Jump to content

கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்


Recommended Posts

கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்!

தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன?

புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.

தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன?

தேங்காய்ப் பால் உடல் வன்மைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

மாதவிடாயின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்குக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.

மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய்ப் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங்கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் சிறந்த நஞ்சு முறிவு.

தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள்

பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.

தைலங்கள்; தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

எளிதில் ஜீரணமாகும்: தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகச, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.

பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

வயிற்றுப் புண்கள்: தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு (Ulcer) தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி?

மீடியம் செயின் ஃபேட்டி ஆசிட் (Medium Chain Fatty Acid) தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid)மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக்கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.

வைரஸ் எதிர்ப்பு: தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism)பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.

ஆண்மைப் பெருக்கி: முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் உள்ள வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.

குழந்தை சிவப்பு நிறமாக... குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்கவேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?

மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம்.

இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை (Electoral Imbalance) இளநீர் சரி செய்கிறது.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.

இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் "ஜெல்' என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.

இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.

இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிடவேண்டும்.

நன்றி

தினமணி

Link to comment
Share on other sites

கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்!

????

தகவல்களிற்கு நன்றி! (குறிப்பாக இளநீர் விசயத்திற்கு)

மேலும் தேங்காய் கொழுப்பை கரைக்குமா அல்லது கூட்டுமா? இங்கு எந்தக் கொழுப்பைப் பற்றி பேசப்படுகின்றது? உடற்கொழுப்பா அல்லது மனதில் உள்ள கொழுப்பா?

தேங்காயை உடைக்கும் போது வரும் இளநீர் குடிக்கக்கூடாது என்று வீட்டில் சொல்வார்கள். ஏன் என்று தெரியவில்லை. ஊரில் உள்ள போது வீட்டைச் சுற்றி தென்னை மரங்கள். எமது வேறு வளவுகளிலும் தென்னை மரங்கள்... பக்கத்து வீட்டில் நிறைய செவ்விளநீர் மரங்கள். ஆக்கள் இல்லாத நேரங்களில் நைசாக பக்கத்துவீட்டு மரத்தில் ஏறி செவ்விளநீரை பிடுங்கிக் கொண்டு ஓடிவந்துவிடுவோம்.

இதில் இன்னொரு பகிடி... எமது வளவிலேயே தென்னை மரத்தில் ஏறி முட்டுக்காய்கள் களவெடுப்போம். வீட்டில் அப்பா எமது வளவுகளிலுள்ள தென்னை மரத்தில் இளம் காய்களை ஆய்வதற்கு விடமாட்டார். எமக்கு அப்போது ரெண்டு குளப்படிக்காரப் பெடியன்களுடன் சினேகிதம் (நாங்கள் நல்ல பிள்ளைகளாக்கும்). அப்போது என்ன செய்வமென்றால், நாங்களே முதலில் எமது காணியிலுள்ள பல முட்டுக்காய்களை தென்னை மரத்தில் ஏறி களவாக பிடுங்கிவிட்டு பின், ஓடிப்போய் அப்பாவை எமது வளவில் யாரோ கள்ளர் தேங்காய் பிடுங்கிப் போட்டாங்கள் என்று சொல்லி கூட்டிவருவோம். அப்பாவும் யாரோ கள்ளர் எமது தென்னை மரத்தில் ஏறீட்டாங்கள் என்று எமக்கு பின்னால் ஓடிவருவார். பின் தேங்காய்களை எடுத்துக்கொண்டு அப்பா பிறகு முட்டுக்காய்களை எங்களிடமே சாப்பிடுவதற்கு தந்துவிடுவார். நாங்கள் முட்டுக்காய்களை உடைத்து இளநீரைக் குடித்துவிட்டு மெல்லிய வழுக்கையை வளித்து சாப்பிடும் போது அந்தமாதிரி இருக்கும்.. பிறகு வயிறு முட்டியதும் பந்து, மட்டை, விக்கெற்றுகளைத் தூக்கிக் கொண்டு விளையாடப் போய் விடுவோம்...

தேங்காயை நினைக்க பல நினைவுகள் மனதில் வருகின்றது... எழுதவெளிக்கிட்டால் தொடர்கதையாகிவிடும்...

பி/கு: இதைவாசித்துவிட்டு என்னை ஒருவரும் பட்டிக்காடு என்று நினைக்கவேண்டாம். களவும் கற்று மற என்று சொல்லி இருக்கின்றார்கள். நாம் சிறுவயதில் கற்று மறந்துவிட்டோம். இங்கு வெள்நாடுகளில் ஏறுவதற்கு எலிவேட்டரை தவிர தென்னை மரமோ பனை மரமோ ஒன்றும் இல்லை...

Link to comment
Share on other sites

மன்னிக்கவும்... நான் இவ்வளவு கூறி உள்ளதால் சிலர் என்னை சோமபானத்துடனும் கற்பனை செய்யக்கூடும்.. (எமது வளவு தென்னை, பனைகளில் ஏறி களவாக சோமபானம் குடிப்பது போல்) ஆனால், எனக்கு பிறந்ததில் இருந்து இவற்றின் சுவை தெரியாது. குடி, புகைத்தல் பழக்கம் நமக்கு அறவே இல்லை. நாக்கில் ஒரு துளி டேஸ்ட் பண்ணிப் பார்த்துக்கூட பழக்கம் இல்லை. எமது வீட்டிலும் ஒருவருக்கும் இந்தப் பழக்கங்கள் இல்லை. ஆனால், விருந்தினர்கள் தாமாகக் கேட்கும்போது அவர்களிற்கு மனம் கோணாது இருப்பதற்காக சோமபானம் வாங்கிக்கொடுப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பிள்ளகள் இதை கொஞ்சம் மகிந்தா குடிக்க சொன்ன என்ன?புத்து சொன்ன்வர் என்று சொல்லிவிடுங்கோ

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி இப்ப முடிவா என்ன சொல்லுறிங்கள்.தேங்காய் கொழுப்பை கூட்டுமா குறைக்குமா :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்னையிலிருந்து வடிக்கப்படும் சோமபானத்தைப் பற்றி யாராவது...... :D

:D:D:D:(:(:(:(:(

Link to comment
Share on other sites

அதெல்லாம் சரி இப்ப முடிவா என்ன சொல்லுறிங்கள்.தேங்காய் கொழுப்பை கூட்டுமா குறைக்குமா :D

மீடியம் செயின் ஃபேட்டி ஆசிட் (Medium Chain Fatty Acid) தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid)மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு :D தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக்கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.

Link to comment
Share on other sites

மீடியம் செயின் ஃபேட்டி ஆசிட் (Medium Chain Fatty Acid) தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid)மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு :D தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக்கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.

யார் குட்டிமாமா இந்த ஆய்வை செய்தது

:P

Link to comment
Share on other sites

மீடியம் செயின் ஃபேட்டி ஆசிட் (Medium Chain Fatty Acid) தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid)மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு :D தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக்கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.

****************

உங்கள் தகவலுக்கு நன்றி, ஏனென்றால் இவை எனக்கு அவசியமானவை.

Link to comment
Share on other sites

  • 3 years later...

என்னப்பா இது தேங்காயைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்கிறார்கள். தேங்காயில் கொழுப்பு உண்டா? இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக தேங்காய் கொழுப்பை குறைக்குமா :unsure:

Link to comment
Share on other sites

Health Benefits of Coconut Oil

The health benefits of coconut oil include hair care, skin care, stress relief, maintaining cholesterol levels, weight loss, increased immunity, proper digestion and metabolism, relief from kidney problems, heart diseases, high blood pressure, diabetes, HIV and cancer, dental care, and bone strength. These benefits of coconut oil can be attributed to the presence of lauric acid, capric acid and caprylic acid, and its properties such as antimicrobial, antioxidant, antifungal, antibacterial, soothing, etc.

How is Lauric Acid Used by our body?

The human body converts lauric acid into monolaurin which is claimed to help in dealing with viruses and bacteria causing diseases such as herpes, influenza, cytomegalovirus, and even HIV. It helps in fighting harmful bacteria such as listeria monocytogenes and heliobacter pylori, and harmful protozoa such as giardia lamblia. As a result of these various health benefits of coconut oil, though its exact mechanism of action was unknown, it has been extensively used in Ayurveda, the traditional Indian medicinal system. The Coconut Research Center has compiled various references on scientific research done on coconut oil.

Before we move on to the benefits of coconut oil in detail, let us understand its composition.

Composition of Coconut Oil: Coconut oil consists of more than ninety percent of saturated fats (Don’t panic! First read to the last word. Your opinion may change), with traces of few unsaturated fatty acids, such as monounsaturated fatty acids and polyunsaturated fatty acids. Virgin Coconut Oil is no different from this. Let us have a bit detailed study of this.

The Saturated Fatty Acids: Most of them are Medium Chain Triglycerides, which are supposed to assimilate well. Lauric Acid is the chief contributor, with more than forty percent of the share, followed by Capric Acid, Caprylic Acid, Myristic Acid and Palmitic.

The Polyunsaturated Fatty Acids: Linoleic Acid.

The Monounsaturated Fatty Acids: Oleic Acid.

The Poly-phenols: Gallic Acid, which is phenolic acid. These poly-phenols are supposed to be responsible for the fragrance and the taste of Coconut Oil and Virgin Coconut Oil is rich in these poly-phenols.

Certain derivatives of fatty acid like Betaines, Ethanolamide, Ethoxylates, Fatty Esters, Fatty Polysorbates, Monoglycerides and Polyol Esters.

Fatty Chlorides, Fatty Alcohol Sulphate and Fatty Alcohol Ether Sulphate, all of which are derivatives of Fatty Alcohols.

Vitamin-E and Vitamin K and minerals such as Iron.

fattyacidcomposition.jpg

Let us now explore the benefits of coconut oil in detail:

Hair Care: Coconut oil is one of the best natural nutrition for hair. It helps in healthy growth of hair providing them a shiny complexion. Regular massage of the head with coconut oil ensures that your scalp is free of dandruff, lice, and lice eggs, even if your scalp is dry. Coconut oil is extensively used in the Indian sub-continent for hair care. It is an excellent conditioner and helps in the re-growth of damaged hair. It also provides the essential proteins required for nourishing damaged hair. It is therefore used as hair care oil and used in manufacturing various conditioners, and dandruff relief creams. Coconut oil is normally applied topically for hair care.

Stress Relief: Coconut oil is very soothing and hence it helps in removing stress. Applying coconut oil to the head followed with a gentle massage helps in removing mental fatigue.

Skin Care: Coconut oil is excellent massage oil for the skin as well. It acts as an effective moisturizer on all types of skins including dry skin. The benefit of coconut oil on the skin is comparable to that of mineral oil. Further, unlike mineral oil, there is no chance of having any adverse side effects on the skin with the application of coconut oil. Coconut oil therefore is a safe solution for preventing dryness and flaking of skin. It also delays wrinkles, and sagging of skin which normally become prominent with age. Coconut oil also helps in treating various skin problems including psoriasis, dermatitis, eczema and other skin infections. Therefore coconut oil forms the basic ingredient of various body care products such as soaps, lotions, creams, etc., used for skin care.

Premature Aging: Coconut oil helps in preventing premature aging and degenerative diseases due to its antioxidant properties.

Heart Diseases: There is a misconception spread among many people that coconut oil is not good for the heart. This is because it contains a large quantity of saturated fats. However, coconut oil is beneficial for the heart. It contains about 50% lauric acid, which helps in preventing various heart problems including high cholesterol levels and high blood pressure. The saturated fats present in coconut oil are not harmful as it happens in case of other vegetables oils. It does not lead to increase in LDL levels. It also reduces the incidence of injury in arteries and therefore helps in preventing atherosclerosis.

Weight Loss: Coconut oil is very useful in reducing weight. It contains short and medium-chain fatty acids that help in taking off excessive weight. It is also easy to digest and it helps in healthy functioning of the thyroid and enzymes systems. Further, it increases the body metabolism by removing stress on pancreases, thereby burning out more energy and helping obese and overweight people reduce their weight. Hence, people living in tropical coastal areas, who eat coconut oil daily as their primary cooking oil, are normally not fat, obese or overweight.

Pancreatitis: Coconut oil is also believed to be useful in treating pancreatitis.

Digestion: Internal use of coconut oil occurs primarily as cooking oil. Coconut oil helps in improving the digestive system and thus prevents various stomach and digestion related problems including irritable bowel syndrome. The saturated fats present in coconut oil have anti microbial properties and help in dealing with various bacteria, fungi, parasites, etc., that cause indigestion. Coconut oil also helps in absorption of other nutrients such as vitamins, minerals and amino acids.

Immunity: Coconut oil is also good for the immune system. It strengthens the immune system as it contains antimicrobial lipids, lauric acid, capric acid and caprylic acid which have antifungal, antibacterial and antiviral properties. The human body converts lauric acid into monolaurin which is claimed to help in dealing with viruses and bacteria causing diseases such as herpes, influenza, cytomegalovirus, and even HIV. It helps in fighting harmful bacteria such as listeria monocytogenes and heliobacter pylori, and harmful protozoa such as giardia lamblia.

Healing: When applied on infections, it forms a chemical layer which protects the infected body part from external dust, air, fungi, bacteria and virus. Coconut oil is most effective on bruises as it speeds up the healing process by repairing damaged tissues.

Infections: Coconut oil is very effective against a variety of infections due to its antifungal, antiviral, and antibacterial properties. According to the Coconut Research Center, coconut oil kills viruses that cause influenza, measles, hepatitis, herpes, SARS, etc. It also kills bacteria that cause ulcers, throat infections, urinary tract infections, pneumonia, and gonorrhea, etc. Coconut oil is also effective on fungi and yeast that cause candidiasis, ringworm, athlete's foot, thrush, diaper rash, etc.

Liver: The presence of medium chain triglycerides and fatty acids helps in preventing liver diseases as they substances are easily converted into energy when they reach the liver, thus reducing work load on the liver and also preventing accumulation of fat.

Kidney: Coconut oil helps in preventing kidney and gall bladder diseases. It also helps in dissolving kidney stones.

Diabetes: Coconut oil helps in controlling blood sugar, and improves the secretion of insulin. It also helps in effective utilization of blood glucose, thereby preventing and treating diabetes.

Bones: As mentioned earlier, coconut oil improves the ability of our body to absorb important minerals. These include calcium and magnesium which are necessary for development of bones. Thus coconut oil is very useful to women who are prone to osteoporosis after middle age.

Dental Care: Calcium is an important element present in teeth. Since coconut oil facilitates absorption of calcium by the body, it helps in getting strong teeth. Coconut oil also stops tooth decay.

HIV and Cancer: It is believed that coconut oil plays an instrumental role in reducing viral susceptibility of HIV and cancer patients. Preliminary research has shown indications of the effect of coconut oil on reducing the viral load of HIV patients (Reference).

Finally, coconut oil is often preferred by athletes and body builders and by those who are dieting. The reason behind this being that coconut oil contains lesser calories than other oils, its fat content is easily converted into energy and it does not lead to accumulation of fat in the heart and arteries. Coconut oil helps in boosting energy and endurance, and enhances the performance of athletes.

This article is written by Kiran Patil

http://www.organicfacts.net/organic-oils/organic-coconut-oil/health-benefits-of-coconut-oil.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேங்காய்/ தேங்காய் எண்ணெய் கொழுப்பைக் கரைக்கிறதா? :unsure::blink::huh:

http://www.nhs.uk/chq/Pages/1124.aspx?CategoryID=51&SubCategoryID=167

குட்டி சொல்கிற மாதிரி தேங்காய் எண்ணெய்யும்,தேங்காயும் அதிக பற் என்டு தான் நானும் கேள்விப்பட்டேன்...இதில் எது உண்மை :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி சொல்கிற மாதிரி தேங்காய் எண்ணெய்யும்,தேங்காயும் அதிக பற் என்டு தான் நானும் கேள்விப்பட்டேன்...இதில் எது உண்மை :unsure:

உப்புடி கனக்க யோசிக்க வெளிக்கிட்டால்.....வாயிலை ஒண்டுமே வைக்கேலாது.

முந்தி அங்கை ஊரிலையெல்லாம்.....

காலமை முட்டுத்தேங்காயை திருவி அதிலை ஒரு அரிசிமா புட்டு.

மத்தியானம் செத்தல்தேங்காயை திருவி.....முதல் பால்லை ஒரு கறி :wub: கப்பிப்பால்லை ஒரு சொதி :D அதோடை கொஞ்ச தேங்காய்ப்பூவைச்சேர்த்து ஒரு ஒடியல் புட்டு :wub:

(புழிஞ்ச தேங்காய்ப்பூவும் கொஞ்சசோறும் காவல்தெய்வம் வீட்டு நாய்க்கு) :(

இரவும்..பாணோ புட்டோ இடியப்பமோ சோறோ புக்கையோ என்னவாயிருந்தாலும் அதோடை சேர்த்து தேங்காயிலை செய்த சம்பலோ சொதியோ கட்டாயம் இருக்கும்.

ஆகமொத்தம் மூண்டுநேரமும் தேங்காய்தான் கதாநாயகன்? சனமும் ஒரு சோலிசுறட்டு வருத்தம் துன்பம் இல்லாமல்தான் வாழ்ந்ததுகள்.

இப்ப என்னெண்டு தெரியேல்லை?

தேங்காய் எண்டவுடனை எங்கடையள் கொஞ்சம் எதோ பொலிடோல் குடிச்சமாதிரி திகைச்சுப்போய் நிக்குதுகள் :D

Link to comment
Share on other sites

உப்புடி கனக்க யோசிக்க வெளிக்கிட்டால்.....வாயிலை ஒண்டுமே வைக்கேலாது.

முந்தி அங்கை ஊரிலையெல்லாம்.....

காலமை முட்டுத்தேங்காயை திருவி அதிலை ஒரு அரிசிமா புட்டு.

மத்தியானம் செத்தல்தேங்காயை திருவி.....முதல் பால்லை ஒரு கறி :wub: கப்பிப்பால்லை ஒரு சொதி :D அதோடை கொஞ்ச தேங்காய்ப்பூவைச்சேர்த்து ஒரு ஒடியல் புட்டு :wub:

(புழிஞ்ச தேங்காய்ப்பூவும் கொஞ்சசோறும் காவல்தெய்வம் வீட்டு நாய்க்கு) :(

இரவும்..பாணோ புட்டோ இடியப்பமோ சோறோ புக்கையோ என்னவாயிருந்தாலும் அதோடை சேர்த்து தேங்காயிலை செய்த சம்பலோ சொதியோ கட்டாயம் இருக்கும்.

ஆகமொத்தம் மூண்டுநேரமும் தேங்காய்தான் கதாநாயகன்? சனமும் ஒரு சோலிசுறட்டு வருத்தம் துன்பம் இல்லாமல்தான் வாழ்ந்ததுகள்.

இப்ப என்னெண்டு தெரியேல்லை?

தேங்காய் எண்டவுடனை எங்கடையள் கொஞ்சம் எதோ பொலிடோல் குடிச்சமாதிரி திகைச்சுப்போய் நிக்குதுகள் :D

கு.சா. அண்ண அங்க இருக்கிற கால நிலை வேற, இங்க இருக்கிற கால நிலை வேற... அங்க கொஞ்ச நேரம் வெளியில நிண்டாலே செத்தல் தேங்காயை திருவி.....முதல் பாலில வார கொழுப்பு பூராவும் கரைந்தது விடும். :D வயிற்ருக்கு வஞ்சகம் பண்ணாமல் இருக்கலாம். :) இஞ்ச அப்படி இல்லையே... அது தான் கவலை. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா. அண்ண அங்க இருக்கிற கால நிலை வேற, இங்க இருக்கிற கால நிலை வேற... அங்க கொஞ்ச நேரம் வெளியில நிண்டாலே செத்தல் தேங்காயை திருவி.....முதல் பாலில வார கொழுப்பு பூராவும் கரைந்தது விடும். :D வயிற்ருக்கு வஞ்சகம் பண்ணாமல் இருக்கலாம். :) இஞ்ச அப்படி இல்லையே... அது தான் கவலை. :(

அப்ப பண்டிக்கொழுப்பு,ஆட்டுக்கொழுப்போடை இஞ்சை மினைக்கடுற சனத்துக்கு என்ன சொல்ல வாறியள்?

இவங்களும் அண்டுதொடக்கம் உதுகளை சாப்பிட்டுத்தானே வளர்ந்தவங்கள்?????

Link to comment
Share on other sites

அப்ப பண்டிக்கொழுப்பு,ஆட்டுக்கொழுப்போடை இஞ்சை மினைக்கடுற சனத்துக்கு என்ன சொல்ல வாறியள்?

இவங்களும் அண்டுதொடக்கம் உதுகளை சாப்பிட்டுத்தானே வளர்ந்தவங்கள்?????

அது தானே இப்ப ஆண் பெண் எல்லாம் மருந்தும் கையுமா வாழுதுகள்... மருந்தையும் போட்டுக் கொண்டு கொழுப்புகளையும் சாப்பிடுதுகள் கு.சா. அண்ண :rolleyes: பெரும் பாலான சனத்துக்கு கொழுப்பு வருத்தம் இருக்குத் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதையெண்டாலும் ஆசை தீர வயிறார சாப்பிட்டுப்போட்டு அதுக்கேற்ற வேலையள் செய்தால் ஒரு பிரச்சனையுமில்லை எண்டதுதான் என்ரை கருத்து.

அதை விட்டுட்டு பெற்றோல்செற்றிலை சுழல்கதிரையிலை இருந்து கஷியர் வேலைசெய்துகொண்டு...... கொழுப்பும் கரையுதில்லை ஒண்டும் கரையுதில்லை எண்டால்.......????????????

Link to comment
Share on other sites

எதையெண்டாலும் ஆசை தீர வயிறார சாப்பிட்டுப்போட்டு அதுக்கேற்ற வேலையள் செய்தால் ஒரு பிரச்சனையுமில்லை எண்டதுதான் என்ரை கருத்து.

அதை விட்டுட்டு பெற்றோல்செற்றிலை சுழல்கதிரையிலை இருந்து கஷியர் வேலைசெய்துகொண்டு...... கொழுப்பும் கரையுதில்லை ஒண்டும் கரையுதில்லை எண்டால்.......????????????

சுழல் கதிரையோ? வைத்தெரிச்சளைக் கிளப்பாதேயுங்கோ... :D அரை மணி நேரம் தான் இருக்கிறதுக்கு, சாப்பிடுறதுக்கு எல்லாத்துக்கும். மிச்ச நேரம் முழுக்க நின்று, நடந்து செய்ற வேலை தான் அண்ண. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கால நிலைதான் முக்கிய காராணம்...............உடம்பில் உறைந்து விடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவெல்லாம் அங்கை ஊரிலை இருக்கிற டாக்குத்தர்மாரும் தேங்காய்ப்பால் கூடாது எண்டுறாங்களாம் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவெல்லாம் அங்கை ஊரிலை இருக்கிற டாக்குத்தர்மாரும் தேங்காய்ப்பால் கூடாது எண்டுறாங்களாம் :lol:

எல்லாரும் நல்லா பிளான் பண்ணி தேங்காயை வெளி நாடுகளுக்கு லவட்டப் போகினம்! :)

தென்னையும் நாங்களும் கருவாடும் வாசமும்போல் பிரியாமல் வாழ்ந்த காலம் அது! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் நல்லா பிளான் பண்ணி தேங்காயை வெளி நாடுகளுக்கு லவட்டப் போகினம்! :)

தென்னையும் நாங்களும் கருவாடும் வாசமும்போல் பிரியாமல் வாழ்ந்த காலம் அது! :)

சுவி, தென்னை போனாலும் பனை இருக்குது தானே...... :D:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.