Jump to content

திடுதிப்பென்று வேற்றுச்சேனை ஆலயத்திற்கு வாகனங்களில் வந்த பௌத்த தேரர்கள் - போலி நாடகம் என சந்தேகம்


Recommended Posts

வேற்றுச்சேனை கிராமம் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளது.

அங்கு வாழும் குடும்பங்கள் அனைத்தும் இந்து மதத்தினர்.

இங்கு இருக்கும் சக்திவாய்ந்த. அக்கோயிலுக்கு ஒரு நிலையான கட்டடம் இல்லை. இரண்டு உயரமான வேல்கள் உயரமான சீமெந்தினால் கட்டப்பட்ட மேடையில் நிலைக்குத்தாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அண்மையில் திடுதிப்பென்று வாகனங்களில் பௌத்த தேரர்கள் வந்தார்கள. இக்கோயிலும் அதைச் சூழவுள்ள காணியும் பௌத்த பீடத்திற்கு சொந்தமானவை எனக் கூறினார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் விபரித்துக் கூறினர்.

இந்தக் கோயில் ஒரு புராதன கோயில். எங்களது ஊர் வளர்ச்சியைக் காணாத ஒரு ஊர். ஒரு ஆரம்பப் பாடசாலை கூட இல்லை. இந்த கோயில்களும் அதன் தெய்வங்களுமே எமக்குத் துணை.

ஆண்டாண்டு காலமாக நாங்கள் வழிபாடு நடத்துகிறோம். வேளாண்மை அறுவடை முடிந்த பின் ஒரு பொங்கல் வைத்து வைரவரை வழிபடுவோம்.அது ஒரு விழா. அதற்கென குறிப்பிட்ட நாள் இருக்கிறது. அது ஆனி மாதத்தில் வரும் பூரணையாகும்.

வழக்கம் போல அன்றும் பூசை நடந்தது. திடுதிப்பென்று வாகனங்களில் பௌத்த தேரர்கள் வந்தார்கள. இக்கோயிலும் அதைச் சூழவுள்ள காணியும் பௌத்த பீடத்திற்கு சொந்தமானவை எனக் கூறினார்கள்.

நாங்கள் எங்களது கோயிலின் வரலாற்றைக் கூறினோம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அபேட்சகர் சாணக்கியனும் அங்கு வந்து விட்டார் அவர் நிலைமைகளை விபரித்தார். எமது கிராமத்தவர்கள் ஒன்றுதிரண்டு எங்களது எதிர்ப்பைத் தெரிவித்ததும் அவர்கள் திரும்பிச் சென்று விட்டனர்.

இதையடுத்து இக்கோயிலின் முன்னோடிகள் வெல்லாவெளி பொலிஸாரால் களவாஞ்சிகுடி நீதிமன்றத்தில் இனிமேல் இவ்விடயங்களில் தலையிடக் கூடாதென சிலருக்கு எதிராக தடையுத்தரவு பெறப்பட்டிருப்பதாக அறிய முடிந்தது.

இது பற்றி மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி வண.சுமனரத்ன தேரரைச் சநதித்து உண்மை நிலையை அறிய வினவிய போது அவர்,

“வெல்லாவெளி வேத்துச்சேனை கிராமத்தில் நடந்தேறிய விடயத்திற்கும் தனக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்றார்.

“பௌத்த மதத்தின் புராதன சின்னங்கள் இருந்தால் அதனை எப்படி அணுக வேண்டும் என்ற செயற்பாடுகள் பௌத்த துறவிகளுக்குத் தெரியாததல்ல. இப்படியான போலி நடவடிக்கைகளை யாருமே அனுமதிக்க முடியாது. நான் இவ்விடயத்தைக் கேள்விப்பட்டு பக்கத்தில் இருக்கும் சின்னவத்தை விகாராதிபதியோடு தொலைபேசியில் தொடர்பு கோண்டேன். சம்பவம் பற்றி விசாரித்தேன். அவரும் எனது நிலையிலேயே ஒன்றும் அறியாதவராக இருந்தார். ஆகையால் என்ன நடைபெறுகிறதென்று பார்ப்பதற்காக ஸ்தலத்திற்குச் சென்றேன்.

புதையல் தோண்டுபவர்களின் போலி நாடகமாக அது இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு அப்போதே தோன்றி விட்டது. ஆயினும் பொலிஸார் தலையிட்டிருந்ததால் அவற்றுள் நான் தலையிட விரும்பவில்லை. இதனை வேத்துச்சேனை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இது எனது கோரிக்கை”. இவ்வாறு கூறினார் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி வண.சுமனரத்ன தேரர்.

இதுபற்றி அப்பகுதி பிரதேச சபையின் தவைர் ரஜனி கருத்துத் தெரிவிக்கையில் “இக்கோயில் அமைந்துள்ள இடம் ஒரு பூர்வீகமானது. வேத்துச்சேனையை சேர்ந்த மு.அமுதன் என்பவருக்கு இக்காணி சொந்தமானது. இதற்கான உறுதி அவரிடம் உள்ளது. நடந்த சம்பவம் ஆச்சரியமானது. எனக்கு இவ்விடயத்தில் தலையிடக் கூடாதென நீதிமன்றத்தால் தடையுத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்” என்றார்.

அங்கு நடந்துள்ள சம்பவம் ஒரு போலி நாடகம் என்றுதான் மக்கள் தெரிவிக்கிறார்கள்.-

https://www.ibctamil.com/srilanka/80/146818

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் தமிழரசுகட்சியினால் சில நாடகங்கள் நடத்தப்பட்டு, மக்களுக்கு ஒரு அச்ச, கோப உணர்வை ஏற்படுத்தி தங்களை கீரோக்களாக காட்டி, இப்படி பல பிரச்சனைகள் வரும். அதை தடுக்க வேண்டுமானால் தங்களுக்கு வாக்குப் போடும்படி கேப்பதும், தங்கள் நாடகத்துக்கு சில பிக்குமாரை அழைத்து வருவதும் நடைபெறுகிறது. மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வாக்குச் சேர்ப்பதில் சிங்கள,  தமிழ் கட்சிகள் தாங்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கிறார்கள். சர்வதேச குற்ற விசாரணையை வலியுறுத்தும் மக்களை திசை திருப்புவதற்காக,  சிங்களம் தொல்பொருளியல் என்கிற நாடகம். வேலியே பயிரை மேய்வது போல தமிழ்த் தலைமைகளின் செயற்பாடுகள் அருவருக்கத் தக்கதே. 

Link to comment
Share on other sites

8 hours ago, போல் said:

“பௌத்த மதத்தின் புராதன சின்னங்கள் இருந்தால் அதனை எப்படி அணுக வேண்டும் என்ற செயற்பாடுகள் பௌத்த துறவிகளுக்குத் தெரியாததல்ல. இப்படியான போலி நடவடிக்கைகளை யாருமே அனுமதிக்க முடியாது. நான் இவ்விடயத்தைக் கேள்விப்பட்டு பக்கத்தில் இருக்கும் சின்னவத்தை விகாராதிபதியோடு தொலைபேசியில் தொடர்பு கோண்டேன். சம்பவம் பற்றி விசாரித்தேன். அவரும் எனது நிலையிலேயே ஒன்றும் அறியாதவராக இருந்தார். ஆகையால் என்ன நடைபெறுகிறதென்று பார்ப்பதற்காக ஸ்தலத்திற்குச் சென்றேன்.

இந்த பிக்கரின் கருத்தை பார்த்தல் காணி கொள்ளையடிக்கும் கும்பலா இருக்கும் எனத் தோணுது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/7/2020 at 12:36, போல் said:

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அபேட்சகர் சாணக்கியனும் அங்கு வந்து விட்டார் அவர் நிலைமைகளை விபரித்தார். எமது கிராமத்தவர்கள் ஒன்றுதிரண்டு எங்களது எதிர்ப்பைத் தெரிவித்ததும் அவர்கள் திரும்பிச் சென்று விட்டனர்.

வாக்குகொள்ளை அடிக்கும் கூட்டம். நாடகத்தின் இயக்குனர் அழைத்துவந்த குழு. சிங்கள குடியேற்றங்களையும் தடுத்திருக்கலாமே, அதை ஏன் தடுக்க முடியாமற் போனது?  மாதன முத்தா கதை நல்லாய் இருக்கு.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.