Jump to content

சிங்களவர்கள்தான் வந்தேறி குடிகள்: விக்கிரமபாகுவின் கருத்துக்கு தி.மு.க பாராட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

karunarathna.jpg

சிங்களவர்கள்தான் வந்தேறி குடிகள்: விக்கிரமபாகுவின் கருத்துக்கு தி.மு.க பாராட்டு

இலங்கையிலுள்ள சிங்களவர்கள்தான் வந்தேறி குடிகளாவர் இதனை என்னால் நிரூபித்துக்காட்ட முடியுமென நவ சமசமாஜக் கட்சியின் தலைவர்  விக்கிரமபாகு கருணாரத்தின தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையின் கருணாரத்தினவின் இத்தகைய துணிச்சலான கருத்துக்கு, திராவிட முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளர் கே. எஸ். இராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்டபாக கே.எஸ்.இராதாகிருஷ்ணன் மேலும் கூறியுள்ளதாவது, “விக்கிரமபாகு கருணாரத்தின சிங்களராக இருந்தாலும் தமிழர்களுக்காகக் குரல்கொடுத்து வருகின்ற ஒருவர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற டெசோ மாநாட்டுக்கு தி.மு.க.வினால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த அழைப்பினை ஏற்று, டெசோ மாநாட்டிற்கு சென்னைக்கு வருவதற்காக கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தப்போது, ராஜபக்ஷ அரசு அவரைத் தடுக்க நினைத்தது.

ஆனாலும் விக்கிரமபாகு கருணாரத்தின அதனையும் மீறி குறித்த மாநாட்டுக்கு வருகை தந்தார்.

இவ்வாறு மாநாடு முடிந்து, இலங்கைக்கு சென்றப்போது, அப்போதைய அரசு அவரை தாக்கி, கருப்புக் கொடி அசைத்து எதிர்ப்பு தெரிவித்தது.

இத்தகையவர் தற்போது, சிங்களவர்கள்தான் இலங்கையில் வந்தேறிகள் என்றும் அதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறு எவருக்கும் அஞ்சாமல் அவர் துணிச்சலாக கருத்து வெளியிட்டுள்ளமை பாராட்டுக்குரியது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/சிங்களவர்கள்தான்-வந்தேற/

Link to comment
Share on other sites

6 hours ago, தமிழ் சிறி said:

சிங்களவர்கள்தான் வந்தேறி குடிகள்: விக்கிரமபாகுவின் கருத்துக்கு தி.மு.க பாராட்டு

நாங்களும் பாராட்டுகிறோம்!

Link to comment
Share on other sites

பிக்குகள் குய்யோ முறையோ என விக்கிரமபாகு மீது பாயப்போகிறார்கள்.  

விக்கிரமபாகு போன்றவர்களை தமிழர் கட்சிகள் தமது வேட்பாளர் ஆக்கலாமே??

Link to comment
Share on other sites

3 hours ago, nunavilan said:

விக்கிரமபாகு போன்றவர்களை தமிழர் கட்சிகள் தமது வேட்பாளர் ஆக்கலாமே??

தாங்கள் தோத்து போய்டுவம் என்கிற பயத்துல இது எப்பிடி சாத்தியமாகும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அரசியலில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாதவர். அதனால் இப்படி உண்மையை பேச முடிகிறது.

ஆனால் சிங்களவர்களின் வாக்கை நம்பி வாழ்பவர்கள்.. நிச்சயம் அவர்களை மகிழ்விக்க.. ஒன்று தமிழர்களை துன்புறுத்தனும்.. அல்லது அடிமைப்படுத்திக்காட்டனும்.. இல்லை என்றால்.. தமிழர்களை அழித்துக் காட்ட வேண்டும்.

ஒரு முறை யூலைக் கலவரத்தை கடந்து பின்  ஜே ஆர் சொன்னது... தமிழர்களின் துன்பம்.. கோரிக்கை பற்றி எனக்கு கவலை ஆனால் வடக்கில் தமிழர்கள் துன்பத்தில் இருப்பதை தான் சிங்களவர்கள் விரும்புகிறார்கள். அதுதான் முக்கியம் எனக்கு என்று.

இதே தான் எல்லா சிங்கள வாக்குகளை நம்பி இருக்கும்.. சிங்கள பெளத்த தலைமைகளினதும் சிந்தனை ஆகும்.

இதில் மாற்றத்தை எந்தக் கொம்பனாலும் கொண்டு வர முடியாது. கொண்டு வருவேன் என்று சொல்லும் தமிழர்களை நம்பவே கூடாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

திராவிட முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளர் கே. எஸ். இராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆதி திராவிடர் & பட்டியல் பிரிவு விவகாரம் - ஆ.ராசா

பெண்கள் பிரிவு & மகளிர் அணி - கனி மொழி

ரெல்லி விவகாரம் & சுத்துமாத்து - பாலு

கலை இலக்கியம் & பெண்ணுரிமை - தமிழச்சி தங்க பாண்டியன்

தமிழ் தேசிய எதிர்ப்பு & ரூவிட்டர் இணைய தள அலப்பறைகள்  - பிரசன்னா.

அந்த வரிசையில் முன்னர் ஈழ விவகாரத்தை "கவனித்து" வந்த கனி மொழி விலக்கபட்டு புதியதாக இவர் ஒப்பொயின்ற் செய்திருப்பார்கள் போல கிடக்கு .. சமீப காலமாக இவரிண்ட குரல் கேட்குது..

Link to comment
Share on other sites

20 hours ago, தமிழ் சிறி said:

நவ சமசமாஜக் கட்சியின் தலைவர்  விக்கிரமபாகு கருணாரத்தின தெரிவித்துள்ளார்.

சிங்கள-பௌத்தர்கள் மத்தியில் வித்தியாசமான நல்ல மனிதராக இன்றுவரை திகழ்கிறார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்குரியவர். ஆனால் ,இதனை எத்தனை ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் முன்வைத்து எதிர்வினையாற்றியுள்ளார்கள்?உண்மையைக்கூட யாரோ ஒருவர்தானே சொல்லவேண்டியுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.