Jump to content

கொரோனா வைரஸ் ஒரு ஏமாற்று வேலை: கொரோனா பார்ட்டியில் கலந்து கொண்ட இளைஞர் பலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் ஒரு ஏமாற்று வேலை: கொரோனா பார்ட்டியில் கலந்து கொண்ட இளைஞர் பலி

கொரோனா வைரஸ் ஒரு ஏமாற்று வேலை: கொரோனா பார்ட்டியில் கலந்து கொண்ட இளைஞர் பலி

 

அமெரிக்காவில் கொரோனா பார்ட்டியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பதிவு: ஜூலை 13,  2020 14:36 PM
வாஷிங்டன்,

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதால் சமூக இடைவெளி, ஊரடங்கு மட்டுமே தற்காலிக தீர்வாக உள்ளது. மறுபுறம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் பெரு ஆகியவை முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு  வருகின்றன.

உலகம் முழுவதும் கொரோனாவால் 13,034,955 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7,581,525 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 58,928 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த 571,518 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் அதிக பாதிப்புகளைச் சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை, 33.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1.35 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில் கொரோனாவிற்கு  'மாஸ்க் அணிவதால் பயனில்லை என்றும், கொரோனா வைரஸ் ஒரு ஏமாற்று வேலை எல்லாம் வதந்தி என, அமெரிக்காவில் ஒரு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் தற்போது, அமெரிக்காவில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில், 'கொரோனா பார்ட்டி' நடத்தும் அபாயகரமான பழக்கம் திடீரென தொற்றி வருகிறது. கொரோனா பார்ட்டியில் பங்கேற்றதால் முதலில் தொற்று ஏற்படுபவருக்கு, பரிசு என்ற விபரீத அறிவிப்பும் வெளியிட்டு வருவது நெஞ்சை பத பதக்க வைத்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா பார்ட்டியில் கலந்து கொண்டு தொற்றுக்கு ஆளாகி உயிரையும் பறிகொடுத்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொற்று ஏற்பட்ட பின் அந்த இளைஞர், நான் தவறு செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன் என வீடியோ மூலம் வாக்குமூலம் அளித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெக்சாஸ் மாகாண சான்  பகுதியில் உள்ள மெத்தடிஸ்ட் என்ற  மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜேன் ஆப்பிள்பை கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 30 வயதாகும் அந்த இளைஞர் கொரோனா வைரஸ் என்பதே வதந்தி என நம்பியுள்ளார். அதனால் அவர், கொரோனா பார்ட்டியில் பங்கேற்றுள்ளார். கொரோனா பாதித்தவர்களும் அந்தப் பார்ட்டியில் பங்கேற்றதால் அவரும் தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இளைஞர்கள் கொரோனா தொற்றை அலட்சியப்படுத்தக்கூடாது எனத் தெரிவித்தார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/13143655/Man-30-Dies-After-Attending-a-Covid-Party-Texas-Hospital.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.