• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
uthayakumar

தமிழரும் தேர்தலும் தீர்வும்-பா.உதயன்

Recommended Posts

தமிழரும் தேர்தலும் தீர்வும்-பா.உதயன் 

இலங்கையின் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற இருக்கும் இந்த வேளையிலே தமிழர் தரப்பு பல கட்சிகளாக பிரிந்து நின்று போட்டி போடுகின்றனர் .தமிழ் மக்களின் பெரும் ஆதரவோடு கடந்த தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழர்களின் இனப்படுகொலை ரீதியாகவோ தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு ரீதியாகவோ தமிழர் தலைமை சர்வதேச ஆதரவை பெற முயற்சிக்காது சிங்கள பேரினவாதக் கட்சிகளுக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்காமல் இணக்க அரசியலையும் சமரச அரசியலையும் சரியான ராஜதந்திர அணுகுமுறை இன்றி விட்டுக்கொடுப்புகளுடன்  ஆதரவு வழங்கியதன் மூலம் இம் முறை தேர்தலில் இவர்களின் வாக்குப் பலம் குறைய வாய்ப்பு இருப்பதுபோல் தெரிகிறது.

சில பிரதிநிதிகளை இம் முறை இவர்கள் இழப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பது போல் தெரிகின்றது.இவர்களின் வாக்கு வங்கியின் சரிவோடு ஏனைய பல கட்சிகளில் இருந்து இம் முறை சில பிரதிநிதிகள் தெரிவாவதற்கான வாய்ப்புகளும் இருப்பது போல் தெரிகின்றது.ஆயுதப் போராட்டத்தை விமர்சித்தபடி ஜனநாயகப் பாதையை தெரிவு செய்த இவர்கள் சரியான பாதையில் பயணித்தார்களா என்பது கேள்விக்குறி தான்.பேரம் பேசும் பலத்தை நாம் இழந்திருந்தாலும் ஏதோ ஒரு வழியில் தமிழருக்கான நிரந்தர தீர்வுக்கான பாதையை தமிழர் தலைமை தேடவில்லை.

சிங்கள அரசு தாமாகவே முன் வந்து தமிழர் பிரச்சினைக்கு தீர்வு தராது என்பது வரலாறு கற்றுத் தந்த பாடம்.இருந்த போதும் தேர்தலை பகிஸ்கரிப்பதனாலேயோ ஒதுங்கி இருப்பதனாலேயோ எந்தப் பயனும் இல்லை.மாறாக தமிழர் தரப்பு பல தோல்விகளை சந்தித்ததும் வரலாறு கற்றுத்தந்த பாடமாக நினைத்து பிழைகளில் இருந்து சிலவற்றை கற்றுக் கொண்டு நமது வழியை மீண்டும் தேட வேண்டும்.எது எப்படி இருப்பினும் அந்த மக்களே தான் சரியான தீர்ப்பை வழங்க முடியும்.

எந்தத் தேர்தலையும் விட இம் முறைத் தேர்தலில் தான் தமிழர் தரப்பு பல கட்சிகளாக பிரிந்து ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு போட்டி போடுகின்றனர்.இலக்கு ஒன்றாக இருந்த போதிலும் ஏன் இப்படி பிரிவினை என்று தெரியவில்லை.தேசியம் என்பது சரியோ பிழையோ என்பதற்கு அப்பால் தமிழர் இலக்கு வெல்லும் வரை முற்போக்கு தேசியமாக இது சிதைந்து போகாது சிங்கள மக்களுக்குள் இருக்கும் ஐக்கியம் போல் தமிழர் தரப்பும் ஒற்றுமைப்பட்டிருக்கவேண்டும்.மாறாக இப்போ சிதைந்துபேய் இருக்கிறது.எல்லா இன மக்களிடமும் இல்லாத பெரும் குறை தமிழனிடம் மட்டும் தான் உண்டு. தமிழன் ஒருத்தனால் தான் தன் இனத்தையே தான் இழிவாகப் பேச முடியும்.இது தமிழரின் பெரும் பலவீனம் தான்.

எதையுமே தானாக எந்த உரிமையும் சிங்கள ஆதிக்கம் எமக்குத் தராது .இணக்க அரசியல் செய்தால் என்ன சமரச அரசியல் செய்தால் என்ன ஒன்றுக்குமே இறங்கி வர மாட்டார்கள்.அதற்காகா நாம் போராடாமல் இருக்க முடியாது.பல ஆண்டுகளாக போராடுகிறான் பாலைதீனியன் ஏதோ ஒரு நம்பிக்கையுடன்.சுய உரிமையை வென்று எடுத்த நாடுகளும் உண்டு.சுய உரிமைக்காய் தொடர்ந்து போராடும் மக்களும் உண்டு.

சிங்கள மக்களோடு சேர்ந்து எமது உரிமையையோடு வாழ விருப்பம் தான் ஆனால் அவர்கள் தான் எம்மை மரத்தில் படரும் கொடி என்கிறார்களே.எமக்கு எந்த பாரம்பரிய நிலமும்  சொந்தம் இல்லை என்கிறார்களே.இந்த நாடு சிங்களவருக்கு மட்டுமே சொந்தம் என்கிறார்களே.வரலாறுகளை எல்லாம் மாறுபட்டு திரித்து சொல்கிறார்களே.தமிழர் தலைவர் ஐயா சம்மந்தன் சிங்கக் கொடியை உயர்த்திப் பிடித்தாரே இணக்க அரசியலும் செய்தாரே பிரிக்கப் படாத இறைமை மிக்க இலங்கைக்குள் சுயாட்சி அடிப்படையிலான தீர்வொவோடு சேர்ந்து வாழ்கிறோம் என்றாரே.

தமிழர் தீர்வுக்கு அபிவிருத்தி மட்டும் போதும் என்கிறார்களே பழையவற்றையும் இனப்பிரசினையையும் மறந்து விடும்படி சொல்கிறார்களே 13+ க்கு மேல் தீர்வு வழங்குவோம் என்று எமக்கும் இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் உறுதிமொழி தந்தார்களே தந்தார்களா .உறவுகளை எல்லாம் தொலைத்து விட்டு கண்ணீரோடு அலைகிறார்களே தமிழ் தாய்மார்.இதற்கு எல்லாம் நீதியை யார் பெற்றுத் தருவார்.

தொடர்ந்தும் நாம் எமது அருகில் இருக்கும் இந்தியாவையே நம்பி வந்தோம் ஆனால் இந்தியாவோ தமது நலன் சார்ந்த வெளி விவகாரக் கொள்கையுடன் இன்று வரை ஈழத்தமிழருக்கான அவர்களின் விருப்பு அடிப்படையில் ஒரு நிரந்தரமான எந்தத் தீர்வையும் பெற்றுத்தரவில்லை.பயங்கரவாததுக்கு எதிரான போர் என்ற இலங்கை அரசின் கவடத்தனமான ராஜதந்திரத்தில் சிக்கி அழிவை சந்தித்த ஈழத்து தமிழருக்கு இந்து சமுத்திரத்தில் பலம் மிக்க நாடக இருக்கும் இந்தியா எதோ ஒரு வழியில் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுத் தந்திருக்க இவர்களால் நிச்சியமாக முடிந்திருக்கும்.

13ம் திருத்தத் சட்டம் கூடி இப்போ நீர்த்து போகும் அளவுக்கும் இதை அரசியல் அமைப்பில் இருந்து நீக்குவதற்கும் மக்கள் ஆணையை பெற அரசு முயற்சிக்கிறது.தமிழர்களின் அரசியல் தீர்வைப் பொறுத்தவரையில் எதற்குமே அசையாது இருக்கிறதே சிங்கள ஆதிக்கம்.அப்போ தமிழர் எப்படி இணக்க அரசியல் செய்வது.

சில தேசம் இந்தியாவால் உருவாகியது .அன்று தந்தை செல்வா கேட்ட சமஸ்டீ தீர்வை இந்தியா எமக்கு பெற்றுத்தர இலங்கை அரசுக்குக்கு அன்று அழுத்தம் கொடுத்து உதவியிருந்தால் இப்படி எல்லாம் சிதறி அழிந்து ஈழத்து தமிழன் போய் இருக்க மாட்டான். எம் வேதனைக்கு எம் அருகில் இருக்கும் இந்தியாவும் ஒரு காரணமே.அவர்கள் தந்த ஆயுதத்தையும் நாம் தூக்கி இருக்க வேண்டிய அவசியமும் இருந்திருக்காது அதேபோல் எம் சில தோல்விகளுக்கும் பிழைகளுக்கும் நாமம் காரணமாக இருந்திருக்கமாட்டோம்.விட்டு பிழைகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு சமாதானத்துக்கான பாதையை நேக்கி நாம் மீண்டும் நடக்க வேண்டும்.மீண்டும் இந்திய,சர்வதேசம்,புலம் பெயர் தமிழர் இந்த முக்கோண அரசியல் அழுத்தம் இல்லாமல் தமிழருக்கான ஓர் அரசியல் தீர்வைப் பெறுவது கடினமே.இந்தப் பாதையை இனி வரும் காலங்களில் தமிழர் தலைமை சரியாகக் கையாளவேண்டும்.

தேர்தல் முடிந்தவுடன் இதிலே எத்தனை பேர் அபிவிருத்தி என்று அரசாங்கத்துடன் சேர்வீர்களோ அமைச்சுப் பதவி எடுப்பீர்களோ அவர்கள் இப்பவே சேரலாம். பாவம்  மக்களின் வாக்கை வேண்டிவிட்டு வாக்குத் தவறாதீர்கள்.உங்களில் சிலர் உங்களை வளர்ப்பவர் எங்களை அல்ல.அதிகாரப் பகிர்வுக்காய் முதலில் உழையுங்கள் அபிவிருத்தியை தொடருங்கள்.அதிகாரம் இல்லாத அபிவிருத்தி எப்பவுமே நிலையாகாது.இது நீதியானதாகவோ மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி ஆக அமையாது அரசியல்வாதிகளும் தனி மனிதர்களும் மக்கள் பணத்தை சுரண்டுவதாகவே அமையும்.அதிகாரப்பகிர்வை மறைப்பதற்காய் அபிவிருத்தியை கையில் எடுக்கும் அரசின் சூழ்ச்சிக்குள் பதவியும் பணமும் வேண்டி உங்களை விற்று விடாதீர்.மக்களே நீங்கள் எந்தச் சமூகத்தினராகிலும் நீதியானவர்களையும் நேர்மையானவர்களையும் மக்கள் சேவை கருதி உழைப்பவர்களை தெரிவி செய்து அனுப்புங்கள்.

செர்பியா இராணுவத்தால் போஸ்னியா சிறு பான்மை இனத்திற்கு எதிரான இனப்படுகொலையை செய்த "போஸ்னியாவின் கசாப்புக்காரன்","Butcher of Bosnia",என்று அழைக்கப்பட்ட Gen. Ratko Mladic என்ற சேர்பியா இராணுவத் தளபதியை யுத்தக் குற்றவியல் நீதி மன்றம் விசாரித்தபோதே போஸ்னியா மக்கள் சார்பில் வாதாடிய சட்வாளர் கூறினார் நீதி வழங்காத எந்த நல்லிணக்கமும் நடை முறைக்கு சாத்தியம் இல்லை என்றார் .(You Can't Have Reconciliation Without Justice)அதேபோல் எந்த நல்லிணக்கமும் எந்த அபிவிருத்தியும் தமிழ் மக்களுக்கான நீதியை வழங்காமல் சாத்தியமாகாது.

சிந்தித்து வாக்களியுங்கள்.அரசியல் என்பது திருடர்களின் கோட்டையாக இருந்தாலும் உங்களால் அதை மாற்ற முடியும்.உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உங்களுக்கு உதவுபதுபோல் வியாபாரிகள் காத்திருக்கிறார்கள்.ஏதோ மனிதாபிமார் போல் கன கதை சொல்லி அபிவிருத்தி என்றும் அரசோடு பேசுவோம் என்றும் வருவார்கள் .இருந்தபோதும் மனிதாபிமானத்தோடு உண்மையாக உதவக் கூடியவர்களும் இருக்கிறார்கள்.எது எப்படி இருப்பினும் சரியானவர்களை இனம் கண்டு சரியான பாதையில் போக முயற்சிப்போம்.நிரந்தர அரசியல் தீர்வுக்காய் எல்லா வளிகளிலும் முயற்சிக்கும் நல்லதொரு தலைமையை தெரிவு செய்வோம்.

தமிழ்த் தேசியம் 
தனக்குள் மோதி 
உடைந்ததைப்போல 
சிங்களத் தேசியம் 
ஒரு போதும் 
தமக்குள் மோதாது.

பா.உதயன் ✍️


 

Share this post


Link to post
Share on other sites

இன்னும் எவளவு காலத்துக்குத்தான் தீர்வு வருகுது என்டு வாக்கு கேக்கப் போகிமோ தெரியாது.

Share this post


Link to post
Share on other sites
18 hours ago, சுவைப்பிரியன் said:

இன்னும் எவளவு காலத்துக்குத்தான் தீர்வு வருகுது என்டு வாக்கு கேக்கப் போகிமோ தெரியாது.

வரும் ஆனால் வராது என்பது போல் தான் சுவைப்பிரியன்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • பதினொரு வயதில்... கின்னஸ் சாதனை படைத்த சிறுமிக்கு வாழ்த்துக்கள்.
    • மூணாறு நிலச்சரிவில் புதையுண்ட தமிழர்களை மீட்பதில் தாமதம் ஏன்?- சீமான் கேள்வி கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் புதையுண்ட தமிழர்களை மீட்பதில் தாமதம் ஏன்?- சீமான் கேள்வி | நாம் தமிழர் கட்சி கேரள மாநிலத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான மூணாறில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றிய 23 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் பெருமழை காரணமாக, கடந்த 07-08-2020 அன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் உறங்கிகொண்டிருந்தபோதே வீடுகளோடு புதையுண்டு அதில் பலரும் உயிரிழந்தனர் என்ற செய்தி கடும் அதிர்ச்சியையும் சொல்லொணாத் துயரத்தைத் தருகிற அதே வேளையில் இதுவரை 49 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது; இன்னும் பலரது நிலை என்னவென்றே தெரியாமல் இருப்பதுதான் மிகுந்த துயரத்தையும், மன வேதனையையும் அளிக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட ராஜமலை – பெட்டிமுடி மட்டுமின்றி இடுக்கி மாவட்டத்தில் உள்ள மக்களில் ஏறத்தாழ 70 விழுக்காட்டினர் தமிழர்கள்.  குறிப்பாக நூற்றாண்டு காலமாகத் தேயிலைத் தோட்டங்களைத் தங்கள் குருதியால் நனைத்து வளர்த்தவர்களின் வாழ்க்கை தரம் மட்டும் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இன்னும் நூற்றாண்டு காலம் பின்தங்கியே இருக்கிறது. இந்நிலையில் தற்போது ஏற்பட்ட இந்த இயற்கை பேரழிவு அவர்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் அழித்துவிட்டது. இதே கேரள மாநிலத்தில், கடந்த 08.08.2020 அன்று கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளார்கள். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த மிகவும் கொடுமையான துயர நிகழ்விற்கு நம்முடைய ஆறுதலையும் தெரிவித்து இருந்தோம். விமான விபத்தில் சிக்கியவர்களை மீட்பதில் மத்திய, மாநில அரசுகள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு பலரது உயிரை காப்பற்றியதை வரவேற்கிறேன். ஆனால், இந்த இரண்டு விபத்துகளையும் கேரள அரசு மற்றும் மத்திய அரசுகள் கையாண்ட முறையிலும் துயர்துடைப்புப் பணிகளிலும் பாகுபாடு இருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது. கேரள முதல்வர், விமான விபத்திற்கு அமைச்சர் தலைமையில் மீட்பு குழு ஒன்றை அமைக்கிறார். இந்திய பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் கேரள முதல்வருடன் தொடர்புகொண்டு மீட்புபணிகள் விரைந்து நடைபெறுவதை உறுதி செய்ததுடன் தேவையான உதவிகள் புரிய மத்திய பேரிடர் மீட்பு படையையும் உடனடியாக அனுப்பி மீட்புப் பணியைத் துரிதப்படுத்தினர். மத்திய அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார். ஆனால் அதே வேளையில் அதைவிட அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்த துயர நிகழ்வில் சிக்குண்டவர்களை மீட்க இத்தகைய வேகத்துடன் மத்திய-மாநில அரசுகள் செயல்படவில்லையோ என்ற ஐயம் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விமான விபத்தில் இறந்தவர்களுக்கு  கேரள அரசு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. ஆனால், அதே கேரள அரசு நிலச்சரிவில் குடும்பத்தோடு மடிந்த தமிழர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் மட்டுமே அறிவித்துள்ளது. விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோரை கேரள முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உடனடியாக கோழிக்கோடு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். ஆனால், மூணாறில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழர்களைப் பார்க்க யாரும் செல்லவில்லை. மத்திய பாஜக அரசு தமிழர்கள் பாதிக்கப்படும்போது பாரா முகத்துடன் நடந்துகொள்வது புதிதல்ல; வெள்ளம், மழை, புயல் என்று தமிழர்கள் எத்தகைய துயர துன்பத்திற்கு ஆளானாலும் அலட்சிய போக்குடன் நடந்துகொள்வது வாடிக்கையானதே ஆனால் சமத்துவம், சகோதரத்துவம் என்று பேசக்கூடிய பொதுவுடைமை கட்சியினைச் சார்ந்த கேரள முதலமைச்சர் ஐயா பினராயி விஜயனின் ஆட்சியிலும் அதே போல் நிகழ்கிறதோ என்ற சந்தேகம் வருவதைத் தடுக்கமுடியவில்லை. எனவே மத்திய-மாநில அரசுகள், 1. தமிழர்களுக்கு எழுந்துள்ள ஐயங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் இனியும் இடங்கொடுக்காமல் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 2. நிலச்சரிவில் சிக்குண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் அதிகபட்ச இழப்பீட்டையும் உரிய துயர் துடைப்பு உதவிகளையும் வழங்க வேண்டும். 3.இறந்தவர்களின் உடல்களை முறையாக நல்லடக்கம் செய்ய அவர்களது உறவினர்களிடம் வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்க தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 4. வீடு உட்பட அனைத்து  உடைமைகளையும், உறவுகளையும் இழந்து கையறு நிலையில் நிற்பவர்களுக்கு உடனடியாக மறுவாழ்விற்கான நிரந்தர மாற்று ஏற்பாடுகளைச் செய்து தரவேண்டும். 5. அதிக வேலை வாங்குவதற்காகத் தேயிலை தோட்டம் அமைந்துள்ள மலைச்சரிவுகளிலேயே தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பற்ற முறையில் குடியிருப்புகளை அமைத்து தந்துள்ள தேயிலை தோட்ட நிர்வாகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, உடனடியாகப் பாதுகாப்பான மாற்று குடியிருப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் தமிழக அரசு, மூணாறு தேயிலைத் தோட்ட நிலச்சரிவு மீட்பு மற்றும் துயர் துடைப்புப் பணிகளில் கேரள மற்றும் மத்திய அரசுகளோடு தொடர்புகொண்டு அவர்களது செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், உடனடியாகத் தேவையான உதவிகளையும் செய்ய வேண்டும் எனவும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் பணிபுரியும் தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய உடனடியாகத் தமிழக அரசு தனி அமைச்சகத்தை அமைக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். – செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி https://www.naamtamilar.org/seeman-questions-why-delay-in-rescuing-tamil-victims-of-the-munnar-landslide-tragedy/  
    • லெப். கேணல் விக்கீஸ்வரன்     ஆளுமை, பணிவு, வேகம், செயற்றிறன், துணிவு குறிப்பறிந்து பணி செய்யும் ஆற்றல் மிக்க ஒரு விடுதலை வீரன். லெப். கேணல் விக்கீஸ்வரனின் வீரவணக்க நிகழ்வில் செ.யோ.யோகி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து… இவர் 1991 இன் இறுதிப் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தார். 1992, 1993 ஆம் ஆண்டுகளில் பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1994 இல் இருந்து 1996 வரை எதிரி பற்றிய தகவல் சேகரிப்பில் ஈடுபட்டார். இவர் பெரும்பாலும் களநிர்வாகப் பொறுப்பாளராகவும் பின்னணி ஒழுங்கிணைப்பாளருமாக இருந்தார். 2000 ஆம் ஆண்டு மீள இணைந்தோரின் (4.1) படையணிக்குப் பொறுப்பாக இருந்தார். இதேயாண்டு உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற 21 காப்பரண்கள் மீதான தாக்குதலின் போது 4.1 படையணி, இம்ரான் பாண்டியன் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப் படையணி ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருந்தார். இதேயாண்டு பளையைக் கைப்பற்றிய அணிக்குப் பொறுப்பாக இருந்தார். மீள இணைந்தோரின் படையணி, சோதியா படையணி ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருந்து கைதடி, தச்சன்காட்டுப் பகுதிகளை கைப்பற்றும் தாக்குதல்களிலும் 4.1 படையணி, மாலதி படையணி, எல்லைப் படையணி ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருந்து சாவகச்சேரியைக் கைப்பற்றும் தாக்குதலிலும் பங்குகொண்டார். 2001 இல் 82 மி.மீ மோட்டார் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அதேவேளை தீச்சுவாலை நடவடிக்கையின்போது முறியடிப்பு நடவடிக்கைக்குப் பொறுப்பாக இருந்தார். 23.04.2008 முகமாலை முறியடிப்புச் சமரில் முறியடிப்பு அணிக்கும் 02 ஆம் கோட்டில் நின்ற அணிக்கும் பொறுப்பாக இருந்தார். 08.05.1971 இல் வவுனியா மாவட்டத்தில் பிறந்த சதாசிவம் சதானந்தன் (விக்கீசு) ஜீவனா (போராளி) மண இணையருக்கு பவித்திரன், யாழன்பன், கோவரசன் என மூன்று பிள்ளைகள் உள்ளன. கீழே தரப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் அவரது பன்முக ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. குடாரப்பில் கரையிறங்கிய அணியோடு பளையூடாகச் சென்று இணைவதில் தடையேற்பட்டபோது கேணல் தீபனின் பணிப்புக்கமைய மிகக் குறைந்தளவு போராளிகளுடன் வாழ்வா சாவா என்ற போராட்டத்திடையே உறுதியாக நின்று பளையில் எதிரியின் எதிர்ப்பை முறியடித்து அணிகளின் இணைவுக்கு வழிசமைத்தார். 25.04.2001 தீச்சுவாலை நடவடிக்கைக்கு முன்பாக அந்த வெற்றிக்குக் காரணமாக இருந்தவற்றுள் ஒன்றான வலுவான காப்பரண்களைக் குறுகிய காலத்தில் பணியாளர்களைக்கொண்டு சிறப்பாக அமைத்து முடித்தார். மேலும் அவரோடு நின்ற பணியாளர்கள் அவரின் நடத்தையால் ஈர்க்கப்பட்டு அந்தச் சமரில் நேரடியாகக் கலந்து குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றினர். இது அவரது பொறியாண்மை ஆற்றலையும், ஆளுமையையும் வெளிப்படுத்திய ஒரு நிகழ்ச்சியாகும். 11.08.2006 முகமாலையில் இடம்பெற்ற சமரில் கிளாலிக் கரையூடு முன்னேறிய எமது அணியினரை எதிரி சுற்றிவளைத்து எமது உடைப்புப் பகுதியை மூடும் நிலை உருவாகியது. அப்போது கேணல் தீபனின் பணிப்புக்கமைய அணியோடு சென்ற விக்கீசு அவர்களோடு இணைந்து கிளாலி உடைப்பு மூலையில் 150 மீற்றர் கரைப்பக்கமும் கிளாலி முகமாலைக் கோட்டிலும் நிலையமைத்து நின்றார். எதிரியின் தாக்குதலால் இந்த நிலையின் நீளம் குறுகியபோதும் அணியினர் எல்லோரும் வெளியேறும் வரை எதிரி அந்தப் பகுதியை மூடாது தடுத்து நின்றார். 11.10.2006 முகமாலையில் இடம்பெற்ற எதிரியின் வலிந்த தாக்குதலின்போது களநிர்வாகத்தைப் பொறுப்பெடுத்து இரண்டாவது கோட்டிற்கான காப்பரண்களை விரைவாக அமைத்ததுடன் சமரின் ஒரு கட்டத்தில் இரண்டாவது கோட்டுச் சமரையும் வழிநடத்தி எதிரிக்குப் பாரிய இழப்பினை ஏற்படுத்தினார். 23.04.2008 அன்று முகமாலையில் இடம்பெற்ற வலிந்ததாக்குதல் முறியடிப்புச் சமரின்போது, இறுதியாக மீட்டகப்பட்ட NP08 நிலைக்கு அவரோடு நின்ற வடிவரசனுடன் ஆறு போராளிகளை அனுப்பி பின்பு அங்கு வந்த நித்திலனின் அணியுடன் இணைந்து அந்தக் காப்பரணை மீட்கும் பணியை நிறைவாகச் செய்தார். லெப்.கேணல் விக்கீசு ஆளுமை, பணிவு, வேகம், செயற்றிறன், துணிவு குறிப்பறிந்து பணி செய்யும் ஆற்றல் மிக்க ஒரு விடுதலை வீரன். 10.08.2008 அன்று வீரச்சாவடைந்தார். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” தகவல்: பிரிகேடியர் தீபன் நினைவுரை: செ.யோ.யோகி (2008). தொகுப்பு: சமராய்வு மையம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். https://thesakkatru.com/commander-lieutenant-colonel-vickieswaran/  
    • இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை பதவியை சி.சிறீதரனுக்கு வழங்கினால் அதனை தான் ஆதரிப்பேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “கட்சிக்கு எதிரான நான் நடந்துகொள்பவன் அல்ல. எனினும், சக வேட்பாளர்கள் எனக்கு எதிராக பரப்புரை செய்தார்கள். நான் ஒருபோதும் அப்படி செய்யவில்லை. எனக்கு ஆதரவாக சிறீதரன் மட்டுமே இருந்தார். இதனால் இறுதியில் அவருக்கு எதிராகவும் பரப்புரை செய்தார்கள். இறுதியில் நானும், சிறீதரனுமே வெற்றிபெற்றோம். எமக்கு எதிராக சதி செய்தவர்கள் தோல்வியடைந்தார்கள். மக்கள் தீர்ப்பின்படி சிறீதரனும், நானும் வெற்றிபெற்றிருக்காவிட்டால், கட்சி இன்னும் அவமானமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும். ஓர் ஆசனத்தை பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும். இதேவேளை, கட்சி மறுசீரமைக்கப்படும்போது அனைவரும் விரும்பி தலைமை பதவியை வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்வேன் என சிறீதரன் கூறியுள்ளார். தனக்கு அந்த பதவியை தருமாரு அவர் கோரவில்லை. அவ்வாறு சிறீதரனுக்கு தலைமை பதவி வழங்கினால் அதற்கு நான் ஆதரவு வழங்குவேன். மேலும் தேசியப்பட்டியல் அறிவிப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இழுபறி ஏதும் இல்லையென” அவர் மேலும் கூறியுள்ளார். https://www.tamilwin.com/politics/01/253237?ref=home-latest
    • மாவையின் பார்வை தன் பதவி திட்டத்தின்மேல் விழாமல் பராக்குக் காட்டி தனது  கட்டுக்குள்  வைத்திருந்த சுமந்திரனின், சிங்கள பேட்டி மாவையை உலுக்கி விட்டிருந்தது. தேர்தல் வெற்றியை பாதிக்கும் என்பதால் கொஞ்சம் கண்டிப்பாய் கடிந்து கடிவாளத்தை இறுக்கப் பாத்திருக்கிறார் மாவை. இதனால் கடுப்பான சுமந்து இப்படியே  விட்டால் காத்திருந்தது வீணாய்ப் போய்விடும் என தனது இயல்பான தந்திரத்தால்  வைக்கபட்ட வேட்டு. மாவைக்கு இதுவும் வேணும், இன்னும் வேணும். இவ்வளவு காலம் அரசியலில் இருந்து,  கூட இருந்த நரியை இனங்காணத் தெரியவில்லை.  மக்கள் சொன்னதுமல்லாமல் செய்தும் காட்டியிருக்கிறார்கள். கூடியிருந்தவர்கள் சொல்கிறார்கள். கடந்தகால  ஆதாரங்கள் சமர்பிக்கிறார்கள், பேட்டிகள் கூறுகின்றன. அத்தனையும் பொய். நீங்கள் கூறுவது மட்டுந்தான் உண்மை. தலைமைக்கு பேச முடியவில்லை. அடுத்தது யார் இலக்கு என்கிற பயம்.