Jump to content

லாக் டவுனும் எடைக்குறைப்பும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லாக் டவுனும் எடைக்குறைப்பும்

ஆர். அபிலாஷ்

 

இந்த லாக்டவுனில் சிலர் பிரபலங்கள் மூச்சைப் பிடித்து டயட்இருந்து எடை குறைத்து அந்த எப்படி இருந்த நான் இப்படிஆயிட்டேனே படங்களை இன்ஸ்டாவில் பதிவேற்றில் பரபரப்பைஏற்படுத்த இன்னும் பல பிரபலமல்லாதவர்களும் கூட தங்கள்உணவுப்பழக்கம், எடை குறைப்பு ஆகியவற்றில் மிகுந்த அக்கறைஎடுத்து வருவதைப் பார்க்கிறேன். அவர்களிடம் ஏன் இந்த திடீர்லட்சியம், திடீர் தன்முனைப்பு, வெறி எனக் கேட்டால் அவர்கள்பொதுவாக சொல்வது லாக்டவுனில் வெளியே செல்லத்தேவையில்லை, வீட்டு உணவை உண்ணலாம், கட்டுப்பாடாய்இருக்கலாம், அது எளிதாக இருக்கிறது என்பது. இதை ரிவர்ஸில்பார்த்தால் வெளியே அதிகம் செல்வது, அதனாலே வெளி உணவைகட்டுப்பாடின்றி புசிப்பது எடை அதிகமாகக் காரணமாகிறது.

 இந்த தரப்பு எல்லாருக்கும் பொருந்தி வராது - என்னை எடுத்துக்கொள்ளுங்கள்; லாக்டவுனில் என் எடை அதிகரித்து விட்டது. இத்தனைக்கும் நாம் மிகக் கட்டுப்பாடாக சாப்பிட்டேன். ஏனென்றால் லாக்டவுனுடன் நான் அசைவது அப்படியே நின்றுவிட்டது. (அதன் பிறகு நான் கிரித்திகாதரனின் பரிந்துரைப்படிநனிசைவ  டயட் இருந்து எடையை குறைத்தது வேறு கதை.) இன்னும் சிலருக்கு வேறு பல சிக்கல்கள் இருக்கலாம். பொதுவாகவெளியே போவது நமது ஆரோக்கியத்திற்கு உலை வைக்கிறதுஎனும் ஒரு கருத்தை எடுத்துக் கொண்டால் அது சில சுவாரஸ்யமானமுடிவுகளைத் தருகிறது:

 

 

1) பஜ்ஜி, சொஜ்ஜி, பர்கர் என டீ வேளையில் தின்றவர்கள், கிடைக்கும் வாய்ப்பிலெல்லாம் பிரியாணியை முழுங்கியவர்கள், ஓட்டலில் அதிக எண்ணெய், மைதாமாவால் செய்யப்பட்டபண்டங்களை அதிகமாய் உண்டவர்கள் இப்போது அதெல்லாம்கிடைக்காமல் வாழ்க்கையில் முதன்முதலாக எளிய வீட்டுஉணவுடன் திருப்திப்படுகிறார்கள். (சிலர் வெளியே வாங்கி வந்துகொறிப்பது வேறு விசயம்.) எனில் வெளி உலகம் நம்மை அதிக எடைபோடச் செய்து பல மெட்டோபோலிக் வியாதிகளுக்குவழிவகுக்கிறதா?

 

2) இந்த eating out கலாச்சாரமே இந்தியாவில் கடந்த இருபதுவருடங்களில் வந்தது. அமெரிக்கர்களுக்கு இது வெகுமுன்பேஅறிமுகமாகி விட்டது. Fast Food Nation என்ற தனது நூலில் எரிக்ஸ்குலோசர் எப்படி அமெரிக்காவில் (முன்பிருந்த ரயில் பாதைகளைஒழித்து) பரவலாக சாலைகள் அமைக்கப்பட்டது, எப்படி அதுகார்களை எல்லாருமே வாங்குவதற்கு முன்கூறாக அமைந்தது, இதனால் மக்கள் அதிகமாய் காரில் பயணிக்க துரித உணவுகலாச்சாரம் அமெரிக்க அன்றாட வாழ்க்கையில் நுழைந்தது எனவிளக்குகிறார். இந்த துரித உணவுப் பழக்கம் அமெரிக்கர்களில்கணிசமானோரை விரைவில் அதிக எடை கொண்டவர்களாக, மெட்டோபோலிக் நோய்களால் அவதிப்படுகிறவர்களாக மாற்றியது. பின்னர் இவர்களுக்கு சிகிச்சை அளித்த, மருந்துகள் கண்டுபிடிக்கபல புதிய ஆய்வாளர்கள், கார்ப்பரேட் மருத்துவர்கள்தோன்றினார்கள். அதாவது நோயைத் தோற்றுவித்ததும் அதற்குமருந்துகளை கண்டுபிடித்து சிகிச்சைகளை வழங்கிகோடானுகோடி மதிக்கத்தக்க வணிகமாக மருத்துவத்தைமாற்றினது வரை ஒவ்வொன்றுக்கும் பேராசை மிக்ககார்ப்பரேட்டுகளே காரணம். ஆம், போக்குவரத்துக்கானகட்டமைப்புகள் வளர்ச்சிக்கு அவசியமே - ஆனால் மக்கள்கார்களை அதிகம் வாங்கும்படி நெருக்கடி அளிக்கபொதுப்போக்குவரத்தை ஒழித்து, அடுத்து வெளியே அதிகம் இருக்கநேரும் மக்களை தூண்டிலிட்டு சரியாக துரித உணவுகளுக்குஅடிமையாக்குவது எந்த வகையான வளர்ச்சி? கட்டற்ற சந்தைவணிகத்தின் மிகப்பெரிய சிக்கல் இது. இந்தியாவில் கடந்த இருபத்தாண்டுகளில் இதே வரலாறு தான் கார்ப்பரேட்டுகளால்நிகழ்த்தப்படுகிறது

 

3) இங்கு ஏழைகளும் மத்திய வர்க்கமும் அதிகம், மக்கள் தொகைஅமெரிக்காவை விட பல மடங்கு பெரிது என்பதால் நம்மை அவ்வளவுதுரிதமாக அடிமையாக்க முடியவில்லை. இங்கு மத்தியவர்க்கத்துக்கு ஏற்றபடியே வெளி உணவுக் கலாச்சாரம் தோன்றியது; அது நிச்சயம் அமெரிக்க உணவுப்பண்பாட்டுக்கு இணையாக நம்உடல் நலத்தை சீரழிக்கிறது எனலாம். இன்று பல மாணவர்கள்காலை உணவாக சமோசா சாப்பிடுவதை நான் வியப்பாகப்பார்க்கிறேன். முன்பு என் ஊரில் சில வீடுகளில் தான் சர்க்கரைஇருக்கும், பலர் கருப்பட்டி பயன்படுத்துவார்கள். இன்றோ நாம்முன்பை விட நூறு மடங்கு அதிக சர்க்கரையை உணவுகள் வழி சிறுசிறுக ஒரே நாளில் எடுத்துக் கொள்கிறோம். எண்ணெய்யை விடசர்க்கரையே மிகப்பெரிய உயிர்க்கொல்லி என இன்றுஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதுவே நமது இன்றையசர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ரத்தக்கொழுப்பு எனஇதயத்துக்கு உலை வைக்கும் பல வியாதிகளுக்குக் காரணம்என்றால் இதற்கு யார் பொறுப்பாக வேண்டும் - சமூகமாதனிமனிதனா?

4) நாம் ஆரோக்கியம் பற்றி அதிகமும் பரிந்துரைகளுக்கு நாடுவதுமருத்துவர்களை. அவர்களோ அமெரிக்க கார்ப்பரேட்கலாச்சாரத்துக்கு அடிமைகள். சமூக கட்டமைப்புகள்தனிமனிதனின் பழக்கங்களை வடிவமைப்பதைப் பற்றிசிந்திக்காதவர்கள். அவர்கள் குறைவாக அளவாக சாப்பிடுங்கள் எனத் திரும்பத் திரும்பக் கூறுகிறார்கள். ஆனால் ஊரே தவறாகசாப்பிடும் போது நீங்கள் மட்டும் எப்படி சரியாக உணவருந்த முடியும்? மனிதன் ஒரு சமூக விலங்கு அல்லவா? “பிரியாணி சாப்டுவோமா?” என நண்பனோ காதலியோ கேட்கும் போது ஒரு தனிமனிதன்இல்லை நான் காய்கனிகள் மட்டும் சாப்டுறேன் என சொல்லமுடியுமா? உணவு மனிதனை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமானகுறியீடு. ஒன்றாக சாப்பிட்டே வளர்ந்தவர்கள் நாம்

5) ஒருவர் பசிக்கிறது என வெளியே கிளம்பினால் ஆரோக்கியமானஉணவுக்கடைகள் என எதுவுமே அவர் கண்ணில் படாது. கிடைப்பதைத் தானே அவர் சாப்பிட முடியும். அரசு ஒரு பக்கம் உடல்நலத்துக்கு ஊறான உணவுகளை ஊக்கப்படுத்தி விட்டு, அதை நம்பிபல தொழில்கள் செயல்படும் நிலையை ஏற்படுத்தி விட்டு எதைசாப்பிடுவது என்பது உங்கள் பொறுப்பு என்பது பொதுவிடத்தில்சாராயத்தை விற்றுவிட்டு குடிக்காதீர்கள், குடி உடலுக்கு, சமூகத்துக்குக் கேடு என விளம்பரம் செய்வதைப் போல. ஒருஉதாரணம் சொல்கிறேன் - சென்னையில் டாஸ்மாக் உள்ளதால், தனியார் பார்கள் குறைவு என்பதால், டாஸ்மாக் ஒரு குறிப்பிட்டநேரத்திலேயே இயங்கும் என்பதால் அங்கு மக்கள் குடிப்பதில் ஒருசிறிய கட்டுப்பாடு உள்ளது (இந்த நெருக்கடியை ஒற்றை வரியாகவைத்து தானே இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?” எடுக்கப்பட்டது.) ஆனால் பெங்களூரில் தனியார் தான் மதுவைவிற்கிறது, கடைகள் இரவு பன்னிரெண்டு வரை, சில நேரம் அதற்குமேல் கூடத் திறந்திருக்கும். ஒரே தெருவில் மூன்று, நான்குமதுக்கடைகள் இருப்பது சாதாரணம். இதோடு பப்கள், அவைகொண்டாடப்படும் ஒரு போலிக் கலாச்சாரம் வேறு. இங்குசென்னையை விட மக்கள் ஐம்பது மடங்கு அதிகம் குடிக்கிறார்கள்என என் அனுபவத்தில் சொல்வேன். ஏனென்றால் இங்கே மதுவைவாங்குவது ஒரு பாட்டில் தண்ணீரை வாங்குவதைப் போல. இந்தலாக் டவுனின் போது கூட உடற்பயிற்சி நிலையங்கள், கல்விநிலையங்களைத் திறக்காத அரசு எவ்வளவு அவசரமாகமதுக்கடைகளைத் திறந்தது பார்த்தீர்களா?

 

6) ஒரு பொறுப்பான அரசு மது, துரித உணவு, ஆரோக்கியமற்றஉணவு போன்றவற்றைத் தடை செய்ய வேண்டும் எனச் சொல்லமாட்டேன். ஆனால் இவற்றின் மீது பல மடங்கு அதிக வரியைப்போட்டால் ஆரோக்கியமற்ற பல உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்வதை மக்கள் குறைப்பார்கள். மைதா விலையை கிலோமுப்பதில் இருந்து 200க்கு உயர்த்தலாம். இதையே ரீபைண்ட்ஆயிலுக்கும் சொல்லலாம். அதே போல துரித உணவுக் கடைகளைபெரிய மால்களில் மட்டுமே வைக்க வேண்டும் என சட்டமிடலாம். பொரித்த தின்பண்டங்களை பொதுவிடங்களில் விற்பதற்குகட்டுப்பாடு கொண்டு வரலாம். பதிலாக வேக வைத்த, பாரம்பரியஉணவுகளைக் கொண்டு வரச் சொல்லலாம். அதே நேரம்ஆரோக்கியமான உணவுகளுக்குத் தேவையான பொருட்களைபெருமளவில் விலைகுறைக்கலாம். இதை செயல்படுத்தினால் பத்தேஆண்டுகளில் கணிசமான மத்திய, மேல் மத்திய வர்க்கத்தினரின்உடல் நிலை சீராகி விடும், நாம் மருந்துகளை உண்பது, அறுவைசிகிச்சை செய்வது, டயட் இருப்பது எல்லாம் தேவையிருக்காது

7) இந்த விஷச் சூழலால் அதிகம் பாதிக்கப்படுவது மத்தியவர்க்கத்தினர் தான். அண்மையில் துர்க்கா ஸ்டாலினின் பேட்டிஒன்றைப் பார்த்தேன் - அதில் அவர் கலைஞர் தான் வாழ்ந்திருந்தபோது வெளி உணவுகளையோ உட்கொள்ள மாட்டார், அவர்மட்டுமல்ல குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் உணவருந்துவதைபழக்கமாகவே வைத்துள்ளார்கள் என்றார். பல பணக்காரர்கள்இப்படி புத்திசாலித்தனமாக கவனமாக இருக்கிறார்கள். கணவன்மனைவி இருவரும் மூன்று மணிநேரங்கள் பயணித்து, பத்து மணிநேரம் வேலை பார்க்க நேரும் மத்திய வர்க்க நிலையில்இருப்பவர்களுக்கு இது சுலபம் அல்ல

😎 அதாவது இன்றைய நவதாராளவாதப் பொருளாதாரம் நம்மைஅதிகமாய் பயணிக்க, அதிக நேரம் வேலை செய்து, அதிகமானபதற்றத்தில் இருக்கச் செய்து அதில் இருந்து விடுதலையாக துரிதஉணவுகளைப் புசிக்கவும் மது அருந்தவும் செய்கிறது. இது நம்மைமெதுவாகக் கொல்லும் விடம்

 

இந்த லாக் டவுன் காலம் இந்த உண்மையை நம் பொட்டில் அறைந்துபுரிய வைத்திருக்கிறது இந்த பெருந்தொற்று முடிந்ததும் நாம்மீண்டும் அந்த விஷச்சூழலுக்குள், மோசமாய் உண்ணும் சமூகஅழுத்தத்துக்குள் தள்ளப்படுவோம். டாக் டவுன் விலக்கப்பட்டதும், எந்தெந்த உணவுகளை எப்படி விற்கலாம், துரித உணவுகளைபொதுச்சமூகத்துக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு உடனேகிடைக்காமல் செய்வது, போக்குவரத்து இடர்களைக் குறைத்து, மக்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளாகவே வேலை பார்க்கும்படிசெய்வது, பாரம்பரியமில்லாத உணவுகளின் விலைகளைஅதிகப்படுத்தி அவற்றை மக்களிடம் இருந்து விலக்குவதுபோன்றவற்றை அரசு மட்டுமல்ல உணவகங்கள் நடத்துபவர்கள், பொதுமக்கள் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்

 

http://thiruttusavi.blogspot.com/2020/07/blog-post_9.html?m=1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.