Jump to content

தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்யுமாறு மாவை சேனாதிராஜா ஜனாதிபதியிடம் கோரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Mavai-Senathirajah-1.jpg

தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்யுமாறு மாவை சேனாதிராஜா ஜனாதிபதியிடம் கோரிக்கை

பயங்கரவாத தடைச் சட்டம் அல்லது அவரச காலச்சட்டத்தின் கீழ் கடந்த 10 முதல் 24 வருடகாலமாக கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் சிறைகளில் பலவருட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மாவை சேனாதிராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

தற்போது நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலையில் சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளின் உளநிலையையும், அவர்களது அடிப்படை மனித உரிமைகளையும் கருத்திற்கொண்டு வெளிநாடுகளைப் போன்று இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

தற்போது சில சிறைக்கைதிகள் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளமை கண்டறியப்பட்டிருப்பதுடன், ஏனையோருக்கு தொற்றுப்பரவக்கூடிய ஆபத்துக்களும் காணப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தற்போது அவர்களது உறவினர்கள் சென்று பார்வையிடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமையால் கைதிகள் உளவியல் ரீதியான அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்றும் மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கேனும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்தோடு அந்தக் கடிதத்தின் பிரதிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிற்கும் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/தமிழ்-அரசியல்-கைதிகளை-பி/

Link to comment
Share on other sites

7 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்யுமாறு மாவை சேனாதிராஜா ஜனாதிபதியிடம் கோரிக்கை

தமிழ் மக்களை இந்தத் தேர்தல் காலத்திலும் ஏமாற்றிய தீருவேன் என்பது போல மாவையின் கோமாளித்தனங்கள் அமைந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்யுமாறு மாவை சேனாதிராஜா ஜனாதிபதியிடம் கோரிக்கை

கருணாநிதியின் உண்ணாவிரதம் மாதிரி இருந்தா இன்னும் நல்லாயிருக்கும்.

நாடகத்துக்கு வைத்த மீசை மாதிரி ஆளும் மீசையும்.

Link to comment
Share on other sites

உண்ணாவிரதம் இருந்தவர்களையும் மைத்திரியின் சொல் கேட்டு அவர்களின் போராட்டத்தை மழுங்கடித்தவர்கள் இதே கூட்டமைப்பினர் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தடவை இப்படியான அறிக்கை 2025 இல் வரும். அப்ப மாவை அல்லது அவரின் மகன் அறிக்கைவிடுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/7/2020 at 03:48, தமிழ் சிறி said:

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் சிறைகளில் பலவருட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மாவை சேனாதிராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

நல்லவேளை! கடிதம் அனுப்புவதற்கு சாதகமாய், கொரோனாவும் இந்த நேரத்தில் கைகொடுக்குது  இவர்களுக்கு. கோடை காலத்தில் தூங்கிவிட்டு, மழை காலத்தில் அறுவடை செய்ய வெளிக்கிடும் இவர்களின் அறுவடை வீடு வந்து சேருமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் காலத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதும் கண்துடைப்பு வேலைகளையே கூட்டமைப்பினர் செய்து வருகின்றார்கள் -நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்

spacer.png

தற்போதைய தேர்தல் காலத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதும் கண்துடைப்பு வேலைகளையே செய்து வருகின்றார்கள். இவர்கள் நினைத்திருந்தால் நாடாளுமன்றத்தில் இருந்து பேரம் பேசவேண்டிய நேரத்தில் பேரம் பேசி எங்கள் அரசியற் கைதிகளை விடுவித்திருக்கலாம்.அத்துடன் தற்போதும் கூட தொடர்ந்துவரும் அரசாங்கங்கள் தமிழ் அரசியற் கைதிகளைப் பணயக் கைதிகளாகவே வைத்துக் கொண்டு வருகின்றன. சிங்களப் போர்க் குற்றவாளிகளைக் கைதில் இருந்து தப்ப வைக்க, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் நடைபெறாதிருக்க, மேற்படி தமிழ் அரசியற் கைதிகளைப் பணையமாகப் பாவிக்கவே அவர்களைத் தொடர்ந்தும் சிறையில் வாட வைத்திருக்கின்றார்கள் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.உடுத்துறை பகுதியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கியில்,காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் வகையில் கடந்த 11 வருடங்களாக அவர்களின் உறவுகள் போராடிவருகின்றனர். அவர்களையும் உள்ளடக்கிப் போராட்டங்களை நிலத்திலும் புலத்திலும் விரிவுபடுத்தி போராட்ட வடிவங்களையும் விரிவுபடுத்தி செயற்படுவோம்.முக்கியமாக தெரிவுசெய்யப்படும் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐ. நா, சர்வதேச நாடுகள், சர்வதேச அமைப்புக்கள், இந்திய அரசு ஆகியவற்றுடன் இது விடயத்தில் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தி அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு நடவடிக்கைகள் எடுப்போம்.

கடந்த நான்கரை வருடங்களாக நல்லாட்சி என்ற பெயரில் உருவான அரசாங்கத்துடன் இணக்க அரசியலைச் செய்து வந்த கூட்டமைப்பினர் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான எந்த விதமான பலமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் காலத்தைக் கடத்திவிட்டது.தற்போதும் கூட தொடர்ந்துவரும் அரசாங்கங்கள் தமிழ் அரசியற் கைதிகளைப் பணயக் கைதிகளாகவே வைத்துக் கொண்டு வருகின்றன. சிங்களப் போர்க் குற்றவாளிகளைக் கைதில் இருந்து தப்ப வைக்க, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் நடைபெறாதிருக்க, மேற்படி தமிழ் அரசியற் கைதிகளைப் பணையமாகப் பாவிக்கவே அவர்களைத் தொடர்ந்தும் சிறையில் வாட வைத்திருக்கின்றார்கள்.

ஆகவே நாம் தேர்நதெடுக்கப்பட்டால் சட்ட ரீதியாக கட்டமைப்புக்களை உருவாக்கி செய்யக்கூடிய எல்லா வழிமுறைகளையும் நாம் பரிசீலித்து நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அதேசமயம் ஜனாதிபதியுடன் இவர்களின் விடுதலை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவோம் என மேலும் தெரிவித்தார்.(15)
 

 

http://www.samakalam.com/செய்திகள்/தேர்தல்-காலத்தில்-ஜனாதிப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல்காலங்களில் இவர்களுக்கு இப்படி சில ஞானோதயங்கள் உதிர்க்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

தேர்தல்காலங்களில் இவர்களுக்கு இப்படி சில ஞானோதயங்கள் உதிர்க்கும்

தேர்தல் என்பதை வேறுவிதமாக கூறுகிறார்கள். தொட்டுக்கொள்வதற்கு ஊறுகாய் போல், தமிழ் சிங்கள  அரசியல்வாதிகள் தமிழ் அரசியல்  கைதிகளை தேர்தல் காலங்களில் பாவித்து கதிரை ஏறி, மக்களை ஏய்க்கிறார்கள். அவர்களும் மனிதர்கள் என்பதை ஏற்க மறந்து போகிறார்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்ற தெரியாதவர்களை, மீண்டும் மீண்டும் தெரிவு செய்வது, நம் மக்களின் நரம்பு வியாதியாக மாறிவிட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.