Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கருணாவை கைதுசெய்ய உத்தரவிடக் கோரி மேன் முறையீட்டு மன்றில் ரீட் மனு!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கருணாவை கைதுசெய்ய உத்தரவிடக் கோரி மேன் முறையீட்டு மன்றில் ரீட் மனு!

(எம்.எப்.எம்.பஸீர்)

கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை   உடனடியாகக் கைது செய்வதற்கு பதில் பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிடுமாறு கோரி எழுத்தாணை மனுவொன்று ( ரீட் மனு) மேன்முறையீட்டு நீதிமன்றில்  நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த ஜூன் 25 ஆம் திகதி உயர் நீதிமன்றில் கருணா அம்மானின் கருத்துக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவினை தாக்கல் செய்த, கடுவலை நகர சபையின் உறுப்பினரும் பகுதி நேர வகுப்பு ஆசிரியருமான போசெத் கலஹேபத்திரண குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஓரே இரவில் இரண்டாயிரம், மூவாயிரம் இராணுவ உறுப்பினர்களைக் கொன்ற தாம், கொரோனா தொற்றை விட  ஆபத்தானவர் என கருணா வெளியிட்ட கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி ஜலித் விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் பிரதிவாதிகளாக கருணா அம்மானும், சட்ட மா அதிபரும், பதில் பொலிஸ் மா அதிபரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது வெளியிடப்பட்ட அந்தக் கருத்தின் மூலம் அவர் சமூகக் கொலைக்குற்றவாளி என்பது உறுதியாகியுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்தக் கருத்தை ஒப்புதல் வாக்குமூலமாகக் கருதி அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாட்சிகள்  கட்டளைச் சட்டம், குற்றவியல் தண்டனைச் சட்டம், பயங்கரவாத தடை சட்டம் , சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச இணக்கப்பாட்டு  சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு  குறித்த ரீட் மனுவில் கோரப்பட்டுள்ளது. அத்துடன் கருணாவின் கருத்துக்கள் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு 10 இலட்சம் ரூபா நட்ட ஈட்டையும் தமக்கு பெற்றுத் தருமாரு குறித்த ரீட் மனுவில் கோரப்பட்டுள்ளது. 

 

https://www.virakesari.lk/article/85581

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இவங்கட  தொல்லை  தாங்கமுடியல சாமி

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நியுசிலாந்தில் எம்மை விட நல்ல சிஸ்டம் என கேள்வி பட்டுள்ளேன். ஸ்பெசல் டிரீட்மெண்ட் இல்லை. ஆனால், இங்கே ஆசிய/அப்பிரிக்க இனத்தவரின் மத்தியில் கொரோனா இறப்பு வீதம் வெள்ளையினத்தோரை விட மிக அதிகம். இதை பற்றி ஒரு விசாரணையும் நடந்தது. அதில் வாழ்கை முறை உட்பட சில காரணங்கள் இந்த இறப்பு வீத அதிகரிப்புக்கு காரணம் என கூறப்பட்டது.  விட்டமின் டி குறைபாட்டை கூறாவிடிலும், ஆசிய-ஆபிரிக்க இனத்தவர்கள் தோல் விட்டமின் டியை தொகுக்கும் efficiency வெள்ளை இன தோலை விட குறைவு என்பது பரவலாக நம்ப படுகிறது. விட்டமின் டி குறைபாடு உள்ளவர்களில் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதும் இப்போ வரும் பூர்வாங்க தகவல்களில் தெரிகிறது. ஆகவே ஜி பி சர்ஜரிக்கு போன் போட்டு நான் ஆசிய இனத்தவர், எனக்கு விட்டமின் டி குறைபாடு இருக்கிறது என சந்தேகிக்கிறேன் என்று சொன்னால் - விரைவாக ரத்த பரிசோதனை அப்பாய்மெண்ட் தருகிறார்கள்.  இல்லாவிட்டால், நீ இள வயது/ ஒரு பிரச்ச்னையும் இல்லை எனவே ரத்த பரிசோதனை தேவையில்லை என தட்டி கழிக்க கூடும். 
  • கொஞ்சம் அரசியலை படிச்சிட்டு வாறன். அப்பத்தான் உங்களோட சண்டை போடலாம். இல்லையென்றால் நீங்கள் என்னை வச்சு செய்திடுவீங்கள்.   
  • கிழக்கில் ஹர்த்தால் பிசுபிசுத்தது வ.சக்தி, வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எம்.அஹமட் அனாம், கனகராசா சரவணன், ஆர்.ஜெயஸ்ரீராம், பாறுக் ஷிஹான், வி.சுகிர்தகுமார், எப்.முபாரக் தமிழ்த் தேசிய கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து, வடக்கு, கிழக்கு முழுவதிலும் இன்று (28) ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு விடுத்திருந்த கோரிக்கைக்கமைய, கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் மாத்திரம், கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு, ஒத்துழைப்பு வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், உள்ளுர் மற்றும் வெளியூர்களுக்கான போக்குவரத்துச்  சேவைகள் இடம்பெற்றன. உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகி திலீபனின் நினைவு தினத்தை அனுஸ்டிக்க அரசாங்கம் அனுமதி மறுத்தமையைக் கண்டித்து முன்னெடுக்கப்பட்ட இந்த ஹர்த்தால், கிழக்கின் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் முழுமையாக முன்னெடுக்கப்படாத நிலைமையே காணப்பட்டது. தமிழ் மக்களின் இனத்துவ அடையாளம், நில உரிமை, சமய மற்றும் கலாசார உரிமைகள் தீவிரமாக மறுக்கப்பட்டு வரும் நிலையில், மரணித்த எமது உறவுகளை நினைவுகூரல் உரிமையை வலியுறுத்தியும் இதன் மறுதலிப்பு தீவிரமாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதற்கு எதிராகவும், தமிழ் இனம் தனது ஆட்சேபனையை வெளிக்காட்டும் முகமாக, இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், இந்த அழைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோறளைப்பற்று பிரதேச மக்களால், இன்று  வாழைச்சேனை பொலிஸ் நிலையச் சந்தியில் போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/கழககல-ஹரததல-பசபசததத/73-256050
  • யாயினி பாடசாலைகளைத் திறந்து வைத்து கூத்தடிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டை வைக்கமுடியாது. நீண்ட காலத்திற்கு தடுப்பு மருந்து இல்லாத நோயாக இருக்கப் போகிற கோவிட்- 19 இற்கு முகங்கொடுக்க பழக்கப்படுத்தப்படுகிறார்கள் என்றே நினைக்கிறேன். தொடர்ச்சியாக வேறெங்கும் இல்லாத அளவுக்கு மக்கள் பாதுகாப்புக்காக நிறைய பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் கிடுகிடுவென்று கீழ்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நோயை எதிர்கொள்ளும் திராணியை உருவாக்கவில்லை என்றால் அடுத்த வருடம் அரச உதவிப்பணமும் நிறுத்தப்படும்போது மக்கம் மிகவும் நெருக்கடியைச் சந்திப்பார்கள். இப்போதே விலைவாசி ஏற்றம் விழிபிதுங்க வைக்கிறது. பல நிறுவனங்கள் வங்குரோத்து நிலைக்கு சென்று விட்டன. அன்றாட வாழ்க்கை முறை முடக்கத்தால் பலர் வருமானம் இழந்த நிலையில் தொழிலகங்களை இழுத்து மூடிவிட்டார்கள். இயல்பு நிலைக்கு அன்றாட வாழ்வு திரும்பாவிட்டாலும் ஓரளவுக்காவது இவற்றை திருப்ப எத்தனிக்கிறார்கள். என் வீட்டுக்கு முன்னால் இருக்கும் குடும்பம் வேலைக்குச் செல்வதில்லை, பாடசாலை போவதில்லை ஆனால் அவர்களுக்கு கோவிட் -19 எப்படி வந்தது என்று அவர்களுக்கு விளக்கமில்லை வீட்டுக்குள் மூடிக்கொண்டு இருந்தாலும் இந்தப்பிரச்சனை தீராது. எதிர்ப்பாற்றலை நாம்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.  இதற்காகத்தான் பாடசாலைகள் திறக்கப்படுகின்றன. பாடசாலைகள் யாரையும் வரும்படி வற்புறுத்தவில்லை. ஒன்லைனில் கற்கக்கூடிய வசதியையும் வழஙகுகிறார்கள். எதிர்ப்பாற்றலை வளர்க்கும் எண்ணம் உள்ளவர்கள் அங்கு செல்கிறார்கள். அவ்வளவே
  • Editorial   / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 04:38 - 0     - 51 AddThis Sharing Buttons Share to FacebookFacebookShare to TwitterTwitterShare to WhatsAppWhatsApp பாறுக் ஷிஹான் 2014.12.26 இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தால், அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகைக்காடு பகுதியில் தனது மகனை இழந்த அபுசாலி சித்தி ஹமாலியா என்ற பெண், 16 வருடங்களுக்கு பின்னர் மகனைக் கண்டுபிடித்துள்ளார். சுனாமி அனர்த்தத்தில் 05 வயதில் காணாமல் போன றஸீன் முஹம்மட் அக்ரம் றிஸ்கான் (வயது 21) எனும் இளைஞனே 16 வருடங்களின் பின்னர் இவ்வாறு தனது தாயாருடன் இணைந்துள்ளார். சுனாமி அனர்த்தத்தின் போது சிற்றூழியராக வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்ததாகவும்  வீடு சென்று பார்த்த போது தனது மகனைக் காணாது கதறியதாக, அபுசாலி சித்தி ஹமாலியா தெரிவித்தார். எனினும், பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இன்று தனது மகன் தன்னுடன் இணைந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார். தனது விடா முயற்சியால், அம்பாறை மாவட்டத்தின் புற நகர் பகுதிகளில், மகனின் சிறுபாராய புகைப்படத்துடன் மகனைத் தேடி அலைந்தமையால் மகன் படிக்கும் பாடசாலையைக் கண்டறிந்ததாகவும் சிங்களப் பாடசாலையொன்றில், நான் பெயரிட்ட அதே பெயருடன் மகன் கல்வி கற்றுக்கொண்டிருந்தார் என்றும் அவர் தெரிவித்தார். இன்று விரும்பி என்னுடன் வந்து இணைந்துள்ள எனது மகனை வளர்த்தவர்கள் எப்போதும் எந்த நேரமும் மகனை சந்திப்பதற்கு வருகை தந்தாலும் நான் ஆட்சேபனை செய்யப் போவதில்லை எனவும் மேலும் கூறினார் http://www.tamilmirror.lk/அம்பாறை/சனமயல-கணமல-பன-மகனடன-மணடம-இணநத-தய/74-256055
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.