• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
புரட்சிகர தமிழ்தேசியன்

இந்த 11 ஓப்ஸ்களை நீக்கம் செய்குக - கூகுள் எச்சரிக்கை.!

Recommended Posts

இந்த 11 ஓப்ஸ்களை நீக்கம் செய்குக  - கூகுள் எச்சரிக்கை.!

googlejokermalware-1594444347.jpg

வைரஸ், மால்வேர், சைபர் தாக்குதல், உஷார், எச்சரிக்கை என்று தான் இந்த ஆண்டு முழுவதும் செய்திகள் குவிந்துள்ளது. அப்படி இந்த பட்டியலில் தற்பொழுது புதிய மால்வேர் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகத் தனது தாக்குதலை நடத்தி வரும் யோக்கர் என்ற மால்வேர் தற்பொழுது மீண்டும் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது. உடனே இந்த ஓப்ஸ்களை உங்கள் போனில் இருந்து நீக்கிவிடுங்கள்.
யோக்கர் மால்வேர் தாக்குதல்

பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான செக் பாயிண்ட்டின் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஆண்ட்ராய்டு ஓப்ஸ் வழியாக ஸ்மார்ற் போன்களில் மால்வேரை செலுத்துவதன் மூலம் பயனர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் மற்றொரு மால்வேர் தாக்குதல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

யோக்கர் மால்வேர் என்ற மோசமான மால்வேர் மூலம் கூகிள் பிளேஸ்டோரில் உள்ள 11 ஓப்ஸ்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று இந்த பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

11 ஓப்ஸ்கள் கூகிளில் இருந்து நீக்கம்

பாதிக்கப்பட்ட 11 ஓப்ஸ்களையும் இந்நிறுவனம் அடையாளம் கண்டு கூகிள் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளது. கூகிள் நிறுவனம் கொக்கெற் மால்வேர் இருக்கும் தடயங்களை உறுதி செய்து தற்பொழுது பாதிக்கப்பட்ட 11 மொபைல் ஓப்ஸ்களையும் தனது கூகிள் பிளே ஸ்றோரில் இருந்து நீக்கம் செய்துள்ளது. கூகிள் நிறுவனம் இதற்கு முன்பும் யோக்கர் மால்வேரால் கடந்த 2017 ஆண்டு தாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

யோக்கர் மால்வேர் தாக்குதலை தீவிரமாக கண்காணிக்கும் கூகிள்

அப்போதிலிருந்தே, கூகிள் நிறுவனம் யோக்கர் மால்வேர் தாக்குதல்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. மீண்டும் யோக்கர் மால்வேர் தன் வேலையை ஒண்ட்ராய்டு பயனர்களிடம் காட்ட துவங்கியுள்ளது. பிளே ஸ்றோரில் தற்பொழுது இந்த மால்வேர் 11 ஓப்களுக்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடனே ரெலீட் செய்யுங்கள்

யோக்கர் மால்வேரால் பதிக்கப்பட்டுள்ள 11 ஓப்ஸ்களின் பட்டியலை கீழே கொடுத்துள்ளோம். இந்த பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு ஒப் உங்கள் ஸ்மாற் போனில் இருந்தால் கூட உங்களுக்கு ஆபத்து தான். ஆகையால், இந்த ஓப்ஸ்களை செக் செய்துவிட்டு, உங்கள் போனில் இந்த ஓப்கள் இருந்தால் உடனே நீக்கம் செய்யுங்கள்.

யோக்கர் மால்வேர் பாதிக்கப்பட்ட ஓப்ஸ்கள்

    com.imagecompress.android - காம்.இமேஜ்கம்ப்ரெஸ். ஒண்ட்ராய்டு
    com.contact.withme.texts - காம்.காண்டாக்ட்.வித்மீ.டெக்ஸ்ட்ஸ்
    com.hmvoice.friendsms - காம்.எச்எம்வாய்ஸ்.பிரண்ட்ஸ்எம்எஸ்
    com.relax.relaxation.androidsms - காம்.ரிலாக்ஸ்.ரிலாக்சேஷன்.ஆன்ட்ராய்டுஸ்எம்எஸ்
    com.cheery.message.sendsms -காம்.சீரி.மெசேஜ்.சென்ட்எஸ்எம்எஸ் (இரண்டு வெவ்வேறு இன்ஸ்டன்சஸ்)

ரெலீட் செய்வது தான் ஒரே பாதுகாப்பு

    com.peason.lovinglovemessage - காம்.பேஷன்.லாவ்விங்லவ்மெசேஜ்
    com.file.recovefiles - காம்.பைல்.ரீகோவ்ஃபைல்ஸ்
    com.LPlocker.lockapps - காம்.எல்பிலாக்கர்.லாக்ஆப்ஸ்
    com.remindme.alram - காம்.ரிமைண்டமி.அலாரம்
    com.training.memorygame - காம்.ட்ரைனிங்.மெமரிகேம்

https://tamil.gizbot.com/apps/google-play-store-removes-11-apps-infected-with-joker-malware-uninstall-them-immediately-026080.html

Share this post


Link to post
Share on other sites

தகவலுக்கு நன்றி 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • தமிழ்த் தேசியத்திற்கெதிராகவும், புலிகளுக்கெதிராகவும், அவர்களது போராட்டத்தினைக் கொச்சைப்படுத்தியும், சர்வதேசத்தில் தமிழர்களின் இருப்பைப் பலவீனப்படுத்தியும் சுமந்திரன் செய்துவந்த திருகுதாலங்களை ஆமோதித்துக்கொண்டு அக்கட்சியில் இருப்பதைக் காட்டிலும் வெளியேறுவதைத்தவிர வேறு வழிகளை அக்கட்சி கஜேந்திரனுக்கோ விக்னேஸ்வரனுக்கோ விட்டுவைக்கவில்லை.  தலைவர் கட்டிய கட்சியை, அவருக்கெதிராகவே திருப்பியது சுமந்திரனும் சம்பந்தனும்தான். இன்று தமிழ்த்தேசியம் அடைந்திருக்கும் இழிநிலைக்கு ஒற்றைக்காரணம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை, குறிப்பாக சுமந்திரன். இன்று கிழக்கு மாகாண மக்கள் கருணாக்களுக்கும், பிள்ளையான்களுக்கும் வாக்களிக்கக் காரணம் என்னவென்று தேடுங்கள். நிச்சயமாக கஜேந்திரனோ விக்னேஸ்வரனோ கிடையாது. வீரகேசரியில் வரும் கூத்தமைப்பிற்குச் சார்பான அறிக்கையினை மேற்கோள் காட்டவேண்டாம் கிருபன். நான் அதனைப் படித்துவிட்டேன். 
    • இவர்களின் கபடம் அப்பட்டமாகப் புரிகிறது. வங்காலையான், ரொபின்சன் குறூஸோ இப்படிப் பலபெயர்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், தலைவரின் பெயரையும், புலிகளின் கொடியினையும் பாவிக்கும் ஒருவர் எப்படி தலைவருக்கு எதிராகவும், புலிகளுக்கு எதிராகவும் இருக்க முடியும் என்பது. தமிழகத்திக் 50 ஆண்டுகள் ஆட்சிசெய்த தமிழரல்லாத வேற்றினத்தவர்களின் கைகளில் தமிழினம் அனுபவித்த இன்னல்கள் களையப்பட வேண்டுமென்பதில் உள்ள தவறென்ன? கருனாநிதியின் தனிப்பட்ட கோரிக்கைகூட புலிகளை அழிப்பதில் பங்களித்திருக்கின்றதென்பது இவர்கள் அறியாததல்ல (உபயம் : சிவ்ஷங்கர் மேனென் எழுதிய "தெரிவுகள்" - புலிகளின் தலைமை காப்பாற்றப்பட்டு, போராட்டம் தொடர்வதற்கான செயற்பாடுகளை மேற்குநாடுகள் முன்னெடுப்பதை கருனாநிதி உடபட்ட தமிழகத் தலைவர்கள் விரும்பவில்லையென்றும், அது தமது அரசியல் இருப்பிற்கு ஆபத்தாக முடியும் என்று அவர்கள் நம்பியதாகவும் சொல்லியிருக்கிறார்). கருனாநிதி எனும் தெலுங்கு இனத்தினைச் சேர்ந்த முதலமைச்சருக்குப் பதிலாக தமிழ் உணர்வுள்ள ஒரு முதலமைச்சர் இருந்திருந்தால் தமிழினக் கொலையினைத் தடுத்திருக்க முடியும் என்கிற நம்பிக்கை அவர்களுக்கிருக்கிறது. அதனால் தமிழர்கள் தமிழரை ஆளவேண்டும் என்று கேட்கின்றனர், இது தவறில்லையே? 
    • சுமந்திரன் மட்டுமல்ல,  கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன் போன்றோர் செய்யும் அரசியலும் ஆபத்தானது. தமிழ்த்தேசியம் என்ற குடைக்குள் ஒற்றுமையாக இயங்காமல் செய்யும்  உதிரி அரசியல் மிகவும் ஆபத்தானது. “ கூட்டமைப்பு அல்லது மக்களின் முன் எடுபடக்கூடிய பெரியதொரு சக்தி புலிகளின் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட அரசியலுக்கு எதிரான முகாமில் நிறுத்தப்பட்டது. சம்பந்தரும், அவரை தாங்கி நிற்கும் பிராந்திய சக்திகளுக்கும் இதுவொரு மிகச்சிறப்பான வாய்ப்பாகும். மெல்ல மெல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் அடிப்படையான கோரிக்கைளை கஜேந்திரகுமாரின் கோரிக்கைளாக்கிவிட்டு மலிவான, பலவீனமான நாளாந்தம் எதிர்வினையாற்றும் சொல்லாடல்களுக்குள் தன்னை தொலைத்தது. கஜேந்திரகுமார் தலைமையிலான அணியோ தமக்குத் தாமே சூடிக்கொண்ட தமிழ்தேசியத்தின் காவலர்கள் என்ற சொல்லாடலை நிஐத்தில், மண்ணில் நிலைநிறுத்த முடியாது தத்தளித்தனர். அவர்கள் முன்னெடுத்த தமிழ் தேசிய போராட்ட அரசியலை கட்டியெழுப்பவில்லை. மனிதாபிமான இடைவெளிகளுக்குள் சென்று செயற்பட்டது. சர்வதேச விசாரணைகளுக்காக ஜெனிவாவிற்கு வந்துசெல்லும் இவர்களால், தமிழ் மக்களின் மனங்களில் கொடுங்குற்றங்கள் பற்றிய பிரஞ்ஞையை ஏற்படுத்த முடியவில்லை. அவர்கள் வெறுமனே மறுமுனையில் நின்று எதிர் வினையாற்றும் வாய்ச்சவாடல்காரார்களாக தங்களை நிலைநிறுத்தினர். அவர்கள் நம்பியிருந்த புலம்பெயர்ந்த தமிழர்களின் அரசியல் எழுச்சியென்பது அவர்களது புலம்பெயர் நாட்டு அரசியல் சகாக்களின் கைகளில் சிக்குண்டு சின்னபின்னப்படுத்தப்பட்ட போது அவர்கள் தமது அரசியலை மீள்பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். இந்த இரு வகையான தமிழ்தேசிய அரசியல் வாய்ப் பேச்சுக்களிடையே சிங்கள அரசும், கட்சிகளும், பிராந்தி சக்தியும் காய்களை ‘சிறப்பாக’ நகர்த்தியது. நேற்றைய போரில் காட்டிக்கொடுப்பவர்கள், கொலையாளிகள், துரோகிகளாக பேசப்பட்டவர்களை இன்றைய அரசியலில் மக்களின் நாளாந்த பிரச்சனைகளுக்கான தீர்வு வழங்குபவர்களாக்கியது. இயற்கை தலைமுறைகளை உருவாக்குகின்றது. அவற்றிற்கு கல்வி, வேலைவாய்ப்பு, வசதிகள் தேவைப்படும் என்ற இயங்கியலை எதிர்த்தரப்பு சரியாகக் கையாண்டது. அதன் விளைவாக மெல்லமெல்ல மாற்று வழிகளும் ஏற்றுக்கொள்ளத் தக்க வழியாகிவிட்டது. அதன் விளைவே இன்று அங்கயன்களின் எழுச்சியாகும்”   மிச்சத்தைதும் படியுங்கள்.