• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
உடையார்

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை! மஹிந்த தெரிவிப்பு!

Recommended Posts

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை! மஹிந்த தெரிவிப்பு!

1581049819-mahinda-r-2.jpg?189db0&189db0

 

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மொறட்டுவை – லுனாவை பகுதியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“அனைத்து இன மக்களும் சுதந்திரமாகவும் தத்தமது கலாசாரங்களை முழுமையாக பின்பற்றவும் முழு சுதந்திரம் உள்ளது. ஒற்றையாட்சியில் நாட்டுக்குள் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளை பாதுகாத்து அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் வாழும் சூழ்நிலை மீண்டும் உறுதிப்படுத்தப்படும்.

எமது ஆட்சியில் விகாரை, கோயில், பள்ளிவாசல் மற்றும் தேவாலயம் ஆகியவை மறுசீரமைக்கப்பட்டன. அபிவிருத்தி பணிகளின்போது இனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. நாட்டுக்கே அபிவிருத்தி பணிகள் ஒருமித்த விதத்தில் முன்னெடுக்கப்பட்டன. வடக்கு, தெற்கு என வேறுப்படுத்தி பார்க்கவில்லை” என மேலும் தெரிவித்துள்ளார்.

 

https://newuthayan.com/பௌத்த-மதத்திற்கு-முன்னுர/

Share this post


Link to post
Share on other sites
52 minutes ago, உடையார் said:

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிங்கள-பௌத்த இனமதவெறியர்களின் வழமையான பல்லவி!

Share this post


Link to post
Share on other sites

வாக்குகளுக்காக தெரிவிக்கிறார் விடுங்கோ.  எத்தனை தடவைதான்  முன்னுரிமை அளிக்கப்போகிறார்? ஒவ்வொரு தேர்தலின் போதும் உதையே சொல்லிச் சொல்லி வாக்கு கேட்ப்பார். ஏனைய மதங்களின்  உரிமைகள் பாதுகாக்கப்படுமாயின், பவுத்தத்துக்கு மட்டும் ஏன் முன்னுரிமை? அவருக்கே, தான் என்ன சொல்கிறேன் என்று விளங்கித்தான் சொல்கிறாரோ, அல்லது கதை விடுகிறாரோ?

Share this post


Link to post
Share on other sites

முன்னுரிமை ஏற்கனவே வழங்கப்பட்டது தானே.  
பிறகென்ன முன்னுரிமை மீண்டும்??

Share this post


Link to post
Share on other sites

இவர்கள் உண்மையில் கிறிஸ்தவர்கள்.... மகிந்தா 'பெர்சி' ராஜபக்ச... தம்பி, 'பசில்'.

ஜூலியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனே (JR J).

டான்  ஸ்டீபன் சேனநாயக்க  (DS Senanayaka) மகன் டட்லி சேனநாயக்க. சொலமன் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்க (SWRD Banda). முழு தெலுங்கு நாயக்கர்கள்.

பௌத்தர்களிலும் பார்க்க பௌத்தர்கள் போல வேசம் இடும் நாடகக்காரர்கள்.

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, Nathamuni said:

இவர்கள் உண்மையில் கிறிஸ்தவர்கள்.... மகிந்தா 'பெர்சி' ராஜபக்ச... தம்பி, 'பசில்'.

ஜூலியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனே (JR J).

டான்  ஸ்டீபன் சேனநாயக்க  (DS Senanayaka) மகன் டட்லி சேனநாயக்க. சொலமன் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்க (SWRD Banda). முழு தெலுங்கு நாயக்கர்கள்.

பௌத்தர்களிலும் பார்க்க பௌத்தர்கள் போல வேசம் இடும் நாடகக்காரர்கள்.

இப்படியெல்லாம் கீழ்தரமான வாழ்கை வேண்டுமா???

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
10 hours ago, உடையார் said:

இப்படியெல்லாம் கீழ்தரமான வாழ்கை வேண்டுமா???

காமினி திசாநாயக்க (நாயக்கர்), 'லலித்' அத்துலத் முதலி(யார்).... முன்னால் பிரதமர் தகநாயக்க....விக்கிரநாயக்க... 'ஜான்' கொத்தலவை.

காமினி யாழ் நூலகத்தினை எரிக்க முன்னின்ற ஒரு கல்வியாளர். 

தமிழர் தோலில் செருப்பு தைத்து போடுவேன் என்றார், படித்த டாக்டர் நெவில் பெர்னாண்டோ.... இன்னோருவர், 83 கலவரத்தில், ஜெயவர்த்தனே கொடுத்த ஆதரவில்... தமிழர்களுக்கு அழிவுகளை தருவதில் முன்னின்று வேலை செய்தவர் சிறில் மத்தியூ.

நெவில் பெர்னாண்டோ, சிறில் மத்தியூ இருவரும் கிறிஸ்தவ சிங்களவர்கள்... கொடுத்தக்காசுக்கு மேல கூவுறாண்டா கொய்யால ரகம்...

கடைசியில், கிறிஸ்தவத்துக்கு எதிராக, பௌத்தத்தின் சுஜரூபம் கிளம்பிய போது.... சுருண்டவர்கள்.... இருவரது மரணமும் வைத்தியசாலையில் இழுபட்டு தான் நடந்தது.

நாட்டின் முதல் அதிகாரமிக்க ஜனாதிபதி ஜெயவர்த்தனே புற்றுநோயால் இறந்தபின்னர், (தனது தாய் சிறிமாவுக்கு செய்த அநியாயத்துக்காக - தனிப்படட காரணம் தான்), அரச மரியாதையை தர மறுத்தார் ஜனாதிபதி சந்திரிகா. சாதாரண மனிதராக அடக்கமானார், தமிழருக்கு பெரும் அநியாயம் செய்த மனிதர்.

வீதிகளில் சிங்கள இளைஞர்களை டயரில் உயிருடன் கொளுத்திய நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல் இருந்த பிரேமதாச.... வெடியில் மரணித்தார்.

 

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites

பிரேமதாசாவுக்கு  வைடி வைத்தவர்களும் வெடியிலேயே மரணித்தனர். இந்த வரலாறுகளை பார்தது எதிர்கால சந்ததியாவது புத்திக் கூர்மையுடன் செயற்பட்டு தமது வாழ்வை சிறப்புற செய்யவேண்டும். 

   

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
20 minutes ago, tulpen said:

பிரேமதாசாவுக்கு  வைடி வைத்தவர்களும் வெடியிலேயே மரணித்தனர். இந்த வரலாறுகளை பார்தது எதிர்கால சந்ததியாவது புத்திக் கூர்மையுடன் செயற்பட்டு தமது வாழ்வை சிறப்புற செய்யவேண்டும். 

   

அப்படி இல்லையே அய்யா...

வெடி வைத்தவர்கள்.... நாட்டின் வடக்கு பக்கம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

இந்திய ஆமியை நாட்டில் இருந்து கேவலமா அனுப்பினா, அப்படி நடக்காது எண்டு ஏன் ஒரு கேள்வியை மனதுக்குள் ஆவது எழுப்ப மாட்டீர்களா? 

பிரேமருக்கு வெடிவைக்க வேண்டிய தேவை, புலிகளிலும் பார்க்க, JVP க்கும், இந்தியாவுக்கும் இருந்தது. 

பிரேமர் போனா... இனொருவர் வருவார், சண்டை நிக்காது, தொடரும் என்று பொட்டுருக்கு தெரியும் தானே. அப்ப... அந்தாளுக்கு வெடி வைத்து என்ன பிரயோசனம் இருந்தது?

மாலைதீவிலே ஒருத்தர் இந்திய எதிர்ப்பு எண்டார்... ஆளை வேறு வகையில் தூக்கியாச்சு.

இப்ப நேபாளம்.... அங்கேயும் அலுவல் நடக்கும்... மகிந்தர்... மத்தள விமான நிலையம் தர ஏலாது.... கொழும்பு துறைமுக கிழக்கு பகுதி தர ஏலாது எண்டுறார்.

நீண்ட கால நோக்கில், மகிந்த வெட்டி ஆட ஏலாது. 

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites

வாளை தூக்கியவனூக்கு வாளால் சாவு என்பது ப‌ழமொழி

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, nunavilan said:

முன்னுரிமை ஏற்கனவே வழங்கப்பட்டது தானே.  
பிறகென்ன முன்னுரிமை மீண்டும்??

என்ன செய்வது? அப்பப்ப தேர்தல் வந்து தொலைக்குதே, அதை  மக்களுக்கு நினைவு படுத்த வேண்டாமோ?  

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, nunavilan said:

முன்னுரிமை ஏற்கனவே வழங்கப்பட்டது தானே.  
பிறகென்ன முன்னுரிமை மீண்டும்??

மகிந்தர் சனாதிபதியாக இருந்தபோது பிணம்புணரும் படைகளையும் கொண்டவர். அவர் படைகளுக்கு முன் உரிந்திருந்தால் என்ன? உரியாமல் இருந்தால் என்ன?. அதுகள் தங்கள் காரியங்களைக் கனகட்சிதமாகச் செய்யும், இதற்கு மை போட்டா பார்க்கவேண்டும்.....?? 🤔

தற்போது மகிந்தரின் தம்பி சனாதிபதி. மகிந்தர் தனது அனுபவங்களை மீண்டும் மீண்டும் சொன்னால்தானே தம்பியும் தன்பின் வருவோருக்குச் சொல்லி, அந்த முன்னுரிமையைத் தொடரவைக்க முடியும். 😲

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.