Jump to content

தீர்வுக்காக அரசிடம் அடிபணிய மாட்டோம் என்கிறார் சம்பந்தன்.!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வுக்காக அரசிடம் அடிபணிய மாட்டோம் என்கிறார் சம்பந்தன்.!

1594753938_sam.jpg

"தமிழர்கள் இந்த நாட்டின் பிரஜைகள். எனவே, தமிழர்களுக்கான உரிமைகளை, அரசியல் தீர்வை அரசு வழங்கியே ஆகவேண்டும். அது அரசின் கடமையாகும். அதற்காக அரசிடம் நாம் அடிபணியமாட்டோம்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

"சர்வதேச சமூகம் இன்று தமிழர்களின் பக்கமே நிற்கின்றது. எங்கள் நியாயமான கோரிக்கைகளை சர்வதேச சமூகம் ஏற்றபடியால்தான் அது எங்கள் பக்கம் நிற்கின்றது" எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

திருகோணமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"எந்த அரசு ஆட்சியமைத்தாலும் அந்த அரசுடன் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் பேச்சு நடத்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது. கடந்தகால அனுபவங்களைக் கருத்தில்கொண்டு புதிய அரசுடன் நாம் பேச்சு நடத்துவோம். சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இந்தப் பேச்சு நடத்தப்படும்.

தமிழ் மக்கள் விரும்பும் நியாயமான தீர்வை வழங்க அரசு முன்வந்தால் அதை நாம் மனதார ஏற்போம். ஒருமித்த நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான தீர்வையே தமிழர்கள் விரும்புகின்றார்கள் என்பதை கடந்த அரசிடமும் இந்த அரசிடமும் நாம் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம்.

எனவே, எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்கள் விரும்பும் தீர்வைத் தந்தே ஆகவேண்டும். இல்லையேல் சர்வதேசம் அடுத்தகட்ட நடவடிக்கைளை எடுக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு மேசைக்குச் செல்ல வேண்டுமெனில் அசைக்க முடியாத பலத்துடன் செல்ல வேண்டும். எனவே, கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கடந்த தடவையை விட இந்தத் தடவை மேலும் அதிகரிக்கச் செய்ய நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் 'வீடு' சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும்" - என்றார்.

http://aruvi.com/article/tam/2020/07/14/14452/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வுக்காக அடிபணியப்போவதில்லை. சலுகைக்காக அடிபணிவோம். என்னே தெளிவு 😏

Link to comment
Share on other sites

3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எனவே, எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்கள் விரும்பும் தீர்வைத் தந்தே ஆகவேண்டும். இல்லையேல் சர்வதேசம் அடுத்தகட்ட நடவடிக்கைளை எடுக்கும்.

ஏன் சும்மிடம் இருந்த நம்பிக்கை சம்முக்கும் போய்விட்டதா...😲

Link to comment
Share on other sites

17 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

"தமிழர்கள் இந்த நாட்டின் பிரஜைகள். எனவே, தமிழர்களுக்கான உரிமைகளை, அரசியல் தீர்வை அரசு வழங்கியே ஆகவேண்டும். அது அரசின் கடமையாகும். அதற்காக அரசிடம் நாம் அடிபணியமாட்டோம்."

சம்மந்தன் தனது வாழ்நாள் முழுவதும் தமிழின விரோதிகளின் அடிமையாக செயற்படாதே வரலாறு!

இப்போது தேர்தலில் ஏமாறக்கூடிய பாமர மக்களை ஏமாற்றி வாக்குகளைக் கவர இப்படியான தனக்கு சம்பந்தமே இல்லாத பொய்களை தாராளமாக உளறுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

"சர்வதேச சமூகம் இன்று தமிழர்களின் பக்கமே நிற்கின்றது. எங்கள் நியாயமான கோரிக்கைகளை சர்வதேச சமூகம் ஏற்றபடியால்தான் அது எங்கள் பக்கம் நிற்கின்றது" எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குதிரை கஜாவை விட மோசமான நிலைக்கு ஐயா போய்விட்டார்,
என்னே பரிதாபம் ..கஜா தமிழர்களுக்கு ஆதரவான சக்திகள் என்று தமிழர் தலையில் மிளகாய் அரைக்க பார்த்தார், ஐயா சர்வதேச சமூகம் என்று அரைக்க வெளிக்கிட்டிருக்கிறார்,
கூத்தமைப்பு அரசியல்  வங்குரோத்தின் உச்சத்தில், இம்முறை உறைக்க உறைக்க கிழக்கில் பாடம் படிப்பிக்கப்படும்   

Link to comment
Share on other sites

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

குறிப்பாக சம்மந்தன் போன்ற நீண்டகால முட்டுக்கொடுப்பு ஒட்டுண்ணி அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டப்படும் வகையில்  அவர்கள் தோற்கடிக்கப்படாவிட்டால் கிழக்கின் நிலை இன்னமும் மோசமடையும்.

கிழக்கு மக்களின் திருகோணமலை மக்களின் அரசியல் விழிப்புணர்ச்சியில் இவை தங்கியுள்ளது.

Link to comment
Share on other sites

2 hours ago, போல் said:

இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன என்ற நிலையில் இன்று ஈழத் தமிழ்மக்கள் உள்ளனர். உலகில் தமிழ் என்றுமே அழியாது. ஆனால் தமிழர் நாங்கள், ஈழத்தில் ஒன்றுபடாமல் இருந்து, எங்களை நாங்களே அழித்துக்கொள்வோம் என்பதுமட்டும் நிச்சயம். 😲 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/7/2020 at 10:04, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தீர்வுக்காக அரசிடம் அடிபணிய மாட்டோம் என்கிறார் சம்பந்தன்.!

காசுக்கு அடி பணிவோம் என்கிறாரோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.