Jump to content

இந்தியா தொடர்பில்  சம்பந்தனின் தடுமாற்றம் - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தொடர்பில்  சம்பந்தனின் தடுமாற்றம் - யதீந்திரா

பொதுவாக தேர்தல் காலங்களில்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு, குறிப்பாக இராஜவரோதயம் சம்பந்தனுக்கு இந்தியாவின் ஞாபகம் வருவதுண்டு. அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் பேசும்போது, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தங்களுக்கு பின்னால் இந்தியா இருப்பதாக தெரிவித்திருக்கின்றார். ஆனால் ரணில்-மைத்திரி அரசாங்கத்துடன் தேனிலவில் மெய்மறந்திருந்த காலத்தில் சம்பந்தனுக்கு இந்தியாவின் நினைவு எழவில்லை. கடந்த ஜந்து வருடகால ரணில்-மைத்திரி ஆட்சியில் கிட்டத்தட்ட, இந்தியா என்று ஒரு நாடு இருப்பதையே சம்பந்தனும் அவரது சகாக்களும் மறந்;திருந்தனர்.

புதுடில்லிக்குச் சென்றால் சிங்களவர்கள் கோபிப்பார்கள் என்பதே சம்பந்தனின் நிலைப்பாடாக இருந்தது. சம்பந்தனின் அண்மைக்கால நடவடிக்கைகளை அவதானித்தால் ஒரு விடயம் தெளிவாகும். அதாவது, இந்தியாவின் தலையீடின்றியே தன்னால் ஒரு அரசியல் தீர்வை காணமுடியும் என்பதே அவரது அரசியல் புரிதலாக இருந்தது. ரணிலுடன் உறவாடுவதன் ஊடாக, புதிய அரசியல் யாப்பொன்றை கொண்டுவர முடியுமென்று சம்பந்தன் அப்பாவித்தனமாக நம்பினார். இதன் காரணமாக ரணிலின் நிகழ்சிநிரலுக்கு முற்றிலுமாக ஒத்துழைத்தார். தற்போது அனைத்து முயற்சிகளும் தோல்விடைந்திருக்கும் நிலையில்தான் மீண்டும் இந்தியாவை நோக்கி கைநீட்டுகின்றார். 2015இல், ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இடம்பெற்ற, சம்பந்தன் (சுமந்திரன்) – ரணில் உறவாடல் கிட்டத்தட்ட, ஒஸ்லோ பேச்சுவார்த்தைக்கு ஒப்பானது. ஓஸ்லோ பேச்சுவார்த்தையின் போதும் இந்தியா வெறும் பார்வையாளராகவே இருந்தது. அதே போன்றுதான் கூட்டமைப்பின் புதிய அரசியல் யாப்பு முயற்சியின் போதும் இந்தியா வெறும் பார்வையாளராகவே இருந்தது. இந்தியா பார்வையாளராக இருக்கின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் தமிழர்கள் எந்தவொரு விடயத்தையும் அடைய முடியவில்லை என்பதே வரலாறு. நோர்வேயின் மத்தியஸ்தத்தில் இந்தியா தலையீடு செய்யவில்லை ஆனால் அனைத்தையும் அவதானித்துக் கொண்டிருந்தது. பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வழங்கிய நோர்வே, இந்தியாவின் ஆற்றல் தொடர்பில் மிகவும் தெளிவாக இருந்தது. இதன் காரணமாகவே ஒவ்வொரு விடயங்களையும் உடனுக்குடன் புதுடில்லிக்குத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தது. இது தொடர்பில் நோர்வே மத்தியஸ்த்திற்கு தலைமை தாங்கிய எரிக்சொல்கெய்ம் கூறியிருக்கும் ஒரு விடயம் இங்கு ஆழ்ந்து கவனிக்கத்தக்கது.

பி.ஜே.பி தலைவரும் வெளிவிவகார அமைச்சருமான ஜஸ்வந்த சிங்காவை சந்தித்தோம். அவர் பழகுவதற்கு இனிமையானவராகத் தெரிந்தார். நாங்கள் ஒருவாறு பரீட்சையில் சித்தியடைந்துவிடலாம் என்று எண்ணினேன். அவர் பேசத் தொடங்கினார். உங்களிடம் எனக்கு ஒரு கேள்வியிருக்கின்றது. நீங்கள் பொறுமைசாலிகளா? நோர்வேஜியர்கள் பொறுமைசாலிகள் இல்லை – நாங்கள் இந்த பிரச்சினையை விரைவாக தீர்க்க எண்ணியுள்ளோம் என்று நான் பதிலளித்தேன். இதற்கு சிங்காவின் பதில் தெளிவாக இருந்தது – அப்படியென்றால், விரைவாக விமான நிலையத்தை அடையக் கூடிய கார் ஒன்றை எடுங்கள். நீங்கள் எடுத்திருக்கும் விமானச்சீட்டு ஒரு வழிப் பயணத்துக்குரியதுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஜரோப்பாவை சென்றடையுங்கள். ஏனெனில் இலங்கைப் பிரச்சினைக்கு நீங்கள் விரைவாக தீர்க்க முடியுமென்று எண்ணினால் விடங்களை சிக்கலுக்குள்ளாக்குவீர்கள். இந்தப் பிரச்சினை மீது, ஒரு பத்து வருடங்களை நீங்கள் செலவிட்டாலும் கூட, அப்போதும் நிலைமைகள் மிகவும் சிக்கலானதாகவே இருக்கும். அப்போதும் கூட நீங்கள் ஒரு பங்களிப்பை மட்டுமே வழங்கியவர்களாக இருப்பீர்கள்’
இதனை நினைவுபடுத்தும் சொல்கெய்ம், அவர் சரியாகவே கூறியதாகக் குறிப்பிடுகின்றார். உண்மையில் தனது மேலாதிக்கமுள்ள பிராந்தியத்திற்குள் ஒரு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை. இதனையும் சொல்கெய்ம் ஒரு இடத்தில் பதிவு செய்திருக்கின்றார். எனினும் இந்தியா நோர்வேயின் மத்தியஸ்தத்தை குழப்பவில்லை. அனைத்தையும் அவதானித்துக் கொண்டிருந்தது. இந்த விடயங்கள் ‘உள்நாட்டு யுத்தம் ஒன்றின் முடிவுக்காக’ என்னும் நூலில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது.

modi_tna_004

தமிழர் பிரச்சினைக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவையென்று இப்போதும் குரல்கள் எழுகின்றன. ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது, இந்தியாவை தவிர்த்து எந்தவொரு மூன்றாம் தரப்பின் முயற்சிகளும் இலங்கை விடயத்தில் வெற்றியளிக்காது. இது தொடர்பில் தமிழர் தரப்பிடம் தெளிவான பார்வை இருக்க வேண்டியது அவசியம்.

இப்போது சம்பந்தனின் விடயத்திற்கு வருவோம். கடந்த ஜந்து வருடங்களாக சம்பந்தன் இந்தியாவை வேண்டா விருந்தாளியாகவே கருதினார். கொழும்புடன் உறவுகளை பலப்படுத்திக் கொள்வதன் மூலம் மட்டும், தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை காணலாமென்று சிந்தித்தார். இன்று இந்தியா தங்களின் பக்கமாக நிற்பதாக கூறும் சம்பந்தன் கடந்த ஒரு தசாப்தகாலத்தில் இந்தியா தொடர்பான மூலோபாய விடயங்களில் எத்தகைய கரிசனையை வெளிப்படுத்தியிருக்கின்றார்?

மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில், திருகோணமலை சம்பூரில் அனல் மின்நிலையம் ஒன்றை நிர்மானிப்பது தொடர்பில் இந்தியா ஆர்வம் காண்பித்தது. உண்மையில் அவ்வாறானதொரு திட்டத்திற்கான முன்மொழிவை வரதராஜப் பெருமாள் தலைமையிலான வடக்கு கிழக்கு மாகாணசபைதான் முன்வைத்திருந்தது. எனினும் உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. யுத்தம் முடிவுற்றதும் மீண்டும் அந்தத் திட்டம் தொடர்பில் விவாதிக்கப்பட்டது. எனினும் அப்பகுதி மக்கள் அதனை விரும்பவில்லை. உண்மையில் மக்கள் ஒரு திட்டத்தை எதிர்த்தால் அதன் பின்னர் எந்தவொரு நாடும் முதலீடு செய்ய விரும்பாது. மேலும் அதனால் இந்தியாவிற்கு பொருளாதார ரீதியில் எந்தவொரு நன்மையும் இல்லை. சம்பந்தன் உண்மையிலேயே இந்தியாவின் நண்பராக இருந்திருந்தால், மாற்று யோசனை ஒன்றை இந்தியாவிடமே கொடுத்திருக்கலாம். அல்லது அதனை கைவிடுமாறு கேட்டிருக்கலாம். ஆனால் சம்பந்தன் செய்ததோ வேறு. இந்தியத் தூதரகத்திற்கு ஒரு கதையையும் ரணில் – மைத்திரிக்கு பிறிதொரு கதையையும் கூறியிருந்தார். என்னுடைய பிணத்தின் மீதுதான் நீங்கள் அனல்மின்நிலையத்தை கட்டவேண்டும் என்று ரணிலிடம் கூறியிருக்கின்றார். இதனை ரணில் இந்தியத் தூதரகத்திடம் கூறியிருக்கின்றார். இது தூதரக வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதனை கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவர் இந்தப் பத்தியாளரிடம் உறுதிப்படுத்தினார்.

2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் வெளிச் சக்திகளின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யவில்லை. ஆட்சி மாற்றத்தின் மூலம் ஓரளவு சீனாவை தடுத்து நிறுத்தலாமென்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கூட, அந்த எதிர்பார்ப்புக்கள் நிறைவேறவில்லை. மேற்குலகின் நண்பரான ரணில்விக்கிரமசிங்க அதிர்ச்சியளிக்கத்தக்க வகையில் இலங்கையை மேலும் சீனாவின் பிடிக்குள் தள்ளிவிட்டார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கினார். இது இந்திய மற்றும் அமெரிக்க மூலோபாய சமூகங்கள் மத்தியில் அதிக விசனத்தை ஏற்படுத்தியது. இதில் பலரும் பார்க்கத் தவறும் ஒரு விடயமுண்டு. உண்மையில் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தச் செயலுக்கு பின்னால் சம்பந்தனும் இருந்தார். ஏனெனில் இவ்வாறானதொரு பாரதூரமான மூலோபாயத் தவறை செய்யமுற்படும் ரணிலை சம்பந்தன் பாதுகாத்தார். ஆகக் குறைந்தது பாராளுமன்றத்தில் கூட ரணிலின் இந்த நகர்வை கூட்டமைப்பு விமர்சிக்கவில்லை. இது இந்தியாவின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானது என்பதை தெரிந்திருந்தும் சம்பந்தன் இது தொடர்பில் மௌனமாகவே இருந்தார். உண்மையில் ரணிலின் இந்த நகர்வுடன்தான் மேற்கு ரணிலை முற்றிலும் கைவிட்டது. மகிந்த ராஜபக்ச சீனாவை நோக்கி அதிகம் சாய்கின்றார் என்னும் அடிப்படையில்தான் இந்திய –அமெரிக்க கூட்டணி மகிந்த ஆட்சியின் மீது அதிருப்திகொண்டது. ஆனால் இந்திய – மேற்குலகின் நண்பர்களாக இருப்பார்கள் என்று நம்பிய ரணிலோ நிலைமையை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியிருக்கின்றனர்.

சம்பந்தன் உண்மையிலேயே யாருடை நண்பர்? பொதுவாக சம்பந்தனை இந்தியாவிற்கு ஆதரவானவராக பார்க்கும் ஒரு போக்குண்டு. ஆனால் சம்பந்தனின் செயற்பாடுகளை உற்றுநோக்கினால், அவ்வாறு தெரியவில்லை. சம்பந்தனின் அண்மைக்கால செயற்பாடுகள் அனைத்துமே இந்தியாவிற்கு எதிராகவே இருந்திருக்கின்றது. ஒரு விடயத்தில் ஒருவரது ஆதரவு அல்லது எதிர்ப்பை அவரது செயற்பாடுகளின் மூலம்தான் அளவிட முடியும். சம்பந்தனின் நடவடிக்கைகள் அவர் இந்தியாவின் நண்பர் என்பதை நிரூபிப்பதற்கு போதுமானதாக இல்லை. இந்தியா தமிழ் மக்களுடன் நிற்கவேண்டுமென்றால் தமிழர்களும் இந்தியாவுடன் நிற்கவேண்டும். சம்பந்தனின் பசப்பு வார்த்தைகளை நம்பும் நிலையில் நிச்சயம் இந்தியா இருக்கப் போவதில்லை.

 

http://www.samakalam.com/blog/இந்தியா-தொடர்பில்-சம்ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தெரிகிறதா,

இந்தியா ஈழத்தமிழர் விடையத்தில் ஒரு இழுவல் போக்கையே கடைப்பிடிக்கத் தீர்மானித்துள்ளது என்பதை அதனது ஊதுகுழலே கூறுகிறது.

Link to comment
Share on other sites

ஆக  இந்தியாவிற்கு பின்னால் தமிழர்கள் “வால்பிடிக்க” வேண்டுமென்றா கட்டுரையாளர் விரும்புகின்றார்??!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பழுவூர்கிழான் said:

ஆக  இந்தியாவிற்கு பின்னால் தமிழர்கள் “வால்பிடிக்க” வேண்டுமென்றா கட்டுரையாளர் விரும்புகின்றார்??!!

இந்தியாவின் மேலாதிக்கமுள்ள பிராந்தியத்திற்குள் அவர்களைத் தவிர்த்து ஒன்றும் செய்யமுடியாது என்பதை சிங்கள அரசியல்வாதிகள் புரிந்துள்ளனர். அதனால்தான் ஆட்சிக்கு வரும் சிங்களத் தலைவர்கள், கோத்தபாய உட்பட, இந்தியாவுக்கு முதலில் பயணிக்கின்றனர். அவர்கள் வால்பிடிக்கப் போவதில்லை. தமது நோக்கங்களில் தெளிவாகவே உள்ளனர்.

சிங்களவர்கள் சீனாவையும், இந்தியாவையும், மேற்குநாடுகளையும் இராஜதந்திர ரீதியில் கையாண்டு இலங்கைத் தீவை சிங்கள பெளத்த மேலாதிக்கத்திற்குள் தக்கவைத்துள்ளனர். ஆனால் தமிழ் அரசியல் தலைமைகள் சுயமாக சிந்திப்பதில்லை. ஒன்றில் மேற்குநாடுகள் சொல்லுவதைக் கேட்டு அவர்களின் நிகழ்ச்சி நிரல்படி நடக்கின்றனர். இல்லாவிட்டால் இந்தியாவின் ஆணையை ஏற்று நடக்கின்றனர். இந்த தலைமைகள் தமிழர்களின் பலம் என்ன என்பதை உணர்ந்து, அதை வைத்து இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளும் சாணக்கியம் இல்லாத spent forces.  அரசியலில் இருந்து ஒதுங்கி, அல்லது ஒதுக்கப்பட்டால்தான் தமிழர்களுக்கு ஏதாவது தீர்வுகிட்டும். அதற்கு, இந்தியா, மேற்குநாடுகள், ஏன் சீனாவைக் கூட கையாளக்கூடியதும் தமிழ்த் தேசியத்தில் உண்மையான பற்றுள்ளதுமான புதிய, இளைய தலைவர்கள் வரவேண்டும்.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/7/2020 at 02:31, கிருபன் said:

இந்தியா தொடர்பில்  சம்பந்தனின் தடுமாற்றம் - யதீந்திரா

இந்தியா தமிழ் மக்களுடன் நிற்கவேண்டுமென்றால் தமிழர்களும் இந்தியாவுடன் நிற்கவேண்டும். சம்பந்தனின் பசப்பு வார்த்தைகளை நம்பும் நிலையில் நிச்சயம் இந்தியா இருக்கப் போவதில்லை.

 

http://www.samakalam.com/blog/இந்தியா-தொடர்பில்-சம்ப/

தமிழர் இந்தியாவை நம்புவதற்கு ஏதாவது ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு காரணத்தை சமர்க்களத்தால் காட்ட முடியுமா ?

அல்லது இந்தியா தமிழர் தரப்புடன் நின்ற ஒரு சந்தர்ப்பத்தைத்தானு சமர்க்களத்தால் காட்ட முடியுமா ? 

உண்மை நிலவரம் அப்படி இருக்க, தமிழர் தரப்பு ஏன் இந்தியா எங்களுடன் நிற்க வேண்டும் என எதிர்பார்க்க வேண்டும் ? 

சற்றுக் கவனியுங்கள்,

இந்தியாவைச் சுற்றியுள்ள சகல நாடுகளும் , நேபாளம், பங்களாதேசம்,  பாகிஸ்தான், மாலைதீவு, இலங்கை உட்பட எதுவுமே இந்தியாவின் பிடியில் / இந்தியாவுடன் நட்புடன் இல்லை. 

சூழ்நிலை இப்படி இருக்க தமிழர் தரப்பிடம்தான் இந்தியா இறங்கி வரவேண்டுமே தவிர தமிழர் தரப்பு இந்தியாவிடம் கையேந்துவதற்கு எதுவுமே இல்லை.

ஏனென்றால்,

இழப்பதற்கு எங்களிடம் எதுவுமே இல்லை.ஆனால் இழப்பதற்கு இந்தியாவிடம் எல்லாமுமேயுண்டு.

😏

 

 

 

On 16/7/2020 at 14:29, கிருபன் said:

இந்தியாவின் மேலாதிக்கமுள்ள பிராந்தியத்திற்குள் அவர்களைத் தவிர்த்து ஒன்றும் செய்யமுடியாது என்பதை சிங்கள அரசியல்வாதிகள் புரிந்துள்ளனர். அதனால்தான் ஆட்சிக்கு வரும் சிங்களத் தலைவர்கள், கோத்தபாய உட்பட, இந்தியாவுக்கு முதலில் பயணிக்கின்றனர். அவர்கள் வால்பிடிக்கப் போவதில்லை. தமது நோக்கங்களில் தெளிவாகவே உள்ளனர்.

சிங்களவர்கள் சீனாவையும், இந்தியாவையும், மேற்குநாடுகளையும் இராஜதந்திர ரீதியில் கையாண்டு இலங்கைத் தீவை சிங்கள பெளத்த மேலாதிக்கத்திற்குள் தக்கவைத்துள்ளனர். ஆனால் தமிழ் அரசியல் தலைமைகள் சுயமாக சிந்திப்பதில்லை. ஒன்றில் மேற்குநாடுகள் சொல்லுவதைக் கேட்டு அவர்களின் நிகழ்ச்சி நிரல்படி நடக்கின்றனர். இல்லாவிட்டால் இந்தியாவின் ஆணையை ஏற்று நடக்கின்றனர். இந்த தலைமைகள் தமிழர்களின் பலம் என்ன என்பதை உணர்ந்து, அதை வைத்து இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளும் சாணக்கியம் இல்லாத spent forces.  அரசியலில் இருந்து ஒதுங்கி, அல்லது ஒதுக்கப்பட்டால்தான் தமிழர்களுக்கு ஏதாவது தீர்வுகிட்டும். அதற்கு, இந்தியா, மேற்குநாடுகள், ஏன் சீனாவைக் கூட கையாளக்கூடியதும் தமிழ்த் தேசியத்தில் உண்மையான பற்றுள்ளதுமான புதிய, இளைய தலைவர்கள் வரவேண்டும்.

நாங்கள் ஏன் இந்தியாவை நம்பவேண்டும் ? 

இந்தியாவை நம்புவதற்கு ஒரு காரணமும் இல்லை

""சாட்சிக்காறனின் காலில் விழுவதைவிட, சண்டைக்காறனின் காலில் விழலாம்""

 

😏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிருபனின் மணிக்கூடு என்ன சொல்லுதோ தெரியாது?
    • உங்க‌ளுட‌ன் சேர்த்து 17 உற‌வுக‌ள் போட்டியில் க‌ல‌ந்து இருக்கின‌ம்🙏🥰................................  
    • நித‌ர்ச‌ன‌ உண்மை ப‌ற‌க்கும் ப‌டை இல்லை தூங்கிம் ப‌டை...................இந்த‌ தேர்த‌ல் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ வில்லை சென்னையில் போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌ர் ஈவிம் மிசிலில்  மைக் சின்ன‌த்தை ஒரு ஜ‌யா அம‌த்த‌ மைக் சின்ன‌ம் வேலை செய்ய‌ வில்லை இவ‌ர்க‌ள் அதை த‌ட்டி கேட்க்க‌ ப‌தில் இல்லை  கைது செய்து பிற‌க்கு விடுவித்த‌ன‌ர்.................எம்பி தேர்த‌லில் நிக்கும் வேட்பாள‌ர் அவ‌ரின் தொகுதியில் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு விழ‌ வில்லை என்றால் அது தேர்த‌ல் ஆணைய‌த்தின் பிழை............................விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் ம‌ற்றும் வைக்கோவுக்கு திருமாள‌வ‌னுக்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்  அனைத்தும் உண்மை புல‌வ‌ர் அண்ணா....................அந்த‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் ஏதாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்த‌தை பார்த்திங்க‌ளா ஒரு ஊட‌க‌த்திலும் காண‌ வில்லை..................எல்லாம் போலி நாட‌க‌ம்................................
    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.