• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
Gowin

வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Recommended Posts

அரச-ஊழியர்கள்-பிரதி-தேர்தல்கள்-ஆணையாளர்-ஜனாதிபதித்-தேர்தல்.jpg

 எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளர் ஒருவருக்கு விடுமுறை தேவைப்படும் பட்சத்தில் அதனை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தொழில் தருநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1981ஆம் ஆண்டின் முதலாம் இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 122ஆம் பிரிவின் அடிப்படையில், வாக்காளர் ஒருவருக்கு தேவையான விடுமுறை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், வாக்களிப்பிற்காக விடுமுறை கோரி விண்ணப்பிக்கப்படும் பட்சத்தில், நான்கு ங்களுக்குக் குறையாத, சம்பளத்துடன் கூடிய, விடுமுறையொன்று வழங்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு விடுமுறை பெறுபவர்களின் விபரங்கள், வேலைத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாக்களிப்பதற்கான விடுமுறைக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாதிருத்தல், உரிய விடுமுறைக் காலத்தை வழங்காதிருத்தல், வாக்களிப்புக்கான விடுமுறைக்காக சம்பளம் வழங்காதிருத்தல், விடுமுறைக்காக விண்ணப்பிப்பதற்காக, வாக்காளர் அட்டையை சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தல் மற்றும் வாக்களிப்புக்காக விடுமுறை பெற்றால் தொழிலை இழக்க நேரிடும் என எச்சரித்தல் ஆகியன குறித்து கடந்த காலங்களில், முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், குறித்த விடயத்துக்காக ஊழியர் ஒருவரினால் கோரப்படும் விடுமுறையை வழங்காதிருத்தல், நீதவான் நீதிமன்றமொன்றில், வழக்குத் தாக்கல் செய்து தண்டனை வழங்கக்கூடியதொரு குற்றமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனது விடுமுறைக்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக, வாக்காளர் ஒருவர் வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்காளர் அட்டையை மீளக் கோரும் பட்சத்தில், அதனை உரியவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறும், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு,  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, தனக்கு விடுமுறை வழங்கப்படாமை குறித்து வாக்காளர் ஒருவர் மாவட்ட தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிக்கும் பட்சத்தில், மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் மற்றும் மாவட்ட தொழில் ஆணையாளர் ஆகியோரின் ஊடாக, உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/வாக்களிப்பதற்கான-சந்தர்/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • நடந்த விடயத்தை எழுதினால் சீப்பான கருத்தாளர். மற்றவர்களுக்கு சொம்பு துக்க முன்னர் கருத்தை எதிர் கொள்ள பழகுங்கள்.
  • பன்றித் தொழுவத்திலிருந்து கேட்கும் கூச்சல் 08/08/2020 இனியொரு...   எண்பதுகளில் ஆரம்பித்து ஈழப் போராட்டத்திற்காக ஐம்பதயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளை வட கிழக்கு மண் மக்களுக்காகத் தானம் செய்துள்ளது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் அந்தப் போராட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏக தலைமையில் இலங்கை அரசால் அழிக்கப்பட்டு பதினொரு வருடங்களின் பின்னரும் இலங்கை மீண்டும் மீண்டும் அழிக்கப்படுகிறது. ஈழப் போராட்டத்தின் எந்த எச்ச சொச்சங்களுமின்றி, போராடி மண்ணோடு மரணித்துப் போனவர்களதும், வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு தெருக்களில் அனாதரவாக்கப்பட்ட போராளிகளதும் தியாக வரலாறு பாராளுமன்ற தேர்தல் சகதிக்குள் மறைந்துபோனது. வாக்குப் பொறுக்கும் அரசியலின் ஒரு முனை வடக்குக் கிழக்கிலும் மறுமுனை புலம் பெயர் நாடுகளிலும் குடிகொண்டிருக்க ஒவ்வொரு கணமும் அழிவிற்கானதாக மாற்றமடைகிறது. உலகில் பல நாடுகளில் போராட்டங்கள் அழிவைச் சந்திருக்கின்றன, ஆனல் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் மட்டுமே எந்த வித மாற்றமும் இன்றி பாராளுமன்றம் என்ற பன்றித் தொழிவத்திற்குள் குடிகொண்டுள்ளது. பரபரப்பு தரும் நாளந்த செய்திகள், இந்திய சினிமாகள், தொலைக்காட்சித் தொடர்கள், வன்முறை, வாள்வெட்டு போன்றவை மட்டுமே நாளாந்த மக்களின் வாழ்வாகிவிட குறைந்த பட்ச அரசியல் விவாதங்கள் கூட நடப்பதில்லை. சமூகத்தில் தம்மைச் சுற்றி நடப்பவற்றைக் கூட தெரிந்துகொள்ளாமல் மக்களை இருளுக்குள் வைத்திருக்க புலம்பெயர் நாடுகளிலிருந்து நடத்தப்படும் சமூக வலைத்தள குழுக்கள், ஊடகங்கள், இந்தியத் தொலைக்காட்சிகளின் நாடகங்கள், இந்துத்துவ உள்ளீடுகள் போன்ற செயற்படுகின்றன. இத்தனை ஆயிரம் மக்களின் தியாகத்தின் பின்னர் புரட்சிகர அமைப்பல்ல, அடிப்படை ஜனநாயக அமைப்புக்கள் கூட தோன்றாமல் பார்த்துக்கொள்ள பாராளுமன்ற வாக்குப் பொறுக்கிகளின் வாக்குறுதிகளும் பயன்படுகின்றன. சரி, இவர்களை அரசியலிலிருந்த அகற்ற வேண்டும் என ஒரு முன்னைநாள் போராளிக்காவது தோன்றியதில்லையா என்ற கேள்வி பரவலாக முன்வைக்கப்படுகின்றது. விமர்சனம் சுய விமர்சனம் என்ற நமது பண்பாட்டுத் தொடர்ச்சி அழிக்கப்பட்டு மதங்களைப் போன்ற புனித சாயம் பூசப்பட்டதும் இதற்கு ஒரு காரணம் என்கிறார்கள். தமிழ்த் தேசிய வீர வசனம் பேசுவதில் நான் பெரிதா நீபெரிதா என்ற போராட்டம் வாக்குப் பொறுகிகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நின்று போய், ஆள் பிடிக்கும் பணியை ஆரம்பித்துள்ளனர். எங்காவது இடைவெளி கிடைத்தால் பாராளுமன்றதுள் புகுந்துவிடலாம் என்ற அங்கலாய்ப்பும் ஆதங்கமும் அத்தனை “மக்கள் பிரதிநிதிகள்” கண்களிலும் காணக்கிடைக்கிறது. பேரினவாத ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தில் அடிப்படை ஜனநாயக உரிமைகள்கூடக் கிடைக்காது என்று எண்பதுகளிலேயே முடிவிற்கு வந்தாகிற்று. வெறும் தனிமனித அதிகாரத்திற்காகவும், உடன்படிக்கைகளுக்காகவும், பணத்திற்காகவும் மட்டுமே பாராளுமன்றம் என்று தெரிந்திருந்தும் மாற்று வழிகளில் இல்லாமையால் மட்டுமே மக்கள் வாக்களிக்கிறார்கள்.   பாராளுமன்ற வாக்குப் பொறுக்கும் அரசியல்வாதிகள் தனி அடையாளம் கொண்ட குழுக்களாக உருவாகியிருக்கிறார்கள். அவர்கள் சமூக வலைத்தளங்களில் மட்டுமல்ல நாளந்த மக்களின் வாழ்க்கையிலும் மாற்று உலகத்தைச் சார்ந்த எதிரிகளாகவே கருதப்படுகின்றனர். இதையெல்லாம் குறித்து அரசியல் வாதிகள் கவலைகொள்வதில்லை. அவர்களுக்கு குறித்த எந்தக் கோட்பாடும் கிடையாது. சமூக நீதி, வர்க்கம், மக்கள் மத்தியிலான முரண்பாடுகள், பொருளாதாரம், ஒடுக்குமுறை போன்ற எந்த அறிவுமற்ற கோமாளிகளே அவர்கள். அவற்றை அறிந்துகொள்ளவும் அவர்கள் விரும்புவதில்லை. தேர்தலில் ராஜபக்ச குடும்பத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. சிங்கள பேரினவாதம் உச்ச நிலையை அடைந்துள்ளது. நாளை இலங்கையின் அரசியல் யாப்பு அவர்களுக்கு ஏற்றபடி மாற்றியமைக்கப்படலாம். திட்டமிட்ட குடியேற்றங்கள் நடத்தப்படலாம். அடுத்த தேர்தலில் வடக்கில் பெரும்பான்மையாக சிங்கள் மக்களே வாக்களிக்கும் நிலை தோன்றலாம். இவை குறித்தாவது பாராளுமன்றத்திற்கு தெரிவான யாராவது ஒருவராவது பேசியிருக்கிறாரா என்றால் ஏமாற்றமே மிஞ்சும். யார் துரோகி, யார் தியாகி என புலம் பெயர் நாடுகளிலிருந்து தீர்மானிக்க முயலும் எஜமானர் குழுக்களுக்கு இதைப்ப்ற்றிப் பேச நேரம் கிடைத்திருகாது. தான் வஞ்சிக்கப்பட்டுவிட்டேன் என கமராக்களின் முன்னால் கண்ணீர் வடிக்கும் சசிகலா ரவிராஜ் குடும்பம் இலங்கையின் இன்றைய ஆபத்து சூழ்ந்த காலப்பகுதியை எண்ணி சில செகண்ட்களாவது கண்ணீர் வடித்திருக்கலாம். அவரது வீட்டை நோக்கிப் படையெடுக்கும் அரசியல்வாதிகள் நாளைய ஆபத்தான எதிர்காலம் குறித்து சில நிமிடங்களாவது தமது நேரத்தைச் செலவிட்டிருக்கலாம். யுத்தம் நடந்த மண் என்பதற்கான எந்த அடையாளமும் இன்றி மயானத்திலிருந்து எழும் கூக்குரல் போல அப்பாவி மக்களின் செவிப்பறைகளை இவர்கள் சிதைத்துக்கொண்டிருக்கிறார்கள். “பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்- தோழர் லெனின்”     http://inioru.com/srilankanelection2020/
  • வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. என்பொடு கொம்பொடாமை இவைமார்பிலங்க எருதேறி யேழை யுடனே பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால் ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொ டுஆறும் உடனாய நாள்கள் அவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளைவிடைமேல் முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால் திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும் அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறைஓதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால் கொதியறு காலனங்கி நமனொடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும் அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுண ரோடும் உருமிடியு மின்னும் மிகையான பூதம் அவையும் அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. வாள்வரி அதள தாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும்உடனாய் நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால் கோளரி உழுவையோடு கொலையானைகேழல் கொடு நாகமோடு கரடி ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. செப்பிள முலைநன் மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வன் அடைவான் ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. வேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய் வான்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தன்னோடும் இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன் சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும் அலைகடல் மேரு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. கொத்தலர் குழலி யோடு விசையற்கு நல்கு குணமாய் வேட விகி்ர்தன் மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் புத்தரொடு அமணை வதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான முனிவன் தானுறு கோளும் நாளும் தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய் ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.    
  • டிக்டாக்கை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்டை தொடர்ந்து களமிறங்கிய டுவிட்டர்   வாஷிங்டன்: தென்சீன கடல் விவகாரம், வர்த்தகப்போரில் தொடங்கிய அமெரிக்க-சீன மோதல் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உச்சத்தை அடைந்தது.  வைரஸ் தொடர்பாக இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டி வந்தனர். இந்த மோதலை மேலும் அதிகரிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி தகவல்களை திருட முயற்சிப்பதாக சீனா மீது அமெரிக்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியது.    மேலும், அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகம் உளவு வேலையில் ஈடுபடுவதாக கூறி தூதரகத்தை உடனடியாக மூட உத்தரவிட்டது. ஹூஸ்டன் தூதரகம் மூடப்பட்ட சில நாட்களில் பதிலடி நடவடிக்கையாக வுகான் நகரில் அமெரிக்க தூதரகத்தை சீனா மூடியது. இதனால் இரு நாடுகௌக்கு இடையே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்த மோதலின் ஒரு பகுதியாக சீனாவின் பிரபலமான டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடைவிதிக்க அதிபர் டிரம்ப் சிறப்பு உத்தரவு பிறப்பித்தார். அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் வகையில் இந்த தடை அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். இதற்காக டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்சுக்கு 45 நாட்கள் அவகாசம் விதிக்கப்பட்டது. செப்டம்பர் 15-க்குள் டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திடம் விற்றுவிடவேண்டும் அல்லது தங்கள் நாட்டில் செயலிக்கு தடை விதிக்கப்படும் என டிரம்ப் காலக்கெடு விதித்தார். இதையடுத்து, டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதற்காக டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்சுடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது டுவிட்டர் நிறுவனமும் இந்த களத்தில் குதித்துள்ளது. டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்க டுவிட்டர் நிறுவனமும் முயற்சித்து வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது. டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்க மைக்ரோசாப்ட் மற்றும் டுவிட்டர் நிறுவனங்கள் முயற்சித்து வரும் நிலையில் நிதி அடிப்படையில் அதிக பலம்வாய்ந்த மைக்ரோசாப்டே டிக்டாக்கின் உரிமத்தை கைப்பற்ற அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   https://www.maalaimalar.com/news/topnews/2020/08/09155024/1769153/Twitter-and-TikTok-reportedly-have-had-talks-about.vpf  
  • நல்ல விடயம். ஆனால் சம் சும் & co வின் அருவருடியாக இல்லாது சுதந்திரமாக செயற்பட வேண்டும்