• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
manimaran

ஆபிரிக்க மக்கள் மீதான எம்மவர் இனத்துவேசம்

Recommended Posts

புலம்பெயர் தேசத்தில் கறுப்பின மக்களை குறிப்பிடுவதற்கு எம்மத்தியில் எந்தவொரு தயக்கமும் குற்ற உணர்வும் இல்லாது பொதுவாக பாவிக்கப்படும் கா**லி என்ற சொல் தொடர்பாகவும் பொதுவாக எம்மால் கறுப்பினத்தவர் மீது காட்டப்படும் இனத்துவேசம் தொடர்பாகவும் இந்த கானொலியில் காட்டப்படுகின்றது. 

https://www.bbc.co.uk/news/av/newsbeat-53395935/south-asian-anti-black-racism-we-don-t-marry-black-people

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, manimaran said:

இதனை தயாரித்தது, நளினி சிவதாசன்.

பிபிசிக்குள நம்ம ஆக்கள் வந்துவிட்டார்கள் என்று தெரிகிறது.

நளினி, தயாரித்த இந்த புரோகிராம் குறித்து சொல்லவில்லை.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

எங்களது குடும்பத்திற்குள் ஆபிரிக்கவம்சவழியில்தான் ஒருவர் இல்லாமல் இருந்தது, இரண்டு வருடங்களுக்கு முன் கென்யா இனத்தவர் ஒருவர் மாப்பிள்ளையாக வந்துவிட்டதால்... பல்லினத்தவர் உடைய குடும்பம் ஆகிவிட்டோம்.  

நாங்கள் எங்களுக்குள்ளேயே யாழ்பாணி என்றும், பிரதேசங்களின் பெயர் கொண்டும் மனம் நோக கதைக்கும் போது, இவர்களை விட்டு வைப்போமா?

எனது தனிப்பட்ட கருத்து,  ஒரு குடும்பத்தில்/உறவில்  முதன்முதல் தனது இனத்திலிருந்து வெளியே போகும் அல்லது தனது கலாச்சாரத்திலிருந்து வெளியே போகும் ஒருவரே அதிக எதிர்ப்புகளை எதிர்நோக்குவார்.. அது கல்யாணம் தொடங்கி விவாகரத்து வரை...

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

கடந்த 70 வருடங்களாக இனத்துவேசத்தால் பாதிக்கபட்ட தமிழர்களிடம் இனத்துவேசம் மிக அதிகமாக உள்ளது. ஆபிரிக்க இனத்தவர் ஒருவரை அவரது நாட்டை கூறாமல் “காப்பிலி”, “கறுவல்”,  என்றும், சீன இனத்தவரை “சப்பட்டை” என்று மனம் கூசாமல் இழி சொற்களால் அழைப்பது சாதாரணமாக தமிழர்களிடையே ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்று. பிரான்சில் அல்ஜீரிய  நாட்டவரை மிகச் சாதாரணமாக “அடை”, என்ற இழி சொல்லால் தமிழ்  குடும்பங்களால் அழைக்கப்படும். புள்ளைகளுக்கும் அவ்வாறே பழக்கப்படும். 

சுவிற்சர்லாந்தில்  யூகோஸலாவியரை தங்களை விட இழிந்தவர்கள் என்பதே இங்குள்ள தமிழர்கள்களின்  நினைப்பு. ஆனால் 2014 ல் நான் அங்கு சென்ற போது கண்ட விடயங்கள் எதிர் மாறாக இருந்தது. எமது நாட்டை விட பொருளாதார முன்னேற்றத்தில்  சிறந்ததாக இருந்ததோடு அவர்கள் தமது  நகரங்களை  தமிழர்களை  விட எத்தனையோ மடங்கு சுத்தமாகவும் பராமரிக்கின்றனர். ஆனால் தமிழர்களோ ஐரோப்பாவில் சின்ன யாழ்பபாணம் என்று அழைக்கப்படும் லா சப்பலையே வெத்திலை துப்பலுடன் அசிங்கமாக வைத்திருக்கின்றனர். அதற்குள் மற்ற இனத்தவரை இழிவாக நினைப்பு வேறு. 

Edited by tulpen
 • Like 3

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, tulpen said:

கடந்த 70 வருடங்களாக இனத்துவேசத்தால் பாதிக்கபட்ட தமிழர்களிடம் இனத்துவேசம் மிக அதிகமாக உள்ளது.

மிகவும் வேதனைப்படவேண்டிய விடயம். மற்றைய இனங்கள் தொடர்பான போதிய விழிப்புனர்வின்மை ஒரு காரணமாக இருக்கலாம். 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

தங்கள் இனத்திற்குள்ளேயே சாதி குறைந்தவர் என்று ஒரு பகுதியினரை மனம் நோக செய்து துன்புறுத்தி இன்பம் காணும் எம்மவர்களிடம் இப்படியான செயல்கள் எதிர்பார்க்க கூடியதே.

Share this post

Link to post
Share on other sites
19 hours ago, manimaran said:

மிகவும் வேதனைப்படவேண்டிய விடயம். மற்றைய இனங்கள் தொடர்பான போதிய விழிப்புனர்வின்மை ஒரு காரணமாக இருக்கலாம். 

மற்றைய இனங்கள் பற்றி நாங்கள் அதிகம் அறியமுற்படுவதில்லை என்பது  ஒரு வகையில் உண்மையே. எங்களில் அனேகமானோருக்கு, (முதலாவது, இரண்டாவது generation) வேற்று இனத்தில் நெருங்கிய நட்புக்கள் அதிகம் இருந்திருக்காது, அவர்களுடன் பழக சந்தர்ப்பங்களை அதிகம் நாடியிருப்போமோ தெரியாது.

எனது மேலதிகாரி ஒரு ஜோர்டன் இனத்தவர்,  அவர் ஒரு முறை கூறினார், " உங்களது நாட்டவருக்கு அவர்களது பெயருக்கு பின்னால் தாங்கள் படித்த பல்கலைகழகல்வி பட்டங்களை சேர்ப்பதில்தான் அதிக நாட்டம், ஆனால் public speaking, interaction with others இல்லாமல் பயன் இல்லை என்று.".

இப்படி பல...

எங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள என தெரிந்தால் நாங்கள் மாறுவோமா?, மற்றைய இனங்களை மதிப்போமா?

Share this post

Link to post
Share on other sites

அடுத்தவன் தாழ்ந்தவன் என்ற நினைப்பு எமக்கு மட்டுமல்ல... தாழ்ந்தவன் என நாம் நினைக்கும் அடுத்தவனுக்கும் உண்டு.

அதாவது, எம்மை கூலிகள் என்று கறுப்பர்கள் சொல்வதும், நாம் பாக்கிகள் என்று சொல்லும் பாகிஸ்தானியர்கள் எம்மை கறுப்பு இந்தியர்கள் என்று சொல்வதும் உள்ளது.

நம்மவர்கள் தாம் வெள்ளை, கறுப்பு, இந்தியர்களில் படிப்பில் முன்னே இருப்பவர்கள், சீனருடன் போட்டி போடுபவர்கள் என்ற இறுமாப்பு உண்டு.

ஆனாலும், குடும்ப உறவுகளில் உண்டாகும் சிக்கலினாலே, வெள்ளையர்கள் பின் தங்குகிறார்கள் என்று உணர்வதில்லை.

எமது அடுத்த தலைமுறை கறுப்பரிடையே மணம் செய்யலாம்.

ஒரு வெள்ளையின ஆணை ஒரு தமிழ் பெண் கலியாணம் செய்து, பிள்ளை பிறந்து இருக்கிறது. அவரது மாமா, மாமி அழைப்பில் 31க்கு போய், தமிழில் கதைக்க அவர் குந்தி இருந்து இரண்டு பக்கமும் பார்க்க, அவருக்காக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க.... மிகவும் அந்நியத்தனமாக இருந்தது. கஷடம் தான்...

Share this post

Link to post
Share on other sites

இங்கு இனத்துவேசம் எனப்படும் வார்த்தை ஏன் பாவிக்கப்டுகின்றது?

சிங்களவன் எம்மீது காட்டுவது இனத்துவேசம். ஆனால் நாம் காப்பிலிகள் மீது காட்டுவது இனத்துவேசமா? 

எனக்கு இது இரண்டிட்ட்கும் வித்தியாசம் இருப்பதாக தெரிகின்றது. எனக்கு தெரிந்தவரையில் தமிழர்கள் காப்பிலியை இனத்துவேசமாக நடத்தியதில்லை. இது ஒரு இனகுழுமத்தை அழைக்கப்பயன்படும் பெயரே தவிர வேறொன்றுமில்லை.
 
Share this post

Link to post
Share on other sites
30 minutes ago, colomban said:

தமிழர்களை “கள்ளத்தோணிகள்” என்று இலங்கையிலும், “கூலிகள்” என்று உலகளாவிய அளவிலும் அழைப்பதை ஒரு இனக்குழுமத்தை அழைப்பதற்கான பெயர்களே என்றும், அதில் இனத்துவேசம் இல்லை என்றும் கொள்ளலாமா? “காப்பிலி” என்ற சொல்லின் மூலம், வரலாறு, அப்படி தம்மை அழைப்பது பற்றி ஆபிரிக்க மக்களின் அபிப்பிராயம் ஆகியவற்றை அறிந்து பாருங்கள். அந்த சொல்லும் கள்ளத்தோணிக்கும் கூலிக்கும் நிகரானது என்பதை அறிந்து கொள்வீர்கள்.

 • Like 1
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
38 minutes ago, colomban said:

இங்கு இனத்துவேசம் எனப்படும் வார்த்தை ஏன் பாவிக்கப்டுகின்றது?

சிங்களவன் எம்மீது காட்டுவது இனத்துவேசம். ஆனால் நாம் காப்பிலிகள் மீது காட்டுவது இனத்துவேசமா? 

எனக்கு இது இரண்டிட்ட்கும் வித்தியாசம் இருப்பதாக தெரிகின்றது. எனக்கு தெரிந்தவரையில் தமிழர்கள் காப்பிலியை இனத்துவேசமாக நடத்தியதில்லை. இது ஒரு இனகுழுமத்தை அழைக்கப்பயன்படும் பெயரே தவிர வேறொன்றுமில்லை.
 
கொழும்பான், இரண்டும் ஒன்று தான்! உங்களைக் குழப்பும் வித்தியாசமென்னவென்றால், மேற்கு நாடுகளில் துவேசத்தை வெளிக்காட்டினால் சட்டத்தினால் வால் நறுக்கி விடுவர்! சிறி லங்கா போன்ற நாடுகளில் சட்டம் இல்லை, அதனால் தான் தமிழர், முஸ்லிம்கள் மீது துவேசம் வன்முறையாக மாறுகிறது.

 • Like 2
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
On 14/7/2020 at 17:25, tulpen said:

கடந்த 70 வருடங்களாக இனத்துவேசத்தால் பாதிக்கபட்ட தமிழர்களிடம் இனத்துவேசம் மிக அதிகமாக உள்ளது. ஆபிரிக்க இனத்தவர் ஒருவரை அவரது நாட்டை கூறாமல் “காப்பிலி”, “கறுவல்”,  என்றும், சீன இனத்தவரை “சப்பட்டை” என்று மனம் கூசாமல் இழி சொற்களால் அழைப்பது சாதாரணமாக தமிழர்களிடையே ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்று. பிரான்சில் அல்ஜீரிய  நாட்டவரை மிகச் சாதாரணமாக “அடை”, என்ற இழி சொல்லால் தமிழ்  குடும்பங்களால் அழைக்கப்படும். புள்ளைகளுக்கும் அவ்வாறே பழக்கப்படும். 

சுவிற்சர்லாந்தில்  யூகோஸலாவியரை தங்களை விட இழிந்தவர்கள் என்பதே இங்குள்ள தமிழர்கள்களின்  நினைப்பு. ஆனால் 2014 ல் நான் அங்கு சென்ற போது கண்ட விடயங்கள் எதிர் மாறாக இருந்தது. எமது நாட்டை விட பொருளாதார முன்னேற்றத்தில்  சிறந்ததாக இருந்ததோடு அவர்கள் தமது  நகரங்களை  தமிழர்களை  விட எத்தனையோ மடங்கு சுத்தமாகவும் பராமரிக்கின்றனர். ஆனால் தமிழர்களோ ஐரோப்பாவில் சின்ன யாழ்பபாணம் என்று அழைக்கப்படும் லா சப்பலையே வெத்திலை துப்பலுடன் அசிங்கமாக வைத்திருக்கின்றனர். அதற்குள் மற்ற இனத்தவரை இழிவாக நினைப்பு வேறு. டது;தமறை 

மேலே நீங்கள்  எழுதியுள்ள  கருத்துடன்  உடன்படும்  அதேவேளை இது  தமிழர்களிடம்  மட்டுமே  இருக்கிறது என்பது  தவறு

ல  சப்பல்  வந்த  நீங்கள் அடுத்தமுறை என்னை  அழையுங்கள் 

2 நிமிட  நடையில் BARBES உட்பட  சில  பகுதிகளை  காட்டுகின்றேன்

Edited by விசுகு

Share this post

Link to post
Share on other sites

பல பேர் நினைப்பது கறுப்பர்கள் என்றால் கள்ளங்கள்,ரவுடிகள் .பொல்லாதவர்கள் ,பயங்கரமானவர்கள் என்று[ எல்லா மக்களிலும் இப்படியான ஆட்கள் இருக்கிறார்கள்என்பதை மறந்து விடுகிறார்கள் .]...அவர்களில் பெடியங்களை விட பெண்கள் பொல்லாதவர்கள் அத்தோடு உடல் வலிமை ,மன வலிமை கூடியவர்கள் 

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, விசுகு said:

மேலே நீங்கள்  எழுதியுள்ள  கருத்துடன்  உடன்படும்  அதேவேளை இது  தமிழர்களிடம்  மட்டுமே  இருக்கிறது என்பது  தவறு

ல  சப்பல்  வந்த  நீங்கள் அடுத்தமுறை என்னை  அழையுங்கள் 

2 நிமிட  நடையில் BARBES உட்பட  சில  பகுதிகளை  காட்டுகின்றேன்

வெள்ளை துணியில் ஒரு துளி கறுப்பு பட்டிருந்தாலும் கறைதான் நானும் லாசப்பல் கடை வீதி எனும் பெயரில் ஒரு வீடியோ பார்த்தன் நம்ம ஊரைப்போலவே இருந்துச்சு. நம்மவர்கள் தேங்காய் , முதல் மாம்பழம் வரைக்கும் கூவி விற்றுக்கொண்டிருந்தார்கள் 

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பொத்துவில் உல்லை கடற்கரைக்கு சென்றேன் கடற்கரைக்கு சுற்றுலா வந்த நம்மவர்கள் சாப்பிட்ட  பேப்பர் குப்பைகளை அந்த இடத்திலே போட்டு விட்டு சென்றார்கள் ஆனால் அதன் பிறகு வந்தசிங்கள குடும்பம் அதை சுற்றம் செய்து விட்டு அந்த இடத்தில் அமர்ந்திருந்தார்கள் நம்மவர்களுக்கு ஓர் இடத்திலிருந்து கடந்து சென்றால் போதும் என்ற நினைப்பு மட்டுமே

காப்பிலி என ஓர் இனத்தை அழைப்பது தவறு சிலோன் தமிழர்களை திருத்த ஏலாது நம்ம வீடு முற்றத்தத்திலே ஆயிரம் குப்பைகள் இருக்கு அதை கூட்டி துடைத்து துப்பரவு செய்ய வழியில்லை ஆனால் அடுத்தவன் முற்றத்தை குப்பை என்பது 

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

பல பேர் நினைப்பது கறுப்பர்கள் என்றால் கள்ளங்கள்,ரவுடிகள் .பொல்லாதவர்கள் ,பயங்கரமானவர்கள் என்று[ எல்லா மக்களிலும் இப்படியான ஆட்கள் இருக்கிறார்கள்என்பதை மறந்து விடுகிறார்கள் .]...அவர்களில் பெடியங்களை விட பெண்கள் பொல்லாதவர்கள் அத்தோடு உடல் வலிமை ,மன வலிமை கூடியவர்கள் 

இதில் இருவகை காப்பிலிகள் உள்ளது. முதலாவது, நைஜீரியா, கென்யா, உகண்டா,புருண்டி கானா போன்ற நாடுகளை சேர்ந்த காப்பிலிகள் இவர்கள் முரடர்கள் குழப்படிகாரர்கள். 

இரண்டாவது வகை பர்படொஸ், வேஸ்ட்  இன்டிஸ் தீவுகளை சேர்ந்த்வர்கள் இவர்கள் காப்பிலி அல்ல கரீபியன் தீவுகளை சேர்ந்தவர்கள் தோல் நிறம் /தலைமுடி சிறிது வித்தியாசம் காணலாம்.  இவர்கள் ஒரளவு டிசன்டான நன்கு படித்தவர்கள் கூட்டம். அனால் ஜமைக்காகாரர்கள் கரிபியர்களக இருந்தாலும் சிறிது குழப்படிகாரர்கள்.

4 hours ago, கற்பகதரு said:

தமிழர்களை “கள்ளத்தோணிகள்” என்று இலங்கையிலும், “கூலிகள்” என்று உலகளாவிய அளவிலும் அழைப்பதை ஒரு இனக்குழுமத்தை அழைப்பதற்கான பெயர்களே என்றும், அதில் இனத்துவேசம் இல்லை என்றும் கொள்ளலாமா? “காப்பிலி” என்ற சொல்லின் மூலம், வரலாறு, அப்படி தம்மை அழைப்பது பற்றி ஆபிரிக்க மக்களின் அபிப்பிராயம் ஆகியவற்றை அறிந்து பாருங்கள். அந்த சொல்லும் கள்ளத்தோணிக்கும் கூலிக்கும் நிகரானது என்பதை அறிந்து கொள்வீர்கள்.

நல்லது ஜூட் அப்படியென்றால். நாம் ஏன் சிங்கள்வர்களை இனத்திதுவேசம் பிடித்தவர்கள் என்று கூறுகின்றோம்? 
வட‌க்கு தமிழர்கள் , மட்டக்களப்பு தமிழர்க்ளையோ / இந்திய வம்சாவளி தமிழர்களையோ மதிப்பதில்லை அதேபோல் முஸ்லீம்களை சோனி என்று அழைத்தல் இவைகளும் ஒருவகையில் இனத்துவேசம் அல்லவா? 
 
Share this post

Link to post
Share on other sites
19 minutes ago, colomban said:

இரண்டாவது வகை பர்படொஸ், வேஸ்ட்  இன்டிஸ் தீவுகளை சேர்ந்த்வர்கள் இவர்கள் காப்பிலி அல்ல கரீபியன் தீவுகளை சேர்ந்தவர்கள் தோல் நிறம் /தலைமுடி சிறிது வித்தியாசம் காணலாம்.  இவர்கள் ஒரளவு டிசன்டான நன்கு படித்தவர்கள் கூட்டம். அனால் ஜமைக்காகாரர்கள் கரிபியர்களக இருந்தாலும் சிறிது குழப்படிகாரர்கள்.

கரிபியன் தீவுகளின் பூர்வீக மக்கள் ஐரோப்பியர் கொண்டு வந்த நோய்களாலும், ஐரோப்பிராலும் முற்றாகவே கொன்றொளிக்கப்பட்டு விட்டார்கள். இன்றைய கரிபியன் தீவு மக்கள் அங்கு அடிமைகளாக கொண்டுவரப்பட்ட ஆபிரிக்கர்களும், கூலிகளாக கொண்டுவரப்பட்ட தமிழர்களும் வேலைக்கு வந்த ஐரோப்பியர்களும் கலந்து உருவான மக்கள். அவர்களின் வரலாற்றை இணையத்தில் படித்து பாருங்கள். நான் பல கரிபியன் தீவுகளுக்கு போய் வந்திருக்கிறேன். சிலர் எனது அயலவராகவும் இருந்திருக்கிறார்கள். 

19 minutes ago, colomban said:

நல்லது ஜூட் அப்படியென்றால். நாம் ஏன் சிங்கள்வர்களை இனத்திதுவேசம் பிடித்தவர்கள் என்று கூறுகின்றோம்? 
வட‌க்கு தமிழர்கள் , மட்டக்களப்பு தமிழர்க்ளையோ / இந்திய வம்சாவளி தமிழர்களையோ மதிப்பதில்லை அதேபோல் முஸ்லீம்களை சோனி என்று அழைத்தல் இவைகளும் ஒருவகையில் இனத்துவேசம் அல்லவா? 
 
நாம் சிங்களவரை இனத்திதுவேசம் பிடித்தவர்கள் என்று கூறுவதற்கு எம்மை அவர்கள் “கள்ளத்தோணிகள்” என்று சொல்வதும் ஒரு காரணம்.

சோனகர் என்று இலங்கை முஸ்லிம்களில் பெரும்பான்மையான சோனகரை அழைப்பது, தமிழரை “தமிழர்” என்று அழைப்பது போலாகும். “சோனி” என்று அழைப்பது அவர்களை புண்படுத்துவதாக அமையும். “வட‌க்கு தமிழர்கள் , மட்டக்களப்பு தமிழர்க்ளையோ / இந்திய வம்சாவளி தமிழர்களையோ மதிப்பதில்லை” என்று எழுதி இருக்கிறீர்கள். அது உண்மை. வட‌க்கு தமிழர்கள் தம்மையே மதிப்பது குறைவு. இனத்துவேசமும், சாதி வெறியும் வடக்கு தமிழரிடம் நிறையவே உண்டு. வடக்கு தமிழரின் சமுக உளநோய்களை தீர்ப்பது கடினமானது, ஆனால். இதற்கான முயற்சிகள் குறைவு.

Share this post

Link to post
Share on other sites
50 minutes ago, colomban said:

நாம் ஏன் சிங்கள்வர்களை இனத்திதுவேசம் பிடித்தவர்கள் என்று கூறுகின்றோம்? 
வட‌க்கு தமிழர்கள் , மட்டக்களப்பு தமிழர்க்ளையோ / இந்திய வம்சாவளி தமிழர்களையோ மதிப்பதில்லை அதேபோல் முஸ்லீம்களை சோனி என்று அழைத்தல் இவைகளும் ஒருவகையில் இனத்துவேசம் அல்லவா? 

யாழ்பாண தமிழர்களிடம் மோசமான இனதுவேசம் இருக்கிறது.

Share this post

Link to post
Share on other sites

இந்த கறுப்பர்கள் மீதான எங்கள் மக்களின் வித்தியாசமான பார்வையென்பது மற்றவர்களை கொஞ்சம் எங்களை விடக் குறைவாகப் பார்க்கும் ஒரு பொதுவான மனநிலையின் அங்கம் என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் ஜோர்ஜ் fப்லொய்ட் கொலைக்கான துலங்கலைக் கூட சிலர் நக்கலாக cynical ஆகப் பார்த்ததைக் கண்டேன். 

தோல் நிறம் முக்கியம் என்று நம்பும் ஒரு முட்டாள் வெள்ளைக்காரன், எங்கள் மண்ணிறத்தோலைப் பார்த்து எமக்கும் அநீதி செய்வான் என்று புரிந்து கொள்வது எவ்வளவு கடினமானது? 

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
On 16/7/2020 at 03:45, ரதி said:

அவர்களில் பெடியங்களை விட பெண்கள் பொல்லாதவர்கள் அத்தோடு உடல் வலிமை ,மன வலிமை கூடியவர்கள் 

ஆபிரிக்க பெண்கள் எங்களைவிட உடல்வலிமையானவர்களாகவோ மனவலிமையுடையவர்களகவோ இருக்கலாம், ஆனால் எதை வைத்து அவர்கள் பொல்லாதவர்கள் என கூறுகிறீர்கள்?. 

எங்களைவிட அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றி தெரியவேண்டுமானால் Azali எனும் ஒரு படம் சமீபத்தில் வெளிவந்தது அதைப்பாருங்கள். அதேபோல, Aman - The story of Somali Girl ,  The White Masai போன்ற நாவல்களில் அவர்களைப்பற்றி கூறுகிறார்கள். இதைவிடவும் வேறு வழிகள் மூலமும் பல விடயங்களை அறிந்து கொள்ளமுடியும்.

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை.

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆபிரிக்க பெண்கள் எங்களைவிட உடல்வலிமையானவர்களாகவோ மனவலிமையுடையவர்களகவோ இருக்கலாம், ஆனால் எதை வைத்து அவர்கள் பொல்லாதவர்கள் என கூறுகிறீர்கள்?. 

எங்களைவிட அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றி தெரியவேண்டுமானால் Azali எனும் ஒரு படம் சமீபத்தில் வெளிவந்தது அதைப்பாருங்கள். அதேபோல, Aman - The story of Somali Girl ,  The White Masai போன்ற நாவல்களில் அவர்களைப்பற்றி கூறுகிறார்கள். இதைவிடவும் வேறு வழிகள் மூலமும் பல விடயங்களை அறிந்து கொள்ளமுடியும்.

நீங்கள் சொல்வது உண்மை தான். நானும் கேள்விப்பட்டு உள்ளேன் ...நான் எழுதியது எனக்கு தெரிந்த இங்கிருக்கும் கறுப்பினத்தவரை பற்றித் தான் 
 
Share this post

Link to post
Share on other sites
On 14/7/2020 at 16:25, tulpen said:

 ஆனால் 2014 ல் நான் அங்கு சென்ற போது கண்ட விடயங்கள் எதிர் மாறாக இருந்தது.

முந்தைய யுகோஸ்லேவியாவின் எந்த பகுதி?

On 14/7/2020 at 16:25, tulpen said:

சுவிற்சர்லாந்தில்  யூகோஸலாவியரை தங்களை விட இழிந்தவர்கள் என்பதே இங்குள்ள தமிழர்கள்களின்  நினைப்பு. 

நான் அறிந்த வரை சுவிஸ் இல் உள்ள தமிழர்கள், யுகோ என்று தள்ளிவைப்பது அவர்களின் (அருவருக்க வைக்கும்) பழக்க வழக்கங்களினால், தம்மிலும் குறைவு அல்லது இழிந்தவர்கள் என்பதால் அல்ல.   

உ.ம். swiss நாட்டவரிடம் ஓர் பொதுவான பார்வை உண்டு, தமிழர்கள் சுவிஸ் கலாசாரத்துடன் சேர்ந்து வாழ்கிறார்கள் சில விதி விலக்குகள் உடன்.

ஆனால், யுகோ பிரிந்து வாழ்கிறார்கள்.

சுவிஸ் இல் உள்ளூர் மற்றும் கிராம நிகழ்வுகள் ஓர் கலாசாரமாக உண்டு. அவற்றில் தமிழர்கள் பிரசன்னமும் பங்கும் இருக்கும், யுகோ ஐ தேடியும் காணமுடியாத நிலை என்று.

நீங்கள் சுவிஸ் இல் இருப்பவர். உங்களின் புரிதல் இந்த அடிப்படையா?

Share this post

Link to post
Share on other sites
On 15/7/2020 at 17:38, விசுகு said:

மேலே நீங்கள்  எழுதியுள்ள  கருத்துடன்  உடன்படும்  அதேவேளை இது  தமிழர்களிடம்  மட்டுமே  இருக்கிறது என்பது  தவறு

ல  சப்பல்  வந்த  நீங்கள் அடுத்தமுறை என்னை  அழையுங்கள் 

2 நிமிட  நடையில் BARBES உட்பட  சில  பகுதிகளை  காட்டுகின்றேன்

விசுகர்! யூகோஸ்லாவியாவிலும் பல பின் தங்கிய இடங்கள் உண்டு.எமது ஊர்களை விட மோசமானதாக இருக்கும்.சில  இடங்களில் கால் வைக்கவே கூசும்.

வெளியிலை பாக்க எல்லாம் பியூட்டி புஃல். உள்ளுக்கு போனால்தான் தெரியும் கூத்து

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே அருகினில் நின்று அருள் புரியும் குகன் கந்தன் அருமையாய் அந்தரங்கத் திருக்கும் குகன் கருவிழி வள்ளி மானுக்குகந்த குகன் கந்தன் திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே துள்ளித் துள்ளி விளையாடும் பால முருகன் கந்தன் அள்ளி அள்ளி அருள் தரும் சீல முருகன் வள்ளியின் கரம் பிடித்த வேலன் முருகன் கந்தன் திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே மனமது கனிந்திடில் மருவும் குகன் கந்தன் கனவிலும் கண்சிமிட்டிக் காக்கும் குகன் தனதெனத் தான் பரிந்து பேசும் குகன் கந்தன் தனதெனத் தான் பரிந்து பேசும் குகன் கந்தன் திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே நீ ஆடு விளையாடு கூத்தாடு மயிலே விளையாடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே அருகினில் நின்று அருள் புரியும் குகன் கந்தன் ஆறுமுகம் கொண்ட சரவண முருகன் கூறுமடியார்கள் வினை தீர்க்கும் முருகன் கந்தன் கூறுமடியார்கள் குறை தீர்க்கும் முருகன் கந்தன் திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே ஆடு விளையாடு கூத்தாடு மயிலே கூத்தாடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே    
  • முருகா முருகா முருகா முருகா ... அரகரோகரா மால் மருகா மருகா மருகா மருகா ... அரகரோகரா... தணிகாசலனே தவமா மணியே ... அரகரோகரா வானவர் போற்றும் தீனதயாளா ... அரகரோகரா கதிர்காமத்துரை கதிர்வேல் முருகா ... அரகரோகரா கந்தா கடம்பா கார்த்திகேயா ... அரகரோகரா செந்திலாண்டவா செங்கல்வராயா ... அரகரோகரா சிவஷண்முகனே சேனைத் தலைவா ... அரகரோகரா அக்கினிகர்பா ஆறுபடை வீடா ... அரகரோகரா ஆவினங்குடிவாழ் அழகிய வேலா ... அரகரோகரா மயில் வாகனனே மாதவக் கொழுந்தே ... அரகரோகரா பழனியம் பதிவாழ் பாலகுமாரா ... அரகரோகரா சேவற் கொடியோய் செங்கதிர் வேலா ... அரகரோகரா சிவனார் மகனே செந்திலாதிபா ... அரகரோகரா முருகா முருகா முருகா ... அரகரோகரா மால் மருகா மருகா மருகா மருகா ... அரகரோகரா சாமிநாதா சக்தி வேலா ... அரகரோகரா மூவர் முதல்வா முத்துக் குமாரா ... அரகரோகரா வள்ளி மணாளா வானவர் வேந்தே ... அரகரோகரா வடிவேல் முருகா திருமால் மருகா ... அரகரோகரா... முருகா முருகா முருகா முருகா ... அரகரோகரா மால் மருகா மருகா மருகா மருகா ... அரகரோகரா...    
  • அதைகூட விளங்காமல் இவ்வளவு துள்ளு துள்ளுகின்றார்கள், பிரார்த்தனை செய்வதில் என்ன பிழை 🤔
  • சீரங்க ரங்க நாதனி்ன் பாதம் வந்தனம் செய்யடி! சீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி! இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடி, தென்றல் போல நீ ஆடடி! மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி,  தெய்வ பாசுரம் பாடடி! (சீரங்க) கொள்ளிடம் நீர்மீது நர்த்தனம் ஆடும்; மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்; செங்கனி மீதாடும் மாமரம் யாவும்; ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும்; அந்நாளில் சோழ மன்னர்கள் - ஆக்கி வைத்தனர் ஆலயம் அம்மாடி என்ன சொல்லுவேன் - கோவில் கோபுரம் ஆயிரம் தேனாக நெஞ்சை அள்ளுமே - தெய்வப் பூந்தமிழ்ப் பாயிரம் (சீரங்க) கன்னடம் தாய்வீடு என்றிருந்தாலும் கன்னி உன் மறுவீடு தென்னகமாகும்! கங்கையின் மேலான காவிரி தீர்த்தம் மங்கல நீராட முன்வினை தீர்க்கும்! நீர் வண்ணம் எங்கும் மேவிட - நஞ்சை புஞ்சைகள் பாரடி ஊர் வண்ணம் என்ன கூறுவேன் - தெய்வ லோகமே தானடி வேறெங்கு சென்ற போதிலும் - இந்த இன்பங்கள் ஏதடி (சீரங்க)