அது கூட்டணிக்கே செலலும். இரண்டாவது தேசியப்பட்டியல் ஆசனம் கிடக்குமானால் அது தமிழ் காங்கிரஸுக்கே செல்லும்.   https://thinakkural.lk/article/145288
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.